Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Krishnam Review: அப்பா - மகன் பாசத்தை பற்றி பேசும் 'கிரிஷ்ணம்'! விமர்சனம்

சென்னை: மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிகழும் ஒரு அற்புதத்தை பற்றிய படம் தான் கிரிஷ்ணம்.
ஒரு நண்பனை போன்று அனைத்து விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் தந்தை சாய்குமார், கண்டிப்புடன் பாசத்தை பொழியும் தாய் சாந்தி கிருஷ்ணா என சந்தோஷமான பணக்காரக் குடும்பத்து பையன் தான் நாயகன் அக்ஷய். ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களுடன் சகஜமாக பழகும் நல்ல குணம் படைத்தவராகவே இருக்கிறார். குறிப்பாக கஷ்டம் என யார் வந்து நின்றாலும் உதவி செய்யக்கூடியவர்.

[Image: krishnam-155-1552636708.jpg]

அதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் மீது அக்ஷய்க்கு காதல் மலர்கிறது. முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஐஸ்வர்யா, ஒருகட்டத்தில் அக்ஷய் மீது காதல் கொள்கிறார். வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேலையில், ஒரு அரிய வகை இதய நோயால் பாதிக்கப்படுகிறார் அக்ஷய். அவர் உயிர் பிழைக்க ஒரு சதவீதம் மட்டுமே சாத்தியம் என மருத்துவர்கள் கூற, கிருஷ்ண பக்தரான சாய்குமார் கடவுளின் உதவியை நாடுகிறார். அக்ஷய் எப்படி உயிர் பிழைக்கிறார்? அந்த அற்புதம் என்ன என்பது தான் படம்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: krishnam-1-1552636701.jpg]
உண்மை கதை தான் என்றாலும், பாசம், சென்டிமெண்ட், காதல், நட்பு என அனைத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் தினேஷ் பாபு. படம் தொடக்கத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை எதார்த்தத்தை மீறாமல் சீராகவும், சிறப்பாகவும் எடுத்திருக்கிறார். பக்தி படம் என்பதற்காக, சதா சாமி புராணம் பாடாமல், வெகுஜன மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

[Image: krishnam-177-1552636694.jpg]
பக்தி தான் பிரதானம் என்றாலும், படத்தில் காட்டப்பட்டுள்ள அப்பா - மகன் உறவு அனைவராலும் ரசிக்கும் படியாக உள்ளது. அதேபோல், மிகையில்லாமல் காட்டப்படும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட காட்சிகளும், திகட்டாத இனிப்பாக இருக்கிறது. அதேபோல், தமிழ் வசனங்களும், டப்பிங்கும், இது ஒரு மலையாள டப்பிங் படம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் இருக்கிறது.
நடிகர் சாய்குமார் ஒரு எக்சாம்பிள் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். நம்முடைய அப்பாவும் இப்படி தான் இருக்க வேண்டும் என பசங்க நினைக்கும் அளவிற்கு எதார்த்தமாக நடித்துள்ளார். கண்டிப்பான தாயாக வரும் சாந்தி கிருஷ்ணா, நம் அம்மாக்களை நினைவூட்டுகிறார்
Like Reply
[Image: krishnam-1552-1552636688.jpg]
ஹீரோயின் ஐஸ்வர்யா உல்லாஸ் அழகு பொம்மையாக ஜொலிக்கிறார். சமீபத்திய ஹீரோயின்களில் இவ்வளவு நீளமான முடி யாருக்கும் இல்லை. அக்ஷ்ய்யின் நண்பர்களாக நடித்துள்ள பசங்களும், பொண்ணுங்களும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் மருத்துவர்களாக நடித்துள்ளவர்களும் மிக எதார்த்தமாக நடித்துள்ளனர்.

[Image: krishnam1-1552636482.jpg]
ஹரிபிரசாத் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. திலீப் சிங்கின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓகே. ஆனால் வழக்கமாக மலையாள படங்களில் இருக்கும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மிஸ்ஸிங். மிகவும் நிறுத்தி நிதானமாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அபிலாஷ் பாலகிருஷ்ணன்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருந்தால், படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஹீரோயின் பிராமண பெண்ணாக இருந்தாலும், அவரது மதத்தை தூக்கி பிடிக்கும் வகையிலான வசனங்கள் தேவையில்லாத திணிப்பு.

[Image: krishnam2-1552636245.jpg]
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படமாகவே இருந்தாலும், அதை மிகப்படுத்தாமல் வெகுஜன மக்கள் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளதால், 'கிரிஷ்ணம்' கவனம் ஈர்க்கிறது.
Like Reply
ஏப்ரல் 12-ம் தேதி ரிலீஸாகிறது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’?

[Image: gangs-of-madrasjpg]
‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தை, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
இடையே மீண்டும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்று படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரியிலும், டீஸர் பிப்ரவரியிலும் ரிலீஸானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் பிரயங்கா ருத் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகும் படம் இது. வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தை வருகிற ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூடவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஹரி டவுசியா இசையமைத்துள்ளார்.
Like Reply
பிக் பாஸ் சீசன் 3 ரெடி! - மாஸ் ஹீரோவிடம் நடக்கும் பேச்சு வார்த்தை
[Image: cdf4f77788188209e147221d9156b738.jpg]

இந்தி சேனலின் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் வரவேற்பு பெற்று மக்களின் பேவரை நிகழ்ச்சியாகவும் உருவெடுத்தது.

 

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசன் தொடங்குவதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், தெலுங்கு பிக் பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். ஆனால், இரண்டாம் சீசனில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் இளம் நடிகர் நானி இரண்டாம் சீசனின் தொகுப்பாளரானார். 

 

ஜூனியர் என்.டி.ஆர் அளவுக்கு நானியால் போட்டியாளர்களுடன் சரியாக அணுகமுடியாததால், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 தோல்வியிலேயே முடிந்தது.

 

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் பிக் பாஸ் குழுவினர் மூன்றாம் சீசனை ஜூனியர் என்.டி.ஆரை வைத்தே நடத்தவும் முடிவு செய்தது. ஆனால், ராஜமெளலி இயக்கத்தி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதில் வேறு நடிகரை பிக் பாஸ் குழு நாடியுள்ளது.

 

அந்த நடிகர் தான் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான நாகர்ஜுனா. தற்போது நாகர்ஜுனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துள்ள பிக் பாஸ் குழுவினர், விரைவில் அவரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Like Reply
பேட்ட’ நடிகையின் படுகவர்ச்சி! - அசந்துபோன திரையுலகினர்
[Image: 701a246e8a64ae302b7a509a6475e271.jpg]

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் திரிஷா, சிம்ரன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்த நிலையில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர், பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். ‘பேட்ட’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

 

பேட்ட படத்தில் ஹோம்லியாக நடித்த மாளவிகா மோகனன், தான் அப்படியான பெண் இல்லை, என்பதை நிரூபிக்கும் வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் படுகவர்ச்சியான உடை அணிந்து கலந்துக் கொண்டார். இதைப் பார்த்த திரை நட்சத்திரங்கள் பலர் அசந்துவிட்டனர்.

 

நேற்று ஜீ சினி அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட மாளவிகா மோகனன், அணிந்து வந்த உடை படுகவர்ச்சியாக இருந்ததோடு, விழாவில் பங்கேற்ற பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

[Image: malavika-mohanan-02.jpg]

 

[Image: malavika-mohanan-01.jpg]
Like Reply
``விஜய் சேதுபதி கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கேன்'' - பச்சையம்மாள்!

``ங்கயாவது, மக்கள் கொத்தடிமையா  இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்களைக் கூட்டிட்டு வர வண்டி புடிக்க ரொம்ப சிரமப்படுவோம். அந்த நேரம் பார்த்து கையில காசும் இருக்காது. இனிமே அந்தக் கவலை இல்லை. எல்லாம் விஜய் சேதுபதி சாரால தான். இப்பக்கூட சார் கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கோம் '' உற்சாகமாகப் பேசுகிறார், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பச்சையம்மாள்.
[Image: 337269_13143.jpg]
Like Reply
பழங்குடிப் பெண்ணான பச்சையம்மாள், பல வருடங்களாகக் கொத்தடிமையாக இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த 2012-ம்[Image: pachai_ammal_13362.jpg] ஆண்டு மீட்கப்பட்டவர். தான் மீண்டதைப்போல இந்த அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களையும் மீட்க வேண்டும் என ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி களப்பணி செய்துவருகிறார். தன் அபார முயற்சியால்,  இதுவரை கொத்தடிமையாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு, ரேஷன் கார்டு வாங்கித்தருவது, ஆதார் கார்டு பெற்றுத் தருவது போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இந்த ஆண்டில், அவள் விகடன் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழகத்தின் தலைசிறந்த 10 பெண்களில் பச்சையம்மாளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பச்சையம்மாள். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியிடம், கொத்தடிமையாக இருக்கும் மக்களை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், தன் தேவைகளைப் பற்றியும் உரையாடியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று திடீரென நடிகர் விஜய் சேதுபதியிடமிருந்து ஒரு காரும், ஐந்து லட்சம் பணமும் வந்து சேர்ந்திருக்கிறது. 
[Image: pachai_2_13448.jpg]
மகிழ்வின் எல்லையில் இருந்த பச்சையம்மாளிடம் இதுகுறித்துப் பேசினோம்,
``டிவி நிகழ்ச்சியில பேசும்போது உன்னோட கனவு என்னம்மான்னு விஜய் சேதுபதி சார் கேட்டாரு. சொந்தமா ஒரு ஆபீஸ் கட்டணும்; அதுல எங்க துரை சார், சம்பத் சார், சின்னா சார்  மூணு பேருக்கும், சேர், டேபிள், கம்ப்யூட்டர் போடணும். அந்த கம்ப்யூட்டர்ல நாங்க மீட்டெடுத்துட்டு வர்ற மக்களப் பத்தி தகவல்களை வச்சுக்கணும். அதேபோல, கொத்தடிமையா மக்கள் எங்கயாவது இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்கள கூட்டிட்டு வர வாடகைக்குத்தான் கார் புடிப்போம். பெட்ரோல் போடறது, டிரைவருக்குப் பேட்டாண்ணு ரொம்ப செலவாகும். சொந்தமா ஒரு கார் இருந்தா நல்லாயிருக்கும். இது ரெண்டும்தான் சார் என் கனவுன்னு விஜய் சேதுபதி சார்கிட்ட சொன்னேன். 
Like Reply
[Image: pachai_3_13135.jpg]
நேத்து, விஜய் சேதுபதி சார் ரசிகர் மன்றத்துல இருந்து நாலஞ்சு பேர் வந்தாங்க. அவங்ககிட்ட சார் கார் கொடுத்து அனுப்பியிருக்காரு. கூட, அஞ்சு லட்சம் பணமும் கொடுத்தாங்க. சங்கத்து அக்கவுன்ட்ல பணத்த போட்டுட்டேன். ஆபீஸ் கட்டுறதுக்கான வேலைகள ஆரம்பிக்கணும்.
இனிமேல், கொத்தடிமையா மக்கள் எங்க கஷ்டப்பட்டாலும் ஈசியா மீட்டு வந்துடுவோம். இப்பகூட சார் கொடுத்த கார்லதான் மக்கள மீட்க போய்ட்டு இருக்கோம். இந்த கார்ல என் மக்களைகூட்டிட்டு வர ரொம்ப ஆசையா இருக்கு'' வெகு உற்சாகமாகப் பேசுகிறார் பச்சையம்மாள்
Like Reply
Airaa Trailer: நான் ஆரம்பிச்சத நானே முடிக்கிறேன்... மிரட்டும் நயன்தாராவின் ஐரா!

சென்னை: நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இதில் அவருடன், கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

[Image: nayanthara-airaa1-1553085437.jpg]இந்நிலையில் ஐரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் படுமிரட்டலாக இருக்கிறது. இந்த டிரெய்லரை பார்க்கும் போது, படத்தின் கதை இதுதான் என யூகிக்க முடிகிறது
Like Reply

இது ஒரு திகில் படம் என்பது தெளிவாகிறது. நயன்தாரா விளையாட்டுதனமாக செய்யும் ஒரு காரியம் வினையாக முடிகிறது. எனவே 'நான் ஆரம்பித்ததை நானே முடிக்கிறேன்' எனக் கூறி பிரச்சினையை முடிக்கிறார்.
Like Reply
தடை வாங்கிய பாபி சிம்ஹா!- வெளியாகுமா அக்னி தேவி?


சென்னையில் ஒரு நாள் 2' படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா என்பவருடன் இணைந்து இயக்கியிருக்கும் படம், `அக்னி தேவி'. இதில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஷ் குமார் நாவலை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குநரே தயாரித்துள்ளார்.
[Image: agnidevi_(3)_11020.jpg]
[color][font]
[/url]
[url=https://www.vikatan.com/author/2621-u.sudharsan-gandhi]
[/font][/color]
Like Reply
இன்று (மார்ச் 22) வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் , ``பல இடங்களில் என் முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர், டிரெய்லரில் வந்த குரலும் தன்னுடையதில்லை"  என்று ஜான் பால்ராஜ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் வரைபடத்தை வெளியிடக்கூடாது என படத்துக்குத் தடைவாங்கியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாபி சிம்ஹா கூறுகிற நிலையில், இன்று படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து திரையரங்குகளுக்கு படங்களை அனுப்பும் கியூப் நிறுவனத்திடம் பேசும்போது, `படம் தடை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு நீதிமன்ற ஆணையும் வரவில்லை' எனத் தெரிவித்துள்ளது. இப்படத்தின்  வெளியீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது எனத் தெரிகிறது.  


இதுகுறித்து பாபி சிம்ஹா கூறுகையில், ``நீதிமன்ற உத்தரவை தாண்டியும் படத்தை ரிலீஸ் செய்றாங்கனா, இது நீதிமன்ற அவமதிப்பு. படக்குழு பின்னாடி ஏதோ அரசியல் இருக்குனு தெளிவா தெரியுது. இதை சட்டப்படி பார்த்துக்குறேன்" என்றார்.  
Like Reply
நீதிமன்றம் தடையை மீறி ரிலீஸ் ஆனது 'அக்னி தேவி

[Image: 201903230453249329_AgnivsDevi-Bobby-Sham...SECVPF.gif]

நீதிமன்றத்தின் தடையை மீறி அக்னிதேவி திரைப்படம் வெளியானது கண்டிக்கத்தக்கது என, நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேப்பில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாளில் படத்தின் பெயரை அக்னிதேவி என மாற்றி படத்தை வெளியிட்டுள்ளது வருத்தமளிப்பதாக கூறினார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் புகார் அளித்துள்ளாதாகவும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் அவர் வைத்தார்.
Like Reply
நாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை

[Image: NTLRG_20190323002024639992.jpg]


கோயம்பேடு: தயாரிப்பாளர் மற்றும் அவரது உறவினர், வீடு புகுந்து தன்னை தாக்கியதாக, நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு திரையுலகில், பல நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஸ்ரீரெட்டி. இவர், சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, தமிழ் படங்களில் நடிக்க, கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, அவர் நடித்து வரும், ரெட்டி டைரி என்ற படத்தை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 38, என்பவர், தயாரித்து வருகிறார்.


இந்நிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர், வீடு புகுந்து, தன்னையும், மேலாளரையும் தாக்கினர் என, ஸ்ரீரெட்டி, கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். இதில், தன் வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமரா இணைப்பை துண்டித்து, அதன் பின், தன்னை சரமாரியாக தாக்கியதாக, ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுப்பிரமணி மற்றும் அவரது அக்கா மகன் கோபி, 23, ஆகிய இருவரிடம், கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காவல் நிலையத்தில், சுப்பிரமணி மீது ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். இதில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி, மூன்று மாதங்கள் சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரிடமும் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்ரீரெட்டி பொய் புகார் அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
Like Reply
[Image: agnidevi.jpg]

‘அக்னி தேவி’ -திரைப்பட விமர்சனம்
Like Reply
நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், நேர்மையற்ற அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதலை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அக்னி தேவி’ எப்படி என்பதை பார்ப்போம்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹாவை இண்டர்வியூ எடுக்க வரும் பெண் நிருபர், பேருந்து நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது பேருந்து நிலையத்தில் இருந்த அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கமுயற்சிக்கிறார்கள்.
அதே சமயம், தனது விசாரணை மூலம், நடந்த கொலைகளுக்கு பின்னாள் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் பாபி சிம்ஹா, அதற்கு பின்னாடி மாநில அமைச்சரான மதுபாலாவும், அவருக்கு துணையாக காவல் துறையும் இருப்பதை கண்டுபிடிக்கிறார். மதுபாலாவும் தனது வழியில் குறுக்கிடம் பாபி சிம்ஹாவுக்கு கட்டம் கட்ட, நேரடியாக மோதும் இவர்களில், யார் இறுதியில் வெற்றி பெற்றார்கள் என்பது தான் ‘அக்னி தேவி’ யின் முழுக்கதை.
ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஸ்வாதி கொலையை களமாக்கி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், பணம் மதிப்பிழக்கம், கருப்பு பணம் பதுக்கல், அரசியல் பினாமிகள் என சமீபத்திய அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.
இந்த படத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தேன், என்று பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். ஆனால், படம் முழுவதுமே அவர் வருகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் டூப் போட்டு எடுத்திருக்கிறார்கள். நேர்மையான போலீஸ் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதே சமயம், அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அடக்கியும் வாசித்திருக்கிறார். மொத்தத்தில், தனது வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறார்.
வில்லியாக நடித்திருக்கும் மதுபாலாவின் கதாபாத்திரமும், அவரது கெட்டப்பும் தமிழக அரசியலில் சின்ன ராணியாக வலம் வந்த பெண்மணி ஒருவரை நினைவுப்படுத்துகிறது. ஆரம்ப காட்சியில் ஆக்ரோஷமாகவும், அமர்க்களமாகவும் எண்ட்ரிகொடுக்கும் மதுபாலா, அடுத்தடுத்த காட்சிகளில் தனது ஓவர் ஆக்டிங் நடிப்பால், அந்த கதாபாத்திரத்தையே சிதைத்து விடுகிறார். அதிலும், அவரது உடலில் இருக்கும் குறைபாடுகள் தேவையா? என கேள்வி எழுப்பும் வகையில், ஒட்டாமல் போகிறது.
எம்.எஸ்.பாஸ்கார், ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் என்று பிற நடிகர்கள் படத்தில் இருந்தாலும், சதீஷ் மட்டுமே அதிகமான காட்சிகளில் வருகிறார். ரம்யா நம்பீசன் எதற்கு இந்த படத்தில் நடித்தாரோ, அம்மணிக்கு சுத்தமாக வேலை இல்லை.
படத்தின் ஓட்டத்திற்கு பாடல் தேவை இல்லை என்பதால், படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. அதனால், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய், பின்னணி இசைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அது படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது. ஜனாவின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களமாக உள்ளது.
Like Reply
படத்தின் முதல் பாதி, தொடங்கியதும் முடிந்ததும் தெரியாதபடி படு வேகமாக நகர்கிறது. பேருந்து நிலையத்தில் பெண் கொலை, அதனை விசாரிக்க பாபி சிம்ஹா களத்தில் இறங்கியவுடன், விறுவிறுப்பாக நகரும் படம், ரசிகர்களிடமும் விறுவிறுப்பை தொற்றிக் கொள்ள செய்கிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலை வழக்கில், கைதாகி சிறையில் தற்கொலை செய்துக் கொண்ட ராம்குமார் உண்மையான குற்றவாளி அல்ல என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, தமிழகத்தில் சிக்கிய இரண்டு கண்டெய்னர் பணம், அரசியல் கலவரம் என பல நிஜ சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து இயக்குநர் கதை சொல்லிய விதம் இண்டர்ஸ்டிங்காக இருக்கிறது.
“என் வீல்சேர் டயர நக்கிட்டு இருந்தா இருங்க, இல்லாட்டி…” என்று மதுபாலா பேசும் வசனங்களும், பண மதிப்பிழக்கம் தொடர்பாக எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனங்கள் மூலமாக வசனகர்த்தா கருந்தேல் ராஜேஷ் கைதட்டல் பெறுகிறார்
ஆக்‌ஷன் திரில்லர் படத்தை சுவாரஸ்யமான அரசியல் பின்னணியோடு இயக்குநர்கள் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா நேர்த்தியாக சொன்னாலும், கமிஷ்னர், அமைச்சர் ஆகியோர் சொல்லியும் கேட்காமல் பாபி சிம்ஹா, தொடர்ந்து தனது வேலையை செய்வது, போன்ற விஷயங்கள் லாஜிக் மீறல்களாக இருப்பதால், படம் ரசிகர்கள் மனதில் நிற்காமல் போகிறது. அதிலும், படம் முடியும் தருவாயில், பாபி சிம்ஹாவுக்கும், மதுபாலாவுக்கும் ஒரு உறவு முறையை சொல்லியிருப்பது நம்மை 80 களுக்கு அழைத்து சென்றுவிடுகிறது.
சமகால அரசியல் நிகழ்வுகள், மத்திய அரசு திட்டத்தின் மீதான விமர்சனம் என்று பல விஷயங்களை தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர், இறுதியில் இவை அனைத்துக்கும் கலவரம் தான் காரணம், என்று சொல்லியிருப்பது, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், எதிர்ப்பார்ப்பும், இரண்டாம் பாதியில் இல்லாமல் போவதும், மதுபாலாவின் ஓவர் ஆக்டிங்கை கட்டுப்படுத்த தவறியதும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. இது போன்ற சிறு சிறு தவறுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், அக்னி தேவி விறுவிறுப்பான அரசியல் ஆக்‌ஷன் திரில்லர் படமாகவே உள்ளது.
மொத்தத்தில், தலைப்பில் இருக்கும் நெருப்பு படம் முழுவதும் இருந்திருந்தால், ரசிகர்கள் மனதில் இந்த ‘அக்னி தேவி’ கொழுந்துவிட்டு எரிந்திருப்பால்.
-ஜெ.சுகுமார்
Like Reply
அவென்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என் மூன்று மொழிகளிலும் தயாராகிறது. ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[Image: download-4.jpg]AR Rahman :அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் பாடல்- ம...
அவென்ஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்காக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், பாடல் ஒன்றை இசையமைக்க உள்ளதாக மார்வெல் இந்தியா தெரிவித்துள்ளது. 

இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். ஆஸ்கார் விருதைபெற்று இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தவர் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்காக ஒரு பாடலை இசையமைக்க உள்ளதாக மார்வெல் இந்தியா தெரிவித்துள்ளது. 

மார்வெல் என்ற தயாரிப்பு நிறுவனம் காமிக்ஸ் கதாபாத்திரங்களான சூப்பர் ஹிரோக்களை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கி வருகிறது. 2009 முதல் 2010ம் ஆண்டுவரை மொத்தம் 22 சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் 22 திரைப்படங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கும். தற்போது முதல் 10 ஆண்டுகளின் இறுதி பாகமான ’அவென்ஞசர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக இருக்கிறது. 
இந்த திரைப்படத்திற்காக மார்வெல் ரசிகர்கள் வெறியோடு காத்திருக்கின்றனர். 




தற்போது இந்த திரைப்படத்திற்காக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒரு பாடலை இசையமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 
இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது
Like Reply
பாபி சிம்ஹா தந்த பொய்ப்புகார் ரத்து, கமிஷனர் நடவடிக்கை

[Image: NTLRG_20190328132021590473.jpg]
'அக்னி தேவி' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது அப்படத்தின் நாயகன் பாபி சிம்ஹா பொய்ப்புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இயக்குனர் மீது ஆள்மாறாட்டம் செய்து படத்தை எடுத்தார் என பாபி சிம்ஹா கிரிமினல் புகார் கொடுத்திருந்தார். அதனால், பட வெளியீட்டில் தயாரிப்பாளர் கடும் சிரமத்துக்கு உள்ளானார்.

அதைத்தொடர்ந்து அப்படத் தயாரிப்பாளருக்கு ஆதரவாக, தயாரிப்பாளர் சங்கத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பல தயாரிப்பாளர்கள் இனி, தாங்கள் தயாரிக்கும் படங்களில் பாபி சிம்ஹாவை நடிக்க வைக்கப் போவதில்லை என தனிப்பட்ட விதத்தில் முடிவெடுத்தார்கள்.

இன்று(மார்ச் 28) காலை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து 'அக்னி தேவி' பட விவகாரம் குறித்தும், பாபிசிம்ஹாவின் பொய்ப்புகார் குறித்தும் விளக்கமளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த புகாரை ரத்து செய்யும்படி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுகுறித்து 'அக்னிதேவி' தயாரிப்பாளரும், இயக்குனரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நடந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரிவிக்க உள்ளார்களாம்.
Like Reply




Users browsing this thread: 62 Guest(s)