Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
“சாரி டா, நீயே கேட்டேல!,, இவன் கூட சொல்லுறான், அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டேனு!”னு நான் சிரித்தவாரே சொல்ல, மொத்த கும்பலும் அவனை பார்த்து சிரிக்க, எங்களை எரிப்பது போல் முறைத்து விட்டு, வண்டியை திருக்கினான், நான் "டேய்!, மெதுவா போடா"னு கத்தியது எதுவும் அவன் காதில் விழவில்லை. இவன் வேகமாக போவதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க
“விடு, அதெல்லாம் சேஃபா போயிருவான்"னு சொல்லி, நேத்ரா என்னை பப்புக்குள் அழைத்துச் சென்றாள். அவனையும் கூட்டிக்கொண்டு போகாததுதான் அவனுக்கு கோபம்.
அவன் வேகமாக சென்றது மானதை உறுத்த, நான் டான்ஸ் ஆடுற மூடுல இல்லனு சொல்லி ரிசர்வ் செய்த டேபிளுக்கு சென்று அமர்ந்து கொண்டேன். சிறிது நேற்றத்தில் வந்த நேத்ரா, என் அருகில் அமர்ந்து,
“கவனிச்சியா, உன் ஆளுக்கு ஃபீட் ரெம்ப நீளமா இருக்கு"னு என் காதிருக்கே சொல்ல, எதுக்கு இப்போ இவ , சம்பந்தமே இல்லமா உலாருறானு, கேள்வியோடு பார்க்க
“காலு, நீளமா இருந்தா, ஸ்கேலும் நீளமா இருக்குமாம்!”னு சொல்லி கண்ணடிக்க, நான்
"ச்சீ, அவன் சின்னப் பையண்டி"னு சொல்லி செல்லமாக இவளை அடித்தேன்.
நான் இவள் சொன்ன திட்டத்தில் செயல்பட்டால், இவள் அந்த "பூஜை-பொங்கல்" பிளானுக்கு, இப்படி அடிக்கடி என்னிடம் தூபம் போட்டாள்!.
“ஹாய், பானு, வாட் அ சர்ப்ரைஸ்?”னு சத்தம் கேக்க, இருவரும் சத்தம் வந்த திசையில் திரும்பினோம்.
“ஹாய்”னு சொல்லி என்னை பார்த்து கையசைத்தாள் ஜினாலி. நானும் கையசைக்க, வந்தாள் என்னை "ஹக்" பண்ண, நான் நேத்ராவையும், ஜினாலியையும் ஒருவருக்கொருவரை, அறிமுகப் படுத்த, நேத்ராவையும் "ஹக்" செய்தவள்,
“வேர் இஸ் மணி?”னு கேட்டு சுத்திப் பார்க்க, சத்தமில்லாமல் என்னைப் பார்த்து சிரித்த நேத்ராவை, முறைத்துவிட்டு, முகத்தை சாதரமாக வைத்துக் கொண்டு
“ஹி இஸ் நாட் ஹியர், அவனுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல, அலோவ் பண்ண மாட்டாங்க!"
“ரியலி?, இன்னும் பதினெட்டு வயசு ஆகலையா?”னு கேட்டு என்னை வெறுப்பேத்த, சமாளித்துக் கொண்டு
“சின்னப் பையன் அவன்"னு சொல்ல,
“ஓகே, பட் ஹி இஸ் ஹாட்!”னு சொல்லி கண்ணடித்து விட்டு,
“நான் போகனும், ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணறாங்க" சொல்லிட்டு கிளம்ப, எனக்கு பத்திக் கொண்டு வந்தது, இங்கே நேத்ரா, வயிற்றில் கைவைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
----------------------------
"சும்மா சொல்லக் கூடாது, அந்த மைதா மாவு கும்முனுதான் இருக்கா, உன் ஆளு அவ பின்னால சுத்துறதுல தப்பே இல்ல!”னு மறுநாள் கேண்டீன்ல இருக்கும் போது, நேத்ரா சொல்ல, கடுப்பானேன்.
“அவ நல்லா இருக்கானு தான் சொன்னேன், நீ அவ அளவுக்கு இல்லனு சொல்லல!”னு அவ சொல்ல, நான் சோர்ந்து போனேன்.
“இங்க பாரு அவ நல்லா, தளதளனு தக்காளி மாதிரி இருந்தாலும், நீ ஐஸ்ஃப்ரூட் டீ!, நீயே சொல்லு, உனக்கு ஒரு ஆப்ஷன் குடுத்த நீ தக்காளிய சூஸ் பண்ணுவியா? இல்ல ஐஸ்ஃப்ரூடையா?”னு கேக்க, நான் கொஞ்சம் வெக்கப் பட்டு சிரித்தேன்.
“இங்க ப்ராப்ளம் என்னானா?, நீ ஐஸ்ஃப்ரூடுங்குறது உன் ஆளுக்கு இன்னும் தெரியல? இன்னும் சரியா சொல்லணும்னா, நீ இன்னும் அவன சரியா கவனிக்க வைக்கல!”னு சொன்னவள் என் தொளைப் பற்றி, என் கண்ணைப் பார்த்தவள்
“நம்ம பிளான் நல்லாதான் வொர்கவுட் ஆகுது, ஆனாலும் நேத்து அவளைப் பாரத்துக்கு அப்புறம் அந்த "பூஜை போட்டு, பொங்க வைக்குற" பிளான் தான் சேஃப்னு தோணுது. எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்?”னு அவள் சொல்ல, எனக்கு அதுதான் சரியென்றே பட்டது.
"உன்ன மட்டும் ஐஸ்ஃப்ரூட்டா பாத்து ஒரு தடவ சுவச்சிசுட்டான்! செத்தான் மகன்! உன் காலே கதினு கிடப்பான், அப்புறம் பாரு தக்காளியாவது!, திற்பூசனியாவது!, உன்ன ஒண்ணும் பண்ண முடியாது!”னு அவள் சொல்ல, வெட்கம் பிடிங்கித்தின்ன, சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன். எழுந்து என் அருகில் வந்தவள்
“ஏய், ஒரு சூப்பர் பிளான், நீ தான அவன கூட்டிக்கிட்டு பழனி போற?”னு அவள் கேக்க, அவள் புதுப் பிளான் கேட்கும் ஆர்வத்தில் தலையாட்டினேன்.
“ஒண்ணு பண்ணுவோம், ரெஸிடென்ஸில ஒரு ரூம் புக் பண்ணுவோம், நீ பழனி ட்ரிப் முடிஞ்சதும், அவன பப்க்கு கூட்டிடு போ!, அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி, அந்த ரூம்க்கு கூட்டிட்டு போய், பூஜைய போட்டுறு"னு அவள் சொல்ல கேட்பதற்கு எனக்கு குளுகுளுனு இருந்தாலும், கொஞ்சம் தயங்கினேன்,
“ரூம் எதுக்கு?னு அவன் கேட்டா என்ன சொல்றது?”னு, என் தயக்கத்தை மறைத்தவாறு கேக்க
“அதுக்குதான்!னு சொல்லி, அள்ளி அனச்சுறு!”னு அவள் நக்காலிடிக்க, நான் தீவிரமாக யோசித்தேன். நான் யோசித்ததைப் பார்த்தவள்
“ஹேய், உனக்கு இந்த பிளான் ஓகே வா?”னு ஆச்சரியத்துடன் கேட்க, நான் யோசித்தவாரே தலையாட்ட
“அடிப்பாவி, நான் சும்மா சொன்னேன் டி!” வாயில் கைவைத்து, என்னை நம்ப முடியாமல் பார்த்தவள், எழுந்து கட்டிப் பிடித்து, என் காதில் சொன்னாள்
“கவலைய விடு!, இப்போ தானே நீ என் ரூட்டுக்கு வந்திருக்க! நல்லா கேட்டுக்கோ! மணிய உன் புருஷன் ஆக்குறேன், இது இந்த நேத்ராவோட பிராமிஸ்!”.னு சொல்லி, அவள் ஒரு புது பிளான் சொன்னாள்.
-----------------------------
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
சீக்கிரம் பூஜை போட்டு பொங்கல் வைக்க போறது யாரு
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
பாகம் - 18
பிளான் - "சோக பால்"
“பசங்கள மாடக்குறதுக்கு, இருக்குறதுலேயே ஈசியான வழி, சோக ஸீன் போட்டு மடக்குறது தான்"னு நேத்ர சொல்ல, இத இதுக்கு முன்னால எங்கேயோ கேட்டுருக்கோம்னு நான் யோசிக்க, “ஏய்" என்றழைத்து என் எண்ணம் கலைத்தவள்
“அதுவும் உன் ஆளு, உன்மேல உயிர இருக்கான், நீ மட்டும், நேரம் பாத்து சோக ஸீன் போட்டேனு வையி, ஈசி மடக்கிறலாம்"னு சொல்ல, கவனத்தை இவள் சொல்வதில் திருப்பினேன்
“ஆனா, இந்த சோக ஸீன்ல, டைமிங்கும், தனிமையும் ரெம்ப முக்கியம். அதனால நீ என்ன பண்ணுற, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுப்படிக்கனும் அவன!, முடிஞ்ச அன்னைக்கு காலையில இருந்தே ஆரம்பிச்சுரு. எப்படியும் ஒரு கட்டத்துக்கு மேல கடுப்பாகி, கோபப் படுவான். அதுதான் நம்ம டைம். அவன் கோபப்பட்டதில் இருந்து, நீ உம்முணு உன் முகத்தை வச்சுக்கிட்டு, அவன காய விடணும், ஆனா அவன் உன் கண்ட்ரோல விட்டு போகக் கூடாது.
முடிஞ்சா அவன் கோவபட்டத, அப்பப்போ குத்திக் காட்டி, அவன ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு பீல் பண்ண வைக்கணும். அப்புறம் ஒரு கேப் விட்டு, கொஞ்சம் சமாதானம் ஆனா மாதிரி, நல்லா புரிஞ்சுகக்கோ, சமாதானம் ஆனா மாதிரி தான், நீ எப்பவும் போல கொஞ்சிறாத!. கொஞ்சம் சமாதானம், ஆனா மாதிரி காட்டி, பப்க்கு கூட்டிட்டு வந்துரு, முடிஞ்ச கொஞ்சமா குடிக்க வைச்சு, ரூம்க்கு கூட்டிட்டு போய்,அவன் கோபத்த நியாபகபடுத்தி, சோக ஸீன் போடு, அதுக்கப்புறம் என்ன பன்னுவியோ! அது உன் சமத்து"னு அவள் சொல்லி முடிக்க
“பப்புக்கு நீங்க வரலையா?”னு நான் கேக்க
“லுசா நீ, பிளான்க்கு நீங்க ரெண்டு பெரும் தனியா இருக்குறது முக்கியம்"
“தெரியும் டீ, ஆனா பிரதீப் இல்லாம, பப்புக்குள்ள எப்படி அலோவ் பண்ணுவாங்க, என்கிட்டதான் மெம்பர்ஷிப் இல்லையே?”னு நான் என் சந்தேகத்தைக் கேட்க
“ரெஸிடென்சில ரூம் போடுறதே அதுக்குத்தான்!, மெம்பர்ஸ், மேபர்ஸ்ஸோட கெஸ்ட், அப்புறம் ஹோட்டல் கெஸ்ட்க்கும் பப்ல அட்மிஷன் உண்டு"னு அவள் சொல்லி கண்ணடிக்க, ஓகேனு தலையாட்டி, பின்
“அவன வச்சுக்கிட்டு, எப்படி நான் ஹோட்டல்ல செக்-இன் பண்ண?”னு கேக்க, தோள்களை தூக்கி, உதடு பிதுக்கியவள்
“செக்-இன், பண்ணுறது, அவன ரூம்க்கு கூட்டிட்டு போறதெல்லாம், உன் சமத்து!”னு சொல்ல, ஓகேனு தோண மண்டையை ஆட்டினேன்.
"இத விட ஈசி பிளான் ஒண்ணு இருக்கு" னு அவள் சொல்ல, என்ன? என்பதைப் போல அவளைப் பார்க்க, கண்ணடித்தவள், சிரித்துக் கொண்டே
“சொர்க்க பால்னு"னு ஒரு பிளான், என்ன என் ஸ்டைல்ல இருக்கும், பிளான் டீடெயில் கேக்குரியா?"னு சொல்ல
“சோக பாலே, ஓகே"னு சொல்லி செல்லமாக அவளை அடித்தேன்.
பிறகு அவளே பிளானை, அலசி ஆராய்ந்தாள், கொஞ்சம் மாற்றம் சொன்னாள், ஒரு தெளிவு வந்ததும், வொர்கவுட் ஆகும்னு, நம்பிக்கையா என்னைப் பார்த்து சொல்ல, நானும் தலையாட்டினேன் நம்பிக்கையோடு.
அப்போ தெரியாது எங்க பிளான்க்கு, சாதாகமா, நாங்க எந்த முயற்சியும் பண்ணாமலே மூன்று பேர் உதவுவார்கள் என்று.
-------------------------
அவன் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்பு,
“முக்கியமான ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன்!" எனக்காகவே கார் பார்க்கிங்கில் வெயிட் பண்ணியிருப்பாள் போல, நான் காரை விட்டு இறங்கியதும் கேட்டாள் நேத்ரா. நான் கேள்வியோடு அவளைப் பார்க்க
“உன் பீரியட்ஸ் எப்போ?”, நான் யோசித்துவிட்டு சொல்ல
“நினைச்சேன்!, குடியே கேட்டது போ!, ரெண்டு நாள்னா! அன்னைக்குதான அவனோட பர்த்டே?”னு கேக்க, நான் தலையாட்டினேன்
“ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, இப்போவே போய், தள்ளிப் போடுறதுக்கு டேப்லெட்ஸ் வாங்கிப் போடுவோம்!”னு அவள் சொல்ல,
“பாத்துக்கலாம் டீ!, அதுக்கு தேவை இருக்காது, பிளான்-a, வொர்க்அவுட் ஆகும், எனக்கு நம்பிக்கை இருக்கு!”னு நான் சொல்ல
“இப்படி அசட்டுத்தனமா இருக்காத!, எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும், முதல்ல வண்டிய எடு!, போய் டேப்லெட்ஸ் வாங்கலாம்!”னு சொன்னவள், என்னை கையோடு கூட்டிக்கொண்டு போய், டேப்லெட்ஸ் வாங்கிக்கொண்டு, அதில் ஒன்றை நான் போட்டுக் கொண்டதும் தான் விட்டாள்.
---------------------------------
அன்று மாலை, என் வீட்டில்
“அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"னு நான் இவனிடம் சொல்ல, பொறாமைப் படுவான், என்று நான் நினைக்க
“என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”னு சாதரணமா கேட்டான்,
“அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு, நான் கொஞ்சம் இவனை தூண்ட, எந்த சலனமும் இல்லாமல் இவன் இருந்ததை பார்த்தும் கடுப்பானேன்.
“ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு கோபாமா கேட்க
“இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தேன், நல்ல சான்ஸே வொர்க்அவுட் ஆகவில்லை என்ற வயித்தெரிச்சலில்.
----------------------------
அடுத்த நாள் காலை, கொஞ்சம் பதட்டத்தில் இருந்தேன், நாளைக்கு அவன் பிறந்தநாள், எங்களின் திட்டப் படி கண்டிப்பாக காதலை சொல்லிவிடுவது என்று முடிவு செய்திருந்தோம். என் பதட்டத்தை நேத்ராவிடம் சொல்ல, அவள் கேன்டீன் போய் பேசலாம், கிளாஸில் வேண்டாம் என்று சொல்ல, இருவரும் கிளம்பும் போதுதான், கோபத்தோடு வந்தான் சுமேஷ்! ஆக்சிடென்ட் ஆனவன் போல் இருந்தான்
“லவ் பண்ணுறேன்னு சொன்னா? ஆளு வச்சு அடிப்பியோ?”னு என்னைப் பார்த்து எகிற, பிரதீப் அவனைத் தடுக்க, கலவரம்- ஆகிப் போனது. என்ன நடக்குது என்கிற குழப்பத்தில் நான் இருக்க,
“மணிகண்டன் தான அவன் பேரு, என்னப் பத்தி அவனுக்கு தெரியாது!, பாத்துக்கிட்டே இரு இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவன சாவடி அடிக்கிறேன்!” சுமேஷ் சொன்னதை நம்ம முடியவில்லை. ஆள, அடிக்கிற அளவுக்கு ஆளாயிட்டானா? நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நிக்க
“உன்னால ஒரு மயிரும் பூடுங்க முடியாது!, அவ டீசண்ட்டா சொன்னா, உனக்கு புரியல, அதுதான் உனக்குப் புரியிற மாதிரி சொன்னோம்!, அவன் யாரு? என்னனு? தெரியாம பேசுற!, அடிச்சதோட விட்டான்னு சந்தோஷப் பட்டுக்கோ, தேவை இல்லாம பிரச்சனை பண்ணி வீனப் போகாத"னு நேத்ரா கத்த. நான் சந்தோஷமா?, கோபமா?, பயமா?னு தெரியாத ஒரு மனநிலையில் இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை அழத் தொடங்கி இருந்தேன்.
“சாவடிக்கிறேன் அவன!”னு சொல்லிக் கிட்டே, சுமேஷ் வெளியே போய்ட்டான்.
அவன் போனதும், அனைவரும் என்னை சமாதனப்படுத்த, எனக்குள் ஒரு பயம், இந்த சுமேஷ் கொஞ்சம் முரடன், கிறுக்கு தனமா ஏதாவது பண்ணித் தொலைப்பானோ என்று. பிரதீப்பை, சுமேஷிடம் சென்று காம்பிரமைஸ் பண்ண சொல்லிக் கேக்க, பிடிக்கா விட்டாலும் வேறு வழி இல்லாமல் சென்றான். நேத்ரா தடுத்ததையும் கேட்காமல், இவனை, கூட்டி வந்து சாரி கேக்க சொன்னால், இவன் மறுபடியும் சுமேஷை மிரட்டி, எனக்கே அதிர்ச்சி தந்தான் என்றால், சுமேஷ் என்னிடம் சாரி கேட்டது பேரதிர்ச்சியாக இருந்தது.
முதன்முதலாக ஒரு வாலிபனாக பார்த்தேன் அவனை!.
எனக்காக ஒருவனை அடித்தவன், என்னிடம் அடிவாங்கியது, ஏதோ இந்த உலகத்தில் அவன் எனக்கு மட்டுமே கட்டுப்பட்டவன், என்கிற உணர்வு, பேரானந்தத்தையும், பெருமையையும் தர, அவனிடம் பேசவேண்டும் போல் இருந்தது. ஃபோன் செய்தால், எடுக்கவில்லை. கடன்காரன்! அப்படி என்ன கோவம் இவனுக்கு, என்று மனதில் கரித்துக் கொட்டினாலும், மனம் முழுக்க நிறைந்து கிடந்த அவனை, மனசுக்குள்ளேயே, கொஞ்சிக் கொண்டேன்.
----------------------------
“ஃபோனா எடுக்க மாட்றான், பாவி!”னு, அவனை திட்டக்கொண்டே, கார் பார்க்கிங் செல்ல
“சார் இன்னும் சூடாதான் இருப்பார் போல!”னு சொல்லி சிரித்தாள், என்னுடன் வந்த நேத்ரா, என் தோளில் கைபோட்டவள்,
“கல்லு, ரெம்ப சூடா இருந்த, நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணாத, இன்னைக்கே, சான்ஸ் கிரியேட் பண்ணி, யோசிக்காம ரெண்டு தோசைய ஊத்தி, ஆறப்போட்டுறு"னு சொல்லி, என்னை சூடேத்தி, கண்ணடித்து சிரிக்க, எப்போதும் இவள் இப்படிப் பேசினால், செல்லமாக கோபப்படும் நான், இந்தமுறை
“நானும் அதத்தான் யோசிக்கிறேன்"னு சொல்லி, கன்னங்களில் நாவால் கோலமிட்டு, வாய்திறக்காமல் சிரிக்க, அடக்கமுடியாமல் சிரித்தாள் நேத்ரா.
-------------------------
என் மொபைல் டிஸ்ப்ளே-வில் "காலிங்க பாப்பா"னு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அன்று இரவு ஒன்பது மணி, கால் எடுக்கவில்லை. இத்தோடு சேர்ந்து 11வது கால், எதையும் எடுக்கவில்லை அந்த எருமை. கொஞ்சம் பதட்டமாகி என்ன டைப் பண்ணுறேனே தெரியாம, பக்கம் பக்கமாக ஏதோ டைப் பண்ணி அனுப்ப, படித்துக்கூட பார்க்கவில்லை அவன். அவ்வளவுதான் எனக்கு பொறுமை, அவன் வீட்டுக்கு கிளம்ப ரெடியானேன், "டிங்" மெசேஜ் டோன், அவனிடம் இருந்துதான்
"லீவு மீ அலோன்"னு கோவமா ரிப்ளை வர, அப்பாடானு மூச்சுவிட்டு
“சாரி பாப்பா!"னு ஒரு மெசேஜ் தட்ட, எனக்கு தெரியும் அவன் வீம்பெல்லாம் அந்த "பாப்பா!” பாத்த உடனே காலினு.
“ம்ம்"னு அவனிடம் இருந்து ரிப்ளை!. வாடி, வானு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு
“இன்னும் கோவமா?” ஒரு மெசேஜ் தட்ட
“என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது", அவன் ரிப்ளை பார்த்ததும், ஒரு சின்ன சிரிப்பு என் இதழ்களில், சார் இன்னும் சூடாதான் இருக்கார்னு நினச்சுக்கிட்டு
“பாப்பா"னு கொஞ்ச,
“லூசு"னு வந்த ரிப்ளை பாத்தும், மனசெல்லாம் பட்டாம் பூச்சி பறக்க
“சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, உண்மையான வருத்ததுல கேக்க, ரிப்ளை வரவில்லை, காலே வந்தது, எடுத்து
“சாரி டா"னு சொல்ல,
“உன் சாரிய தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு எகிற, எனக்கு சிரிப்புதான் வந்தது, அடக்கிக் கொண்டு
“உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”
“பின்ன பூரிய கேட்டாங்க?”
“நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு பெருமையோடு, அவனை காதலோடு கொஞ்ச
“என்ன எதுக்கு அடிச்ச?”, னு அவன் அதுல வெண்ணிய ஊத்த, கடுப்பானேன்
"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”,
என்னைய ஒரு ரெண்டு நிமிஷம் கூட நிம்மதியா லவ் பண்ண விடமாட்டியாடா பாவி! மனசுக்குள்ள திட்டிக்கிட்டு கேட்க, அவன் ஏதோ சொல்ல, பிறகு ஏதேதோ பேசினோம், மணி பன்னிரெண்டாக
“ஹாப்பி பர்த்டே டா", னு சொல்லி, என் ரூம்மில் இருந்த அவனது 14வயது போட்டோவில், சத்தமே இல்லாமல் ஒரு முத்தம் கொடுத்து விட்டு,
“சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்து விட்டு, கையில் இருந்த போட்டோவை அனைத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தேன். அவனை கொஞ்ச வேண்டும் போல் இருக்க
“தூங்கிட்டியா?” ஒரு மெசேஜ் தட்டினேன்
“ஆமா", னு ரிப்ளை, எரும என் மூடு தெரியாம கடுப்பேத்த, அவனை கொட்டினேன் போட்டோவில்.
“பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்" அனுப்பிட்டு, அதையே போட்டோவைப் பார்த்தும் கேட்டேன்.
“அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"னு வந்த ரிப்ளையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு
“அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” திரும்ப நொண்ட
“நீ என்ன குடுத்தாலும் ஓகே" வந்த ரிப்ளை பாத்துட்டு சந்தோஷம் தாங்காமல், என்னையவே குடுத்த ஓகேவா?னு போட்டோவைப் பார்த்து கேட்டு கண்ணடித்து விட்டு, ஆசையுடன்
“பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?” அவனை மெசேஜில் கொஞ்ச
“அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு அவன் ரிப்ளைய பாத்தும் பத்திக்கீட்டு வந்துச்சு எனக்கு,
ஒரு செருப்பு ஸ்மைலி, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி அனுப்பிட்டு, ஃபோனையும், கையில் இருந்த போட்டோவையும் தூக்கி எறிந்தேன். அழுகை முட்டிக் கொண்டு வர, அப்படியே கட்டிலில் குப்புற படுத்தேன். சிறிது நேரம் களித்து "டிங்" மெசேஜ் டோன் வர, ஏதோ கட்டுப்பட்டவள் போல், தூக்கி எரிந்த ஃபோனை பாய்ந்து சென்று எடுத்து
“எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகனும்"னு அவன், அனுப்பி இருந்த மெசேஜ் பார்த்தும், அடக்க முடியாமல் சத்தம் போட்டு அழுது விட்டேன், ஆனந்தத்தில். உடனே சுதாகரித்துக் கொண்டு, கண்ணில் நீர் வாழிய, சிரித்துக் கொண்டே
ஹார்ட் ஸ்மைலி அனுப்பிட்டு, தொடர்ந்து
“luv u “னு, அனுப்ப
“me too” னு, ரிப்ளை பண்ணினான்
“காலைல ரெடியா இரு, இப்போ தூங்கு" அவனுக்கு மெசேஜ் அனுப்பிட்டு, சற்று முன் தூக்கி எரிந்த அவன் போட்டோவை எடுத்து, முத்தமழை பொழிந்து, இறுக்கி அனைத்துக் கொண்டு படுத்தேன்.
Posts: 2,067
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 129
Threads: 1
Likes Received: 77 in 49 posts
Likes Given: 1,012
Joined: Dec 2018
Reputation:
4
@Doyencamphor, awesome, aுலயோ ஆரம்பிச்சு எங்கயொ போயிட்டீங்க...!
சரளமான எழுத்து நடை, sports detailing, logical லான காட்சி அமைப்புகள், இயல்பான குறும்புத்தனமான உரையாடல்கள்... அதிக கதாபாத்திரங்கள் அறிமுகமானாலும் maintain ஆகும் initial suspense.... I can only feel our beloved writer screwdriver is back...
After xossip closure, recently we could observe few writers are taking up tamil erotic writing as a challenge and giving all of us very wonderful stories with different plot...
Go by your imagination and flow, suggest take a break in between just to cool your mind & to take care of your health..
Thanks to you for such a wonderful story... I wish you to cross at least 250+ episodes...all the best
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
Kathalai kotti kondadringa super.
•
Posts: 778
Threads: 0
Likes Received: 306 in 252 posts
Likes Given: 2,278
Joined: Oct 2019
Reputation:
0
"நீ ஸ்மார்ட்தான், ஆனா லவ்வுனு வந்துட்டா, நீ மூளை சொல்றத கேக்காம, மனுசு சொல்றத கேக்குற, அதுதான் ப்ராப்ளம். உன் லவ் பொறுத்த வரைக்கும், நான் மூளையா இருக்கேன், நீ நான் சொல்றத மட்டும் கேளு!”
ரசிக்கும்படியான வரிகள்.
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
பாகம் - 19
அவனின் பதினெட்டாவது பிறந்தநாள் அன்று
காலையில் அஞ்சு மாணிக்கே, எழுந்து, நெதராக்கு ஃபோன் அடிக்க, எடுத்தவுடன் திட்டியவள், பின்பு
"டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள், என் பாப்பாவா இருக்கனுமாம் சாருக்கு, நைட் சொன்னான், டீ"னு சொல்ல, சிரித்தவள்
“என்னடி ஆடு அதுவா வந்து அறுங்குது!”னு சொல்லி சிரிக்க
“அறுத்துருவோம்!”னு நான் பதிலுக்கு சொல்லி சிரிக்க, சிரிப்பு நின்றதும்
“பானு!, என்ன நடந்ததாலும் சரி, கண்ட்ரோல் ரொம்ப முக்கியம், பிளான் நல்லா நியாபகம் இருக்குல?”னு கேக்க,
“இருக்குடி!”
“இங்க பாரு பானு!, நானே லவ் பண்ணாக்கூட இப்படி பிளான் பண்ணுவனானு தெரியாது, ரெம்ப யோசிச்சுறுக்கேன், இன்னைக்கி மட்டும் நீ சொதப்புன, நான் மனிஷியாவே இருக்க மாட்டேன்!”னு சொல்ல, நான் நன்றியோடு
“தாங்க்ஸ் டீ"னு சொல்ல
“உன் தாங்க்ஸா, நம்ம பிளானா சக்ஸஸ் பண்ணிட்டு வந்து சொல்லு, அப்போ அக்சப்ட் பண்ணுறேன்”
“ஓகே"
“சரி, கிளம்பு, டைம் அச்சு!”அவ சொல்ல, ஓகேனு சொல்லி நான் வைக்கப் போக
“ஏய்"னு சத்தம் கேட்டு, திரும்பவும் ஃபோனை காதில் வைக்க
“இருக்கியா?”னு அவள் கேட்டதுக்கு, “ம்" கொட்ட
“முக்கியமான விஷயத்த மறந்துட்டேன், "ஹாப்பி கன்னி கழியிற டே!”னு சொல்லி அவள் சிரிக்க
“ச்சீ, கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவனுக்கு பொங்கல்!, இப்போ எனக்கே கான்ஃபிடன்ஸ் வந்துருச்சு, சோக பால் கூட தேவை இல்ல, பாச பால்னு, ஒரு புது பிளான் இருக்கு, அதவச்சே விக்கெட் எடுத்துருவேன்"னு சொல்லி, சிரிக்க
“ஹா,,,,,, ஹா,,,,, ஹா,,,,,, பார்டா , நீ எந்த பாலையும் யூஸ் பண்ணு, ஆனா தயவு செய்து விக்கெட் எடுத்துரு!. பானு, ஓவர் கான்ஃபிடன்ஸ் நமக்கே அப்படிக்கும், எதுக்கும் நீ எல்லாத்துக்கும் ரெடியா இரு, டேப்லெட் போட்டுக்கோ, ஒரு சேஃப்டிக்கு”னு அவள் சீரியஸ்ஸா சொல்ல
“ம்" கொட்டி, ஃபோனை வைத்து விட்டு, வெட்கத்தோடு பாத்ரூம் சென்றேன்.
ஹேர் ரிமூவர், ஸ்ப்ரே வைத்து அடித்து, சிறிதாக முளைத்திருந்த முடிகளையும், ஷவர் திறந்து நீக்கி விட்டு, அதை உறுதி செய்து, திருப்தி ஆனதும், மீண்டும் ஷவரில் நனைந்து கொண்டு நேத்ராவின் பிளானை மனதில் ஓடவிட்டேன்.
குளித்து முடித்து, டிரஸ் பண்ணி, கொஞ்சமா மேக்கப் பண்ணி, ஓகேனு திருப்தி ஆனதும், கிளம்பினேன். அம்மா சாப்பிட சொல்ல, வேண்டாம்னு சொல்லிட்டு, சேஃப்பா டிரைவ் பண்ணு சொல்லியவளிடம், டாடா கட்டிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்து, கால் பன்னினேன் அவனுக்கு
“ஹலோ"னு அவன் சுரத்தே இல்லாமல் சொல்ல, என்னவா இருக்கும் என்று நினைத்தவாறே
“என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு நான் சொல்ல
“15 மினிட்ஸ்"னு, எனக்கு முதல் சான்ஸே குடுத்தான், அவனை வறுத்தெடுக்க.
“இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு கோபத்தோடு கேக்க
“பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவனும் கோபத்தோடு சொல்ல, “கொஞ்சம் பொறுமை, அவசரம் கூடாதுனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு
“ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து காரை அவன் வீட்டை நோக்கி விட்டேன்.
ஐந்து நிமிடம் கழித்து, அவன் வீட்டுக்குள் நுழைய, சுமா ஆண்ட்டி தான் இருந்தார்கள், அங்கிள் பிஸினஸ் ட்ரிப் போயிருந்தார்.
“என்னமா?, இன்னைக்கு சரீ?”னு சுமா ஆண்ட்டி கேக்க
“மணி பர்த்டே ஸ்பெஷல், நல்லா இருக்கா?”னு கேட்டு, பவசே குடுக்க, என் அருகில் வந்தவள், இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிததவள்
“உனக்கே தெரியாத?, என் கிட்ட கேக்கணுமா?”னு சொல்ல, சந்தோஷமானேன், பசிப்பது போல இருக்க,
“ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியா?”னு கேட்டு, டைனிங் டேபிளில் அமர, அவர்களும் என் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.
பத்து நிமிடம் கழித்து, விசில் சத்தத்தை கேட்டதும், அவன் தான் என்று தெரிந்து, சிரித்தவாரே அவனைப் பார்த்தால், அடுத்த சான்ஸ், இத விடக்கூடாதுனு முடிவு பண்ணி
கோபமாக
“உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, கேக்க,
கண்டுகொள்ளாமல் என் தலையில் தட்டிவிட்டு, டைனிங் டேபிளில் உட்கார்ந்து, இட்லிய எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, நிமிர்ந்து பார்த்தான், நான் அவனையே முறைத்துக் கொண்டிருந்தேன் . ஒரு பெரும் மூச்சு விட்டவன்
“பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, தலையை இருபக்கமும் ஆட்டியவாறு முறைத்துக் கொண்டே இருந்தேன்,
“ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, அசிங்கமாயிரும்!”னு
அழுவதைப் போல சொல்ல, அதுக்கு மேலும் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை, வந்த சிரிப்பை மறைக்க சாப்பிட ஆராம்பித்தேன். இருவரும் சாப்பிட்டு விட்டு, காரை நோக்கி செல்லும் போது
“இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, அவன், அவன் அம்மாவைப் போலவே செத்தைப் போல செய்து எனக்கு நெட்டி முறிக்க, சந்தோஷம் தாளாமல் சிரித்தேன், ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை,
“உன் சாரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி என்னைக் கிள்ளி அவன் குடுத்த அடுத்த சான்சையும் சரியா யூஸ் பணனேன், அவனைப் பார்த்து முறைத்து.
“செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொல்ல,
முஞ்சை தொங்கப் போட்டுக் கொண்டு, மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, காரை பழனி நோக்கி விரட்டினேன். எதுவும் பேசாமல், பாவம் போல் அமைதியாக இருக்க, கொஞ்சம் அதிகமா போறோமோ? நினச்சுக்கிட்டு
“என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு, கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்
“நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு, அவன் எகிற, ஓகே பிளான் கரெக்ட்டா போகுது, கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு, மனசுல நினச்சுக் கிட்டு
“மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”னு காரம் குறையாமல் திருப்பி அடிக்க
“நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு அவன் சொல்ல, என் உள்ளம் கொண்டாட்டம் போட, "கண்ட்ரோல்! கண்ட்ரோல்!னு" சொல்லி என்னை அடக்கிக் கொண்டு,
“என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டேன், அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க
“என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு மீண்டும் சீண்ட
“நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா ஓவர் டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, நேத்ராவோட ஃபர்ஸ்ட் பிளான் நல்ல வொர்க்அவுட் ஆகியிருக்குனு சந்தோஷப்பட்டு
“நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னினா? டாமினேஷன்னா?”னு சும்மா கிண்ட
“நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு அலுத்துக்கொண்டான்,
இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோ பாப்பா!, நைட் உன்ன கண்டிப்பா மடக்கிருவேன், நாளைல இருந்து நம்ம ரெண்டு பெரும், ஒரே லவ் தான், கொஞ்சல் தான்! மனசுக்குள்ளே அவனை கொஞ்சிக் கொள்ள, அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்க, அடக்கிக் கொண்டு ஒரு கையை அவன் தோள்களில் வைத்துக் கொண்டு, வண்டியை ஒட்டினேன்.
அதுக்கப்புறமும், அவனை சீண்டி வெறுப்பேத்த, ஒரு கட்டத்தில், நான் என்னா சொன்னாலும், பதிலே பேசமா இருக்க,
“ஓய்"னு ஆசையா கூப்பிட, என்னைப் பார்த்து முறைத்தான், அவன் முறைப்பை பார்த்ததும், இன்னும் இவன் அடங்கல, கொஞ்சம் அடிக்கலாம்னு தோண
“என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு நானும் முறைத்தேன், அவ்வளவுதான், படுத்தே விட்டான்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு, அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு சொல்லி, கை எடுத்து கும்பிட, அப்பவே காரை நிறுத்தி விட்டு, அவனை அனைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க, மனசு முழுக்க காதலுடன்
“அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவனை கொஞ்ச
“தெரிஞ்ச சரி!”னு முனங்கினான். முத்தமிட வந்த ஆசையை அடக்கிக் கொண்டு, அவன் கன்னத்தை கிள்ளி
“சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", கொஞ்ச, அவன் வழிந்து கொண்டே
“உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு கொஞ்ச நேரம் முன்னாடி எங்களுக்குள் நடந்த உரையாடலில், நான் சொன்னதை பிடித்து கொண்டு, அவன் கேக்க, கடுப்பானேன்,
"ஏண்டா, இங்க ஒருத்தி உன்னையவே நினச்சு சுத்தி சுத்தி வந்தா, அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா?”னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு,
“இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு சிரித்தவாரே கூற, அமைதியானான்
"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு நான் மறுபடியும் அவனை சீண்ட (அந்த அவளும் நான்தான்!, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)
“அவ பேரு என்ன?”னு ஆர்வத்தில் அவன் கேக்க, (பானுமதி,, இல்ல இல்ல உன் பாப்பா!னு, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)
“இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல, அவன் வாயிக்குள் ஏதோ முணுமுணுத்தான்
“என்ன?” நான் அதட்டும் தொனியில் கேக்க
“நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு பதில் வர, சிரித்துக் கொண்டேன்.
------------------------------------
வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தவனை, நான் ஜொள்ளு விட்டவாறு பார்க்க, அதை கூட கவனிக்காம
“ஓகே வா"னு என்னைப் பார்த்து கேட்டான், அவன் அருகில் சென்ற நான்
“பெரிய மனுஷன் ஆயிட்ட"னு கொஞ்சி, அவன் இரு கன்னங்களையும் கிள்ள,
“பெரிய மனுஷன் கன்னத்த, இப்படி தான் கிள்ளுவாங்களா"னு கேட்டவனை,
“ஹாப்பி பர்த்டே செல்லம்"னு சொல்லி, கட்டிப் பிடித்து, முத்தமிடும் ஆசையை அடக்க முடியாமல் கன்னத்தில் முத்தமிட,
“ச்சீ, எச்சி!”னு கன்னத்தை துடைத்துக்கொண்டு
“தாத்தா, வேஷ்டி காட்டிட்டேன்", அவன் ஹாலைப் பார்த்து போக, தலையில் அடித்துக் கொண்டு, பின் நினைவு வந்தவளாக சுத்தி பார்தேன், நல்ல வேலையாக யாரும் இல்லை.
கோவிலுக்கு சென்றோம், தாத்தா அர்ச்சனையின் போது என் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்ய சொல்ல, எனக்கு கொண்டாட்டம் தாங்கல, இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, அவனுக்கு கழுத்திலும், எனக்கு கையிலும் அர்ச்சகர், சாமி மாலையை குடுக்க, பித்து பிடித்து போனேன். கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் நான் சொல்ல, எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லி விட்டார் தாத்தா.
பழனி மலையில் இருக்கும் போதே, கொடைக்கானல் கிளைமேட்டில் மனசு இருக்க, இவன் கைகோர்த்துக் கொண்டு கோவிலை சுத்தினோம். தாத்தா, ஆச்சிகள் கண்ணை விட்டு
மறைந்ததும்,
"வா ஒரு செல்ஃபி எடுப்போம்"னு நான் கேக்க, அவன் வாயை சுளித்துக் கொண்டு போஸ் குடுத்தான், அவன் தலையில் தட்டி
“ஒழுங்கா, நார்மல முஞ்ச வையி"னு சொல்லி, போட்டோ எடுக்க, இரு, இரு, என்று என்னை தடுத்தவன்
“மாலை, மரியாதையோடு, செல்ஃபி எடுப்போம்"னு சொன்னவன், அவன் கையில் இருந்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு,
“உனக்கு, மாலை, மரியாதை, வேண்டாமா?”னு என்னைப் பார்த்து கேட்டவன், என் கையில் இருந்த மாலையை எடுத்து, என் கழுத்தில் போட்டு,
“ஃபோன குடு, செல்ஃபிலாம், எப்பவவுமே ஹெட்டா இருக்கவங்க தான் எடுக்கணும்"னு சொல்லி என கையில் இருந்து ஃபோனை பிடுங்கி, என் தோளில் ஒரு கை போட்டு, அவன் செல்ஃபி எடுக்க, நான் அவன் முகத்தைப் பார்த்தவாரு உறைந்து நின்றேன். என் தோளில் இருந்த கையால் வன என்னை கிள்ள, இயல்பு நிலைக்கு வந்த நான் "ஆ"னு கத்த
“செல்ஃபி, எடுக்கும் பொது காமிராவைப் பார்க்கணும், வாய் பார்க்க கூடாது"னு சொல்லி திரும்பவும், என் தோளில் கைபோட்டு செல்ஃபி எடுக்க, நான் அவன் இடுப்பில் கை போட்ட அவனுடன் சேர்ந்து போஸ் குடுத்தேன். ஒரு பத்து பதினைந்து போட்டோ எடுத்துவிட்டு, போதும் போலாம்னு சொல்லி, அவன் முன்னால் நடந்தான். ஏதோ இவனுடன் கல்யாணம் ஆகிவிட்டதைப் போல, உள்ளம் மகிழ்ந்தேன், அண்ணாந்து கோபுரத்தை பார்த்து முருகானு! நெக்குருகி நன்றி சொன்னேன். எனக்கு எங்கேயே டான்ஸ் ஆடனும் போல் தோன்ற, இவனைப் தேடினால், இவன் பாட்டுக்கு, முன்னால போறான்.
எனக்கு கத்தி "டேய் புருஷா!” கூப்பிடனும் போல் இருக்க!, என்னை நினைத்து நானே வெக்கப்பட்டுக் கொண்டு, ஓடி அவனுடன் சேர்ந்து மாலையோடு நடக்க, அடக்க முடியாத வெக்கம், அவன் பார்த்து விடப் போகிறான் என்று குனிந்து கொண்டேன். மனம் பட படனு அடித்துக் கொள்ள, எனக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அப்போதான், இவன்
“மது, ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு திடீர்னு கேட்டான், என்னனு கண்ணலையே திருப்பி கேக்க
“நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு பட்டுனு கேக்க, ஒரு நிமிஷம், "ஆமா, உண்ணாத்தான் லவ் பண்ணுறேன், இங்க பாரு கல்யாணம் கூட ஆக்கிடுச்சு!”னு சொல்லு! சொல்லுனு! என் மனசு கிடந்து அடிக்க" இவன பார்த்தால், இவனிடம் நான் ஏற்கனவே பார்த்த, நான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற "பரிதவிப்பு!,, பதட்டம்!", அது என்னை பட்டென்று இயல்பு நிலைக்கு கொண்டு வர
“என்ன திடீர்னு, இந்த கேள்வி?”னு முகத்த சாதரணமாக வைத்துக் கொண்டு திருப்பிக் கேட்க,
“இல்ல, இன்னைக்கு திடீர்னு சாரீலாம் கட்டிருக்க, அதுதான், சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்பினான், எனக்கு புரிந்தது, இவன் மனதில் ஏதோ இருக்குனு, மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட, ஒரு வேல இவனும் நம்மள லவ் பண்ணுறானோனு, தோண, ஆசையோடு,
“நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்க, நீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு கேட்க
“ஆமா"னு அவன் சொல்ல, எனக்கு பறப்பது போல் இருக்க
“உண்மையாவா?, யாரு?”னு அடக்க முடியாத ஆவலோடு கேட்டு, "நான்தான் சொல்லுடா" மனுசுக்குள்ள அவனை கெஞ்சினேன்.
“ஜினாலி ஜெய்ன், என் மைதா மாவு"னு சொல்லி, என் தலைல இடிய இறக்கிட்டு, என்னைப் பார்த்து கண்ணடித்து, அவன் ஓட
“பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே கொலைவெறியில் அவனை தூரத்தி, கண்ணில் தெரிந்த கோபுரத்தை பார்த்து, "முருகா, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேனு" சாபமிட்டேன்.
**********************
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
I am humbled by your kind words. But please don't compare me with screwdriver, he is a legend and its not fair for him. But still I am floored by your compliments.
Thank you, again.
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
(18-07-2020, 10:57 PM)funtimereading Wrote: @Doyencamphor, awesome, aுலயோ ஆரம்பிச்சு எங்கயொ போயிட்டீங்க...!
சரளமான எழுத்து நடை, sports detailing, logical லான காட்சி அமைப்புகள், இயல்பான குறும்புத்தனமான உரையாடல்கள்... அதிக கதாபாத்திரங்கள் அறிமுகமானாலும் maintain ஆகும் initial suspense.... I can only feel our beloved writer screwdriver is back...
After xossip closure, recently we could observe few writers are taking up tamil erotic writing as a challenge and giving all of us very wonderful stories with different plot...
Go by your imagination and flow, suggest take a break in between just to cool your mind & to take care of your health..
Thanks to you for such a wonderful story... I wish you to cross at least 250+ episodes...all the best
Thank you, again. You made my day.
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
படித்த, பாராட்டி பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
ரெண்டு நாள் எழுதியதை, எழுத்து பிழைகளை எனக்கு தெரிந்த அளவுக்கு திருத்தவும், கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சில மாறுதல்கள் செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொண்டேன். பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
ஏற்கனவே கதை ஒரு புள்ளியில் நிற்க, ஃபிளாஷ்பேக்கில் ஒரு முழுமை இல்லாமல், தினமும் சிறிது சிறிதாக பதிவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, நண்பர் மன்னிக்கவும்.
Posts: 2,067
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 178
Threads: 0
Likes Received: 63 in 57 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
1
S ema bro I don't think this style of writing from u
Intha love story' la mind voice pesuratha avanga avanga angle la irunthu ezhutharthu kastam thaan bro but it feels nice
•
Posts: 47
Threads: 0
Likes Received: 23 in 22 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
0
•
Posts: 204
Threads: 5
Likes Received: 592 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
(19-07-2020, 01:17 AM)Doyencamphor Wrote: படித்த, பாராட்டி பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
ரெண்டு நாள் எழுதியதை, எழுத்து பிழைகளை எனக்கு தெரிந்த அளவுக்கு திருத்தவும், கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சில மாறுதல்கள் செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொண்டேன். பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
ஏற்கனவே கதை ஒரு புள்ளியில் நிற்க, ஃபிளாஷ்பேக்கில் ஒரு முழுமை இல்லாமல், தினமும் சிறிது சிறிதாக பதிவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, நண்பர் மன்னிக்கவும்.
கதையின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் மிக அருமையாக கோர்வையாக, ரசிக்கும்படி உள்ளது....
நாயகனின் தற்போதைய மாற்றத்திற்கான காரணம் இதே போல இயல்பாக, convincing ஆக அமைந்தால் சிறப்பு...
வாழ்த்துகள்....
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
நீங்க நல்ல காதல் கதை கொடுத்து எல்லோரும் எதிர் பார்க்கும் படி கதை கொண்டு செல்கிறீர்கள். ???
•
Posts: 55
Threads: 0
Likes Received: 15 in 15 posts
Likes Given: 76
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 112
Threads: 0
Likes Received: 71 in 53 posts
Likes Given: 1
Joined: Oct 2019
Reputation:
0
இந்த கதையை இப்போதான் படிச்சேன், கதையை அருமையான வடிவில் கொண்டு போறீங்க , அப்போ உங்க முதல் பகுதியில் ஓலாட்டம் போட்டது பானு வோட அம்மா வை சரியா.........
நிறைய குழப்பங்கள் வருது எனக்கு. அதை எல்லாம் சரி ஆகணும்னா நீங்க கொண்டு போற திரை கதைல தான் இருக்கு.......
தொடர்ந்து எழுத ஏன் வாழ்த்துக்கள்
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
கதாசிரியருக்கு ஒரு வேண்டுகோள் சிறமப்பட்டு எழுதி பெரிய பதிலாக போடுகிறீர்கள் அதோடு அடுத்த பதிவு எப்போது வரும் என்று சொன்னால் மனம் மிகவும் நிம்மதி கிடைக்கும்.
Posts: 35
Threads: 0
Likes Received: 7 in 6 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
0
பானு கதையில் இருக்க வேண்டும்
•
|