22-12-2020, 07:57 PM
(This post was last modified: 23-12-2020, 06:31 PM by Doyencamphor. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 57
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏற்படும், தொடர் நிகழ்வுகள், உலகத்தின் இயக்கத்தை மொத்தமாக திசைதிருப்பி விட்டதை நம் வரலாறு எங்கும் காணமுடியும். அறிவார்ந்த நபர்களின் பிறப்பும், மங்கோலியப் பெரும் படையெடுப்பு, இரண்டு உலகப் போர்கள், நிலவில் கால் பதித்த மனிதன், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் தொடங்கி தற்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் கொரோனா வரை, இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் முறையை, இயல்பை, மாற்றும் தன்மையுடையது. தொழில்நுட்பத்தையும், தத்துவத்தையும், அறிவியலையும் ஒன்று என்று பார்த்து வந்த உலகில், அறிவியல், தொழில்நுட்பத்தில் இருந்து தத்துவத்தில் இருந்து தனித்து கிளர்த்தெழுந்து, வேர்விட்டு விழுது பரப்பிய காலம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு ஆகும். அறிவியலின் மறுமலர்ச்சி காலம் என்று இது அறியப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான், நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை, நிலவில் மனிதன் கால் பதித்ததற்கும், விமானங்களில் பறப்பதற்கும் ஆரம்ப புள்ளி.
மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நியூட்டன், மரத்திலிருந்து விழுந்த அப்பிள்-ளை கண்டதும் , அது ஏன் கீழே விழுந்தது?, என் மேலே அல்லது இடது பக்கமும் வலது பக்கமும் செல்லவில்லை? என்று யோசிக்க ஆரம்பித்ததுதான், நியூட்டன், புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததாக ஆசிரியர் சொல்ல நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மரத்திலிருந்து பழம் கீழே முழுவது, அன்றாடம் நடக்கும், மிகவும் சாதாரணமான நிகழ்வு. ஏன் அதுக்கு முன்னால ஆப்பிள் பழம் கீழே விழுந்ததை அவர் பார்த்ததே இல்லையா? ஆப்பிள் பழத்த விடு, வேற எந்த பொருளும், கீழ விழுந்ததை அதுக்கு முன்னால, அவர் பார்த்ததே இல்லையா? ஒருவேளை, ஓய்வு எடுக்கப் போன நியூட்டன் தூங்கியிருந்தால? என்று சிந்திக்க ஆரம்பித்து, ஒருவேளை, நம்மளும் எதிர்காலத்துல திடீர்னு, இந்த மாதிரி நடக்கிற எதையாவது பார்த்து, பெருசா எதையாவது, கண்டு கண்டுபிடிப்போமோ? என்றெல்லாம், அந்தக் கதையை பள்ளியில் கேட்ட மாணவர்களில, சிலர் சிந்தித்து இருக்கலாம்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், அவன் அறிந்தோ, அறியாமலோ இருக்கும் ஆற்றல், ஏதாவது ஒரு நிகழ்வின் மூலமே தூண்டப்படும். ஆப்பிள் விழுந்த நிகழ்வு, அவரை சிந்திக்க தூண்டிய இருந்தாலும், அவருக்கிருந்த அறிவாற்றலால்தான், அந்த சிந்தனை விரிவுபெற்று, புவியீர்ப்பு விசையின் விதி எழுதப்பட்டது. எல்லோரும் நியூட்டன் ஆகிவிட முடியுமா? என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது, ஆனால் நாம் எல்லோரையும் போல தான் நியூட்டன். புவியீர்ப்பு விதியின் வரலாற்றை பார்த்தால், இது புரியும். கிரேக்க அரிஸ்டாட்டில் தொடங்கி, இந்திய பிரம்மகுப்தா, அரபிய இபின் சி னா தொடங்கி கலிலியோ வரை தொடர்ந்து எழுதிய கதையின் முற்றுப்புள்ளியைத்தான் நியூட்டன் வைத்தார். முன்னோடிகளின் நீட்சிதான் நியூட்டன்.
ஆசிரியரின், நண்பர்களின், சக மனிதனின் சின்ன பாராட்டோ, இல்லை, ஒன்றை செய்து முடிக்கும் போது தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உந்துதல்கள் வாய்க்கப் பெற்றவர்கள், கொடுப்பினை பெற்றவர்கள். ஒரு மனிதனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ட்ரீகர், எல்லோருக்கும் நேர்மறையானதாக அமைந்து விடாது. வாழ்வில் பட்ட அவமானம், துரோகம், என எதிர்மறையான உந்துதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அந்த வலியை, தோல்வியை, துடைத்தெறியும் பொருட்டு செயல்படும்போது, தங்களின் அறிவாற்றலை உணர்ந்து கொள்பவர்களும் உண்டு. அவ்வாறு, எதிர்மறையான நிகழ்வுகளால் உந்தப் பெற்றவர்கள், சபிக்கப்பட்டவர்கள். மணி, இதில் இரண்டாவது வகை, சபிக்கப்பட்டவன்.
மணியின் வாழ்வில் ஆப்பிள் விழுந்த நிகழ்வுதான், அவன் தன் தாத்தாவிடம் "என்னை சேர்மன் ஆக்குங்கள்" கேட்டதற்கு அவர், மறுத்ததும், அந்தப் பெயர் தெரியாத பிச்சைக்காரரோ, சாமியாரோ "வலியை வரம்" என்று சொன்னதும். கொடுப்பினை போல, சாபமும் ஒரு வரம்தான். என்ன கொடுப்பினையைப் பெற்றவனை காட்டிலும், சாபம் பெற்றவன், வீரியம் மிகுந்தவனாக இருப்பான். சாபமும் ஒரு வகை வரம்தான் என்பதை உணர்ந்து கொள்ளும் வேளையில்.
********************
"என்ன நான் பாத்துக்குறேன் தாத்தா!! நீங்க பயப்படாதீங்க!!" சொன்னவன் பார்வையிலும் வார்த்தையிலும் இருந்து, அவர் தெரிந்துகொண்டது, ஒன்றே ஒன்றுதான், அவன் அனுமதி கேட்கவில்லை, செய்தி சொல்கிறான் என்பது தான் அது. எதுவும் பதில் சொல்லாமல் அவன் கைகளை வாஞ்சையுடன் பற்றினார்.
"ஒரு மூணு நாள் கழிச்சு போலாமா தம்பி?!!" சிறிது நேரம் கழித்து அவனிடம் கேட்டார், சரி என்று தலையசைத்தான்.
மூன்று நாள் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்தே கோயம்புத்தூர் வந்தான், உடன் பெரியவர்களும் வந்திருந்தனர். கோயம்புத்தூர் வந்து சேர்ந்த அன்று இரவு, அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், கொஞ்சம் பேச வேண்டும் என்று மணியின் தாத்தா அழைக்க, அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.
"மாமா ஏதோ பேசணும் சொன்னீங்க!!” நீண்ட நேரம் யோசனையில் இருந்தவரின் யோசனையை காலத்த, சிவகுரு.
சிவகுருவைப் பார்த்து தலையாட்டியவர், எழுந்து சென்று மணியை அழைத்துக்கொண்டு வந்தவரின் கையில், சில பத்திரங்கள். வந்தவர் அதை மருமகனிடம் கொடுக்க, வாங்கிப் படித்த சில நிமிடங்களிலேயே நிமிர்ந்து அதிர்ச்சியடைந்த சிவகுரு
"இது இப்ப அவசியமா மாமா?" சொற்களில், இருந்த கடுமை, குரலில் இல்லை. கணவனின் அதிர்ச்சியை கண்ட சுமா, சிவகுருவின் கையில் இருந்தா பத்திரங்களை வாங்கிப்பாடிக்க
"உங்க ரெண்டு பேரையும் நம்பித்தான், என் பிள்ளை இங்கு அனுப்பி வச்சேன்!!" ஆரம்பித்தவர், குரல் சற்று கம்மியதும் நிறுத்தி, தொண்டையைச் செருமிக்கொண்டார்.
"எதுவுமே மாறல, சொத்தை மட்டும் அவன் பேர்ல எழுதி வச்சிருக்கேன்!!" என்றவர் மேலும் தொடர, சிவகுருவின் மனமோ “என்ன சொல்கிறார் இவர்?” என்று எண்ணியது. பழனி வீட்டை மணியின் பெயருக்கு எழுதிவைத்த பத்திரத்தை வாசித்ததுமே அதிர்ச்சியான சிவகுருக்கு, அவர் கொண்டுவந்த மீதி பத்திரங்களை எடுத்து வாசிக்க, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, மொத்த சொத்தையும், மணியின் பெயருக்கு மாற்றி எழுதியிருந்தார், சாட்சியாக, சிவகுருவின் பெயரும், சுமாவின் பெயரும் இருந்தது. அதுமட்டும் அல்லாமல், தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் இருந்த சொத்துக்களையும் மணியின் பெயருக்கு மாற்றி எழுதிய பத்திரமும் அதில் இருப்பதை கண்டதும், சிவகுருவுக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
சிவகுருவின் மனது மொத்தமாக குழம்பிப் போயிருந்தது. அந்தக் குழப்பம் கூட சில நொடி தான், தனக்கே உரிய பாணியில், நொடியில் அதிலிருந்து மீண்டு, பெரியவரின் இந்த செயலுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்த சிவகுரு
"கைக்குள் வைத்து வளர்த்திருந்தாலும், இப்படி மொத்த சொத்தையும் எதுக்கு எழுதி வைக்கணும்?"
"இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்னு எந்த முடிவும் எடுக்க மாட்டாரே?"
"ஒருவேளை, எனக்கும், சிவகாமிக்கும் உள்ள தொடர்பை சொல்லிருப்பானோ?"
“வாய்ப்பு இல்ல, அப்படி பண்ணனும்னா முன்னாடியே பண்ணிருப்பான்!!”
"என்ன காரணம் என்று தெரியாமல், தேவையில்லாம எந்த முடிவுக்கும் வராத!!" வர்றது வரட்டும், நாம பார்க்காததா?" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ள,
மீண்டும் பேச ஆரம்பித்தார் மணியின் தாத்தா,
"என்ன குறை இருக்கு என் பேரனுக்கு, யோசிச்சு பார்த்தா எதுவுமே இல்ல, அவனுக்குனு யாரும் இல்லன்னு, இந்த சின்ன வயசுல அவனை யோசிக்க வச்சுட்டீங்க!!" நிறுத்தி நிதானமாக தெளிவாக பேசினாலும், அதிலிருந்த சோகத்தின் கணம், மணியின் ஆட்சிகள் கண்ணீர் வடிக்க,
"உங்க ரெண்டு பேரு பேர்ல உள்ள சொத்த எழுதிக் கொடுக்க விருப்பம் இல்லனா வேண்டாம்!!" அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சுமா அந்தப் பாத்திரங்களை எடுத்து கையெழுத்திட ஆரம்பித்தாள்.
"என்ன மாமா பேசுறீங்க, நாம இவ்வளவு பேர் இருக்கோம்!! அதுவுமில்லாம, அவன் என்ன ஒண்ணும் இல்லாத வீட்லயா பிறந்து இருக்கான்? அவனுக்கு வசதி செஞ்சு கொடுக்கல, எதில் குறை வைத்தேன்?" தன் குழப்பத்தை தீர்க்க ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று பெரியவரை விவாதத்துக்கு அழைப்பது போல தூண்டில் போட்ட சிவகுரு, அவர் பதில் சொல்லாமல், வேறு பக்கம் திரும்பிக்கொள்ள, இதை ஒருவாறு கணித்திருந்தால், மீண்டும் சிவகுருவின் எண்ணம், தீடிர் என்று வந்து நிற்கும் தலைவலியை அலசி ஆராய்ந்தது.
“என்ன பழிவாங்க பெரியவர்கிட்ட ஏதாவது சொல்லி, வேற ஏதாவது திட்டம் போடுறானா?”
“வாய்ப்பு இல்லையே, இப்போ கூட, இங்க எவ்வளவு பெரிய விஷயம் நடந்துக்கிட்டு இருக்கு, மண்ணு மாதிரி தான இருக்கான்!!” என்ற தோன்றிய எண்ணங்களை ஒதுக்கி தள்ளி,
"இப்போ எல்லா சொத்தையும், அவன் பெயருக்கு எழுதி வச்சா, என்ன பெருசா நடந்திடும்?"
“சொத்து மட்டும்தான அவன் பேருக்கு மாறுது!! அப்படி மாறினா என்ன பெருசா நடந்திடும்?”
"நான் இல்லாம இவ்வளவு பெரிய தொழில் குழுமத்தை, பெரியவராலேயே சமாளிக்க முடியாது!!" தன் மேல் உள்ள நம்பிக்கையில் தைரியமும் பெற்ற சிவகுரு, தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற தன்னம்பிக்கையில், கையெழுத்திட்டுவிட்டு,
“வேற யதாவது பண்ணனுமா மாமா?” ஆத்திரத்தை அடக்கமாட்டாமல், அதே நேரம், நிதானம் இழக்காமல், சிவகுரு
“நாளைக்கு இத ரிஜிஸ்டர் பண்ணிடு சிவா!!” வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார் மணியின் தாத்தா.
“நல்லது நடந்த சரி!!” கைழுத்து இட்ட பத்திரத்தை எடுத்துக்கொண்டு, சிவகுரு ஆங்கிருந்தது கிளம்பினார். எப்படியும் தான் செய்வது சரியா என்ற சந்தேகம் அவருக்கு கொஞ்சமேனும் இருக்கும், அப்படி இருந்தால், அதில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்.
இங்கு நடப்பவைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அதுவரை அமர்ந்திருந்த மணி, எழுந்து தன் அறைக்குச் சென்றான், ஜடம் போல் சென்றவனை ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் பார்த்தனர் பெரியவர்கள் மூவரும். அந்த வீட்டின் சத்தமெல்லாம் அடங்கியது, அமைதி இழந்தது.
******************
அன்று இரவு.
சுமா தன் தந்தையின் சொற்கள் காயப்பட்ட இருந்தாள். அவர் சொற்களைக் காட்டிலும், அதில் இருந்த உண்மையை அவளை அதிகம் வாட்டியது. சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள்.
அறைக்குள் தன் கணவன் வந்தது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் சுமா. சிவகுருவின் முகத்தில், படர்ந்த சலிப்பே சொல்லியது, சும்மாவின் இந்த அழுகையை அவன் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று.
"சுமா மா, எல்லாம் சரியாயிடும்!!" ஒரு பக்குவப்பட்ட, இயல்பான நடிகன் போல் வருத்தத்தை குரலிலும் ,முக பாவனையிலும் சேர்த்துக்கொண்ட சிவகுரு. சிவகுருவின் ஆறுதல் கூட வாட்டியது, அவளை. கொஞ்சம் சத்தமிட்டு அழுதாள். அருகில் அமர்ந்த சிவகுரு, சுமாவை, தன் தோளில் சாய்த்துக் கொள்ள, கணவனின் கை வளைவில் சாய்ந்து கொண்டவள் அழுகையை நிறுத்தவில்லை.
"சுமா மா!!, இங்க பாரு" என்று அவள் நாடியை பிடித்து தூக்கினான். மாட்டேன் என்று தன் கணவனின் கை வளைவில், தன்னை ஒட்டிக் கொண்டாள்.
"ஒன்னும் இல்லடா, சாமி சொன்னது மாதிரியே நடக்குது பாரு!!. அவ்வளவுதான், அவனுக்கு வந்த கண்டம் எல்லாம் போயிடுச்சு!!. அவர் சொன்ன மாதிரியே, நாம நடந்துக்கிட்டா, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல, அவனுக்கு ஏறுமுகம் தான்!! எதுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம், பாரு, இன்னேல இருந்தே அவனுக்கு ஏறுமுகம் தான், சொல்லிவச்ச மாதிரி, சொத்தை எல்லாம், அவன் பேர்ல எழுதி வச்சு அதுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கோம்!!"
"அப்பா என்ன சொன்னாருன்னு கேட்டீங்க இல்ல!! என் புள்ள, யாருமே இல்லன்னு தவிச்சுப் போய் கிடக்கிறான்!! எல்லாம் நான் செஞ்ச பாவம்!!" குலுங்கி, குலுங்கி அழுதாள்.
"நீ மட்டும் பண்ணல, நானும்தான் பண்ணியிருக்கேன்!!. அதுக்காக நடந்த நினைச்சு இப்படி அழுதுக்கிட்டே இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? எனக்கும் இந்த சாமியார் சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்னு தான் தோணுது!!. தம்பிய தள்ளி வச்சதெல்லாம் போதும், இனியும், அவன கஷ்டப்படுத்தி, நம்மளையும் கஷ்டப்படுத்தி!!" குரல் தழுதழுக்க சொன்ன சிவகுரு, தடுமாறி, சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தான்.
"இவ்வளவு சம்பாத்தியம் இருந்து என்ன பிரயோஜனம், கடவுள எல்லாம் தூரத்தள்ளு, நமக்கு துணையா, எங்க அண்ணன் இருப்பார்!!. கடைசியா தம்பி, ஐதராபாத் போயிருந்தப்ப, நம்ம புள்ள விளையாடியத பாத்துட்டு, ப்பிராப்பரா ட்ரெயின் பண்ணுனா, கிராண்ட் ஸ்லாம் விளையாடுற அளவுக்கு திறமையானவன்னு, ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி கோச் ஒருத்தர், என்கிட்ட பேசினாரு. நாளைக்கே, அவங்க கிட்ட பேசுறேன், தம்பிக்கு மட்டும் உடம்பு சரி ஆகட்டும், பிசினஸ, மாமா கொஞ்ச நாள் மேனேஜ் பண்ணட்டும், தம்பிய பாத்துக்குறத, என் முழு நேர வேலையா பாக்க போறேன்" எப்பொழுதும், தான் இதுபோல், தன் மகனை தள்ளி வைக்க வேண்டிய நிலை வந்ததை நினைத்து உடைந்து அழும் சமயங்களில் எல்லாம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்று சொல்லும் தன் கணவன், இன்று, தன்னைப் போலவே உடைந்து பேசுவதை கண்டதும் கொஞ்சம் பயந்துதான் போனாள். எல்லாம் இருந்தும், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைத்து மறுகியவள், தான் உடைந்து விழும் சமயங்களிலெல்லாம், தன்னைத் தாங்கிப் பிடிக்கும் கணவன் அமைந்ததை எண்ணி கடவுளுக்கு, மனதார, நன்றி சொன்னாள்.
சிவகுருவே, தனக்கே உரிய பாணியில், சூழ்நிலையின் தேவையை உணர்ந்து, கவர்ச்சிகரமாக பிண்ணிக் கொண்டிருந்த மாய வலையை மேலும் பலப்படுத்திக் கொண்டான். தன் மனைவியின் மன நிலையை தான் நினைத்தவாறு மாற்றியதை உணர்ந்ததும் அவனது மனம் சிந்திக்கலானாது.
"கொஞ்ச நாளாவே எதுவுமே நம்ம கட்டுப்பாட்டுல இல்லாம அதுவா நடக்குது? இவனுக்கு பைக் ஆக்சிடென்ட்? ஷேர எழுதி கொடுக்கறேன் வந்த சிவகாமியின் பொண்ணு, திடீர்னு முடியாதுனு சொல்றா? சிவகாமி கைய அறுத்துக்கீட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கா? எல்லாம் ஒரே நாள்ல நடந்திருக்கு. எனக்கு அடங்கிக் கிடந்தவ, அப்பனும் புள்ளையும், எங்குட படுத்தீங்கனு சுமாகிட்ட சொல்ழுவேன்னு என்னையவே மிரட்டுறா? கண்டிப்பா பண்ணுவா!! அவள நேரம் பார்த்து முடிச்சிடலாம்னு பார்த்தா, இன்னைக்கு பெரியவரு இப்படி திடீர்னு புதுசா ஒரு குண்டு போடுறார். அவன் ஆக்சிடன்ட்ல போய் சேர்ந்து இருந்தா, சிவகாமிய போட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருக்கலாம்!! அடுத்த நாளே இவங்க கதைய முடிச்சிருக்கணும். தேவை இல்லாம நேரத்த கடத்திட்டோம். கொஞ்ச நாள் ஆறப்போடுவோம், முதல்ல சுமாவ வச்சு மணி கிட்ட நெருங்குவோம்!!" என்று யோசித்த பின், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற கண்ணை முடிய சிவகுருவிடம் இருந்து பத்து நிமிடத்தில் குறட்டை வந்தது.
***************
திட்டப்படி நடந்தாலும், நம்ம போட்ட திட்டம் நிறைவேற இல்லையே என்ற குழப்பத்தில் அங்கேயே சிவகுரு இருந்த அதே நேரம், மணியின் தாத்தாவும் குழப்பத்தில் இருந்தார். மனிதர்களின் மனதை படிக்கத் தெரிந்த பழுத்த பக்குவசாலி, தன் பேரன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தில் இருந்தார். அவன் வாய் விட்டுப் பேசினால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும், எதைப் பற்றிப் பேசினாலும் பதில் பேசாமல் கடந்து செல்லும் அவனை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவித்து போய் நின்றார். தனக்கு பரிச்சயமான ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டு, அவர் கொடுத்த அறிவுரையின் பேரிலேயே, அவனுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, சொத்துக்களை அவன் பெயரில் எழுதி வைத்தார். தன் மகளையும், மருமகனையும் கொஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கியாவது, அவன் மீது பாசம் காட்ட வைத்துவிட முடியாதா என்ற முயற்சியில்தான், “யாரும் இல்லன்னு, இந்த சின்ன வயசுல அவனை யோசிக்க வச்சுட்டீங்க!!” என்று கொஞ்சம் கடினம் காட்டினார்.
மதுவிடம் பேசினால் ஏதேனும் தெளிவு கிடைக்குமா என்று, அவளுக்கு அழைத்ததில், அவளது மொபைலும் சுவிட்ச் ஆஃப் இன்று வந்தது. சில மாதங்களாகவே மதுவுக்கும், மணிக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு என்று அவருக்கு நன்றாகத் தெரியும், சிறு பிள்ளைகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சினையில் தான் தலையிடுவது சரியாக இருக்காது என்று நினைத்தவர், வேறு வழியில்லாததால் தான் அவளுக்கு அழைத்தார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.
ஏன் "என்னை சேர்மேன் ஆக்குங்க!!" என்று அவன் கேட்டதன் காரணம் தெரியாவிட்டாலும், அந்த முடிவை அவனே எடுக்கட்டும் என்றுதான், மொத்த சொத்துக்களையும் அவன் பெயரில் எழுதி வைத்தார். சொத்திற்கும், பொறுப்பேற்கும் உண்டான வித்தியாசத்தை அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தார். மணியின் திறமை மீதும், அறிவின் மீதும், என்றுமே அவருக்கு சந்தேகம் இருந்தது இல்லை. டென்னிசில், அவன் காட்டும் அதிக ஆர்வம், தங்கள் தொழில் குழுமத்தை நிர்வகிப்பதில் இருந்தால் போதும் என்றே நம்பினார். ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், அதுவே அவனை அதர்க்காக உழைக்க செய்யும் என்பதை, அவன் டென்னிஸ்ல காட்டிய ஆர்வமும், அதரக்காக அவன் உழைத்ததும், அவருக்குள் நம்பிக்கை விதைத்திருந்தது. மேலும் மொத்த சொத்தும் அவன் பெயரில் இருப்பதால், இப்பொழுது முடிவு அவன் கையில். தன் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டான் என்ற உறுதி அவருக்கு இருந்தாலும், ஒரு சின்ன பயம் மனதில். அதுவும், தன் நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டால், தங்கள் தொழில்கள் முடங்கிவிடும் என்பதைக் காட்டிலும், அதை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கை என்னாகும்? என்ற கேள்வி கொடுத்த பயம். அந்த பயமே அவரை தூங்க விடவில்லை.
****************
கண்ணாடி முன் அமர்ந்து, அதில் பிரதிபலித்த, தன் கண்களிலேயே பார்வையைப் பதித்திருந்தான் மணி. ஹாஸ்பிட்டலில், அவன் கண் விழித்ததிலிருந்து, அனைவரும் அவன் மீது காட்டிய பரிதாபம், ஆறுதலை தருவதற்கு பதிலாக, மேலும் வலியைக் கொடுத்தது. அருவெறுக்க படவேண்டிய என்னிடம், பரிதாபம் காட்டுகிறார்களே என்று. அதிலும் மொத்த சொத்தையும் அவன் பெயருக்கு தாத்தா எழுதி வைக்க, தன்னைத்தானே வெறுத்தான். அதீத வெறுப்புடன், அகோரப் பசியுடன், உன் ஆன்மாவைத் தா, என்று அவனை கேட்கும் அந்த பார்வை, தன் மீது காட்டப்படும் பரிதாபத்தின் வலியில் இருந்து அவனை மீட்டேடுப்பது போல் தோன்றியது. அந்தப் பார்வையின் பிடியிலிருந்து, தன்னை மீட்டுக் கொண்டவன், கண்களை மூடி அப்படியே தலை சாய்ந்தான். ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே இருந்த அவனுக்கு, என்ன செய்யவண்டும் என்ற தெளிவு இல்லை. தெளிவு இல்லாதவனின் மனம் எப்படி உறங்கும்.
****************
ஒரு மாதம் கழித்து,
தன் அலுவலக அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த மணியை, நிமிர்ந்து பார்த்த சிவகுருவின் முன், ஒரு பத்திரத்தின் நகலை காட்டினான் மணி. கையை நீட்டிய சிவகுருவிற்கு, மறுப்பாக தலையசைத்தவன், மீண்டும் அந்த பத்திரத்தை சிவகுறிவின் முன் நீட்டினான். உதாசீனத்துடன் மணியை பார்த்துவிட்டு, அவன் நீட்டியதை படிக்க ஆரம்பித்த சிவகுருவின் முகம், ஆத்திரம், குழப்பம், எரிச்சல், அதிர்ச்சி என இன்னதுதான் என்று சொல்ல முடியாத, அத்தனை உணர்வுகளையும் காட்டியது. படித்துக்கொண்டிருந்த பத்திரத்தின் நகலை சிவகுரு பிடுங்க எழுந்தபோது, சட்டென்று கையை இழுத்துக் கொண்ட மணி, அதை கசக்கி, சிவகுரு சுதாரித்துக் கொள்ளும் முன், சிவகுருவின் அலுவலகத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்று, டாய்லெட்டுக்குள் போட்டு ப்ளஷ் செய்தான்.
அதிர்ச்சியில் இருந்த சிவகுருவை நோக்கி வந்த மணி, அவனது டேபிளில், இரண்டுக்கு இரண்டு இன்ச் என்ற அளவில் இருந்த, சிவப்பு அட்டையை தூக்கிப் போட்டுவிட்டு, வெளியேறினான்.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுரு, அந்த அட்டையை எடுத்துப் படிக்க, அதில் இருந்த வாசகத்தை சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது
Let's Play.
**********