Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
வடிவேலுவின் புது படத்திற்கும் தடை! புலிகேசிக்காக சமாதானம் பேசிவரும் முக்கிய பிரபலம்

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் துவங்கிய 10 நாட்களில் நின்றுபோனது. வடிவேலு இயக்குனருடன் சண்டை போட்டு கிளம்பியவர் திரும்ப ஷூட்டிங்கிற்கு வரவே இல்லை. அதனால் படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணாகிப்போனது.
தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த பிரச்சனை பற்றி ஷங்கர் புகார் அளித்த நிலையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் நடிப்பதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. அது பற்றி அறிந்து தயாரிப்பாளர் சங்க இயக்குனரை அழைத்து பேசி படத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் வடிவேலுவை அணுகிய மற்ற இயக்குனர்களையும் அழைத்து பேசி தடை போட்டுள்ளனர்.
இதனால் இனி வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடிக்காமல் இனி வேறு படங்களில்நடிக்கவே முடியாது என்கிற சூழ்நிலை தான் உள்ளது.
இந்நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே சமாதானம் பேச தற்போது சீமான்முயற்சித்து வருகிறாராம். விரைவில் 24ம் புலிகேசி படம் மீண்டும் துவங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
'மீ டூ'-வில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை!

[Image: suicide_710x400xt.jpg]

மீடூ' பிரச்சனையில் சிக்கிய பிரபல இயக்குனர் ஆர்க்ய பாஸு, இந்த பிரச்சினையினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வெளியே வர முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த 'மீடூ' அமைப்பு, மெல்ல மெல்ல தென்னிந்திய திரையுலகின் பக்கமும் வந்தது. முதலில் 'மீடூ' என பெயரிடமால் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தெலுங்கு  நடிகை ஸ்ரீரெட்டி.
[Image: image.jpg]
பட வாய்ப்பு தருவதாக கூறி, பலர் தன்னை பயன்படுத்தி கொண்டு  ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார். இதில் தெலுங்கு முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் பிரபலங்கள் பலரும் சிக்கினர்.
[Image: chinmayee-blame-netizens.jpg]
இவரை தொடர்ந்து 'மீடூ'  மூலம் கவிஞர் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார் பாடகி சின்மயி. பின் வரிசையாக, பல நடிகைகள் மற்றும் வேலைக்கு செல்லும் சாதாரண பெண்கள் கூட தங்களுக்கு வெளியுலகில், மற்றும் அலுவலகங்களில் நடந்த பாலியல் தொந்தரவு குறித்து 'மீ டூ' வில் வெளியிட்டனர்.
[Image: -MeToo.jpg]
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 'மீடூ' பிரச்சனையில் சிக்கியவர்  பிரபல இயக்குனர் ஆர்க்ய பாஸு. இந்த சம்பவத்திற்கு பின் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
படம் இயக்குவதில் அவரது கவனம் குறைந்தது, வீட்டை விட்டு வெளியே செல்வதை குறைத்து கொண்டார். இதனால் இவருடைய குடும்பத்தினர், மருத்துவர்கள் உதவியோடு கவுன்சிலிங் கொடுத்தனர்.
[Image: suicide.jpg]
பின்னர், திரைப்படம் இயக்க வில்லை என்றாலும், திரையுலகை சேர்ந்த மற்ற வேளைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். ஆனால் அவர் முழுமையாக குணமாகாத நிலையில், திடீர் என அவருடைய அறையில் கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இயக்குநர் ஆர்க்ய பாஸு , தற்கொலைக்கு காரணம், மீடூ பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Like Reply
சத்ரு... மிரட்டும் வில்லன்.. அசத்தும் போலீஸ்! விமர்சனம்

Star Cast: கதிர், சிருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், சுஜா வருனே
Director: நவீன் நெஞ்சுடன்

சென்னை: பலமான எதிரியிடம் சிக்கி தவித்து, அவரை வீழ்த்தும் போலீஸ் ஹீரோவின் கதை தான் சத்ரு.
கதிர் ஒரு நேர்மையான ரப் அண்ட் டஃப் போலீஸ் அதிகாரி. உதவி ஆய்வாளராக இருக்கும் அவர் உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாதவர். இதனால் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் லகுபரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்துகிறார்கள். அப்போது கதில் குறிக்கிட்டு, லகுபரண் டீமில் இருக்கும் ஒருவரை போட்டுத் தள்ளுகிறார். இதனால் வெறியாகும் லகுபரண் மற்றும் டீம் கதிரையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க துடிக்கிறார்கள். இந்த திருடன் போலீஸ் விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் மீதிக் கதை.

[Image: sathru653534-1552053091.jpg]

[color][size][font]
காக்க காக்க தொடங்கி, தமிழ் சினிமாவில் இதுபோன்று ஏராளமான போலீஸ் திருடன் கதைகள் வந்துள்ளன. ஆனால், எந்த சமரசமும் இல்லாமல், எடுத்துக்கொண்ட கதையை மிகவும் நேர்த்தியாக, விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் வித்தியாசப்பட்டு கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன்.
முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக நகர்கிறது படம். பார்வையாளர்களின் கவனம் திரையில் இருந்த அகலாத வண்ணம் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஹீரோவுக்கும், வில்லனுக்குமான மோதல் காட்சிகளை எதார்த்தமாக காண்பித்திருக்கிறார். முருகனின் சூரசம்ஹார கதையை ஒப்பிட்டு, புத்திசாலிதனமாக திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.[/font][/size][/color]
Like Reply
[Image: sathru6535-1552053098.jpg]
பரியேறும் பெருமாளை அடுத்து, கதிரின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம். இதுவரை கதையின் நாயகனாக நடித்து வந்த கதிரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்து செல்கிறது சத்ரு. மிகவும் கமர்சியலாகவும் இல்லாமல், அதே நேரம் சுவாரஸ்யமாகவும் படம் இருப்பதால், இந்த படம் நிச்சயம் கமர்சியல் ஏரியா பக்கம் கதிரை அழைத்து செல்லும்
காக்கி யூனிபார்ம், முறுக்கெறிய உடல், ரேபான் க்ளாஸ் என போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டுகிறார். திருடர்களில் இருந்து உயரதிகாரிகள் வரை அசால்டாக கையாள்வது, எதிரி யார் என தெரியாமல் திண்டாடுவது என லைக்ஸ் அள்ளுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.

[Image: sathru65353434-1552053085.jpg]
படத்தின் மையமே வில்லன் கதாபாத்திரம் தான். யாருடா இந்த பையன் என கேட்கும் அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார் லகுபரன். கொடூரமான செயல்களை குற்ற உணர்ச்சியே இல்லாமல் அசால்டாக செய்து மிரட்டுகிறார். ஆனால் சில காட்சிகளில் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். லகுபரனுடன் வில்லன் டீமில் வரும் கியான், சத்து உள்ளிட்ட பசங்களும் சிறப்பாக வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். காட்டியிருக்கிறார்கள்.
சிருஷ்டி டங்கே பேருக்கு தான் ஹீரோயின். வழக்கமாக ஹீரோவுடன் டூயட் பாடவாவது ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் இல்லாததால், அந்த வாய்ப்பும் சிருஷ்டிக்கு இல்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், தனது கண்ணக்குழி அழகில் ரசிகர்களை மயக்குகிறார்.
சுஜா வருணிக்கு இந்த படத்தில் வில்லி ரோல். வழக்கம் போல் நன்றாகவே செய்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் நீலிமா, பொன்வண்ணன், மாரிமுத்து, ரிஷி, பவன் என நிறைய பேர் நடித்துள்ளனர். அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
Like Reply
[Image: sathru65353434435-1552053078.jpg]
புதிதாக எதுவும் முயற்சிக்காமல், காட்சிகளுக்கு தகுந்தாற்போல் பின்னணி இசையமைத்திருக்கிறார் சூர்யபிரசாத். படத்தின் விறுவிறுப்புக்கு பின்னணி இசை நன்றாக உதவியிருக்கிறது.
முதல் காட்சியிலேயே இம்ப்ரஸ் செய்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படம் ராவாக தெரிவதற்கு இவரின் ஒளிப்பதிவு முக்கிய காரணம். ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கில் படம் நகர்வதே தெரியவில்லை. திரைக்கதைக்கு தகுந்த மாதிரி விறுவிறுப்பாக எடிட் செய்திருக்கிறார்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]

[Image: sathru653534344354-1552053170.jpg]
படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் அதிக கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும் அதே அளவுக்கு கவனம் செலுத்தி இருக்கலாம். இதுபோல் திருடன் போலீஸ் கதைகள் ஏராளமாக வந்துவிட்டபடியால், சத்ருவின் கதை கொஞ்சம் பழசாக தெரிகிறது. அதேபோல் முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். ஹீரோவும் வில்லனும் சர்வ சாதாரணமாக ஏகப்பட்ட கொலைகளை செய்வதும், கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்கிறது.
போலீஸ் - திருடன் கதையை வித்தியாசமாக சொன்ன விதத்தில் சத்ரு தனித்து நிற்கிறான்.
Like Reply
[Image: 77iu7gu_boomerang_625x300_09_March_19.jpg]

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘பூமராங்’. பொழுது போக்கு அம்சங்களை கடந்து சினிமாவில் சமீக காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள், சமூக பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டு திரைப்படங்கள் வரத்தொடங்கி இருக்கிறது. இது போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய நாட்டில் வலுபெற்று வரும் மிகப்பெரிய பிரச்னையாக கருதப்படும் ஒரு பகுதி விவசாயிகளின் பிரச்னைதான் ‘பூமராங்’.
தீ விபத்தில் சிக்கி தனது முகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் சிவா என்பவருக்கு விவசாய புரட்சி செய்து எதிரிகளால் கொள்ளப்படும் சக்தியின் (அதர்வா) முகத்தை முகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கிறார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சைக்கு பின் சக்தியை போலவே இருக்கும் சிவாவை ஒரு கூட்டம் கொல்ல முயற்சிக்கிறது. இதனை அறிந்து கொண்டவர், தனக்கு முகம் கொடுத்தவர் யார், எதர்காக அவரை போல இருக்கும் என்னை கொல்ல முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள புறப்படுகிறார். சக்தி யார் எந்த ஊரை சேர்ந்தவர், அவரை பின்தொடர்ந்த ஆபத்து என்ன சக்தியின் விவசாயப்புரட்சி என்ன ஆனது என்பதுதான் பூமராங் படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் விளையாட்டு இளைஞனாக நடித்திருக்கும் அதர்வா இரண்டாம் பாதியில் புரட்சிகர இளைஞனாக படம் பார்க்கிறவர்களை ஈர்க்கிறார். இதுவரை அதர்வா ஏற்று நடிக்காத காதாபாத்திரம், சவாலான கதாபாத்திரம் என்பதை அறிந்து தன்னுடைய முழு திறமையையும் வெளிபடுத்தி நிறைவாக நடித்திருக்கிறார் அதர்வா. முதல் பாதியில் அதர்வாவின் காதலியாக வரும் மேகா ஆகாஷ், கதாநாயகிக்கு பேசும் அளவிற்கு கனமான காட்சிகளும் கதாபாத்திரமும் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கட்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் அதர்வாவின் நண்பனாக வரும் சதீஷ் எப்போதும் போல் தன்னுடைய நையாண்டி கமெண்ட்டுகளில் சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் அதர்வாவிற்கு நண்பனாக வரும் ஆர்.ஜே.பாலாஜி எப்போதும் போல் தற்போதைய அரயலை தனது கமெண்ட்டுகளில் சிர்க்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று தன்னுடைய நடிப்பால் படத்தில் அதிக ஸ்கோர் எடுக்கிறார். மற்ற திரைக்கலைஞர்கள் அனைவரும் படத்தின் இன்னொரு தூணாக இருக்க ரதன் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு வலுசேர்க்கிறது.
நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியாவில் நிலவும் விவசாயப் பிரச்னைக்கு எந்த அளவிற்கு தீர்வு கிடைக்கும் என்பதை இந்த படம் வலுவாக பேசியிருக்கிறது.
சமகால அரசியலில் மத்திய மாநில அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களை பாதித்திருக்கிறது என்பதை ஆதார் கார்டு முதல், விவசாய பிரச்னைகளை நையாண்டியாக பேசி கடக்கும் விதத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. உறுப்பு தானம், குருதி தாணம் போன்று தோல் தானத்தின் தேவையையும் இப்படம் பேசியிருக்கிறது. படத்தின் முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தினாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்படைகிறது. படத்தில் இடம் பெற்ற கிராப்பிக்ஸ் இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ என்று தோன்றிது. மொத்தத்தில் நீர் பிரச்னை, விவசாய பிரச்னை, இதன் மூலம் நடத்தப்படும் அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்களின் தந்திரம் என படம் பல கேள்விகளையும் முடிச்சுகளையும் கட்டவிழ்கிறது.
பெரும் முதலாளிகளுக்கான ஐடி நிறுவனங்களில் ஆட்டு மந்தைகளைப் போல் பெரும் இளைஞர் சமூகம் அடைப்பட்டு கிடப்பதை விட்டு இந்நாட்டு இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையயும் அடுத்த தலைமுறைக்கும் விவசாயத்தை கடத்த வேண்டும் என்பதுதான் படம் பேசி இருக்கும் முக்கிய அரசியல்.
Like Reply
[Image: nrm37mb_to-let_625x300_21_February_19.jpg]
இந்தாண்டுக்கான தேசிய விருதை வென்றது என்ற பெறுமையையும், பல சர்வதேச விருதுகளை வென்ற படம் என்ற கௌரவத்துடனும் திரைக்கு வந்திருக்கிறது இயக்குநர் & ஒளிப்பதிவாளர் செழியனின் "டூ லெட்".

2007ம் ஆண்டுக்கு பின் சென்னையில் ஆதிக்கம் செய்யும் ஐ டி துறையின் வருகையால் நடுத்தர, நலிந்த வர்க்கத்தினரின் அன்றாட தேவைகளின் ஒன்றான வீடு என்பது எப்படி போராடி அடையும் ஒன்றாக மாறியது என்பது தான் கதை. இந்த படத்தை ஒரு திரைப்படம் என்ற வட்டத்துக்குள் கண்டிப்பாக அடைக்க முடியாது. ஈசல் புற்றுபோல் உள்ள மொத்த சென்னையில், நிரந்தர வருமானமின்றி, பல கனவுகளை தூக்கி சுமக்கும் ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து அதை டாக்குமெண்டரி செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு எதார்த்தமான படம் தான் இது. ஏனென்றால் படத்தின் பல இடங்களில் நம்மையோ, நம் நண்பர்களையோ, அவ்வளவு ஏன்... யாரென்று தெரியாத ஒருவரையோ கூட நம்மால் ரிலேட் செய்து கொள்ள முடிகிறது. அதற்கு எழுத்து, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் ஒரு சேர பிணைந்திருப்பது தான் காரணம்.

கற்பனையை விட எதார்த்தத்திற்கு தான் வன்முறை குணம் அதிகம். எந்த ஒரு காரணமின்றி திடீரென வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் சொல்லுவதில் ஆரம்பிக்கிறது டூ லெட் புராணம். சினிமாவில் இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவோடு பகுதிநேர ரைட்டராக, பக்குவமான கணவனாக, குறும்புள்ள தந்தையாக, இளங்கோ எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சந்தோஷ். உடல் மொழியில் அவ்வளவு எதார்த்தம். கதை எழுதும் காட்சியில் ஒரு இயக்குநர் தன்னை எப்படி அர்ப்பணிக்கிறான் எனும் காட்சியாகட்டும், மறுகணமே கஞ்சி குடிக்கும் பொழுது வீடு பார்க்கவருபவர்கள் முன் எப்படி குறுகி நிற்கிறான் என்ற காட்சியாகட்டும் சந்தோஷின் நடிப்பு அருமை. கனவுக்கான ஓட்டமும், குடும்பத்திற்கான ஓட்டமும் ஒருசேர உள்ள ஒரு சராசரி மனிதனாக அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் பேரறுமை.

அமுதாவாக வரும் ஷீலா மிக கட்சிதமாக அவரது நடிப்பால் கதாபாத்திரத்துள் பொருந்துகிறார். வெளியில் சென்று வரும் கணவன்களுக்கு இருக்கும் போராட்டத்தை விட வீட்டிற்குள்ளே இருக்கும் மனைவி சந்திக்கும் போராட்டம் பெரிது என்பதை தன் நடிப்பால் அவர் வெளிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டியது. பேச்சில் நிதானம், வாடகை வீடு கிடைக்காத போதும் சொந்த வீட்டிற்கு கனவு காணும் சராசரி பெண், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் உணர்சிவசப்படுதல் போன்ற பல குணங்களால் அமுதா எனும் கதாபாத்திரத்தை நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து கொண்டிருக்கிறோமே என்று எண்ணும் அளவிற்கு அவரது எதார்த்த நடிப்பால் தன் கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாக பொருந்துகிறார் ஷீலா.

சித்தார்த்தாக வரும் தருணின் நடிப்பும் எதார்த்தம்... அழகு... ஒரு கட்டத்தில் வீடு தேடி அலையும் போது அனைத்து வீட்டிலும் டூ லெட் பலகையை நாள் முழுவதும் பார்த்து திரும்பும் சித்தார்த் அதே டூ லெட் பலகையை தன் வீட்டிலும் பார்க்கும் போது அவனது கற்பனையில் வீடு என்றாலே "டூ லெட்" பலகை இருக்கும் என அவனது ஓவியத்தில் வெளிப்படுவது கவிதை போன்றொரு காட்சி.

இந்த படத்தில் வரும் ஒவ்வோரு வீட்டு உரிமையாளரும் கிட்டதட்ட வில்லன்கள் போல் காட்டபட்டிருப்பது மட்டும் நமக்கு சற்று மிகைபடுத்தபட்டுள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. எனினும் கடைசியாக வரும் சேட் கதாப்பாத்திரம் ஆறுதல் தருகிறது. சினிமாகாரனுக்கு வீட்ட தான் கொடுக்க மாட்டாங்க, ஆனா நாட்டையே கொடுப்பாங்க எனும் போது சராசரி ரசிகனாக, சினிமா காதலனாக நம்மால் கைதட்டாமல் இருக்க முடியாது.

உண்மையிலேயே படத்தில் வீடு தான் பிரச்சனையா?, அல்ல வாடகை கொடுக்க முடியாத அளவுக்கு பணம் இல்லாதது தான் பிரச்சனையா? என படம் பார்க்கும் அனைவருக்கும் கேள்விகள் வரலாம். அதை இயக்குநர் ஒரு காட்சியில் அழகாக விளக்கியிருப்பது அருமை. ஒரு நொடியில் வாடகை 5500 ல் இருந்து 6000 ஆக மாறும்போது ஒரு குடும்ப தலைவனாக இளங்கோ ஒரு நொடி யோசிப்பதும், அதை பார்த்து வீட்டு உரிமையாளர் யோசிப்பதும், மறுகணமே பயத்தில் அந்த வாடகைக்கு அவன் சம்மதிப்பது தான் எதார்த்த வாழ்க்கை என்பதை அழகாக எழுதியுள்ளார் செழியன்.

சினிமா எடுப்பதும், குடும்பம் நடத்துவதும் ஒன்றே ஒன்றின் அடிப்படையில் தான்... பட்ஜெட்..... அதை சரியான இடத்தில் அவர் பதிவு செய்கிறார்.

படம் மே 4ம் தேதி காலையுடன் முடிகிறது. ஆனால் அன்றைய காலைக்கும், மாலைக்கும் இடைப்பொழுதில் நடுக்கும் சம்பவங்களை மட்டுமே ஒரு தனி படமாக எடுக்கலாம். அது கற்பனை செய்ய முடியாத ஒரு ரணத்தை கண்டிப்பாக கொடுக்கும். அதை இயக்குநர் செழியன் எடுப்பதை விட , படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் சிறிது நேரம் கற்பனை செய்து பார்த்தால் போதும். நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்.

டூ லெட்....... தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத, ரசிக்க கூடிய , கொண்டாட வேண்டிய ஒரு தமிழ் சினிமா..... மன்னிக்கவும், "ஒரு உலக சினிமா"
Like Reply
[Image: 8dq3vvig_sagaa_625x300_12_February_19.jpg]
  • நடிகர்கள்:
    சரண், கிஷோர், ஸ்ரீராம், பிரித்திவ், ஆயிரா, பாண்டி
  • இயக்குனர்:
    முருகேஷ்
  • தயாரிப்பாளர்:
    ஆர். செல்வகுமார்
  • பாடல்கள்:
    ஷபிர்
குற்றவாளிகளின் கூண்டுச் சிறை, சிறைச்சாலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த தமிழ்நாட்டு சிறைச்சாலையில் இதுவரை கானாத ஒரு இளம் சூழ்நிலை கைதிகளின் நட்பு, காதல், ஏக்கம், கனவு போன்வற்றை நமக்கு காட்டுகிறது “சகா” திரைப்படம்.

வடசென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருந்த சரண் இந்த படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோலி சோடா படத்தில் நடித்திருந்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் சரணின் நண்பர்களாக வருகிறார்கள். ப்ரித்விவ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

சூழ்நிலை சரணையும், பாண்டியையும் கொலை குற்றவாளிகளாக மாற்றிவிடுகிறது. சிறைக்கு செல்லும் சரண், பாண்டி இருவருக்கும் கிஷோர் மற்றும், ஸ்ரீராமின் அறிமுகம் கிடைக்கிறது. இளம் குற்றவாளிகளுக்கென்றே அமைக்கப்பட்ட சிறையில் நடக்கும் சண்டைபோட்டியில் பாண்டி இறந்து விடுகிறான். தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கூட இருந்த நண்பனை கொன்ற ப்ரிதிவ்வை பழிவாங்க துடிக்கும் சரண்.

ஆசை ஆசையாய் காதலித்த காதலியிடம் காதலை சொல்ல முடியாமலே சிறைக்கு வந்திருக்கும் கிஷோர், எப்படியாவது காதலியிடம்காதலை சொல்லிவிட வேண்டும் என்கிற தவிப்போடு சிறையில் இருக்கிறான், தன் அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க வரும் ஸ்ரீராம் என இவர்களின் கனவுகளும், கோபமும், நிறைவேறிதா, இவர்கள் என்னமாதிரியான பிரச்னையில் சிக்குகிறார்கள் எவ்வாறு அதிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்தை.

சிறைச்சாலையில் வாழும் சிறைகைதிகள் பற்றிய படங்கள் நிறைய வந்திருந்தாலும், சிறைச்சசாலையில் 18 வயதில் இருந்து 25 வயதுடைய இளம் குற்றவாளிக்களுக்கென்று தனிச் சிறைச்சாலை ஒன்று இருப்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. அப்படி ஒரு சிறைச்சாலையில் நடக்கும் அரசியலை அப்பட்டமாக திரையில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகேஷ்.

அங்குள்ள எல்லா கைதிகளுக்கு பின்னாலும் ஒரு பெரிய கதையும், கனவும் இருக்கத்தான் செய்கிறது. அதில் தென்படும் நியாயம் அநியாயம்தான் அவர்களை குற்றவாளிகளாக சிறை வைத்திருக்கிறது என்பதை படம் பார்க்கும் போது நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்த சமூகத்தில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பகுதி என்பதை ஆழமாக சொல்கிறது திரைப்படம். காதல் முக்கியம், அதைவிட என் நட்பு முக்கியம் என அன்பின் வெளிபாட்டில் வரும் வசனங்கள் நெகிழ வைக்கிறது.

படத்தோடு நம்மை பயணிக்க வைக்க கூடுதல் பலம் கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஷபிர். இந்த படத்தில் இடம் பெறும் பாடல்கள் குறைவு என்றாலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம்.
Like Reply
பெண்களுக்கான சினிமா ஆனால் எல்லா பெண்களுக்கும் அல்ல - 90ml விமர்சனம் - '90ml' Movie Review


[Image: 4pc0s7f8_90ml-oviya_625x300_04_March_19.jpg]
  • பிரிவுவகை:
    காமெடி டிராமா
  • நடிகர்கள்:
    ஓவியா, பொம்மு லட்சுமி, மோனிஷா ராம், மசூம் ஷங்கர், பொம்மு லட்சுமி
  • இயக்குனர்:
    அனிதா உதீப்
  • தயாரிப்பாளர்:
    உதீப்
  • பாடல்கள்:
    சிம்பு

சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வருகிறார் ரிட்டா (ஓவியா). அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் தாமரை (பொம்மு லட்சுமி), சுகன்யா (மோனிஷா ராம்), காஜல் (மசூம் ஷங்கர்) , பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்களைச் சந்தித்துப் பழகுகிறார். தாமரையின் (பொம்மு லட்சுமி) பிறந்த நாள் அன்று ஓவியா மது விருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத  மற்ற பெண்களும் தயங்கியபடி மது அருந்துகின்றனர். பின் ஒவ்வொருவராக பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் கருத்துகளையும் தங்களது வாழக்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர். சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகவும் தான் காதலிக்கும் நபருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருப்பதாகவும் புலம்புகிறார். அவரைத் தேற்றும் விதமாக சுகன்யாவைக் காதலனுடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரின் பிரச்னையையும் நண்பர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
ஓவியா இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அசத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் மற்ற பெண்களும் கதைக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். படத்தை தன்னுடைய இசையாலே நகர்த்திச்செல்கிறார் சிம்பு.
சமூகத்தில் எழும் எவ்வித விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை மிக சாமர்த்தியமாக கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அனிதா உதீப். தமிழ் சினிமாவிற்கு இந்த படம் நிச்சயமாக புதிதுதான்.
எந்த தவறுக்கும் இன்னெரு தவறு ஒரு போதும் சரியாகாது என்பது அடிப்படை நீதி. ஆண்கள் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள் அதனால் நானும் குடிக்கிறேன் தம் அடிக்கிறேன் என்பதெல்லாம் எப்படி சமத்துவத்தில் பொருந்தும். அதே போல் பெண்களை புனிதத்திற்குள் அடைத்து அடிமைப்படுத்துவதை வழக்கமாகக்கொண்டு திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.  குடிப்பது, கஞ்சா அடிப்பது இவை எல்லாம் தனிமனித ஒழுக்கத்தை சார்ந்த விஷயம் இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.  ஆண்கள் கூட்டாக அமர்ந்து தன்னுடைய முன்னால் காதலியை வசைபாடுவதும், ஏமாற்றுகாரிகள் பெண்கள் என்று நண்பர்களுக்கு உபதேசம் செய்வதும்தான் இதுநாள் வரை தமிழ் சினிமா கட்டிகாத்து வந்த கலாச்சாரம் என்பதில் நமக்கு மாற்று கருத்து இருக்காது. அதற்காக பெண்களும், குடியும் கூத்தாக இருப்பதுதான் சமத்துவம், பெண்களுக்காக சுதந்திரம் என்று சொல்வது அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனிமனித ஒழுக்கம்தான் ஒரு சமூகத்தின் உண்மையான நாகரீக  வளர்ச்சி. அதற்கு எதிர்முனையில் நிர்ப்பது அல்ல. இந்த சமூகத்தில் ஆண்கள் இப்படி இருக்க இதே சமூகத்தில் அதே போல், இதுதான் சுதந்திரம் என்று வாழ விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதையே இப்படம் காட்டுகிறது. இந்த படத்தை சிலர் பெண்ணியத்தோடு கூட ஒப்பிட்டு கூறுகிறார்கள். வன்முறைக்கு வன்முறை ஒரு போது தீர்வாகாது  என்று சொல்வது போல் தனி மனித ஒழுக்க சீர்கேட்டிற்கு இன்னொரு தனிமனித ஒழுக்க சீர்கேடு தீர்வாகாது. எனினும் இப்படத்தை இந்த சமூகத்தின் பெரும்பாண்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சமூகம் நிலை இல்லை என்பதே எதார்த்தம்.
இப்படத்தில் 377 சட்டம் பற்றியும், தற்பாலீர்ப்பு குறித்தும் பேசியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு முறையும் குடிக்கும் போதும் ஒரு புது பிரச்னையை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளுக்கு இந்த பெண்கள் தீர்வு காண்கிறார்கள் என்பது படத்தின் இன்னெரு சிறப்பு. படம் முழுவதும் தண்ணியும், தம்முமாக நகர்கிறது. ஒரு சில காட்சியில் வந்து போகும் சிம்பு ரசிக்க வைத்து கைதட்டல்களை பெறுகிறார். பெண் இயக்குநர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார், படம் முழுவதும் நான்கு பெண்களை சுற்றியே கதைக்களம் நகர்ககிறது. எனினும் எந்த இடத்திலும் ஆண்களை குறைசொல்லும் காட்சிகளோ வசனங்கோ இடம் பெறவில்லை என்பது படத்தின் இன்னொரு சிறப்பு.
மொத்தத்தில் தன் வாழ்க்கையைத் தன் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு; அம்மனிதர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடக்கம் என்பதுதான் 90 எம்.எல். முன்வைக்கும் அழுத்தமான பார்வை. அதை மாற்று சிந்தனையில் நேர்மையான முறையில் முன்வைத்திருக்கலாம் இயக்குநர்.
Like Reply
சென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்: குவியும் திரையுலகினர்

[Image: 1552574206-2847.jpg]

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' என்ற படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். இருவரின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆர்யா-சாயிஷா ரிசப்சன் இன்று சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பி.ஆர்.ஓக்கள் உள்பட பல திரையுலகினர் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Like Reply
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சாயிஷா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக தேனிலவு முடிந்தவுடன் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளாராம் சாயிஷா. அதன்பின்னரும் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.
[Image: 1552574222-5726.jpg]
Like Reply
[Image: rajini-vijay.jpg]
ரஜினி விஜய் நடத்திய ராஜ்ஜியம்.. போன வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூலில் இவர்கள் பங்கு தெரியுமா

நடிகர் நடிகைகளின் புதிய வரவுகள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது.
Like Reply
நடிகர் நடிகைகளின் புதிய வரவுகள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது. அந்த வகையில் போன வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த படங்களின் வருமானங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு போன வருடம் பாக்ஸ் ஆபீஸ் முலம் வந்த வசூல் அதிகம் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் 2.o மற்றும் சர்கார் படங்கள்
கடந்த வருடம் மட்டும் தமிழ் சினிமா மூலம் கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வருமானம் வசூல் எவ்வளவு என்றால் ரூபாய் 1500 கோடி.
இந்த மொத்த வசூலில் சர்கார், 2.O மட்டும் 70% க்கு மேல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு படங்களும் பெரும் வசூல் வேட்டை நடத்தியதாம்.
Like Reply
“பேரன்பும் பெரும் துயரமும் சந்திக்கும் புள்ளி”- இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம்

[Image: 9ruoi0vg_harish-kalyan-shilpa-manjunath_...rch_19.jpg]
  • பிரிவுவகை:
    காதல் டிராமா
  • நடிகர்கள்:
    ஹரிஸ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், பால சரவணன், மா,க,பா
  • இயக்குனர்:
    ரஞ்சித் ஜெயகொடி
  • பாடல்கள்:
    சாம் சி எஸ்.

‘புரியாத புதிர்’ திரைப்படப்படத்திற்கு பிறகு இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கி இருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது படைப்பை கொண்டுவந்திருக்கும் இவர் உறவுகளில் அன்பும், வெறுப்பும் சந்திக்கின்ற மய்யப்புள்ளியை தேடும் பயணத்தை படமாக்கி இருக்கிறார்.
தன்தந்தையின் ஆதிக்கத்திற்கு கட்டுபட்டு வாழ இயலாத தன் தாய், தனக்கான வாழ்கையை தேர்ந்தெடுக்கச்செல்ல, பேரன்பு கொண்ட அந்த தாயின் மீது கோபம் நிறைந்தவனாக வளர்கிறார் கௌதம்.(ஹரிஸ் கல்யாண்). தந்தையின் அரவணைப்பு இருந்தாலும் தன் தாயின் பிரிவால்  அதீத அன்பு வைத்தால் அதன் எல்லை பிரிவாக இருக்கும் என்கிற புள்ளியிலே நின்று விடுகிறார்.  யாரிடமும் அதீத அன்பை பெறவும் செலுத்தவும் அச்சப்படுகிறவராய் வளர்கிறார். பெறபடும் அன்பு ஏமாற்றத்தின் விளைச்சலை கொடுக்கும் என்கிற பயம் கௌதமை ஆட்கொள்கிறது.
தணித்து விடப்பட்டதாக உணரும் கௌதமிற்கு இயற்கை காதலின் பேரன்மையும் பெரும் துயரத்தையும் கொடுக்கிறது. தான் உயிராய் நேசிக்கும் ஒருவரையே கொல்லும் அளவிற்கு வெறுப்பது ஏன். நேசிப்பவரையே வெறுக்க வைக்கின்ற மய்ய புள்ளி எது? என்று தன்னை சுய பரிசோதனைக்குட்படுத்தும் பெரும் பயணம்தான் இப்படத்தின் மய்யக்கரு.
தாயை பிரிந்து வாழும் கெளதமிற்கு தாராவின்(ஷில்பா மஞ்சுநாத்)அன்பு கிடைக்கிறது. இவர்களின் காதல் உறவில் அவ்வபோது ஏற்படும் சிறு பிரச்னைகள், பிரிவின் விளிம்புக்கு செல்கிறது. இருவரும் வேண்டாம் என்று மறுத்தாலும் காதல் இவர்களை ஒவ்வொரு முறையும் இணைத்து விடுவது எதார்த்தம். காதலியின் நேர்மையான புரிதல் கௌதமிற்கு பிரிந்து விடுவோமோ என்கிற அச்சத்தை வலுக்க வைகிறது. ஒரு கட்டத்தில் காதலித்த பெண்ணையே கொலை செய்யும் அளவிற்கு கொடூர என்னத்திற்கு தள்ளப்படும் இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின்  மீதிக்கதை.
இந்த படம் ரொமாண்டிக் திரைப்படம் கிடையாது ஆனால் தேவையான அளவு அதை கொடுத்திருக்கிறார் இயக்குநர். தன்னை விட்டு வேறொரு ஆணோடு தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்க செல்லும் மணைவியின் நியாயமாண காரணத்தை உணர்ந்து, அதற்கு காரணம் தான்தான் என்பதை புரிதலோடு தன் வாழ்கையை நகர்த்தும் கௌதமின் தந்தையாக நடித்த பொன்வண்ணனின் நடிப்பு சிறப்பு.
சமகால இளைஞர்களின் காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், இருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவரின் புரிதல் என்ன என்பதையெல்லாம் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கலாச்சார ஒடுக்குமுறைகளை எல்லாம் கடந்து சமூகத்தை தெளிவாக உணர்ந்திருக்கும் தெளிவான இளம் பெண்ணாக நடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். ஒவ்வெரு முறையும் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனையின் போதும் நேர்மையான உரையாடலில் பிரச்னையை கடந்து போக நினைக்கு அவரது இயல்பான நடிப்பில் கைதட்டல்களை பெறுகிறார். சாம். சி. எஸ்சின் பிண்ணனி இசையில் பாடல்கள் படத்திற்கு வலுசேர்கிறது.   
காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்வதும், காதலித்த பெண்ணையே கொலை செய்வதும், தாக்குவதும், திரவ வீச்சு நடத்துவதும் இச்சமூகத்தில் நடந்து வரும் குரூரங்கள். ஆண் பெண் உறவுகள் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் நடக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு ஒரு ஆண் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள தவறுவதுதான் என்பதை இப்படம் தெளிவு படுத்துகிறது.
படத்தில் சில காட்சிகளில் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி நடித்திருக்கிறார். அந்த காட்சிகளை தவிற்திருக்கலாம் என்று தோன்றியது. சமகால இளைஞர்களை நேர்மையான புரிதலின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கிறது என்பதன் அடிப்படையில் சில காட்சிகளை அவர் தவிற்திருக்கலாம் என்று தோன்றியது.
கௌதமிற்கு நண்பர்களாக வரும் பால சரவணன், மாகபா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள பிரச்னை, அந்த பிரச்னைக்காக நேர்மையான காரணங்கள் இவை அனைத்தையும் உணர்ந்து இயக்கி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி என்பதை இப்படத்தில் இடம் பெரும் கதாபாத்திரத்தின் முக்கியதுவத்தை பார்க்கும் போது புரியும். அந்த வகையில் இந்த படம் அதீத அன்பு வைப்பவர்களை வெறுக்கும் வாழ்வின் அந்த புள்ளியை தொட்டிருக்கிறது என்றே சொல்லாம்
Like Reply
மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி

[Image: NTLRG_20190315174954159648.jpg]

பாகுபலி 2 படத்தை அடுத்து, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ஹிந்தி பிரபலங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிக்க, சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட கதையில் இப்படம் உருவாகிறது.

ராஜமவுலியின் கனவு படம் மகாபாரதம். இவரின் அடுத்தப்படம் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுப்பற்றி ஆர்ஆர்ஆர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜமவுலி, எனது அடுத்தப்படைப்பு மகாபாரதம் அல்ல. ஆனால் அது எனது கடைசி படமாக இருக்கலாம். அதன் கதை இன்னும், எனது மன ஓட்டத்தில் இருக்கிறது. மகாபாரத கதையை படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.
Like Reply
தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த 'விஸ்வாசம்'

[Image: NTLRG_20190316150015701613.jpg]

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க தமிழில் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வெளிவந்த படம் 'விஸ்வாசம்'. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக வெளிவந்தாலும் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது 'விஸ்வாசம்'. அஜித் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிகமான வசூல் என்று கோலிவுட்டில் கூறினார்கள்.

இந்தப் படம் தெலுங்கில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 1ம் தேதியன்று வெளியானது. 'ஜகமல்லா' என்ற பெயரில் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 7ம் தேதியன்று வெளியானது. ஆனால், தமிழில் சாதனை வெற்றியைப் புரிந்த இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியைச் சந்தித்தது.

தமிழில் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்களில் மற்றவர்களைப் போல அஜித்தால் தெலுங்கில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இதுவரை பெற முடியவில்லை. 'விஸ்வாசம்' படமாவது அந்த வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து அஜித் நடித்து வெளிவர உள்ள 'நேர் கொண்ட பார்வை' படமாவது தெலுங்கில் வெற்றிக் கணக்கை ஆரம்பிக்கட்டும்
Like Reply
96ன் வில்லேஜ் வெர்ஷன்?  நெடுநல்வாடை - விமர்சனம் 

சில படங்கள் திரைக்கு வருவதற்கு முன்னரே அதுகுறித்த எதிர்பார்ப்பும் ஒருவகை நேர்மறை எண்ணமும் பார்வையாளர்கள் மத்தியிலே ஏற்றப்பட்டிருக்கும். திரைப்பட விழாக்களில் பங்கேற்பதன் மூலமாகவோ விருதுகளின் மூலமாகவோ இல்லை சினிமா பிரபலங்களின் தனிக்காட்சி மூலமாகவோ இவை ஏற்படக்கூடும். அத்தகைய எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் நெடுநல்வாடை பார்வையாளர்களை எத்தகைய மனநிலையுடன் வெளியே அனுப்புகிறது?

 
[Image: nedunalvadai%20poo%20ramu%202%20-%20Copy.jpg]


ஒரு கிராமத்தில் சமகாலத்தில் துவங்குகிறது கதை. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தன் பேரன் பல வருடங்களாக திரும்பாத ஏக்கத்தில் இருக்கும் கருவாத்தேவருக்கு அதனாலேயே உடல்நிலை குன்றுகிறது. அவருக்கும் பேரனுக்குமான உறவை சொல்வதாக விரிகிறது முன்கதை. வீட்டை எதிர்த்து செய்த திருமணத்தில் தோற்று இரண்டு குழந்தைகளுடன் ஊர் திரும்பும் மகளை கண்ணீருடன் அரவணைத்து ஏற்கிறார் கருவாத்தேவர். ஓடிப்போன தங்கையை ஏற்கக்கூடாது என்று மல்லுக்கட்டுகிறார் கருவாத்தேவரின் மகன். எதிர்ப்பை மீறி மகள் குடும்பத்தையும் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார் கருவாத்தேவர். பேரனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து, அவன் மூலம் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்பியிருக்கும் வேளையில் அவன் காதலிப்பது தெரியவருகிறது. அழைத்து அழுது அட்வைஸ் செய்யும் தாத்தாவின் கண்ணீரில் உருகும் பேரன் காதலை மறக்க நினைக்கிறான்
Like Reply
பிரிவு, வலி, கண்ணீர் எல்லாம் தாண்டி மீண்டும் இந்த காதல் துளிர்க்கிறது. ஆனால் இப்போது பிரச்சனை பெண்ணின் அண்ணன் ரூபத்திலும் நிலையான வேலை ரூபத்திலும் வருகிறது. வேறு வழியே இல்லாமல் ஓடிப்போன முயலும் காதலர்கள் வாழ்வில் இணைந்தார்களா, வெளிநாட்டிற்கு சென்ற பேரன் திரும்பி வந்தானா, தாத்தா மீண்டும் உடல்நலம் பெற்றாரா என்பதுதான் நெடுநெல்வாடை. 

 
[Image: nedunalvadai%20hero%20-%20Copy.jpg]

 
ஒரு பசுமையான, ஈரம் நிறைந்த, உணர்வுகள் மிகுந்த படம் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவம்தான். அந்த அனுபவத்தைத் தர முயன்று ஓரளவு வென்றிருக்கிறார் இயக்குனர் செல்வக்கண்ணன். அப்பா - மகள், தாத்தா - பேரன், தாய் மாமா - மருமகன் என நம் மண்ணுக்குண்டான உறவுகளையும் அதில் இருக்கும் அன்பு, வெறுப்பு, சிக்கல் அனைத்தையும் கையில் எடுத்திருக்கிறார். கையில் எடுத்த விசயத்தை எந்த அளவுக்கு நமக்குக் கடத்தியிருக்கிறார்.

ஆரம்பத்தில் கனமான கதையாக துவங்கும் படம் போகப் போக வழக்கமான காட்சிகளாலும் பழக்கப்பட்ட திருப்பங்களினாலும் தொய்வடைகிறது. உணர்வுகளில் புதிது பழையது இல்லை. ஆனால் அவை உண்டாக்கும் தாக்கம், கனமாக புதிதாக இருக்கவேண்டுமல்லவா? நாயகன் நாயகி இடையே காதல் மலர்வதற்கான தருணங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் போன்றவற்றில் இருக்கும் செயற்கைத்தனம் அதன் பிறகான காட்சிகளில் நம்மை உணர்வுப்பூர்வமாக ஒன்றவிடாமல் தடுக்கிறது.
Like Reply
[Image: nedunalvadai%20heroine%20-%20Copy.jpg]


படத்தின் அடிப்படையான பிரச்சனையாக சொல்லப்படுவது கருவாத்தேவர் குடும்பத்தின் வறுமைதான். ஆனால் அதை உணர்த்துவதற்கான காட்சிகளோ, குறியீடுகளோ, பின்னணிகளோ சரியாக இல்லை. இறுதிக்காட்சிக்கு முன்னால் வரும் தேவையற்ற அந்த சண்டைக்காட்சியும் அதற்கான சூழலுமே கூட குழப்பத்தையும் கேள்வியையுமே உண்டாக்குகிறது. ஆனால் இறுதியில் காதலர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதாய் இருந்த நாளின் இரவில் என்ன நடந்தது என்பது உணர்வாழமிக்க காட்சி. அந்தக்  காட்சியின் காரணமும் படமாக்கப்பட்ட விதமும் நடிகர்களின் நடிப்பும் கனகச்சிதமாய் இருந்தது. இரு வேறு துருவங்களில் இருந்து வெளிப்படும் அன்பு, ஒன்று சேர நினைக்கிறது. இன்னொன்று தவிர்க்க நினைக்கிறது. இரண்டின் பின்னால் இருக்கும் காரணமும் அன்புதான். இந்தக் காட்சியில் இருக்கும் இந்த அழகான முரணும் அடர்த்தியும் அசலாகவும் இயல்பாகவும் இருந்தன.

 இப்படி தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அன்பின் தேவைகளுக்காக, உறவுகளின் நன்மைகளுக்காகப் பிரிந்துபோன உறவுகள் எத்தனை எத்தனை? அந்த தருணம் எதிர்மறையாக பதிவாகாமல், சூழலின் யதார்த்தங்கள் கோரும் வேறு வழியற்ற முடிவாக நேர்மறையாக பதிவாகியிருப்பது சிறப்பு. காதலின் பிரிவு என்பதை பெரும்பாலும் தவறவிடப்பட்ட தருணங்களாகவே காட்சிப்படுத்தும் தமிழ் சினிமாவில், தேர்ந்தெடுக்கும் கையறு நிலையாக பதியவைத்திருக்கிறது அந்த காட்சி.  அதேபோல சேராத காதலை நினைத்து கடைசி வரை தனியே வாழ்வதற்கு மாற்றான ஒரு முடிவை அழகாக விளக்கியதும் சிறப்பு.


ஆனால் அந்தக் காட்சியில் இருந்த ஆழமும் நேர்த்தியும் படமெங்கிலும் இருந்திருந்தால், கதைக்கு அடிப்படையான காதலும் உறவு சிக்கல்களும் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் ஒரு முழுமையான நிறைவான படமாக உருவெடுத்திருக்கும் நெடுநல்வாடை 
Like Reply
[Image: 201903160040171271_Surya-Vikram-and-Kart...SECVPF.gif]
சூர்யாவின் என்.ஜி.கே., விக்ரமின் கடாரம் கொண்டான், கார்த்தியின் கைதி, விஷாலின் அயோக்கியா ஆகிய படங்களை கோடையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Like Reply




Users browsing this thread: 48 Guest(s)