நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#21
சாப்பிட்டு முடித்த பிறகு சமையல் அறையை ஒதுங்க வைக்க அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். அப்போது விதவிதமான கருவிகள் இருந்தன.

“அத்தை. இதை எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க?”
“நான் எங்கேம்மா வாங்கினேன்? எல்லாம் இவன் வேலைதான். எங்கே எதைப் பார்த்தாலும் என் ஞாபகம் வந்து வாங்கிட்டு வந்துடுவான். வாங்கிட்டு வர்றது மட்டுமல்ல. அதைப் பயன்படுத்தி காயும் வெட்டித்தருவான்.”
“நான் ஒன்னும் சும்மா வாங்கலை. அம்மா காய் வெட்டுறதுக்கு சிரமப்படறதைப் பார்த்த பிறகுதான் வாங்கிட்டு வந்தேன்.”
பேச்சு சுற்றி சுற்றி எப்படியோ மகேந்திரனைப் பற்றி வந்தது.
அவர் சொல்ல ஆரம்பித்தார்.
னிதாமணிக்கும் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் ஆகி ஓராண்டுக்குள் மகேந்திரன் பிறந்துவிட்டான்.
தாயை விட்டுப் பிரிய மாட்டான். எப்போதும் தாயின் முந்தானையைப் பிடித்தவாறேதான் இருப்பான். வெளியில் எங்காவது சென்றால் அவனது தாய்தான் அவனைத் தூக்கிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இரண்டாவது குழந்தை உருவானது. சரியான இடைவெளியில் தான் அடுத்த குழந்தை உருவானது.
முதல் குழந்தை என்பதால் மகேந்திரன் வயிற்றில் இருக்கும்போது என்ன குழந்தை என்று எதிர்பார்க்கவில்லை. குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்று இருவருமே எண்ணிவிட்டனர்.
ஆனால் அடுத்த குழந்தை என்றதும் வனிதாமணிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை அதிகாமாக இருந்தது.
ரவிச்சந்திரன் எந்த ஆர்வமும் காட்டவில்லை. சொல்லப்போனால் அவருக்கு அடுத்த குழந்தையே வேண்டாம் என்ற எண்ணம். இருவர் வீட்டிலுமே ஒற்றைக்குழந்தைகளாகப் போய்விட்டதில் வனிதாமணிக்கு மிகவும் வருத்தமே. அவருக்கு நிறைய சொந்தங்கள் புடை சூழ வாழ வேண்டும் என்ற ஆசை.
தங்களுக்குதான் கூடப்பிறந்தவர்கள் இல்லை. தாங்களும் ஒற்றைப்பிள்ளையாய் வளர்க்கக்கூடாது என்று அடுத்த குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதனால் இரண்டாவது குழந்தை உருவான உடன் மிகவும் சந்தோசப்பட்டார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தக் குழந்தை குறைப்பிரசவத்தில் இறந்துவிட்டது. அதுவும் அவர் ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை.

குழந்தையைக் கண்ட உடன் கதறி மயங்கிவிழுந்துவிட்டார் வனிதாமணி. அதன் பிறகு அவரது மனமும், உடல்நிலையும் தேற நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.   

அதுவரை மகேந்திரனை அவரது மாமியார்தான் பார்த்துக்கொண்டார்.

ஒருநாள் நாற்காலியில் சோர்வாக அமர்ந்திருந்தார். அப்போது மகேந்திரன் எட்டிப்பார்த்தான். அப்போதுதான் அவருக்கு சுரீரென்று உரைத்தது. நீண்ட நாட்களாக மகேந்திரன் அவரிடம் நெருங்கவேயில்லை.

மகனை நோக்கி கையை நீட்டியவர் அவனை தன்னருகே அழைத்தார். அவனும் தயக்கத்துடன் வந்தான். அம்மா அம்மா என்று தன் பின்னேயே அலைந்துகொண்டிருந்த அவனது தயக்கம் அவருக்கு குற்ற உணர்வைத் தந்தது. இறந்த குழந்தையை நினைத்துக்கொண்டு அவனைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி அவரைக் குன்ற வைத்தது.

மகனும் தன்னைவிட்டு விலகிப்போய்விட்டானே என்ற வருத்தம் அவரைச் சூழ்ந்தது.

தாயின் அருகே வந்த மகேந்திரன் “அம்மா. உனக்கு புண்ணு ஆறிடுச்சா?” கேட்டவாறே தன் பிஞ்சுக்கையினால் அவரது கன்னத்தில் தடவினான். அதிலேயே அவரது அனைத்து துன்பமும் போய்விட்டது. மகன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான். என்று நினைத்திருக்கையில்  அவன் தனக்காகதான் பிரிந்திருக்கிறான். என்று புரிந்ததும் நிம்மதி பிறந்தது. ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அவன் மீண்டும் எதற்காகவும் அன்னையை நாடவில்லை. அப்படியே அவனது தந்தை மாதிரியே அமைதியாய் இருந்துவிட்டான். அவனுக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்க மாட்டான். அவனைப் பார்த்துப் பார்த்து அவனுக்குப் பிடிப்பதை அவரே தெரிந்துகொண்டார்.



மறு குழந்தை வேண்டும் என்று அவர் அடம் பிடித்ததற்கு ரவிச்சந்திரன் அத்தனை எளிதில் சம்மதிக்கவில்லை.
ஆனால் கடைசியில் அவரது பிடிவாதம் வென்றது. யுகேந்திரன் பிறந்தான். ஆனால் சோதனையாக அவருக்கு தாய்ப்பாலே சுரக்கவில்லை.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
இரண்டாவது குழந்தை இறந்தபோது அவருக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்தது. அப்போது அதை நிறுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையினால் அவருக்கு இப்போது தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருந்தது. அவரும் என்னென்னவோ செய்துபார்த்தார்.

குழந்தை தாய்ப்பாலுக்கா அழும்போது அவரது இதயம் துடிக்கும். என்ன செய்வது?
புட்டிப்பால் குடித்து வளர்ந்ததால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தது. அதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவரது முழுக்கவனமும் இரண்டாவது குழந்தை மீதே இருந்தது. இந்தக் கால கட்டத்தில் மகேந்திரன் அவரைத்தேடும் சிறிது நேரத்தைக்கூட விட்டுவிட்டான். சமர்த்தாய் தானே குளித்துக் கிளம்பி பள்ளிசீருடையை அணிந்துகொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் என்ன சாப்பாடு இருக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டுத் தன் தந்தையுடன் பள்ளிக்குச் சென்றுவிடுவான்.
அவனுக்குப் பிடித்த சாப்பாடாக இருந்தால் நன்றாக சாப்பிட்டிருப்பான். இல்லை என்றால் சிறிதளவே உணவு உள்ளே இறங்கியிருக்கும்.

வனிதாமணியும் மூத்த மகனைக் கவனித்துக்கொள்ள எத்தனையோ முயற்சி செய்தார். ஆனால் அந்த நேரத்தில் இளையவனின் அழுகுரல் அவரை இழுத்துக்கொள்ளும்.

எப்போதாவது தாய்க்கு அருகில் வந்து தம்பியைத் தடவிப்பார்ப்பான்.

தம்பி மேல் அவனுக்கு எங்கே பொறாமை வந்து விடுமோ என்ற கவலையானார். இந்த மாதிரி சூழ்நிலைகள்தானே ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடுகின்றன.

அதனால் அவனிடம் தம்பியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்தார்.

அவனும் பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும் நேரத்தில் தம்பியோடு விளையாடுவான்.

சிறியவன் உரிமையோடு தாயின் மடியில் விளையாட மகேந்திரன் ஒதுங்கியிருந்தான்.

பெருமூச்சுடன் சொல்லி முடித்தார்.

பெரிய மகன் தன்னைவிட்டு விலகி விட்டான் என்ற வருத்தம் இன்று வரை அவருக்குள் இருக்கிறது.

“ஆரம்பத்தில் அம்மா என் மேல்தான் பாசமா இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனால் பாசம் எங்கேன்னு பின்னாடிதான் புரிஞ்சது.”

யுகேந்திரன் சொன்னதும் அவர் முகம் வாடிப்போனது.
“போடா. எந்த நேரத்தில் விளையாடறதுன்னு இல்லையா?”
அவனைக் கடிந்துகொண்ட கிருஷ்ணவேணி வனிதாமணியை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.

மகேந்திரன் தன்னைச் சுற்றி வேண்டுமென்றே ஒரு வேலியைப் போட்டுக்கொண்டு ஒதுங்கியிருக்கிறான்.

காலையில் கூட தன் அறையை விட்டு வெளியில் வரும்போது அவள் கீழ்க்கண்ணால் அவனைக் கவனித்தாள். அவன் தன்னைக் காணத்தான் காத்திருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை முதல்நாள் தன்னைக் கண்டதும் திட்டியது போல் இப்போதும் திட்டத்தான் காத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனைக்கவனிக்காத மாதிரி வந்துவிட்டாள்.

இப்போதுதான் அவன் தன்னிடம் வேண்டுமென்றேதான் அப்படி நடந்துகொண்டானோ என்று தோன்றியது.

அதன் பிறகுதான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது.

“அத்தை. உங்க பிள்ளை உங்களை விட்டு எங்கேயும் போகவில்லை. அதை நீங்க கூடிய சீக்கிரமே வரும்.”

அவள் சொல்ல அவர் முகம் பிரகாசமானது.
அது நடக்குமா?
Like Reply
#23
Ena nadakkum endru parpom.
I AM WAITING
Like Reply
#24
continue....
story is very nice
Like Reply
#25
Continue..... super story
Like Reply
#26
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 06 - ராசு

[Image: nivv.jpg]

அவள் அங்கே செல்வதில் அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் அவ்வளவாக விருப்பமில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகவும் அவளிடம் சொல்லிவிட்டனர்.


அதனால் எப்போதாவது தான் அங்கே செல்வாள்.

அதுவும் தங்கையின் விருப்பம் பற்றி தெரிந்த பிறகு அவளுக்குமே மாமா வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை.

அவளுக்கு சின்ன வயதில் இருந்தே மாமா மகன் மகேந்திரன் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு.

அவன் தனக்கு கிடைக்க மாட்டான் என்று தெரிந்த பிறகு அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வருகிறாள்.

ஆனால் மாமா குடும்பத்திற்கு தங்கை சரியானவளா என்று நினைக்கும்போது மனம் நிம்மதியை இழக்கிறது.

திருமணத்திற்கு முன்பே அவர்கள் திட்டமிடுவதைப் பற்றி நினைக்கையில் அருவெறுப்பாய் இருக்கிறது.

மாமா குடும்பத்தில் இருப்பவர்கள் எத்தனை பிரியமானவர்கள். என்னதான் மகேந்திரன் மனம் திறந்து தன் பிரியத்தைக் காட்டவில்லை என்றாலும் அவனது செயலில் இருந்தே அவனது பிரியத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

அதுவும் யுகேந்திரன். எத்தனை சூட்டிகையானவன்.

இப்போது அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் பெண்ணின் தலை இரண்டு மூன்று நாட்களாக தன் வீட்டில் உருட்டப்படுவது அவள் காதில் விழத்தான் செய்தது.

அவர்கள் பேச்சிலிருந்தே அவள் நல்லவளாகத்தான் இருப்பாள் என்று அவள் மனதிற்குத் தோன்றியது. இந்த நினைவு வந்ததுமே அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் கிளம்பிவிட்டாள்.

அவள் செல்லும் நேரத்தில் மகேந்திரனும் மாமாவும் இருக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும்.



அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே வீடு நெருங்கிவிட்டது.


காவலாளி அவளைக் கண்டதும் ஒரு புன்சிரிப்புடன் கதவைத் திறந்துவிட்டார்.



அவள் உள்ளே நுழைந்தாள்.



“அடடே. வா மதி. என்ன இத்தனை நாளா ஆளையேக் காணோம்.”



வனிதாமணி அவளை வரவேற்றார்.



“அத்தை. நல்லாருக்கீங்களா அத்தை. யுகேந்திரன் எங்கே?”



“வீட்டில்தான் இருக்கிறான்மா. இதோ கூப்பிடறேன்.”



“யுகா.”



அவர் அழைக்கும்போதே மாடிப்படியில் இறங்கி வந்துகொண்டிருந்த யுகேந்திரன் அவளைக் கண்டுவிட்டான்.



“மதிக்கா. வா வா வா. உனக்கு இப்பதான் இந்த யுகாவோட நினைப்பு வந்துச்சா?”



செல்லக்கோபத்துடன் கேட்டவாறே வந்த அவனை பாசத்துடன் பார்த்தாள். கூடவே வந்த கிருஷ்ணவேணியை ஆவலுடன் பார்த்தாள். அவளும் அதே ஆவலுடன் அவளையேப் பார்த்துக்கொண்டு வந்தாள்.



“வாங்க மதிக்கா.”



புன்னகையுடன் வரவேற்றாள். சாருமதி அவளை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்டாள்.



“கிருஷ்ணா. உனக்கு இங்கே பிடிச்சிருக்கா?”



கிருஷ்ணவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது.



அக்கா என்று அழைத்ததற்கு சாருலதா எப்படி நடந்துகொண்டாள். இப்போது அவளது சகோதரி என்ன மாதிரி பிரியத்துடன் நடந்துகொள்கிறாள்.



“ரொம்ப பிடிச்சிருக்குக்கா.”



அன்றைய பொழுது மிகவும் கலகலப்புடன் சென்றது.



சாருமதி அதிகமாக பேசவில்லை என்றாலும் அவர்களின் பேச்சை ஒரு மென் சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தாள்.



பொழுது போனதே தெரியவில்லை.



மாலையாகிவிட்டது.



சாருமதிக்கு மகேந்திரனைப் பார்த்துவிட்டுச் சென்றுவிடலாம் என்ற எண்ணமிருக்கவே அங்கேயே இருந்துவிட்டாள்.



அவளது கெட்ட நேரம் அன்று மகேந்திரனுடன் சாருலதாவும் வந்துவிட்டாள். அங்கே தனது சகோதரியைப் பார்த்ததும் அவள் முகம் அஷ்டகோணலாகியது.



மகேந்திரன் அவளைப் பார்த்து வரவேற்பாய் சிரிப்பை சிந்திவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.



அந்த சிரிப்பே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது.







“நீயா? இங்கே எங்கே வந்தே?”


கோபம் கொப்பளிக்க கேட்டாள் சாருலதா.
Like Reply
#27
சும்மா அத்தையைப் பார்க்க வந்தேன்.”

தான் என்னவோ தவறு செய்துவிட்டது போல் தலைகுனிந்தவாறே பேசிய சாருமதியைக் கண்டதும் யுகேந்திரனுக்குக் கோபம் வந்தது.
“ஏன் சாருக்கா நீ வரும்போது மதிக்கா மட்டும் வருவது தப்பா?”
அந்த வார்த்தைகள் நாராசமாய் அவள் காதில் ஒலித்தது.

அவள் மனதிற்குள் நீயே வரும்போது அவள் வந்தால் என்ன என்ற அர்த்தத்தில்தான் அவன் கேட்டான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவள் எத்தனை கூறியும் அவன் அவளை அக்கா என்றே அழைக்கிறான். அதுவும் அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அப்படி அழைக்கிறான்.

“சரி. நான் கிளம்பறேன்.”

சாருமதி கிளம்பினாள்.

“இரு மதிக்கா. சாருக்கா இப்பதானே வந்திருக்கா. எப்படியும் அவகிட்ட வண்டி இல்லை. உன்னோடவே வந்திருவா. கொஞ்ச நேரம் இரு. அம்மா அவளுக்கு ஏதாவது கொடுக்கட்டும்.”

என்று அவளைத் தடுத்துவிட்டான்.

சாருலதா எதுவும் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தாள். அவன் சொல்வது எல்லாம் சரியென்பது போல் பெரியவர்களும் எதையும் மறுத்துச்சொல்லவில்லை.

எப்போதும் சாருலதா மகேந்திரனுடன் வரும்போது பெரும்பாலும் அங்கேயே தங்கிவிடுவாள். இல்லை என்றால் ஓட்டுநர் அவளைக்கொண்டு போய் அவளது வீட்டில் விடுவான். அதை எல்லாம் அந்த வீட்டுப் பெரியவர்களும் இதோ இந்த யுகேந்திரனும் அறிவான்தோனே?

அப்படி இருக்கையில் இன்று என்னவோ சாருமதியை விட்டால் அவளுக்கு வீட்டுக்குப்போக வழியில்லை என்பது போல் பேசுகிறானே?

அதைப் பார்த்துக்கொண்டு பெரியவர்களும் சும்மா இருக்கிறார்கள்.
“இந்தாம்மா சாரு.”

வனிதாமணி அவளுக்கு எதையோ குடிப்பதற்கு கொண்டு வந்துகொடுத்தார்.


‘இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.’

மனதிற்குள் அவரைத் திட்டிக்கொண்டே கை நீட்டி வாங்கி என்னவென்றே உணராமல் பருகினாள்.

அதன் பிறகு சாருமதி விடைபெற்றுக்கிளம்ப வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.

எப்படியும் உரிமையோடு அந்த வீட்டிற்குள் நுழைந்த உடன் மற்றவர்களை கவனித்துக்கொள்ளலாம். அதுவும் அந்த யுகேந்திரனைக் கண்டிப்பாக கவனிச்சே ஆகனும்.

இப்போதைக்கு இந்த மதியைக் கவனிக்க வேண்டும். இந்த அம்மாவைச் சொல்லனும். அவங்க ஏன் அவளை அனுப்பி வச்சாங்க? அவ ஏதாவது பொய் சொல்லிட்டு வந்திருப்பா.

‘மகேன் அத்தானைப் பார்த்ததும் அவள் கண்களில் வந்த மின்னலே அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிய வைத்து விட்டது. அவளுக்கு என்ன தைரியம். என் மனது பற்றி தெரிந்தும் அவள் இப்படி அவனைப் பார்த்தது தவறு. ஒருவேளை அத்தானைப் பார்க்கத்தான் அவள் இன்று வந்ததோ? இனி இவளைச் சும்மா விடக்கூடாது. அம்மாகிட்ட சொல்லி உடனே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லனும். இவ வீட்டை விட்டுப்போனாத்தான் எனக்கு நிம்மதி.’

உள்ளுக்குள் கருவிக்கொண்டவள் தானே ஸ்கூட்டியை ஓட்ட பின்னே சாருமதி அமர்ந்துகொண்டாள்.

வங்க ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்க யுகா?”

சகோதரிகள் இருவரும் கிளம்பியதும் அவர்கள் இருவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.

அப்போதுதான் கிருஷ்ணவேணி கேட்டாள்.

“அவ எப்போதுமே இப்படித்தான் கிருஷ்.”

“பாவம் மதிக்கா. தன் தங்கைகே இப்படி பயப்படறாங்க.”

“அவ வீட்டில் அவ ராஜ்ஜியம்தான். அவ சொல்லுக்கு இருக்கிற முக்கியத்துவம் மதிக்காவுக்கு கிடையாது. அதுதான்.”

“உனக்கு ஏன் சாருக்காவைப் பிடிக்கலை?”

அவள் கேட்டதும் அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.

“உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ம்கூம்.” அவள் தலையாட்டினாள்.

“ஏன்?”

“ஏன்னு தெரியலை. முதன் முதல்ல அவங்களைப் பார்க்கும்போது அவங்க நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அது மட்டும்தான் காரணமா? இல்லை. ஒருவேளை உனக்குப் பிடிக்காததினால் இருக்கலாம்.”

சொன்ன தோழியைப் பெருமையுடன் பார்த்தான்.

“ஆமா. அவங்க உன் அத்தைப் பெண்தானே? நீ ஏன் அவங்களை அக்கான்னு சொல்றே?”

“அக்கான்னு சொல்றதே அவளை வெறுப்பேத்ததான்.”



“அவங்க உன் அண்ணனிடம் பழகுற விதத்தைப் பார்த்தால் அவங்களோட விருப்பம் வேற போல் தெரியுதே?”
“அப்படி அவ ஆசைப்பட்டா போதுமா? என் அண்ணன் விருப்பப்படனுமே?”
Like Reply
#28
ஏன் உன் அண்ணனுக்கு அதில் விருப்பமில்லையா?”

“அது தெரியாமல்தானே குழம்பிக் கிடக்கிறேன். அவனுக்குப் பிடிச்சதுன்னா வேறு வழியில்லாம ஏத்துக்க வேண்டியதுதான். ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணினா அவனோட வாழ்க்கை சந்தோசமா இருக்குமான்னு சந்தேகம்தான்.”
“அவங்க உண்மையிலேயே உன் அண்ணனை விரும்பினா என்ன பண்றது?
அப்படி இருந்தா உண்மையிலேயே சந்தோசம்தான். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு.”

“மதிக்கா உன் அண்ணியா வந்தா உனக்குப் பிடிக்குமா?”

அவள் கேட்டதும் அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.

“என்ன பதில் சொல்லாமல் இருக்கிறே?”

“மதிக்கா ஆசைப்பட்டாலும் அந்த சாரு அதை நடக்க விடமாட்டா. போராடி ஆசைப்பட்டதை பெறும் குணமும் மதிக்காவுக்கு கிடையாது. அவ தன் பெத்தவங்களை மீறி எதுவுமே செய்யமாட்டா. அவ பெத்தவங்களும் சாருவோட பேச்சைத்தான் கேட்பாங்க.”

வருத்தமுடன் சொன்னான்.

“உண்மையான காதலுக்கு போராடி வெல்ற சக்தி உண்டு.”

“அது தெரியும். ஆனால் அதை மதிக்கா செய்வாளாங்கிறதுதான் என் சந்தேகம்.”

அவள் அமைதியாகிவிட்டாள்.

இருவரும் சிறிது நேரம் காற்றாட நடந்தனர்.

மகேந்திரன் தனது அறையில் இருந்து ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்க்க அவர்கள் தெரிந்தார்கள்.
சிறிது நேரம் இலக்கில்லாமல் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் ஜன்னலை விட்டு விலகினான்
Like Reply
#29
இரவு உணவுக்கு வரும்போது இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு சிரித்துப்பேசியவாறு இருந்தனர்.

அவன் பேசாமல் போய் அமர்ந்தான். பெரியவர்கள் இருவரும் வர அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
சாப்பிட்ட பிறகும் கிருஷ்ணவேணி கூடவே அவளது அறைக்குச் சென்றான் யுகேந்திரன்.
தனது அறைக்குள் நுழைந்த மகேந்திரனுக்கு இரவு வணக்கம் கூறியபடியே அவளது அறைக்குள் நுழைந்தான்.
பதில் வணக்கம் கூட எதிர்பார்க்காது தம்பி எதிர் அறைக்குள் நுழைந்துவிட தனது கட்டிலில் வந்து படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
தனக்குத்தானே எத்தனை கெஞ்சி பார்த்தும் உறக்கம் அவனுக்கு வரவேயில்லை. அதன் பிறகு எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை.
காலையில் வழக்கம்போல் எழுந்துவிட்டான். இன்று விடுமுறை நாள். இருந்தும் எழுந்துவிட்டான்.
காலையிலேயே தம்பியின் குரல் எதிர் அறையில் கேட்டது. அவன் இத்தனை சீக்கிரம் எழுந்திரிக்கவே மாட்டான்.
பரவாயில்லை. அவள் வந்ததினால் இத்தகைய நல்ல மாற்றம் நிகழ்ந்திருந்தால் அவளது வருகை நல்ல விசயம்தான்.
குளித்துக்கிளம்பி கீழே வந்தான். அதற்குள் அவர்கள் இருவரும் கிளம்பி வந்திருந்தனர்.
காலை உணவு முடிந்ததும் மீண்டும் வந்து அமர்ந்தனர். அப்போது வனிதாமணி சமையல் அறைக்குள் வேலை இருப்பதாக கிளம்ப அவரை அங்கேயே அமர்த்தினாள் கிருஷ்ணவேணி.
“அத்தை. கொஞ்சநேரம் இங்கேயே உட்காருங்க. எப்போதும் வீட்டிலே வேலையேப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. கொஞ்ச நேரம் உங்களுக்காக ஒதுக்குங்க.”
அவரும் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
அவரிடம் அவரது சின்ன வயது பற்றிக் கேட்க அவரும் அதற்குள் ஆழ்ந்துவிட்டார்.
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில் அவர் மனம் லேசானது. தனது இளமையே திரும்பிவிட்டது போல் ஒரு சமயம் அவருக்குத் தோன்றிவிட்டது.
எப்போதும் தனிமையிலேயே அவர் நாட்களைக் கழித்ததுதான் அதிகம்.
யுகேந்திரன் வீட்டில் இருக்கும்போது அந்த தனிமை உணர்வு காணாமல் போய்விடும்.
இப்போதும் அதை உணர்ந்தார்.
“அத்தை. இனி ஒவ்வொரு விடுமுறை நாளும் நாம இப்படி பேசிக்கிட்டு இருக்கனும். சரியா?”
என்று கேட்டாள்.
ரவிச்சந்திரனும் மகேந்திரனும் எந்த பேச்சிலும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
மறுநாள் இருவருக்கும் கல்லூரி ஆரம்பமாகிறது.
அதனால் அன்றைய இரவு தாமதப்படுத்தாமல் இருவரும் சீக்கிரமே உறங்கச்சென்றுவிட்டனர்.
த்தை. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.”

வனிதாமணியின் கால்களில் விழுந்தாள் கிருஷ்ணவேணி.
எளிய கைத்தறி சுடிதார் அணிந்திருந்தாள்.

“நல்லாரும்மா.”


மனதார அவளை ஆசிர்வாதம் செய்துவிட்டு அவளைத் தூக்கினார்.

“பார்த்து போங்க.”

என்று மகனிடமும் அவளிடமும் கூறினார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினர்.


அவனோடு செல்வாள் என்று மகேந்திரன் எதிர்பார்த்திருக்க அவள் தன் ஸ்கூட்டியை எடுத்தாள். யுகேந்திரன் தனது வண்டியை எடுத்தான்.



ன்று மாலை.



மகேந்திரன் சீக்கிரம் திரும்பிவிட்டான்.



அவன் வீட்டிற்குள் நுழையும்போது யுகேந்திரன் மாடியில் இருந்து வேகமாக கீழே ஓடிவந்தான்.



என்ன அவசரம்? மெதுவாக வந்தால் என்ன? என்று மனதிற்குள் தம்பியைத் திட்டியவாறே உள்ளே விரைந்தான். அதற்குள் அவன் வீட்டின் பின்பக்கம் சென்றுவிட்டான்.



மகேந்திரன் தனது அறைக்குச் செல்வதற்காக மாடியில் ஏற ஆரம்பிக்க எதிர்பாராத விதமாய் அவன் மீது வந்துமோதினாள் கிருஷ்ணவேணி. கீழே விழ இருந்தவளைத் தாங்கிப் பிடித்தான்.



அவனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோன்று உணர்ந்தான்.



அது தப்பு என்று அறிவு இடித்துரைத்தது. அவளை விடு என்று கட்டளையிட்டது. ஆனால் மனமோ அந்த அண்மையை விரும்பியது. அவன் மனக்கண் முன் தம்பியின் முகம் வந்து போனது.



அவள் முகத்தைப் பார்த்தான். அவள் அவனுக்குப் பயந்து கண்களை மூடியிருந்தாள்.



அவன் விட்டால் விழுந்துவிடுவாள்.

அவளைத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான்.

“சாரி.” என்றான்.


அவள் கண்களைத் திறந்தாள். அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.



அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தனது அறைக்கு விரைந்தான்.



தன்னைத் திட்டுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனோ சாரி என்றுவிட்டு செல்கிறானே?
அவனை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
Like Reply
#30
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 07 - ராசு

[Image: nivv.jpg]

ன் அறைக்குள் நுழைந்த மகேந்திரனுக்கு தன் மீதே கோபமாய் வந்தது.

‘அவள்தான் தெரியாமல் வந்து இடித்துவிட்டாள் என்றால் எனக்கு எங்கே அறிவு போனது?’


அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு இரண்டு திட்டு திட்டிவிட்டு வந்திருந்தால் இப்போது இந்தக் குழப்பம் வந்திருக்காது.’


‘ஏன் அவளை அந்த நேரத்தில் திட்டவில்லை. எப்போதும் போல் அவளைத் திட்டி இருந்தால் அவள் என்னை விட்டு ஒதுங்கியிருப்பாள்.’



‘இப்போது அவள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டாளே? அவள் மனதில் சந்தேகம் தோன்றியிருக்குமோ?’



‘ஒரு சின்னப் பெண் என்னை ஆட்டுவிக்கிறாளே?’



தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.



அவளைப் பிடிக்காத மாதிரி பேசிவிட்டு இப்போது அவளது ஒரு தொடுகைக்கே மனம் தடுமாறிவிட்டது என்றால் தான் எந்த அளவிற்கு மனதிடம் இல்லாமல் இருக்கிறோம்.



ஒருவேளை அவளிடம் நன்றாகப் பேசி பழகினால் இந்த தடுமாற்றம் இராதோ?



ஆனால் அவளைக் கண்டாலே என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லையே.



அந்த இடத்தில் யுகேந்திரன் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பான்?



அவனுக்குப் பிரியமானவளை அழைத்து வந்திருக்கிறான்.



அவனுக்கு முதன் முதலில் அவளைப் பார்த்த அந்தக் காட்சி கண் முன்னே வந்து நின்றது.

அவளது மலர்ந்த சிரிப்பைக் கண்ட அவனுக்கு முதலில் திகைப்பாக இருந்தது.

ஒரு சில பெண்கள் ஏற்கனவே அவனது வசதியைக் கண்டு அவனிடம் சிரித்து வழிந்திருக்கிறார்கள்தான். அப்போதெல்லாம் அவன் மனம் தடுமாறியதில்லை. இப்போது ‘யாரென்றே தெரியாத ஒரு சிறு பெண் தன்னைக் கண்டு சிரித்ததும் ஏன் என் மனம் தடுமாறுகிறது?’


தன்னை மீறி அவளுக்கான பதிலைக் கொடுத்துவிடுவோமோ? என்று அவன் பயந்துகொண்டிருந்தபோதே கல்லூரியின் முதல்வர் அவனை வரவேற்க வந்துவிட்டார். அவளுக்குக் கொடுக்க வேண்டிய பதில் புன்னகையை அவருக்கு கொடுத்துவிட்டான். அவளும் அவனிடம் எதையும் எதிர்பார்த்ததாய் நினைவு இல்லை.



ஆனால் முதன் முறையாக தன்னைக் கண்ட அவள் ஏன் அப்படி சிரிக்க வேண்டும்?



அப்புறம்தான் விழாவிற்கு பொறுப்பேற்றுக்கொண்ட பேராசிரியர் அவளுக்குத் தன்னை வரவேற்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்ற விபரம் தெரிந்தது.



அவர் அடுத்தடுத்தும் அவளை அழைத்து வேலைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.



பரிசுகள் வழங்கும்போது அவள்தான் அதிகமானவற்றைத் தட்டிக்கொண்டு சென்றாள்.



ஒவ்வொரு முறையும் அவனிடம் இருந்து பரிசினை பெறும்போது அவள் சிரித்தது மனதிலேயே பதிந்துவிட்டது.



பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது.



அதில் அவள் பாரதியாரின் பாடலுக்கு ஆடிய பரதநாட்டியமும் அவன் மனதில் பதிந்தது. அத்துடன் அவள் தன் தம்பியிடம் நடந்துகொண்ட விதமும்.



அவளைக் காணும்போதெல்லாம் தம்பியிடம் காணப்பட்ட மகிழ்ச்சியும் அவன் மனதில் பதிந்தது. அவனுக்குப் பிரியமானவள் என்ற உண்மையும்.



அதன் பிறகு சில நாட்கள் கனவிலும் அவள் முகம் அவனைத் துரத்தியது.



பார்த்த மாத்திரத்திலே ஒருத்தி இப்படி தன்னைச் சலனப்பட வைக்க முடியும் என்று அவன் நினைத்தே பார்த்திரவில்லை.



அவள் இங்கே வரப்போகிறாள் என்று தெரிந்த உடனே ஒரு பக்கம் சந்தோசம் என்றால் மறுபக்கம் அவனுக்குத் தன்னை நினைத்தே பயம்.



அவளைத் தன்னை விட்டு விலக்க வைப்பதற்காக சற்று கடுமையாக நடந்துகொண்டான். அன்று அவளிடம் அவன் திட்டும்போது அவள் முகம் மாறியது கண்டு அவனுக்கே சற்று வருத்தமாகத்தான் இருந்தது.



அவள் நல்லவளோ? இல்லை கெட்டவளோ? தெரியாது. தங்களிடம் உள்ள பணத்திற்காகத்தான் பழகுகிறாளோ? அதுவும் தெரியாது. ஆனால் தம்பிக்கு பிடித்தமானவள்.
என்று அவனது தாயார் நீதான் தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரோ? அன்றே அந்த சிறுவயதிலேயே அவன் மனதில் தம்பி மீது அதீத பாசம் உண்டாகிவிட்டது.
Like Reply
#31
அந்தப் பாசத்தில் அவன் தந்தையைவிட மிஞ்சிவிட்டான்.

அது யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் அவன் தன் சகோரனிடம் எதிர்பார்ப்பது தோழமையைத்தான்.
“ஏய் அப்படி என்ன சிந்தனையில் வர்றே கிருஷ்?”
யுகேந்திரனின் குரல் அவளை நினைவுக்கு இழுத்து வந்தது.
அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.
“என்னாச்சுடா? ஏன் அப்படி பார்க்கிறே?”

“போடா. எல்லாம் உன்னால்தான்.”
“நான் என்ன பண்ணேன்?”
“நான் உன்னைத் துரத்திக்கிட்டு வந்தேன். நீ எதுக்கு என்கிட்டே மாட்டாம ஓடினே? அதனால்தான் …”

சொல்லாமல் நிறுத்தியவளை ஆர்வத்துடன் பார்த்தான்.
“அதனால் என்ன? சொல்லு. என் அண்ணன் வந்தானே. அவன் உன்னை திட்டிட்டானா?”
“அவர் என்னைத் திட்டறதில் உனக்கு அத்தனை சந்தோசம் போல.”

“பின்னே? என்னால் முடியாததை என் அண்ணனாவது செய்தானே என்ற சந்தோசம்தான்.”

“நீ ஒன்னும் சந்தோசப்பட வேண்டாம். அவர் என்னைத் திட்டலை. சாரின்னு சொல்லிட்டு போயிட்டார். அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு.”

“அப்படியா? அதுதான் அவனே அதை பெரிதா எடுத்துக்கலை. நீ ஏன் கவலைப்படறே? எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். கடுகடுன்னு இருக்கிற மாதிரி காண்பிச்சிப்பான். ஆனால் மனசு கல்கண்டு மாதிரி.”

“சரி. சரி. உன் அண்ணன் புராணம் பாடினது போதும்.”

அவள் சலித்துக்கொள்வது போல் நடித்தாள்.

யுகேந்திரன் அவளிடம் பேசும்போது அதிகமாய் தனது குடும்பத்தாரைப் பற்றி மட்டுமே பேசுவான்.

அப்படிப் பேசும்போதெல்லாம் அண்ணன் பேச்சு வரும்போது அவன் முகம் ஒளிரும். அதில் அவனது பிரியம் தெரியும். அடிக்கடி அவன் தன் அண்ணனைப் பற்றி பேசியதாலோ என்னவோ அவளுக்கு மகேந்திரனை வேற்றாளாய் நினைக்கத் தோணவில்லை.

அதனால்தான் அவன் தங்கள் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்தபோது அவளை அறியாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தது எல்லாம். ஆனால் அவன் பதிலுக்கு சிரிக்காமல் யோசனையோடு பார்த்த பிறகுதான் யுகேந்திரன் தன் அண்ணனைப் பற்றி சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.

அவர்கள் வீட்டிற்கு கிளம்பும்போதும் அவன் ஒதுங்கிவிடுவான் என்று நினைத்துதான் வந்தாள். ஆனால் அவனோ யாருக்கும் தெரியாமல் அவளைக் கேவலமாகக் கணித்துத் திட்டிவிட்டான்.

அவனை உயர்ந்த இடத்தில் அவளது மனத்தில் வைத்திருக்க அவன் இந்த அளவிற்கு தரக்குறைவாகப் பேசிவிட்டானே என்று நொந்துபோனாள்.
தான் அவர்கள் வீட்டிற்கு வந்ததுகூடத் தவறோ என்று எண்ணிவிட்டாள்.

ஆனால் யுகேந்திரனின் அன்பும் வனிதாமணி காட்டிய பாசமும் அவளை அங்கிருந்து கிளம்ப விடவில்லை.


இப்போது எதற்காக தன்னிடம் சாரி என்று சொன்னான் என்று அவளுக்குப் புரியவில்லை.

அவள் ஓடி வந்த வேகத்திற்கு அவன் மீது மட்டும் மோதாமல் இருந்திருந்தால் அவளுக்கு நன்றாக அடிபட்டிருக்கும்.

அவன் அல்லாது யுகேந்திரன் மீது மோதியிருந்தால் நிச்சயமாக இருவரும் சேர்ந்து உருண்டிருப்பர்.

யுகேந்திரன் அந்தளவிற்கு திடகாத்திரம் இல்லாதவன். வெடவெடவென்றுதான் அவன் உடல் இருக்கும். அவன் தந்தை அண்ணனைப் போன்று நன்றாக வளர்ந்திருப்பதால் அவன் மேலும் ஒல்லியாகத் தெரிவான்.

வனிதாமணிக்குக்கூட அவனது தோற்றம்தான் கவலையளித்தது.

அவனது உடலைத் தேற்றுவதற்காக அவரும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டார்.

ஆனால் தேறத்தான் இல்லை.

அவளிடமே புலம்பியிருக்கிறார்.

“அவனை நல்லா சாப்பிட பழக்கியிருக்கேன்மா. அப்படியிருந்தும் அவன் சாப்பிடற சாப்பாடு எல்லாம் எங்கேதான் போகுதோ தெரியலை. உடலில் ஒட்டவே மாட்டேங்கிறது. கொஞ்சம் கூட உடம்பில் சதை போட மாட்டேங்குது.”

என்று வருத்தம் மேலோங்க சொல்லியிருக்கிறார்.

அவனுக்கு அப்படியே நேரெதிர் மகேந்திரன். அத்தனை கம்பீரமாய் இருக்கிறான். ஜிம்முக்கு தினமும் போகிற மாதிரியான உடற்கட்டு.

அவளை அத்தனை லாவகமாய் பிடித்து நிறுத்தி விழாமல் தடுத்துவிட்டான்.

இதுவரை அவனை அருகில் இருந்து அவள் பார்க்கவில்லை. சும்மாவே என்னென்னவோ சொல்கிறான். இப்போது வந்து மோதியதே வேண்டுமென்றுதான் என்று திட்டுவான் என்று எதிர்பார்த்தவள் அவனது திட்டை எதிர்பார்த்து கண்களை மூடிக்கொண்டாள். அவனோ நிதானமாக அவளை நிற்க வைத்துவிட்டு சாரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் பேசிய பேச்சிற்கு அவன் மீது தனக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை. அவன் தன் குடும்பத்தின் மீதுள்ள அக்கறையினால்தான் அப்படி பேசுகிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

தங்களைப் பணக்காரர்களாக காட்டிக்கொள்ளாமல் இருப்பதன் காரணத்தை ஒருநாள் யுகேந்திரன் அவளிடம் சொல்லியிருந்தான்.



அவனது தாத்தாவின் தம்பி இளவயதில் ஒரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரும் அந்தப் பெண்ணும் பழகியிருக்கிறார்கள்.

தாத்தாவின் தந்தைக்கு அதில் விருப்பமில்லை.

அந்தப் பெண் பணத்திற்காகத்தான் அவரோடு சுற்றுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.


அதனால் திருமணத்தையும் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனக்கு சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம். தான் விரும்பற பெண்ணே போதும்னு வீட்டை விட்டு போய்விட்டார்.
அவர் அந்தப்பெண்ணின் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப்போனது.
Like Reply
#32
வெறுங்கையோடு வந்த அவரை ஏற்றுக்கொள்ள அந்தப் பெண்ணுக்கு மனம் வரவில்லை.

அந்த மறுப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் பெற்றோரிடம் திரும்பிப்போக அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தாத்தாவின் குடும்பமே அதிர்ந்துபோனது. அந்தப்பெண்ணின் குணம் சரியில்லை என்றுதான் அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு தங்கள் பண வசதியைப் பற்றி வெளியில் பழகுபவர்களிடம் காட்டிக்கொள்ளக்கூடாது என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். அதை அவர்கள் தாத்தா அவர்கள் மனதில் நன்றாக பதிய வைத்துவிட்டார்.
அவளாலும் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளும் மனிதர்களின் சுயநலத்தைக் கண்டவள்தானே. அத்தகைய சுயநலத்தால் வாழ்வை வெறுத்துக்கொண்டிருந்தவளும் அவள்தானே. அதனால் அவளால் மகேந்திரனைப் பற்றி தவறாக எண்ண முடியவில்லை.
யுகேந்திரன் போன்று தன்னைப் புரிந்தபிறகு இவ்வாறு பேசமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டிருந்தாள்.
அவ்வாறு அவனை விட்டு விலகியிருந்தது கூட நிம்மதியாய் இருந்தது. இப்போது அவன் சமாதானமாய் பேசிவிட்டு சென்றதிலிருந்து அவளது மனம் படபடக்கிறது. இத்தகைய நிலை அவளுக்குப் புதிது.
ஒருவேளை விழ இருந்த பயத்தினால் இன்னும் மனம் படபடக்கிறதோ என்று தன்னைத்தேற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் கண்களை மூடினால் அவன் தன்னைப் பார்த்த பார்வையேதான் வந்து நிற்கிறது.
ன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை.
காலையிலேயே கிருஷ்ணவேணி வெளியில் சென்றுவிட்டாள். கூட வருகிறேன் என்று சொன்ன யுகேந்திரனை மறுத்துவிட்டு சென்றிருந்தாள். அப்படி எங்கே செல்கிறாள் என்று தெரியவில்லை.
காலை உணவு நேரம் வேற ஆகிவிட்டது. இன்னும் இந்தப்பெண்ணைக் காணோமே என்று மனதிற்குள் புலம்பியவாறே அடிக்கொருதரம் வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது தனது ஸ்கூட்டியுடன் உள்ளே நுழைந்தாள்.

அவள் இந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

வனிதாமணி அவர்கள் வீட்டின் வேலையாட்களிடம் அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனின் மகள் என்று சொல்லி வைத்திருக்கிறார்.

“என்னம்மா? இத்தனை நேரமாயிடுச்சு? சாப்பிட வேண்டாமா? நீதானே விடுமுறை நாட்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்னு சொல்லியிருக்கே. இப்ப அதை நீயே மறக்கலாமா?”

“மறக்கலே அத்தே. மதிய சாப்பாடு இன்னிக்கு நான் சமைக்கலாம்னு இருக்கேன். அதற்குத் தேவையானதை வாங்கி வரத்தான் போனேன்.”

“நம்ம வீட்டில் இல்லாதது அப்படி என்ன வாங்கப்போனே? முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா சாப்பிட்ட பிறகு சேர்ந்தே போய் வாங்கியிருக்கலாமே?”

செல்லமாய் கடிந்துகொண்டார்.

“அதுதான் சரியான நேரத்திற்கு வந்துட்டேனே அத்தை. வாங்க போகலாம்.”

உள்ளே சென்றனர்.

காலை உணவிற்குப் பின்னர் அவள் வனிதாமணியை சமையல் அறைக்குள்ளேயே விடவில்லை.

“நீங்க போய் மாமாவோட பேசிக்கிட்டிருங்க. நான் கூப்பிட்ட பிறகுதான் வரனும்.”

“ஆமாம்மா. நாங்க கூப்பிட்ட பிறகுதான் வரனும்” என்று அவளுடன் கூட்டு சேர்ந்துகொண்டான் யுகேந்திரன்.

“நீ என்ன பண்ணப்போறே?”

அவள் செல்லமாய் அதட்டினாள்.

“நீ தனியா கஷ்டப்பட்டா என் மனம் தாங்காது கிருஷ்மா. அதுதான்.”

“சரி. என்னவோ பண்ணித்தொலை. ஆனால் சாப்பிடும்போது இதை நான் செஞ்சேன். எப்படி இருக்கு. அப்படின்னு எதையும் சொல்லி அலட்டிக்காம இருக்கனும்.”

“அதெல்லாம் செய்யவே மாட்டேன். என்னை நம்பு.”

இருவரும் செய்ய ஆரம்பித்தனர். முதன் முதலில் சமைப்பதால் சைவ உணவுக்கான ஏற்பாடுகளையே செய்திருந்தாள்.



சமைத்தவற்றை எல்லாம் இருவரும் கொண்டு வந்து சமையல் மேசையில் வைத்த பிறகு அனைவரையும் கூப்பிட்டனர்.
“அத்தை. முதன் முதலா சமைக்கிறதால் சைவ சமையல்தான். அடுத்த வாரம் அசைவம் செய்யறேன்.” என்றாள்.
Like Reply
#33
“அதனால் என்னம்மா? இத்தனை நாட்கள் என் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போயிருந்தது. இப்பதான் உன் மூலமா எனக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு. அதுக்குதான் எனக்கு பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் இரண்டு கட்டைத்தடியன்கள் தான் பொறந்திருக்காங்க.”

என்று செல்லமாய் சலித்துக்கொண்டார்.
“அம்மா. இதெல்லாம் ரொம்ப அதிகம். உனக்கு உன்னோட சமையல் அலுத்துப்போச்சுன்னு சொல்லியிருந்தா நாங்க சமையல் வேலைக்கு ஆள் வைத்திருப்போம். அதை விட்டுட்டு எங்களை குறை சொல்லக்கூடாது. நீ என்னண்ணா சொல்றே?”
என்று தன் அண்ணனையும் கூட்டு சேர்த்தான். அவனிடம் கேட்காமலே இருந்திருக்கலாம் என்பதுபோல் அவனது வழக்கமான மௌனத்தைக் கண்டு தன்னையே நொந்துகொண்டான்.

எப்படி அவனால் பேசாமல் அமைதியாக இருக்க முடிகிறது. தன்னால் அப்படி இருக்க முடியலையே. என்று யோசித்தான்.

“ரொம்ப யோசிக்காதே. அப்புறம் மூளை சூடாகி வழிஞ்சிரப்போகுது.”

அவன் காதருகில் முணுமுணுத்தாள் கிருஷ்ணவேணி.

அவளைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தினான்.

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

பெரியவர்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்த உடனே அவளது சமையலை பாராட்டிவிட்டனர்.

யுகேந்திரனுக்கோ சொல்ல வேண்டாம். அவனுக்க எப்போதும் அவள் மீது தனியான அன்பு உண்டு. அந்த அன்பில் அவள் தண்ணியை ஊற்றி சாதம் கொடுத்திருந்தாலும் ஆகா ஓகோ என்றுதான் புகழ்ந்திருப்பான்.

மகேந்திரன் மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அங்கே வேறு யாரும் இல்லாத மாதிரி அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

இதுவரைக்கும் யாருக்கும் சமைத்துப்போடும் சந்தர்ப்பம் அவளுக்கு அதுவரைக்கும் வாய்த்ததில்லை.
இப்போது அவர்கள் குடும்பத்தை தனதாக நினைத்துக்கொண்டு அவள் சமைத்திருக்கிறாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லையோ? அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டாலும் அவன் மற்றவர்கள் எழுந்திரிக்கும் வரையில் எழுந்து செல்லமாட்டான்.


இப்போது பாதியிலேயே எழுந்துவிட்டான் என்றால் அவள் உரிமை எடுத்துக்கொண்டு சமைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

அவளது முகவாட்டத்தை உணர்ந்த யுகேந்திரன் அவளது கரத்தினை ஆறுதலுடன் தட்டினான்.

அவனுக்குத் தெரியுமளவிற்கா தனது மனம் தெரிந்துவிட்டது.

சாப்பிட்டு முடித்துவிட்டு சமையல் மேசையை ஒதுங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர்.

அவள் பின்னேயே அவனும் வந்துவிட்டான்.

“கிருஷ்மா. நீ கண்டதையும் நினைச்சு குழப்பிக்காதே.”

“நான் சமைச்சது உன் அண்ணாவுக்கு விருப்பமில்லை.”

வருத்தமுடன் கூறினாள்.

“அப்படியெல்லாம் இல்லை. அப்படி அவன் நினைத்திருந்தால் சாப்பிடவே வந்திருக்கமாட்டான். எப்போதும் போல அவன் இன்னிக்கும் நல்லா சாப்பிட்டான்.”

“நீ எனக்காக சொல்றே?”

“நான் பொய் சொல்லலை. நம்பு. இப்ப தூங்கி ஓய்வெடு. சாயங்காலம் சந்திக்கலாம்.”

கேந்திரன் மொட்டை மாடியில் நின்றிருந்தான்.

அவனுக்கு பௌர்ணமி நிலவைப் பார்க்க பிடிக்கும். அதனால் வந்துவிட்டான்.

எப்போதும் போல் அவன் நிலவைத்தான் ரசிக்க ஆரம்பித்தான்.

திடுக்கிட்டான்.

அங்கே நிலவு மறைந்து கிருஷ்ணவேணி முகம் தெரிந்தது.

இன்று மட்டுமல்ல. அவளைச் சந்தித்த நாளிலிருந்தே அழகான எதை பார்த்தாலும் திடுக்கென்று அவளது முகம்தான் அவன் கண் முன்னே வந்து நிற்கிறது.

முன்பு தம்பிக்குத் தெரிந்தவள் என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் இப்போது அவளை அவன் வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்த பிறகு தம்பிக்கு அவள் மீது நாட்டம் இருக்குமோ என்ற சந்தேகம். அதுவும் அவளிடம் அவன் காட்டும் அதீத அன்பைக் கண்டதும் அந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது.

இப்போதும் அவள் முகமே தனக்கு நினைவுக்கு வந்தால் அது தம்பிக்கு தான் செய்யும் துரோகம் என்று தன்னைத்தானே காறி உமிழாத குறையாய் திட்டிக்கொள்கிறான்.

இருந்தும் அவனது மனம் அவன் கட்டுபாட்டை இழந்துவிடுகிறது.

இரவு சாப்பிட நேரம் ஆகிவிட்டதால் வனிதாமணி யுகேந்திரனிடம் மற்றவர்களை கூப்பிடச் சொன்னார்.

தந்தையிடம் சொல்லிவிட்டு மேலே வந்தான். அறையில் மகேந்திரனைக் காணவில்லை. அவனது வழக்கம் தெரிந்ததால் கிருஷ்ணவேணியையும் அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான். அங்கே மறுபக்க சுவரில் சாய்ந்திருந்த வண்ணம் நின்றிருந்த மகேந்திரனை பௌர்ணமி வெளிச்சத்தில் கண்டதும் கிருஷ்ணவேணி திகைத்து நின்றாள்.

சில கதைகளில் ஆசிரியர்கள் கதாநாயகனை கிரேக்க சிற்பம் போல் நின்றான் என்று வர்ணித்திருப்பார்கள். அப்படி ஒன்று உண்டென்றால் அவர்கள் இப்போது மகேந்திரனைப் பார்த்தாலும் அப்படித்தான் வர்ணித்திருப்பார்கள் என்று தோன்றியது.

அவனது அந்த தோற்றம் அவள் அனுமதியில்லாமல் மனதில் ஆழப்பதிந்தது.

அது தவறு என்று அறிவு எடுத்துரைத்தது. இறுதியில் மனமே வென்றது.
இனி,,,
Like Reply
#34
Super continue
Like Reply
#35
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு

[Image: nivv.jpg]

மாடியில் கைகளைக் கட்டிக்கொண்டு சிற்பம் போல் நின்று கொண்டிருந்த மகேந்திரன் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் வருவதைக் கண்டவன் புன்னகைத்தான். அவன் தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறானா? அவள் சந்தேகம் கொண்டாள்.


சந்தேகமேயில்லாமல் அவளைப் பார்த்துதான் சிரிக்கிறான். அவன் முகம் அவளை நோக்கியே இருக்கிறது.


அவள் தன்னை நம்பாமல் கையைக் கிள்ளி பார்க்கிறாள்.



வலித்தது. அழுத்திக் கிள்ளிவிட்டாள். வலியில் ‘ஆ’ வென கத்தியவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.



எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.



இன்னும் அவளுக்கு நடந்தது கனவு போல் தெரியவில்லை. அவனது சிரிப்பு மனதை விட்டு அகலவில்லை.



கண்ட கனவைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் இன்று கல்லூரிக்கு சென்ற மாதிரிதான் என்று தன்னைத்தானே கடிந்துகொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்.



கல்லூரிக்குத் தயாராகி கீழே வந்தாள்.



“என்னம்மா? கல்லூரிக்குக் கிளம்பியாச்சா?”



வனிதாமணி வாஞ்சையுடன் அவளைப் பார்த்தவாறே கேட்டார்.



“கிளம்பியாச்சு அத்தே?”



“இன்னும் இந்த சின்னவனைக் காணோமே.”

“அந்த தூங்குமூஞ்சி என்ன பண்றான்னு பார்க்கிறேன்.”

என்று சொன்னவள் யுகேந்திரனின் அறைக்குச் சென்றாள்.


“டேய் என்னடா பண்றே?”



அறையில் அவனைக் காணவில்லை. குளியல் அறைக்குள் அவனது குரல் கேட்டது. அவன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.



எப்போதும் போல் அவனது குரலால் ஈர்க்கப்பட்டு அவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.



யுகேந்திரனுக்கு நல்ல குரல்வளம். அவனுக்கு கலைத்துறையில்தான் ஆர்வம். ஆனால் வீட்டினரின் கட்டாயத்திற்காகதான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதே.



குளியல் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பி நின்று கொண்டாள்.



“டேய். நீ கிளம்பிட்டியான்னு பார்க்க வந்தேன். சீக்கிரம் கிளம்பி வந்து சேரு.”



திரும்பி நின்றவாறு சொன்னவள் கடகடவென்று வெளியில் சென்றுவிட்டாள்.

அவளது செயலைக் கண்டு அவன் சிரித்துக்கொண்டான்.



ன்று மாலை.



கல்லூரி விட்டு வீட்டுக்குப் போகும் ஆர்வத்தில் எல்லோரும் வெளியில் வந்தனர்.



“யுகா. நான் இன்னிக்கு கொஞ்சம் கடைக்குப் போக வேண்டியிருக்கு. அதனால் நீ வீட்டுக்குப் போ. நான் அப்புறமா வர்றேன்.”



“நானும் கூட வர்றேனே?”



“இல்லை. வேண்டாம். நீ வீட்டுக்குப் போ. நானே பார்த்துக்கறேன்.”



அதற்கு மேல் அவன் மறுக்கவில்லை.



“சீக்கிரம் வந்துடு.”



அக்கறையாய் சொல்லிவிட்டு சென்றான். அவள் நெகிழ்ந்துபோயிருந்தாள். இப்படி யாரும் அவளிடம் சொன்னதில்லை.



அவளது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவள் மீது அக்கறை கொண்டவன்.



கடைக்குச் சென்றாள். பார்த்துப் பார்த்து வாங்கினாள்.



அவள் உள்ளே நுழைந்தபோது வனிதாமணி ஆவலுடன் நின்று கொண்டிருந்தாள்.



“வாடாம்மா. நீ மட்டும் கடைக்குப் போகனுமா என்ன? என்கிட்ட சொல்லியிருந்தா உனக்கு விடுமுறை நாளில் நானும் கூட வந்திருப்பேனே.”



“பரவாயில்லை அத்தை.”



“என்னம்மா. துணிக்கடைக்குப் போயிருந்தியா?”



“ஆமா அத்தே.”



வாங்கி வந்தவற்றை தனது அறையில் வைத்துவிட்டு திரும்பினாள்.



ரவிச்சந்திரனும் மகேந்திரனும் வந்த பிறகு தனது அறைக்குச் சென்றவள் தான் வாங்கி வந்தவற்றை எடுத்து வந்தாள்.



“அத்தை. மாமா. சேர்ந்து நில்லுங்க.”



என்றவள் தான் வாங்கி வந்தவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு காலில் விழுந்தாள்.



“நல்லா இரும்மா.” வனிதாமணி அவளைத் தூக்கிவிட்டார்.



பார்த்துக்கொண்டிருந்த யுகேந்திரனிடமும் ஒரு பையை நீட்டினாள்.







மகேந்திரனிடம் வந்தாள். அவளிடம் துணிப்பை எதுவும் இல்லை.
“உங்களோட அளவு தெரியலை. அத்தோட நான் வாங்கித் தந்தா உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை. அதான் இதை வாங்கிட்டு வந்தேன்.”
Like Reply
#36
அவள் நீட்டியது ஒரு விலை உயர்ந்த பேனா.

அவன் தன் பெற்றோரைப் பார்த்தான். அவர்களும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவள் நீட்டிய பேனாவைப் பெற்றுக்கொண்டான். அதன் பிறகு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
“என்னம்மா திடீர்னு எல்லோருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துருக்கே?”

வனிதாமணி கேட்டார்.

“நான் இங்கே வரும்போதே வாங்கிட்டு வரனும்னு நினைத்தேன் அத்தே. அப்ப உங்களோட ரசனை என்னன்னு தெரியலை. அதனால்தான் இப்ப வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கா அத்தே?”

ஆவலுடன் கேட்டாள்.

“ரொம்ப பிடிச்சிருக்கும்மா.”

“டேய் உனக்கு?”

யுகேந்திரனைப் பார்த்துக்கேட்டாள்.

“பிடிச்சிருக்கு. உனக்கு எடுத்துக்கலையா?”

“எனக்குதான் நிறைய இருக்கே. அதான் எடுத்துக்கலை.”

அவன் யோசனையில் இருந்தான். எப்போதும் உள்ள கலகலப்பு அவனிடம் இல்லை. இரவு உணவு முடிந்த பிறகு கூட அவளோடு அறைக்குச் செல்லாமல் அவளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.

தனது அறைக்கு வந்த மகேந்திரனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. மற்றவர்களுக்குப் பார்த்துப் பார்த்து உடை வாங்கி வந்தவள் தன்னை மட்டும் வேற்றாளாக நினைத்து பெரியவர்கள் அவனை மட்டும் விட்டுவிட்டால் தவறாக நினைப்பார்களே என்று ஏதோ பெயருக்கு பேனா வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.
தனதுத சட்டைப் பையில் அதைப் பத்திரப்படுத்தியவன் இரவு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தான்.

றுநாள் மாலை.


மகேந்திரனோடு தொற்றிக்கொண்டு சாருலதாவும் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

இன்னும் யுகேந்திரன் சரியாகவில்லை. அவள் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொன்னான். அவன் ஏதோ தன் மேல் கோபமாய் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவன் என்னவென்று சொல்லிவிட்டால் கூட அவள் அதை நிவர்த்தி செய்துவிடுவாள். என்னவென்று தெரியாமல் என்ன செய்வாள்.

அப்போது சாருலதா கிருஷ்ணவேணியின் அருகில் வந்தாள்.

“ஹாய். எப்படியிருக்கே?”

“நல்லாருக்கேன்.”

“நீ இங்கே வந்து ஒரு மாசம் ஆயிருக்கும்ல.”

அதை ஏன் இவள் கேட்கிறாள் என்று யோசனையுடன் அவளைப் பார்த்தாள்.

“நீ இங்கே பேயிங் கெஸ்டாதானே வந்தே. மாசம் எவ்வளவாச்சுன்னு கொஞ்சம் சொல்றியா? நீ எவ்வளவு கொடுத்தே?”

அவள் எதற்கு என்று பார்த்தாள்.

“என்னோட இரண்டு தோழிகள் இது மாதிரி பேயிங் கெஸ்டா தங்குவதற்கு இடம் கிடைத்தா நல்லாருக்கும்னு சொன்னாங்க. இது வேற பணக்கார வீடாச்சா? அவளுகளுக்கு கட்டுப்படியாகுமான்னு நினைத்தேன். நீ எவ்வளவு கொடுத்தேன்னு சொன்னா அது அவளுகளுக்கு ஒத்து வருமான்னு பார்ப்பேன்.”

சாருலதாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் விழித்தாள்.

“என்ன நீ பணமே கொடுக்கலையா? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இதுக்கு நீ என்கிட்ட பணம் இல்லை. நான் தங்குறதுக்கும் படிக்கிறதுக்கும் நீங்க தானம் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கலாம்.”

அவளை மட்டமாகப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் சாருலதா.

கிருஷ்ணவேணி அப்படியே குன்றிப்போனாள்.

இது மாதிரி ஒரு வார்த்தை வந்துவிடக்கூடாதுன்னுதான் அவள் யுகேந்திரனிடம் முதலில் இங்கு வருவதற்கு மறுத்ததே.

அவன்தான் நீ எங்க வீட்டில் தங்குவதற்கு என்ன தயக்கம்? அப்படி உனக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா பேயிங் கெஸ்டா வந்துடேன். அதை நான் என் பாக்கெட் மணியா பயன்படுத்திக்கிறேன். என்றிருந்தான்.

ஆனால் அவர்கள் காட்டிய பாசத்தில் அவளால் வாடகைப் பணம் எவ்வளவு என்று கேட்க முடியவில்லை. ஆனாலும் தான் எந்தவித உரிமையும் இல்லாமல் அந்த வீட்டில் தங்கியிருப்பது மனதை உறுத்தியது. அதனால்தான் விடுமுறை நாளில் தான்தான் சமைப்பேன் என்று அதற்குத்தேவையானவற்றை அவளே சென்று வாங்கிவந்தாள்.

இப்போது மற்றவர்களுக்கு பரிசாக உடையும் வாங்கித் தந்திருக்கிறாள்.



அதை சாருலதாவிடம் சொல்ல மனம் வரவில்லை. எப்போதும் தன்னை அலட்சியமாக பார்த்து ஒதுங்கிச் செல்பவள் இன்று வலியக்க வந்து பேசும்போதே தான் யோசித்திருக்க வேண்டும்.
“அவ சொல்ல மாட்டா சாருக்கா. அவகிட்ட வாங்கிக்கிட்ட நான் சொல்றேன்.”
Like Reply
#37
அவன் தான் பேசியதை எல்லாம் கேட்டிருப்பானா? என்ற சந்தேகத்தில் அவனைப் பார்த்தாள் சாருலதா.

அடுத்து அவன் சொன்ன பதில் அதை உறுதி செய்தது.
அவள் என்ன செய்தாள் என்று அப்படியே சாருலதாவிடம் கூறினான். கிருஷ்ணவேணி அமைதியாக நின்றிருந்தாள்.
சாருலதா அவன் கூறியதை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“சாருக்கா. எங்க வீட்டுக்கு கிருஷ்ணவேணியை பணத்திற்காக அழைத்து வரவில்லை. அவளோட பாசத்திற்காகதான் அழைத்து வந்தேன். எங்க வீட்டில் எல்லோரும் அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் உங்க தோழிகளை வேற வீடு கிடைக்குதான்னு பார்த்துக்க சொல்லுங்க.”

அவளிடம் சற்று கடுமையாக சொல்லிவிட்டு சென்றான். அன்று இரவு தனது வீட்டிற்குச் செல்லாமல் அவள் அங்கேயே தங்கிவிட்டாள்.

கிருஷ்ணவேணி அங்கே தங்க வந்த பிறகு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எத்தனை வருடங்கள் இந்த வீட்டில் வாழப்போகும் தினத்தை எதிர்பார்த்து திட்டம் போட்டு நடந்துகொண்டிருக்கிறாள். அதை இந்த கிருஷ்ணவேணியின் வருகை கலைத்துவிடுமோன்னு என்ற ஆட்டம் அவளுக்கு.

மொட்டை மாடியில் நின்றிருந்த கிருஷ்ணவேணி காலடிச்சத்தம் கேட்டு திரும்பினாள்.

யுகேந்திரன் நின்று கொண்டிருந்தான்.

அவளால் அவனை ஏறிட்டு பார்க்க முடியவில்லை.

“ஏன் இப்படி பண்ணே?”

“சாரி. யுகா.”

“தப்புன்னு தெரியுதுல்ல. எங்களோட பாசத்திற்கு நீ விலை வைக்க முடியுமா?”

“எனக்குத் தெரியும். நான் சொன்ன மாதிரி இங்கே வரும்போதே வாங்கிட்டு வரனும்னு நினைத்தேன். அப்ப முடியலை. அதான் இப்ப வாங்கிட்டு வந்தேன். ஏன் நான் வாங்கித்தரக்கூடாதா?”
“தாராளமா நீ வாங்கித்தரலாம். ஆனால் ஒரு மாசம் வரைக்கும் பொறுத்திருக்க வேண்டியதில்லையே.”

“என் மேல் கோபப்படாதே யுகா. எந்தவித உரிமையும் இல்லாமல் நான் இங்கே தங்கியிருக்கிறதால்தானே அந்த சாருலதா அப்படி கிண்டல் பண்றாங்க?”


“எங்களை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா?”

“சாரி.”

தலைகுனிந்தாள்.

“உங்களுக்கு வாங்கித்தர்ற உரிமை எனக்கு இல்லையா? எனக்குன்னு யாரிருக்கா? இதுவரைக்கும் நான் யாருக்கும் சமைத்து கொடுத்ததில்லை. இப்படி டிரஸ் எடுத்துக்கொடுத்ததும் இல்லை.”

வருத்தமுடன் சொன்னாள்.

“உனக்கு உரிமை இல்லைன்னு யார் சொன்னா. நீ இப்படி குற்ற உணர்ச்சியோட வாங்கித்தர்றதுதான் எனக்குப் பிரியம் இல்லை. தயவுசெய்து வருத்தப்படாதே.”

அவளைத் தேற்றினான்.

“சரி வா சாப்பிட போகலாம். அம்மா தேடுவாங்க.”

“நீ அத்தைக்கிட்ட சொல்லமாட்டேல்ல.”

“மாட்டேன். வா போகலாம். ஆனால் இனி இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது.”

அவள் தலையாட்டினாள்.

அவள் முன்னே போக அவன் பின்னே சென்றான்.

‘உரிமை இல்லையாம்ல. உரிமை. அவளுக்கு என்ன மாதிரியான உரிமை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். என்னவோ அந்நிய வீட்டில் தங்குற மாதிரி கணக்குப் பார்க்கிறா. எல்லாம் எத்தனை நாளுக்கு. நீ படிப்பு முடியற வரைக்கும்தானே? அதன் பிறகு இந்த வீட்டில் உனது உரிமை என்னவென்று உனக்கே தெரியும். அப்ப நீ எப்படி விழிக்கிறேன்னு நான் பார்க்கத்தானே போறேன்.’

தனக்குள் சிரித்துக்கொண்டான். தான் கேட்கும்போது அவள் மறுப்பாள் என்று ஒரு சதவீதம் கூட அவனுக்குச் சந்தேகம் வரவில்லை.

அனைவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்துவிட்டனர். சாருலதா மகேந்திரனின் அருகில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து பல்லைக் கடித்தான் யுகேந்திரன்.

“நாளைக்கு கீர்த்திவாசன் சாரோட பொண்ணுக்கு ரிசப்சன் தெரியும்ல.”

பொதுவாக கேட்டார்.

“தெரியும்மா.” ரவிச்சந்திரன் பதில் சொன்னார்.



“இப்ப தெரியும்னு சொல்லிட்டு நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடுன்னு சொல்லக்கூடாது. அவர் ரொம்ப முக்கியமானவர்.”
“எனக்கும் தெரியும்மா. கண்டிப்பா வந்துடுவோம்.”
Like Reply
#38
“என் மேல் கோபப்படாதே யுகா. எந்தவித உரிமையும் இல்லாமல் நான் இங்கே தங்கியிருக்கிறதால்தானே அந்த சாருலதா அப்படி கிண்டல் பண்றாங்க?”

“எங்களை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா?”
“சாரி.”
தலைகுனிந்தாள்.
“உங்களுக்கு வாங்கித்தர்ற உரிமை எனக்கு இல்லையா? எனக்குன்னு யாரிருக்கா? இதுவரைக்கும் நான் யாருக்கும் சமைத்து கொடுத்ததில்லை. இப்படி டிரஸ் எடுத்துக்கொடுத்ததும் இல்லை.”
வருத்தமுடன் சொன்னாள்.
“உனக்கு உரிமை இல்லைன்னு யார் சொன்னா. நீ இப்படி குற்ற உணர்ச்சியோட வாங்கித்தர்றதுதான் எனக்குப் பிரியம் இல்லை. தயவுசெய்து வருத்தப்படாதே.”
அவளைத் தேற்றினான்.
“சரி வா சாப்பிட போகலாம். அம்மா தேடுவாங்க.”
“நீ அத்தைக்கிட்ட சொல்லமாட்டேல்ல.”
“மாட்டேன். வா போகலாம். ஆனால் இனி இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது.”
அவள் தலையாட்டினாள்.
அவள் முன்னே போக அவன் பின்னே சென்றான்.
‘உரிமை இல்லையாம்ல. உரிமை. அவளுக்கு என்ன மாதிரியான உரிமை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். என்னவோ அந்நிய வீட்டில் தங்குற மாதிரி கணக்குப் பார்க்கிறா. எல்லாம் எத்தனை நாளுக்கு. நீ படிப்பு முடியற வரைக்கும்தானே? அதன் பிறகு இந்த வீட்டில் உனது உரிமை என்னவென்று உனக்கே தெரியும். அப்ப நீ எப்படி விழிக்கிறேன்னு நான் பார்க்கத்தானே போறேன்.’
தனக்குள் சிரித்துக்கொண்டான். தான் கேட்கும்போது அவள் மறுப்பாள் என்று ஒரு சதவீதம் கூட அவனுக்குச் சந்தேகம் வரவில்லை.
அனைவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்துவிட்டனர். சாருலதா மகேந்திரனின் அருகில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து பல்லைக் கடித்தான் யுகேந்திரன்.
“நாளைக்கு கீர்த்திவாசன் சாரோட பொண்ணுக்கு ரிசப்சன் தெரியும்ல.”
பொதுவாக கேட்டார்.
“தெரியும்மா.” ரவிச்சந்திரன் பதில் சொன்னார்.

“இப்ப தெரியும்னு சொல்லிட்டு நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடுன்னு சொல்லக்கூடாது. அவர் ரொம்ப முக்கியமானவர்.”
“எனக்கும் தெரியும்மா. கண்டிப்பா வந்துடுவோம்.”
“என்ன நீங்களும் கேட்டுக்கிட்டீங்கதானே?”


சிறியவர்களைப் பார்த்துக்கேட்டார்.

“சரிம்மா.” யுகேந்திரன் பதில் சொன்னான்.

அவளோடு கூட வந்தவனிடம் கீர்த்திவாசன் யார் என்று விசாரித்தாள் கிருஷ்ணவேணி.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அவளது அறைக்குள் புகுந்தனர்.



அதைப் பார்த்து வயிறெரிந்தாள் சாருலதா. அவள் யாரோ எவளோ? எந்த சொந்த பந்தமும் கிடையாது. அவளுக்கென்று அந்த வீட்டில் அறை இருக்கிறது. அவள் இந்த வீட்டு உறவினள். கூடிய விரைவில் உரிமைக்காரியாகவும் ஆகப்போகிறவள். அவள் மட்டும் விருந்தினர் அறையில் தங்கவேண்டுமா?



அவளும் மாடிக்கு ஏறினாள்.



கிருஷ்ணவேணியின் அறையில் அவர்கள் சிரித்துப்பேசுவது கேட்டது.



அவள் மகேந்திரனின் அறைக்கதவைத்தட்டினாள்.



கதவு திறந்தது. அவள் வெளியில் நிற்கக் கண்டவன் புருவத்தைச் சுருக்கினான்.



“என்ன சாருலதா?”



அதன் பிறகுதான் தான் அவசரப்பட்டு அங்கே வந்தது அவளுக்குப் புரிந்தது.



அவனைப் பற்றி தெரிந்தும் அவர்களைப் போல் தானும் மகேந்திரனோடு பேசிக்கொண்டிருக்க வந்துவிட்ட முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டாள்.



அவன் அதற்கு இடம் கொடுத்துவிட்டுதானே மறுவேலை பார்ப்பான்.
“சாருலதா. என்னன்னு கேட்டேன்?”
Like Reply
#39
அவளைப் பார்த்து மீண்டும் அழுத்தமாய் கேட்டான்.

“அது வந்து அத்தான்… இன்னைக்கு ஆஃபிசில் … “ என்று இழுத்தவாறு பேச ஆரம்பித்தவளை
கையை நீட்டி தடுத்தான்.
“அலுவலக வேலையைப் பற்றி பேச இது தருணம் அல்ல. நீ போய் ஓய்வெடு. நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.
அப்போது எதிர் அறையில் இருந்து இருவரின் சிரிப்பு சத்தமும் உரக்கக் கேட்டது.
“இவளை இங்கே வர்றதுக்கு அனுமதி தர்றதுக்கு முன்னாடி அத்தை கொஞ்சம் யோசித்திருக்கலாம். இப்ப பாருங்க சிரிப்பை. இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஒத்து வருமா?”
அவன் முகத்தில் கடினம் ஏறியது.
“இதப்பாரு. எதைச் செய்யனும்? எதைச் செய்யக்கூடாதுன்னு அம்மாவுக்கு நல்லா தெரியும். இதை மாதிரி இனி பேசிக்கொண்டிருக்காதே. சரியா?”
அவள் மௌனமாக தலையாட்டியவாறு தன்னையே நொந்துகொண்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குத் திரும்பினாள்.
அந்த கிருஷ்ணவேணி இங்கிருப்பதால் என்னவோ நடக்கப்போகிறது என்று அவளது உள்மனம் அவளை எச்சரித்தது.
றுநாள் மாலை.
அவர்கள் சீக்கிரமே வந்துவிட்டனர்.
“வந்துட்டீங்களா? இந்தாங்க. இதைச் சாப்பிட்டுவிட்டு போய் குளிச்சு தயாராகுங்க.”
அவர்களிடம் குடிப்பதற்கும், கொறிப்பதற்கும் நீட்டினார் வனிதாமணி.
கிருஷ்ணவேணியை தனது அறைக்கு அழைத்தார்.
“என்ன அத்தை?”
“நீ இன்னிக்கு இதைக் கட்டிக்கிட்டு வர்றியாம்மா?”
அவர் ஆவலுடன் காட்டிய அந்த பட்டுப்புடவை அழகாக இருந்தது.
“அத்தை. நான் எப்படி?”
“ஆசைப்பட்டுதான் வாங்கினேன். ஆனால் சரிகை கொஞ்சம் அதிகமா இருக்கு. அதான் கட்டறதில்லை.”
அவள் மீண்டும் தயங்கினாள்.
“என்னம்மா? என்னோட புடவையைக் கட்டிக்க தயக்கமா இருக்கா?”
“அதில்லை அத்தே. எனக்கு இதுக்கு மேட்சா ஜாக்கெட் இல்லை.”
“அவ்வளவுதானே? நானே உனக்குப் பொருத்தமா ஜாக்கெட் தைச்சிட்டேன். உன் அனுமதி இல்லாம உன்னோட ஜாக்கெட்டை அளவுக்கு எடுத்துட்டேன்மா. காலையில் உன்னை எடுத்து வச்சிட்டு போகச் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். மறந்துட்டேன்.”
“அத்தே. நீங்களே தைச்சீங்களா?”
அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“ஆமாம்மா. உனக்கும் வேணும்னா நான் கத்துத்தர்றேன்.”
“சரித்தே.”
“சரி. சரி. சீக்கிரம் கிளம்பு. புடவை கட்டத் தெரியும்தானே?”
“தெரியும் அத்தே.”

அவர் சென்றுவிட்டார். அவளும் தனது அறைக்குக் கிளம்பினாள்.
பின்னேயே யுகேந்திரன் வந்தான்.
Like Reply
#40
“அம்மாகிட்ட எதுவும் உளறி வைக்கலையே?”

அவள் பாவமாக பார்த்தாள்.
“நீ வரமாட்டேன்னு சொல்வேன்னு கொஞ்சம் கூட சந்தேகப் படாம உனக்காக டிரஸ் எடுத்து வச்சிருக்காங்க பார்த்தியா?”
அவள் தலையாட்டினாள்.

கல்லூரியில் இருந்து கிளம்பும்போது அவள் தயக்கத்துடன்தான் அந்த ரிசப்சனுக்கு வர விருப்பம் இல்லை என்று தெரிவித்தாள்.

அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டு விசேசத்திற்கு தான் எப்படி செல்ல முடியும்?

அவன் அவளைத் திட்டினான்.

“உன்னை நாங்க பிரிச்சே பார்க்கலை. நீ இன்னமும் எங்களை மனதளவில் வேற்றாளாய்தான் பார்க்கிறே?”

அது அவளைச் சுட்டது.

“கீர்த்திவாசன் அங்கிள் எங்களுக்குப் பழக்கமானவர்தான். கிராமத்தை விட்டு பட்டணத்து வாழ்க்கைக்கு வந்தபிறகு பழக்கப்பட்டவங்கதான் சொந்தக்காரங்கன்னு அம்மா சொன்னாங்க. அதனால்தான் அம்மா குடும்பத்தோட போகனும்னு சொல்றாங்க. அவங்க குடும்பம்னு சொன்னதில் நீயும் அடக்கம். இப்ப புரியுதா?”

“ம்.” அவள் தலையாட்டினாள்.

“போய் கிளம்பு.”

அவள் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

குளித்துக்கிளம்பியவள் அந்தப்புடவையை நேர்த்தியாய் கட்டி முடித்தாள்.
கிளம்பி முடித்த பிறகு தனது பெட்டியைத் திறந்தாள்.
அடியில் ஒரு துணியில் முடிந்து வைத்திருந்த நகைகளை எடுத்தாள்.

அந்த நகையை தொட்டு பார்க்கும்போது  தன் அம்மாவே கூட இருப்பது போல் தோன்றியது.

தான் கட்டியிருந்த புடவைக்குப் பொருத்தமான நகையை எடுத்து அணிந்தாள்.

எளிமையான நகைதான். ஆனாலும் அவளது அழகை தூக்கலாகக் காட்டியது.

கிளம்பியவள் கீழே இறங்கினாள். அப்போதுதான் மகேந்திரன் உள்ளே நுழைந்தான். மாடிப்படியில் தேவதை போன்று இறங்கி வந்தவளை கண்களை இமைக்காமல் பார்த்தான். நல்லவேளை அவள் அவனைப் பார்க்கவில்லை. பட்டுப்புடவை கட்டிக்கொண்டு படியில் இறங்கியதால் கவனமாக இறங்கினாள்.

“வாவ்.”
யுகேந்திரனின் ஆச்சர்யக் குரல் மகேந்திரனைக் கலைத்தது. என்ன வேலை செய்துவிட்டேன் என்று தன்னைத் திட்டிக்கொண்டவன் மாடியில் ஏறும்போது கவனமாக அவள் பக்கம் திரும்பாமல் சென்றான்.

யுகேந்திரனின் ஆச்சர்யப் பார்வை அவளுக்கு வெட்கத்தை தந்தது.


“போடா. கிண்டல் பண்றே. நான் அத்தைக்கிட்ட சொல்றேன்.”

வனிதாமணியுமே அவளை கண்ணை விலக்க முடியாமல் பார்த்தார்.

அவளது கன்னத்தில் வழித்தெடுத்து திருஷ்டி கழித்தாள்.

“இந்தப் புடவை உனக்கே நெய்த மாதிரி இருக்கு.”

“எங்களை கிளம்ப சொல்லிட்டு நீங்க இன்னும் இங்கேயே இருக்கீங்களே அத்தே?”

“இதோ கிளம்பறேன்மா.”

அப்போதுதான் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்த்தாள்.

“என்ன அத்தே? நாமதான் ரிசப்சனுக்குப் போறோமே. நீங்க ஏன் சப்பாத்தி செய்யறீங்க?”

அவர் சிரித்துக்கொண்டே “அதுக்குக் காரணம் இருக்கும்மா. உனக்கே புரியும். நான் போய் கிளம்பறேன்.”

“யுகா. நீயும் போய் கிளம்பு.”

அவர்கள் கிளம்பி வந்தபோது அவள் திகைத்துப்போனாள். எல்லோரும் அவள் வாங்கிக்கொடுத்த உடையை அணிந்திருந்தனர்.

அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

அவள் வாங்கிக்கொடுத்தது சற்று எளிமையான உடைதான். அதை ஒரு விழாவுக்கு கட்டி வருவார்கள் என அவள் நினைக்கவேயில்லை.

“அத்தை.”

நெகிழ்ச்சியுடன் அழைத்தாள்.

“என்னம்மா? எப்படியிருக்கு? நல்லாருக்கா?”

அவள் தலையாட்டினாள்.

மகேந்திரனும் வர காருக்குச் சென்றனர்.

அப்போது சாருலதாவும் வந்துவிட்டாள்.

“சரியான நேரத்திற்கு வந்துட்டேனா?”



கேட்டுக்கொண்டே வழக்கம்போல் முன்சீட்டில் ஏறி அமர்ந்துவிட்டாள்.
வனிதாமணி தனது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்.
Like Reply




Users browsing this thread: 26 Guest(s)