Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
Vera level bro ?? ivalo neram onume nadakatha Mari pesikitu iruntha antha doctor waiting for next update

Unga vayathu oru thadai alla story nethu tha 2nd time padika start pani iruka bro
[+] 1 user Likes Maju1929's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Please continue
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
Waiting bro ur intresting update
[+] 1 user Likes Krish126's post
Like Reply
?????????????????????????????????
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Bro seekrama update panunga bro... Entha point la sundar manam marnan nu theriyanum...
[+] 1 user Likes Thor odinson's post
Like Reply
Next update, today evening.
[+] 2 users Like whiteburst's post
Like Reply
Waiting bro ur intresting update
[+] 1 user Likes Krish126's post
Like Reply
46.

 
அ… அண்ணா?
 
உன்னைப் பாத்தா என் தங்கச்சி ஞாபகம் வருது என்று சொன்னதாலா, அல்லது டாக்டர், தன் மனைவி பெயரைச் சொன்னவுடன், அந்த அபர்ணாவாக இருக்கக் கூடாதே என்ற பதைபதைப்பில், இயல்பாக அண்ணா என்று பாசமாக அழைத்தாளா என்று தெரியவில்லை.
 
கீதா, ஹரிணி, விவேக் எபிசோடிலேயே அபர்ணாவைப் பற்றி இருந்தாலும், அந்த பென் டிரைவில், டிடெக்டிவ் ஏஜென்சியின் ரிப்போர்ட்டும், அபர்ணாவைப் பற்றி வேறு சில ஆதாரங்களும் இருந்தது. அதனாலேயே, அந்தப் பெயருக்கு ஹாசிணி கடும் அதிர்ச்சி அடைந்தாள்.
 
எஸ்… நீ நினைக்கிற அதே அபர்ணாதான்!
 
சா… சரிண்ணா!

[Image: tollywood-actress-rashi-khanna-face-clos...ctress.jpg]

தனக்குப் பெரிதும் அறிமுகமாகியிருக்காத, முன் பின் தெரியாத ஒரு பெண், தனக்காக உண்மையாக வருந்துவதைக் கண்டு புன்னகைத்தார் டாக்டர். சுந்தர் சொன்னது போல், இந்தப் பெண் கொஞ்சம் ஸ்பெஷல்தான்!

 
ரொம்ப நாளாவே எனக்கு அபர்ணாவோட பிகேவியர்ல நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது! முண்ணுக்குப் பின் முரணா பல விஷயங்கள் இருந்துது. இந்தத் தப்பு செய்யுறவங்க, கொஞ்சம் நாளான பின்னாடி, தான் யாருக்கும் எந்த டவுட்டும் வராத அளவுக்கு சரியா செய்யுறோம்ன்னு நினைச்சுக்குறாங்க. ஆனா, எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும், தொடர்ச்சியா ஒரு தப்பைப் பண்ண முடியாதுங்கிற உண்மை அவங்களுக்கு தெரியறதில்லை.
 
நான், அபர்ணா ஏதோ தப்பு பண்றான்னு நல்லாத் தெரிஞ்ச பின்னாடித்தான் டிடெக்டிவ்கிட்டயே போனேன். இன்ஃபாக்ட், நான் போனதும் கூட, எவிடென்ஸ் வேணும்கிறதுக்காகவும், அவ எந்தளவு போயிருக்கான்னு தெரிஞ்சக்கவும்தான்.
 
என்னதான் மனசு எல்லாத்துக்கும் தயாரா இருந்தாலும், ரிப்போர்ட்சை எல்லாம் பாத்துட்டு என்னால அதை ஜீரணிக்கவே முடியலை. இது ஏதோ கொஞ்ச நாளாத்தான் நடக்குது, சந்தர்ப்ப சூழ்நிலை அப்டி, அவளோட ஃபிரண்டு கூடத்தான் அப்டில்லாம் எதுவும் இல்லாம, இதுக்குன்னு இவளே தேடிப் போயிருக்காங்கிறப்ப மனசு கேக்கலை. சரியா, அந்தச் சமயம்தான் கீதாவோட ஹஸ்பெண்ட்டும் என்னைத் தேடி வந்தாரு.
 
அபர்ணாவோட தப்புகள்ல, கீதாவோட பேரு வர்றது ரொம்பக் கம்மிதான். ஆனா, கீதாவும், விவேக்கும் பேசுன பல இடங்கள்ல அபர்ணா பேரு வந்திருக்கு. அதுனால விஷயம் தெரிஞ்ச உடனேயே என்கிட்டயும் உண்மையைச் சொல்ல வந்தாலும், ரொம்பத் தயங்கித் தயங்கிதான் விஷயத்தை சொன்னாரு. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேந்துதான், சுந்தருக்கும் விஷயத்தைச் சொல்ல வந்தோம்.
 
ஆக்சுவலா, சுந்தர் என்கிட்ட கவுன்சிலிங் வர்றேன்னு சொன்னாலும், நாங்க மூணு பேருமே ஒருத்தருக்கொருத்தர் கவுன்சிலிங் மாதிரி, மனசு விட்டுப் பேசிகிட்டோம். கீதாவோட ஹஸ்பெண்ட் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டப்ப, அவரோட பொண்ணு பேரைச் சொல்லி அவரை தேத்துனது கூட சுந்தர்தான்.
 
மாமாவா? அவ்ளோ தெளிவா இருக்கிறவரு, ஏன் உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருந்தாருன்னு சொன்னீங்க?
 
எந்தப் பிரச்சினையையுமே தள்ளி நின்னு பாக்கிறப்பதான் அதைச் சரியா அணுக முடியும் ஹாசிணி. எல்லாருக்கும் துரோகத்தோட வலி ஒண்ணுதான்னாலும், அபர்ணாவும் சரி, கீதாவும் சரி, சில பல வருடங்களாவே, எங்ககிட்ட இருந்து மனசளவுல ரொம்ப விலகிட்டாங்க.
 
குடும்பமா இருக்கனும், கல்லூரி படிக்கிற பசங்க வந்தாச்சு; இதுக்கு மேல ஏன் சண்டை போடனும், சமூகத்துல என்ன சொல்லுவாங்க இது மாதிரியான விஷயங்கள்தான் பிரியாம இருந்ததுக்கு காரணம். தவிர, நாங்க வேலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மனைவிக்கு கொடுக்கலையோன்னு ஒரு சின்ன குற்ற உணர்வு எங்களுக்குள்ள இருந்துது.
 
எப்டின்னாலும், இந்த இடைவெளி வந்ததுக்கு, கணவன்ங்கிற முறையில, என் சைடும் நிறைய தப்பு இருக்குமில்லை, இதுக்கும் மேல, புதுசா இன்னொரு கல்யாணமா பண்ணப் போறோம், அப்டி ஏன் பிரியனும்னு நினைச்சுவிட்டாலும், மனசளவுல நானும், அபர்ணவும் ரொம்ப விலகிட்டோம்.
 
கீதா ஹஸ்பெண்டுக்கும் அப்படித்தான். அலுவலகத்தில் தன்னைப் பலரும் பெரிதாக மதிக்கும் போது, அதைப் பொருட்டாகவே மதிக்காத கீதா மேல அவருக்கு பயங்கர வருத்தம். அதுனாலியே, தனக்கு எங்க ரெகக்னிஷன் இருக்கோ, அங்க கவனத்தை செலுத்தி முன்னேற ஆரம்பிச்சிட்டாரு. தன்கிட்ட எப்டி நடந்தாலும், தன் பொண்ணை வளர்க்கிற விதத்துல கீதாகிட்ட குறையே சொல்லிட முடியாதுங்கிறதுனாலியே, அவரும் பிரிவைப் பத்தி நினைக்கவே இல்லை.
 
மனைவியா பாக்குறதை நிறுத்தி, எங்க குழந்தைகளோட அம்மான்னு பாக்க ஆரம்பிச்சிட்டோம். அதுனால, எங்க ரெண்டு பேருக்கும் இது சாதாரண துரோகம் மட்டுமே.
 
ஆனா, சுந்தருக்கு இது நம்பிக்கை துரோகம். தன் மனைவி, தனக்கு செஞ்ச துரோகம். தனக்கு துரோகம் செய்யுறதுக்காக, தன் குழந்தையோட அம்மாங்கிற கடமையையும் சரியா செய்யாத அளவுக்கான துரோகம். எந்தக் காரணமுமே இல்லாம, இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண எப்டி மனசு வந்திருக்கும்? எல்லாம் பண்ணிட்டு வந்து, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம எப்டி என்கிட்டயே சிரிச்சு பேச முடியுது? அவனையே, அவளோட சொந்தத் தங்கச்சிக்கு மாப்ளையா எப்டி பாக்க முடியுதுன்னு ஏகப்பட்ட கேள்விகள்!
 
சுந்தர், எங்க ரெண்டு பேரையும் விட ரொம்பவே வயசுல சின்னவரு! இந்த ஏஜ்லியே, தன் மனைவி, தன்னை விட்டுட்டு வேற ஒருத்தனைத் தேடி போயிருக்கான்னா, தாம்பத்ய விஷயத்துல தன்னால, தன் மனைவியைத் திருப்தி படுத்த முடியலையோன்னுல்லாம் டவுட்டு வர ஆரம்பிச்சிடுச்சி.
 
அ… அண்ணா!

[Image: beautiful-actress-rashi-khanna-amazing-w...wnload.jpg]

கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் மனம் வலித்தது. மனைவியின் துரோகம், ஒரு ஆணுக்கு சைக்காலஜிக்கலாக என்ன விதமான வலியைத் தரும் என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.

 
தான் யோசிக்கிற விதம் ரொம்ப தப்புன்னு அவரு சுதாரிச்சிகிட்டதுனாலத்தான் கவுன்சிலிங்க்கே வந்தாரு. நான் டாக்டர், இந்த ஃபீல்டுங்கிறதுனால வசதியா போச்சுன்னாலும், உண்மையான கவுன்சிலிங், நாங்க மூணு பேரும் மனசு விட்டு பேசிகிட்டப்பதான் கிடைச்சுது!.
 
இருந்தாலும் அவரு அடிமனசுல, நான் இவ்ளோ நல்லவனா இருந்தும், முழு உரிமை கொடுத்தும், தன் மனைவியே தனக்கு துரோகம் பண்ணிட்டாங்ககிறதை அவரால ஜீரணிக்க முடியலை. தான் என்னதான் மத்தவங்க மேல அன்பா இருந்தாலும், தன் மேல அன்பு செலுத்த, துணையா நிக்க யாரும் உண்மையா இல்லியேன்னு வருத்தம் இருந்துது. ஆனா அக்கா பண்னது தப்பு, நீங்க ஃபீல் பண்ணாதீங்க மாமான்னு நீ அழுதப்பதான், நீ காட்டுன அன்பு, அவர் மனசை நெகிழ வெச்சிடுச்சு. ஒரு பாசிட்டிவ் மன நிலையைக் கொடுத்துது. அவரும் மனசு விட்டுப் பேசினாரு. இனி சரியாகிடுவாரு.
 
மெடிக்கல் ரீதியா நான் கவுன்சிலிங் கொடுத்தாலும், உணர்வுப் பூரமா அவங்க கூட இருந்த டைம்தான், எனக்கு நானே கவுன்சிலிங் எடுத்துகிட்ட தருணங்கள்! இப்ப உன்கிட்ட பேசுன நேரம் உட்பட!
 
என் கூட பேசுனதுமா?
 
ஆமா, சுந்தர் சொன்ன மாதிரி நீ ஸ்பெஷல்தான். உண்மையான அன்பு காட்டுறவங்களைப் பாத்தா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் வருமே அது மாதிரி.
 
நீங்க ரொம்ப அதிகமாச் சொல்றீங்கண்ணா! அ… அந்த அண்ணா, கீதாவோட ஹஸ்பெண்ட் எப்டி இருக்காரு?
 
அவருக்கும் ஷாக்தான்! ஆனா, அவருக்கு விஷயத்தைச் சொன்னதே அவரோட பொண்ணு. தன் பொண்ணுக்கு, இந்த வயசுல இப்படி ஒரு அதிர்ச்சிங்கிறதுனால சமாளிச்சு நின்னாலும், அவரும் எங்க கூட மனசு விட்டு பேசுன பின்னாடிதான் தெளிவானாரு. தன் பொண்ணு உள்ளுக்குள்ள என்ன ஃபீல் பண்றா, இதுல அவளுக்கு என்ன மாதிரி கவுன்சிலிங் கொடுக்கனும், ஃபியுச்சர்ல இதனால அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாதேன்னுதான் அவரோட கவலையெல்லாம்.     
 
அ… அடுத்து என்ன பண்றதுண்ணா?
 
யோசிக்கனும்! அவசரப்படாம, தெளிவா யோசிச்சுதான் எடுக்கனும்.
 
அடுத்த நாள் அலுவலகம் வந்த சுந்தர், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். தெரிந்த உண்மையும், அது கெடுத்த தூக்கமும், அவன் முகத்தின் சோபையைக் குறைத்திருந்தாலும், ஹாசிணியின் கண்களுக்கு மிக அழகாகவே தெரிந்தான்.
 
[Image: raashi-khanna-actress-upcoming-movies-li...i-2017.jpg]

தன் கஷ்ட காலங்களில், தன்னுடன் துணை நின்ற, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பெண், எந்தக் காலத்திலும், ஆணின் கண்ணுக்கு பேரழகியாய் தெரிவது போல், தன்னம்பிக்கையாய், நேர்மையாய், வாழ்வின் சோதனைகளில் துவளாமல், நிமிர்ந்து நிற்கும் ஆண், பெண்ணுக்கு பேராண்மை மிக்கவனாய் தெரிவது  போல், சுந்தர், ஹாசிணிக்கு தெரிந்தான்.

 
இந்த ஒரு வாரம், அலுவலகத்தில் தேங்கிய வேலைகளை, புத்துணர்ச்சியுடன், பார்க்க ஆரம்பித்ததையும், அவன் மனம் எதிர்காலத் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதையும், சற்று பிரமிப்புடனே பார்க்கத் துவங்கினாள்!
 
தன் தலையைத் தட்டிக் கொண்டவள், மாமா தெளிவாயிட்டாரு, நான் குழம்ப ஆரம்பிச்சிட்டேன் என்று சிரித்துக் கொண்டவள், அவரை மாதிரியே, தன் முடிவு உணர்ச்சி வசப்பட்டு இல்லாமல், தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
 
ஒரு வாரம் கழித்து, வார இறுதியில் சுந்தர் மற்ற இருவரையும் சந்தித்த போது ஹாசிணியும் உடனிருந்தாள்.
 
இடைபட்ட காலத்தில், ஹாசிணி கீதாவின் கணவனான ராமினை மட்டுமல்ல, அவள் மகளையும் சந்திருந்தாள்.
 
பார்த்த காட்சிகளின் அதிர்ச்சியும், தான் மிகவும் நம்பிய, தன் அன்னையின் செயலும், அவளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், யாரிடமும் அதை மனம் விட்டுப் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த இளம் மொட்டு, ஹாசிணியிடம் பேசிய பின் தான் தெளிவடைந்திருந்தாள். தன் மகளின் முகத்தில் மீண்டும் புன்னகையையும், புதுத் தெளிவையும் கொண்டு வந்த ஒற்றைக் காரணத்திற்க்காகவே, கீதாவின் கணவனுக்கும், ஹாசிணி அன்புத் தங்கையாகியிருந்தாள். அபர்ணாவின் கணவனுக்கு, ஹாசிணி மேலிருந்த அன்பும், மதிப்பும் இன்னும் கூடியது.
 
ஏன் ஹாசிணி, இன்னும் உங்கக்காகிட்ட விவேக்குக்கு நோ சொல்ல மாட்டேங்குறீயாம்? சுந்தர் ரொம்ப ஃபீல் பண்றாரு? என்று கேட்டது அபர்ணாவின் கணவன் மதுசூதனன்.
 
ஆமா, ஹாசிணி, வேணாம்ன்னு சொல்லிடலாம்ல்ல? என்றது ராம்!
 
நான் சொல்றது இருக்கட்டும், முதல்ல நீங்க அந்த விவேக்கை என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க?
 
அதுக்கும், இதுக்கும் என்ன ஹாசிணி சம்பந்தம்? நீ இதுல உள்ளயே வராத என்று கோபமாகப் பேசியது சுந்தர்.
 
சூப்ல காரம் கம்மியாதானே இருக்கு, நீங்க ஏன் கடு கடுன்னு பேசுறீங்க மாம்ஸ்? 

[Image: rashi-khanna-wallpaper.jpg]

சுந்தரின் கோபத்தினை அலட்சியம் செய்து ஹாசிணி பேசும் சுட்டித்தனம், ராமையும், மதுவையும் ரசிக்க வைத்தது என்றால், சுந்தருக்கு இன்னும் கோபத்தைக் கொடுத்தது.

 
ஹாசிணி, விளையாடாத. நான் சீரியசா சொல்றேன். அந்த விவேக்கே நாங்க பாத்துக்குறோம். நீ இதுல உள்ளயே வராத. எக்காரணம் கொண்டும், அவனோட நிழல் கூட, உன் பக்கம் திரும்புறதை நான் விரும்பலை!
 
அவன் அக்கறையின் மனம் கனிந்தவள், நான் வேணாம்ன்னு சொல்லிட்டா, அவிங்க அடுத்த ஸ்டெப்புக்கு போயிடுவாங்க மாமா. அதான் ஒரு மாசம் டைம் கேட்டிருக்கேன்.  இப்ப அவங்க வெயிட் பண்ணுவாங்க. கவனம் முழுக்க என்னைக் கன்வின்ஸ் பண்றதுலதான் இருக்கும். அக்கா டெய்லி, என்கிட்ட விவேக் புராணம் பாடிட்டிருக்காங்க. நான் கேசுவலா கேக்குற மாதிரி, அவனைப் பத்தி கொஞ்சம், கொஞ்சமா விஷயம் தேத்திட்டிருக்கேன். அநேகமா, அடுத்த வாரத்துல, அவனைப் பத்தின பிகேவியர் அண்ட் கேரக்டரை ஓரளவு ஸ்டடி பண்ணிடுவேன்.
 
அப்டி என்ன தெரிஞ்சிகிட்ட ஹாசிணி?
 
அவனுது சின்ன ஃபாமிலிதான். ஒரே ஒரு அண்ணன். ஆனா, அவன் தனிக்குடித்தனம் போயிட்டான். ஓரளவு அப்பர் மிடில் கிளாஸ் ஃபாமிலி. இவன் காசும் அனுப்ப மாட்டான், அதுக்கு தேவையும் இல்லை. அடிக்கடி ஊருக்கும் போறதில்லை. இந்த மாதிரி விசயங்கள்லியே தொடர்ந்து கவனம் செலுத்துறதுனால, அவனுக்குன்னு நம்பிக்கையான க்ளோஸ் நட்பு, உறவுன்னு வேற யாரும் அதிகம் இல்லை. டிடெக்டிவோட ரிப்போர்ட் படி யோசிச்சா, இவனோட தப்புகள் இவனோட அண்ணனுக்கு தெரிஞ்சதுனாலத்தான் தள்ளி நிக்கிறார்ன்னு தோணுது. அவன் அப்பாவுக்கும் கூட பையனைப் பத்தி ஓரளவு தெரியும் போல! பட், இதைக் கண்ஃபார்ம் பண்ணனும். பண்ணிடுவேன்!
 
மிகக் கேசுவலாக, தட்டினைப் பார்த்து சாப்பிட்டுக் கொண்டே ஹாசிணி சொன்ன தகவல்களைக் கேட்டு மூவருமே பிரமித்துப் போயிருந்தனர்.
 
சுந்தர் பிரமித்தாலும், அவள் மீதான அன்பினால், இதெல்லாம் நாங்க உன்னைக் கேட்டோமா? இது தேவையில்லாத வேலை.
 
நீங்கக் கேட்டுட்டாலும்! என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டா, தெளிவா முடிவெடுக்கனும்ன்னு ஓவர் பில்டப் கொடுத்து, வானத்தைப் பாத்து யோசிச்சுகிட்டுதான் இருக்கீங்க. அவ்ளோக்கெல்லாம் அவன் ஒர்த்தே இல்லை! பொண்ணுங்க கூட பேசுறதைத் தவிர, அவனுக்கு வேற ஒரு மண்ணும் அவனுக்குத் தெரியாது. அடிச்சுப்போட்டா, அவங்கம்மாவைத் தவிர, அவனுக்காக வரிஞ்சு கட்டிட்டு வர, சப்போர்ட்டும் கிடையாது.
 
பேச்சுக்குதான், தான் பெரிய இவனாட்டாம், தன்கிட்ட வர்ற லேடீஸ்கிட்ட பில்டப் பண்ணிக்குறான். சைக்காலஜிக்கலா, அவனுக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸா கூட இருக்கலாம். தனக்குன்னு நெருக்கமான நண்பர்கள், சொந்தம்ன்னு யாரும் இல்லையே, இத்தனைப் பெண்களை எமாத்த முடிஞ்சாலும், ஒரு பொண்ணையும் லவ் பண்ண வைக்க முடியலியே, ஒழுங்கா ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க துப்பில்லையேன்னு பல பிரச்சினைகள் இருக்கலாம். அதுல இருந்து மறைக்க இப்படி பேசிகிட்டு திரியுறான்.  அவன் ஒருத்தனுக்கு, நீங்க மூணு பேரும், ரூம் போட்டு வேற யோசிக்கிறீங்க! அதுவும் இத்தனை நாளா?!
 
அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு, மதுசூதனனே பிரமித்தார். எவ்ளோ பெரிய சைக்காலஜிக்கல் விஷயத்தை, இவ்வளவு அநாயசமாய் சொல்றா இவ என்று?
 
இதையெல்லாம் எப்படி யோசிச்ச ஹாசிணி?!
 
நீங்க சொன்னதுதான் டாக்டர். பிரச்சினைக்குள்ள இருந்து பாத்தா, தீர்வு கிடைக்காதுன்னு சொன்னீங்கள்ல? அதேதான். தெரிஞ்சோ, தெரியாமலோ, நீங்க மூணு பேரும், அவனை உங்களோட போட்டியாளரா பாக்க ஆரம்பிச்சுட்டீங்க! ஆனா, நான் அவனை ஒரு பொருட்டாவே பாக்கலை. இத்தனை பேரு சேந்து ப்ளான் பண்ணி தூக்குற அளவுக்கு அவன் ஒர்த்தே இல்லை!
 
ஹாசிணி சொன்ன விதத்தில், மூவருக்கும் சிரிப்புதான் வந்தது. அவள் மறைமுகமாக மூவரையும் இலேசாகச் சீண்டி, மோடிவேட் செய்து கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்களிடையே தொலைந்திருந்த நகைச்சுவையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்.
 
சுந்தர் கனிவாகச் சொன்னான்.
 
நீ சொன்னது ஒரு விதத்துல கரெக்ட்னாலும், நாங்க யோசிக்கிறது அவனுக்காக இல்லை ஹாசிணி! எங்களுக்காக. எந்த விதத்துலியும், நாங்க இதுவரை கொண்டு வந்திருக்கிற எங்க உழைப்புக்கோ, குடும்பத்துக்கோ, முக்கியமா எங்க குழந்தைங்க மனசு கஷ்டப்படும் படியோ எந்த விஷயமும் நடப்பதை நாங்க விரும்பலை.
 
ராமோட பொண்ணு, இதையெல்லாம் பாக்க வேண்டியதாயிடுச்சேன்னு, ஏற்கனவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. அவனை அடிச்சு தூக்கவோ, வேற ஏதாவது பண்ணவோ, நிமிஷம் ஆகாது. ஆனா, அப்படி இருக்கக் கூடாதுன்னுதான் யோசிக்கிறோம். 
 
ம்ம்… ஏதோ இவ்ளோ சொல்றீங்களோன்னு விடுறேன். இருந்தாலும், இன்னும் ஒரு வாரம்தான் உங்களுக்கெல்லாம் டைம்! அதுக்குள்ள பிளான் என்னன்னு சொல்றீங்க! இல்லை…  
 
என்னை என் பொண்ணு கூட இப்டி மிரட்டினதில்லை ஹாசிணி என்று ராம் சிரித்தான்.
 
இனிமே மிரட்டச் சொல்றேண்ணா, டோண்ட் ஒர்ரி! தா அந்தப் பக்கம் பாருங்க, அவ்ளோ பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓனரு, சைக்கியாட்ரிஸ்ட்,ன்னு சொல்லிகிறாரு, அந்த விவேக்குக்கு ஸ்கெட்ச் போட இப்படி யோசிச்சிட்டிருக்காரு! சைக்காலஜிக்கலா அவனை எப்டித் தட்டனும்ன்னு இன்னேரம் முடிவு பண்ணியிருக்க வேணாம? என் கவலையெல்லாம், இவரையும் நம்பி வர்ற, இவரு பேஷண்ட்டுகளை நினைச்சாதான் பாவமா இருக்கு என்றவளின் பேச்சில், மதுசூதனன்னுக்கு புரையேறியது.
 
என்ன பேச்சு ஹாசிணி இது என்று சுந்தர் அதட்டியதற்க்கு,
 
அவிங்க ரெண்டு பேரும்தான், என்னைத் தங்கச்சின்னு சொன்னாங்க, தங்கச்சின்னா இப்டித்தான் ஓட்டிகிட்டு இருப்பா, உங்களுக்கென்ன?
 
ஹாசிணியைத் தடுக்காத சுந்தர். ரொம்ப நாள் ஆச்சு, இப்டி ஜாலியா இருந்து. உண்மையாலுமே அவ எங்க தங்கச்சிதான். அவ இப்டி இருக்கிறதுதான் எங்களுக்குப் புடிச்சிருக்கு என்று புன்னகையுடன் சொன்னவுடன்,
 
இப்ப என்ன பண்ணுவீங்க என்று சுந்தரைப் பார்த்து, பழிப்பு காட்டிச் சிரித்தவளின் செய்கையில் அனைவரது புன்னகையும் இன்னும் கூடியது.
 
[Image: Tholi-Prema-Trailer-Review.jpg]
Like Reply
sema update. next implementation thaan.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Super update
[+] 1 user Likes Naan avan illai's post
Like Reply
Superb update
[+] 1 user Likes kangaani's post
Like Reply
Semma thala
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
Cool update bro very nice continue bro
[+] 1 user Likes Krish126's post
Like Reply
Nice feel to the heart
[+] 1 user Likes dotx93's post
Like Reply
Bro don't mistake me Vivek psychology character konjam haasani describe panni solli iruntha innum nalla irunthrukum avanoda weakness cover Panna show off panra tha konjam explain panni irukalam nu nenaikiran but ur work is super and ultimate...
[+] 1 user Likes karthappy's post
Like Reply
Lovely narration.
[+] 1 user Likes Bigil's post
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Very good update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
Haasini has become a show stealer.
[+] 1 user Likes Karmayogee's post
Like Reply
Excellent
[+] 1 user Likes Dinesh Raveendran's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)