அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Still waiting for a Big update please be fast
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice !!! Waiting for updates
Like Reply
Bro ipo tha unga story a na padikara,,,,semmma story bro!!! Awesome!!!! Continue panuga bro
Like Reply
Update Yeppo boss.
Waiting.
It's more than 24hours from previous update.
Like Reply
Waiting for next update eagerly.
Like Reply
I'm waiting for your hottest update brother
Like Reply
Eagerly waiting Brother
Like Reply
Yellarum epdi arvatha thoondi vittu apparam silent ayidringa.
Yeppo update navathu sollunga.
Like Reply
இன்று இரவுக்குள் அடுத்த பதிவு இருக்கும். கண்டிப்பாக கதையை பாதியில் நிறுத்த மாட்டேன்.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
Nandri.
Like Reply
அந்த நம்பிக்கைக்கு அப்பப்போ அவனே உரம் எற்றினான்

கொஞ்ச நாள் கழித்து அவன், நான், நேத்ரா மூவரும் சினிமாவிற்கு சென்றிருந்தோம், இண்டர்வெலில்

மது, இந்தானு" கையில் இருந்த ஐஸ் கிரீமை, மணி குடுக்க

அதென்ன ஊரே, இவள பானுனு கூப்பிடும், போது நீ மட்டும் மதுனு கூப்பிடுறே?”னு நேத்ரா அவன் கையில் இருந்து ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டே கேக்க

எல்லாரையும் மாதிரி கூப்பிடறதுக்கு, நானும், மத்தவங்களும் ஒண்ணா? நான் ஸ்பெஷல், அதுதான்!, இல்ல மது!"னு, அவன் என்னைக் பார்த்து கொஞ்ச,

அவ்வளவுதான் நான் உருகி, அவன் இடுப்பில் கை போட்டு ஓட்டிக் கொள்ள, அவனும் என் தோளில் கை போட்டுக் கொண்டான், இவன் பார்க்காத சமயம் "நீ நடத்து!”னு கண்ணைக் காட்டினாள் நேத்ரா.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
பாகம் - 16

இவனும் கோயம்புத்தூர்லையே காலேஜ் சேர்ந்தான். சும்மா அவனிடம் என் அப்ராட் போலனு கோவித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் கொண்டாடினேன்.

அதுகுறித்து ஒருநாள் மெசேஜ் பண்ணிக் கொள்ளும் போது, அவன் என்னை "பாப்பா"னு, அழைக்க பூரித்துப் போனேன்

என் பாப்பாவுக்காக"

பாப்பாவா? யாரு அது"

அது ஒரு லூசு, என் கூட இப்போ சேட் பண்ணிக்கிட்டு இருக்கு", னு அவன் ரிப்ளை பார்த்ததும், என் காதல் மனம் குத்தாட்டம் போட, "பாப்பா, பாப்பா"னு டிஸ்ப்ளே பாத்து நான் கொஞ்ச

அவனுக்குத்தான் பொருக்காதே

சாரி அக்கா"னு மெசேஜ் போட்டு அந்த சந்தோஷத்துக்கு உடனே வேட்டு வச்சான்.

நான் கோப ஸ்மைலிய, அவன திட்டிக்கிட்டே அனுப்ப

சாரி பாப்பா"னு அவன்ட இருந்து ஒரு மெசேஜ் 

அவ்வளவு தான், மறுபடியும் பட்டாம் பூச்சி பறக்க, இந்த முறை கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்னு மனசு சொல்ல

“luv u,

ஏனோ luv uக்கு முன்னாடி ""யை வேண்டும் என்றே தவிர்த்திருந்தேன். அவனிடம் இருந்து ரிப்ளை வரவில்லை, நெஞ்சம் படபடக்க "அய்யயையோ! கொஞ்சம் பொருத்து இருக்கலாமோனு!” தோண, அவனே ஏதாவது கேக்கும் முன்ன சமாளிப்போம்னு

நீ தான் என் பாப்பா"

ஒரு மெசேஜ் தட்ட,

உனக்கு நான் பாப்பானா, எனக்கு நீயும் பாப்பாதான்"னு, அவனிடம் இருந்து ரிப்ளை

போடு!, தகிட தகிட"னு இங்க என் மனசு, என் கட்டுக்கடங்காம கண்ட படி ஆட, மறுபடியும் ஒரு

“luv you", தட்டி விட்டேன்

இந்த முறையும் ""-யை வேண்டும் என்றே தவிர்த்திருந்தேன், அனுப்பிவிட்டு டிஸ்ப்ளேவையே பார்த்துக் கொண்டிருக்க

“me too"

தாளமுடியாத மகிழ்ச்சி, அப்புறம் அவன நினச்சு டூயட் பாடி, எப்போ தூங்கினேன்னு தெரியாம தூங்கிப்போனேன்.

மறுநாள் காலை எழுந்ததும், பதறி அடித்து மொபைலில் அவன்கூட நேத்து நைட் பண்ணின உரையாடலை திரும்ப படித்தேன். கனவு அல்ல, நிஜம்தான் உறுதிபடுத்திக் கொண்டவுடன், மனசு, நைட் விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் அவனுடன் டூயட் பாடியது. இத நேத்ரா கிட்ட சொல்லியே ஆகணும்னு தோண, கிளம்பி காலேஜ் வந்தேன். அவள் இன்னும் காலேஜ் வந்திருக்கவில்லை. அவளுக்காக காத்திருந்த சமயத்தில்

நைட் பண்ணின சேட்டீங்ககை திரும்ப, திரும்ப, படித்து கனவில் மிதந்தேன்.

"என்ன மேடம், இன்னும் தூக்கமா?”னு கேட்டு நேத்ரா என் அருகில் உக்கார, அவளை இழுத்துக் சென்று கடைசி பெஞ்சில் அமர்ந்து, நேத்ராவிடம் மெசேஜை காட்டினேன், வாசித்து விட்டு அவள், என்னைப் பார்க்க, நான் ”எப்பூடி?” என்று புருவத்தை உயர்த்திக் காட்டி, கண்ணடிக்க,

நீ ரெம்ப ஓவர் ரியக்ட் பண்ணுறே!”னு அவள் சொல்ல, எனக்கு அவள் சொல்லவது புரியவில்லை, என் முகத்தைப் பார்த்தவள்

முதல்ல அவன் இன்னும் “luv u”னு அனுப்பல “me too”னு தான் அனுப்பியிருக்கான், அப்படியே அவன் "luv u” அனுப்பினாக் கூட, அது அக்காவுக்கு அனுப்புற "luv u” தான்!, என்னா இப்போ நீங்கதான காலிங்"னு சொல்லி சிரித்து, தரைல கால் படமா, மிதந்துக் கிட்டு இருந்த எனக்கு, நிஜத்தை புரிய வைக்க, நான் அப்படியே சோர்வாகி முன்னால் இருந்த டேபிளில் கை வைத்து படுத்தேன். கொஞ்சம் நெருங்கி என் முதுகில் கை போட்டு, என் காதருக்கே வந்து

ஆனா, பரவா இல்ல, முன்னைக்கு இப்போ கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு!”னு சொல்ல

நான் கொஞ்சம் சந்தோசத்தோடு அவளைப் பார்க்க "ஆமா!” என்பது போல தலையாட்டி, கண்ணடித்தாள். என் கால்கள் தரையில் இல்லை.

-----------------------------

இப்படி எல்லாமே எனக்கு சாதகமாக போகும் போதுதான், ஒற்றைத் தலைவலியாய் வந்தது, ஜினாலி ஜெய்ன் மீதான அவனின் ஈர்ப்பு. மற்றதைப் போல் இல்லாமல் அவளின் மீது ஒரு மையலிலேயே, என்னிடம் அவன் புலம்ப, அதை நான் மறுநாள் நேத்ராவிடம் சொல்லி புலம்புவது வாடிக்கையானது.

முன்பெல்லாம் அக்கடமி செல்வதை தவிர்த்த நான், அவளிடம் இருந்து இவனைப் பாதுகாக்கவே தினமும் செல்ல ஆரம்பித்திருந்தேன். முடிந்த அளவு இவனை அவள் கண் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப் பார்த்தாலும், விடமாட்டாள் அந்த சக்களத்தி! அவளே வலிய வந்து

ஹேய், மணி! லேட்ஸ் பிளே அ கேம்!”

ஹேய், மணி! ஹவ் இஸ் யுவர் இஞ்சூரி ஹீலிங்க!”

இப்படி நிறைய ஹேய் மணி! கடங்காரி, என்ன வெறுப்பேத்தனும்னு வேண்டிக் கிட்டு வருவா போல!

ஹேய், மணி, யு ஆர் கெட்டிங் மேன்லி டே பை டே!, பியர்டு சூட்ஸ் யு!” - நான் ஆசையா கேட்டு, அவன் சலித்துக் கொண்டே வளர்த்த, அஞ்சுநாள் தாடியா பாத்து, அவள் கொஞ்ச, இவனும் '"னு இளிச்சுக்கிட்டு

"தாங்க்ஸ், யு லைக் இட்?”னு கேக்க, பத்திக் கொண்டு வந்தது எனக்கு.

காதில் ஃபோனைக் கொடுத்து, அவர்கள் பேசியதை கவனியாதது போல், அவர்களை நோக்கி நடக்க

ஓகே பாய்!, பாய் பானு!”னு எனக்கும் சேர்த்து பாய் சொல்லி விட்டு, அவள் கிளம்ப, பத்து நிமிடம் கழித்து, ஒரு சலூன் முன்பு, என் கார் நின்றது

நீ தான, தாடி வைக்க சொன்ன?, இப்போ எதுக்கு எடுக்கணும்?”னு எண்ணப் பார்த்து கெஞ்சினான்,

நீ எடு, எதுக்குனு அப்புறம் சொல்றேன்!”னு நான் அமைதியாக சொல்ல, எண்ணப் பார்த்து கொஞ்சம் அசடு வழிந்தவாரே

பிளீஸ்!, மது, நீ வர்றதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடிதான், என் தாடிய பாத்து "யு லுக் மேன்லி, ஜினாலி சொன்ன!", நாளைக்கே தாடி எடுத்துட்டு போய் நின்னா, நல்லாவா இருக்கும்?!”னு அவன் சொல்ல, எனக்கு வந்த ஆத்திரத்தில் காதில் புகை போவது போல் இருக்க, இவனை முறைத்தேன்

புரிஞ்சுகக்கோ மது!,, பிளீஸ்!,, இப்போதான் அவ கொஞ்சம் இன்டரஸ்ட் காட்டுற மாதிரி இருக்கு!,, பிளீஸ்!, ஒரு ரெண்டு கழிச்சு ஏடுக்குறேன்!, பிளீஸ்!”னு அவன் கெஞ்ச, அதை கண்டுக்காமல், இறங்கி, அவன் உட்காரந்திருந்த பக்கம் போய் கதவை திறந்தேன். பாவமாக பார்வையாலேயே என்னைப் பார்த்து வேண்டாம் என்று கெஞ்ச!, நான் அவனைப் பார்த்து முறைத்தேன், எதுவும் சொல்லாமல், இறங்கி சலூன்க்குள் சென்றான்.

இது என்னோட ஸ்பெஷல் ஆயுதம்!. நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து முறைத்தால் போதும், அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட, நான் என்ன சொன்னாலும் செய்வான். அவனத் தோடர்ந்து, நானும் உள்ளே செல்ல, இவன் ஒரு சேரில் அமர்ந்திருந்தான், கண்ணாடியில் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு 

சார், கட்டிங்? ஆர் ஷேவிங்?, என்ன ஸ்டைல்?”னு அந்த சலூன் பையன் கேக்க 

மொட்ட போடுங்க! மொத்தமா வழிச்சு விட்டுருங்க!”னு இவன் கோவம சொல்ல, அந்த பையன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். ஏசில சலூன் ஜில்லுனு இருக்க, இவன் மட்டும் ரெம்ப சூடா இருந்தான்

ஹி இஸ் ஜோக்கிங்!, ஜஸ்ட் ஷேவ் கிம் கிளீன்!”னு நான் அந்த பையனைப் பார்த்து சொல்ல, கொஞ்சம் இலகுவாகி என்னைப் பார்த்து சிரித்தான் அந்த பையன். இவன் கண்ணாடி வழியே என்னைப் பார்த்து மறுபடியும் கெஞ்ச, நான் சிரித்தவாரே முடியாதுனு தலையாட்டினேன். கடைப் பையன் கொஞ்சம் தயங்கியவாரே, என்னைப் பார்த்து 

மேம், ஆர் யு சூர்?, ஐ திங்க் ஹி இஸ் நாட் சூர்!”னு, குழம்பிப் போய் கேக்க, திரும்பி நான் இவனை முறைத்தேன்

ப்ரதர், என்னைய எல்லாம் ஒரு ஆளாவே மதிக்காதீங்க, எல்லாம் அவங்க சொல்லுறதுதான்!, மொட்ட அடிக்க சொன்னக் கூட யோசிக்காம தைரியமா அடிங்க!, நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!”னு அவன் கோபமா சொல்ல, கடைப் பையன் கொஞ்சம் தயக்கமாகவே அவன் வேலையை ஆரம்பித்தான்

சிறிது நேரம் கழித்து 

அவன் வீட்டின் முன்பு கார் நிக்க, இறங்காமல் உம்மென்று இருந்தான். தாடிய ஷேவ் பண்ணிய கோபம் இன்னும் இருந்தது.

ஓய்"னு நான் கூப்பிட, கேளாதவன் போல், கார் கதவில் கை வைத்து திறந்தான்

டேய்!” இந்த முறை அதிகாரமாய் கூப்பிட, வேறு வழி இல்லாமல் என்னைப் பார்த்து திரும்பினான், நான் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், பாவமாக இருந்த அவனின் முகம் கோபமாக மாறியது. என்னை முறைத்தவனின் முகத்தை, என் இரு கைகளிலும் ஏந்த, கோபம் திரும்பவும் பாவமாக மாறியது!

சும்மா, தாடில எப்படி இருப்ப-னு பாக்கணும் போல இருந்துச்சு, அது தான் தாடி வைக்க சொன்னேன், ஆனா தாடியோட பாத்த நீ யாரோ மாதிரி இருக்க!, எனக்கு தாடி, மீசை, இல்லாத, இந்த மூஞ்சிதான் பிடிச்சுருக்கு!”னு சொல்ல, பாசமாக என்னைப் பார்த்து விட்டு

"எனக்கும் தாடி வளத்தது கொஞ்சம் சங்கடமாத் தான் இருந்துச்சு!"னு சொல்லிட்டு இறங்கிப் போனான், போனவனை கூப்பிட்ட நான்,

கவலைப் படாத, தாடி இருந்தாலும், இல்லாட்டலும், எல்லோருக்கும் உன்ன பிடிக்கும்"னு சொல்ல சந்தோஷமாமனது அவன் முகம், கையை காட்டி விட்டு சென்றவனை பார்த்தவாறு உதடு குவித்து முத்தமிட்டேன்.

----------------------

மறுநாள் நடந்ததை நேத்ராவிடயம் சொல்லி சிரிக்க 

இருந்தாலும் ரெம்ப மோசம் பா! நீ"னு சொல்லி அவளும் கூட சேர்ந்து சிரித்தாள்

ஆனா, நீ ஒரு சின்ன தப்பு பண்ணிட்டே!”அவள் என்னை குழப்ப

இங்க பாரு, லவ்னு வந்தாச்சுனா யாருக்குமே கரிசனம் காட்டக் கூடாது, அது லவ்வராவே இருந்தாலும் சரி!”னு சொல்ல, இன்னும் புரியாமல் பார்த்தேன் அவளை.

தாடி இருந்தாலும், இல்லாட்டலும், அவளுக்கு உன்ன பிடிக்கும்!, நீ சொல்லிருக்க கூடாது!”னு அவள் சொல்ல,

ஏய், நான் அவளுக்கு புடிக்கும்னு எல்லாம் சொல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்னு தான் சொன்னேன்!”னு நான் மறுக்க, சிரித்தவள்

நீ என்ன சொன்னாய் என்பது முக்கியம் இல்லை மகளே!, அவன் காதில் எப்படி விழுந்தது என்பது தான் முக்கியம்!”னு அவள் சாமியார் மாதிரி பேச

"போடி லூசு!”,னு சொல்லிட்டு கிளம்பினேன்.

-------------------------

அன்று மாலை, சும்மா ஒரு கேம் விளையாடிட்டு, என் சக்களத்தி கண்ணில் படாமல் இவனை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் போக,

ஹேய் மணி, கிளம்பியாச்சா?” பின்னால இருந்து ஒரு சத்தம், அவதான், என் சக்களத்தி!   

நாசாமா போக!னு மனசுல நினச்சுக்கிட்டு  “எஸ்"னு இவனுக்கு முன்னால, நான் அவளுக்கு பதில் சொல்ல, அவள் இவனையே பார்த்தவாறு, பக்கத்தில் வந்து,

ஹேய், ஹேண்ட்ஸம், இன் கிளீன் ஷேவ், யு லுக் செக்ஸி, இல்ல?!”னு சொல்லி என்னைப் பார்க்க

ஆமா!”னு நான் இவளைப் பார்த்து இளித்தவாரே சொல்லிக் கொண்டு காரில் ஏறினேன். அவளிடம் இவன் ஏதோ பேச, என்க்கு இருந்த வயித்தெரிச்சலில், என் காதில் ஒன்றும் விழ வில்லை. வாயெல்லாம் பல்லாக காரில் எறியவனைக் கண்டதும், கொலைவெறியானது எனக்கு. அப்பொழுது தான் நேத்ரா சொன்னது புரிந்தது எனக்கு.

இப்படி நான் என்ன செய்தாலும், இவனை அவள் உசுப்பேத்தி விட்டாள் என்றாள், இவன், அவளையும் தாண்டி ஒரு படி மேல போய், அவளை மடக்க என்னிடமே ஐடியா கேட்டான், ஒரு நாள்.

முந்தின நாள் தான், நான் கூப்பிட்டும் வராமல் அவலுடன் கேம் ஆடினான். அது மட்டும் இல்லாமல் முடிஞ்சு வரும் போது டபுள் மீனிங்ல வேற கொஞ்சிக்கிட்டாங்க. கொல வெறியாகிப் போனேன். கோபத்தில் அவளை மைதா மாவுனு திட்ட, இவன் ஈனு இளிச்சுக்கிட்டே, மைதா மாவுதான் புடிக்கும்கிறான்

கொஞ்சம் கலங்கித்தான் போனேன் அன்று.

--------------------------------- 
மறுநாள் நேத்ராவிடம் நடந்ததை சொல்லி ஒப்பாரி வைக்க

எதுக்குடி அவனுக்கு?, அவ மேல அப்படி ஒரு கிறுக்கு?” னு நான் புலம்ப 

"அவ ரெம்ப அழகோ?”னு நேத்ரா கேக்க, பேஸ்புக்ல ஓபன் பண்ணி அவளோட போட்டோவைக் காட்டினேன்

[Image: r3clNzZ.jpg?1]

வாங்கிப் பார்த்தவள், உதட்டைப் பிதுக்கி

சும்மா சொல்லக்கூடாது, நல்ல கொழு கொழுனு, வெண்ண கட்டி மாதிரி தான் இருக்கா”னு, சொல்ல, எனக்கு அழுகை வரும் போல் இருந்தது. என் மனசை படித்து போல

ஹேய், என்னச்சு பா!”னு கேட்டு, இன்னும் கொஞ்சம் என்னை நெருங்கி அமர்ந்தவள் 

லூசா டீ, நீ?, இவளெல்லாம் உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!, என்ன ஃபிகர் நீ!”னு சொல்ல, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது

உன் சைஸ் என்ன?”னு அவள் திடீரென்று கேட்கவும்

எதுக்கு பா?”னு தயங்க 

எல்லாம் காரணமாத் தான்!”னு சொல்ல 

34”

கப் சைஸ் என்ன?”னு அவள் திரும்பவும் கேக்க 

D”, சொல்லி அவளை கேள்வியுடன் பார்க்க 

“உனக்கு தெரியுமா? தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்,  ஏண்டி உனக்கே தெரியாத, உன் ஹவர் கிலாஸ் ஃபிகர்க்கு, உன்னோட ஸ்லிம் பாடிக்கு, முன்னாடியும், பின்னடியும் வேற கும்முணு வச்சிருக்க, அவ ஒரு ஷேப்பே இல்லாம உருண்டையா இருக்கா!, உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!”னு அவள் சொல்ல, கேட்பதற்கே இதமாக இருந்தது

"அழகெல்லாம் ஒரு மேட்டர் இல்ல! தப்பு என் மேலதான்! உன் மேல உள்ள நம்பிக்கையில கொஞ்ச அசாலட்டா இருந்துட்டேன், நானே களத்துல இறங்குறேன்!” அவள் எதோ சினிமா டயலாக் பேசுற மாதிரி பேச, மறுபடியும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தேன். என்னை நோக்கி திரும்பியவள்

நம்ம இதுவரைக்கு படிச்ச படிப்புக்கு இப்பதான் வேலை வந்துருக்கு, உன் லவ்வ ஒரு பேசண்ட் மாதிரி ட்ரீட் பண்ணனும்"னு அவள் ஏதோ தீர்க்கமான முடிவுக்கு வந்தவள் போல் பேசினாள்.

ஒரு பேசண்ட், காய்ச்சல்னு வாரான், நாம் என்ன செய்வோம்?, ஒரு ஊசியப் போட்டு, நாலு ஆன்டி-பையாட்டீக் டேப்லெட்ஸ் குடுத்து அனுப்புவோம்!. சரி ஆகிட்டா ஓகே, இல்லனா?, அது நார்மல் காய்ச்சல் இல்ல, வேற என்னமோ ப்ராப்ளம் இருக்குனு அர்த்தம் இல்லயா?. அந்த மாதிரி தான் நானும், உன்ன மட்டும் தூண்டி விட்டா, உனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும், உன் லவ் செட் ஆகிரும்னு நெனச்சேன், ஆனா நடக்கல. சோ, வேற ஏதோ ப்ராப்ளம் இருக்கு. அந்த ப்ராப்ளத்த அக்கு வேற, ஆணி வேறனு, அலசி ஆராயந்து , ஒரு பக்கா ட்ரீட்மெண்ட் குடுத்தா, உன் காதல் காய்ச்சல் சரி ஆகிரும்“னு சொல்லி என் தோளில் தட்டி, கிளாஸ்க்கு போலாம்னு அவள் அழைக்க, இருவரும் கிளாஸ்க்கு சென்றோம்.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
செம கலக்கல் பதிவுக்கு நன்றி நண்பா
Like Reply
Arumai arumai.
Kadhaliyin thavippu, bayam, aasai, yekkam yendrum yellam ullathu athey neram neraga kettu thorkka manam ellai yeppadiyavathu avanaga thannudayavanga vendum yendra yennam arumai Yana nadai. Super.
[+] 1 user Likes praaj's post
Like Reply
SEMA bro I feel like love chapters
Like Reply
பாகம் - 17 

அன்று மாலை, நான் வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க

பிளான் ரெடி!”னு நேத்ரா சொல்ல, நான் கேள்வியோடு அவளை பார்த்தேன்.

முதல்ல இங்கிருந்து கிளம்புவோம், ஒரு நல்ல காபி ஷாப்க்கு கூட்டிட்டு போ!, அங்க வச்சு சொல்றேன்"னு சொல்ல, இருவரும் கிளம்பினோம்.

அரைமணி நேரம் கழித்து

உன் ஆளுக்கு ஃபோர் ஸ்டெப் treatment குடுக்குறோம்"னு பீடிகை போட்டவளே தொடர்ந்தாள்

ஸ்டெப் - 1 - பரிதவிக்க விடுறோம்

இதுதான் அவனோட வீக்கஸ்ட் லிங்க், அவன் கூட இருக்குற நேரத்த நீ கம்மி பண்ணனும்!, கொஞ்சம் அவன் சுத்தல்ல விடணும்"னு சொல்லி அவள் என்னை பார்க்க

ரெம்ப பீல் பண்ணுவான் பா!”னு நான் சொல்ல

ஓகே, இன்னொரு ஈசி ஐடியா!”னு சொல்லி, அவள் ஒரு கேப் விட

நீ ஒதுங்கிக்கோ, எனக்கு ஒரு மாசம் டைம் குடு, அவன உஷார் பண்ணி, இதே காபி ஷாப்ல அவன என் மடில போட்டு தாலாட்டுறேன், நீயும், அந்த மைதா மாவும் வந்து, வாழ்த்திட்டு போங்க!”னு அவள் சூடாக சொல்ல, நான் அமைதியானேன்

இங்க பாரு பானு, உனக்கு அவன் வேணுமா?”னு தீர்க்கமா கேக்க, பாவமா, நான் ஆமானு தலையாட்ட 

குட், அது மட்டும் தான் உன் பிரச்சனையா இருக்கணும், அவன் கஷ்டப்படுறான், சந்தோஷப் படுறான்லாம் பீல் பண்ணக் கூடாது!, முதல உஷார் பண்ணு!, அப்புறம் பீல் பண்ணு!”னு அவ டயலாக் அடிக்க,

அவள் சொல்வதும் சரிதான், அவள் பிளான் என்னவா இருந்தாலும், எனக்கு வொர்க் அவுட் ஆகும்-னா செயல் படுத்துவதுனு முடிவு பண்ணி,

நீ சொல்றது தான் கரெக்ட், எல்லாத்துக்கும் ரெடி, அவன் எனக்கு வேணும்!”னு ஏதோ உணர்ச்சி வேகத்துல சொல்ல, முகம் மலர்ந்தவள் 

தட்ஸ் மை கேர்ள்!” 

நல்லா கேட்டுக்கோ, உனக்கு இருக்குற ஆயுதமே, அவன உன்னால ஈசியா கஷ்டப்படுத்த முடியுங்கிறதுதான், அதத்தான் யூஸ் பண்ணப் போறோம், ஆனா, அவன் கண்டு புடிக்காத மாதிரி!, அதோட ஃபர்ஸ்ட் ஸ்டெப் தான், அவன தவிக்க விடுறது. அவன கொஞ்ச சுத்தல்ல விட்ட, அவனோட மொத்த எண்ணமும், கவனமும் உன்மேலையும், உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுலையும் தான் இருக்கும்”னு சொல்லி என்னைப் பார்த்து புருவம் உயர்த்தி, சரயா? கெட்க, நான் தலையாட்டினேன்

அவன் என்னதான் அந்த மைதாமாவு பின்னாடி லோலோனு சுத்தினாலும், அவளிடம் போய் ப்ரபோஸ் பண்ணுற தைரியம் இருக்கா?”னு கேக்க, நான் இல்லை என்பது போல தலையசைத்தேன்

குட், அவனுக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச கான்ஃபிடன்சையும் உடைக்குறதுதான் ஸ்டெப் - 2

ஸ்டெப் - 2 ; எள்ளி நகையாடுதல் 

எத இருந்தாலும் உன்னோட ஒபினியன் அவனுக்கு ரெம்ப முக்கியம்? கரெக்ட்டா?”னு கேக்க, நான் ஆமானு தலையசைத்தேன்

இது தான் நம்மளோட அடுத்த ஆயுதம், அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள வயசு வித்தியாசம் தான் நம்ம டார்கெட், அவன் அந்த மைதா மாவ பத்தி எப்போ பேசுனாலும், நீ உடனே இத கையில எடுத்துடணும்”னு அவள் சொல்ல 

ஓகே, ஆனா இது பின்னாடி எனக்கே கூட ப்ராப்ளம் ஆச்சுன?”னு கேட்க 

ரிஸ்க் இருக்கு!, பட் முதல்ல அவள கட் பண்ணுவோம், அப்புறம் நாம்ம பிக்அப் பண்ணுவோம்!”னு சொல்ல, நான் தலையாட்டினேன்

ஸ்டெப் - 3 ; ஆர்வத்தை தூண்டனும் 

"அவனுக்கு லவ் ஹார்மோன், கண்ண பின்னணு சுரக்குற நேரம் இது, அந்த மைதா மாவு இல்லனாக் கூட, "திரிசா இல்லனா திவ்யா!”னு போகத்தான் போறான்"னு அவள் சொல்ல, முறைத்தேன், கண்டு கொள்ளாதவள் 

அவன் அந்த மைதா மாவ பத்தி எப்போ பேசுனாலும், நீ அவள அட்டாக் பண்ணுறது மட்டும் போதது, அவன் வேற யாரையும் தேடி போகாத மாதிரி ஒரு செக் வைக்கணும்".

எப்பூடி?”

அது உன் சாமர்த்தியம், வேணும்னா எனக்கு அவன் மேல இன்டரேஷ்ட இருக்குனு அவன்ட ஒரு பிட்ட போடு!”னு சொல்லி அவள் கண்ணடிக்க, முறைத்தேன்

மேட்டர், இதுதான், உனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு, அவன் மேல இன்டரேஷ்ட இருக்குனு, அவன்ட ஒரு பிட்ட போடு, அந்த பொண்ணு நானா இருந்த உனக்கு சேஃப்.”னு சொல்லி மீண்டும் நாக்கலாக பார்த்து சிரித்தாள். நெஸ்ட்னு நான் சொல்ல,

ஸ்டெப் - 4 ; பொறாமை

நீ எப்படி அவன் மேல பொசசிவா இருக்கியோ, அதே மாதிரி அவனும் உன்மேல பொசசிவா இருக்கான்!. உன்னால எப்படி அவன் அந்த மைதா மாவுகிட்டா பேசுரத பொறுக்க முடியலையோ, அதே மாதிரி நீயும் அவன் கிட்ட பசங்கள பத்தி பேசு, ஃப்ரெண்ட்ஸ் கூட படத்துக்கு போறேன், அங்க போறேன், இங்க போறேன், அவன் அது செமய்யா பண்ணினான், இன்னைக்கு இவன் என்னய்யா பாத்து ஜொள்ளு விட்டானு சொல்லி அவன வெறுப்பேத்து, முள்ள முள்ளால தான் எடுக்கணும்!”. 

"எல்லா ட்ரீட்மெண்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆச்சுனா, எப்படியும் ஒரு நாள் "நீ முன்ன மாதிரி இல்ல, நீ அப்படி இருக்க!, இப்படி இல்லனு" உன்ன வந்து முட்டுவான்!, நீ நேரம் பாத்து தட்டு!"னு அவள் சொல்லி முடிக்க 

இது எவ்வளவு தூரம் வொர்க்-அவுட் ஆகும் தெரியலனு சொன்னேன்

"இன்னொரு பிளான் இருக்கு கேக்குறையா"னு அவள் கேட்க 

சொல்லு"

ரெம்ப சிம்பிள், ஆனா கண்டிப்பா வொர்க்அவுட் ஆகும், நான் கேரண்டீ!”னு அவள் சொல்ல, நான் ஆர்வமா அவளைப் பார்க்க 

பேசாம, பூஜை போட்டு, பொங்கல் வச்சுறு!”னு சிரித்துக் கொண்டே சொல்ல 

புரியல?”னு நான் குழம்பிப் போய் கேட்க, கொஞ்சம் குனிந்தவள், என் காதருக்கே வந்து

உனக்கு பூஜைய போட்டு, அவனுக்கு பொங்க வச்சுறு!”னு சொல்லி கண்ணடிக்க

ச்சீ,,, சின்னப் பையன் டீ அவன்"னு நான் வெக்கப்பட்டு சொல்ல 

முதல்ல அவன சின்னப் பையன பாக்குறது விட்டுட்டு, ஒரு ஆம்பளையா பாரு!”னு அவள் சொல்ல, அவள் சொன்னதிலேயே அதுதான் உருப்படி எனக்கு தோன்றியது.

பின்பு கொஞ்ச நேரம், எங்கள் பிளான பத்தி பேசி! அதை செயல் படுத்துராதுனு முடிவு பன்னினேன்.

--------------------------------

இப்படியெல்லாம் என்னோட பிரச்சனைகளுக்கு யாரிடமும் அட்வைஸ் கேட்டதில்லை. முன்னால் சொன்னதைப் போல நான் இயல்பாகவே புத்தி கூர்மையும், தன்னம்பிக்கையும் கொண்ட பெண். ஆனா இந்த பாவி விஷயத்துல மட்டும் என் மூளை மங்கி, ஒரு மக்கு போல் ஆகிவிடுகிறேன். அதுலையும் அந்த ஜினாலி இடையில வந்ததுல இருந்து, ஒரு கண்ட்ரோல் இல்லாம பதட்ட பட ஆரம்பித்து விட்டேன்

"முதல்ல உன்ன உன் பிடிக்குள் வச்சுக்கோ!, அப்புறம் அவன உன் பிடிக்குள்ள கொண்டு வா!”னு எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்

--------------------------------

அடுத்த நாள் 

ரெம்ப நாள் கழித்து, அன்று நான் விளையாட வரவில்லைனு மெசேஜ் அனுப்பிட்டு , நேத்ராவோட படத்துக்கு போய்னேன். அவனும் பெருசா எடுத்த மாதிரி தெரியல, ஓகே ரீப்ளே மட்டும், ரிப்ளை பண்ணினான். படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொது கால் பண்ணினான், நேத்ரா ஃபோனை வாங்கி கால் கட் செய்து 

வாச்சிங் மூவி, கால் யு லேட்டர்"னு மெசேஜ் அனுப்பிட்டு என்னிடம் தந்தாள்.

படம் முடிந்து வெளியே வரும்முன் மூன்று முறை அழைத்திருந்தான், நிறைய மெசேஜ் வேற, பார்த்து விட்டு நேத்ரா சிரித்தாள். எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவளை இறக்கிவிடும் பொது சொன்னாள்

பேசுனது நியாபகம் இருக்குல! முடிஞ்சா பேசாத, முடியலனா அதிகபட்சம் ஒரு நிமிஷம் தான்! ஓகே!”னு சொல்ல, நான் தலையாட்டி விட்டு, வீட்டுக்கு காரை விரட்டினேன். வீட்டுக்கு வரும்முன் நாலு முறை கால் செய்து விட்டான், நான் முகம் கழுவிட்டு வர, திரும்பவும் அடித்தான், எடுத்து 

ஹலோ"னு சாதாரணமா கேக்க 

எத்தன தடவ கால் பண்ணுறது? படத்துக்கு போனா சொல்லிட்டு போக மாட்டியா?”னு அவன் கேக்க 

டேய் அதுதான் மெசேஜ் பண்ணினேனே!”னு பேசிவைத்த படியே போய் சொல்ல

அக்கடமி தான் வர மாட்டேனு மெசேஜ் அனுப்புன, மூவி பத்தி ஒண்ணும் மெசேஜ் பண்ணல!”னு அவன் சொல்ல 

அப்படியா, மறந்திருப்பேன், என் கிளாஸ் பசங்க எல்லோரும் திடீர்னு பிளான் பண்ணிப் போனோம்"னு சொல்ல, சிறிது நேரம் அவன் பேசவில்லை.

நாளைக்கு பேசுறேன், கொஞ்சம் தல வலிக்குது"னு சொல்ல

கொஞ்ச நேரம் பே..”னு அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நேத்ரா சொன்னதைப் போல கட் பன்னினேன்

அடுத்த நாளும் விளையாட வரவில்லைனு மெசேஜ் அனுப்பினேன், பத்து செகண்ட்ல ரிப்ளை வந்தது 

எங்க இருக்க?”

வீட்ல", ரிப்ளை வரல

பத்து நிமிஷத்துல, அவனே வந்துட்டான், அவனும் அக்கடமி போகல, குதூக்கலாமானேன். இன்னும் கொஞ்ச தவிக்க விடலாம்னு,

வாடா"னு மட்டும் கேட்டுட்டு

ஏதோ ஒரு புக் எடுத்து புரட்டி, எண்ணனே தெரியாத ஒரு பக்கத்த, பாத்து எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரம் பொருத்தவன் 

மது"

ம்ம்"

என்ன எழுதுற?”

"முக்கியமான அசைன்மெண்ட், நாளைக்கு தான் லாஸ்ட் டேட், நேத்து தல வலியால் எழுதல!”னு பொய் சொல்ல 

என்ன விட்டுட்டு படத்துக்கு போனேல, உனக்கு வேணும்!”னு அவன் சொல்ல, கண்டு கொள்ளாமல் நான் எழுத 

மது?’

ம்ம்"

கொஞ்ச நேரம் பேசேன்!”னு அவன் கெஞ்ச 

டேய் ரெம்ப, முக்கியமான அசைன்மெண்ட், இன்னைக்கு எண்ண டிஸ்டர்ப் பண்ணாத"னு எழுதிக்கொண்டே சொல்ல, கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன், சிறிது நேரத்துக்குப் பின் என் தோள்களில் கை வைத்தான், அவனைப் திரும்பி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன் 

நான் கிளம்புறேன்"னு வருத்தம் தேய்ந்த குரலில் சொன்னவனை, ஏறெடுத்துப் பார்க்காமல் 

பாய்"னு கையை மட்டும் தூக்கி காட்டிவிட்டு, எழுதிக் கொண்டிருந்தேன். மெதுவாக அவன் என் ரூம் விட்டு வெளியேற, என் கண்களில் கண்ணீர் அரும்பியது

நேத்ராகக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொல்லி வருந்த 

ஹேய், ரெம்ப பீல் பண்ணாத!, நீ அவன சரியாக் கூட பாக்கலனு சொல்ற, அப்புறம் எப்படி கஷ்டப்பட்டுருப்பானு உனக்கு தெரியும்?”னு, என் பீலிங்க்ஸ் புரியாமல் கேக்க, எனக்கு தேவை இல்லமா இவளுக்கு கால் பண்ணிட்டோமோனு தோண, அமைதியா இருந்தேன்.

சரி, ரெம்ப வருத்தபடாத! நான் சொல்றத மறுபடியும் நல்ல கேளு!, நீ ஸ்மார்ட்தான், ஆனா லவ்வுனு வந்துட்டா, நீ மூளை சொல்றத கேக்காம, மனுசு சொல்றத கேக்குற, அதுதான் ப்ராப்ளம். உன் லவ் பொறுத்த வரைக்கும், நான் மூளையா இருக்கேன், நீ நான் சொல்றத மட்டும் கேளு!” சொல்ல நான், அதுக்கும் அமைதியாகவே இருந்தேன்

சரிப்பா, ரெம்ப கஷ்டபட்டான்னு பீல் பண்ண, இப்போவே ஃபோன் பண்ணி பேசு!, ஆனா ஒன்ன மட்டும் மனசுல வச்சுக்கோ, இப்படி எல்லாம் நீ பீல் பண்ணினா, நீ அவனுக்கு கடைசி வரைக்கும் அக்காதான்!, நான் இப்போ உன் லவ்க்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி, நீ அவன், அந்த மைதா மாவே லவ் பண்ணுறதுக்கு தான் ஹெல்ப் பண்ணனும்!, நல்லா யோசி, ஓகே பாய்”னு சொல்லி, பட்டுனு வச்சுட்டா!. 

"நீ அவனுக்கு கடைசி வரைக்கும் அக்காதான்!...... நீ, அவன், அந்த மைதா மாவே லவ் பண்ணுறதுக்கு தான் ஹெல்ப் பண்ணனும்!” இந்த ரெண்டு வாக்கியமும் அவள் ஃபோன வச்சதுக் அப்புறமும், என் மண்டைக்குள்ள ரிப்பீட்ல ஓட, முடிவு பண்ணிட்டேன்

நேத்ரா சொன்ன பிளான், கேக்கும் போது மொக்கையா, தோன்றினாலும், இப்போ வொர்க்அவுட் ஆகும்னு நம்பினேன்.

ஆனால் அந்த திட்டம் ஒன்றும், அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை, என்று மட்டும் தெரிந்துது.

----------------------------------

மறுநாள் 

என்ன மேடம், என்ன முடிவு பன்னிருக்கீங்க, அந்த மைதா மாவுக்கு, அண்ணி ஆகுறிங்களா? இல்ல மணிக்கு பொண்டாட்டி ஆகுறிங்களா?” காலையில் வந்து உடனே நேத்ரா கேக்க, "மணிக்கு பொண்டாடி!” இந்த வார்த்தை என் முடிவே இன்னும் உறுதி படுத்துச்சு, தீர்க்கமா அவள ஒரு பார்வ பாத்து 

டார்லிங்க!,.. இப்போ துள்ள துடிக்க அடிப்போம்!, அப்புறம் அனச்சு,,,, அள்ளி, அள்ளி குடுப்போம்!”னு வெக்கத்துடன் சொல்லி, அவளப் பார்த்து கண்ணடித்தேன்

[Image: sL44QU9.jpg?1]

"அடிப்பாவி!,,,, நேத்து நைட் வரைக்கும், இங்க பானுனு ஒரு பச்ச புள்ள இருந்துச்சு, அவளே எங்கேனு தெரியலையே?!”னு அவ சிறப்ப அடக்க முடியாம, சிரிச்ச படியே சொன்னவள், சுத்தி முத்தி தேடுவது போல் நடிக்க, அவள் தோள் தட்டி

அந்த பச்ச புள்ள, பிள்ள பெத்துக்க போறேன்னு சொல்லிட்டு, எப்போவோ போய்டா"னு குறும்பா சொல்லி சிரிக்க, எழுந்து அனைத்துக் கொண்டாள்.

---------------------------
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
நான் மொக்கேனு நினச்சநேத்ராவோட பிளான்நாங்க எதிர்பார்த்ததையும் விட செம்மையா வொர்க்அவுட் ஆகஇவன் கோயம்புத்தூர் வந்த புதுசுல எப்படி என்ன ஒட்டிக்கிட்டு இருந்தானோஅப்படி ஆயிட்டான்ஒரே ஒரு விஷயத்த தவிரஜினாலிஜினாலியப் பத்தி பேசுரது கம்மி ஆனாலும்அப்பப்போ பேசுவான்அவள பத்தி பேசுரத நிறுத்த முடியலையே தவிரஎங்க பிளான் படி இவன் வாய அடச்சுருவேன்அப்படியும் எப்பயாவது இவன் வாய அடக்க முடியலனாஇருக்கவே இருக்கு என்னோட முறைப்புகுட்டி போட்ட பூனையா அடங்கிறுவான்

--------------------------

கார் கதவை திறக்க சொல்லி கெஞ்சக் கொண்டிருந்தான்கிலாஸ்யை மட்டும் கொஞ்ச இறக்கி 

யாரோ மைதா மாவுபறந்து வருவா!, பாஞ்சு வருவானு!, நேத்து சொன்னகூப்பிடு வர்றாளானு பாப்போம்"னு சொல்லி அவனை சீண்ட

பிளீஸ் மதுடோர் அன்லாக் பண்ணு!”னு 

“அன்னைக்கு, நைட் ரெண்டுமணிக்கு உன்ன தனியா விட்டுட்டு போக கூடாதுனு பாத்தாபறந்து வருவா!, பாஞ்சு வருவானு!, என்கிட்டையே ஸீன் போடுறே!, இப்போ கூப்பிடுங்க சார்!, அவ எப்பூடி வர்றானு நானும் பாத்துக்கிறேன்"னு விடாமல் நான் அவனை வறுக்க

டோர் கிலாஸை மட்டும் இன்னும் கொஞ்சம் இறக்குமாறுஅவன் செய்கையால் கெஞ்சநானும் இறக்கினேன்பட்டேனே கையை உள்ளே விட்டுஅன்லாக் செய்துகதவை திறந்துகாரில் ஏறி அமர்ந்து கொண்டான்

சார்நீங்க ஏறி உக்காந்தாலும் வண்டி கிளம்பாது!, கூப்பிடு அவளஇன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாக்காம போறதில்லை!”னு விடாமல் சீண்டசீட்டை சரித்துஅதில் மல்லாந்து படுத்துக் கொண்டு 

நீ இருக்கும் போதுகண்ட கழுதைய எல்லாம் எதுக்கு நான் கூப்பிடனும்?”னு சொல்லி அவன் ஒரு கைய நீட்டி என் கன்னத்தை கிள்ள வரசெல்லமாக முறைத்துக் கொண்டே அந்த கையில் அடித்தேன் 

வண்டி கிளம்பாதுனா எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லஇன்னைக்கு நைட் கார்ல தான் தூங்க போறோமா?, எனக்கு ஜாலிதான்உன்கூட கதை பேசிக்கிட்டே இருக்கலாம்!, இப்போ கொஞ்சம் டையர்டா இருக்கு!, ஒரு குட்டி துக்கம் போட்டுக்குறேன்டின்னர் வாங்கிட்டு வந்து எழுப்புசாப்பிட்டுட்டுகதையடிக்கலாம்!”னு 

என் முறைப்புக்கு மரியாதே குடுக்காமஉருண்டு சீட்டிலேயே ஒரு சாய்ந்து படுத்துகண்ணை முடிக்கொண்டான்அவள கழுதைனுசொன்னப்பவே நான் காத்துல பறக்க ஆரம்பிச்சுட்டேன்அதுக்கப்புறம் இவன் செய்ததேல்லாம் இன்னும் கொஞ்சம் என்னை உசுப்பேத்தஅவனை அப்போவே முத்தமிடனும்னு வந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டுசெல்லமாக அவன் கன்னத்தில் தட்டசிரித்தானே ஒழியகண்ணைத் திறக்கவில்லைஆசை தாங்காமல் அவன் கன்னத்தை "நறுக்என்று கிள்ள, “என்று கத்தியவன்சிரித்தான்கண்ணைத் திறக்கவில்லைஅவன் கண்ணைத் பார்க்க மாட்டான் என்ற தைரியத்தல்அவனை கிள்ளிய விரல்களை ஆசையாக முத்தமிட்டேன்அவனைப் பார்த்துக் கொண்டே.

[Image: 60uQ3vg.jpg]

-------------------------------

"டேய்!, ஏறு போலாம்!”னு கார் டோர் கிலாஸ்யை இறக்கியவாறு, இவனைப் பார்த்து கத்த

அக்கட சூடு!”னு இவன் குனிந்து என்னிடம் சொல்லி கண்ணை காட்ட, இவன் காட்டிய திசையில், கொஞ்சம் தொலைவில் ஜினாலி வந்து கொண்டிருந்தாள்! நான் திரும்பி இவனை முறைக்க

இந்த டப்பா காரில் யாரு ஏறுவா"னு என் காரை உதைத்தவரே கூறியவன்

இன்னைக்கு, என் மைதா மாவு கூட, அவ ஸ்கூட்டர்ல கட்டிப் பிடிச்சுக்கிட்டு போகப் போறேன்"னு ஏதோ அவளை கட்டிபிடித்துக் கொண்டிருப்பதை போல் நடித்து, கண்ணை மூடிக்கொண்டு சொல்ல, என் காதுகளில் புகை, இவன் என் முறைப்பை கண்டு கொள்ளாமல், அருகில் வந்தவளிடம்

ஹேய் ஜினாலி, மதுவுக்கு ஏதோ அர்ஜண்ட் வேல இருக்காம், கொஞ்சம் எண்ண வீட்ல டிராப் பண்ண முடியுமா?, இங்க பக்கத்துல தான்! 10 மினிட்ஸ் தான் ஆகும்"னு சொல்ல, எனக்கு பத்திக் கொண்டு வந்தது, இவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்த ஜினாலி 

சோ சாரி டா, இன்னைக்கு என் கசின் பர்த்டே பார்ட்டி இருக்கு, அல்ரெடி ஐ அம் லேட், பிளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ, பிளீஸ், நாளைக்கு கண்டிப்பா உன்ன டிராப் பண்ணுறேன்"னு 

சலித்துக் கொண்டு இவனிடம் கெஞ்சியவள், அவசர அவசரமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி, என் வயிற்றில் பாலை வார்த்தாள். இன்னைக்கு உன்ன சாவடிக்கிறேன் டா மவனே!னு மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு

[Image: LZeN5pg.jpg]

என்ன சார்?”னு நக்கலா அவனைப் பார்த்து கேக்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, காரில் ஏறி அமர்ந்தான்.



சார், இது டப்பா கார் சார், இதுல எல்லாம் நீங்க வருவீங்களா?”னு விடாமல் சீண்ட, பாவமாப் பார்த்தான்.

சார், நீங்க ஏதோ பொரட்டா மாவையோ, சப்பாத்தி மாவையோ, கட்டிப் பிடிச்சுக்கிட்டு போறேனு சொன்னிங்க"னு அவன் நடித்ததைப் போல் நடித்துக் காட்ட, “போதும்!,, விட்டுறு!,, அழுதுருவேன்!” வடிவேல் ரியாக்சன் குடுக்க, அதில் திருப்தி அடைந்தவளாக, சிரித்துக் கொண்டே காரை எடுத்தேன்.

---------------------------------
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
Thamathithu koduthalum niraivaai koduthu erukeer.
Mudinthal thinamum Oru update kodukkavum konjam kuraivaga erunthalum paravalla.
Siru vinnappam than.
Kathai kalakkal
Like Reply
Sema love story. Thanks for your update boss
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
சார், நீங்க ஏதோ பொரட்டா மாவையோ, சப்பாத்தி மாவையோ, கட்டிப் பிடிச்சுக்கிட்டு போறேனு சொன்னிங்க"னு அவன் நடித்ததைப் போல் நடித்துக் காட்ட, “போதும்!,, விட்டுறு!,, அழுதுருவேன்!” வடிவேல் ரியாக்சன் குடுக்க, அதில் திருப்தி அடைந்தவளாக, சிரித்துக் கொண்டே காரை எடுத்தேன்.

************

பத்து நிமிடம் கழித்து


ஏய், வீட்டுக்கு போகலையா?”னு, கார் டவுன்ஹால் ரோட்டில் திரும்பவும், அவன் கேக்க, நான் இல்ல என்று தலையாட்ட

எங்க போறோம்?”னு ஆசையா, எதிரபாரப் போட, கேட்டவனிடம்

சார், இன்னைக்கு அந்த மைதா மாவ, கட்டிப் பிடிச்சுக் கிட்டு பைக்ல போனிங்க இல்லையா!, அத கொண்டாட கேக் சாப்பிட போறோம்!”னு மீண்டும் அவன் காலை வார, முகத்தை உம்மேன்று வைத்துக் கொண்டான்.

பதினைந்து நிமிடம் கழித்து கார் போத்தீஸ் முன் பார்க்கிங்கில் நின்றது. நான் இறங்கி உள்ளே சென்று லிப்ட்டில் ஏறிக் கொள்ள, இவனும் வந்தான்,

டிரஸ் எடுக்க போறோமா?”னு ஆசையாய் கேட்டவனிடம், மீண்டும் நாக்கலாக

ஹெல்ப் பண்ணப் போறோம்!”னு கூற, ஏதோ உணர்ந்தவனாய், அமைதியாக இருக்க, இவனை அப்படி விடும் மூடில் இல்லை நான், கொஞ்சம் அவன் காதருக்கே சென்று

செகண்ட் ஃபுளோர்ல பவர் கட்டாம், நீ வேற இன்னைக்கு பல்ப் மேல பல்ப் வாங்கி, பிரகாசமா இருக்கியா, அதான் உன்ன கொண்டுபோய் அங்க நிக்க வைச்சோம்னு வையி, அந்த ஃபுளோரே டாலடிக்கும்"னு சொல்லி சிரிக்க, நொந்து போனான். ஃபுளோர் வந்து அசையாமல் நின்றவனை, கைகோர்த்து இழுத்துக் கொண்டு போனேன். உம்மேன்று இருந்தவனிடம்

சரி!, சரி! என் செல்லம் இல்ல!, சும்மா லோல்லாய்!”னு சொல்ல, லேசாக சிரித்தவன்,

"என்ன திடீர்னு டிரஸ்?”னு எதிர்பார்போடு கேட்டான்.
அந்த எதிர்பார்ப்பு திட்டமிட்டே உண்டாக்கப் பட்டதுதான். அவன் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரேமே இருந்தது. எப்போதும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவனுக்கு என்ன கிப்ட் வேணும்?, டிரஸ் எப்போ எடுக்கலாம்?, என்ன ரெஸிஸ் எடுக்கலாம்?, என்ன கேக் வாங்கலாம், எத்தனை கிலோ வாங்கலாம்னு?, அவன விட அதிக ஆர்வமா நான்தான் கேக்கபேன். ஆனால் இந்த தடவை வேண்டும் என்ற அவன் பிறந்தநாள் பற்றி பேசாமல் அவனை தவிக்க விட்டேன். அதனால் வந்த ஆர்வம் இது, எப்போது ஏதாவது ஒரு லைப்ஸ்டைல் ஷாப்ஸ்ல தான் டிரஸ் எடுப்போம், ஆனால் இந்த முறை ஒரு திட்டத்தோடு இருந்ததால், போத்தீஸ்.

-----------------------------

டேய் இது நல்ல இருக்கா?” ஒரு இருபதாவது புடவையை, என்மேலே போட்டு, காட்டி கேட்டேன், இல்லை என்றவன், நேராக முதன்முதலில் எடுத்த புடவையை, கையில் எடுத்து

இது சூப்பரா இருக்கு!, இதையே எடுப்போம்!”னு அவன் சொல்ல, சரினு தலையாட்டியாதும், ஒரு பெரு மூச்சு விட்டவன்

இத நான் முதல்ல சொன்னப்பவே செலக்ட் பண்ணி இருந்த ரெண்டு மணிநேரம் வேஸ்ட் பன்னிருக்க வேண்டாம்"னு அவன் சலித்துக் கொள்ள

போட லூசு!, பொண்டாட்டி, புருஷன் கிட்ட ஒவ்வொரு சாரீயா காட்டி, செலக்ட் பண்ண சொல்லுறதுல இருக்க சந்தோஷம் உனக்கு என்ன தெரியும்”னு அவன கட்டிப் பிடுச்சு கத்தனும் போல இருக்க, முடியாததால் மானசுக்குள்ள சொல்லிக் கொண்டேன். "உன்ன புருஷனா நினச்சுக்கிட்டுதான் இவ்வளவு நேரம் உன்ன படுத்தி எடுத்தேன்!” கற்பனையில் அவனிடம் கொஞ்சிக்கொண்டேன்.

மேடம் பில்லை பே பண்ணுங்க டைம் ஆச்சு!, போலாம்"னு அவன் சொல்ல

இன்னும் பர்சேஸ் முடியல!”னு அவனை கடுப்படித்து விட்டு, மென்ஸ் செக்ஷன் நோக்கி போக

என்ன திடீர்னு பட்டு சாரீ"னு அவன் கேக்க

எங்க காலேஜ்ல கல்சுரல் டேக்கு, எல்லாரும் பட்டு சாரீ கட்டுறோம்"னு சொல்லி

அண்ணா, இவன் சைஸ்க்கு, இதே கலர்ல ஒரு ப்ளெயின் ஷர்ட் பாருங்க!” இவனைக் காட்டி சேல்ஸ்மேனிடம் சொல்ல, சந்தோஷமாக என்னைப் பார்த்தவனிடம், திரும்பி

எங்க gang-ல அரவிந்த் இல்ல, ஃபீவர்ல இருக்கான அதான் என்னைய எடுக்க சொன்னான், அவனுக்கு உன் சைஸ் கரெக்ட்டா இருக்குமா?”னு கேக்க, சந்தோஷமா இருந்த முகம், இருண்டுவிட்டது, நான் பார்க்காதது போல் திரும்பி ஷர்ட் செலக்ட் செய்ய ஆரம்பித்தேன். ஷர்ட் எடுத்து முடித்து விட்டு, வேஷ்டி செக்ஷனில் நுழைந்ததும்

டேய், உனக்கு வேஷ்டி எப்படி, காட்டுற மாதிரி வேணுமா, இல்ல ஒட்டிக்கிரியா?”னு கேட்டு இவனைப் பார்க்க

உண்மையா சொல்லி, இந்த டிரஸ் என் பர்த்டேக்கு தான எடுக்க"னு

தழுதழுத்த குரலில், சிறிதாக கலங்கிய கண்களுடன் அவன் கெட்க, அதற்கு மேலும் அவனை சீண்ட மனமில்லாமல், "ஆமானு" நான் தலையாட்ட, பட்டென என்னைக் கட்டிப் பிடுத்துக் கொண்டான். கடையில் இருக்கிறோம், நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதெல்லாம் எனக்கு சுத்தமாக மறந்து விட, நான்னும் அவனை இருக்கிக் கொண்டேன். சில நொடிகளில் அவன் சுதாகரித்து விலக, சுற்றிப்பார்த்தல் ஒரு சிலரைத் தவிர பெரிதாக யாரும் பார்த்ததாக தெரியவில்லை, பார்த்தாலும் கவலையில்லை.

ஒரு மணிநேரம் கழித்து

கண்டிப்பா, வேஷ்டிதான் கட்டனுமா?”னு மறுபடியும் கெஞ்சியவனை, முறைத்துக் கொண்டிருந்தேன். அவன் வீட்டின், போரடிக்கோவில், காரை நிற்க, இறங்காமல் கெஞ்சிக்கொண்டிருந்தான். நான் மனம் மாறுவதாய் இல்லை என்று தெரிந்தவுடன்

கண்டிப்பா, இதே மாதிரி சான்ஸ் கிடச்சா, நானும் உன்ன பழிவாங்குவேன்!”னு மிரட்டியவாறு, காரில் இருந்து இறங்கி சென்றவனை காதலோடு பார்த்து, உதடு குவித்து முத்தமிட்டேன், காற்றில்.

---------------------------------------------------
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)