Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#41
நன்றி நண்பா உங்கள் பதிவக்கு
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
மிக இயல்பாக இருக்கு.
தொடர்ந்து எழுதுங்கள்.
காதல், பாசம் இப்படி அனைத்தும் இருந்தால் மிக நல்லது.
Like Reply
#43
Cool update bro continue
Like Reply
#44
கதையின் யதார்த்த நடை காட்சிகளாய் கண் முன் ஓடுகிறது. நீங்கள் ஒரு ஒரு பகுதியாக எழுதாமல், முழுக்கதையாக பதிவிட்டால், நான் ஒரேடியாக இறுதி வரை படித்துவிட்டு தான் இருப்பிடத்தை விட்டு நகழுவேன்.. வாசகர்களை பிடித்து வைக்கும் சக்தி கதையில் இருக்கிறது. காமம் இல்லாமல் எழுதும் கதைகளில் இது அரிது.

ஆனால் நீங்கள் அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறீர்கள்..

அடுத்த அடுத்த பதிவுகளை உடனுக்குடன் இட்டு உங்கள் சேவையை தொடருங்கள்..
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply
#45
nice continue
Like Reply
#46
Superb writing...
Like Reply
#47
முந்தைய கதையின் தாக்கத்தால் இந்த கதை சரியாய் எடுபடல னு நெனைக்கிறேன்.

முதல் கதையில் பெற்ற தாயுடன் உறவு கொண்ட மகன்.

ரெண்டாவது கதையில் பாசத்துடன் வளர்த்த அக்காவுடன் உறவு கொண்ட தம்பி.

மூணாவது கதையில் ஊரில் உள்ள எல்லா கேடு கேட்ட பயல்களுடனும் உறவு கொண்ட பொம்பள அதை ஊக்குவிச்ச புருஷன்

நாலாவது கதையில்
புருஷன பிரிஞ்ச பொம்பள. அவளோட அம்மாவை சைட் அடிச்ச ஒருத்தன் அவளுக்கு ஆதரவு தர்ரன். அம்மா ஜாடையில் இருக்கும் தூக்கி வளர்த்த ஒரு பெண்ணை அனுபவிக்க போற ஒருத்தன். அம்மா மீது இருந்த காம ஆசையை இவள் மீது காட்ட போறான். அவளும் ஆம்பள துணை இல்லாம காஞ்சி போயி இருக்கா. இது கள்ள காதல் இதுல ரொமான்ஸ் எங்க இருக்கு னு புரியல.
Like Reply
#48
இன்று கதையின் பதிவு உண்டா நண்பா
Like Reply
#49
Nice update bro
[+] 1 user Likes Sparo's post
Like Reply
#50
6

"வீடு ரொம்ப நல்லா, பெருசா இருக்கு, நீங்க மட்டும் இருக்க எதுக்கு இவளோ பெருசு?"


"இல்ல, ஒரு இன்வெஸ்ட்மென்ட் மாதிரி தான், எப்படியும் மாசம் ஒரு வாரம் பத்து நாளு இங்க இருக்கேன்,  ஹோட்டல் ஸ்டே பண்றதை விட வீடு பெட்டர், எனக்கு எல்லாமே ஒரு ரசனையோட, ஒழுங்கோட இருக்கணும்"

 "பார்த்துக்க?"

"ஆளு இருக்கு, ஆபீஸ் வீடு ரெண்டையும் பார்த்துக்க ஆளு போட்டிருக்கு, தினம் மதியம் வந்து வீட்டு வேலை எல்லாம் செய்துடுவாங்க"

அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், பின்னால் தோட்டம், செடிகள், என அவளுக்கு வீடு மிக பிடித்து இருந்தது என்று உணர்ந்தேன். 

பால்கனி, ஊஞ்சல் என எல்லாம் அவளுக்கு பிடித்தபடி வீடு இருந்தது. எனக்கு அவள் திருப்பூரில் இருந்த வீட்டின் சூழல் புரிந்தது. கிராமம் என்றாலும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த நில புலங்களுடன் இருந்த குடும்பத்தில் பிறந்தவள், கஷ்டமான சூழலில் கடந்த இரு ஆண்டுகளாக இருந்து, அவளுக்கு இதை பார்க்க மகிழ்ச்சி வந்ததில் தப்பில்லை. 

"கீழே இருக்க ரெண்டு ரூம்ல எதிலாவது தங்கிக்க, உன் ப்ரெண்ட் வந்ததும் உன் திங்ஸ் வேண்டியது எல்லாம் திருப்பூர் இருந்து கொண்டு வரலாம். "

அவள் என்னை கேள்வியாக பார்த்தாள்.

"நம்ம ஆபீஸ் லயே வேலை பார்க்கலாம், ஏற்கனவே இருந்த அக்கவுண்ட் ஆளு போயி 4 மாசம் ஆச்சு, நான் தான் இப்போ அதையும் பார்க்கிறேன், எப்படியும் ஆளு போட்டு தான் ஆகணும், வேலை ஈஸி யாத்தான் இருக்கும்"

"ஆபீஸ் எங்கே??"

"பக்கம் தான், ஒரு ரெண்டு கிலோ மீட்டர், உனக்கு கால் நல்லானதும் போலாம், நாளைக்கு மட்டும் ரெஸ்ட் எடு பகல்ல, உனக்கு துணைக்கு ஆளு வர சொல்றேன், நாலன்னிக்கு ஆபீஸ் வா"

மதியம் உணவு  கொண்டு வேலு வந்தான்.


"அபி, இது வேலு, நம்ம ஆபீஸ் ல வீட்டில எல்லாமே இவரு தான். இவரு ஒய்ஃப் தான் சமையல் எனக்கு, நாளைக்கு உனக்கு பேச்சுத் துணைக்கு வரும், 10 வருசமா எனக்கு இங்க கோயம்புத்தூர் வந்தாலே வேலு தான் ஆல் இன் ஆல்"

"ஹலோ சார், நான் அபி" 

"சார் எல்லாம் வேனாம்மா, அண்ணா சொல்லு போதும், நான் வெறும் பியூன் தான்மா ஆபீஸ் ல, சாரு தான் என்னை சமமா மரியாதையா, ப்ரெண்ட் மாதிரி நடத்தினாருன்னா நானும் உடனே அவருக்கு சமம் ஆயிட முடியுமா?" என வெகுளியாக கேட்டு சிரித்தார் வேலு.

உணவுக்கு பின் நான் உறங்க செல்ல, அபி வேலுவுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

நான் மாலை ஐந்து மணி அளவில் கீழே வர ஹாலில் டிவி முன் இருந்த அபி கேட்டாள்.

"டீ? காபி?"

"வேலு கிளம்பியச்சா?? டிகாஷன் போட்டு இருக்கா பாரு? இருந்தா காபி, இல்லைன்னா டீ"

"அண்ணா சொன்னாரு, நான் முன்னேயே டிகாஷன் போட்டு இருக்கேன், காபியே கலந்துடரேன்"

காபி குடித்து "நல்லா இருக்கு"

அவள் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள்.

"ஆமா, இத்தனை புக்கும் நீங்க படிக்கவா??"

அலமாரி முழுக்க இருந்த புத்தகங்களைப் பார்த்து வியந்து கேட்டாள். கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் புத்தகங்கள், நூறுக்கும் மேற்பட்ட டிவிடி களைப் பார்த்து புரட்டிக் கொண்டு இருந்தாள்.

"பின்ன என்ன சும்மா அடுக்கி வைக்கன்னு நினைச்சியா??"

"இல்ல, இந்த புக் லாம் எதுக்கு??"

"எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது?"

"இல்ல, பொதுவா ஸ்கூல் காலேஜ் போது பரிட்சைக்கு படிப்போம், அதை தாண்டி விகடன், குமுதம் இல்லை எதுனா கிரைம் நாவல் படிச்சு இருக்கேன், இந்த மாதிரி நாவல் எல்லாம் நான் அதிகம் பார்த்தது கூட இல்ல"

"இதுவும் படிக்க தான், இப்போ நீ கிரைம் நாவல் படிப்பே இல்லையா, யாரு உனக்கு பிடிக்கும்??"

"யாருன்னா, ராஜேஷ் குமார், சுபா, அப்புறம் ஊர் லைப்ரரி ல சுஜாதா, அப்புறம் கொஞ்சம் குடும்ப நாவல் படிப்பேன் இந்த ரமணி சந்திரன், லட்சுமி மாதிரி, பொன்னியின் செல்வன் கூட பாதி படிச்சேன்"

"அதே மாதிரி தான் இதுவும், என்ன இதுலாம் கொஞ்சம் சீரியஸ் நாவல் அவ்ளோ தான். ராஜேஷ் குமார், சுபா மாதிரி தான் ஜெயகாந்தன், அசோக மித்திரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி எல்லாம், எல்லாருமே எழுத்தாளர் தான். யாருக்கு எழுதுறாங்க அது தான் விசயம்"

"புரியல எனக்கு"

"இதுல ஏதாவது படி, ஃப்ரீ டைம் உனக்கு நிறைய இருக்கு, படி, படிச்சா ரெண்டு வகை எழுத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியும்"

"உனக்கு எப்படி சொல்ல, இப்போ நீ குமுதம் விகடன் ரெண்டும் படிப்பே இல்லை, ரெண்டுளையும் என்ன வித்தியாசம் ??"

"விகடன் அட்டை கொஞ்சம் நல்லா இருக்கும், அப்புறம் கவிதை, கட்டுரை கொஞ்சம் அதிகம் இருக்கும், குமுதம் ல சினிமா அரசியல் அதிகம்"

"ரைட், விகடன் என்ன தான் கமர்சியல் பத்திரிக்கை ஆனாலும் கொஞ்சமாவது இலக்கிய டச் அதுல இருக்கும், ஒரு சிறுகதை, ஒரே ஒரு நல்ல கவிதை அல்லது ஒரு நல்ல இன்டர்வியூ அல்லது ஒரு நல்ல கட்டுரை ஆவது இருக்கும், குமுதத்தில் அது கூட இருக்கும்னு சொல்ல முடியாது. எல்லாரும் படிக்கிற மாதிரி இருக்கும், எதுவும் புதுசா இருக்காது" தொடர்ந்தேன்.

"அதே மாதிரி தான் அசோக மித்திரன், ஜெயமோகன், இவங்களுக்கும் ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் மாதிரி ஆளுங்களுக்கும் உள்ள  வித்தியாசம், அதுக்காக நான் அவங்களை மட்டம் தட்டலை, அவங்களோட ஆடியன்ஸ் வேற, அவங்க அதுக்கு தான் எழுதுறாங்க"

நிறைய பேசினோம், சினிமா அரசியல் இலக்கியம் என. கடைசியாக கேட்டாள்.

"சரி, இதுல நான் படிக்கிற மாதிரி ஒரு புக் எடுத்துக் கொடுங்க, சின்னதா இருக்கணும், படிக்கவும் கொஞ்சம் ஈசியா வேணும்"

தேடினேன், கொஞ்சம் யோசித்து தமிழில் சின்னதாக தேடி எடுத்து தந்தேன்.

"இந்தா, இந்த ரெண்டுல ஒண்ணு படி, இது ஜெயமோகன் எழுதிய முதல் நாவல், 90லையே எழுதினது, பேரு ரப்பர். கன்னியாகுமரி தமிழ்ல இருக்கும், இது 18ஆம் அட்சக் கோடு, அசோக மித்திரன் எழுதினது, ஹைதராபாத் சுதந்திர போராட்டம் பேக் கிரவுண்ட் ல தமிழ் பிராமின் டீனேஜ் ஹீரோ வியூ ல கதை போகும், சாகித்ய அகாடமி அவார்டு வாங்கின நாவல்"

"ஹைதராபாத் சுதந்திரமா?? அதும் இந்தியா தானே, ஆந்திரா ல தானே இருக்கு ?"

"ஆமா, இப்போ அது இந்தியா தான், ஆனா 1947 ல இந்தியா சுதந்திரம் வாங்குறப்போ ஹைதராபாத் தனி நாடா இருந்துச்சு, முஸ்லிம் நாடா இருந்துச்சு, அங்க ஆட்சி பண்ணின நிஜாம் அதை பாகிஸ்தான் கூட சேர்க்க விரும்பினார், ஆனா அது புவியியல் அமைப்பு படி தென் இந்தியாவில் இருந்ததால அதை பாகிஸ்தான் கூட சேர்க்க பிரச்சினை, அப்போ ஏற்கனவே பாகிஸ்தான் ரெண்டா இருந்தது, மேற்கு கிழக்கு அப்படி, இப்போ பங்களாதேஷ் இருக்கு இல்ல அது முன்ன கிழக்கு பாகிஸ்தான். நாம விடலை, அப்புறம் மிலிட்டரி அனுப்பி சண்டை போட்டு தான் ஹைதராபாத் நம்ம கூட சேந்துச்சு"

"ஓ"

"அது மட்டும் இல்ல, அப்போ ஹைதராபாத் நிஜாம் உலகத்துல பெரிய பணக்காரர்களில் ஒருத்தர், அவர் இங்க இருந்த சொத்து எல்லாம் விட்டுட்டு, தன் கிட்ட இருந்த தங்கம், வைரம் வெள்ளி மாதிரி பொருள் எல்லாம் எடுத்துட்டு பாகிஸ்தான் போயி செட்டில் ஆயிட்டாரு"

"உம்"

"சாரி, ரொம்ப போர் அடிக்கிறேன், 1947, 48 ல நடந்ததை பத்தி 2012ல சொல்லிக் கிட்டு இருக்கேன்."

"இல்ல இல்ல, எனக்கு இந்த கதை எல்லாம் தெரியாது, ஆமா எல்லாமே பழைய புக்கா இருக்கா? நீங்க கொடுத்த ஒண்ணு 1990 ல எழுதினது, இன்னொன்னு 77 ஆ?"

"இது என்ன சினிமா வா?? பழைய படம், புது படம்னு சொல்ல, புக்குக்கு வயசு பொதுவா ஆகாது, என்ன கொஞ்சம் பேச்சு வழக்கு லேசா மாறி இருக்கும், ஆனா எத்தனை வருசம் கழிச்சு படிச்சாலும் ரசிக்கலாம்"

"உம்"

நிறைய பேசினோம், இல்லை நான் பேச அவள் கேட்டுக் கொண்டு இருந்தாள். அரசியல், சினிமா, இலக்கியம், சமூகம் என நிறைய. நான் அவளிடம் அவளைப் பற்றி எதுவும் கேட்கவே இல்லை. அன்று மட்டும் அல்ல அடுத்த சில நாட்கள் கூட அப்படியே போனது. அவளின் கால் இன்னும் முழுக்க சரி ஆகாததால் அவள் இன்னும் ஆபீஸ் வர வில்லை. மூன்றாம் நாள் கேட்டாள்.


"நீங்க ஏன் எதுவுமே கேக்கலை என்னைப் பத்தி?"

"அதான் சொன்னியே ஹாஸ்பிடல் லாயே"

"அது பத்தி அப்புறம் எதுவுமே நீங்க கேக்கலை?"

"வேணாம். உன் முகத்தை அன்னைக்கு நீ மயக்கமா ஹாஸ்பிடல் ல இருக்கறப்ப பார்த்தப்பவே எனக்கு புரிஞ்சுது, அதைப் பத்தி விளக்கமா கேட்டு ஏன் உன்னை கஷ்டப் படுத்தணும்??"

"உம்" என்றவாறு என் கண்ணைப் பார்த்தாள்.
நானும் அவள் கண்ணைப் பார்த்தேன், அவளை உற்றுப் பார்த்தபடியே சொன்னேன்.

"இப்போ உனக்கு வாழ்க்கைல உனக்கு ரெண்டு வாய்ப்பு தான் இருக்கு, ஒண்ணு நடந்ததையே நினைச்சு நினைச்சு நீயும் கஷ்டப் பட்டு, பிறருக்கும் கஷ்டம் தந்து உன்னை நீயே அழிச்சுக்கிறது, உடனடியா அல்லது கொஞ்சம் கொஞ்சமா, ரெண்டாவது நடந்ததை எல்லாம் அப்படியே மறந்து புதுசா வாழத் தொடங்கு ரது, மனசுக்குப் பிடிச்ச விசயங்களை செய்றது, முடியாட்டி ஏதாவது ஒரு வேலைல, படிப்புல,  உன்னை ஈடுபடுத்திக் கிறது"

அவள் பார்த்தபடி இருக்க நான் தொடர்ந்தேன்.

"என்னைக் கேட்டா பழசை எல்லாம் மற, புதுசா வாழத் தொடங்கு, ஆபீஸ் வா, புது வேலை, புது இடம், புது வீடு, புது ப்ரெண்ட்ஸ் இப்படி எல்லாம் புதுசா இருக்கட்டும்"

சரி என்பதாக தலை அசைத்தாள். 

"நாளைக்கு ஆபீஸ் வா, சின்ன ஆபீஸ் தான் ஒரு 40 பேரு தான் மொத்தம், சரியா சொன்னா அது ஆபீஸ் கூட இல்லை, ஆபீஸ் மாதிரி. டெஸ்க் ஒர்க் ஒரு பத்து பேரு, பின்னாடி யுனிட்ல தான் 30 பேரு மேல இருப்பாங்க, வா, பழகு, அக்கவுண்ட் பாரு, பொழுதும் போகும், உனக்கும் பழச மறக்க ஒரு வாய்ப்பா இருக்கும்"

"நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்" என புன்னகைத்தாள்.

"அந்த ரெண்டு புக்ல எது இப்போ படிக்கிற?"

"முதல்ல ரப்பர் தான் ஆரம்பிச் சேன், ஆனா அந்த தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, நிறைய மலையாளம் கலந்து, அதான் அதை அப்புறம் படிக்கிலாம்னு வச்ச்ட்டு இன்னொரு புக் எடுத்திட்டேன்"

"இது எப்படி இருக்கு?"

"ஈஸி யா தான் இருக்கு, சும்மா வெறுமனே ஒரு பையன் பாய்ண்ட் ஆப் வியூ ல நார்மலா தான் போகுது, நான் நீங்க அன்னைக்கு சொன்னத வச்சு எதோ ரொம்ப சீரியஸான புக்னு நினைச்சேன், ஆனா படிக்க அவ்ளோ விறுவிறுப்பு இல்ல" என தயக்கமாய் சிரித்தாள்.

"பரவால்ல, முதல் தரம் அப்படி தான் இருக்கும், அடுத்தடுத்து படிக்க பழகிடும்"

"நீங்க ஒரே புக்கை பல தரம் படிப்பீங்களா??"

"உம், பிடிச்சு இருந்தா சிலதுலாம் பத்து தரம் மேல படிச்சு இருக்கேன்"

"போர் அடிக்காதா? படிச்சதே திரும்ப படிக்க?"

"நீ ஒரு தரம் கேட்ட பாட்டை திரும்ப கேட்க மாட்டியா?, பிடிச்சா கேப்ப தானே?"

"உம்"

"அதே போல தான் பிடிச்ச படம் திரும்ப பார்க்கிறது, பிடிச்ச புக் திரும்ப படிக்கிறது கூட"

அவள் புரிந்தது போல தலை அசைத்தாள். அவளுக்கு நான் சொல்வது சரிவர புரிய வில்லை என்று எனக்குப் பட்டது. ஆனாலும் ஏதும் நான் மேலே சொல்ல வில்லை.

அடுத்த நாள் ஆபீஸ் வந்தாள், அங்கு இருந்த சக பெண்கள் எல்லாருடனும் அன்றே கிட்டத்தட்ட தோழி ஆனாள் என்று தான் சொல்ல வேண்டும். நான் எண்ணியதை விட அவள் விரைவாக இந்த வாழ்க்கைக்கு, வேலைக்கு பழகிக் கொண்டு விட்டதாக தோணியது. 

டெஸ்க் ஒர்க்கில் இரண்டு பேர் மட்டுமே ஆண்கள், மற்ற அனைவரும் பெண்கள் தான், அது அபிக்கு மிக எளிதாக இருந்தது பழக என தோணியது.

அவள் வீட்டில் இருந்த முதல் மூன்று நாளிலேயே வேலு மனைவியுடன் நன்கு பழக்கம் ஆகி இருந்தாள். கிட்டத்தட்ட அவள் இந்த ஊருக்கு, வேலைக்கு, வாழ்க்கைக்கு முதல் வாரமே தயார் ஆனாள். 

நானும் சென்னை விட்டு வந்து 12 நாளுக்கு மேலே ஆனதால் நாளை வார இறுதி சென்னை திரும்ப வேண்டும். அபி இடம் சொன்னேன், எப்போது என்ன வேண்டுமென்றாலும் வேலு மனைவியிடம் கேட்க சொல்லி. அவளிடமும் சொன்னேன் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அபி உடன் இரவில் தங்குமாறு, பார்த்துக் கொள்ளும் படி. 

"சார், அபி எனக்கு தங்கச்சி மாதிரி சார், நான் பார்த்துக்கறேன்" 

"தாங்க்ஸ் மா" என்றேன்.
அபியிடம் விடை பெற்று சென்னை கிளம்பினேன்.
[+] 5 users Like nathan19's post
Like Reply
#51
Nice update bro continue. Good going
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#52
Cool update bro continue please bro two days one update kudunga bro
Like Reply
#53
Very Nice and cool update Bro Please continue regularly Bro
Like Reply
#54
Good going
Like Reply
#55
Semma sirappana update
Like Reply
#56
Enakku indha padhivu migavum pidithu irunthathu. Ithu ungal knowledge and experience reflect seyyuthu. Thanks.
Like Reply
#57
7


நான் சென்னை சென்ற பின்னும் தினமுமே அபி உடன் ஃபோனில் பேசினேன், நலம் விசாரித்தேன், பொதுவாக நான் யாரிடமும் தினம் பேசும்,  சாப்பிட்டியா, என்ன பண்ற மாதிரி கேள்விகள் கேட்கும் நபர் இல்லை, எனது குழந்தைகளிடம் கோவையில் இருக்கையில் அடிக்கடி ஃபோனில் பேசுவேன் என்றாலும் இந்த மாதிரி கேள்விகள் எப்போதாவது தான் இருக்கும், அதும் பெரியவள் என்னிடம் நான் சாப்பிட்டேனா என்பது மாதிரி கேட்கையில் பதிலுக்கு கேட்டு இருக்கிறேன் தவிர பொதுவாக வெறும் ஃபார்மல் ஆன கேள்விகள் குறைவாக இருக்கும்.

மகனுடன் ஆன உரையாடல் தான் எப்போதும் எனக்கு பிடித்தமானவை, அவனுடன் எனது உரையாடல்கள் எல்லாம் எனக்கு நேரிலும் சரி போனிலும் சரி எனது ரசனைக்கு ஏற்ப இருக்கும், அவனின் ரசனைகள் இந்த பத்து வயதிலேயே எனக்கு பிடித்தபடி இருந்தது. அவனை எனது நீட்சியாக, திருத்திய வடிவமாக பார்த்தேன். எனது இளம் வயது ஆசைகள், லட்சியங்கள் அனைத்தும் நான் அவனிடம் தினிக்காமலே இயல்பாக அவனிடம் இருந்தது, என்னை விட ஆர்வமாக, எதிலும் ஈடுபாட்டுடன் இருந்தான். எனது 18 வயதில், 20 வயதில் எனக்கு தோனாத என் கற்பனைக்கு அப்பாற்பட்ட எல்லாம் அவனுக்கு 10 வயதில் இருந்தது. 

கிட்டத்தட்ட என் மகனுக்கு அடுத்த படியாக எனக்கு அபி உடனான உரையாடல்கள் பிடித்து இருந்தது, தினமும் அவளே போன் செய்வாள், ஆபீஸ் வேலை குறித்த ரிபோர்ட் போல ஆரம்பித்து பின் மற்ற கதைகள், வேலு, வேலுவின் மனைவி, ஆபீஸ் தோழிகள், சமையல், சினிமா, புத்தகம் என எல்லாம் பேசுவாள். 

"எவ்ளோ தூரம் இருக்கு 18வது அட்சக்கோடு" 

"உம், பாதிய தாண்டிட்டென், இப்போ கொஞ்சம் வேகமா போகுது, ஒரு கதை மாதிரியே இல்ல, ரொம்ப இயல்பா போகுது, ஆனா இன்னும் எனக்கு ஒண்ணு புரியல, இது அவ்ளோ பெஸ்ட் நாவல், சாகித்ய அகாடமி அவார்டு வொர்த் ஆன நாவல் ஆக எனக்கு தோணல?"

சிரித்தேன். "முழுக்க படி, ஒரு படத்தை முழுசா பார்க்காம ரிவ்யூ சொல்ல கூடாது, படத்துக்கு ஆவது ஒரு சில ஃப்ரேம் லையே making quality தெரியும், நாவல் ல இன்னும் நிறைய கஷ்டம். நீ படிச்ச வரைக்கும் உனக்கு பிடிக்கலையா?"

"இல்ல இல்ல, பிடிச்சு இருக்கு, நல்லா இருக்கு, பட் இந்தியா அளவுல அவார்டு வாங்குற அளவு என்ன இருக்குன்னு புரியல"

"இதை நாவல் முழுசா படிச்சிட்டு அப்பயும் இதே கேள்வி வந்தா கேளு, அப்போ சொல்றேன்"

என்று சொன்னேன் சிரிப்புடன், அவளும் சிரித்தாள்.

அவள் திருப்பூர் ரூம் மேட்க்கு பெங்களூரில் எதோ வேலை கிடைத்துள்ளது எனவும் அவள் அடுத்த மாதம் காலி செய்வதாக சொன்னாள். 

நான் சென்னை வந்து இரண்டு வாரம் ஆகி இருந்தது. நான் அடுத்த வாரம் ஞாயிறு இரவு மீண்டும் கோவை செல்ல வேண்டும், அபி இடம் சொன்னேன், "நான் ஞாயிறு early morning கிளம்பி திருப்பூர் வரேன், நீயும் கிளம்பி திருப்பூர் வா, உன் திங்ஸ் எல்லாம் கார்லயே கோவை எடுத்துப் போலாம்" 

"உம், உங்களுக்கு எதுக்கு சிரமம்"

"இதுல என்ன சிரமம், நைட் டிராவல் பண்ணி வரதுக்கு பதிலா காலைல வரேன், அவ்ளோ தான்"

"அப்போ சரி" என்றாள் உற்சாகமாக.

கிளம்பும் போதே அபிக்காக இங்கிருந்து சில ஜெயகாந்தன் எளிதான நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், அவள் ரப்பர் படிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னது நினைவுக்கு வர ஜெயமோகனின் கன்னியாகுமரி எடுத்தேன், இதில் ஒரு மலையாள இயக்குனர் பற்றிய கதை என்றாலும் மலையாள வசனங்கள் குறைச்சல் தான். என்னிடம் இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் எல்லாம் பெரிய பெரிய புக் ஆக இருக்க அதை விட்டு சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி என படிக்க ஈஸி ஆன புத்தகங்கள் எடுத்து காரில் வைத்தேன். 

ஞாயி்றுக்கிழமை மதியம் தான் திருப்பூர் சென்றேன். அபி முன்பே வந்து ரூமில் இருந்தாள். சிறிய வசதிக் குறைவான அறை தான் என்றாலும் மோசம் இல்லை. அபியின் தோழி 25 வயது அல்லது இன்னும் கொஞ்சம் கூட இருக்கும். அபியை விட கொஞ்சம் matured ஆக இருந்தாள். அபியை நிறைய கலாய்த்தாள். சின்ன பெண்ணை, தங்கையை அக்கா கலாய்ப்பது போல உரிமையுடன் அபியை கலாய்த்தாள்.

மிக கேசுவல் ஆக பேசினாள், பழகினாள். சிரித்த முகத்துடன் இருந்தாள்.

பேச்சு வாக்கில் சொன்னாள், "எனக்கு முதல்ல இவளை இந்த ஊரை விட்டு போக மனசே இல்ல, இவ பிரச்சினை எல்லாம் குறையுற வரைக்கும் இவ கூட இருக்கணும்னு நினைச்சேன்" நான் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்தேன், அவளே தொடர்ந்தாள்.

"லக்கிலி நீங்க இவளுக்கு நல்ல வேலை, தங்க வீடு எல்லாம் அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க, அவளை நான் இவளோ சந்தோசமா பார்த்ததே இல்ல" உண்மையான மகிழ்ச்சியுடன் சிரித்தாள். 

மதியம் அவர்களுடன் தான் உணவு, ஒரு இரண்டு மூன்று மணி நேரம் திருப்பூரில் கொஞ்சம் சுற்றினோம், ஏதேதோ வாங்கி, கொடுத்து, சிலரை சந்தித்து விடை பெற்று நேரம் போனது.

அபி யாரையோ  சந்திக்க போன இடைவெளியில் அவள் கேட்டாள்.

"சார், உங்களுக்கு marriage ஆயிடுச்சா?"

"வாட், என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது, எனக்கு எவ்ளோ வயசு இருக்கும்? நீ நினைக்கிறே?"

"ஒரு 32,  33 இருக்குமா?"

"எனக்கு 15 வயசுல பொண்ணு இருக்கு!"

"வாட், என்னால நம்பவே முடியல, நிஜமாவா??" வியப்புடன் கேட்டாள்.

"இதுல எதுக்கு பொய்?? எனக்கு வயசு 40" என்றேன் சிரித்தபடி.

"நிஜமாவே 40 வயசு போல தெரில, நான் உங்களை கிண்டல் பண்ண கேட்கலை, நிஜமா நீங்க ஹேன்ட் சம்மா 32 வயசு போல தான் இருக்கீங்க" என்றாள்.

"Anyway thanks. உங்க ஊருல 30 வயசுல தான் ஹேன்ட் ஸம்மா இருக்கணும், 40 வயசுல இருக்கக் கூடாதா?" என்று வாய் விட்டு சிரித்தேன்.

அவளும் பெரிதாக சிரித்தாள், அபி அவள் தோழி யாரையோ சந்தித்து விட்டு வெளியே வந்தவள் எங்களின் சிரிப்பையே ஒரு வித அதீத ஆர்வத்துடன், அல்லது லேசான பொறாமையுடன் பார்த்தது போல தோணியது. வந்த உடனேயே கேட்டாள்.

"என்ன ஜோக் சொன்னா நானும் சிரிப்பேன்" என்றாள்.

"இது பெரியவங்க ஜோக்கு, உனக்கு வேணாம்" என்றாள் அவள்.

"என்னது?" என அபி அவளை முறைத்தாள்.

"அதான் சொன்னேனே பாப்பா, அது அடல்ட் ஜோக்கு, சின்ன பொண்ணுளாம் கேக்க கூடாது" 

அபி இன்னும் கடுப்பானாள் என்பது முகத்திலேயே தெரிந்தது. பின்னர் ஒரு 6 மணி அளவில் கிளம்பினோம் அவளிடம் விடை பெற்று.

எனக்கென்னவோ அபிக்கு அவள் மீதான அன்பை விட அவள் அபி மீது நிரம்ப அன்பை காட்டியதாக தோணியது. இவளைப் பிரிவது குறித்து உண்மையாகவே அவள் வருந்தினாள். 

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி"

"நானும் தான், டேக் கேர்,  பெங்களூர் போயி புது ப்ரெண்ட்ஸ் கிடைச்சா என்னை மறந்துடாதே"

"நீ தான் என்னை மறப்பே, நான் மறக்க மாட்டேன்"

நானும் ஒரு பார்மலிட்டிக்கு சொன்னேன். 

"பாரு, பெங்களூர் வேலை செட் ஆவுதான்னு, இல்லைன்னா ஒரே ஒரு போன் அடி அபிக்கு, கோயம்புத்தூர் கிளம்பி வா" என்றேன். 

அபி பெரிதாக எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் விடை பெற்று கிளம்பினோம்.

"அவ உங்க கிட்ட என்ன ஜோக்கு சொன்னா?"

"ஜோக்கா, எப்போ ??"

"நான் வரப்போ சிரிச்சுட்டு இருந்தீங்கலே, அப்போ, எதோ ஏ ஜோக்கு சொன்னேன் அப்படினாளே "

"அதுவா, எந்த ஜோக்கும் இல்ல, என் வயசு கேட்டு ஷாக் ஆகி சிரிச்சா"

"அதுல சிரிக்க என்ன இருக்கு?" கேள்வியாக வினவினாள்.

"என் வயசு 40 அப்படி சொன்னேன், அவ நம்பவே முடியல, 32 வயசு மாதிரி ஹேன்ட் சம்மா இருக்கீங்க சொன்னா, நான் ஏன் 40 வயசுல ஹேன்ட் சம்மா இருக்கக் கூடாதா கேட்டேன், அதுக்கு தான் சிரிச்சுட்டு இருந்தோம்" 

"ஏன் உனக்கு இதுல இத்தனை கேள்வி?" அவளின் அதீத ஆர்வம் கண்டு கேட்டேன்.

"இல்ல, சும்மா தான், அவ நிறைய ஜோக்கு சொல்வா பொதுவா அது தான் ஆர்வமா கேட்டேன்"

"அப்டியா, அப்ப அதுல ஏதும் சொல்லு"

அவள் இதை எதிர்பார்க்க வில்லை, 

"இல்ல, அவ அதிகம் அந்த மாதிரி ஜோக்கு தான் சொல்வா, எனக்கு சட்டுனு வரல" என்றாள் தயங்கி. 

நான் பதில் சொல்லாமல் புன்னகை செய்தேன், வண்டி விரைந்து கொண்டிருந்தது.
[+] 4 users Like nathan19's post
Like Reply
#58
Good going continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#59
நண்பரே கதை அருமையாக செல்கிறது.
எனக்கு ஒரு சிறு ஐயம் கேட்கலாமா.
சுந்தரம் தான் கார்த்திக் அனிதா இருவரின் தந்தையோ?
Like Reply
#60
கதை மிகவும் அழகாக உள்ளது நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)