Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிட்டத்தட்ட அவளிடம் பிச்சை கேட்பது போல் அவளிடம் காதலை யாசகமாகக் கேட்டுக்கொண்டிருந்தவனை தாண்டி எப்படி வீட்டுக்குப் போவது என்று திகைத்தாள் அவள்.
அவளை நகரவும் விடவில்லை. எப்படி அவனை விலக்கிவிட்டுப் போவது என்று செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.
அவன் பைத்தியக்காரனைப் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான்.
அத்துடன் அவன் பேசப் பேசவே அவளுக்கு மனதில் தோன்றிய எண்ணம் வேறு திகைப்பை உண்டாக்கியது.
திடீரென்று அவளது முகம் பிரகாசமானது.
அவள் தான் பேசிய உடன் மனம் மாறிவிட்டாள் என்று அவன் சந்தோசமடைந்தான்.
ஆனால் அவனைத் தாண்டி அவளது பார்வை சென்றது.
அங்கே மகேந்திரனின் கார் வந்து நின்றது.
அவன் தன்னைக் காண வரவில்லையோ? தான் சந்தோசப்பட்டது வீணாகிப் போய்விட்டதோ? என்று அவள் கலங்கிக்கொண்டிருக்கும்போதே அவன் அவளை நோக்கிதான் வந்துகொண்டிருந்தான்.
அவன் தன்னை நோக்கிதான் வருகிறான் என்றதும் அவள் தன்னை மறந்தாள். அவசரமாய் அவனருகே ஓடியவள்
“மகேன். என்னை அழைக்கத்தான் வந்தீங்களா?” என்று கேட்டவாறே அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.
அவன் அவளையேப் பார்த்தான். பிறகு தன் கையைப் பற்றியிருந்த அவளது கையையும் பார்த்தான்.
பிறகு தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவள் காரின் முன்பக்கம் ஏறி அமர அவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவள் முரளியைப் பார்த்தாள். அவனமது சிவந்த முகம் கருத்துக்கிடந்தது
அவனுக்குத் தேவைதான் என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்தவாறே அமர்ந்திருந்தவளுக்கு சுரீரென்று உரைத்தது.
மகேந்திரன் என்ன வேலையாக வந்தானோ? அவனோடு தொற்றிக்கொண்டு தான் கிளம்பியதால் அவனும் வேறு வழியில்லாமல் கிளம்பிவிட்டான் என்று நினைத்தவள் அவனை தயக்கத்துடன் பார்த்தாள்.
“சாரி மகேந்திரன் சார். அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக உங்களோட ஏறிட்டேன். நீங்க ஏதாவது வேலையா வந்திருப்பீங்க. நீங்க ஏதாவது பஸ் ஸ்டாப்பில் என்னை இறக்கி விட்டீங்கன்னா நான் வீட்டுக்குப் போயிடுவேன்.”
அவன் அவளைத் திரும்பிப் பார்த்த பார்வையில் அத்தனை வெப்பம் இருந்தது. அந்த தகிப்பினை தாங்கிக்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள்.
அவனது கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.
அவன் எதற்காகக் கோபப்படுகிறான்? என்று தெரியாமல் அவள் விழித்தாள்
தொடரும் . . .
•
Posts: 13
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
Super bro.... update regularly please
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாநிறத்தில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்க அவன் ஆம் என்று தலையசைத்தான்.
“நான் கலரா இல்லைன்னு எனக்கு வருத்தம் இருக்கு.”
“இதுதான்டா நம்ம நாட்டு கலரு. என்ன? கொஞ்சம் சதை போட்டா நல்லாருக்கும்.”
அம்மாவும் இதைத்தான் சொல்றாங்க. நான் சாப்பிடற சாப்பாடு எல்லாம் எங்கே போகுதோ தெரியலை. என் உடம்பில் சதையே பிடிக்க மாட்டேங்குது.”
“இதுவும் ஒருவகை அழகுதான் யுகா. எத்தனை பேர் உடம்பைக் குறைக்க செலவு செஞ்சுக்கிட்டு அலையறாங்க. உனக்கு இயல்பாவே அப்படிப்பட்ட உடல்வாகு அமைந்திருக்கு. அப்புறம் படிப்பிலும் அவன் முதல்னு பீத்திக்கிறான். மனப்பாடம் செய்து பரிட்சையில் விடைத்தாளில் வாந்தி எடுக்கிற மாதிரி கொட்டிவிட்டால் போதுமா?”
“அப்ப நான் உண்மையிலேயே அழகா?”
அவன் மீண்டும் சந்தேகமாய் கேட்டான்.
“அதில் என்ன சந்தேகம்?”
“நான் அவனை விட புத்திசாலியா.”
“இல்லையா பின்னே?”
அவளுக்கு யோசனை பின்னோக்கி சென்றது.
அப்போது அவள் கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தாள்.
ஒரு முறை மாதாந்திர தொந்தரவு தாங்க முடியாமல் கல்லூரிக்கு செல்லவில்லை.
மறுநாள் யுகேந்திரனிடம் முந்தைய வகுப்பில் நடந்ததை தெரிந்துகொள்வதற்காக அவனது நோட்டுப்புத்தகத்தை கேட்டாள்.
அவன் தருவதற்கு யோசித்தான்.
அவளே பிடுங்கி வாங்கிப் பார்த்தவள் திகைத்துப்போனாள்.
ஒரே கிறுக்கலாய்தான் நோட்டு முழுவதும் இருந்தது.
“ஏய் என்னடா இது? ஒன்னாங்கிளாஸ் பிள்ளைங்க கூட உன்னைவிட நல்லா எழுதும் தெரியுமா?”
அவன் அவள் தலையில் செல்லமாய் குட்டினான்.
“ஏய் மக்கு. நானும் நல்லாதான் எழுதியிருக்கிறேன். அது சுருக்கெழுத்து. உனக்கு என்ன வேணும். நேத்தைக்கு வகுப்பில் நடந்ததுதானே? நான் நாளைக்கு எழுதிக்கிட்டு வந்து தர்றேன் போதுமா?”
சொன்ன மாதிரியே கொண்டு வந்து கொடுத்தான். அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல் அத்தனை அழகான கையெழுத்து அவனது.
அத்துடன் அவன் எழுதியிருந்த விசயமும் அத்தகையதே. அதைப் படிக்கப்படிக்க பேராசிரியரே நேரில் வந்து சொன்னது போல் அப்படியே வகுப்பில் அவர் சொன்னதை எல்லாம் எழுதியிருந்தான்.
வகுப்பில் அவர் நடத்தியதை நன்கு கவனித்திருந்தால்தான் அப்படி எழுத முடியும். அதை படிப்பதற்கு வேறு புத்தகமே தேவையில்லை.
“எப்படிடா இப்படி?”
அவள் ஆச்சர்யமாக கேட்டாள்.
“என்ன?”
“நான் வகுப்பிற்கு வந்திருந்தால்கூட இப்படி கவனித்து எழுதியிருப்பேனா என்கிறது சந்தேகம்தான். நீ ஒரு வார்த்தையைக் கூட விடலை. அப்படியிருந்தும் உனக்கு ஏன் நல்ல ரிசல்ட் வர மாட்டேங்குது?”
“நான் நினைச்ச ரிசல்ட் வருதுல்ல. அது போதும்.”
என்று அவன் முணுமுணுத்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவன் மட்டும் பரிட்சையில் ஒழுங்காய் எழுதினால் இந்த முரளியை விட அதிக மதிப்பெண்கள் எடுப்பான். அதற்கு அவன் மனது வைக்க வேண்டும். இந்த முறை எப்படியும் அவனை நன்றாக எழுத வைக்க வேண்டும்.
சிவந்த தோலும் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவனுக்கு தான்தான் பெரியவன் என்ற திமிரை உண்டாக்கியிருக்கிறது.
அவன் நன்றாகப் பார்த்துக்கொள்வானாமே?
“அவ துடிக்கிறதை என்னால் பார்க்க முடியலை. ஏதாவது செய்யுங்கம்மா. ஏதாவது செய்யுங்க.”
என்று அவள் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டபோது தனக்கே அந்த துன்பம் வந்ததுபோல் துடித்தானே? அதுபோல் அந்த முரளியால் தனது வலியை உணர முடியுமா?
அவளுக்கு மனதிற்குள் தோன்றியது.
“இதே முரளி நான் கல்லூரியில் சேர்ந்தபோது கவலையாய் இருந்தேனே அப்போது எங்கே போனான்?”
அவள் தனக்குள் பேசுவது போல் சத்தமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.
யுகேந்திரன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளை தான் கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.
சோகமே உருவாக ஒதுங்கியிருந்தவளைக் கண்ட போது மற்றவர்கள் போல் கிண்டல் செய்து ஒதுங்கிப்போக அவனுக்கு மனம் வரவில்லை.
ஏதோ ஒரு வகையில் அவள் அவனைக் கவர்ந்துவிட்டாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வலியச் சென்று அவளிடம் பேசிப்பேசி தங்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கினான்.
அவளைப் பற்றி அறிந்துகொண்டான்.
அவளுக்கு இத்தகைய நேரத்தில் தேவையானது தைரியம்தான் என்று அவளுக்குப் புரிய வைத்தான்.
அவள் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது புரிய அவளை திசைமாற்ற வேறு பேச வேண்டும் என்று யோசித்ததில் அவனுக்கு அவன் மனதைப் பாதித்த அந்த செய்தி நினைவுக்கு வந்தது.
“கிருஷ். நீ இன்றைய செய்தித்தாளை படித்தியா?”
“ம். படித்தேன். ஆனால் நீ எந்த விசயத்தைப் பத்தி பேச வர்றேன்னு எனக்குத் தெரியலை.”
“பள்ளி மாணவன் ஒருவன் தனது தந்தை குடிக்கிறார் என்று தற்கொலை செய்துகொண்டானே. அதைப் பத்திதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”
“ஆமா. எனக்கும் மனசுக்கு வருத்தமா இருக்கு? வாழ வேண்டிய பையன். இப்படி போயிட்டான்.”
“அதுவும் அவன் இறந்து ஆவியா வந்து சாராயக் கடையை மூட வைக்கிறேன்னு வேற சொல்லிட்டு போயிருக்கான். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. நம்ம சமுதாயம் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளனும்கிற அறிவை அவனுக்குப் புகட்டலை. இறந்த பின் என்ன ஆவோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் சினிமாவிலும் கதையிலும் ஆவி, பேய் என்று சித்தரிக்கின்றனர். அதை உண்மை என்று நம்பி அந்த சிறுவனும் தனது உயிரை விட்டுவிட்டான்.”
“எனக்கும் வருத்தமா இருக்கு.”
“தன்னோட சாவிற்கு எடுத்த முயற்சியை அவன் தன்னோட வாழ்க்கைக்கு எடுத்திருக்கலாம். போராடியிருக்கலாம். முட்டாள்தனமா முடிவெடுத்துட்டான்.”
அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
“நீ என்ன சொல்றே கிருஷ்?”
“தற்கொலை செய்துக்கிறதே முட்டாள்தனம்னு நீ சொல்றே? ஆனால் பிரச்சினையில் இருக்கிறவங்களுக்கு அது அவர்கள் அனுபவிக்கும் நரக வாழ்க்கையில் இருந்து கிடைத்த விடுதலைன்னுதான் தோணும். ஏன்னா நான் அனுபவிச்சிருக்கேன். வாழ்க்கையில் நமக்குன்னு யாருமே இல்லைங்கிறதை நினைக்கும்போதெல்லாம் பேசாமல் வாழ்க்கையை முடிச்சுக்கலாமான்னுதான் தோணுச்சு.”
“கிருஷ். இப்படி எல்லாம் பேசி என்னை சிரமப்படுத்தாதே? எங்களை எல்லாம் நினைச்சா உனக்கு சொந்தமா தோணலையா?”
“இப்ப எல்லாம் அப்படி தோணலை.”
“நீ எதுக்கும் கவலைப்படாதே. உனக்கு நாங்க இருக்கோம்.”
அவனது ஆறுதலான பேச்சில் அமைதியாக அமர்ந்திருந்தவள் திடீரென்று திடுக்கிட்டு எழுந்தாள்.
“என்னாச்சு?”
“ஒன்னுமில்லை. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வர்றேன்.”
பரபரவென்று ஓடியவளை பார்த்து அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னாச்சு இவளுக்கு?”
தன் அறையில் வந்து கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு தனக்கு ஏன் அப்படி தோன்றியது என்ற யோசனை.
அவனுடன் பேசி முடித்து விட்டு அமர்ந்திருக்கையில்
‘அப்ப நான் உண்மையிலேயே அழகா?’
என்று யுகேந்திரன் கேட்டது காதில் மீண்டும் ஒலித்தது.
அப்போது அவனும், அவனது அண்ணனும் மாநிறமாய் இருந்தாலும் அழகுதான் என்று தோன்றியது.
அதுவும் அன்றொருநாள் நிலா வெளிச்சத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் நின்றிருந்த மகேந்திரனின் தோற்றம் மனதிற்குள் தோன்றியது. அப்போதுதான் விலுக்கென்று அவள் மனம் விழித்துக்கொண்டது.
அவனது பெயரைச் சொல்லி அழைத்ததற்கே அத்தனை கோபம் அவனுக்கு. என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று தெரிந்தாலே அவனைப் பொறுத்த வரைக்கும் கொலை குற்றமாச்சே?
அதன் பிறகு தன்னை அவன் வீட்டில் தங்க விடுவானா?
இப்போது கிடைக்கும் அவனது வீட்டாரின் அன்பு அதன் பிறகு கிடைக்காமல் போய்விடுமே.
இப்போதைக்கு அவர்களின் அன்புதான் முக்கியம். அதை எந்த காரணத்தைக்கொண்டும் கெடுத்துக்கொள்ளக்கூடாது.
அவன் இருக்கும் இடத்திலேயே இனி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால்தானே தேவை இல்லாத சிந்தனை எல்லாம் மனதில் தோன்றும்.
தனது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரன் தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே நொந்துகொண்டான்.
•
Posts: 352
Threads: 0
Likes Received: 34 in 30 posts
Likes Given: 124
Joined: Jan 2019
Reputation:
4
இருவருக்கும் என்னதான் ஆயிற்று
•
Posts: 13
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
0
Super story continue please
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏன் இந்த தேவையில்லாத கோபம்?
அவன் காரை கொண்டு போய் கல்லூரி மைதானத்தில் நிறுத்தும்போதே கிருஷ்ணவேணி ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான்.
அதுவும் அவன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டதுமே அவனுக்குள் சினம் மூண்டது.
அவனைக் கண்டதும் அவள் தன்னை பெயர் சொல்லிக் கொண்டு எதிலிருந்தோ தப்பித்து வருவது போல் தெரியவும் அவன்தான் அவளிடம் வம்பிழுத்திருக்கிறான் என்று புரிந்துகொண்டான்.
அத்துடன் அவள் அவனது கரத்தையும் பற்றிக்கொண்டாள்.
அவள் அவனை நோக்கி ஓடி வரவும் முரளி தயங்கிப் பின்வாங்கி முகம் கருக்க நின்றவன் அவர்கள் காரை நோக்கி நடக்க ஆரம்பித்த போது மகேந்திரன் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்த பார்வையில் அப்படியே அங்கிருந்து ஓடிவிட்டான்.
அதைக் கண்டிராத அவள் அவன் மீண்டும் வந்துவிடுவானோ? என்ற பயத்தில் மகேந்திரனின் கரத்தைப் பிடித்தவள் விடாமலே கார் வரைக்கும் வந்துவிட்டாள். அவன்தான் காரின் முன்பக்க கதவைத் திறந்து அவளை அமரச் செய்தான்.
எல்லாம் நன்றாகத்தான் போயிற்று.
அவள் மீண்டும் அவனை சார் என்று அழைத்து தன்னைவிட்டு அந்நியப்படுத்தியது கண்டு அவனுக்கு அவள் மீது சினம் உண்டானது. அந்தக் கோபத்தை கார் ஓட்டுவதில் காண்பித்தான்.
இப்போது நினைக்கும்போது தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே நொந்துகொண்டான்.
ஒரு சின்னப் பெண் தன்னை இப்படி ஆட்டுவிக்கிறாளே? என்று மனம் ஆயாசப்பட்டது.
அவளை வீட்டிற்கு வருவதற்கு அனுமதி அளித்ததோ தவறோ என்று எண்ண ஆரம்பித்தான்.
ஒருவன் அவளது கையைப் பற்றியதே தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனை அடித்து துவம்சம் செய்யும் வேகம் வந்தது. அவனும் ஓடிவிட்டான். அத்துடன் தன் கையைப் பற்றிய அவளை விலக்கவும் தோன்றாமல்தான் அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியதே.
இப்போது தம்பியும் அவளிடம் நெருங்கினால் அப்படிதான் கோபம் உண்டாகுமோ என்று தன்னையே சந்தேகித்தான்.
இல்லை. என் தம்பிக்குப் பிரியமானவளிடம் ஒருவன் தவறாக நடந்தான் என்ற கோபம்தான். ‘ என்று தன் மனதையே ஏமாற்றிக்கொண்டான்.
நாட்கள் விரைந்தன.
தீபாவளி நெருங்கியது.
அவர்களுக்கும் சேர்ந்தாற்போன்று விடுமுறையும் வர மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டனர்.
எப்போதும் தீபாவளி பொங்கல் என்றால் தனது குடும்பத்துடன் வனிதாமணி தங்கள் கிராமத்திற்குச் சென்றுவிடுவார்.
அதில் மட்டும் யாரும் தலையிடுவதை அவர் விரும்ப மாட்டார்.
அவருக்கு கிராமம்தான் பிடித்தம்.
கணவரின் தொழில் நிமித்தமே அவர் பட்டணத்துவாசியானார்.
அவர் தனக்கென்று எதையும் கேட்பதில்லை. அதனால் இந்த விசயத்தில் ரவிச்சந்திரன் எந்த மறுப்பும் சொன்னதில்லை.
அதுவே அவர்கள் வாழ்க்கையில் வாடிக்கையாகிப்போனதால் பிள்ளைகளுக்கும் பழகிப்போய்விட்டது.
வேலையிருப்பதால் மகேந்திரனும் ரவிச்சந்திரனும் தீபாவளிக்கு முதல்நாள் வருவதாகச் சொல்ல மற்றவர்கள் கிளம்பினர்.
கிருஷ்ணவேணிக்கு யுகேந்திரனின் சொந்தக்கிராமத்தை மிகவும் பிடித்துவிட்டது.
அதுவும் வீட்டிற்குப் பின்னேயே வயல். அதில் பயிரிட்டிருந்தனர். அந்தப் பசுமை அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
“யுகா. எனக்கு உங்க கிராமம் ரொம்பவே பிடிச்சிருக்கு.”
“நீயும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவதானே?”
“ஆமா. ஆனால் எனக்கு அங்கே பிடிக்கிறதுக்கு என்ன இருக்கு? தனிமைதான்.”
விரக்தியுடன் சொன்னாள்.
“அம்மா. தாயே. தெரியாமல் கேட்டுட்டேன். உன்னை அழுகாச்சி மூஞ்சா என்னால் பார்க்க முடியாது. தயவு செய்து கருணை காட்டு.”
“சரி. போயிட்டு போ. கருணை காட்டறேன்.”
அவள் பெரிய மனதுடன் அத்துடன் விட்டுவிட்டாள்.
அங்கே இருந்த பொன்னி என்கிற பெண்மணியை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அவள்தான் மற்ற நேரங்களில் அந்த வீட்டை பராமரிப்பது.
அவளது கணவன் இறந்துவிட்டான். பிள்ளைகளும் இல்லை. போக்கிடம் இல்லாமல் சிரமப்பட்ட அவளிடம் தங்குவதற்கு இடம் கொடுத்து விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டனர்.
அதனால் அவள் நிம்மதியாக காலத்தைக் கழிக்கிறாள். அந்த நன்றி எப்போதும் அவளுக்கு உண்டு.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவளை கிருஷ்ணவேணி பொன்னிம்மா என்று தான் அழைக்கிறாள்.
பொன்னிக்கும் அவள் மீது அந்த வீட்டினரைப்போன்றே ஒரு பாசம் உண்டாகியிருந்தது.
பொன்னியும் வனிதாமணியும் தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தனர்.
சிறியவர்கள் இருவரும் ஊர் சுற்றக் கிளம்பினர்.
மகேந்திரன் வீட்டுக்குள் நுழைந்தான்.
வீடே அமைதியாக இருந்தது.
யுகேந்திரன் இருந்திருந்தால் எப்போதும் ஏதாவது கலகலத்துக்கொண்டேயிருப்பான். இப்போது அந்த சத்தம் இல்லாதது என்னவோ போல் இருந்தது.
அவன் வீட்டுக்குள் நுழைவதை சமையல் அறைக்குள் இருந்தாலும் எப்படித்தான் கண்டுகொள்வாரோ? வனிதாமணி அவனுக்குக் குடிக்க கொறிக்க என்று ஏதாவது சமயத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வந்து கொடுப்பார்.
அத்துடன் இப்போது கிருஷ்ணவேணியும் சேர்ந்துகொண்டுள்ளாள்.
அவர்கள் யாரும் இல்லாத வீட்டில் இருப்பதே என்னவோ போல் இருந்தது.
ஹோட்டலுக்கு போன் செய்து தனக்கும் தந்தைக்கும் உணவினை கொண்டுவரச்சொன்னான்.
வீட்டில் மற்ற வேலைக்கெல்லாம் வேலையாட்கள் இருந்தாலும் சமைலை வனிதாமணி தானேதான் செய்வார்.
அதனால் அதற்கென வேலையாள் யாரும் இல்லை. வனிதாமணி ஊருக்குச் சென்று தங்குவதும் அரிது. இப்போதுதான் சிறியவர்களுக்கு முன்பே விடுமுறை வந்திருப்பதால் அவர்களை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
இதுவரை அவர்கள் அனைவரும் சேர்ந்தேதான் செல்வர்.
ரவிச்சந்திரன் உள்ளே நுழையும் நேரத்தில் உணவும் வந்துவிட இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
மற்றவர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடை எடுத்து வரச்சொல்லி தன்னிடம் மனைவி சொல்லிவிட்டதாக அவர் கூறினார்.
“நீதான் நல்லா பார்த்து எடுப்பியே. நாளைக்கு போய் எடுத்துட்டு அப்படியே ஊருக்குப் போயிடலாமா?”
“சரிப்பா.”
ஊரைச் சுற்றிவிட்டு கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் தங்கள் வீட்டுக்கு வர அப்போதுதான் மகேந்திரன் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான்.
அவர்கள் முகம் மலர்ந்தது.
இறங்கி வந்த மகேந்திரன் அவர்கள் கைகோர்த்து நின்றிருந்ததைப் பார்த்தான்.
ரவிச்சந்திரன் அவர்களைப் பார்த்து தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“இப்படித்தான் ஊரைச் சுற்றிவிட்டு வர்றீங்களா?”
அபஸ்வரமாய் ஒலித்தது சாருலதாவின் குரல்.
‘இவள் எங்கே இங்கே வந்தாள்?’
யுகேந்திரன் சலித்துக்கொண்டான்.
அவள் தங்களைப் பார்த்துதான் ஏதோ கேட்டாள் என்ற ஞாபகம் வர
“என்ன சொன்னே சாருக்கா?”
என்று வேண்டுமென்றே அவளை அக்கா என்றழைத்துக்கேட்டான்.
அதிலேயே அவள் முகம் கருத்தது. இருந்தாலும் அத்துடன் விட்டுவிட்டால் அவள் சாருலதா அல்லவே.
அவர்களது குற்றத்தை மற்றவர்களிடம் சுட்டிக்காட்ட கிடைத்த இந்த வாய்ப்பை நழுவவிடலாமா?
“இப்படித்தான் ஊரைச் சுற்றிவிட்டு வர்றதான்னு? கேட்டேன்.”
என்றாள் மீண்டும் அழுத்தமாய்.
“அப்படி என்ன தப்பு செய்திட்டோம்?”
“நீங்க நம்ம ஊரில் என்ன கொட்டம் அடிச்சாலும் யாரும் கண்டுக்கப்போறதில்லை. இது கிராமம். இங்கே ஆணும் பொண்ணும் கைக்கோர்த்துக்கிட்டு சுற்றினா மத்தவங்க நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க? அவளுக்குத்தான் நம்ம குடும்பத்து மேல் அக்கறை இல்லைன்னா உனக்குமா?”
மகேந்திரன் பார்த்த உடனே இருவரும் கைகளை விலக்கிக்கொண்டிருந்தனர். இப்போது மீண்டும் அழுத்தமாய் அவளது கையைப் பற்றினான் யுகேந்திரன்.
சாருலதாவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் கிருஷ்ணவேணி கையைப் பற்றியவாறே உள்ளே சென்றான்.
“பார்த்தீங்களா அத்தான். அவ நம்ம குடும்பத்து மானத்தை வாங்காம விடமாட்டா போல. நம்ம யுகேந்திரன் இன்னும் விளையாட்டுப்பிள்ளையாவே இருக்கான்.”
மகேந்திரன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.
‘ஏதாவது சொல்றானா பாரு. அப்படியே அழுத்தம். இவன் அவளைப் பத்தி என்ன நினைக்கிறான்னு தெரியலையே?’
தனக்குள் புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தான் அந்த வீட்டிற்கு வேண்டாத விருந்தாளி என்று யுகேந்திரன் நடந்துகொண்ட விதத்திலேயே தெரிந்தது. நீ ஏன் வந்தாய்? என்று அவனது பார்வை கேள்வி கேட்டது.
அவன் வாய் திறந்து கேட்க மாட்டான். வனிதாமணியும் கேட்க மாட்டார். அந்த அளவிற்கு நாகரிகம் அற்றவர்கள் அல்ல.
அதனால்தான் அவள் நினைத்ததை அவளால் செயல்படுத்த முடிகிறது.
அவர்கள் வீட்டில் தானும் ஒருத்தி என்று மற்றவர்கள் பார்வையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் இது மாதிரி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார் வனிதாமணி.
மறுமுறை அவர் பலகாரம் செய்யும்போது யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் அவருக்கு உதவி செய்யக் கிளம்ப சமையல் அறையே ஒரே அமளி துமளியானது.
பொன்னிக்கும் சாருலதாவை பிடிக்கவில்லை. அவள் வரும்போதெல்லாம் பொன்னியை வேலைக்காரி என்றுதான் பார்ப்பாள்.
ஆனால் அந்த வீட்டினர் அப்படி பார்க்கமாட்டார்கள். வனிதாமணி தனது சகோதரி போன்றுதான் அவளை நடத்துவார்.
பிள்ளைகள் இருவரும் பொன்னியம்மா என்றுதான் அழைப்பர். அதே மாதிரி அழைத்த கிருஷ்ணவேணியைப் பிடித்துவிட்டது.
ஆனால் சாருலதா இப்போதும் அலட்டலாய் நடந்துகொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.
தாங்கள் வாங்கி வந்த புத்தாடைகளை வனிதாணியின் வசம் தகப்பனும் மகனும் ஒப்படைத்துவிட்டனர்.
வனிதாமணியிடம் ரவிச்சந்திரன் யார் யாருக்கு என்னென்ன மாதிரி ஆடை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கேட்டு மகேந்திரனிடம் சொல்ல அவன்தான் தேர்ந்தெடுத்தான்.
அனைவரையும் அழைத்து வாங்கி வந்திருந்த புத்தாடைகளை அவரவர்க்கு கொடுத்தார் வனிதாமணி.
சாருலதாவும் கூடவே சென்றிருந்தாள். அவள் தனக்கென்று சுடிதாரை எடுத்திருந்தாள். கிருஷ்ணவேணிக்கு பட்டுப்புடவை எடுத்து வரச்சொல்லியிருந்தார் வனிதாமணி. இது தெரியாமல் சுடிதார் எடுத்துவிட்டோமே என்று அதன்பிறகு சாருலதா வருந்தினாள். இருந்தாலும் மாற்றினாள் மகேந்திரன் ஏதாவது நினைத்துக்கொள்வானோ? என்று அத்துடன் விட்டுவிட்டாள்.
காலையில் படையல் போட்டுவிட்டு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தவர்களிடம் புத்தாடைகளில் மஞ்சள் வைத்துக் கொடுத்தார் வனிதாமணி.
அனைவரும் அணிந்து வர காலை உணவு உண்டனர்.
மகேந்திரன் தனக்கு பட்டு வேட்டி சட்டை எடுத்திருந்தான்.
யுகேந்திரன் தனக்கு இடுப்பில் வேட்டி நிற்காது என்று முன்பே சொல்லியிருந்ததால் அவனுக்கு பேண்ட் சட்டைதான்.
மகேந்திரனை முதன் முதலில் வேட்டி சட்டையில் பார்த்த கிருஷ்ணவேணி மனம் தடுமாறினாள்.
கூடவே சாருலதா வந்திருப்பதை பார்க்கும்போது அவனுக்கு அவள் மேல் பிடித்தம் இல்லாமலா போகும் இடத்திற்கெல்லாம் அழைத்துக்கொண்டு செல்கிறான் என்று மனதில் தோன்றியது.
அதனால் தேவை இல்லாமல் மனதில் எந்த எண்ணமும் வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று தனக்குத்தானே கடிவாளம் போட்டுக்கொண்டாள்.
எப்படியாவது இந்த ஒரு வருட படிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடித்துவிட்டு அவர்கள் வீட்டை விட்டு கிளம்பிவிட வேண்டும் என்று உறுதிகொண்டாள்.
அதன் பிறகு அவளுக்கு உள்ள பிரச்சினைகள் வேறு எதைப் பற்றிய சிந்தனையையும் அவளை அண்டவிடாது.
பெருமூச்சு விட்டாள்.
“கிருஷ்மா. பார்த்து. நான் பறந்து போயிருவேன் போல.”
யுகேந்திரனின் கிண்டல் குரல் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.
அவன் முதுகில் செல்லமாய் தட்டினாள்.
இருவருமே சிரித்துக்கொண்டிருக்கையில் மகேந்திரனும் சாருலதாவும் அருகே வந்தனர்.
அப்போது அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரனின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை.
குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்று வனிதாமணி சொன்னதால் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர். எப்போது ஊருக்கு வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதை வனிதாமணி வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அவர்களைப் பார்த்து பூசாரி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
வனிதாமணி பூஜைக்குரிய சாமான்களை அவரிடம் கொடுத்தார். அவரும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பூஜை செய்ய ஆரம்பித்தார்.
தீபாராதனை காட்ட அனைவரும் கண்களில் ஒற்றிக்கொண்டனர்.
பிரகாரத்தைச் சுற்றி விட்டு வந்து சற்று அமர்ந்தனர்.
அதற்குள் வந்திருந்த மற்றவர்களுக்கும் பூஜை செய்து முடித்துவிட்டு வந்திருந்த பூசாரி அவர்களிடம் சாவதானமாய் பேச வந்தார்.
“இந்தப் பொண்ணுதான் நம்ம புள்ளையாண்டானுக்குப் பார்த்திருக்கிற பொண்ணா? நன்னா லட்சணமா இருக்கா.” என்று அவர் கிருஷ்ணவேணியைப் பார்த்து சொல்லிவிட மற்றவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மற்றவர் மறுத்துச்சொல்லட்டும் என்று அடுத்தவரைப் பார்த்திருந்தனர். அடுத்தவர்கள் எதுவும் மறுத்துச்சொல்லாமல் தாங்கள் சொல்வது சரிவராது என்று மீண்டும் யாரும் பேசவில்லை.
சாருலதாவிற்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவ்வளவுதான். வேறு வினையே வேண்டாம். மகேந்திரன் பயந்துவிட்டான்.
“அதெல்லாம் வேண்டாம். அம்மாவும் அப்பாவும் தூங்கறாங்கதானே? அதனால்தான் அமைதியா வரச்சொன்னேன்.”
“நாங்களும் தூங்கிட்டா உனக்கும் தூக்கம் வரும். அப்புறம் நீ வண்டியை எங்காவது விட்டுட்டா. நான் என்ன செய்யறது? இன்னும் எத்தனை வருடம் நான் வாழ வேண்டியிருக்கு? உன்னோட கவனமின்மையால் நான் அவதிப்படனுமா?”
அவன் பேசப்பேச மகேந்திரன் தலையில் அடித்துக்கொண்டான்.
“உச். நீ ஏன் இப்படி பேசறே யுகா. மாமாவும் அத்தையும் தூங்கறாங்கன்னுதானே உன் அண்ணா அப்படி சொன்னார்.”
கிசுகிசுப்பான குரலில் கிருஷ்ணவேணி கூறினாள்.
அதன் பிறகு இருவரும் சத்தம் வராமலே பேசிக்கொண்டு வர அதுவே மகேந்திரனுக்கு இடைஞ்சலாக இருந்தது.
“உங்க அண்ணா பாவம் யுகா. அவரே நீண்ட நேரம் வண்டியை ஓட்டிக்கிட்டு வர்றார்.”
அவனுக்கும் ஓய்வு முக்கியம் என்று அவனுக்கும் புரிந்தது. நாளைக்கு உடல்நிலையைக் காரணம் காட்டி அவன் விடுப்பு எடுத்துவிடுவான். ஆனால் மகேந்திரன் அப்படியில்லை.
இப்போது கொஞ்சம் நேரம் தூங்கினால்தான் ஓய்வு கிடைத்த மாதிரியிருக்கும்.
“அண்ணா.”
அவன் அழைப்புக்கு “என்ன?” என்று கேட்டான்.
“கொஞ்சம் வண்டியை நிறுத்தேன்.”
அவனும் வண்டியை நிறுத்தினான்.
யுகேந்திரன் காரை விட்டு இறங்க என்னவோ கஏதோவென்று அவனும் இறங்கி தம்பியிருந்த பக்கம் வந்தான்.
அவனோ அண்ணனின் பக்கம் வந்தவன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.
“என்னடா பண்றே?”
“அண்ணா. நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ. நான் ஓட்டறேன்.”
“வேண்டாம்.” அவன் மறுத்தான்.
“நான் கொஞ்சம் சுமாராவே ஓட்டுவேன். நீ பயப்பட வேண்டாம்.”
“மெதுவா ஓட்டனும்.”
“கிருஷ். நீயும் முன்னாடி வர்றியா?”
“சாருக்கா இருக்காங்களே?”
“அவளை இப்போ எழுப்பறது நடக்காத காரியம். நீ பின்னாடியே உட்காரு.”
மகேந்திரன் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொள்ள யுகேந்திரன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
தனக்குப் பிடித்த மெல்லிசையை சத்தம் குறைத்து ஓடவிட்டான். அது தூங்குபவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் மற்றவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது.
அவனை இத்தனை நெருக்கத்தில் அவள் பார்த்ததில்லை. அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. நன்றாக ஓரத்தில் ஒண்டிக்கொண்டாள்.
அவனுக்கு அவளது செயலைப் பார்த்து ஒரு மாதிரியாக இருந்தது. அவன் என்னமோ அவளை ஏதோ செய்யப் போற மாதிரியே அவள் நடந்துகொண்டது கோபத்தை உண்டாக்கியது.
“பார்த்து. மெதுவா. ரொம்ப ஓரத்திற்குப் போறேன்னு காரை உடைச்சிக்கிட்டு வெளியே விழுந்துடுவே போல இருக்கு.”
அவன்தான் தன்னிடம் பேசினானா? அவனது குரலில் தெறித்த கோபம் கண்டு அவள் திகைத்தாள்.
“இல்லை. உங்களுக்கு இடம் வேணும்னுதான்.”
முணுமுணுப்பாய் பதில் சொன்னாள்.
“நான் அந்த அளவுக்கு பெரிய உருவமாகவா இருக்கிறேன். இப்ப இருக்கிற இடம் போதும். நீ சரியா உட்காரு.”
அதட்டலாகச் சொன்னான்.
“ம். சரி.”
அதையும் முணுமுணுப்புடனே சொன்னவள் மீண்டும் அவன் திட்டி விடுவானே என்று நன்றாக நகர்ந்து உட்கார்ந்தாள்.
‘இந்த யுகா பேசாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கலாம்.’
மனதிற்குள் யுகேந்திரனை திட்டினாள்.
அவளுக்கு அப்படியே பொம்மை மாதிரி அமர்ந்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது.
தூக்கம் வந்தது.
அவன் பக்கம் காலை நீட்டினால் அது மரியாதைக் குறைவாக இருக்கும் என்று ஓரத்தில் காலை நீட்டிவிட்டு இருக்கையின் பின்பக்கம் தலைசாய்த்துக் கொண்டாள்.
பின்பு நல்ல உறக்கம் அவளைத் தழுவியது. தன்னையறியாமல் மகேந்திரன் பக்கம் சாய்ந்தாள்.
தன் மீது சாய்ந்தவளின் முகத்தைக் கடந்துபோன விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான்.
அவள் குழந்தையாய் தெரிந்தாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவள் யுகேந்திரனின் வகுப்பில் படித்தாலும் அவனை விட இரண்டு வயது சிறியவள்.
யுகேந்திரன் சிறு வயதில் மிகவும் நோஞ்சலாக இருந்ததால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவனைப் பள்ளியில் தாமதமாக தான் சேர்த்திருந்தனர்.
தம்பியையே குழந்தையாகதான் பார்க்கிறான். அவனை விட சிறியவள்.
அன்று முதன் முதலாய் பார்க்கும்போது கல்லூரியில் விழா என்பதற்காக புடவை கட்டியிருந்தாள். பார்க்க பெரிய பெண் போல் இருந்தாள்.
ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவளது நடத்தை எல்லாம் யுகேந்திரனைவிட சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தது.
இப்போது ஊருக்கு வந்திருந்தபோது ஒருமுறை அவள் தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்ததைப் பார்த்தான்.
சிறுபிள்ளை போல் அவளுக்கும் யுகேந்திரனுக்கும் வனிதாமணியின் மடியில் படுப்பது யார் என்பதில் சிறு சண்டையே வந்தது.
“இவனுக்கு ஒரு தங்கையோ தம்பியே பிறந்திருந்தா இத்தனை சிறுபிள்ளைத்தனத்துடன் இவன் இருந்திருக்க மாட்டான் அத்தை. பாருங்க. சின்னப்பிள்ளை மாதிரி என்கிட்ட சண்டைக்கு வர்றான்.”
என்று அவள் வனிதாமணியிடம் குறைபட்டாள்.
அவர் பெருமூச்சுவிட்டார்.
அவருக்கு யுகேந்திரன் ஆண் பிள்ளையாக பிறந்துவிட்ட பிறகு அடுத்து ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது.
ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு சொன்னால் வனிதாமணி கேட்கமாட்டார் என்று தானே மருத்துவமனைக்குச் சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டு வந்துவிட்டார் ரவிச்சந்திரன்.
அதில் அவர் தன் மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பு தெரிந்தாலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க விடாமல் செய்துவிட்டாரே என்ற கோபமும் இருந்தது.
“நமக்கு பெண் குழந்தை பிறந்தால்தானா? நமக்கு வரும் மருமகள்களை நம்ம மகள்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு இல்லையா?”
ஒரே கேள்வியில் ரவிச்சந்திரன் தன் மனைவியை வீழ்த்திவிட்டார்.
அதன் பிறகு அவர் நேரிடையாக தன் கணவரிடம் அதைப் பற்றி பேசுவதேயில்லை.
வண்டி திடீரென்று நின்ற வேகத்தில் அவனது கவனம் கலைந்தது.
“என்னாச்சு யுகா?”
“ஒன்னுமில்லைண்ணா. கிருஷ் தூங்கிட்டாளா?”
“ஆமாம். நீ பார்த்து வண்டியை ஓட்டு.”
“சரிண்ணா.”
வண்டி குலுங்கியதில் விழ இருந்தவளைத் தாங்கி தன் மடியிலே ஒழுங்காகப் படுக்க வைத்தான்.
அப்போது சரிய இருந்தவளை மீண்டும் இழுத்து தன் மடியின் மீது அவள் தலையை வைத்த போது அவளது கன்னத்தில் கை பட்டுவிட்டது.
மிக மிருதுவாக பஞ்சு போன்ற அவளது கன்னத்தைக் கண்டு அவனுக்கு விபரீதமான ஆசை வந்தது. மிகவும் சிரமப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டான்.
தம்பி தன் மீது வைத்த நம்பிக்கையை கெடுக்கும விதமாக தான் நடந்துகொள்ள கூடாது என்று தன்னையே கடிந்துகொண்டான்.
ஒரு வழியாய் அவனது சோதனைக்கு முடிவு வந்தது. அவர்கள் வீடு வந்துவிட்டது. இன்னும் பொழுது புலரவில்லை.
மகேந்திரன் மற்றவர்கள் பார்க்கும் முன்னே கிருஷ்ணவேணியை தன் மடியில் இருந்து எழுப்பி உட்கார வைத்தான். என்னவோ பெரிய குற்றம் செய்தது போல் மனம் குறுகுறுத்தது.
யுகேந்திரன் காரை நிறுத்திவிட்டு தன் பெற்றோரை எழுப்பினான். பின்னர் கிருஷ்ணவேணியையும் எழுப்ப அவர்கள் இறங்கினர்.
வனிதாமணி முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சாருலதாவையும் எழுப்பிவிட்டார்.
அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து அவரவர் அறைக்குள் நுழைந்து விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தனர்.
ஆனால் மகேந்திரனால் முடியவில்லை.
மடியில் கிருஷ்ணவேணி படுத்திருந்த போது எழுந்த உணர்வே இப்போதும் தோன்ற அவனால் உறங்க முடியவில்லை. தான் செய்வது தவறு என்று புரிந்தது. ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்றைய பொழுது மகேந்திரனுக்கு உறங்காமலே விடிந்தது.
•