அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
A Small Plea to the Writer,, Dont misguide us and give fake promises.. you say Will update tonight and never ever keep the Timeline,,, we know your Work pressure and all... But it is like holding the tail behind you and your thread and I see many going beserk if you dont give update...

Please if you think you cant make the words come true, dont make an announcement falsely....
[+] 2 users Like PANNIRUVAEL KHAI's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(31-01-2021, 06:59 PM)PANNIRUVAEL KHAI Wrote: A Small Plea to the Writer,, Dont misguide us and give fake promises.. you say Will update tonight and never ever keep the Timeline,,, we know your Work pressure and all... But it is like holding the tail behind you and your thread and I see many going beserk if you dont give update...

Please if you think you cant make the words come true, dont make an  announcement falsely....

Sure and sorry. I usually write two to three subsequent parts before posting a part just to ensure the posted part won't need any change. But with past three or four parts, I was re-writing a lot, sometimes squeezing together few parts and splitting a part in to two or more. It's just that the next part was completed on the day I posted the last part and I thought only editing was remaining. When I was editing, I felt that I was rushing through and the part was like a informative not a narrative. I felt that the part from mani's point of view would be bit more emotional. I split the part into three and writing back and forth.

I am trying my best and I never intended to tease readers.

And no offense taken.
Like Reply
(31-01-2021, 07:22 PM)Doyencamphor Wrote: Sure and sorry. I usually write two to three subsequent parts before posting a part just to ensure the posted part won't need any change. But with past three or four parts, I was re-writing a lot, sometimes squeezing together few parts and splitting a part in to two or more. It's just that the next part was completed on the day I posted the last part and I thought only editing was remaining. When I was editing, I felt that I was rushing through and the part was like a informative not a narrative. I felt that the part from mani's point of view would be bit more emotional. I split the part into three and writing back and forth.

I am trying my best and I never intended to tease readers.

And no offense taken.

Everything fine. And now you can tell when is the next update clearly.
Like Reply
I'm from the time of Xossip, enjoyed the stories of writers like NV , Screw Driver Ocean Robinjr and Many others.. I know my Words have some what teased you..Writing a Long story needs lot and lot of Composure, Patience and lot of Imagination (Unless it happened in Real) to bring all the thoughts into words ,,,We know well your position,, But dont keep the tempo for a Long time which leads to loss of Readers , Active Mem in Forum ..They might conclude in some point of time that the Author will keep on repeating the same words, cant keep his words... Be active , Discuss with fellow readers..That might cheer you..
I really love the story , but some point of time , I too lose the patience thinking the Author is not so able to bring his thoughts into imagination... The Pain the protagonist undergoes his love , yet I think I wish he should join with all the lost love !!There is no words to describe of winning back the love with loved ones....
I personally suggest you must read a lot lot Books.. Unless it wont come into the shape you desire... Personally Screw Told me once , he read almost 15-20 Hrs a week,, To bring how the modifications should be,. The Amount of Love , The amount of Sex the amount of lust all ... That will strengthen you a lot,,, Even a small discussion with fans will spark you some where!!

All the best,, Thanks for allowing me to vent out about the story... Keep the work coming.. My Prayers for both to succeed and finish in good time...!!
Like Reply
(31-01-2021, 10:36 PM)praaj Wrote: Everything fine. And now you can tell when is the next update clearly.

I think Camphor is a good Writer,, But he cant put the correct emotions in place that happens always .. Over a period of time he'll surely come up to meet the xpectations.. Dont pressurise him... He can deliver but need a lot lot of time, IMO ,,,, 
In tamil many lines Written by KANNADASAN cant be translated as easy into any language.. Thats the beauty of TAMIL ... Similarly Putting the Emotions needs a lot lot of Efforts, since TAMIL is a very Dignified Beautiful yet Dangerous Language, The Position of the Word entirely collapses the meaning .. so let us wait .. Dont keep on asking for Updates, that will pressure the Author.. So Keep your Hands and fingers tight and let us pray the Protagonist succeed in Love!! I still Love tamil and I still put my Signature across all in TAMIL only, since I used to speak write a lot lot in English, I struck some where putting the words,aptly!!
Like Reply
Not teased, I really felt your disappointment. I agree, I toned down emotions sometimes, cause I receive a lot of personnel messages that few segments are too pain full. That's why I switched from character's POW to a story teller's narrative and also to reduce the size of the story. Truth to be told, I never thought I could write a story like this (P.S. not bragging, read initial three parts).  

I have the whole story in my mind. I really wanted to complete the story before pongal. But when I read a few parts after posting, I felt, I was rushing through. And I really enjoying the process of writing and I don't know if I will be able to write a story like this again. That's the reason for the delay because I don't want to rush and at the same time I don't want to give an incomplete part, just for the sake of keeping, the thread alive. And the biggest disadvantage I have is that, the spelling mistakes. I am decent with my tamil vocabulary but bad with the spellings, the problem of learning it only as a language.  

I too really would like to discuss, in detail about the story, with the readers but I want to do that, after the completion of the story.

@PANNIRUVAEL KHAI, If you could specify the exact segment where you felt that the emotions where missing or not rightly portrayed, I will be happy to explain, my thought process, behind it.
Like Reply
Ok fine ,update
Like Reply
தாமதம்......

இங்கே......

தன்னுடைய சிறப்பான......தரமான......

பதிவை/உணர்வை........

ஒரு படைப்பாளி......

தன்னை படிப்பவர்களுக்காக.......

அவன் எடுத்துக்கொள்ளும் சிரமமே.......

அச்சிரமத்தை அவரோடு சேர்ந்து நாமும் பகிர்வதே சிறந்தது........

இங்கு பகிரப்பட்ட ஒவ்வொரு பதிவும்.....அதைப்படிக்கும் போதே.......எவ்வளவு சிந்தனை.......எவ்வளவு நேரம்......எவ்வளவு கடினஉழைப்பு.......எவ்வளவு உளக்குமுறல்.....

வியந்திருக்கிறேன்......

சாதாரணமாக போயிருக்கலாம்.......

இப்படியானது......அப்படியானது.....எனக் கூறிவிட்டு சென்றிருக்கலாம்......

ஆனால் அப்படி கடக்கவில்லை.......

கலைஞனின் வேட்கை தணியவில்லை........

இன்னும் இங்கே நிறைய சொல்லலாம்......

just one thing.......

The Creator wants to give his best......

and......

All best things ll not come in a go.......

so lets wait dear friends........
[+] 2 users Like வெற்றி's post
Like Reply
Waiting for ur update bro
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
This story will definitely be worth a wait
Like Reply
Will we get Update in near future ??or still cooking up!!??!
Like Reply
டிஸ்கி

(கதை சொல்லியின் தத்துவம்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாக, கொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கி, வரலாற்றில், இரண்டாம் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது. இந்த பகுதியை படிக்காமல், பாகம் - 71யைப் படித்தாலும், கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது

Expressing Oneself. வெளிப்படுத்துதல். தன்னை வெளிப்படுத்துதல். தன் நிலையை வெளிப்படுத்துதல் அல்ல. தன்னை சரியாக வெளிப்படுத்துதல், ஒருவரை உணர்வுகளின் உச்சதிற்கு இட்டுச்செல்லும். உணர்வுகளின் உச்சம் என்பது இன்பமோ, துன்பமோ அல்ல. அது உள்ளத்தின் உவகை. உவக்கை கொண்ட உள்ளம் என்பது திருப்தி. திருப்தி என்பது போதும் என்ற மனநிலை அல்ல. திருப்தி என்பது இன்னும் எடுத்துக்கொள்ள அல்லது கொடுக்க எதுவும் இல்லை என்பதும் அல்ல. அது பகிர்தலின் முழுமை. தேடலின் நிறைவை மட்டும் தனக்கென்று வைத்துக் கொண்டு, கிட்டியதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது. சுயதேடலின் தன்னிறைவு, திருப்தி. ஆன்மிக வழக்கத்தில் கூறுவதென்றால், ஞானி, சித்தன், முக்தி

நிறம் மாறும் பச்சோந்தியைப் போல, வாழ்வின் தேவைக்கு ஏற்ப, நாம் ஒவ்வாறுவரும் நாம் குணத்தை மாற்றிககொள்கிறோம். வீட்டில் இருப்பது போல், அலுவலகத்தில் இருப்பதில்லை, வீட்டிலேயே குழந்தைகளிடம் இருப்பதைப் போல பெரியவர்களிடம் இருப்பதில்லை. நண்பர்கள் அனைவரிடமும் ஒரே போல் இருப்பதில்லை. இப்படி பல நகல்களை கொண்டிருக்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதுதான் "சிறந்த நான்" அல்லது என்னுடைய "சிறந்த நகல்" என்ற ஒரு தன்னிறைவு கொண்ட எண்ணம் இருக்கும். அந்த நான் அல்லது நகல் புற காரணங்களுக்காக என்றுமே மாறாதிருக்குமானால், அதுதான் சுயதேடலின் தன்னிறைவு.

பிழைத்து கிடத்தாலே வாழக்கை என்று இருக்கும் நமக்கு, விளையாட்டும், கலையும் சுயதேடலின் தன்னிறைவைக் கொடுக்கும். வெற்றி கடைசி நொடியில் தீர்மானிக்கப்படும் ஒரு விளையாட்டுப் போட்டியில், இரு அணியின் அதரவாளர்களுக்கும், எதிர் மறையான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அதே போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு, வெற்றிபெற்ற நொடிப்பழுதில் ஆதரவாளர்களின் மனநிலையில் இருந்தாலும், பின் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை ரசிக்கும் மனநிலையில் ஏற்படும் பொழுது, இரு அணி வீரர்களின் உணர்வுகளில் பெரிதாக வித்தியாசம் இருக்காது

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் புற காரணங்கள், ஒரு விளையாட்டின் நுணுக்கங்களை ரசிப்பவர்களுக்கு, அந்த ஆட்டத்தின் தரமே தேடல். இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம். பறக்கும் சிக்சரை, ஸ்டம்பை உடைக்கும் யார்கரை மறந்து விடுவோம். நமக்கு மிகவும் பிடித்த பௌலரரின் பந்தில் அடிக்கப் பட்ட அருமையான சிக்சரையோ, நமக்கு மிகவும் பிடித்த வீரர், அருமையாக வீசப்பட்ட யாக்கரில் விக்கெட் இழந்தாலோ, நம்மால் முழு மனதுடன் இன்புற முடியாது, காரணம் நம்முடைய திற்பிடித்தம். ஒரு பௌலர் பந்தை விசுகிறார், பேட்ஸ்மேன் அதை அடித்தும், தடுத்தும் ஆடாமல், கீப்பரிடம் விடுகிறார். ஸ்டம்பிற்கு மேலாக நூலிழையில் பந்து பறந்து சொல்கிறது. “" என்ற சப்தம் மொத்த அரங்கையும் நிறைக்கும் அல்லாவா? அனைவரது முகத்திலும் அச்சரியத்தின் சிரிப்பு இருக்கும் அல்லவா?. பௌலரால் திறமையாக வீசப்பட்ட பந்தை திறமையாக திறமையாக கணித்த பேட்ஸ்மேன் ஆடாமல் விடுகிறார். ஆதரவு நிலை இங்கே அறுந்து போகிறது. இருவரும் தங்கள் திறமையை முழுதாக வெளிப்படுத்தும் பொழுது, யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இங்கு "" என்ற சப்தம் திருப்தியை குறிக்கும்.

மணியின் வாழ்வில் அப்படி ஒரு திருப்தியை கொடுத்தது, அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டது, டென்னிஸ்தான். அவன் பேயாக ஆடிய போதும், அதன் வேட்கையில் மதுவிடம் அத்துமீறிய போதும், ஆட வேண்டும், தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கைதான். வெற்றி என்பது அவனது இலக்கு அல்ல. தொழிலிலும் அதை வேட்கையுடன் அவன் செயல்பட்டிருந்தாலும், அதன் வெற்றியில் அவன் திருப்தி கொள்ளாததற்கு காரணமும் அதுதான். தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை அவனது வெளிப்படுத்துதல் அல்ல தேவை.

அப்படியான ஒரு திருப்தியை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கு(No bad words pls).

P.S: எழுத்துப்பிழை கொண்டிருக்கிறேன் [i](நீக்கிய பின்பே எவ்வளவு எழுத்துப்பிழை?) [/i]பாகம்-71 வெகு விரைவில். 
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
நன்றி.
Like Reply
(02-02-2021, 05:29 PM)Doyencamphor Wrote: டிஸ்கி

(கதை சொல்லியின் தத்துவம்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாக, கொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கி, வரலாற்றில், இரண்டாம் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது. இந்த பகுதியை படிக்காமல், பாகம் - 71யைப் படித்தாலும், கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது

Expressing Oneself. வெளிப்படுத்துதல். தன்னை வெளிப்படுத்துதல். தன் நிலையை வெளிப்படுத்துதல் அல்ல. தன்னை சரியாக வெளிப்படுத்துதல், ஒருவரை உணர்வுகளின் உச்சதிற்கு இட்டுச்செல்லும். உணர்வுகளின் உச்சம் என்பது இன்பமோ, துன்பமோ அல்ல. அது உள்ளத்தின் உவகை. உவக்கை கொண்ட உள்ளம் என்பது திருப்தி. திருப்தி என்பது போதும் என்ற மனநிலை அல்ல. திருப்தி என்பது இன்னும் எடுத்துக்கொள்ள அல்லது கொடுக்க எதுவும் இல்லை என்பதும் அல்ல. அது பகிர்தலின் முழுமை. தேடலின் நிறைவை மட்டும் தனக்கென்று வைத்துக் கொண்டு, கிட்டியதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது. சுயதேடலின் தன்னிறைவு, திருப்தி. ஆன்மிக வழக்கத்தில் கூறுவதென்றால், ஞானி, சித்தன், முக்தி

நிறம் மாறும் பச்சோந்தியைப் போல, வாழ்வின் தேவைக்கு ஏற்ப, நாம் ஒவ்வாறுவரும் நாம் குணத்தை மாற்றிககொள்கிறோம். வீட்டில் இருப்பது போல், அலுவலகத்தில் இருப்பதில்லை, வீட்டிலேயே குழந்தைகளிடம் இருப்பதைப் போல பெரியவர்களிடம் இருப்பதில்லை. நண்பர்கள் அனைவரிடமும் ஒரே போல் இருப்பதில்லை. இப்படி பல நகல்களை கொண்டிருக்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதுதான் "சிறந்த நான்" அல்லது என்னுடைய "சிறந்த நகல்" என்ற ஒரு தன்னிறைவு கொண்ட எண்ணம் இருக்கும். அந்த நான் அல்லது நகல் புற காரணங்களுக்காக என்றுமே மாறாதிருக்குமானால், அதுதான் சுயதேடலின் தன்னிறைவு.

பிழைத்து கிடத்தாலே வாழக்கை என்று இருக்கும் நமக்கு, விளையாட்டும், கலையும் சுயதேடலின் தன்னிறைவைக் கொடுக்கும். வெற்றி கடைசி நொடியில் தீர்மானிக்கப்படும் ஒரு விளையாட்டுப் போட்டியில், இரு அணியின் அதரவாளர்களுக்கும், எதிர் மறையான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அதே போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு, வெற்றிபெற்ற நொடிப்பழுதில் ஆதரவாளர்களின் மனநிலையில் இருந்தாலும், பின் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை ரசிக்கும் மனநிலையில் ஏற்படும் பொழுது, இரு அணி வீரர்களின் உணர்வுகளில் பெரிதாக வித்தியாசம் இருக்காது

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் புற காரணங்கள், ஒரு விளையாட்டின் நுணுக்கங்களை ரசிப்பவர்களுக்கு, அந்த ஆட்டத்தின் தரமே தேடல். இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம். பறக்கும் சிக்சரை, ஸ்டம்பை உடைக்கும் யார்கரை மறந்து விடுவோம். நமக்கு மிகவும் பிடித்த பௌலரரின் பந்தில் அடிக்கப் பட்ட அருமையான சிக்சரையோ, நமக்கு மிகவும் பிடித்த வீரர், அருமையாக வீசப்பட்ட யாக்கரில் விக்கெட் இழந்தாலோ, நம்மால் முழு மனதுடன் இன்புற முடியாது, காரணம் நம்முடைய திற்பிடித்தம். ஒரு பௌலர் பந்தை விசுகிறார், பேட்ஸ்மேன் அதை அடித்தும், தடுத்தும் ஆடாமல், கீப்பரிடம் விடுகிறார். ஸ்டம்பிற்கு மேலாக நூலிழையில் பந்து பறந்து சொல்கிறது. “" என்ற சப்தம் மொத்த அரங்கையும் நிறைக்கும் அல்லாவா? அனைவரது முகத்திலும் அச்சரியத்தின் சிரிப்பு இருக்கும் அல்லவா?. பௌலரால் திறமையாக வீசப்பட்ட பந்தை திறமையாக திறமையாக கணித்த பேட்ஸ்மேன் ஆடாமல் விடுகிறார். ஆதரவு நிலை இங்கே அறுந்து போகிறது. இருவரும் தங்கள் திறமையை முழுதாக வெளிப்படுத்தும் பொழுது, யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இங்கு "" என்ற சப்தம் திருப்தியை குறிக்கும்.

மணியின் வாழ்வில் அப்படி ஒரு திருப்தியை கொடுத்தது, அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டது, டென்னிஸ்தான். அவன் பேயாக ஆடிய போதும், அதன் வேட்கையில் மதுவிடம் அத்துமீறிய போதும், ஆட வேண்டும், தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கைதான். வெற்றி என்பது அவனது இலக்கு அல்ல. தொழிலிலும் அதை வேட்கையுடன் அவன் செயல்பட்டிருந்தாலும், அதன் வெற்றியில் அவன் திருப்தி கொள்ளாததற்கு காரணமும் அதுதான். தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை அவனது வெளிப்படுத்துதல் அல்ல தேவை.

அப்படியான ஒரு திருப்தியை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கு(No bad words pls).

P.S: எழுத்துப்பிழை கொண்டிருக்கிறேன் [i](நீக்கிய பின்பே எவ்வளவு எழுத்துப்பிழை?) [/i]பாகம்-71 வெகு விரைவில். 

Don't make it like Movies like PARTY or NENJAM MARAPDHILLLAI ( These movies never getting a release, still their Teasers trailers made a huge impact) .... Make it as early as possible....
Like Reply
பாகம் - 71 

இருகைகளையும் மடக்கி தலைக்கு கொடுத்து, மல்லார்ந்து படுத்தவாறு, கடந்த அரைமணி நேரமாக விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. இன்று அதிகாலையில் தான் கோவை வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு தெரியும், தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதே தரம் தாழ்ந்த செயல் என்று. அந்த அளவுக்கு, அவன் என்றுமே தரம் தாழ்ந்து போகப்வதில்லை. ஆனால், தன் செயலுக்காக தான் வருந்துகிறேன் என்பதை, அவளிடம் நேரடியாக கூறவே முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். பயணக் களைப்போ?? அல்லது சில வருடங்களாக தன் மனதில் தூக்கி சுமந்த பாராத்தை இறக்கி வைத்த நிறைவோ?? அல்லது தன் ஈனச் செயலுக்கு மன்னிப்பு இல்லை என்று தெரிந்திருந்தாலும், அவள் முகம் பார்த்து சொல்லமுடியாத, தன் செயலுக்காக "நான், உயிர் உள்ளவரை வருந்துவேன்" என்பதை, காலம் தன் மீது இறக்கப்பட்டு, இப்படி ஒரு சந்தரப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க, தன் வலியை அவளிடம் பகிர்ந்து கொண்ட நிம்மதியா?? என்று தெரியவில்லை. நேற்று இரவு, படுத்த சில நிமிடங்களிலேயே உறங்கியவன், மதியம் ஒரு மணிக்குத்தான் விழித்தான். நாள்பட்ட புண்ணின் அரிப்பு போல், முன்தின நிகழ்வு அரிக்க, மதுவின் நினைவுகளை சொரிந்து கொண்டு, சுகமாய் படுத்திருந்தான். வாழக்கை எப்பொழுதும் இப்படித்தான், விடைதெரியாத கேள்வியை கேட்டுவிட்டு, நம்மை சுற்றலில் விடும். அழைந்து, திரிந்து, அடிபட்டு, அது கேட்ட விடையை தெரிந்து கொண்டு வரும்பொழுது, விடையளிக்க வாய்ப்பளிக்காது, மற்றொரு, விடை தெரியாத கேள்வியைக் கேட்டுவிட்டு நம்மைப் பார்த்து சிரிக்கும்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கம் நிறைவேறாமல் போனாலும், அவன் வாழ்வின் பெரும் சுமையை, இறக்கி வைக்க, அந்த கருத்தரிக்க உதவும் என்று அவன், கற்பனையிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மண்ணோடு மண்ணாக, தான் நொதிந்து போகும் வேளையில் தான், தன் மனபாரம், தன்னை விட்டு நீங்கும் என்று நினைத்தவனுக்கு, வாழ்க்கை அவன் எதிர்பாராத ஆறுதலை தந்துவிட, வார்த்தைகளில் விளக்க முடியாத, ஒரு மனநிலையில் படுத்துக் கிடந்தான், மணி. மதுவே, தன்னை மன்னித்து, ஏற்றுக் கொள்ள வந்த பொழுது, அதை தவிர்த்ததில், அவனுக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. அவர்களது உறவே இந்த சமூக மதிப்பீட்டிற்கு முரணானது!!, ஏற்றுக்கொள்ள முடியாதது!! என்பதை, அவள் இல்லாத வாழக்கை, அவனுக்கு புரிய வைத்திருந்தது. மது சொன்னபோது விளங்காத அவளின் பயம், அதன்பின் விளங்கியது. வயது வித்தியாசம் ஒரு சமூகம் முரண் என்றாலும் அதைக் கடந்து விடுவது எளிது. ஆனால் தங்கள் உறவு, நட்பு என்னும் புள்ளியில் ஆரம்பித்திருந்தாலும், சிறிது காலத்திலேயே, அவர்களது குடும்பமும், அவர்களை அக்கா-தம்பியாக பார்க்க ஆரம்பித்திருந்தது. ஏன், அவர்களே, அவர்களை அவ்வாறு தான், கருதிக் கொண்டார்கள்.

பருவ ஹார்மோன்களின் தூண்டுதலா?? அல்லது உண்மையான உள்ளத்தின் வேட்கையா?? காலத்தின் இயல்பானம் மாற்றமா?? அல்லது முன் சொன்ன எல்லாமும் சேர்ந்தா?? என்று தெரியாமல், மீண்டும் அக்கா-தம்பி என்ற உறவு, நட்பாக மாறியது. பருவ மோகத்தில், மணி பெண்களை நாட ஆரம்பித்த காலங்களில், அவன், ஒருமுறை கூட மதுவை, தப்பாக அல்லது தன் இணையாக பார்த்தது இல்லை. இந்த சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, அத்தனை உறவுகளையும் தாண்டியது அல்லது உள்ளடக்கியது, அவனுக்கும், அவளுக்குமான உறவு. அதனால்தானோ?? என்னவோ?? மது, அவனை விரும்புகிறேன், நீயும் என்னை விரும்பித்தான் ஆகவேண்டும் என்று சொன்ன பொழுது, அது வற்புறுத்தலாக தோன்றாமல், கொஞ்சம் தயக்கத்துடன், நிறைய இயல்புடன், அவர்களது உறவு அடுத்த கட்டத்திற்கு சென்றது. பருவத்தின் வேட்கையால், உடலின் தேவையால், கணவன் மனைவி போல, அவர்கள் உறவு மாறி இருந்தாலும், எப்பொழுதும், அவர்களுக்குள்ளான அன்பின், காதலின் வெளிப்பாடாக, பரிமாற்றமாக, நீட்சியாகத்தான், அவர்களின் கூடல் இருந்தது. கூடுதலின் போது, காதலைக் காட்டிலும், காமத்தின் மோகத்தின் கணம், சில சமயம் கூடியிருந்தாலும், அந்தக் கூடலின் முடிவில் காதல் மட்டுமே எஞ்சியிருக்கும்.

மன்னித்து ஏற்றுக்கொள்ள, அவள் தயாராக இருந்த பொழுது, மணி, மதுவை மறுதலிக்க அதுதான் காரணம். அவனது முதல் கூடல் மோகத்தின் தூண்டுதலால், வேறு எவருடனும் நடந்திருந்தால், எவ்வளவு குற்ற உணர்வு இருந்தாலும், உடலுறவு என்பதை உடலின் பசி என்று, அவனால் கடந்து சென்று இருக்க முடியும். காலம் இருவருக்கும், அதற்கு தேவையான, நேரத்தை வழங்கியிருந்தது. அதையும்தாண்டி, அவள் அறியாத ஒரு உண்மை, அவளிடம் சொல்ல முடியாத ஒரு உண்மை, அவனுக்கு தெரியும். மதுவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, அவளை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், அதை தடுப்பதற்கு யாருமில்லை, சிவகாமி உட்பட, என்று அவனுக்கு தெரிந்து இருந்தாலும், அவளுடன் ஒரு சமரசம் செய்துகொண்ட வாழ்வைத் தான், அவனால் வாழ்ந்திருக்க முடியும். அந்த சமரசத்திற்கு, அவள் தயாராக இருந்தாலும், அப்படி ஒரு வாழ்வை, அவளுடன் வாழ, அவன் தயாராக இல்லை. ஏனென்றால், அவனைப் பொறுத்தவரை, மது, அவனைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையானவள். அவன் தேவதை. ஏங்கிக்கிடந்தவனை, இரக்கத்தால், பாசத்தால், காதலால், இட்டு நிரப்பியவள்.

இப்படியான எண்ணங்களில் மூழ்கியிருந்தவனுக்கு, தன் செய்த அத்தனை தவறுகளும், ஒருவகையில், மதுவின் நல்வாழ்விற்கே என்று முதல் முறையாக தோன்றியது. இருந்தும், மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வலி, விரக்தியாக விட்டத்தைப் பார்த்து சிரித்தவனை, அறைக்கதவு திறக்கப்படும் ஓசை மீட்டெடுத்தது. மணியின் அம்மாதான், கதவை திறந்தாள்,

"இன்னும் நீ பெட்ட விட்டே எழுந்திருக்கலையா?" பாசமாக அவனைப் பார்த்து சிரித்தாள். மணியும் சரிதான்.

"டைம் ஆகுது மா!! இன்னும் நீ பிரேக்ஃபாஸ்ட் கூட, சாப்பிடல!!" அவள் கட்டில் அருகே நடந்து வர, எழுந்து அமர்ந்தான். தன் அம்மாவின், அன்பான வார்த்தைகளும், செயலும், அந்த பொழுது, அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. மீண்டும் அவளைப் பார்த்து சிரித்தவன், கட்டிலில் இருந்து இறங்கி,

"அரை மணி நேரம், குளிச்சிட்டு வந்துடுறேன்!!" என்றவன், பாத்ரூம் நோக்கி சென்றான்.

***************

அரைமணி நேரம் கழித்து,

குளித்து முடித்து வந்த மணி, உணவருந்திக் கொண்டிருந்தான். மகன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அருகே வந்து அமர்ந்தாள், சுமா. அவனிடம், அவளது மொபைலை காட்டினாள். தன் தாயின் மொபைலின் தொடுதிரையைப் பார்த்தவனின் உதடுகளில் ஒரு விரகதியான சிரிப்பு.

"காலைல இருந்து, நிறைய மெசேஜ்ஸ்!! நிறைய போன் கால்ஸ்!!" அவளது உள்ளத்தின் மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது. நிறைவாக, பெருமிதமாக, மகனை பார்த்தாள்.

"The Deep fall, Despair and an Unbelievable Rise!!" என்ற தலைப்பில், பிரபலமான நாளிதழில் அவனைப் பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தது. ஐந்தாறு வரிகளை படித்தவனுக்கு, மீதி கட்டுரையில் என்ன எழுதி இருக்கப்பட்ட இருக்கும் என்று புரிந்தது. அவன் நிம்மதி இழந்து, நம்பிக்கை இழந்து, தவித்த காலத்தை, ஓரளவு புரிந்து வைத்திருந்தவள், சுமா. தன் தாயைப் பார்த்து சிரித்தவன், ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவன் மனதின் ஓரத்தில் இருந்த வலியின் கணம் கொஞ்சம் கூடியது. சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர, மணியின் தாத்தாவும் வந்தார். முன்தினம் நடந்த கலந்துரையாடலில் மணி பேசியதையும், இன்று நாளிதழ்களில் அதைப் பற்றி வெளி வந்திருந்த செய்திகளையும் பற்றி, பெருமை பொங்க பேசினார். அவருடன் பேசிக் கொண்டிருக்க, பேசிக் கொண்டிருக்க அவனது மன வலி கூடிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து விடுபடும் பொருட்டு, தனக்கு அசதியாக இருக்கிறது என்று சொல்லி, மீண்டும் தன் அறையில் வந்து படுத்துக்கொண்டான். யாரிடமும் பேசும், சந்திக்கும் மனநிலையில் அவன் இல்லை. சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்

தொழிலில் பெரும் வெற்றி அவனை பெரிதாக எப்பொழுதும் பாதித்ததில்லை. அதேபோல தொழில் இவன் பெற்ற வெற்றிகளால் அம்மாவோ, தாத்தாவோ, ஆச்சியோ மகிழும் பொழுது, அவர்களின் மகிழ்ச்சி மணியையும் சிறிது சந்தோஷம் கொள்ளச் செய்யும். ஆனால் வாழ்க்கை என்று வருகிற பொழுது, தானோ, தன்னை வைத்து, தன்னைச் சார்ந்தவர்கள் மகிழ்வது இதுதான் முதல்முறை. எனோ அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

**************

மணியின் பார்வையில்.

சற்றுமுன் நடந்த எதையுமே என்னால் நம்ப முடியவில்லை............. என்னை ஒருத்தி காதலிக்கிறாள்.............நீ என்னதான் காதலித்தே ஆகவேண்டும் என்று மிரட்டுகிறாள்.............
முதல் முறையாக ஒருத்தியால் முத்தமிடப்பட்டேன்..............அந்த ஒருத்தி மது..... என்று நினைக்கையில், என் உள்ளமும் உடலும் சிலிர்த்துக்கொண்டது. அவளுக்காக அல்லது அவளால், நிறைய முறை அழுதிருக்கிறேன்.முதன்முதலாக மது அழுது, நான் பார்க்கிறேன். அதைக்காட்டிலும், அந்த அழுகை எனக்கானது என்பதை, எப்படி எடுத்துக் கொள்வது என்பது கூட தெரியவில்லை. அவளின் அழுகை எனக்கு வலியைக் கொடுப்பதற்கு பதில், ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அனீஸ் தொடங்கி சுமேஷ், ஏன், இன்று காலை பிரதீப் வரை, அவளை அணுகும் சமவயது ஆண்களால், பெரிதும் கலவரத்துக்கு உள்ளாயிருக்கிறேன். அவள் வாழ்வின் முதன்மையான ஆண் என்ற இடத்தை இழந்து விடுவேனோ என்று எத்தனையோ முறை தவித்திருக்கிறேன். கேட்காத வரத்தை, கடவுளே, தேடி வந்து கொடுக்கும் பொழுது, அதிர்ச்சியும் குழப்பமும் மிஞ்சும். அப்படி ஒரு வரம் கிடைத்த, குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் தான் அமர்ந்து இருந்தேன்.

அவள் சில நிமிடங்களுக்கு முன் என்னை முத்தமிட்டாள், என்னிடம் அவள் காதலைச் சொல்லி அழுதாள். மது, என் மது, இனி அவள் எனக்கே எனக்கு என்று நினைக்கையில், பெரும் போதையில் மிதப்பது போல் தோன்றியது. "ச்செ!!, திரும்ப முத்தமிட்ட இருக்கலாமே!!" "நான் உம்மாஞ்சி மாதிரி இருந்ததை லைஃப் புல்லா சொல்லிக் காட்டுவாளே!!" என்று நினைக்கையில், எங்கிருந்தோ வந்த வெட்கம், என்னை பூசிக் கொண்டது. நேற்று இரவு, "ட்ரெயின்ல இருந்தோமே!! அதே மாதிரி!! உன் பாப்பாவா இருக்கணும்!!” என்று கேட்ட பொழுது யாருடைய தொந்தரவும் இன்றி, அவளுடன் மட்டும் நேரம் செலவழிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. ட்ரெய்னில் இருந்ததுபோல கட்டிக்கொண்டு படுப்பது, எங்கள் வயதுக்கு சரியாக இருக்காது என்ற எண்ணம் இருந்தாலும், உண்மையிலேயே அவளின் அணைப்பில் இருக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் போல ஏங்கினேன். இனி அப்படி ஏங்க தேவை இல்லை. அவளுக்கு நானும், எனக்கு அவளும். அவள் மடியிலேயே புதைந்து கிடக்கலாம், கட்டிக்கொண்டு தூங்கலாம், முத்தமிடலாம் என்று நினைக்கையில், அடக்கமாட்டாத சந்தோஷம் என் உள்ளத்தில். இந்த கோயம்புத்தூரையே கத்தி எழுப்பவேண்டும் போல் தோன்றியது.

மெதுவாக நிமிர்ந்து, அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்தேன். எனக்கு முதுகைக் காட்டியவாறு, அவள் மேலாடையை கலட்ட, சற்றென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். நான் பார்ப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அதை பற்றிக் கவலைப்படமால் உடை மாற்றி, அவள் மேல், எனக்கு உள்ள உரிமையை, சொல்லாமல் சொன்னாள். ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்த, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். பார்க்காதே!! பார்க்காதே!! என்று ஒரு மனமும், பார்!!, பார்!! என்று இன்னொரு மனமும் போட்டி போட்டு என்னை அலைக்கழிக்க, மீண்டும் லேசாக நிமிர்ந்து பார்த்தேன், முழு நிர்வாணமாய் இருந்தாள், ஒரு நொடி கூட இருக்காது, மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். ஆனால் ஆடை இல்லாத அவளது உருவம், என் கண்களுக்குள் அப்படியே இருந்தது. என் வயிற்றுக்குள் கையை நுழைத்து, யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல் தோன்றியது. அடுத்து என்ன நடக்கலாம் என்று எண்ணுகையில், அந்த எண்ணம் கொடுத்த சாத்தியங்களை நினைக்க, கண்களை முடிக்கொண்டேன். மோகம் இல்லை, தாபம் இல்லை, காமம் இல்லை, உண்மையிலேயே சிரித்தேன். குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்த மனதை ஒருநிலைப் படுத்தினேன். "அவ பொண்ணு!! நீதான் கட்டுப்பாடா இருக்கணும்!! தப்பா எதுவும் பண்ணக்கூடாது!! தனியா படுத்துக்கணும்!! இல்ல!! இல்ல!! கட்டுக்கிட்டு படுத்துக்கலாம்!! கிஸ் பண்ணக் கூடாது!! இல்ல!! இல்ல!! கண்ணத்துல, நெத்தில ஓகே!! அதுக்கு மேல எதுவும் பண்ணக்கூடாது!!” என்று எதைப் பண்ணலாம், எதைப் பண்ணக்கூடாது என்று ஒரு அட்டவணையை தயாரித்து என்னிடம் கொடுத்தது என் மூளை. உடனே அவளிடம் செல்ல வேண்டும் போல் இருந்தது, பாத்ரூமில் இருந்து எழுந்து தலையைத் துவட்ட ஆரம்பித்தேன்.

திடுக்கிட்டு விழித்தேன். எனது மொபைல், சிறிது நேரம் அலறிவிட்டு அமைதியானது.

************

ஏழு வருட உறக்கத்திலிருந்து எழுந்தது போல் ஒரு உணர்வு. சில நிமிடம் என் மூளையும் உடலும் இயங்க மறுத்தது. கடந்த நொடிதான் அந்த பாத்டப்பிற்குள் இருந்து எழுந்ததுபோல் உணர்ந்தேன். கனவு என்று புரிந்தாலும், அது என் மன கற்பனையல்ல. இனி எனக்கு வேண்டாம் என்று, என் நினைவு அடுக்குகளில் புதைத்து வைத்த என் வாழ்வின் எச்சம், என் இன்பத்தின் உச்சம். கனவில் இருந்த சிலிர்ப்பு காணாமல் போயிருந்தது, சொல்லப்போனால் என் உடலும், உள்ளமும் வெலவெலத்துப் போயிருந்தது. எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன். என் கடந்த கால நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மூச்சு விட சிரமப் பட்டேன், தேகம் சில்லிட்டது, உடல் வியர்க்க ஆரம்பித்தது, கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல தோன்ற, தலையை உதறி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்று, தோற்றேன். இதுவே ஒன்றரை வருடத்திற்கு முன் என்றால், நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், அந்தப் பள்ளத்தாக்கில் என்னை தொலைத்து கொள்ள, கிளம்பி இருப்பேன். அந்த பள்ளத்தாக்கில் நான் மொத்தமாக தொலைந்து போனால், அதனால் ஏற்படும் இழப்பும், அந்த இழப்பினால் என்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் வலியையும், என் பொறுப்பையும் உணர்ந்திருந்தேன். இந்த ஒன்றரை வருடங்களில், இப்படியான சூழ்நிலைகளில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பழகியிருந்தேன்

ஆனால் இன்று அது முடியாது என்று தோன்றியது. எழுந்து, டிராவிலிருந்து மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டேன். உடைகளை கலைந்தேன், பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரை திறந்து அதனடியில் நின்று கொண்டேன். கால்களில் வலு குறைவது போல தோன்றியது, அப்படியே தரையில் அமர்ந்தேன். தண்ணீரின் குளிர்ச்சி ஏற்கனவே சில்லிட்டிருந்த உடலை, நடுக்கமுற செய்தது. தண்ணீரின் வெப்பத்தை அதிகரித்தேன். என் கண்களில் பாத்ரூமில் இருந்த "பாத்டப்" பட்டது, சூடு பட்டதைப் போல, சட்டென அதற்கு முதுகு காட்டி திரும்பி அமர்ந்து கொண்டேன், மீண்டும் தண்ணீரின் வெப்பத்தை அதிகரித்தேன், தண்ணீரின் வெப்பம் தாளாமல் என் தோல் எரிய ஆரம்பித்தது. அந்த எரிச்சல், ஏனோ எனக்கு கொஞ்சம் ஆறுதலாய், தேவையாய் இருந்தது. கண்களை மூடி அமர்ந்திருந்தேன், எவ்வளவு நேரம் என்று தெரியாது, வெந்நீரின் வெப்பத்தை தாங்க முடியாத அளவுக்கு தோல் எரிய ஆரம்பித்ததும், ஷவரை அணைத்து விட்டு வெளியேறினேன். உடை மாற்றிவிட்டு, கண்ணாடியில் என் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல், கண்ணாடி பார்க்காமல் தலைவாரி விட்டு சோபாவில் அமர்ந்தேன். தோல்லில் எரிச்சல் அப்படியே இருந்தது. கண்களை மூடி சோபாவில் தலை சரித்தேன், தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கினேன். "எனக்கு அசதியாக இருக்கிறது, இரவு உணவு வேண்டாம்" என்று அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு, படுத்துக்கொண்டேன். மாத்திரையின் உதவியால் தூங்கிப்போனேன்.

*********

துக்கம் கலைந்து எழுந்த போது, மணி பத்து என்று காட்டியது. மத்திரை, நான்கு மணி நேரத்திற்கு மேல் தாக்குக்குபிடிக்கவில்லை. உடல் எல்லாம் எரிவது போல் இருந்தது. எழுந்து முகம் கழுவிட்டு கண்ணாடி முன் நின்று, அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டினேன். மேல் உடலெல்லாம் கன்னிப்போய் இருந்தது, ஆங்காங்கே கருஞ்சிவப்பாக இரத்தம் கட்டியிது போல் இருந்தது, இரண்டொரு இடங்களில் தோல் வெடித்திருந்தது. சுடுநீர் உடம்பில் பட்டதன் தாக்கம். தன் தாயைப் பற்றிக் கொண்ட குரங்குகுட்டி போல, என் மனம் இன்னும் அந்த நினைவுகளை பற்றிக் கொண்டு இருந்தது. மீண்டும் மனதில் அழுத்தம் கூட, டி-ஷர்ட் அணிந்து கொண்டு, அறையை விட்டு வெளியேறி, மொட்டை மாடிக்கு சென்றேன். மனதின் அழுத்தமும், உடலின் எரிசலும், என்னை ஓரிடத்தில் நிற்க விடாமல் அங்கும் இங்கும் அலையச் செய்தது. டி-ஷர்ட்டை கலட்டிவிட்டு நீச்சல் குளத்தில் விழுந்தேன். உடலின் எரிச்சலுக்கு, குளிர்ந்த தண்ணீர் இதமாக இருந்தது. நீச்சல் குளத்தில் நீளவாக்கில், நீந்த ஆரம்பித்தேன். தண்ணீர் கொடுத்த இதம், இரண்டு நிமிடம்கூட நீடிக்க வில்லை. கைகளும் கால்களும் வலுவிழப்பது போல் தோன்றியது. நீச்சல் குளத்தில் இருந்து எழுந்தேன், அருகிலிருந்த ஜிம்முக்கு நுழைந்து டிரெட்மில்லில் ஓட ஆரம்பித்தேன். சில நிமிடங்களுக்குப் பின் சுவிட்சை ஆப் செய்து விட்டு, இறங்கி வாய்விட்டு கத்தினேன். உள்ளத்தின் அலைக்கழிப்பால், என்னால் எதிலுமே முழுமையாக ஈடுபட முடியவில்லை.

இதேபோன்றதொரு இரவில், மனநிலையில் தான், என் வாழ்வை தொலைத்தது நினைவில் வந்தது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும், கொடுப்பதற்கு நிறைய இருந்தது. வாழ்க்கை எனக்களித்த இரண்டாவது வாய்ப்பை தவறவிட்டு, நான் செய்த பாவத்திற்காக, என்னைச் சார்ந்தவர்களையும் தண்டிக்கக் கூடாது என்று எண்ணினேன். வலி, வலி என்று என் சிந்தனையில் ஓட, வலி, அதுதான் இது போன்ற சமயங்களில் என்னை மீட்டெடுத்து. சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் தேடியது கிட்டியது. நான் வழக்கமாக தூக்குவதைக் காட்டிலும், பத்து கிலோ கூடுதல் போட்டு, பலு தூக்கினேன். இடுப்பு ஒடிந்து விடுவதுபோல் வலி வரும்வரை, திரும்பத் திரும்ப தூக்கினேன். இதற்கு மேலும் முடியாது என்று தோன்றிய பின், இடுப்பின் இரு புறமும் கை வைத்துக்கொண்டு, ஜிம்மில் இருந்து வெளியேறி, அதன் வாசலில் அமர்ந்தேன். க்லோவேஸ் அணியாமல் எடை தூக்கியதால் கை எரிந்தது, வியர்வையில் வழிந்திருந்த உடலில் வெளிக்காற்று பட, இதமாக இருந்தது. நீந்துவதை, ஓடுவதைப் போல அல்ல பலு தூக்குதல். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், உடலின் வடிவம் கெடாமல் இருக்க வேண்டும். பலுதூக்க தேவைப்பட்ட கவணத்தாலோ அல்லது தேவையான வலியை, எனக்கு நானே கொடுத்துக் கொண்டதாலோ என்னவோ, மனம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

அலையாவிட்ட பார்வையில், எனக்கென்று எங்கள் வீட்டு மாடியிலேயே அமைக்கப்பட்ட டெண்ணிஸ் கோர்ட் கண்ணில் பட்டது. எழுந்து சென்று, அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன், பல வருடங்கள் கழித்து. அழுக்குப் படிந்து குப்பை குளம் போல் காட்சியளித்தது, நான் பயிற்சி செய்ய பயன்படுத்திய பௌலிங் மெஷின், கண்ணில் படவே அதை நோக்கிச் சென்றேன். பௌலிங் மேஷினிற்கான பொத்தானை தட்டியதும், மெஷின் உயிர் பெற்றதை நம்ப முடியவில்லை, புன்னகையில் விரிந்தது என் உதடுகள். கீழே கிடந்த இரண்டு பந்துகளை கையிலெடுக்க, அதிலிருந்து அழுக்கு அத்தனையும் என் கையில் ஒட்டிக்கொண்டது. பந்தை பௌலிங் மெஷினில் போட்டுவிட்டு, பொத்தானை தட்ட, "டப்" என்ற ஓசையுடன், பந்து அந்த மெஷினிலிருந்து பறந்தது. "டப்" என்ற ஓசை, என் நாடி, நரம்புகளை எல்லாம் சிலிர்க்கச் செய்தது. பௌலிங் மெஷினில் இருந்து பறந்து சென்ற பந்து, தொங்கிக்கொண்டிருந்த வலையில் பட்டதும், மூன்று நான்கு துண்டுகளாக, அது அறுந்து விழுந்தது. அறுந்து விழுந்த டெண்ணிஸ் வலை, எனக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வது போல் தோன்ற, விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினேன். அறைக்கு வந்து மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கிவிட்டு, கண்களை இறுக்க மூடி, படுத்துக்கொண்டேன்.

************
தொடர்ச்சி........
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
தொடர்ச்சி........

***************

மறுநாள்

வேலையில் என்னை முழுகடித்துவாழ்க்கை எனக்களித்த எதிர்பாராத அதிர்ச்சியில் இருந்துஎன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டு இருந்தேன்மனது கொஞ்சம் தெளிவடைந்து இருந்தாலும்ஏதோ ஒரு ஏக்கம் ஒட்டிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லைமாலை மூன்று மணியளவில்நேத்ரா NGO குழவினருடன் வந்திருந்தாள்இந்த வருடம் அவர்களுக்கு அளித்த நன்கொடைக்கக்காக நன்றி சொல்ல வந்திருந்தார்கள்சிறிது நேரம் பேசிவிட்டுஅவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் என் அறையில் நுழைந்த நேத்ரா

"என்ன டா இது?? பர்ன் இஞ்சூரி ஆயின்மெண்ட்??" என் டேபிளில் இருந்த ஆயின்மெண்ட் டப்பாவை கையில் எடுத்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து கேட்டாள்

நேற்று வெண்ணீரல் குளித்ததன் பலனாகதோள்களின் இருபுறமும்மேல் முதுகிலும்மார்பிலும் அங்கொன்றும்இங்கொன்றுமாக தோலில் வெடிப்பு ஏற்பட்டுகொப்பலங்களாக ஆகியிருந்ததுகாலை அலுவலகம் வந்ததுமேஅதற்கு மருத்துவம் பார்க்கஒரு தோல்நிபுனரை வர வைத்திருந்தேன்அவர் பரிந்துரைத்த மருந்தில் ஒன்றைத்தான்கையில் வைத்துக் கொண்டு கேட்டாள் நேத்ரா

சும்மாநேத்து க்லோவேஸ் போடாம வெயிட் அடிச்சேன்அதுக்குத்தான்!!” புண்ணாயிருந்த கைகளை காட்டினேன்

அதுக்கு எதுக்கு டாபர்ன் இஞ்சூரி ஆயின்மெண்ட்??” 

"உன்ன மாதிரிஒரு படிச்ச டாக்டர் பிரிஸ்கரைப் பண்ணனதுதான்!!" சிரித்தேன்முறைத்தாள்.

"சரிஅதை விடு!! காபி சாப்பிடுறியா?" நேத்ராவிடம் கேட்டுவிட்டுஉதவியாளருக்கு அழைத்து,

"நான் சொல்ற வரைக்கும்யாரையும் அலவ் பண்ணாதீங்க!!" என்று சொல்லிவிட்டுஅறையிலிருந்த மற்றொரு கதவைத் திறந்துஎன் தனி அறைக்குள் நுழைந்தேன்என்னை தொடர்ந்து உள்ளே வந்தாள்நேத்ரா.

"என்ன சாப்பிடுற?" என்று கேட்டவாறுஅங்கிருந்த கிச்சன் நோக்கி நடந்தேன்.

"நீ இரு!! அந்த கைய வெச்சிகிட்டுகாபி போடப் போறியா??" என்றவள்என்னை தாண்டி நடந்தாள்.

இருவருக்கும் சேர்த்து காபி போட்டவள்என்னிடம் கப்பை நீட்டவாங்கிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தேன்

அஞ்சு மாசம் இல்ல?” நேத்ராவின் மேடிட்ட வயிரை பார்த்துக் கேட்டேன்

ஆமா!!” சிரித்தாள்மேடிட்ட வயிற்றை வாஞ்சையாக தடவினாள்மதுவுக்கும்

மதுவுக்கும் குழைந்தை இருக்குமோஆண் குழந்தையாபெண் குழந்தையாஎன்ன பெயர் பெயர் வைத்திருப்பாள்அல்லது நெதராவைப் போல கற்பமாக இருப்பாளோஎன்ற என்ன எண்ணத்தைநேத்ராவின் கேள்வி கலைத்தது.

"என்னது இது?" என்றவாறு காபி கப்பை டேபிளில் வைத்தவள்அதிலிருந்த பார்சலைப் எடுத்தாள்.

"....................." உதடு பிதிக்கினேன்.

என்ன சொல்றார்குழந்தையோட அப்பாஎன்ன குழந்தை வேணுமாம்?” 

ரெண்டு பேருக்கும் பையன் தான் வேணும்!!” சிரித்தவளின் கவனம் பாரசாலைப் பிரிப்பதிலேயே இருந்தது.

இன்று காலை தான் அந்த பரிசு வந்திருந்ததுகருத்தரங்கத்தில் கலந்து கொண்டதற்காகநன்றிக் கடிதத்துடன்இந்த பரிசையும் அனுப்பியிருந்தது அந்த கருத்தரங்கை நடத்திய ஊடக நிறுவனம்பிரித்துப் பார்த்தவள் "வாவ்என்றவாறுஅதை என்னைப் பார்த்து காட்டினாள்கருத்தரங்கத்தில் காட்டப்பட்ட அதே புகைப்படம்பெரிதாக பிரேம் செய்யப்பட்டிருந்தது.

"அழகா இருக்கடா இதுல!! எப்ப எடுத்தது?" என்றவள்எழுந்துஅறையைச் சுற்றி பார்த்தவாரேசுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைக் கழட்டிஅந்த இடத்தில்போட்டோவை மாட்டினாள்.

"தெரியலகாலையிலிருந்து நிறைய பேரு நன்றி சொல்லிகிட்டே இருக்காங்க!!, எதுக்கு தேவை இல்லாமஉங்க NGO கும்பலை கூட்டிட்டு வந்துஇந்த ட்ராமா?? அதுவும் இந்த நிலமையில!! பிரதீப் எதுவும் சொல்லமாட்டான??" பேச்சை மாற்றினேன்.

அவன் என்ன சொல்லணும்?” என்று கேட்டுஎன்னைப் பார்த்தவள்

"உனக்கு நன்றி சொல்றதுக்கெல்லாம்அவங்கள கூட்டிட்டு வரேல!!" என்னை நக்கலா பார்த்து சிரித்தவாறுமீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தாள்.

"லாஸ்ட் டைம்நீ செக் குடுதப்பவேயாராலயும் நம்ப முடியாம எப்படின்னு கேட்டப்ப!!, நீநான் பார்த்து வளர்ந்த பையன்னு சொன்னாயாருமே நம்பல!! அதான் சும்மா ஒரு பந்தாக்காக, "நாங்களாம் யாருன்னு தெரியுமானு?” அவங்களுக்கு காட்டுறதுக்கு கூட்டிட்டு வந்தேன்காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெரிதாக சிரித்தாள்நானும் லேசாக மனதுவிட்டு சிரித்தேன்இருவரும் காபியை அருந்த ஆரம்பித்தோம்.

"பானுவ பாத்தியா?" எதைப் பற்றிப் பேசுவதற்காகஅவளை உள்ளே அழைத்து வந்தேனோஅதைப்பற்றி அவளே பேச ஆரம்பித்தாள்மறுப்பாகத் தலையசைத்து விட்டு.

"அவ புருஷனைப் பாத்தேன்!!" சிரிக்க முயன்றேன்.

"போட்டவள் தலையாட்டினாள்பலத்த சிந்தனையுடன்அந்த உரையாடலை எப்படி தொடர்வது என்று தெரியாமல் தவித்திருந்தேன்.

"அவள்ட பேசேன்!!" தயங்கியவாறுஅவளிடம் கேட்டேன்என்னையே உற்று நோக்கினாள்.

"இல்லஜஸ்ட் அவ எப்படி இருக்கனு தெரிஞ்சிக்கணும்!!" தலையை குனிந்துவிரல்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டேன்பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து

"என்னால முடியல...…..." பாதியில் நிறுத்திய என்னைஅதிர்ச்சியாக பார்த்தாள்.

"ச்சீ!!.... நீ நெனைக்கிற மாதிரி இல்ல!!.... அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சாகொஞ்சம் நிம்மதியா இருப்பேன்!!" அவசர அவசரமாக அவள் பார்வையின் அர்த்தத்தை மறுத்தேன்.

என்னை சில நொடி இமைக்காமல் பார்த்தவள்மொபைலை எடுத்து நோண்டினாள். "டிங்என்ற ஒலி என் மொபைலில் இருந்து வந்ததுஎன் மொபைலை பார்த்து கண்ணை காட்டினாள்ஆனால் அதை எடுத்துப் பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லைசிறிது நேரம் பொருத்தவள்பின் அவள் மொபைலை என்னை பார்த்து நீட்டினாள்தொடுதிரையில் மாலையும்கழுத்துமாக ரஞ்சித்தும்மதுவும் அமர்ந்து இருக்கரஞ்சித்தின் அருகே அவனது அண்ணன் மான்ஜீத்மதுவின் அருகேஇன்னொரு பெண்மான்ஜீத் சிங்கின் மனைவியாக இருக்கலாம்அவள் கையிலிருந்து மொபைலை வாங்கிமீண்டும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அதில் மதுசிரித்த முகமாக இருந்தாலும்அதில் சின்னதாக இலையோடிய வலிஎனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்ததுசில நொடிக்கு முன் அவள் சந்தோஷத்தை அறிந்து கொள்ள விரும்பியது உண்மையாஎன்ற சந்தேகம் எனக்கே வந்தது

"Sometimes it's better not to revisit, the past!!. அடுத்த நாளேஇந்த போட்டோவ எனக்கு அனுப்பிட்டாடேட் வேணும்னா செக் பன்னிக்கோ!!... நான்தான்உன்னை தேவையில்லாமல் கஷ்டப்படுத்த வேண்டாம்னு அனுப்பல!!..... கண்டிப்பாசந்தோஷமாதான் இருப்பாகல்யாணத்துக்கு முன்னாலேயே ரஞ்சித்துக்குஉங்கள பத்தி எல்லாம் தெரியும்!!.... தேவை இல்லாததப் பத்தி தெரிஞ்சுக்கிட்டுஉங்க ரெண்டு பேர் வாழ்க்கையும்காம்ப்ளிகேட் ஆக்கிடாத!!" நிதானமாக நேத்ரா சொல்லச் சொல்லஆமோதிப்பாக தலையாட்டினேன்.

"இந்த லவ் பண்ணி பிரிஞ்சு போனதுக்கு அப்புறம்ஃப்ரெண்ட்ஸ் ஆகிபேசிப் பழகுவது எல்லாம்படத்துல வேணாம் ஒர்க் அவுட் ஆகும்!!..... நிஜத்துல இரண்டு பேர் வாழ்க்கைளையும்தேவையில்லாத பல பிரச்சனைகள் கொண்டுவரும்!!... அதுவும் இல்லாமநானே பலதடவை நினைச்சிருக்கேன்நாம மூணு பேரா லவ் பண்றமோனு!!" சிரித்தாள்விரக்தியாக நானும் சிரித்தேன்.

"அதனாலதான் சொல்றேன்!!, move on!!..... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!!.... அதுதான் எல்லோருக்கும் நல்லது!!" என்றவள்என்னை நெருங்கி அமர்ந்து என் கையை பிடித்துக் கொண்டாள்சிரித்தேன்அதன் உணர்வு என்ன என்பது எனக்கே புரியவில்லைசுதாகரித்துக்கொண்டு 

"நீ கேட்டியே அந்த சின்ன பையன்எப்படி இருக்கான்??" அவள் சிறிது நேரத்திற்கு முன் மாட்டிய போட்டோவை பார்த்து கேட்டேன்சிரித்தாள்.

"டைமாச்சுநான் கிளம்புறேன்!!" என்றவள்என் தலையை ஆதரவாக தடவினாள்.

அந்த அறையிலிருந்து வெளியேறினோம்.

"அவகிட்ட நான் பேசாம இருக்குறதுக்கு வேற காரணம் இருக்கு!!.... எங்க ரெண்டு பேரொட பெர்சனல்!!.... ரெண்டு நாள் டைம் எடுத்து யோசிமறுபடியும் அந்த போடோவ பாரு!!.... அதுக்கப்புறமும்அவளப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சுன்னாஎனக்கு கூப்பிடு!!.... நான் அவ கிட்ட பேசுறேன்!!" என்றவள்வெளியேறினாள்.

எனது இருக்கையில் அமர்ந்தேன்நீண்ட நேரமாகஎன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தேன்நேத்ராஅனுப்பிய புகைப்படத்தை ஒரு 10 நொடி பார்த்தேன்நேற்றில் இருந்து என் மனநிலையை சிறிது யோசித்தேன்நேத்ரா சொன்னதுதான்சரி என்றுபட்டது. . கண்களை மூடிவிரல்களால் தொடுதிறையின் பொத்தானை தேடிஅதை அனைத்து வைத்தேன்நீண்டதாக ஒரு பெருமூச்சு விட்டேன்.

************

அடுத்த நாள் மாலை

நேற்று எடுத்த உறுதியை இழந்தேன்என் மனம் குரங்கைப் போல்மீண்டும் என் நினைவுகளை இறுக கட்டிக்கொண்டதுஇறுக்கமாக உணர்ந்தேன்அந்த இருக்கம்தான்மீண்டும் என்னை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றதுகாலையிலேயே டென்னிஸ் கோர்ட்டை சரி செய்யச் சொல்லி இருந்தேன்காலையில் கொஞ்சம் தெளிவாக இருந்தா போதுஎன் மனதின் ஏக்கத்திற்குஇறுக்கத்திற்கு டென்னிஸ் தான் காரணம் என்று என்னை நானே கன்வின்ஸ் செய்தேன்டென்னிஸ் கோர்ட்டை சுத்தம் செய்யப்பட்டுவலை மாற்றப்பட்டுவிளையாடுவதற்கு தயாராக இருந்ததுஅதைக் கண்டதும் என் மனதில் சின்னதாக ஒரு மகிழ்ச்சிமீண்டும்டென்னிஸ் ஆட வேண்டும் போலிருந்ததுசில நிமிடங்களிலேயேஅந்த எண்ணம் அடக்க முடியாத ஆசையாக மாறியது.

ஒரு மணி நேரம் கழித்து,

டென்னிஸ் பந்துகள்நான்கு ராக்கெட்டுகள் சகிதம் அந்தக் கடையில் இருந்து வெளியேறி காரில் ஏறியதும்கார் புறப்பட்டதுஇருபது நிமிடப் பயணத்திற்குப் பின்எதேச்சையாக என் கண்கள் எங்கள் டெண்ணிஸ் அகடமி மீது விழுந்ததுதினமும் அலுவலகத்திற்கு அக்கடமீயைத் தாண்டிதான் சென்று கொண்டிருந்தேன்ஆனால்என்றுமே கவனித்ததில்லைடிரைவரிடம்காரை டெண்ணிஸ் அகடமிற்குள் செலுத்தும்படி சொன்னேன்இறங்கி சுற்றிப் பார்த்தவாறு நடந்தேன்என் வாழ்வில் ஐந்தில் ஒரு பங்கைஇங்குதான் வாழ்ந்திருக்கிறேன்மிகவும் மகிழ்ச்சியாகநிறைய மாறியிருந்ததுவழக்கமாக இந்த நேரம்அனைத்துக் கோர்ட்டுகளிலும் சிறியவர்களும் பெரியவர்களுமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்ஆனால் இப்பொழுது மொத்த கிரவுண்டிலம் வேலையாட்கள்வேலை செய்து கொண்டிருந்தார்கள்ஏதோவொரு டோர்னமெண்ட்க்காணதயாரிப்பு என்று புரிந்ததுஅலுவலகத்திற்குள் நுழைந்ததுமேஎன்னை கவனித்துவிட்ட சுந்தர் சார்எழுந்து வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து

ஒரு சின்ன குழப்பத்துடன்வீட்டின் ஹாலில்சோபாவில் அமர்ந்திருந்தேன்முதலில்நானும் சுந்தர் சார் மட்டுமேபேசிக் கொண்டிருக்ககொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் அரை மணி நேரத்தில் அந்த அறை கொள்ளாத அளவிற்கு பெருகியதுநான் தொழிலில் வெற்றி பெற்றதை பற்றி பாராட்டி அல்லது அதற்காக சந்தோஷப்பட்டுஆச்சரியப்பட்டு ஆரம்பிக்கும் பேச்சுசில நொடிகளுக்குளாகவேநான் டென்னிஸ் ஆடிய காலத்தில் தான் வந்து நிற்கும்விளையாட்டில் மோகம் கொண்டவர்களின் உலகம் வித்தியாசமானதுவெற்றி தோல்வியைக் காட்டிலும், “expressing oneself” தன் திறமையை காட்டுவதேஅங்கே ஓங்கி நிற்கும்தன் முழுத் திறமையையும் காட்டி விளையாடிய பின்ஒருவன் தோற்றுப் போனால்அதற்காக பெரிதாக வருந்த மாட்டான்பெரும் போராட்டத்திற்குப் பின் தோல்வியுற்ற ஒருவனின் ஆட்டம்வெற்றி பெற்றவரின் ஆட்டத்திற்குநிகராக வைத்து பேசப்படும்தோல்வியும்.... இன்பத்தை கொடுப்பதுவிளையாட்டில் மட்டும்தான்.

அகாடமியின் தோற்றம்தான் மாறியிருந்தது ஆட்கள் மாறவில்லைபோலித்தனம் கொஞ்சமும் இல்லாதஅதே அன்புமனதில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்ததுகிளம்பலாம் என்று நினைக்கையில் தான்"என்ன டோர்ணமெண்ட்?” என்று விசாரித்தேன்அகாடமி சார்பில் சீனியர் மெம்பர்களுக்கான டோர்னமெண்ட் என்று சொன்னார்கள்சுந்தர் சார்தான் கேட்டார் "விளையாடுறியா?" என்றுயோசிக்காமல் தலையசைத்து விட்டேன்போட்டியில் கலந்து கொள்வதற்குபதிவு செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும்என்னையும் சேர்த்துக் கொண்டுமொத்த அட்டவணையும் அரை மணி நேரத்தில் மாற்றி அமைத்து இருந்தார்அவருக்கு நன்றி சொல்லிவிட்டுஅங்கிருந்து கிளம்பினேன்டோர்னமெண்ட் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்ததுடோர்ணமெண்ட்ல் ஆடும் அளவிற்குமனதளவில் தயாராக இருக்கிறேனாஎன்ற குழப்பம் என் மனதில்

***************

சுவற்றில் பட்டு, தன்னை நோக்கி வரும் பந்தைதன் முழு பலத்தோடு திருப்பி சுவற்றை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான்மணிநிஜமான டெண்ணிஸ் மேட்ச் ஆடுவது போலவே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தாலும்இந்த பயிற்சியின் உத்வேகம் அவனுக்கு போதவில்லைபந்தை அடிக்கும் விசைஅது சுவற்றில் பட்டுஎந்த திசையில் எவ்வளவுவேகத்தில் திரும்பி வரும் என்பதை அவன் எளிதாக கணித்து விடுவதால்எதிராளியுடன் ஆடும் உத்வேகத்திற்குசுவரால் ஈடுகொடுக்க முடியவில்லைபோதும் என்று தோன்றவே ஆடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்நீண்ட இடைவேளைக்குப் பிறகுஇன்று மீண்டும் டென்னிஸ் விளையாட போகிறான்அதன் தாக்கமோ?? என்னவோ?? காலையில் இருந்தே கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தான்டென்னிஸின் தயவும்நேத்ராவின் போதனையும்அவன் மானசஞ்சலத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தியிருந்தது

"எத்தனை மணிக்கு தம்பி உன்னோட மேட்ச்?" குளித்து முடித்துவிட்டுகாலை உணவை உண்டு கொண்டு இருக்கையில்மணியின் தாத்தா கேட்டார்.

"ஈவினிங் ஆறு மணிக்கு!!" தொழில்முறையில் டோர்ணமென்ட் இல்லை என்பதாலும்வயது வந்தவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதாலும்மாலை ஐந்து மணியிலிருந்து தான்போட்டிகள் ஆரம்பித்தன.

இரண்டு நாட்களுக்கு முன்மணி மீண்டும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்ததில் இருந்தேமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியாய் இருந்ததுஅதிலும் டோர்னமெண்ட்டில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று அவன் சொன்னதும்அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானதுகடந்த சில வருடங்களில் தனக்கென்று அவன் செய்த முதல் காரியம் இதுதான்டோர்னமெண்ட் முடிந்ததும் கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம் என்று கூடகூடிப் பேசி முடிவு செய்து இருந்தார்கள்தொழில்முறையில் ஆடிய போதெல்லாம்இவன் கெஞ்சிக் கேட்டும் வராதவர்கள்இன்றுஇவன் விளையாடுவதைப் பார்ப்பதற்கு நேற்றில் இருந்தே தயாராக ஆரம்பித்தார்கள்.

"தாத்தா!!" கொஞ்சம் தயக்கமாக ஆரம்பித்தான் மணி.

"இன்னைக்குநீங்க யாரும் வரவேண்டாமே!!" என்ற மணி மூவரும் கேள்வியோடு பார்க்க

"ரொம்ப நாள் கழிச்சு ஆடுறேன்கொஞ்சம் டென்ஸ்டாநீங்க எல்லாரும் வந்தால இன்னும் அண்கம்பர்டபில இருக்கும்!! அடுத்த மேட்ச்ள இருந்து ஓகே!!" என்ற மணியைப் பார்த்து சிரித்தார்அவனது தாத்தா.

"சரிப்பா!!" என்றவர்வேறு எதுவும் சொல்லவில்லைசுமாவுக்குஅவர் அப்படி ஒத்துக் கொண்டதில் சம்மதம் இல்லை என்பதை அவள் முகம் காட்டி கொடுத்ததுதன் மகன் சார்ந்த எல்லா விஷயத்திலும்தன் பங்கு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற மனநிலையில் இருந்தால்அவள்.

*************

அன்று மாலை,

மணியின் இதயத்துடிப்பு நொடிக்கு நொடி எகிறிக் கொண்டிருந்ததுஅகாடமியின் ஒரு அலுவலக அறையில் அமர்ந்து இருந்தான்திடீரென்று மதியத்தில் இருந்து மழை பெய்யவேவெளியே அரங்கத்தில் திட்டமிடப்பட்ட போட்டிகள் அனைத்தும் உள்ள அரங்கத்திற்கு மாற்றப்பட்டதுஉள்ள அரங்கத்தின் எண்ணிக்கை போதாமையால் அடுத்தடுத்த போட்டிகள தள்ளிப் போயினதன்னை மொத்தமாக மீட்டுக்கொள்வதற்குஇதைவிட சிறந்த வாய்ப்பு எனக்கு கிட்டாது என்பதில் உறுதியாக இருந்தான்அந்த உறுதிதான் இந்த படபடப்பிற்கு துவக்கப் புள்ளியேதொழில்முறை போட்டிகளில் ஆடிய தனக்குபொழுது போக்கிற்காகவும்உடல் நலத்திற்காகவும் விளையாடுபவர்கள் விளையாடும் இந்த போட்டிகளில் கொஞ்சம் சவால் விடக்கூடிய ஆட்கள் இருப்பது கூட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தும்கொஞ்சம் பதட்டமாகவே இருந்தான்மீண்டும் நேர் செட்களில் மிகவும் எளிதாக வென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தும்இந்த காத்திருப்பு அவன் படபடப்பை அதிகரிக்கத்தான் செய்தது

அவன் போட்டிக்கான அழைப்பு வந்ததும்அரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான்உள்ளங்கைகள் வியர்க்க ஆரம்பித்தனஇதயம்அவன் மார்புக் கூட்டுக்குள் இல்லாமல்ஏதோ சட்டைப்பையிலிருந்து துடிப்பதை போல் தோன்றியது அவனுக்குஅரங்கத்தில் நுழைந்ததுமேஇதயத்தின் துடிப்பு இன்னும் கொஞ்சம் எகிறியதுஅவன் ஷூ-அணிந்த உள்ளங்கால்கள்வியர்க்க தொடங்கியதுடாஸ் முடித்துதனக்கான பக்கத்தில் சென்று நின்றவன்மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டான்காயம் காரணமாக இரண்டு வருடங்கள் ஆடாமல் இருந்துவிட்டுமீண்டும் முதல் போட்டியில் ஆடுவதற்கு முன் இருந்த பதட்டத்தை காட்டிலும்பல மடங்கு அதிக பதட்டத்தில் இருந்தான்வலது காலை தூக்கி ராக்கெட்டால் அதைத் தட்டிதன் உணர்வுகளை எழுப்ப முயன்றான்ஏங்கே மயங்கி விழுந்து விடுவோமோஎன்ற என்ற எண்ணம் தோன்ற"இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ" என்று திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"Are you ready?" இன்று ரெபரி கேட்ட பொழுதுஅவன் கைகள் நடுங்க ஆரம்பித்தனராக்கெட் கைநழுவி விடுமோ என்ற பயத்தில் அதை இறுக பற்றி கொண்டுஆமோதிப்பாக தலையசைத்தான்ரெபரி விசிலை வாய்க்கு கொண்டு செல்ல,

"இன்னும் பத்து செகண்ட் தான்!!” பற்களைக் கடித்தவாறுதிரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டான்விசில் ஊதப்பட்ட சத்தம்அவன் காதுகளை எட்டவில்லைஅவன் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் என்று அவன் பெரிதும்நம்பிய பந்து அடிக்கப்படும் "டப்என்ற ஓசையும் கேட்கவில்லைஎதிராளி பந்தை அடிக்கும் முன்னமேஉயிரற்ற பிணம் போல்முகம் தரையில் மோதபொத்தென்று விழுந்தான்அவன் ஆடும் போதெல்லாம் கைதட்டலில் அதிர்ந்தத அரங்கம்அதிர்ச்சியில் அதிர்ந்ததுமுதன்முதலாகமுதலுதவி செய்யும் முன்னமே கூட்டம் கூடிவிட்டதால்அரங்கத்திலிருந்து அகாடமியின் அலுவலகத்திற்குள் தூக்கிச் செல்லப்பட்டான்பெரிதாக சிகிச்சை என்று அவனுக்கு தேவைப்படவில்லைதண்ணீர் தெளிக்கப்பட்ட முப்பது வினாடிகளிலேயேஎழுந்து அமர்ந்தான்உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியதுகைகள் நடுங்கியதுசுற்றி பார்த்தவளின் கண்களில் அவன் உதவியாளர் படவும்கண் காட்டினான்அருகில் வந்ததும் எழுந்து நின்றவன்முதல் உதவியை மறுத்துவிட்டுவண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டுஅகாடமியின் வாயிலை நோக்கி நடந்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தவன் மனதில் தோன்றியது "சிகரெட்”உடன் வந்த உதவியாளரைசிகரெட் வாங்க பணித்தான்வாயில் நின்றவாறு திரும்பிதன் கார் வருகிறதா என்று பார்த்தவனின் கண்களில் பட்டது அந்த கார்மஞ்சள் கலர் மினி கூப்பர்மதுவின் கார்சற்று அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் அதிகரித்ததுஎன்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமேஅவன் கண்களில் பட்டாள்மதுஉடன் ரஞ்சித்தும்.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
Waiting for the superb update
Like Reply
Awesome update
Like Reply
Semma ji
Like Reply
ஏன் ப்ரோ இது உங்களுக்கே நல்லருக்கா ஏன் இப்டி பண்றீங்க எதயும் முழுசா சொல்ல மாட்டிங்களா ப்ரோ கொல்லாதீங்க கொஞ்சம் கொஞ்சமா அடுத்த எபிசோடில் மது மணி பேசுவாங்கிலா இல்லே இதே மாதிரி அறையும் கொராயுமா சொல்லுவீங்கலா அருமையான படைப்பு மிகவும் சிறப்பு காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக
[+] 2 users Like Muralirk's post
Like Reply




Users browsing this thread: