அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 57

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏற்படும், தொடர் நிகழ்வுகள், உலகத்தின் இயக்கத்தை மொத்தமாக திசைதிருப்பி விட்டதை நம் வரலாறு எங்கும் காணமுடியும்அறிவார்ந்த நபர்களின் பிறப்பும், மங்கோலியப் பெரும் படையெடுப்பு, இரண்டு உலகப் போர்கள், நிலவில் கால் பதித்த மனிதன், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் தொடங்கி தற்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் கொரோனா வரை, இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் முறையை, இயல்பை, மாற்றும் தன்மையுடையது. தொழில்நுட்பத்தையும், தத்துவத்தையும், அறிவியலையும் ஒன்று என்று பார்த்து வந்த உலகில், அறிவியல், தொழில்நுட்பத்தில் இருந்து தத்துவத்தில் இருந்து தனித்து கிளர்த்தெழுந்து, வேர்விட்டு விழுது பரப்பிய காலம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு ஆகும். அறிவியலின் மறுமலர்ச்சி காலம் என்று இது அறியப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான், நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை, நிலவில் மனிதன் கால் பதித்ததற்கும், விமானங்களில் பறப்பதற்கும் ஆரம்ப புள்ளி.

மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நியூட்டன், மரத்திலிருந்து விழுந்த அப்பிள்-ளை கண்டதும் , அது ஏன் கீழே விழுந்தது?, என் மேலே அல்லது இடது பக்கமும் வலது பக்கமும் செல்லவில்லை? என்று யோசிக்க ஆரம்பித்ததுதான், நியூட்டன், புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததாக ஆசிரியர் சொல்ல நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மரத்திலிருந்து பழம் கீழே முழுவது, அன்றாடம் நடக்கும், மிகவும் சாதாரணமான நிகழ்வு. ஏன் அதுக்கு முன்னால ஆப்பிள் பழம் கீழே விழுந்ததை அவர் பார்த்ததே இல்லையா? ஆப்பிள் பழத்த விடு, வேற எந்த பொருளும், கீழ விழுந்ததை அதுக்கு முன்னால, அவர் பார்த்ததே இல்லையா? ஒருவேளை, ஓய்வு எடுக்கப் போன நியூட்டன் தூங்கியிருந்தால? என்று சிந்திக்க ஆரம்பித்து, ஒருவேளை, நம்மளும் எதிர்காலத்துல திடீர்னு, இந்த மாதிரி நடக்கிற எதையாவது பார்த்து, பெருசா எதையாவது, கண்டு கண்டுபிடிப்போமோ? என்றெல்லாம், அந்தக் கதையை பள்ளியில் கேட்ட மாணவர்களில, சிலர் சிந்தித்து இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், அவன் அறிந்தோ, அறியாமலோ இருக்கும் ஆற்றல், ஏதாவது ஒரு நிகழ்வின் மூலமே தூண்டப்படும். ஆப்பிள் விழுந்த நிகழ்வு, அவரை சிந்திக்க தூண்டிய இருந்தாலும், அவருக்கிருந்த அறிவாற்றலால்தான், அந்த சிந்தனை விரிவுபெற்று, புவியீர்ப்பு விசையின் விதி எழுதப்பட்டது. எல்லோரும் நியூட்டன் ஆகிவிட முடியுமா? என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது, ஆனால் நாம் எல்லோரையும் போல தான் நியூட்டன். புவியீர்ப்பு விதியின் வரலாற்றை பார்த்தால், இது புரியும். கிரேக்க அரிஸ்டாட்டில் தொடங்கி, இந்திய பிரம்மகுப்தா, அரபிய இபின் சி னா தொடங்கி கலிலியோ வரை தொடர்ந்து எழுதிய கதையின் முற்றுப்புள்ளியைத்தான் நியூட்டன் வைத்தார். முன்னோடிகளின் நீட்சிதான் நியூட்டன்.

ஆசிரியரின், நண்பர்களின், சக மனிதனின் சின்ன பாராட்டோ, இல்லை, ஒன்றை செய்து முடிக்கும் போது தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உந்துதல்கள் வாய்க்கப் பெற்றவர்கள், கொடுப்பினை பெற்றவர்கள். ஒரு மனிதனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ட்ரீகர், எல்லோருக்கும் நேர்மறையானதாக அமைந்து விடாது. வாழ்வில் பட்ட அவமானம், துரோகம், என எதிர்மறையான உந்துதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அந்த வலியை, தோல்வியை, துடைத்தெறியும் பொருட்டு செயல்படும்போது, தங்களின் அறிவாற்றலை உணர்ந்து கொள்பவர்களும் உண்டு. அவ்வாறு, எதிர்மறையான நிகழ்வுகளால் உந்தப் பெற்றவர்கள், சபிக்கப்பட்டவர்கள். மணி, இதில் இரண்டாவது வகை, சபிக்கப்பட்டவன்.

மணியின் வாழ்வில் ஆப்பிள் விழுந்த நிகழ்வுதான், அவன் தன் தாத்தாவிடம் "என்னை சேர்மன் ஆக்குங்கள்" கேட்டதற்கு அவர், மறுத்ததும், அந்தப் பெயர் தெரியாத பிச்சைக்காரரோ, சாமியாரோ "வலியை வரம்" என்று சொன்னதும். கொடுப்பினை போல, சாபமும் ஒரு வரம்தான். என்ன கொடுப்பினையைப் பெற்றவனை காட்டிலும், சாபம் பெற்றவன், வீரியம் மிகுந்தவனாக இருப்பான். சாபமும் ஒரு வகை வரம்தான் என்பதை உணர்ந்து கொள்ளும் வேளையில்.

********************

"என்ன நான் பாத்துக்குறேன் தாத்தா!! நீங்க பயப்படாதீங்க!!" சொன்னவன் பார்வையிலும் வார்த்தையிலும் இருந்து, அவர் தெரிந்துகொண்டது, ஒன்றே ஒன்றுதான், அவன் அனுமதி கேட்கவில்லை, செய்தி சொல்கிறான் என்பது தான் அது. எதுவும் பதில் சொல்லாமல் அவன் கைகளை வாஞ்சையுடன் பற்றினார்.

"ஒரு மூணு நாள் கழிச்சு போலாமா தம்பி?!!" சிறிது நேரம் கழித்து அவனிடம் கேட்டார், சரி என்று தலையசைத்தான்.

மூன்று நாள் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்தே கோயம்புத்தூர் வந்தான், உடன் பெரியவர்களும் வந்திருந்தனர். கோயம்புத்தூர் வந்து சேர்ந்த அன்று இரவு, அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், கொஞ்சம் பேச வேண்டும் என்று மணியின் தாத்தா அழைக்க, அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.

"மாமா ஏதோ பேசணும் சொன்னீங்க!!” நீண்ட நேரம் யோசனையில் இருந்தவரின் யோசனையை காலத்த, சிவகுரு.

சிவகுருவைப் பார்த்து தலையாட்டியவர், எழுந்து சென்று மணியை அழைத்துக்கொண்டு வந்தவரின் கையில், சில பத்திரங்கள். வந்தவர் அதை மருமகனிடம் கொடுக்க, வாங்கிப் படித்த சில நிமிடங்களிலேயே நிமிர்ந்து அதிர்ச்சியடைந்த சிவகுரு

"இது இப்ப அவசியமா மாமா?" சொற்களில், இருந்த கடுமை, குரலில் இல்லை. கணவனின் அதிர்ச்சியை கண்ட சுமா, சிவகுருவின் கையில் இருந்தா பத்திரங்களை வாங்கிப்பாடிக்க

"உங்க ரெண்டு பேரையும் நம்பித்தான், என் பிள்ளை இங்கு அனுப்பி வச்சேன்!!" ஆரம்பித்தவர், குரல் சற்று கம்மியதும் நிறுத்தி, தொண்டையைச் செருமிக்கொண்டார்.

"எதுவுமே மாறல, சொத்தை மட்டும் அவன் பேர்ல எழுதி வச்சிருக்கேன்!!" என்றவர் மேலும் தொடர, சிவகுருவின் மனமோ “என்ன சொல்கிறார் இவர்?” என்று எண்ணியது. பழனி வீட்டை மணியின் பெயருக்கு எழுதிவைத்த பத்திரத்தை வாசித்ததுமே அதிர்ச்சியான சிவகுருக்கு, அவர் கொண்டுவந்த மீதி பத்திரங்களை எடுத்து வாசிக்க, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, மொத்த சொத்தையும், மணியின் பெயருக்கு மாற்றி எழுதியிருந்தார், சாட்சியாக, சிவகுருவின் பெயரும், சுமாவின் பெயரும் இருந்தது. அதுமட்டும் அல்லாமல், தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் இருந்த சொத்துக்களையும் மணியின் பெயருக்கு மாற்றி எழுதிய பத்திரமும் அதில் இருப்பதை கண்டதும், சிவகுருவுக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது.

சிவகுருவின் மனது மொத்தமாக குழம்பிப் போயிருந்தது. அந்தக் குழப்பம் கூட சில நொடி தான், தனக்கே உரிய பாணியில், நொடியில் அதிலிருந்து மீண்டு, பெரியவரின் இந்த செயலுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்த சிவகுரு

"கைக்குள் வைத்து வளர்த்திருந்தாலும், இப்படி மொத்த சொத்தையும் எதுக்கு எழுதி வைக்கணும்?"

"இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்னு எந்த முடிவும் எடுக்க மாட்டாரே?"

"ஒருவேளை, எனக்கும், சிவகாமிக்கும் உள்ள தொடர்பை சொல்லிருப்பானோ?"

வாய்ப்பு இல்ல, அப்படி பண்ணனும்னா முன்னாடியே பண்ணிருப்பான்!!”

"என்ன காரணம் என்று தெரியாமல், தேவையில்லாம எந்த முடிவுக்கும் வராத!!" வர்றது வரட்டும், நாம பார்க்காததா?" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ள,

மீண்டும் பேச ஆரம்பித்தார் மணியின் தாத்தா,

"என்ன குறை இருக்கு என் பேரனுக்கு, யோசிச்சு பார்த்தா எதுவுமே இல்ல, அவனுக்குனு யாரும் இல்லன்னு, இந்த சின்ன வயசுல அவனை யோசிக்க வச்சுட்டீங்க!!" நிறுத்தி நிதானமாக தெளிவாக பேசினாலும், அதிலிருந்த சோகத்தின் கணம், மணியின் ஆட்சிகள் கண்ணீர் வடிக்க,

"உங்க ரெண்டு பேரு பேர்ல உள்ள சொத்த எழுதிக் கொடுக்க விருப்பம் இல்லனா வேண்டாம்!!" அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சுமா அந்தப் பாத்திரங்களை எடுத்து கையெழுத்திட ஆரம்பித்தாள்.

"என்ன மாமா பேசுறீங்க, நாம இவ்வளவு பேர் இருக்கோம்!! அதுவுமில்லாம, அவன் என்ன ஒண்ணும் இல்லாத வீட்லயா பிறந்து இருக்கான்? அவனுக்கு வசதி செஞ்சு கொடுக்கல, எதில் குறை வைத்தேன்?" தன் குழப்பத்தை தீர்க்க ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று பெரியவரை விவாதத்துக்கு அழைப்பது போல தூண்டில் போட்ட சிவகுரு, அவர் பதில் சொல்லாமல், வேறு பக்கம் திரும்பிக்கொள்ள, இதை ஒருவாறு கணித்திருந்தால், மீண்டும் சிவகுருவின் எண்ணம், தீடிர் என்று வந்து நிற்கும் தலைவலியை அலசி ஆராய்ந்தது.
என்ன பழிவாங்க பெரியவர்கிட்ட ஏதாவது சொல்லி, வேற ஏதாவது திட்டம் போடுறானா?”

வாய்ப்பு இல்லையே, இப்போ கூட, இங்க எவ்வளவு பெரிய விஷயம் நடந்துக்கிட்டு இருக்கு, மண்ணு மாதிரி தான இருக்கான்!!” என்ற தோன்றிய எண்ணங்களை ஒதுக்கி தள்ளி,

"இப்போ எல்லா சொத்தையும், அவன் பெயருக்கு எழுதி வச்சா, என்ன பெருசா நடந்திடும்?"

சொத்து மட்டும்தான அவன் பேருக்கு மாறுது!! அப்படி மாறினா என்ன பெருசா நடந்திடும்?”

"நான் இல்லாம இவ்வளவு பெரிய தொழில் குழுமத்தை, பெரியவராலேயே சமாளிக்க முடியாது!!" தன் மேல் உள்ள நம்பிக்கையில் தைரியமும் பெற்ற சிவகுருதன்னை மீறி எதுவும் நடக்காது என்ற தன்னம்பிக்கையில், கையெழுத்திட்டுவிட்டு,

வேற யதாவது பண்ணனுமா மாமா?” ஆத்திரத்தை அடக்கமாட்டாமல், அதே நேரம், நிதானம் இழக்காமல், சிவகுரு

நாளைக்கு இத ரிஜிஸ்டர் பண்ணிடு சிவா!!” வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார் மணியின் தாத்தா.

நல்லது நடந்த சரி!!” கைழுத்து இட்ட பத்திரத்தை எடுத்துக்கொண்டு, சிவகுரு ஆங்கிருந்தது கிளம்பினார். எப்படியும் தான் செய்வது சரியா என்ற சந்தேகம் அவருக்கு கொஞ்சமேனும் இருக்கும், அப்படி இருந்தால், அதில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்.

இங்கு நடப்பவைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அதுவரை அமர்ந்திருந்த மணி, எழுந்து தன் அறைக்குச் சென்றான், ஜடம் போல் சென்றவனை ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் பார்த்தனர் பெரியவர்கள் மூவரும். அந்த வீட்டின் சத்தமெல்லாம் அடங்கியது, அமைதி இழந்தது.

******************

அன்று இரவு.

சுமா தன் தந்தையின் சொற்கள் காயப்பட்ட இருந்தாள். அவர் சொற்களைக் காட்டிலும், அதில் இருந்த உண்மையை அவளை அதிகம் வாட்டியது. சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள்.

அறைக்குள் தன் கணவன் வந்தது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் சுமா. சிவகுருவின் முகத்தில், படர்ந்த சலிப்பே சொல்லியது, சும்மாவின் இந்த அழுகையை அவன் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று.

"சுமா மா, எல்லாம் சரியாயிடும்!!" ஒரு பக்குவப்பட்ட, இயல்பான நடிகன் போல் வருத்தத்தை குரலிலும் ,முக பாவனையிலும் சேர்த்துக்கொண்ட சிவகுரு. சிவகுருவின் ஆறுதல் கூட வாட்டியது, அவளை. கொஞ்சம் சத்தமிட்டு அழுதாள். அருகில் அமர்ந்த சிவகுரு, சுமாவை, தன் தோளில் சாய்த்துக் கொள்ள, கணவனின் கை வளைவில் சாய்ந்து கொண்டவள் அழுகையை நிறுத்தவில்லை.

"சுமா மா!!, இங்க பாரு" என்று அவள் நாடியை பிடித்து தூக்கினான். மாட்டேன் என்று தன் கணவனின் கை வளைவில், தன்னை ஒட்டிக் கொண்டாள்.

"ஒன்னும் இல்லடா, சாமி சொன்னது மாதிரியே நடக்குது பாரு!!. அவ்வளவுதான், அவனுக்கு வந்த கண்டம் எல்லாம் போயிடுச்சு!!. அவர் சொன்ன மாதிரியே, நாம நடந்துக்கிட்டா, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல, அவனுக்கு ஏறுமுகம் தான்!! எதுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம், பாரு, இன்னேல இருந்தே அவனுக்கு ஏறுமுகம் தான், சொல்லிவச்ச மாதிரி, சொத்தை எல்லாம், அவன் பேர்ல எழுதி வச்சு அதுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கோம்!!"

"அப்பா என்ன சொன்னாருன்னு கேட்டீங்க இல்ல!! என் புள்ள, யாருமே இல்லன்னு தவிச்சுப் போய் கிடக்கிறான்!! எல்லாம் நான் செஞ்ச பாவம்!!" குலுங்கி, குலுங்கி அழுதாள்.

"நீ மட்டும் பண்ணல, நானும்தான் பண்ணியிருக்கேன்!!. அதுக்காக நடந்த நினைச்சு இப்படி அழுதுக்கிட்டே இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? எனக்கும் இந்த சாமியார் சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்னு தான் தோணுது!!. தம்பிய தள்ளி வச்சதெல்லாம் போதும், இனியும், அவன கஷ்டப்படுத்தி, நம்மளையும் கஷ்டப்படுத்தி!!" குரல் தழுதழுக்க சொன்ன சிவகுரு, தடுமாறி, சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

"இவ்வளவு சம்பாத்தியம் இருந்து என்ன பிரயோஜனம், கடவுள எல்லாம் தூரத்தள்ளு, நமக்கு துணையா, எங்க அண்ணன் இருப்பார்!!. கடைசியா தம்பி, ஐதராபாத் போயிருந்தப்ப, நம்ம புள்ள விளையாடியத பாத்துட்டு, ப்பிராப்பரா ட்ரெயின் பண்ணுனா, கிராண்ட் ஸ்லாம் விளையாடுற அளவுக்கு திறமையானவன்னு, ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி கோச் ஒருத்தர், என்கிட்ட பேசினாரு. நாளைக்கே, அவங்க கிட்ட பேசுறேன், தம்பிக்கு மட்டும் உடம்பு சரி ஆகட்டும், பிசினஸ, மாமா கொஞ்ச நாள் மேனேஜ் பண்ணட்டும், தம்பிய பாத்துக்குறத, என் முழு நேர வேலையா பாக்க போறேன்" எப்பொழுதும், தான் இதுபோல், தன் மகனை தள்ளி வைக்க வேண்டிய நிலை வந்ததை நினைத்து உடைந்து அழும் சமயங்களில் எல்லாம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்று சொல்லும் தன் கணவன், இன்று, தன்னைப் போலவே உடைந்து பேசுவதை கண்டதும் கொஞ்சம் பயந்துதான் போனாள். எல்லாம் இருந்தும், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைத்து மறுகியவள், தான் உடைந்து விழும் சமயங்களிலெல்லாம், தன்னைத் தாங்கிப் பிடிக்கும் கணவன் அமைந்ததை எண்ணி கடவுளுக்கு, மனதார, நன்றி சொன்னாள்.

சிவகுருவே, தனக்கே உரிய பாணியில், சூழ்நிலையின் தேவையை உணர்ந்து, கவர்ச்சிகரமாக பிண்ணிக் கொண்டிருந்த மாய வலையை மேலும் பலப்படுத்திக் கொண்டான். தன் மனைவியின் மன நிலையை தான் நினைத்தவாறு மாற்றியதை உணர்ந்ததும் அவனது மனம் சிந்திக்கலானாது.

"கொஞ்ச நாளாவே எதுவுமே நம்ம கட்டுப்பாட்டுல இல்லாம அதுவா நடக்குது? இவனுக்கு பைக் ஆக்சிடென்ட்? ஷேர எழுதி கொடுக்கறேன் வந்த சிவகாமியின் பொண்ணு, திடீர்னு முடியாதுனு சொல்றா? சிவகாமி கைய அறுத்துக்கீட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கா? எல்லாம் ஒரே நாள்ல நடந்திருக்கு. எனக்கு அடங்கிக் கிடந்தவ, அப்பனும் புள்ளையும், எங்குட படுத்தீங்கனு சுமாகிட்ட சொல்ழுவேன்னு என்னையவே மிரட்டுறா? கண்டிப்பா பண்ணுவா!! அவள நேரம் பார்த்து முடிச்சிடலாம்னு பார்த்தா, இன்னைக்கு பெரியவரு இப்படி திடீர்னு புதுசா ஒரு குண்டு போடுறார். அவன் ஆக்சிடன்ட்ல போய் சேர்ந்து இருந்தா, சிவகாமிய போட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருக்கலாம்!! அடுத்த நாளே இவங்க கதைய முடிச்சிருக்கணும். தேவை இல்லாம நேரத்த கடத்திட்டோம். கொஞ்ச நாள் ஆறப்போடுவோம், முதல்ல சுமாவ வச்சு மணி கிட்ட நெருங்குவோம்!!" என்று யோசித்த பின், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற கண்ணை முடிய சிவகுருவிடம் இருந்து பத்து நிமிடத்தில் குறட்டை வந்தது.

***************

திட்டப்படி நடந்தாலும், நம்ம போட்ட திட்டம் நிறைவேற இல்லையே என்ற குழப்பத்தில் அங்கேயே சிவகுரு இருந்த அதே நேரம், மணியின் தாத்தாவும் குழப்பத்தில் இருந்தார். மனிதர்களின் மனதை படிக்கத் தெரிந்த பழுத்த பக்குவசாலி, தன் பேரன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தில் இருந்தார். அவன் வாய் விட்டுப் பேசினால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும், எதைப் பற்றிப் பேசினாலும் பதில் பேசாமல் கடந்து செல்லும் அவனை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவித்து போய் நின்றார். தனக்கு பரிச்சயமான ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டு, அவர் கொடுத்த அறிவுரையின் பேரிலேயே, அவனுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, சொத்துக்களை அவன் பெயரில் எழுதி வைத்தார். தன் மகளையும், மருமகனையும் கொஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கியாவது, அவன் மீது பாசம் காட்ட வைத்துவிட முடியாதா என்ற முயற்சியில்தான், யாரும் இல்லன்னு, இந்த சின்ன வயசுல அவனை யோசிக்க வச்சுட்டீங்க!!” என்று கொஞ்சம் கடினம் காட்டினார்.

மதுவிடம் பேசினால் ஏதேனும் தெளிவு கிடைக்குமா என்று, அவளுக்கு அழைத்ததில், அவளது மொபைலும் சுவிட்ச் ஆஃப் இன்று வந்தது. சில மாதங்களாகவே மதுவுக்கும், மணிக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு என்று அவருக்கு நன்றாகத் தெரியும், சிறு பிள்ளைகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சினையில் தான் தலையிடுவது சரியாக இருக்காது என்று நினைத்தவர், வேறு வழியில்லாததால் தான் அவளுக்கு அழைத்தார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.

ஏன் "என்னை சேர்மேன் ஆக்குங்க!!" என்று அவன் கேட்டதன் காரணம் தெரியாவிட்டாலும், அந்த முடிவை அவனே எடுக்கட்டும் என்றுதான், மொத்த சொத்துக்களையும் அவன் பெயரில் எழுதி வைத்தார். சொத்திற்கும், பொறுப்பேற்கும் உண்டான வித்தியாசத்தை அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தார். மணியின் திறமை மீதும், அறிவின் மீதும், என்றுமே அவருக்கு சந்தேகம் இருந்தது இல்லை. டென்னிசில், அவன் காட்டும் அதிக ஆர்வம், தங்கள் தொழில் குழுமத்தை நிர்வகிப்பதில் இருந்தால் போதும் என்றே நம்பினார். ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், அதுவே அவனை அதர்க்காக உழைக்க செய்யும் என்பதை, அவன் டென்னிஸ்ல காட்டிய ஆர்வமும், அதரக்காக அவன் உழைத்ததும், அவருக்குள் நம்பிக்கை விதைத்திருந்தது. மேலும் மொத்த சொத்தும் அவன் பெயரில் இருப்பதால், இப்பொழுது முடிவு அவன் கையில். தன் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டான் என்ற உறுதி அவருக்கு இருந்தாலும், ஒரு சின்ன பயம் மனதில். அதுவும், தன் நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டால், தங்கள் தொழில்கள் முடங்கிவிடும் என்பதைக் காட்டிலும், அதை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கை என்னாகும்? என்ற கேள்வி கொடுத்த பயம். அந்த பயமே அவரை தூங்க விடவில்லை.

****************

கண்ணாடி முன் அமர்ந்து, அதில் பிரதிபலித்த, தன் கண்களிலேயே பார்வையைப் பதித்திருந்தான் மணி. ஹாஸ்பிட்டலில், அவன் கண் விழித்ததிலிருந்து, அனைவரும் அவன் மீது காட்டிய பரிதாபம், ஆறுதலை தருவதற்கு பதிலாக, மேலும் வலியைக் கொடுத்தது. அருவெறுக்க படவேண்டிய என்னிடம், பரிதாபம் காட்டுகிறார்களே என்று. அதிலும் மொத்த சொத்தையும் அவன் பெயருக்கு தாத்தா எழுதி வைக்க, தன்னைத்தானே வெறுத்தான். அதீத வெறுப்புடன், அகோரப் பசியுடன், உன் ஆன்மாவைத் தா, என்று அவனை கேட்கும் அந்த பார்வை, தன் மீது காட்டப்படும் பரிதாபத்தின் வலியில் இருந்து அவனை மீட்டேடுப்பது போல் தோன்றியது. அந்தப் பார்வையின் பிடியிலிருந்து, தன்னை மீட்டுக் கொண்டவன், கண்களை மூடி அப்படியே தலை சாய்ந்தான். ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே இருந்த அவனுக்கு, என்ன செய்யவண்டும் என்ற தெளிவு இல்லை. தெளிவு இல்லாதவனின் மனம் எப்படி உறங்கும்.

****************

ஒரு மாதம் கழித்து,

தன் அலுவலக அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த மணியை, நிமிர்ந்து பார்த்த சிவகுருவின் முன், ஒரு பத்திரத்தின் நகலை காட்டினான் மணி. கையை நீட்டிய சிவகுருவிற்கு, மறுப்பாக தலையசைத்தவன், மீண்டும் அந்த பத்திரத்தை சிவகுறிவின் முன் நீட்டினான். உதாசீனத்துடன் மணியை பார்த்துவிட்டு, அவன் நீட்டியதை படிக்க ஆரம்பித்த சிவகுருவின் முகம், ஆத்திரம், குழப்பம், எரிச்சல், அதிர்ச்சி என இன்னதுதான் என்று சொல்ல முடியாத, அத்தனை உணர்வுகளையும் காட்டியது. படித்துக்கொண்டிருந்த பத்திரத்தின் நகலை சிவகுரு பிடுங்க எழுந்தபோது, சட்டென்று கையை இழுத்துக் கொண்ட மணி, அதை கசக்கி, சிவகுரு சுதாரித்துக் கொள்ளும் முன், சிவகுருவின் அலுவலகத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்று, டாய்லெட்டுக்குள் போட்டு ப்ளஷ் செய்தான்.

அதிர்ச்சியில் இருந்த சிவகுருவை நோக்கி வந்த மணி, அவனது டேபிளில், இரண்டுக்கு இரண்டு இன்ச் என்ற அளவில் இருந்த, சிவப்பு அட்டையை தூக்கிப் போட்டுவிட்டு, வெளியேறினான்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுரு, அந்த அட்டையை எடுத்துப் படிக்க, அதில் இருந்த வாசகத்தை சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது 

Let's Play.

**********
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ஆட்டம் இனி ஆரம்பம். சிவகுருக்கு ஆப்பு ரெடி. கதை சுடு பிடிக்குது சூப்பர். வாழ்த்துக்கள்.
Like Reply
சூப்பர் சூப்பர் சூப்பர்...
Like Reply
Super Update. மணியின் செயல்பாடுகளைப் பார்த்து மதுவே அவனைத் தேடி வர வேண்டும்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Let's play

Super
Like Reply
Chinna update nalum nalla twist vechu mudichu irukeenga good try
Like Reply
Sema update bro.... We are waiting
Like Reply
Keep rocking bro...
Like Reply
Fantastic Update Bro
Like Reply
Adutha update yeppo nu therinjikkalama.
Like Reply
நன்றி நண்பா, தொடருங்கள்.
தோழிகளின் அன்பன்.
Like Reply
பாகம் - 58

தனது மறைவிற்குப் பிறகு, தன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் சிவகாமிக்கும், அவளது வாரிசுகளுக்கும் சேருமாறு எழுதிய உயில் பத்திரத்தின் நகலை தான் சிவகுருவிடம் காட்டினான் மணி. அதைப் படித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல், அறையிலிருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த சிவகுருவின் மனதில் பலவாறான எண்ணங்கள்.

சொத்து முழுவதும் மணியின் பெயருக்கு எழுதி வைத்த அடுத்த நாளில் இருந்து, மணி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான். மணி கல்லூரிக்குச் செல்லும் கார் ஓட்டுனரில் இருந்து, எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் முதற்கொண்டு அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான் சிவகுரு. சிவகுரு இல்லாமல் அவர்களது குழுமத்தை நிர்வகிப்பது கடினம் என்பது சிவகுருவின் பாலம் என்றால், ஒரே பலகீனமாக சிவகுரு கருதுவது சிவகாமிக்கும் தனக்கும் இருந்த உறவு, மணிக்கும் தெரியும் என்பதுதான். அதேபோல், அவர்களுக்குள்ளான உறவு தனக்கு தெரியும் என்பதால், அதை துருப்புச் சீட்டாக உபயோகப்படுத்த மாட்டான் மணி, என்பது சிவகுருவின் கணக்கு. அதே நேரம் தனது குட்டு வெளிப்பட்டு விட்டால், இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை, ஒன்றுமில்லை என்று ஆகிப்போகும் என்று உணர்ந்த சிவகுரு, இதுவரைக்கும் எதை வைத்து மணியை பலவீனப்படுத்தி இருந்தானோ, அதே சுபாவின் அன்பை வைத்தே, அவனை மேலும் பலவீனப்படுத்தி, தனக்கு எதிராக எந்த எதிர்வினையையும் ஆற்ற விடாமல் செய்ய முயன்றான்.

அன்னையின் அன்பை, மணியின் மீது ஆயுதமாகப் பயன்படுத்தும் காலம் கடந்து விட்டதை உணரவில்லை சிவகுரு. மணி கண்டிப்பாக, தன்னை அருகில் அனுமதிக்க மாட்டான் என்பது தெரிந்திருந்தாலும், அவன், தன் மனைவி சுமாவை மட்டுமல்லாது, பெரியவர்களையும் அருகே அனுமதிக்க மறுத்தது கொஞ்சம் உறுத்தியது. மணியின் இந்த விலகளை எதிர்பார்க்காத அவனது தாத்தா, கோயம்புத்தூரிலேயே தங்கிவிட முடிவெடுத்தது சிவகுருவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. தன் மேலான அதிக நம்பிக்கையிலும், மணியை, சிறுவன் தானே என்று எண்ணி உதாசீனமாக எண்ணினாலும், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை சிவகுரு. மணியின் கவனத்தை டென்னிஸ் மீது திருப்ப, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தான், அதிலும் அவனுக்கு தோல்வி தான். மதுவை வைத்து முயற்சி செய்யலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது, ஆனால் அதை அடுத்த நொடியிலேயே நிராகரித்து விட்டான்.

சிவகாமியையோ, அவளின் மகளையோ திரும்பவும் அவர்களது வாழ்விற்குள் இழுத்து, புதிதாக ஏதேனும் சிக்கலை தானே உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம். யாரிடமும் பேசாமல், தான்தோன்றித்தனமாக கல்லூரிக்கு மட்டுமே சென்று வந்து கொண்டிருந்த மணி, அப்படியே இருப்பதுதான் தனக்கு நல்லது என்று நினைத்தான். பிணம் போல் சுற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று எப்படி வந்து தனக்கு சவால் விடுவான் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை சிவகுரு. எல்லாம் அவன் நினைத்தது போலவே நடந்து வந்த நிலையில்தான் மணியின் இந்த செயல், சிவகுருவை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது.

உள்ளுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டாலும், ஒரு சின்ன பதட்டம் சிவகுருவுக்கு. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கும், சிவகாமிக்கும் உள்ள உறவு, தன் மனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பது மட்டுமே சிவகுருவின் எண்ணமாக இருந்தது. சிவகாமியுடன் இருந்த உறவும் உணர்வுபூர்வமான ஒன்றுதான் என்றாலும், சுமா, அவனது காதல் மனைவி. தன் மனதின் எச்சங்களையும், வக்கிறங்களையும், கொட்டுவதற்கு மட்டுமே சிவகாமியை பயன்படுத்தி வந்தான், சிவகாமியும் அப்படியே, தேவையின், சிவகுருவின் அருகாமையில் கிடைக்கும் பாதுகாப்பின் பொருட்டுதான் அவனை பயன்படுத்தி வந்தாள். அதற்கு அவர்கள் “தங்களால் யாரும் புண்படவில்லை” என்ற சப்பையை கட்டி முட்டுக் கொடுத்து வந்தனர். அதேபோல் சிவகுருவுக்கு மணியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம், சிவகாமியும் மணியும், தன்னை அசிங்கமாக பேசிவதற்கு முன், இருந்ததில்லை. மணியன் மரணம், தன் மனைவி சுமாவை கடுமையாக பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சிவகுரு, அதைப்பற்றி சிந்திருக்கவில்லை. இன்னொரு குழந்தை மட்டும் அவர்களுக்கு பிறந்திருந்தால், மணியின் கதை சிறு வயதிலேயே முடிந்திருக்கலாம். சிவகுருவின் கெட்ட நேரமோ? மணியின் நல்ல நேரமோ? அப்படி எதுவும் நடக்கவில்லை.

மணியை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்ததற்கு முக்கியமான காரணம், இருவருக்குள் இருக்கும்வரை தான் அது ரகசியம், மணிக்கு தெரிந்த தன் கள்ள உறவு எந்த சூழ்நிலையிலும் தன் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதுதான். என்ன, தன்னை அசிங்கப்படுத்தியதற்காக, சிவகாமிக்கு, மணிக்கும் இருக்கும் தொடர்பை, மதுவுக்கு தெரியப்படுத்தி, அதனால் அவர்கள் இருவரும் படப்போகும் துன்பத்தை ரசித்துவிட்டு, பின் அவர்களை தீர்த்துக்கட்டலாம் என்று திட்டமிட்டு இருந்தான். மதுவே வலிய வந்து தன் பெயரிலான ஷேர்களை விற்க முயன்றதை, சேட்-டீன் மூலமாக வாங்க கிடைத்த வாய்ப்பை, போனஸாகவே கருதினான். அதிர்ஷ்டம் அன்று தோன்றிய நிகழ்வுகள், இன்று தவறவிட்ட தருணங்களாக தோன்றியது. தன் ஈகோவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காரியத்தை முடிப்பதில் மட்டும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ? என்ற கேள்வி எழுந்தது.  மீண்டும் தன் வாழ்க்கையை 22, 23 வருடங்கள் பின்னால் சுழன்று அதைப் போல உணர்ந்தான் சிவகுரு

பெரு மூச்சுவிட்டு, தன் மனதில் எழுந்த எண்ணங்களால் தான் பலவீனப்பட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். நடப்பது எதுவும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பொழுது, அனுமானத்தின் பெயரில் புதிதாக எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் கண்களை மூடி, தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன், இன்னும் கொஞ்சம் மணி விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்

மணி தூக்கி எறிந்து விட்டு போன அட்டையில் இருந்த வாசகத்தை நினைவு வந்தது அவனது மூளை. உதாசீனச் சிரிப்பை உதிர்த்தான்

Ok, let's Play. முனுமுனுத்தான்.

***************

ஒரு வாரத்திற்கு முன்.

எப்பொழுதும்போல் மாதாந்தர ரிவியூவ் மீட்டிங் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான், சோலார் மின் உற்பத்தி தளவாடங்கள் விற்பனைக்கான மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியிருந்தது. மீட்டிங் முடிந்ததும் அதற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

"எல்லாம், தம்பி கொடுத்த ஐடியாவால்தான்" மணியின் தாத்தா, அவனை உற்சாகமூட்டும் முயற்சியில், அனைவருக்கும் முன்பு தெரிவித்தார். மொத்த கூட்டம் கைதட்டியது, அதை கொஞ்சமும் ரசிக்கவில்லை சிவகுரு, காது கொடுத்தே கேட்கவில்லை மணி.

**************

"தப்பான நம்பிக்கை கொடுக்காதீங்க மாமா!! அதவிடவும் மத்தவங்களா டிஸ்கிரடிட் பண்ணாதீங்க!!" மூவரும் மட்டும் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்ந்ததும், பொறுக்க மாட்டாமல் சிவகுரு

"புரியல சிவா!!" சிவகுரு எதைப் பற்றி பேசுகிறான் என்பது பபுரிந்தும், புரியாதது போல கேட்டார், மணியின் தாத்தா.

"இந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறதுக்குப் பின்னால் பத்து வருஷம் உழைப்பு இருக்கு, அதுக்கான மொத்த கிரடிட்டும் எப்படி இவனுக்கு போகும்?" அருகில் இருந்த மணியை பார்த்து சிவகுரு.

"நாம புதுசா 3 யூனிட் ஆரம்பிக்காமல் இருந்தா, இந்த காண்ட்ராக்ட் கிடைச்சீருக்குமா?" மாமனாரின் கேள்வியிலேயே, தான் பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்த சிவகுரு

"கிடைத்திருக்காது!!" சிவகுருவின் குரல் தாழ்ந்தது, மணியின் செவிகள் முதல் முறையாக அந்த உரையாடலை உள்வாங்கிக் கொண்டது.

"சப்ளை கேப்பாசிட்டி இல்லணு ரிஜக்ட் ஆகியிருக்கும், தம்பி மட்டும் ஒரு வருஷத்துக்கு முன்னால பேசி என்னை கன்வின்ஸ் பண்ணலன்னா, கண்டிப்பா, அந்த விரிவாக்கத்துக்கு நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன், அந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறது மணி தான் காரணம்" சொல்லி முடித்த விதத்திலேயே இதற்குமேல் இதை பற்றி பேச விரும்பவில்லை என்பதையும் சேர்த்தே சிவகுருவுக்கு உணர்த்தினார், மணியின் தாத்தா.

மணிக்கு, தான் பதற்றத்தில் இருந்த போதெல்லாம், எதிராளி அடித்த பந்தின் "டொக்" சத்தம், எப்படி அவனை உசுப்பேற்றி விடுமோ, அப்படி உசுப்பேற்றி விட்டு இருந்தது, சுருங்கிப்போன சிவகுருவின் முகம். அன்று, இரவு அறையில் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான். காற்றுப்புகாத அறையில் அடைப்பட்டு கிடந்தவனுக்கு, அந்த அறையின் சுவர்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு மனநிலையில் இருந்தான். கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான் அவன். எங்கு அடித்தால் சிவகுருவுக்கு வலிக்கும் என்பது, கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது அவனுக்கு. கண்ணாடியின் முன் அமர்ந்து, அதில் தெரிந்த பார்வையில் தன்னைத் தொலைத்தான்.

மீண்டும் மதுவுடன் அவன் காதலித்து கசிந்துருக்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. வாழ்க்கையை அவள்தான் என்று, யாரை நினைத்திருந்தானோ, அவள், இனி அவன் வாழ்க்கையில் இல்லை, அவளுக்குத் தான் தகுதியானவனும் இல்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. அந்தத் தெளிவுதான், அந்த வலிக்கு காரணமானவனை அழித்தே தீருவது என்று அவனை உறுதி கொள்ளச் செய்தது, தான் செய்த தவறுகள் புரிந்தது. முதன்முதன்முதலாக மது, முடியாது என்று சொன்ன பொழுதே, நேராக தாத்தாவிடம் சென்றிருக்க வேண்டும். அதுதான் தான் ஆடி இருக்கவேண்டிய ஆட்டம். தன்னுடைய ஆட்டம் என்று நினைத்து, சிவகுரு-சிவகாமியின் ஆட்டத்தில் ஆடியதுதான், தான் செய்த தவறு என்பது உறைத்தது. அதில் தான் இழைத்த தவறால், பண்ணக்கூடாத பாவங்களை எல்லாம் பண்ணி, இன்று விமோசனத்துக்கு வழியில்லாத இல்லாத, இழிநிலை தனக்கு.

எப்படி மதுவின் மீதான வெறுப்பில், அவளின் கவனத்தை ஈர்ப்பதரக்காக, முதன்முதலாக தொழில் விஷயங்களில் ஈடுபாடு காட்டினானோ, அதேபோல் ஒரு ஆர்வ மிகுதியில், தன்பக்கம் தன் சகமாணவர்களின் கவனத்தைத் ஈர்க்கத்தான், முதன்முதலாக டென்னிஸ் கோர்டுக்குள் நுழைந்தான். டென்னிஸ் அவனுக்கு கைகூடியது போல், தொழிலும் கைகூடும் என்று நம்பினான். அப்படியே கைகூடாவிட்டாலும், இந்தமுறை தன்னால் யாருக்கும், எந்த இழப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

வலி ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வைராக்கியமாக பற்றிக்கொண்டான்.

ஒருவனுக்கு சாவதை காட்டிலும் அதிக வலி கொடுப்பது, இதுதான் தன் வாழ்க்கை என்று அவன் நம்புவதை அழிப்பதுதான் என்பதை அவன் வாழ்க்கையே அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தது. தன் அப்பாவுக்கு, அவர் மனைவியோ அல்லது சிவகாமியோ வாழ்க்கை இல்லை. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர், என்பதும், சமுதாயத்தில் அதுதரும் மதிப்பும், அதிகாரமும், மரியாதையுமே அவரது வாழ்க்கை என்பது அவர் சொத்தை எழுதிக் கொடுத்த, போதும், கிரெடிட் மொத்தமும் அவனுக்கு கொடுக்கப்பட்டபோதும் சுருங்கிப்போன சிவகுருவின் அவனுக்கு புரியவைத்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர் என்ற நிலையில் இருந்து, அவரை இறக்கி, அவருக்கு இருக்கும் அடையாளத்தை இல்லாமல் செய்வதுதான், அவருக்கு மரணத்தைக் காட்டிலும் அதிக வலி கொடுக்கும், அதைத்தான் தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

**************

கல்லூரிப் படிப்பை ஒப்புக்கு முடித்தவன், படிக்கும்போதே படிப்பை காட்டிலும் தொழில்தான் கவனம் அதிக கவனம் செலுத்தினான். அதிலும், அவனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த சோலார் பிரிவின் மீது தனி கவனம் செலுத்தினான். படிப்பு முடிந்த ஆறு மாதத்திலேயே தங்கள் கம்பெனிகளின் தினசரி நடவடிக்கையில், இவனது தலையீடு அதிகமாக, சிவகுருவிடம் இருந்து வந்த எதிர்ப்பை, தாத்தாவை வைத்து சமாளித்தான். நெருங்கும் முயன்ற தாயையும் தள்ளியே வைத்திருந்தான்.

தேடித்தேடி படித்தான் இரவு பகல் பாராமல் உழைத்தான். கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் அவனது தந்தையின் முக்குடை தான், அவனது தந்தையால் மூக்கடைப்பும் பட்டான். ஆரம்பத்தில் அதிக மூக்குடைபட்டாலும் போகப்போக தொழிலில் தெளிவுபெற இவன் அவனது தந்தையின் கிடைக்கும் எண்ணிக்கைகள் அதிகமாயின. சமுதாயத்தில் அவர் அடைந்திருக்கும் நிலையில் இருந்த அவரை அப்புறப்படுத்துவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவன், அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான். முடிந்த அளவு, தனக்கும், தன் அப்பாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகளின் போது, அருகில் தாத்தா இல்லாமல் செய்வதில்லை அவன்.

**************

மொத்த குடும்பமும் இரவு உணவு அருந்திக் கொண்டே இருக்க, ஆரம்பித்தான் மணி.

"நாமே, ஏன் ஒரு லைஃப்ஸ்டைல் ஸ்டோர் தொடங்கக் கூடாது? “ ஆர்வகோளாரில் மணி.

"நாம எதுக்கு சிலர வியாபாரம் எதுக்கு தொடங்கணும்?” சலிப்பாக சிவகுரு.

"டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி வைச்சிருக்கோம், கார்மெண்ட்ஸ் வைச்சிருக்கோம், நாமேலே அத ரீடைலும் பண்ணினனா லாபத்தை அதிகப்படுத்தலாம்!!” விடாமுயற்சி மணி.

"நம்மாளளோட கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன் ஆனா, உள்ள பிஸினசும் போயிடும். இந்த மாதிர் கொஞ்சம் கூட லாஜீக்கே இல்லாத ஐடியாவா எடுத்துக்கிட்டு வந்து என்னோட டைம வேஸ்ட் பண்ணாத!!” மூக்குடைத்த சிவகுரு, மணியை, ஏளனமாக பார்க்க, சிவகுருவின் சூடான வார்த்தைகளை தாங்கள் அங்கீகரிக்க வில்லை என்பது போல் சிவகுருவை பார்க்க, சுதாரித்த சிவகுரு.

"கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன்னா இருக்குறது கூட ஓகே, மேனேஜ் பன்னிக்கலாம், நம்ம டெக்ஸ்டைல் பிசினஸ் இன்னும் வருஷாவருஷம், குறைஞ்சது 6 டூ 8 பர்சண்ட் வளர்ந்துகிட்ட தான் இருக்கு. எப்பவுமே ஒரு வளர தொழில் கையில் இருக்கும் போது, அதில் உச்சம் தொடுகிற வரைக்கும், நம்ம கவனமெல்லாம் அதுல தான் இருக்கணும். இதுதான் அடிப்படை!!” வேறு வழி இல்லாமல் நெருக்கடியால், தானே மணிக்கு பிஸினஸ் நுணுக்கங்களை கற்றுக்கொண்டுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.

***************

"நாம ஏன் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட கூடாது?” ஆர்வகோளாரில் மணி.

“..........................” சலிப்புற்ற சிவகுரு.

"சோலார் பவர் உற்பத்தி பண்றதுக்கு தேவையான மொத்த பார்ட்ஸ்சும் நாமதான் தயாரிக்கிறோம், ஏன் மின்சாரமும் நாம்மலே உற்பத்தி செய்யக் கூடாது? விடாமுயற்சி மணி.

"இன்னும் நம்ம சோலார் பிசினஸில், லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கல, அதுவுமில்லாம புதுசா தொழில் தொடங்க கேபிட்டல் எங்க இருக்கு? முதலீடு எங்கிருந்து வரும்?” மூக்குடைத்த சிவகுரு. தன் மாமனாரின் பார்வையை, பார்த்து மீண்டும் சலிப்புற்று

மாமா, ஸ்பூன் பீட் பண்ண முடியாது. ஆபீஸ்ல இருக்கும் போது, I am his M. D, அவ்வளவுதான்!!” என்று இப்பொழுதெல்லாம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்தான்.

****************

இப்படி தன் தந்தையின் கைகளால் மூக்குடைபட்ட போதெல்லாம், கூடுதல் உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பித்தான் மணி. யாரிடமும் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனியாக ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு, முதலீடுகள் செய்வதற்கு என்றே, தனியாக பியூச்சர் ஹோல்டிங் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தான். சிவகுருவை வெறுப்பேற்ற வேண்டும் என்று, அவன் செய்த இந்தச் செயல் உங்களுக்கு மேலும் பலம் சேர்த்தது. பணமுதலை ஒண்ணும் உள்ள இறங்கிருக்கு என்று பிஸினஸ் வட்டத்தில் தகவல் பரவ, முதலீடுகளை எதிர்பார்த்து, பல விதமான தொழில் புரிபவர்கள் வருவார்கள், இவனை தேடி வருவார்கள். அப்படி வருபவர்களின் தொழில் அறிவை, மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு, தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டான். இவன் செய்த பல முதலீடுகள் சொதப்பி இருந்தாலும், சில முதலீடுகளில் நம்பிக்கை தந்தது. அது கொடுத்த தெம்பில், தன் ஆட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்தான்.

************

சிவகுரு அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து, எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள், சிலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். முதலில் குழம்பினாலும், சமாளித்துக்கொண்டு அனைவரது வாழ்த்துக்களையும், சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்ட சிவகுருவின் மனதோ பதட்டம் அடைந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே, இதே போன்ற ஒரு பதட்டம் எப்பொழுதும், சிவகுருவின் அடிமனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. தன்னை மீறி எதேனும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் கொடுக்கும் பதட்டம். ஏனோ, இன்று அந்தப் பதட்டம் சற்று அளவுக்கு அதிகமாய் இருந்தது.

அறைக்குச் செல்ல திரும்பும்பொழுது தான்

"சார், சேர்மன் சார், உங்கள, அவர் ரூமுக்கு வரச்சொன்னார்!!" இடைமறித்த சிவகுருவின் செக்ராடரி சங்கரபாணி.

குழப்பத்துடன் தனது மாமனாரின் அலுவலக அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளியே இருந்த பெயர்ப்பலகையை கண்டவனுக்கு அதிர்ச்சி. தனது மாமனார் பெயர் இருந்தா இடத்தில் தனது பெயர். குழுமத்தின், தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தாலும், தன் மாமானாரின் மேல் உள்ள அபிப்ராயத்தால் அவராகவே கொடுக்கட்டும் என்று அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இன்று தன் கனவுகளில் ஒன்று மெய்யாக, முழு மனதுடன், மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை, சிவகுருவால். தனக்கு சாதகமாக இப்பொழுதுவரை எல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், அது தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நடப்பது வாடிக்கையாக இருந்தது சிவகுருவுக்கு. பெயர்பலகையைப் பார்த்தவாறு நின்றிருந்த சிவகுருவின் கவனத்தை, கைதட்டல் ஒலி தொலைத்தது.

முகம் கொள்ளா சிரிப்புடன், சிவகுருவை நோக்கி வந்தார் மணியின் தாத்தா.

"வாழ்த்துக்கள், சிவா. இன்னையோட நான் ரிட்டையர்ட் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவர், சிவகுருவின் தோள்களில் கைபோட்டு, சேர்மன் அறைக்குள், அழைத்துச் சென்றார். பின்னாலேயே, இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத ஒரு சிரிப்பை முதன்முதலாக சூடிக்கொண்டு, அவர்களை தொடர்ந்தான் மணி.

**************

"இப்ப எதுக்கு மாமா இது, இன்னும் இறங்கி பார்க்க வேண்டிய வேல அதிகமா இருக்கு!! சோலார் பிசினஸ், இந்த குவாட்டர்ல பிரேக் ஈவன் ஆகிடும்!! அதுக்கு அப்புறம் உங்ககிட்ட, நானே, இதப்பத்தி பேசணும்னு தான் நினச்சுருந்தேன்" அரைமணி நேரம் கழித்து, தனக்கு கிடைத்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுரு, சிரித்தார் பெரியவர்.

"அதனால தான் இன்னைக்கு, நல்ல வேளை, உங்களுக்கு வயசு ஆயிடுச்சுனு நீயா வந்து சொல்றதுக்குள்ள, நானே இடத்தை காலி பண்ணினது நல்லது, இல்லையா? " மீண்டும் சிரித்தார்.

"என்ன மாமா இது?" கொஞ்சம் பதட்டம் அடைந்த சிவகுரு.

"சும்மா பா!! பிசினஸ்ல எல்லா முடிவையும் சரியான டைம்ல எடுத்துக்கணும்!! இதுதான் கரெக்ட் ஆனா டைம்னு எனக்கு தோனிச்சு!! உன் அளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் ஒரு நல்ல பிசினஸ் மேன்தான்னு நம்புறேன்!!" தன் மருமகனை, தங்களது குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்திவிட்ட பெருமிதம், அவர் முகத்தில் தெரிந்தது. அவர் முகத்தில் தெரிந்த உண்மை, சிவகுருவை கொஞ்சம் தைரியம் படுத்தியது.

****************

ஒரு மணி நேரம் கழித்து, தனது இருக்கையிலிருந்து எழுந்து, மணியன் அலுவலக அறையை நோக்கி நடந்த கொண்டிருந்த சிவகுருவின் மனதில் "நேரடியா உனக்கு என்ன தான் வேணும்னு கேட்டு விடலாம்" என்ற ஆவேசம். உள்ளே நுழைந்த சிவகுருவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல், நின்றுகொண்டிருந்தான் மணி.

"Congratulations chairman sir!!" கண்ணடித்த மணி, தன் பாக்கெட்டில் இருந்து, ஒரு சிவப்பு அட்டையை எடுத்து டேபிள் போட்டுவிட்டு, அந்த அறையில் இருந்த வாஷ்ரூம்க்குள் நுழைந்து, கதவை அறைந்து சாத்தினான்.

தன்னியல்பில், அந்த அட்டையை எடுத்து வாசித்த சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது.

Checkmate!!

************
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
Super, avanum valarnthu yethiriyum valarnthu, nerukku ner ninnu jaikanum nu mudivu pannittan.
Adi ini Sara vediya erukkum.
Like Reply
கதை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் வார்த்தை பிழைகள் உள்ளன. அதை நீக்கினால் இன்னும் மெருகூட்டி அழகு சேர்க்கும்
Like Reply
Super update.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
(22-12-2020, 08:26 PM)praaj Wrote: ஆட்டம் இனி ஆரம்பம். சிவகுருக்கு ஆப்பு ரெடி. கதை சுடு பிடிக்குது சூப்பர். வாழ்த்துக்கள்.

(22-12-2020, 08:42 PM)Sk5918 Wrote: சூப்பர் சூப்பர் சூப்பர்...

(22-12-2020, 09:07 PM)knockout19 Wrote: Super Update. மணியின் செயல்பாடுகளைப் பார்த்து மதுவே அவனைத் தேடி வர வேண்டும்.

(22-12-2020, 10:02 PM)manikandan123 Wrote: Let's play

Super

(22-12-2020, 10:38 PM)dotx93 Wrote: Chinna update nalum nalla twist vechu mudichu irukeenga good try

(23-12-2020, 01:13 AM)Dharma n Wrote: Sema update bro.... We are waiting

(23-12-2020, 07:09 AM)Isaac Wrote: Keep rocking bro...

(23-12-2020, 07:16 AM)omprakash_71 Wrote: Fantastic Update Bro

(23-12-2020, 07:02 PM)praaj Wrote: Adutha update yeppo nu therinjikkalama.

(24-12-2020, 07:40 PM)praaj Wrote: Super, avanum valarnthu yethiriyum valarnthu, nerukku ner ninnu jaikanum nu mudivu pannittan.
Adi ini Sara vediya erukkum.

(24-12-2020, 07:41 PM)dotx93 Wrote: கதை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் வார்த்தை பிழைகள் உள்ளன. அதை நீக்கினால் இன்னும் மெருகூட்டி அழகு சேர்க்கும்

(24-12-2020, 07:52 PM)knockout19 Wrote: Super update.

படித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாகங்களிலும் உணர்வுகள் குறைந்திருந்தாலும், என்னால் முடிந்த மட்டிலும் சுவாரசியமாக கொடுக்க முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை பதிக்கும் முன்பும் எழுத்துப்பிழையை நீக்கியே , பதிக்கிறேன், இருந்தும் மொத்தமாக  தவிர்க்க முடியவில்லை. I know spelling mistakes are a big let off. Will try to improve. அடுத்த பாகத்திலிருந்து கதை கொஞ்சம்  சூடு பிடிக்கும்.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
Waiting for next update bro... Semma ya poguthu bro
Like Reply
(24-12-2020, 08:04 PM)Doyencamphor Wrote: படித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாகங்களிலும் உணர்வுகள் குறைந்திருந்தாலும், என்னால் முடிந்த மட்டிலும் சுவாரசியமாக கொடுக்க முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை பதிக்கும் முன்பும் எழுத்துப்பிழையை நீக்கியே , பதிக்கிறேன், இருந்தும் மொத்தமாக  தவிர்க்க முடியவில்லை. I know spelling mistakes are a big let off. Will try to improve. அடுத்த பாகத்திலிருந்து கதை கொஞ்சம்  சூடு பிடிக்கும்.
Waiting for the war between the father and son and how the son is going to teach the lesson for his father.
And also to know about the other important character's current status like Suma emotional touch, sivakami's fear and doubt on Mani, Thatha aachi support and their possion with Mani, and what about his one and only  madhu.
Like Reply
வ்வாவ் வ்வாவ் அருமையான ரொமான்ஸ் திரில்லர்
Like Reply
Stage is being set.......

for a Lion and a Wolf.........

naturally Lion is.......

bigger........faster........stronger.......

but.......

"u can never tame a Wolf".......

and is always a Dangerous one........

that's y u can see a Lion but not a Wolf in a circus.......

waiting eagerly for the Lone Wolf's hunt........
Like Reply




Users browsing this thread: 16 Guest(s)