03-12-2020, 10:11 PM
சொல்ல வார்த்தைகள் இல்லை சிறப்பு
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
|
03-12-2020, 10:11 PM
சொல்ல வார்த்தைகள் இல்லை சிறப்பு
03-12-2020, 10:47 PM
சிறப்பான பதிவு
06-12-2020, 12:03 PM
பாகம் - 50
"செம கோபத்துல இருக்கான்!!" மித்ரா சொல்ல, ஏற்கனவே அவனின் மனநிலையை ஊகித்திருந்த மது, "என்ன சொன்னான்!!" மதுவிற்கு, ஏனோ தன்னவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல் இருந்தது மனதில் ஒரு பயம் எப்பழுதும் அப்பிக்கொண்டே இருந்தது மதுவிற்கு. தன் தொடர் நிராகரிப்பால் மணி ஏதேனும் முட்டாள் தானமாக செய்து கொள்வானோ என்ற பயமா? அல்லது தன் திட்டமிட்டு நடத்திய நாடம் நிறைவேறியதில், இனி உண்மையிலேயே அவன் இல்லாமல் தான் வாழவேண்டுமோ என்ற எண்ணம் கொடுத்த பயமா? என்பதில் அவளுக்கே தெளிவில்லை. "பெருசா ஒன்னும் பேசல பா!! கொஞ்சம் பிஸியா இருக்கேன்!! அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு வச்சுட்டான்!!" நெத்ராவின் வார்த்தைகளில் தெரிந்த விரக்தியை உணர்ந்து கொண்டு, இன்னொரு சமயம் பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார் மது. மதுவின் பிரிதல் நாடகம் வெற்றிகரமாக நடந்து விட, அதுவரை இருந்த மன உறுதியை இழந்து இருந்தாள் மது. கோயம்புத்தூரில் இருந்து திரும்ப வந்ததும் ஒரு வாரம் தாக்குப் பிடித்தவள், அதற்கு மேலும் முடியாமல் போக, அவனது குரலையாவது கேட்கலாம் என்று, மணிக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவளது நம்பர் மணியால் பிளாக் செய்யப்பட்டு இருக்க, துடித்துப் போனாள்.என்னதான் அவனை நினைத்துக் கொண்டு மீதி வாழ்வை வாழ்ந்து விடலாம் என்று நினைத்து இருந்தாலும், அவனுடன் சேர்ந்து வாழும் வாழ்விற்கு, அது எந்த வகையிலும் ஈடாகாது என்பதை நினைத்தபோது மதுவின் உள்ளம் மருகி தவித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து தங்கள் காதல் கைக்கூடி விடாதா என்று ஏங்கி தவித்த மனதை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்றாள். பின் எப்பொழுதும் போல், தனக்கு விதிக்க பட்ட விதியை நிணைத்து நொந்து கொண்டு நாட்களை நகர்த்தினாள் *************** "ஹாய் பானுமதி!!" கையை ஆட்டி, வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு, தன்னை நோக்கி வந்த ரஞ்சித்தை பார்த்ததும் மதுவின் மனதில் ஒரு சின்ன நெருடல், பெண்களுக்கு உண்டான எச்சரிக்கை உணர்வு அது. கல்லூரி அருகில் உள்ள ஒரு ரெக்ரேஷன் கிளப்பில், கடந்த ஒரு மாதமாக தினமும் மாலை டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தாள் மது. டென்னிஸ் விளையாடுவது, ஏதோ ஒரு வகையில் மணியுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வை தந்து கொண்டிருந்தது அவளுக்கு, அதற்காகவே விளையாட ஆரம்பித்தாள். ஆனால் கடந்த ஒரு வாரமாக தனது உள்ளக் கொதிப்பை அடக்குவதற்காக, தன் உணர்வுகளை சமன் பிடித்துக்கொள்ள விளையாடிக் கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் போல் விளையாட கிளப்புக்குள் நுழைந்தவளை பார்க்கத்தான் கையை ஆட்டிக் கொண்டு வந்தான் ரஞ்சித். "ஹாய்!!" என்றவன், மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து கை காட்ட "ஹாய்!!” என்றாள் கொஞ்சம் தயக்கமாகவே முதல் முறையாக பேச ஆரம்பித்த பின், பார்க்கும் போதெல்லாம் சிறிதாக புன்னகைதாலும், பெரிதாக அவனுடன் பேச்சு வளர்க்கவில்லை மது. எப்பொழுதும்போல் எச்சரிக்கையான இடைவெளியுடன் பழகி வந்தாள். அப்படியிருக்க, திடீரென்று, கையில் டென்னிஸ் ராக்கெட்டுடன் அவன் வந்து நிற்க, எச்சரிக்கை உணர்வு கொடுத்த தயக்கத்துடனே பதில் சொன்னாள். "என்னாச்சு, உங்கள ஃபாலோ பண்ணிட்டு, இங்க வந்துட்டேன்னு நினைக்கிறீங்களா?" மதுவின் மனதை பிடித்தவன் போல் கேட்டான். "ச்சே!! ச்சே!!, அப்படி எல்லாம் இல்லை!!" தன் எண்ண ஓட்டத்திற்கு மாறாக பதில் சொன்ன மது, வழிந்து ஒரு புன்னகையை ஒட்டிக்கொண்டாள் உதடுகளில். "நீங்க நினைக்கிறது கரெக்ட் தான்!!, உங்களுக்காகத்தான் வந்தேன்!!" நக்கலாக சிரித்து கொண்டே அவன் பதில் சொல்ல, வழிந்து ஒட்டிக்கொண்ட அவளது புன்னகை நொடியில் மறைந்தது, இடத்தை காலி செய்ய முற்பட்டால். "ஒரு நிமிஷம்!! ஒரு நிமிஷம்!!" கை நீட்டி மறித்தவன் "சும்மா!! சும்மா!!" பல்லிளித்தவனை முறைத்தாள் மது. "நீங்க நினைக்கிற மாதிரி இல்ல!! உங்களுக்கு முன்னாடியே இந்த கிளப்பில் ஜாயின் பண்ணிட்டேன்!!, மார்னிங் விளையாடிட்டு இருந்தேன், ஒரு மாசத்துக்கு முன்னாலதான் நீங்க இங்க விளையாடுறது தெரிஞ்சது!! ஓகே ஒரு கம்பெனி கிடைக்கும்னு அப்போவே ஈவினிங் ஷெட்யூல் மாறனும்னு நினைச்சேன்!!, பட், அப்ப எல்லாம் நீங்க முகம் கொடுத்தே பேச மாட்டீங்க!!, இப்ப தான் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே, அந்த நன்னம்பிக்கையில் ஈவினிங் ஷெட்யூல் மாத்திகிட்டு வந்திட்டேன்!! ப்ளீஸ்!! நீங்க மறுபடியும் மூஞ்ச தூக்கி விட்டுட்டு போகாதீங்க!!, காலையில வர அவ்வளவு பேரும் கீழ போல்ட்டா இருக்காங்க!!" என்று சொன்னவனின் கண்களில் இருந்த உண்மையை நம்பிய மது, லேசாக சிரிக்க, பெரிதாய்ச் சிரித்தான் அவன். ******************** "நான் UG படிக்கும்போது காலேஜ் டீமுக்கு விளையாடிருக்கேன்” சிரித்த முகத்துடன் மதுவை எச்சரித்தவாறு விளையாட ஆரம்பித்தவனின் முகம், பத்து நிமிடத்திலேயே இருண்டு விட்டது. "நீங்க நல்லா விளையாடுறீங்க!!” மூன்று முறை மதுவிடம் தோற்றதற்கு, பின் வெளியே வரும்போது வழிந்து கொண்டே சொன்னவனிடம் "நான் உங்கள மாதிரி காலேஜுக்கு எல்லாம் விளையாண்டது இல்லை!!, ஜூனியர் நேஷனல் தான் விளையாடி இருக்கேன்!!” மது மேலும் அவன் காலை வார, அசடு வந்தவனைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தாள் மது. அந்த சிரிப்பும் கூட சில நிமிடங்களுக்குள் காணாமல் போக, கேள்வியாக பார்த்த ரஞ்சித்திடம், விடைபெற்றுக் கொண்டு வேகமாக தனது அறைக்கு வந்தவள், அடக்க மாட்டாமல் அழுதாள். மணியின் மனவருத்தம் மட்டுமல்ல, அவன் இல்லாமல் தனக்கு கிடைக்கும் இன்பமும் வலி மிகுந்ததாகவே இருக்கும் என்று அவள் உணர்ந்துகொண்ட தருணம் அது. *************** "எப்போ கிராஜுவேஷன் போற?" எப்பொழுதும் போல் விளையாடி விட்டு, கல்லூரி விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்க மதுவிடம் கேட்டான் ரஞ்சித். "தெரியல ரஞ்சித், போகனுமா யோசிக்கிறேன்?" விரத்தியாக சொன்ன மதுவை பார்த்து, ஒரு பெருமூச்சு விட்டவன் "மதி, ப்ளீஸ் ரஞ்சூனு கூப்பிடேன்!!" ஏக்கமாக கேட்டவனைப் பார்த்து, முடியாது என்பது போல் தலையை அசைத்து சிரித்தாள் மது. ஆம், ரஞ்சித்தும் கொஞ்ச நாட்களாகவே மது, மணியிடம் கெஞ்சி இதைப்போல கெஞ்சிக் கொண்டிருக்கிறான் "ரஞ்சூ!!” என்று அழைக்கச் சொல்லி. தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும், தன்னை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்பது அவனின் எதிர்பார்ப்பு. மதுவைத் தவிர அனைவருமே அவனை அப்படித்தான் அழைத்தும் வந்தார்கள். இவள் மட்டும்தான் அப்படி அழைக்க மறுத்து வந்தாள், இதற்கு முன்னரும் சில முறை அவன் நிர்ப்பந்தித்த போதெல்லாம், வேண்டுமென்றால் முழு பெயரைச் சொல்லி அழைக்கிறேன் "ரஞ்சித் சிங் ஜீ!!” என்று சொல்லியே அவன் வாயை அடைத்து வந்தால் மது. அதே போல் அவனும் மது எவ்வளவோ மறுத்தும், அவளை பானு என்று அழைக்காமல் "மதி" என்றே அழைத்தான். அதற்கு அவன் ஒரு விளக்கம் வைத்திருந்தான், "பானுமதி" தெலுங்கு பெயர் போல இருப்பதாகவும் "மதி"தான் தமிழ் பெயர் போல் இருப்பதாகவும், மேலும் தனக்கு நிலா என்றால் அவ்வளவு இஷ்டம் என்று காரணம் கூறினான். அவனது இந்த நடவடிக்கைகள் அவ்வப்பொது கொஞ்சம் நெருடலை தந்தாலும், அவனது கள்ளம் கபடமில்லா பேச்சில், பழக்கத்தில், தொடக்கத்தில் இருந்த நெருடல் மறைந்து, அவனிடம் மட்டும் சற்று கூடுதலாகவே நட்பு பாராட்டினாலும் மது. "ப்ளீஸ் மதி!!” மீண்டும் அவன் கெஞ்ச, கண்டுகொள்ளாமல் நடந்தவாறு இருந்தால் மது. கண்ணை மூடி ஒருபோதும் பெருமூச்சு விட்டவாறு, தலையசைத்து தன் விரக்தியை வெளிப்படுத்தியவன் "மதி ஒரு நிமிஷம்!!" மது விடுதியின் வாயிலை நெருங்க, நிறுத்தியவன் "ஐ லவ் யூ!!" அழைத்தவனை திரும்பி பார்த்த அடுத்த நொடி, தயக்கமே இல்லாமல் தனது காதலைச் சொன்னான் ரஞ்சித். அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை, அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே காட்டிக் கொடுக்க எந்தவித சலனமும் இல்லாமல் அவளின் பதிலை எதிர்பார்த்து நின்றான் ரஞ்சித். கல்லூரியில் சேர்ந்து, மதுவை பார்த்த முதல் நொடியில் இருந்தே, அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது ரஞ்சித்துக்கு. அழகான பெண்களைப் பார்த்ததும் வரும் ஈர்ப்புதான் என்று நினைத்திருந்தவன், அவளுடன் பழக ஆரம்பித்ததும், அதுவும் அவள் தமிழ் என்றதும், அந்த ஈர்ப்பின் ஈரம் பேணி, காதலாகவே வளர்த்தான், சில மாதங்களுக்குள். அவள் தன்னிடம் கள்ளம் கபடமில்லாமல் பழகும் போதெல்லாம், தன்னிடம் தோன்றும் சின்ன நெருடலை சமாளிக்கவே, அவள் கிராஜுவேஷனுக்கு கோயம்புத்தூர் செல்லும் அன்று, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை, திடீர் என்று ஏற்பட்ட உந்துதலால், கட்டுப்படுத்த முடியாமல் இன்றே சொல்லிவிட்டான். "ப்ளீஸ் ஏதாவது சொல்லு!!" அதிர்ச்சி விலகாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பார்த்து ரஞ்சித் கேட்க, அவள் கண்களில் சிறிதாக துளிர்த்த கண்ணீர், சில நொடிக்குள் அருவி போல் கொட்டியது. அழுதவாரே விறுவிறுவென்று விடுதிக்குள் பறந்தாள். காதலைச் சொன்னதற்கு, கண்ணீர் விட்டு அழுதவளை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியுற்றவன், பின் செய்வதறியாது "மதி!! மதி!!" அவளை திரும்பத் திரும்ப அழைத்தும், காதில் வாங்காமல் அவள் செல்ல, சின்னதாக தோன்றிய குற்ற உணர்ச்சியை, உடனே துடைத்தெறிந்து விட்டு, ஏதோ உணர்ந்து கொண்டவன் போல், திரும்பி நடக்க ஆரம்பித்தான், அவன் வீட்டை நோக்கி. ***************** “பிளீஸ், மது!! நீ என்ன என்ன சொன்னாலும் கேக்குறேன்!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!! பிளீஸ்!!” “நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! கோபப்படு!! அடி!! என்ன கொன்னு கூட போட்டுறு!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!!” “நீ என்ன பாக்க கூட வேண்டாம்!! உனக்கு எப்போ தோணுதோ அப்போ எண்ண தேடி வா!! ஆகுவரைக்கும் உன் கண்ணுல கூட பட மாட்டேன்!!” “நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!!” என்ற மணியின் கதறல் எதிரொலிக்க, அவன் கண்முன்னால் கழட்டி வீசி எறிந்த தாலியை, கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தால் மது, கடந்த இரண்டு மணி நேரமாக. சற்றே, மன அமைதியுடன் ஓடிக்கொண்டிருந்த வாழ்வில், இன்று ரஞ்சித் தன் காதலைச் சொல்லி புயலைக் கிளப்பி விட்டு இருந்தான். தான் வேறு யாரையும் காதலிப்பது அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது என்றாலும், தன்னை மணியை தவிர வேறொருவன் அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாது தவித்து துடித்தாள் மது. தன்னை ஒருவன் காதலிப்பதாகச் சொல்வது கூட, இவ்வளவு வேதனை தரும் என்பதை, அவள் இதற்கு முன் உணர்ந்திருந்தில்லை. அவனில்லாமல், தன் மீதி வாழ்வை வாழ்வதில், இன்னும் என்னென்ன சங்கடங்கள் எல்லாம் சந்திக்க வேண்டுமோ? என்று நினைத்து மனம் குமுறி, அழுது தீர்த்தவள், பின் ஒரு முடிவெடுத்து, மணி கட்டிய தாலியை, தன் கழுத்தில் இருந்த செயினில் கோர்த்து மாட்டிக் கொண்டாள். செயினில் கோர்த்து கட்டிய தாலியை, தன் முகத்துக்கு நேரே ஏந்தியவள், விதி தன் வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டை எண்ணி அழுதாள், பின் தாலியை எடுத்து முத்தமிட்டவள், அதை தன் கையால் இறுக பற்றிக்கொண்டு மெத்தையில் விழுந்தவள், அழுது, கிறங்கி, உறங்கிப் போனாள். **************** "ஐ லவ் யூ" என்ற ரஞ்சித்தின் வார்த்தைகள் காதுகளில் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தவளின் மனம், இன்னும் மட்டுப்பட்டிருக்கவில்லை. பொழுது விடிந்துவிட்டதை உணர்ந்தவள், கல்லூரி செல்வதற்கு தயார்னாள். ஷவரின் அடியில் நெடுநேரம் நின்றவள், ஒருவாராக தன் உணர்வுகளை சமன்படுத்திக் கொண்டு, "அவன் இல்லாத வாழ்வில், இதை விட கடுமையான சவால்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தனக்குத்தானே தெம்பு சொல்லிக்கொண்டாள். நெடுநேரம் கண்ணாடியைப் பார்த்து கொண்டிருந்தவள், பின் கண்களை மூடி, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தவளின் கண்கள் கலங்கி இருந்தது. மதுவின் புது தோற்றம் கண்டு, சிறு சலசலப்பு கல்லூரியில். அதிர்ச்சியுற்றவர்களுக்கும், ஆச்சரியப்பட்டவர்களுக்கும் பதிலளித்து மாளவில்லை அவளால். காலையில் மனசஞ்சலத்துடன் கல்லூரிக்கு சென்றவள், நினைத்ததற்கு மாறாக மகிழ்ச்சியுடன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தாள் மாலையில். அந்த மகிழ்ச்சி, தன் தோற்றத்தை கண்டு கேள்வி கேட்டவர்களிடம், தனக்கு திருமணமாகிவிட்டது என்று மணியை கணவனாக நினைத்துக்கொண்டு அவள் சொன்னது தான் காரணம். அந்த மகிழ்ச்சி எல்லாம் தின்று தீர்த்தது, அவள் அறையில் இருந்த தனிமை. தனிமை தான் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது, என்னதான் வாயார சொல்லிக் கொண்டாலும், அவனுக்கு மனைவியாய் அவனுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை தனக்கு என்று நினைக்கையில், தன் மீது உண்டான கழிவிரக்கமே, நெஞ்சம் கொள்ளா வேதனையைத் தர, உடை கூட மாற்றாமல் கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டவள், அப்படியே உறங்கிப் போனாள், முகத்தில் உறைந்தது, உலர்ந்து போயிருந்த கண்ணீர்தடம் சொல்லும் ஆயிரமாயிரும் வலிகளோடு. ***************** "வாழ்த்துக்கள்!!" மூன்று நாள் கழித்து, ஒரு கிஃப்டை, மதுவிடம் நீட்டியவாறு, சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் ரஞ்சித். பாடவேளை முடிந்து ஏதோ எண்ணங்களில் கட்டுண்டு இருந்தவள், வகுப்பிலேயே இருந்துவிட, யாருமில்ல சமயத்தை பயன்படுத்திக் கொண்டான் ரஞ்சித். அவன் நீட்டிய கிஃப்டை வாங்காமல், அவனை முறைத்தவாறு, வகுப்பறையில் இருந்து வெளியேற முற்பட்டாள். "ஹலோ!!, நியாயமா பாத்தா நான் தான் கோபப்படனும்!!" அடக்கமாட்டாத ஆத்திரத்துடன், வெளியேற எண்ணிய மதுவிடம் இவன் கோபப்பட, "இனிமே என்கிட்ட பேசின மரியாதை கெட்டுவிடும் மிஸ்டர்!!" வெடித்தாள் மது. "ஹெய்!! கூல்!! கூல்!! இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இவ்வளவு கோவப்படுற?" முகத்தில் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல், உண்மையிலேயே கூலாக சிறு புன்னகையுடன் கூறினான் ரஞ்சித். "ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டா!!, உடனே லவ்வுன்னு வந்துறது!!" பொரிந்து தள்ளியவள் மின்னலென வெளியேறினாள். கடும் கோபத்துடன் வெளியேறியவளை, ஒரு பெருமூச்சு விட்டு பார்த்தவன், பின், அவளை தொடர்ந்தான் ரஞ்சித். "சரி ஓகே!!, நான் பொறுக்கிதான்!!, கொஞ்சநாள் பிரெண்டா பழகினா பாவத்துக்கு!!, இந்த கிஃப்டை வாங்கிக்க, உன் கல்யாண பரிசா!!" ஓடிச் சென்று அவளை நெருங்கியவன், மீண்டும் அவள் முன், கிஃப்ட்டை நீட்ட, எதுவும் சொல்லாமல், நின்று, நிதானமாகவே முறைத்தாள் மது. "டூ மினிட்ஸ்!! நான் சொல்றத மட்டும் கேளு!!" என்றவன், அவள் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தான் "உனக்கு கல்யாணமானது எனக்கு தெரியாது!! சொல்லாதது உன் தப்பு!! ஒரு பொண்ணு உன்கிட்ட வந்து, நீ ரெம்ப அழகா இருக்கனு சொன்னா!!, காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கிட்டு தேங்க்ஸ் தான சொல்லுவ!! அதே மாதிரி, உன் பர்ஸனாலிட்டிக்கு கிடைச்ச காம்ப்ளிமென்ட்ட, என்னோடு ப்ரோபோசல் எடுத்துக்க!!, சிம்பிள்!! இன்னும் கொஞ்ச நாள் பழகின அதுக்கப்புறம் தான் ப்ரபோஸ் பண்ணனும்னு நினைச்சேன்!!" அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அவளது முறைப்பு உக்கிரமாக, "புரியுது புரியுது!! நான் சொல்றத முழுசா கேளு!!" இரு கைகளையும் உயர்த்தி, பொறுமை காக்குமாறு செய்கை செய்தவன் "ஸீ!!, உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததுமே, எனக்கு பிடிச்சு போச்சு!!, பேச ட்ரை பண்னேன், நீ அவாய்ட் பண்ண, ஓகேனு, நானும் அதோடு விட்டுட்டுடேன்!! தமிழ் பொண்ணு தெரிஞ்சதும், உன் கூட பிரெண்ட்லி அதான் பேச ஆரம்பிச்சேன்!!, சத்தியமா, அப்போ எனக்கு மனசுல ஒண்ணுமே இல்ல!!, அப்புறம் உன்கிட்ட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், உன்ன ரொம்ப புடிச்சது, நீ என்னோட லைஃப் பாட்னரா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு!!, மனசுல இப்படி ஒரு எண்ணத்தை வச்சுக்கிட்டு, பிரண்டா மட்டும் உன் கூட பழகுறது, எனக்கு ரொம்ப கில்டியா இருந்தது!!, நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி தான் சொல்லனும்னு நினைச்சேன்!! பட், திடீர்னு அப்பவே சொல்லணும்னு தோணுச்சு, அதான் சொல்லிட்டேன்!!. We are not kids, just take this as a compliment, I just don't want to miss a good friend!!" எந்தவித அலங்காரமும் இல்லாமல், தன் செயலுக்கு மன்னிப்பு கூட கேட்காமல், மிகவும் எதார்த்தமாக பேசிய ரஞ்சித்தை வினோதமாக பார்த்தாள். ஒரு நிமிடம் தான் ஏன் இவன் விளக்கத்தை நின்று கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூட தோன்றியது மதுவுக்கு. "உனக்கு நம்பிக்கை இல்லைன்னா, I understand!! பட், இந்த கிஃப்டையாவது வாங்கிக்க, ஜஸ்ட் என்னோட மன திருப்திக்கு!!" என்று அவன் மீண்டும் நீட்டியதை ஏன் வாங்கினோம் என்று தெரியாமலே வாங்கிக்கொண்டு, விடுதியை நோக்கி நடந்தவளை, சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் உதட்டை குவித்து, காற்றை வெளியேற்றி, தன் இல்லம் நோக்கி நடந்தவன் என் முகம் தெளிவாய் இருக்க, அவன் கொடுத்த பரிசை வாங்கிக் கொண்டு நடந்தவளின் முகத்தில் குழப்பம் குடியேறி இருந்தது. ***************
06-12-2020, 12:11 PM
(This post was last modified: 06-12-2020, 12:12 PM by knockout19. Edited 1 time in total. Edited 1 time in total.)
கடவுளே இந்த சஸ்பென்ஸ் தொல்லை தாங்கல
காதல் காதல் காதல்
06-12-2020, 02:33 PM
(This post was last modified: 06-12-2020, 02:34 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Arumaiyaga kadhai kondu selkirirkal.
Unmaiyil delhiyil nadanthathu therinthal mattumey avalin nilai puriyum. Avargal iruvarukkum oruvar illatha vaalkai matravarukku naragam than. Aanaal suspensekal yengalukku mellum naragamaguthu. Next update yeppo varum ji.
06-12-2020, 03:23 PM
Super bro intresting cool update continue bro
06-12-2020, 09:21 PM
Really interesting to read your story
06-12-2020, 11:56 PM
Bro ...rombha suspense vekkathinga mudila... Seekram next update podunga
07-12-2020, 12:49 PM
Ipa Ranjith a love panuvala bro mathu ena tha sola varinga
07-12-2020, 02:03 PM
07-12-2020, 02:58 PM
07-12-2020, 04:37 PM
(07-12-2020, 12:49 PM)Maju1929 Wrote: Ipa Ranjith a love panuvala bro mathu ena tha sola varinga Mathu manikku mattumey sonthamanaval. Yenave than thaaliyai chanil korthu pottu, netri vagudil pottu vaithal. Aanaal maniyidam poi solla veru kaaranam irukkum. Viraivil theriyum. Yenna athu varai suspense than thanga mudiyala. Paravalla wait pannuvom.
07-12-2020, 06:42 PM
Thala suthuthu thala ipove
07-12-2020, 11:11 PM
பாகம் - 51
யார் இவன்? ஃப்ரெண்ட்லியா பழகிட்டிருக்கும் போது, திடீர்னு லவ் பண்றேன்னு சொன்னான்? எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு என்று சொன்னததும், கல்யாணப்பரிசு கொண்டு வந்து நீட்டுகிறான்? மனசுல தோணுச்சு அதனால சொன்னேன், ஆனா அதுக்காக உன் நட்பை இழக்க விரும்பல்லனு சொல்றான்? உண்மையிலேயே அவன் என்ன லவ் பண்ணினானா? நான் அவன் லவ்வ மறுத்தது அவனுக்கு வலிக்கலையா? இல்ல, அந்த வலியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஒருத்தரால வெளிவந்திட முடியுமா? ஜஸ்ட் லைக் தட் என்று ஒரு லவ் பண்ணுவது சாத்தியமா? என்று பலவிதமான கேள்விகள், கோயம்புத்தூர் நோக்கி விமானத்தைல பறந்துகொண்டிருந்த மதுவின் மனதில். ரஞ்சித்தை எந்த வகையில் சேர்ப்பது என்று குழம்பி போனாள், பின் அவளின் ஆரம்ப கால நெருடல் நினைவுக்கு வர, அவனிடம் கொஞ்சம் இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது என்று முடிவுசெய்தவள், அடுத்தடுத்த நாட்களில் அவனை தவிர்க்கவே கோயம்புத்தூர்க்கு கிளம்பினாள், கிராஜுவேஷனுக்கு. *************** மதுவின் பார்வையில் கோயம்புத்தூரை அடைந்ததுமே, மனதில் பாரம் ஏறியது போல் இருக்க, காணும் இடங்களில் எல்லாம் அவனுடன் இருந்த ஞாபகம் மட்டுமே எனக்கு. எங்கள் நட்பு வட்டத்தில் அனைவரும் வந்திருக்க, அவர்களின் மகிழ்ச்சியை குலைக்க வேண்டாம் என்று எண்ணி, போலியான புன்னைகை ஒன்றை பூசிக்கொண்டேன், நாள் முழுவதும். பிரதீப்பையும், நேத்ராவையும் தவிர அனைவரும் வெவ்வேறு ஊர்களில் தனியார் மருத்தவமனையில் பணி புரிந்தவாரே, முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்க, பிரதீப்பும், நேத்ராவும், அரசு மருத்தவராகி, பிரதீப் குன்னூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிய, நேத்ரா, சுந்தராபுரம் ஆரம்ப சுகாதார நிலையித்தில் பணி புரிந்தது வந்தாள். பட்டமளிப்பு விழா முடிந்ததும் அனைவரும் ரெஸிடென்சி பப் செல்வது பின் பிரதீப்பின் பொள்ளாச்சி பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, பிரிந்து செல்வது என்று திடீர் திட்டத்தில் மானமில்லாவிட்டாலும், என் வலியை புரிந்துகொண்டு அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நேத்ராவை சமாதானப் படுத்த, நானும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நேத்ராவிடம் காட்டிக்கொள்ள, நான் அந்த திட்டத்திற்கு ஒத்துக்கொள்ள, வேறு வழி இல்லாமல் நேத்ராவும் ஒத்துக்கொண்டாள். ******************* “தேவை இல்லாம எதுக்கு இந்த டிராமா?” ரேஷிண்டேன்சி பப் வந்து இரண்டு மணி நேராமாக, சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவும் இயலாமல், நண்பர்களின் மகிழ்ச்சியை கெடுக்கவும் விரும்பாமல், தவித்துக் கொண்டிருந்த என்னை கடிந்தது கொண்டாள் நேத்ரா. “அதெல்லாம் ஒண்ணும் இல்ல!! இங்க வந்ததுல இருந்து எனக்கு அவன பாக்கணும் போல இருக்கு!! நாளைக்கு அவன எங்கையாச்சும் வரச்சொல்லி கூப்படுறியா? நான் தள்ளி நின்னு பாத்துக்கிறேன்!!” என்ற என்னை பரிதாபமாக பார்த்தவள், பின் சரி என தலையாட்டினாள். அப்பொழுத்துதான் "இங்க பாருங்க, கிராஜூவேஷன் பார்ட்டி ஸ்பெஷல் கெஸ்ட்" திடீர் என்று மணியை அழைத்து வந்த பிரதீப், எனக்கு எதிர்ல இருந்தா இருக்கையில் அமரவைத்தான். என் கையை பற்றிய நேத்ரா பதற, அவளை காட்டிலும் அதிக பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது. அவனை காண வேண்டும் என்று துடித்து கொண்டிருந்த இதயம், அவன் என் கண்களுக்கு முன் வந்து நிற்கையில், துடிப்பதை சில நொடிகள் நிறுத்தி விட்டது. ரத்தமும், சதையுமாக, என் முன்னே என் உயிரே நிற்கையில், அவனை அனைத்துக்கொண்டு, என் துன்பத்தை எல்லாம் அவனை முத்தமிட்டே தீர்க்க வேண்டும் என்று பரிதவித்த மனதை இழுத்துப் பிடிக்க, அது கண்ணீராய் வெளிப்பட்டது என் கண்களின் வழியே. “அப்புறம் பானு! எப்படி இருக்க!” நாக்கலாக கேட்கிறேன் என்று அவன் என்னை பானு என்று அழைக்க, அவனின் வலியே தெரிந்தது எனக்கு. “அவளுக்கு என்ன, அவ நல்லா இருக்க!, நீ மூடிக்கிட்டு, மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” நேத்ரா சூடாக கேட்க, அவள் கைபற்றி வேண்டாம் என்று நான் கண்களால் கெஞ்சிக் கொண்டிருக்கையில், கோபத்தில் எழுந்து அவன், வழியில் வந்து கொண்டிருந்த ஒருவன் இடித்து, "சாரி" கேட்டவனை, “fuck your, sorry “ என்று அடிக்க, அவனின் மூர்க்க தனத்தில் ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். அந்த கைகலப்பில் அவன் அடிபட்டு மயங்கி சரிய, "ஐய்யோ!!” என்ற என் அலறலில் அந்த பப்பே ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தி என்னை வேடிக்கை பார்த்தது. விழுந்து கிடந்தவனை வாரி எடுத்து என் மடியில் போட்டு, "பாப்பா!!பாப்பா!!" அழைக்க, மூர்ச்சை இல்லாமல் இருந்த அவனை கண்டதும் உயிரே போய்விட்டது எனக்கு. என்ன செய்வதுதென்று அறியாமல், அவன் கன்னத்தில் தட்டியாவாறு நான் இருக்க, சுதாகரித்து கொண்ட நேத்ரா, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, சில நொடியில் அவன் விழித்ததும் தான் சென்ற உயிர் திரும்பி வந்தது எனக்கு. அவன் கன்னத்தை தடவிய படி நான் அழுதுகொண்டிருக்க எழுந்து அமர்ந்தவன், என்ன யோசித்தானவ காற்றை கிழித்துக் கொண்டு வெளியேறினான் அங்கிருந்து. அவனை பின் தொடர்ந்து நான் செல்ல, என்னை பின் தொடர்ந்தனர் அனைவரும். பாரக்கிங் சென்றவன் தள்ளாடியா படியே பைக்கை எடுக்க, பதறிய நான், அதற்குள் காரை எடுத்துக்கொண்டு வந்த பிரதீப்பைப் பார்த்தேன். என் மனதை உணர்ந்து கொண்டவன், “வா, நான் டிராப் பண்ணுறேன்!” சொல்லி முடிக்க, அதற்குள் பைக்கோடு சேர்ந்தது கீழே விழுதான். பதறிய நான் அவனை நோக்கி ஓட, என் கைபிடித்து வேண்டாம் என்று தடுத்த நேத்ரா, “பிரதீப் பாத்துக்குவான்!!” வலுக்கட்டாயமாக என்னை காரின் பின் சீட்டில் தள்ளினாள். பைக்கை தூக்க முயன்றவன், முடியாமல் கீழே போட்டு, விரக்தியில் பைக்கின் கண்ணாடியை எட்டி உதைக்க, அது உடைந்து பறந்து சென்றது. மீண்டும் அழைத்தான் பிரதீப், கனுக்கொள்ளாமல் மீண்டும் பைக்கை எட்டி உதைத்தான். காரில் இருந்து இறங்கிய பிரதீப், அவனை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக காருக்குள் தினித்தான். மணி காரில் எறியதும், பிரதீப் ஏறுவதற்கு முன் டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தேன். பின்னாடி திரும்பி நேத்ரவை பார்க்க, என் என்ன ஓட்டம் புரிந்துகொண்டு இறங்கிக் கொண்டாள். டிராப் செய்துவிட்டு வருய்றேன் என்று இருவரிடமும் கண்களால் சொல்லிவிட்டு, காரை எடுக்க, கோபப்படுவான் என்ற என் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைதியாய் இருந்தான். காதலே கசிந்துருகி, காந்த பார்வையில் கட்டுண்டு, மோகத் தீ வளர்த்து, அதில் காதல் குளிர் காய்ந்த எங்கள் கார் பயணங்கள், ஏதோ போன ஜென்மத்து நினைவுகள் போல் தோன்ற, மூச்சு முட்டும் அடர்த்தியுடன் வேதனையை நிறைத்துக் கொண்டு பதினைந்து நிமிடம் கார் பயணம். அவன் வீட்டின் முன் நிற்க, இறங்கப் போனவனின் கையை தன்னிச்சையாக பிடித்தேன், நான் என் வாழ்க்கையில் செய்த பெரும் தவறு அது. “சாரிடா" அவனின் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் நான் தான் என்ற குற்ற உணர்ச்சியில் மன்றாடிய என்னை, விரகத்தியாய் பார்த்து சிரித்தவன், வேறு எதுவும் பேசவில்லை. அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அழுதேன், அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றிய என்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஸ்டேயாரிங்கை இருக பற்றிக்கொண்டேன். “அவனை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்!!” என்று பிதற்றிய மனதை கட்டுப்படுத்த முடியாமல், அவனை இழுத்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழத்தொடங்கினேன். நான் செய்த இரண்டாவது மிகப் பெரிய தவறு அது. அதுவரை அமைதியாய் என் அழுகையை வேடிக்கை பார்த்தவன், அவனை கட்டிக் கொண்டு நான் அழ, அடுத்த நொடி என்னை இருக்கிக்கொண்டு அவனும் அழ ஆரம்பித்தான். எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட காயத்திற்கு ஆறுதல் தேடி அவன் தோளில் நான் தஞ்சமடைய, என்னால் ஏற்பட்ட காயத்திற்கு அவன் என்னிடமே தஞ்சம் புகுந்து ஆறுதல் தேடினான். அவன் என்னை அனைத்துக்கொண்டு அழ ஆரம்பித்ததுமே, நான் செய்து கொண்டிருக்கும் தவறை உணர்ந்தேன், அவனது அணைப்பில் இருந்து கொண்டே, அவனிடம் விலகுவது எப்படி என்பதை என் மூளை, என்னை கேட்காமலே யோசிக்க ஆரம்பித்திருந்தது. சுருசுருப்பாய் இயங்கிய மூளை கொடுத்த எண்ணம், என்னையே, ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. ஆனால் உண்மையான காரணத்தை சொல்வதை விடவும், அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொண்டாலே ஒழிய, இவன் என்னை மறப்பது நாடவாத காரியம் என்று உனமையை உணர்ந்தேன். தெரிந்தே, என் மனதில் தோன்றிய விஷத்திற்கு ஒப்பான எண்ணத்தை, நானும் அருந்தி, அவனுக்கும் கொடுத்து, எங்கள் காதலை கொலை செய்ய முடிவு செய்தேன். “என்ன சொன்னாலும் செய்வியா?” இல்லாத திடத்தை எல்லாம் இழுத்துப் பிடித்து, அவன் கண்களப் பார்த்து கேட்க “நான் வேணா செத்துறட்டுமா?” குழைந்தை என என்னிடம் குழைந்தவன் அழுதான், “அத விட மோசமான ஒண்ணு, எனக்காக செய்வியா?” சாகட்டுமா? என்று அவன் வாயால் கேட்டும், என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை நிந்தித்து அழுதேன். “நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்!!, நீ என் கூட மட்டும் இரு!!” "இவன் என்னை காதலிக்க மாட்டானா?” என்று ஏங்கி நான் தவித்த தருணங்கள் எண்ண நினைவுக்கு வர “எங்......!!" என்று பேச ஆரம்பித்து முடியாமல் போக, உடைந்து அழுதேன். “என்ன மறந்துரு!! நான் உனக்கு சரியானவ இல்ல!!” நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழ ஆரம்பித்தான். என்னை இழுத்து அனைத்து “சாரி பாப்பா!! நான் பண்ணுணது எல்லாம் தப்புதான்!! ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்!! இனி நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! பிளீஸ்!! இந்த மாதிரி எல்லாம் பேசாதே!!” அழுகையின் ஏக்கங்களுக்கு இடையில், என்னிடம் அவன் கெஞ்ச, அவனை அணைத்தபடியே இந்த உயிர் இந்த நொடியே என்னை விட்டு நீங்காதா என்ற ஏக்கத்தில் நானும் அழுதேன். பின் என் எண்ணத்தின் முட்டாள்தனத்தை உணர்ந்தது, அவனை விலக்கி “என்ன சொன்னாலும் செய்வியா?” கெஞ்சினேன், அழுதுவடியும் கண்களில் பெரும் பயம் அப்பியிருக்க முடியாதென்று அவன் தலையாட்ட "ஐ ஹாட் அன் அப்பைர்!!!, வித் சம் ஒன்!!” முகத்தை மூடிக்கொண்டு, எங்கே நான் சொன்னதை நம்பிவிடுவானோ என்று ஏதோ ஒரு ஓரத்தில், என் உள்ளம் பதறி துடிக்க, அப்படி நினைக்க மாட்டான் என்று தெரிந்தும் அழுதேன். “பிளீஸ் மது!! நீ என்ன சொன்னாலும் செய்றேன்!! நான் பண்ணதெல்லாம் தப்புதான்!!” அவன் நம்பவில்லை என்பதை உணர்ந்ததும், கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். “sorry!! I slept with someone!!” வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, அழுகையுடன் நான் கூற, அவன் கண்களில் வழிந்த கண்ணீர் சட்டென்று நின்றது, அவன் முகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்றாய் மாறியது. எதுவும் சொல்லாமல் சிலையாய் அவன் காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்க, மரணத்தின் இழப்பை முதல் முறையாக உணர்ந்தேன் நான். ஆனால் அது என்னுடைய மரணமா? அவனுடைய மரணமா? அல்லது எங்களது காதலின் மரணமா? என்பது தெரியவில்லை. ******************** குழப்பமான மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கோயம்புத்தூர் சென்ற நான், தாங்க முடியாத துயரத்துடன் அடுத்த நாளே டெல்லி திரும்பினேன். செய்முறை வகுப்பிற்கு செல்ல மனமில்லாமல், தனியாக வகுப்பில் அமர்ந்திருந்தேன். எண்ணமெல்லாம் அவன் கண்களே நிறைத்து இருக்க, அதில் நான் கண்ட பயம், என்னை மிச்சமில்லாமல் தின்று செறித்துக் கொண்டிருந்தது. உயிர் போகப் போகிறது என்று தெரிந்த ஒரு ஒருவன், உயிர் வாழவேண்டும் என்று பேராசையோடு, எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு என்று கடவுளையோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் மருத்துவரையோ, பார்த்து கெஞ்சும் உயிர் வலியின், பயம் அது. கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை, அப்படி ஒரு பயத்தை நான் அவனுக்கு கொடுப்பேன் என்று. அப்படி ஒரு பயத்தை அவன் கண்களில் கண்ட பின்பும், எப்படி என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்க, உடலோடு சேர்ந்து உயிரும் கூசியது எனக்கு. குதூகலமே வடிவாய், உற்சாகம் உருவம் கொண்டது போல், மாயக் குழந்தையென, எங்கள் அகாடமியில் துள்ளித்திரிந்தவனை, காதல் என்னும் என் சுயநலத்தால், வேறு வாய்ப்புகளை வழங்காது, காதலிக்க வைத்தது தவறு என்று முதல் முறையாக எண்ணினேன். பாசத்துக்கு ஏங்கி தவித்த அவனுக்கு எல்லாமாய் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டி, எதுவுமே இல்லாமல் நிற்கதியாய் அவனை நிற்கவிட்டு பிரிந்ததை நினைக்க நினைக்க, என் வேதனை மொத்தமும் என் அம்மாவின் மீது ஆத்திரமாய் மாறியது. சுய கழிவிரக்கத்தை போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் இல்லை, அடுத்தவர்களால் தனக்கு ஏற்படும் துன்பத்திற்கும், தன்னை குற்றம் சாட்டும் கொடூர அரக்கன் அது. "இங்கதான் இருக்கியா?" வேதனையின் பிடியில் இருந்த என்னை உலுக்கியது ரஞ்சித்தின் குரல். குரல் வந்த திசையை நோக்கி நிமிர்ந்து பார்க்க "எப்படி போச்சு கிராஜுவேஷன்?" சிரித்தவாறு கேட்டுக்கொண்டு வந்தவனின் முகம் சட்டென சீரியசான அரிதாரம் பூசிக் கொண்டது. என் முகத்தில் தெரிந்த வேதனையை கவனித்திருப்பான் போலும். நான் இருந்த வேதனையில், ஒரு வாரத்திற்கு முன் எனக்கு ப்ரொபோஸ் செய்தவன், எதுவுமே நடக்காதது போல இயல்பாக பேசுபவனை, எரிச்சலுடன் பார்க்க, எதுவும் சொல்லாமல் எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனது ஊடுருவும் பார்வை என்னை துளைப்பது போல் இருக்க, அதற்கு மேலும் அடக்க மாட்டாமல், முன்னால் இருந்த டேபிளில் அடுத்து உடைந்து அழ ஆரம்பித்தேன். ****************** அரை மணி நேரம் கழித்து "இத குடி, யூ வில் பில் பெட்டர்!!" என்னை நோக்கி ஒரு காபி குவளையை நீட்டினாள் ரஞ்சித். நான் உடைந்து அழ ஆரம்பித்து, பின் அந்த அழுகை விசும்பலாய் மாரி, அதுவும் ஓயும் வரை, ஆறுதல் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தவன், எங்கே சென்று விட்டானோ? என்று நான் நிமிர்ந்து பார்க்க, போகலாம் என்று கண்ணை காட்டினான். ஏனோ அவனது அழைப்பிற்கு கட்டுண்டது போல, அவனைப் பின் தொடர, கல்லூரியின் கேன்டீனுக்கு அழைத்து வந்தவன்தான், இப்பொழுது காபி கப்பை என்னை நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறான். அமைதியாக அவன் நீட்டிய கப்பை வாங்கி பருகினேன், அவன் சொன்னது போலவே, உள்ளே சென்ற காபியின் வெப்பம், என் உள்ள வெப்பத்தை கொஞ்சம் தனித்து ஆறுதல் படுத்தியது என்று சொல்ல வேண்டும். "போய் ரெஸ்ட் எடு!! நாளைக்கு பேசலாம்!!" ஏன் அழுதேன் என்று காரணம் கூட கேட்காமல், என்னை விடுதிக்கு போகச் சொல்ல, ஏனோ மறுப்பு எதுவும் சொல்லாமல், அவன் சொன்னதை செய்தேன். *************** மூன்று நாள் கழித்து, "This is complete stupidity!! absurdity!!" நான் சொன்னதை நம்ப முடியாமல், இடதும் வலதுமாக தலையை ஆட்டிய ரஞ்சித், ஓரிடத்தில் நிற்க முடியாமல், அங்கும் இங்கும் நடந்தவன் "நீ பண்றது முட்டாள்தனம், டோன்ட் பி சில்லி!!" மீண்டும் நான் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் புலம்பினான். "நான் உன்கிட்ட அறிவுரை கேட்கல, உதவி தான் கேட்டேன், பண்ண முடியுமா? முடியாதா?" அவனின் வார்த்தைகளை கொஞ்சும் மதிக்காமல், நான் பிடித்த பிடியாய் இருக்க, தன் கழுத்தை முடிந்த மட்டிலும் பின்னால் வளைத்து வானம் பார்த்தவன், "ஊ" சத்தமிட்டு வாயினால் காற்றை ஊதி தள்ளிவன் "பாவம் யா, அந்தப் பையன்!!" மணியின் மீது அவன் இறக்கப்பட, என் கண்களில் அரும்பிய கண்ணீரை, வலதுபுறம் திரும்பி துடைத்துக் கொண்டேன். "தேங்க்ஸ்!!" அவன் முகம் பாராமல் சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தேன். ****************** இன்று காலையில் எழுந்ததுமே, எனக்கு மணியின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் பித்துப் பிடித்ததுபோல் இருப்பதாக சும்மா ஆன்ட்டி சொல்ல துடித்துப்போனேன். மனதை கட்டுப்படுத்தியவாறு அவர்களிடம் பேச, அவனுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டவர்களிடம், எதுவும் தெரியாது என்று பொய் சொன்னேன். எதுவும் பேசாமல் எப்பொழுதும் அவன் அமைதியாகவே இருப்பதாகவும், நான் வந்து பேச முடியுமா? இன்று அவர்கள் கேட்க, மறுக்க முடியாமல் வருகிறேன் என்றேன். அவனை எங்காவது வெளியில் அழைத்து வர முடியுமா? அவர்கள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் விண்ணப்பம் வைக்க, நாளை மறுநாள் லீமெரிடியன் அழைத்து வருவதாக சொன்னார்கள். அவர்கள் அழைப்பை தூண்டித்த அடுத்த நொடி, அடைக்கி வைத்த கண்ணீர் அருவியென கொட்ட, கடைசியா அவனைப் பார்த்த நொடி என் நினைவை நிரப்பிக்கொண்டது. சிறு குழந்தையென துள்ளித்திரிந்தவனை, என் உடலின், உயிரின், நீட்சியாக என்னை ஒட்டிக்கொண்டு திரிந்தவனின், உயிரை மொத்தமாக உருவி எடுத்து, வெறும் ரத்தமும், சதையுமாய், உணர்வுகளற்ற மனித கூடாய், நடந்து சென்றவனை பார்த்த நானும், ஒரு பிணம் அங்கிருந்து கிளம்பியது நினைவில் வர, அவன் இன்னும் அப்படியேதான் இருக்கிறான் என்று அறிந்ததும், தீயில் இட்ட புழுவாய் துடித்துப் போனேன். கொடிய விஷத்துடன் கொத்திய பாம்பிடமே, விஷத்தை எடுக்கச்சொல்லி மன்றாடும் சுமா ஆண்ட்டியை நினைத்து அழுவதா, இல்லை இறக்கமே இல்லாமல் என்னை இப்படி செயல்பட வைக்கும் என் விதியை நினைத்து அழுவதா என்று தெரியாமல் அழுது தீர்த்தேன். பின் புலிவால் பிடித்த கதையாக, எதைச் சொல்லி அவனிடம், உயிர் பயத்தை பார்த்தேனோ, அதையே பிடித்துக் கொண்டு, அதை உண்மை என அவனை நம்ப வைக்க, என் மனதில் ஒரு திட்டத்தை தீட்டி, செயல்படுத்தவே ரஞ்சித்திடம் உதவி கேட்டேன். ***************
07-12-2020, 11:12 PM
மூன்று நாள் முன்பு, அவன் சொன்னதும் விடுதிக்குச் சென்ற நான், மறுநாளே, அவனிடம் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்தேன். எங்கள் பிரிவின் காரணத்தை மட்டும், மணியின் தந்தை மிரட்டினார் என்றும், என் மனதளவில் செத்துவிட்ட என் அம்மாவை, உண்மையாகவே செத்துவிட்டதாகவே மாற்றிச் சொல்லி இருந்தேன். ஆறுதலுக்கு அழுபவர்களிடம் அறிவுரை சொல்லாமல், அவர்களின் வேதனையை மட்டும் கரைக்கும் வித்தை தெரிந்தவன் ரஞ்சித். அனைத்தையும் கேட்டவன், எதுவுமே சொல்லவில்லை, எதுவும் கேட்கவும் இல்லை. மற்றவரின் பாவத்தை அள்ளி சுமப்பதற்கே பிறந்தவன் போல, நான் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டவன், நான் முடித்துவிட்டேன் என்று தெரிந்ததும்
"Are you feeling better now!!" என்று கேட்டவன், நான் தலையாட்டியது, போகலாம் என்று கண்ணை காட்டி, எழுந்து கொண்டான். இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியாத வினோததிலும் வினோதமானவன், இந்த ரஞ்சித். ************ இரண்டு நாள் கழித்து, என்ன பேசவேண்டும் என்பதில் தெளிவு இருந்தாலும், நான் திட்டமிட்ட படியே எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று நினைத்தத படியே, கடவுளை வேண்டிக் கொண்டு, லீ மெரிடியனுக்குள் நுழைந்தேன். அங்கே எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல். சுமா ஆன்ட்டி, மணியை, தனியாக அழைத்துக் கொண்டு வருவார்கள் என்ற என் நினைப்புக்கு மாறாக, அங்கே அவனது அப்பாவிற்கான பாராட்டு விழா என்று தெரிந்ததும் அதிர்ச்சியுற்றேன். உடனே அங்கிருந்து வெளியேற எத்தனிக்கும் போதுதான், விழா கூட்டத்தில், என் அம்மாவை கவனித்தேன். உடலெல்லாம் பற்றி எறியும் ஆத்திரத்துடன், அங்கிருந்து வெளியேறினேன். இவ்வளவு நடந்த பின்னும், மணியின் அப்பாவிற்காண பாராட்டு விழாவில், என் அம்மாவும் கலந்து கொண்டதை நினைக்கையில், பற்றிக்கொண்டு வந்தது எனக்கு. மணியை சுத்தமாக மறந்துவிட்டு, என் அம்மாவிற்கு ஒரு பாடம் கற்பிப்பது என்று முடிவு செய்து, திரும்பவும் அந்த பாராட்டு விழா நடக்கும் ஹாலுக்குள் நுழைந்தேன். என் அம்மா என்னை பார்க்கும் படி அவள் முன்னால் செல்ல, அவள் கண்டுவிட்டதும், அவளை முறைத்துவிட்டு, நேராக மணியின் அப்பாவிடம் சென்றேன், கை கொடுத்து, கட்டிப்பிடித்து, அவருடன் நெருக்கமாக நின்று செல்ஃப்பி எடுத்துவிட்டு, என் அம்மாவை முறைத்தவாறு அங்கிருந்து கிளம்பினேன். நான் எனது காரின் கதவு திறக்கும் போது, என்னை நோக்கி ஓடிவந்த என் அம்மா “பானு!! ஒரு நிமிஷம் நில்லு!! நான் சொல்லுறத மட்டும் கேளு!!” பார்வையால் எரித்துவிட்டு “நீ என்ன என்னை கூட்டிக் கொடுக்குறது!! நானே போய் படுக்குறேன்!! உனக்கு வேலை மிச்சம்!! அதுக்குத்தான ஆசைப்பட்ட?" கத்திவிட்டு, அவள் அருகில் நிர்ப்பதே பாவம் என்ற எண்ணத்தில், அங்கிருந்து கிளம்பினேன். நெதராவிற்கு அழைத்து அவளை விமான நிலையம் வரச்சொன்னேன், அடுத்த டெல்லி விமானத்திற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருக்க, கோயம்புத்தூரை விட்டு சென்றாள் போதும் என்ற எண்ணத்தில், நேத்ராவிடம் காரை கொடுத்துவிட்டு, என்ன எது என்று கேட்டவளுக்கு, டெல்லி சென்றது கால் செய்வதாக சொல்லி, விமான நிலையத்திற்குள் புகுந்து கொண்டேன். ************* ஒரே பிள்ளையான நான் அவளை விட்டுப் பிரிந்த பின்னும், அதற்கு காரணமான உறவை, இன்னும் அவள் தக்க வைத்திருக்கிறாள் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆற்றாமையில் தவித்திருந்த நான், விமான நிலையத்தின் கழிப்பறையில் முடங்கிக் கிடந்தேன். அப்பொழுதுதான் மணியிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத அழைப்பு என்றாலும், அவன் பெயரோடு சேர்ந்து, புகைப்படமும் தொடுதுறையில் தெரிய, கொஞ்சம் ஆறுதல் எனுக்குள், எடுத்திருக்கக் கூடாத அழைப்பை எடுத்தேன். "சொல்லு!!” என்றேன், "மது எங்க இருக்க?” "என்ன வேணும்னு சொல்லு?” "உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!!” "சொல்லு!! கேட்டுகிட்டுதான் இருக்கேன்!!” "இல்ல!! நேர்ல பேசணும்!!” "முடியாது!!” என்று நான் மறுத்தும் அவன் விடுவதாய் இல்லை. "பாப்பா!! என்ன பிரச்சனை இருந்தாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!! எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்!! நான் தாத்தாட்ட பேசுறேன்!!” “தாத்தா கிட்ட என்ன பேசுவான்?” என்று நினைக்க, அவனது நம்பிக்கையில் சலிப்பானேன் "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!!” "நீ பார்க்கிங்ல ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்த நான் கேட்டேன்!!” திடுக்கிட்ட நான், எந்த உண்மை அவனுக்கு தெரியக்கூடாது என்று நான் இவ்வளவும் செய்தேனோ, அது தெரிந்துவிட்டதோ அவனுக்கு என்ற எண்ணம் கொடுத்த பயம் என்னை ஆட்க்கொள்ள, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சொன்ன உரையாடலை மீண்டும் என் மனதில் ஒட்டிப்பார்த்து, அதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்ததும், என் சூழநிலைக்கு பொருந்ததாத பெரும் நிம்மதி எனக்குள். "மது!!” "சொல்லு!!” "என்னால முடியல!!” அவன் கெஞ்ச, நான் டெல்லியில் இருந்து வந்த போது என்ன திட்டத்தில் வந்தேனோ அதை செயல் படுத்துவது என்று முடிவு செய்தேன். "சரி!! சொல்றேன்!! குறுக்கே பேசக்கூடாது!! எமோஷன் ஆகக்கூடாது!! எல்லாத்துக்கும் மேல, முட்டாள்தனமா எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு, எனக்கு ப்ராமிஸ் பண்ணு!!” "ம்ம்!!" "தெளிவா வாய தொறந்து சொல்லு!!” அவன் எதுவும் பேசவில்லை. "முதல்ல, I have moved on in my life, அதுதான் உண்மை!!. இப்போ என் வாழ்க்கைல இன்னொருத்தன் இருக்கான்!!. இரண்டாவது எங்க அம்மாகிட்ட நான் போட்ட சண்டைக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரிஞ்சுக்கோ!! எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்!!. உன்ன கெஞ்சி கேக்குறேன், முட்டாள்தனமா எதுவும் பண்ணி, என்ன வாழ்க்கை ஃபுல்லா வருத்தப்பட வச்சிராத!!” அதற்கு மேலும் அவனை காயப்படுத்தி, என்னையும் காயபடுத்த விரும்பாமல் "பாய்!!” அழைப்பை துண்டித்தேன். பத்து நிமிடம் அழைப்பு அவனிடம் இருந்து வர உடனே எடுத்தேன். "சீக்கிரம் சொல்லு!! டைம் இல்ல எனக்கு!!” என்ன சொல்லுவானோ என்று படபடத்தேன். "வெளிய வா!! உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்!! அவன் என் வீட்டின் அருகே நிற்கிறான் என்றதும், சொல்லமுடியா பதட்டம் என்னுள். "அங்க எதுக்கு போன? அங்க உன்ன போக கூடாதுணு சொல்லி இருக்கேன்ல!!” பதறினேன். "சரி!! பக்கத்துல இருக்குற பார்க்குல இருக்கேன் வா!!” "நான் வீட்ல இல்ல!! வெளிய இருக்கேன்!!” அவனிடம் பதில் சொன்னாலும், அவனை எப்படியாவது அங்கிருந்து அவன் வீட்டிற்கு செல்ல வைப்பதை பற்றியே இருந்தது என் சிந்தனை. நான் சிள்வதை காது கொடுத்து கேட்கும் மனநிலையில் அவன் இல்லை என்பது அவனுடனான அடுத்த இரண்டு நிமிட உரையாடலில் தெரிந்தது. "சரி!! நான் சொல்ற நம்பருக்கு கால் பண்ணி கான்பிரன்ஸ்ல போடு!!” ரஞ்சித்தின் நமபருக்கு அவனை அழைக்க சொன்னேன். நான் கேட்டபோது அரை மனதுடன் ஒத்துக்கொண்ட ரஞ்சித், காண்பரான்ஸ் காலில் முழு மனதுடன் நடித்தான். நான் தான் மணியின் நிலையை எண்ணி சுக்கு நூறாக நொடிந்து போனேன். பின் இதற்கு மேலும் அவனை துன்ப படுத்த கூடாது என்று முடிவு செய்து "லைன்ல இருக்கியா?” குரலில் இருந்தா திடம் மனதில் இல்லை எனக்கு. "இன்னும் கால் டிஸ்கனெக்ட் ஆகல!!, அதனால நீ கேட்டுக்கிட்டு கேட்டிருப்பேன் நம்புறேன்!!” "சொல்லு!! லைன்ல தான் இருக்கேன்!!” அவன் குரலில் இருந்த உறுதி என்னை ஏதோ செய்தது. "நான் சொன்னது உண்மைனு இப்ப நம்புவன் நினைக்கிறேன்!! உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னுதான், நான் இவ்வளவு நாள் ட்ரை பண்ணுனேன், நீ புரிஞ்சுக்கல!! உன்ன கஷ்டபடுத்த வச்சுட்ட, நீ எவ்வளவோ வருத்தபடுறியோ!! அதைவிட அதிகமாகவே நான் வருத்தப்படுறேன்!!. இதுல உன் மேல தப்பே இல்ல, ஃபர்ஸ்ட் நீ அதை புரிஞ்சுக்கோ!!. தப்பு எல்லாம் என் மேலதான்!!” "எப்படி மது எனக்கு புரியல?” வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல், மொபைலை சற்று விலக்கி, சில நொடி அழுதுவிட்டு, பின் என்ன சமண படுத்திக்கொண்டு பற்றி எரியும் தீயினுள் விழ போகும் குழந்தையை, எட்டி உதைத்தது காப்பாற்ற எண்ணும் தாயின் மன நிலையில்தான் நான் இருந்தேன். எட்டி உதைக்கும் போது அவனுக்கு வலிக்கும் என்பதை காட்டிலும், பொசுக்கி சாம்பலாகும் உண்மை என்னும் தீ இடமிருந்து அவளைக் காப்பாற்ற எட்டி உதைப்பதை ஒரே வழி என்று உணர்ந்து, வேறு வழி இல்லாமல் உதைத்தேன். "உனக்கு தெரியல நீ எவ்வளவு பெரிய பணக்காரன்னு!! அதுவும் இல்லாம என்னோட நாலு வயசு சின்னப் பையன்!! இந்த இரண்டும் ஒரு பொண்ண எவ்வளவு இன்செக்குர்டா பீல் பண்ண வைக்கும்னு உனக்கு தெரியாது!! மறுபடியும் சொல்றேன், தப்பு உன்னோடு கிடையாது!! என்னோடது தா......!!” முடியாமல் மீண்டும் அழுதேன். ஆனால் அவன் விடுவதாய் இல்லை, "நீ நேஷனல் விளையாடுறதற்கு, மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே, இந்த இன்செக்யூரிட்டி எனக்கு வந்துடுச்சு. நீயே யோசிச்சு பாரு, அக்கா மாதிரி உன் கூட பழக ஆரம்பிச்சு, இப்போ உன்னை உன்னை லவ் பண்றேன், எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைங்க, அப்படின்னு நான் கேட்டா, உன் காசுக்காகதான் உன்னை மயங்கிட்டேன் ஊர் சொல்லும்!!. ஆனா, உன்னை கஷ்டப்படுத்த என்னால முடியல, அதான் உண்மை!! இதெல்லாம் சரியாயிரும்னு, உனக்குச் சொன்ன மாதிரியே, எனக்கு நானும் சொல்லிக்கிடேன்!!. அது எல்லாமே இங்கே டெல்லி வர்ற வரைக்கும்தான், ரஞ்சூவ பார்க்கிறது வரைக்கும் தான்!!. அவன் கூட பழகுனதுக்கு அதுக்கப்புறம், தான் நமக்குள்ள இருந்தது லவ் இல்லன்னு எனக்கு புரிஞ்சது!!” "உனக்கே தெரியும் என் தம்பி பொறந்த மூணு மாசத்துலயே இறந்துட்டான்னு!! சிங்கிள் சைல்ட வளர்ந்த எனக்கு, நீ கிடைச்சதும் உன் மேல பாசம் வச்சேன்!!. திடீர்னு ஜினாலிய லவ் பண்றனு நீ சொன்னதும், எனக்குள் ஒரு பயம், எங்கே நீ யாரையாவது லவ் பண்ணுனா, என்ன விட்டு விலகி போயிருவியோனு!!. என்ன செய்றதுன்னு தெரியாம, உன் மேல இருந்த பொசசிவ்னஸ் லவ்வுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்!!. அதே மாதிரிதான் உனக்கும், நான் சொல்ற வரைக்கும் நீ என்ன அப்படி பார்த்தது கிடையாதுனு எனக்கு தெரியும்!! தேவையில்லாம நான் தான் உன்னை குழப்பிவிட்டுட்டேன்!!. உண்மையைச் சொல்லணும்னா பிளான் பண்ணி உன்னை என்ன லவ் பண்ண வச்சேன்!! நீ ரெஃப்யூஸ் பண்ணக்கூடாதுனு தான் அன்னைக்கே உன்கூட ...... .” தொடர முடியாமல் அழுதேன். தன் காதலை தானே கொச்சை படுத்திக்கொள்ளும் நிலையை விட கொடுமையானது என்று உலகில் ஒன்று இருக்க முடியாது. கடந்ததுதான் ஆக வேண்டும் என்று எனக்கு நானே கொடுக்க வேண்டும் என்று நினைத்த தநனை நினைவில் நிறுத்தி, தொடர்ந்தேன். "அதனால வந்த வினை தான் இது. உனக்கு தோணும், பின்ன எதுக்கு எங்க அம்மாகூட நான் சண்டைபோட்டேன்னு? ஃபர்ஸ்ட் நான் டெல்லியில் ஜாயின் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கல, எங்கே நான் அவங்களை விட்டு விலகிபோயிருவேனோனு பயந்து, எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும் முடிவு பண்ணிட்டாங்க!!. ரஞ்சூ ஃபேமிலி நிலைமை சரி இல்லை, இப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது!!. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அப்படி அம்மாகிட்ட கோபப்பட வேண்டியதாப்போச்சு!!. எனக்கு தெரியுது, நான் ரொம்ப சுயநலம் பிடிச்சவ. ஆனால் உண்மையிலேயே சொல்றேன், உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன்!!” "என்ன தப்பானவளா காட்டி, என்ன நீ வெறுக்கனும்னு நினைச்சேன்!!. என்ன நீ போர்ஸ் பண்ணு அன்னைக்குகூட, உங்கிட்ட எப்படியாவது உட்கார்ந்து தெளிவா பேசணும்னு நினைச்சு தான் வந்தேன்!!. ஆனா என்னனாமோ நடந்திருச்சு!!. இப்பவும் நான் உன்ன லவ் பண்றேன்!! ஒரு பிரண்டா!! என் வாழ்க்கையில் எப்பவுமே உனக்கு ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும்!!. ஏற்கனவே அம்மாவை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்!! நீயும் போய் அவங்ககிட்ட ஏதாவது கேட்டு அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாதே!!. ப்ளீஸ் அங்கிருந்து போயிடு!!. வீட்டுக்கு போ!!. சாரி டா!!” என்று குரல் தழுதழுக்க முடித்தாள். "பாப்பா!!” ஒரே சொல்லில் என் உறுதியை எல்லாம் உடைத்தேன். "இங்க போடிங் பண்ண கூப்பிடுறாங்க!! கிளம்புறேன்!! டைம் ஆச்சு!!” என் மீதே நம்பிக்கை இல்லாமல், எங்கே உண்மையை எல்லாம் சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் அழைப்பை தூண்டிக்க முயன்றேன். "அவ்வளவுதானா?” அவன் கதற, “ஆண்டவா எங்கள என் இப்படி சித்ரவதை படுததுற, எதுக்கு எங்களுக்கு இப்படி ஒரு தண்டனை என்று!!” என் உள்ளமும் கதற, அவனுடன் சேர்ந்தது வாய்விட்டு அழக்கூட வழி இல்லாமல் அழுதேன், சத்தமில்லாமல். “யாரு உள்ள?” என்று நான் இருந்தா கழிவரையின் கதவு தட்டப்பட, அழுகையை அடக்கி, "இட்ஸ் ஓவர் மணிகண்டன்!!. புரிஞ்சுக்கோ!!” துண்டித்தேன், உயிரோடு என்னையிம் அவனையும். கலங்கிய கண்களுடன் வேலயே வந்த என்னை கேள்வியுடன் பார்த்த பணிப்பெண்ணை கண்டு கொள்ளாமல், முகம் கழுவிவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன். *************
07-12-2020, 11:13 PM
டெல்லியில் எனது விடுதியில், எனது அரயில் இருந்தேன்.
விமானத்தில் ஏறியதும் அனைத்து வைத்த அலைபேசியை உயிர்பிக்க தைரியம் இல்லாமல், இப்படியே காற்றில் கரந்தது விட மாட்டேனா என்ற எண்ணங்களை எல்லாம் மீறி, அவன் அவனது வீட்டில் பாதுகாப்பாய் இருக்கிறானா என்பதை தெரிந்து கொள்ள துடித்த மனதை, அடக்க வழி தெரியாமல், தொடு திரையை வெறித்திருந்தேன். அவன் நலம் அறியாமல் என் மனம் அடங்காது என்று உணர்ந்து, நடுங்கிய கைகளை காட்டிலும் நடுங்கும் மனதுடன் அலை பேசியை உயிர்பித்தேன். என்னில் அடங்கா அவனது அழைப்பின் நோட்டிபிகேஷன் வர, பொறுமை இல்லாமல் அவனுக்கு அழைத்தேன். அழைப்பு எடுக்க படமால் போகவே, என் மூளை தேவை இல்லாத அத்தனை வாய்ப்புகளை சிந்திக்க, அதில் ஒன்று கூட எனக்கு ஆறுதல் கொடுப்பதாக இல்லை. பொறுமை இல்லாமல் மீண்டும் அழைக்க, மனமோ, இந்த ஜன்னலின் வழியே குதித்து என்னை கொன்று விடு என்று அரை ஜன்னலின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தது. எடுக்க படஅத அழைப்பு அடித்துக் கொண்டிருக்க, மூச்சைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக ஜன்னலை நோக்கி நடந்தேன், நான், அழைப்பு எடுக்கப்பட்டது "ஹலோ!!” “...................” பதிலில்லை "ஹலோ!!” அவனது குரலை கேட்க பரிதவித்தேன், “...................” உயிர் கொள்ளும் அமைதி "ஹலோ!!.... டேய்!! ஹலோ!!” பொறுமையில்லாமல் நான் கத்த, என் பார்வை ஜன்னலைத்தாண்டி, மூன்றாம் தளத்தில் இருந்து தரையில் விழுந்தது. “...................” மூச்சின் சத்தம். "ஹலோ!! ஏன்டா என்னை இப்படி சித்திரவதை படுத்துற!!” அடக்கமாட்டாமல் அழு ஆரம்பித்தேன். "ஹலோ!!” என்ற அவனது சத்தம் கேட்டதுதான், நின்ற என் இதயம் துடிக்க ஆரம்பித்தது. "ஹலோ!!” "தங்கியிருக்கிற அட்ரஸ் சொல்லு!!” "இப்போ எங்க இருக்க?” பதட்டமானேன். "இன்னும் ஊர்ல தான் இருக்கிறேன்!!, அட்ரஸ் சொல்லு, காலைல வர்றேன்!! உன்னை நேர்ல பாக்கணும்!!” "ப்ளீஸ்!! its over!! புரிஞ்சுக்கோ!!” என் மனதின் என்ன ஓட்டத்திற்கு மாறாக மன்றாடினேன் அவனிடம். "மது!! என்னால முடியல மது!!” கெஞ்சினான். “...................” உடைந்தது போனேன். "நீ இல்லாம.... எப்படி பாப்பா!!” அழுதான். “...................” உருக்குலைந்து போனேன். என்னை வேண்டி அவன் கெஞ்சுவது, அவனை நான் விலக்குவதும், என் வாழக்கையில் உண்மையிலேயே நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறினேன், சத்தமில்லாமல். "நெ....நெஜமாவே, முடிஞ்சு போச்சா!!” “...................” என்னை வார்த்தகளால் வெட்டிப் போட்டான். "இதுக்கு ஒரு முடிவு!!, I want a proper closure!! நீ இப்ப தெளிவா இருக்கிற மாதிரியே, என்னையும் தெளிவாக்கு, போதும்!!” அவன் விடுவதாய் இல்லை சூழ்நிலையின் பெயராலோ, ஆற்றாமை காரணமாகவோ, தாயினால் தண்டிக்கப்படும் குழந்தை, அழுகையுடன் தன்னை அடித்த தாயிடமே ஆறுதல் பெற்றுவிடும் தவிப்போடு , தன் அன்னையை நாடுவது போல, அவன் திரும்பத் திரும்ப ஆறுதல் தேடி என்னிடமே வர, சினம் தீரா தாயைப் போல மீண்டும் மீண்டும் அவனைத் தண்டித்து என்னை நானே துன்புறுத்திக் கொண்டு இருந்தேன். மனதை கொஞ்சம் திடப்படுத்தினேன். முடியாத பட்சத்தில் கடைசி ஆயுதமாய் உபயோகிக்க வேண்டும் என்று முடிவு செய்ததை, உபயோகித்தேன். "ஏன், நீ என்கிட்ட "ஐ லவ் யூ!!” சொன்னதே இல்லன்னு யோசிச்சு பாத்துருக்கியா?” "நேர்ல பேசலாம்!! நீ...... நீ தங்கியிருக்க அட்ரஸ் அட்ரஸ் சொல்லு!!” அவனின் பதற்றம் எனக்கு தெம்பை கொடுக்க, எனோ அவனை காயப்படுத்த போகிறோம் என்பதை எண்ணாமல், என் திட்டம் வேலை செய்யும் என்று ஒரு எண்ணம் என் மூளையில். "நேர்ல வந்தாலும் எதுவும் மாறப் போறது இல்ல!!” "பரவால்ல,கடைசியா, உன்ன ஒரு தடவ பார்க்கணும்!! என் முகத்த பார்த்து இதேயே சொல்லு, அது போதும் எனக்கு!!” "உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு பாக்குறேன்!!, உனக்கு அது புரிய மாட்டேங்குது. சரி நல்ல கேட்டுக்கோ, நான், உன்ன லவ் பண்ணுனேனா? இல்லையாங்குறது இருக்கட்டும்!!, நீ என்னை உண்மையாவே லவ் பண்ணுனியா?” எனோ மிகவும் தெளிவாக உணர்ந்தேன். "நான் எத்தனையோ தடவ கெஞ்சியும், உன் வாயிலிருந்து ஒரு தடவையாவது "ஐ லவ் யூ!!”ன்னு வந்துருக்கா?, நான் லவ்வ சொன்னதுக்கு அதுக்கப்புறமும்!!, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட!!, என் பக்கத்துல இருக்குறதுக்கே கில்டியா பீல் பண்ணவன் தான நீ?” உதடு துடிக்க, அடக்க மாட்டாமல், சத்தமில்லாமல் அழுதேன். யாரவது என்ன சைட் அடிச்சா கூட, எனக்கு பத்திகிட்டு எரியும், அப்படி பாக்குறவங்கள பார்வையாலேயே எரிச்சுறுவேன்!!. ஆனா நீ, எவ கை கொடுத்தாலும், அவ கைய புடிச்சி குலுக்கிகிட்டு, எவ பார்த்தாலும், திருப்பி பல்ல காட்டிகிட்டு தான் தெரிஞ்ச? யாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்கில வச்சு, நீ கை வச்ச இடத்தில கை வைப்பானா? இதுக்கு மேலயும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல!!” படபடவென்று , இருக்கும் மனஉறுதி குறையும் முன், தற்கொலை செய்ய செயல்படும் மனிதனின் வேகத்தில் செயல்பட்டேன். "போ..........போதும்!!” அவன் அழுகை என்னை சற்று ஆட்டிப் பார்க்க, "இல்ல, நான் இன்னும் பேசிமுடிக்கல, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லணு தோணும், இன்னைக்கே இத முடிச்சுக்கலாம். I too want proper closure too this!! மூணு மாசமா நாங்க லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருக்கோம். இன்னும் பத்து நிமிஷத்துல, நான் வீட்டுக்கு போயிடுவேன்!! வீடியோ கால் பண்றேன்!! உன் கண்ணால பாத்து தெரிஞ்சுக்கோ!!, அது ரெக்கார்ட் பண்ணி என்ன வேணாலும் பண்ணிக்கோ!! உனக்கு நான் பண்ண தப்புக்கு தண்டனையா நெனச்சுக்கிறேன்!!” மொத்தமாக கொட்டிவிட்டு, அழைப்பை தூண்டித்தும், அப்படியே துவண்டு விழுந்தது "ஓ" வென்று சத்தமிட்டு அழுதேன். பின் ஈடுதியில் இருக்கிறேன் என்று நினவுக்கு வர, கையில் கிடத்த துணையை, வாயில் தினித்துக் கொண்டு அழுதேன். "போ..........போதும்!!” என்று அவன் அழுகையுடன் கெஞ்சியதே என் எண்ணத்தில் ரீங்காரமிட, அவன் துடித்துப் போயிருப்பான் என்று எண்ணம் தோன்ற, தலையில் அடித்துக்கொண்டு அழுதேன். தீடிர் என்று ஒரு ஆவேசம் என்னுள், போதும், வெட்கம் கெட்டு என் தாயும், அவன் தந்தையும் நடந்து கொள்ள, நாங்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்றே ஆவேசம். வருவது வரட்டும் என்றே மனதில் ஒரு எண்ணம் தோன்ற, உடேன அழைத்தேன் அவனுக்கு, கால் கட்டானது. மீண்டும் அழைத்தேன், ஸ்விட்ச் ஆஃப் என்று வர, என் இதயத்துடிப்பு பல மடங்காக எகிற, இருப்பு கொள்ளாமல் கோயம்புத்தூர் செல்வதென்று முடிவு செய்தது, அறையில் இருந்து வெளியேறும் போதுதான், தடுமாறி படிகளில் உருண்டு கீழே விழுந்தேன். ஓடிந்து விட்டது போல ஒரு வலி இடது காலில், வலது பக்கம் நெத்தியில் இருந்து குபுகுபுவென ரத்தம் வெளியேற, அடுத்த சில நொடிகளில் உணர்விழந்தேன். உணர்வு பெற்ற போது மறுநாள் காலை எட்டு மணி, அருகில் இருந்தான் ரஞ்சித். "இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டவனிடம், "மொபைல்!! மொபைல்!!” பிதற்றினேன். அவனது மொபைல்லை எனக்கு தர, உடனே மணிக்கு அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வர, என் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவன் அம்மாவிற்கு அழைத்தேன், அவர்கள் அவன் கல்லூரி சென்றிருப்பான் என்று சொல்ல, உடனே பிரதீப்புக்கு அழைத்து, மணியை நெற்றில் இருந்து காணவில்லை என்று அவன் அம்மா சொன்னதாகவும், கொஞ்சம் அவனை தேடச் சொன்னேன். இருப்பு கொள்ளாமல் எழுந்து, அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அனுமதிக்க மறுத்த நர்ஸ்ஸிடம் நான் செய்த கலவரத்தால், ஊசியின் உதவுயுடன் தூங்க வைக்கப் பட்டேன். *********** "ரொம்ப பாவம் யா இந்த பையன்!! அவன்கிட்ட பேசினேன், அவ்வளவு வலி குரல்ல, உனக்கு அடி பட்டிருச்சுனு தெரிந்ததும் அவ்வளவு பரிதவிப்பு அவனுக்கு!! வீட்டுக்கு போய்ட்டான், i think he is okay now, he understood its over!! முடிஞ்சா அவன, இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்தாதே!! மார்னிங் வர்றேன்!!" என் கையில் தொலைபேசியைத் கொடுத்த ரஞ்சித், மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறினான், "And one more thing!!" கதவை நெருங்கியவன், என்னை நோக்கித் திரும்பி பார்த்து. "தயவு செய்து இனிமேல் என்ன "ரஞ்சூ"னு கூப்பிடாதே!!" என்றவன் அறையின் கதவை சாத்திவிட்டு சென்று விட்டான். மயக்க மருந்தி வீரியம் குறைந்து எழுந்ததும், முன்பிருந்த ஆவேசம் இல்லை என்னிடம், நான் கண் விழித்ததுமே, "மணி வீட்டிற்கு சென்று விட்டான்" என்று ரஞ்சித் சொன்னது கூட காரணமாக இருக்கலாம். “ he understood its over” என்ற அவனது வார்த்தையே என்ன எண்ணத்தை கட்டி போட்டிருக்க, பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தேன். கதவு திறக்கும் சத்தம் என் நிலையை கலைக்க, என்னுடன் போராடிய நர்ஸ் தான் உள்ளே வந்தார். “are you feeling better!!” என்று கேட்டவரிடம் தலையசைத்தேன். எனக்கு எறிக்கொண்டிருக்கும் ட்ரிப்ஸ் அளவை சரி பார்த்துவிட்டு, வெளியேற எத்தணிக்கையில் “sorry sister!!” என்ற என்னை பார்த்து சினேகமாக புன்னைக்காய்தது விட்டு சென்றார்கள். அவனுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று நீண்ட மன போராட்டத்துக்கு பின், பிரதீப்புக்கு அழைத்தேன். அவன் நடந்ததை சொல்லி வருத்தப் பட, அவன் வைத்தும் மணிக்கு அழைத்தேன். “5 மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்!!” என்று சொல்லிவிட்டு, வைத்துவிட்டான். அவ்வளவுதான் அடைக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியென கொட்டியது. ஐந்து நிமிடத்தில் அழைக்கிறேன் என்றவன் அரைமணி நேரம் தாண்டிய பின் தான் அழைத்தான். "ஏன்டா இப்படி பண்ற!!" நான் அழகுகாயுடன் கேட்க, எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். "மது, நான் பேசுறேன்!!” நான் பேச முயல, குறுக்கிட்டான். சரி என்று தலையாட்டினேன். "கவலைப்படாத!!, கண்டிப்பா நான் தற்கொலை எல்லாம் பன்னிக்க மாட்டேன்!!” கசந்த சிரிப்புடன் கூறினான். ".....................” எனோ அவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன், எனக்கு பரீச்சியம் இல்லாத வெறுவனைப் போல் இருந்தான். "எனக்கு புரியுது!!, it's just...... am mourning!!, இந்த.... நெருக்கமா இருந்தவங்க செத்துப்போயிட்டா, கொஞ்சநாள் வருத்தப்படுவோம்ல, அந்த மாதிரி!! செத்துப்போன என் காதலுக்காக!! கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கேன்!!. கொஞ்ச நாள்ல சரியாயிடும், கவலைப்படாத!! முதல் முறையாக அவன் என்னை விலக்குவது போல் பேச, அதன் வலி தாங்காமல், முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதேன். "மது!!” அழைத்தான், கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தேன். "நைட் கோபத்துல மொபைல்ல ஓடச்சுட்டேன்!!, பீல் பண்ணாத!!, இனிமே அப்படி பண்ண மாட்டேன்!!” அத்தனை வழியையும் மறைத்துக் கொண்டு அவன் பேச, கண்ணைத் துடைத்தேன். "பா!.........” நிறுத்தினேன். அவன் உதடுகளில் ஒரு கசந்த சிரிப்பு. “You are an early bloomer!!................” மீண்டும் பேசமுடியாமல் தொண்டை அடைக்க, என்னை சமண படுத்திக் கொண்டேன். "உனக்கு டென்னிஸ்ல ரொம்ப பெரிய பியூச்சர் இருக்கு!!. தயவுசெய்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு!!. அதேமாதிரி, உங்க பிசினஸ பாத்துக்குற, பெரிய பொறுப்பு இருக்கு உனக்கு!!. You have to carry forward your family's legacy, அதுக்கு உன்ன தயார்படுத்திக்க!! நான் உனக்கு பண்ணின பாவத்துக்கு, முடிஞ்சா என்ன மன்னிச்சிடு!!, சாரி!! Its not your fault, we are just not meant to be!!” வந்த அழுகை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டேன். பின் சமாளித்து, அவனைப் பார்த்தேன். "தலையில என்ன ஆச்சு!!” "சின்னதா அடி!!” "ஸ்டிட்ச் போட்டு இருக்காங்களா?” இல்லை என தலையாட்டினேன். பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவனும் தொடுதிரையை பார்த்திருக்க, நானும் தொடுதிரையை பார்த்திருந்தேன். வாழ வழியில்லாமல் தன்னை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்ட தாய், தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று அனாதை விடுதியில் விட்டுவிட்டு, கடைசியாக ஒருமுறை தன் குழந்தையை ஆரத்தழுவதுபோல், அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, துண்டித்தான். "ஓ" என்று கதறி அழ ஆரம்பித்த அடுத்த நொடி, மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, போர்வையை பற்களால் கடித்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதேன். *****************
07-12-2020, 11:16 PM
நாளை அடுத்த பதிப்பு இருக்கும். சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுவின் பார்வையில் கொடுத்த பகுதியில் குறை இருந்தால் மன்னிக்கவும். மொத்த கதையையும் யோசித்துவிட்டேன். வாரத்தில் மூன்றில் இருந்து நான்கு பதிவுகள் கொண்டுக்க முயல்கிறேன்.
|
« Next Oldest | Next Newest »
|