| 
		
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		கடந்த இரண்டு  ஆண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கொத்துபரோட்டாவாகப் போட்டு நையாண்டி செய்யும் துணுக்குத் தோரணம்தான் படம். தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்; என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்  என்று அடுக்கிக் காட்டுகிறார் இயக்குநர் கே.ஆர்.பிரபு.  ஆனால், அதில் ‘ஸ்பூஃப்’ பாணிக்குத் தேவையான கூடுதல் கற்பனை வளம் இல்லாமல் ‘ரா’வான காமெடி ஆக்கியிருக்கிறார்கள். மருத்துவமனை யில் அமைச்சர்கள் தங்குவது, முதல்வர் இறப்பது, நள்ளிரவு பதவியேற்பு, இடைத்தேர்தல், ஆற்றில் தெர்மோகோல் விடுவது, 20 ரூபாய் டோக்கன் என சமகால அரசியல் நிகழ்வுகளைக் காட்டும்போது தியேட்டரில் சிரிப்பலைக்குப் பஞ்சம் இல்லை.தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டுகள் சமூக வலைதளங்களில் செய்யும் ஜித்து வேலைகளையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சமூக வலைதளங்களில் வைரலாகும் டிரெண்ட்டிங் விஷயங்களைக் கலாய்த்திருப்பதும் நேர்த்தி.
 ‘மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத் தால் திருவள்ளுவரைக்கூட தாலிபன் ஆக்கி விடுவார்கள்’ என்றும் ‘யார் பணம் கொடுத்தாலும் கார்ப்பரேட்டுகள் வேலை செய்வார்கள்’ என்றும் வருகிற வசனங்கள் அப்படியே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
 வெறுமனவே அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் மெசேஜ் சொல்ல வேண் டும் என்பதற்காக கிளைமாக்ஸில் அறிவுரைகளை அள்ளி விடுவது சலிப்பூட்டுகிறது. காமெடி என்ற பெயரில் பில்ட்-அப் செய்யப்பட் டிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியில் போதிய புத்தி சாலித்தனம் இல்லை.
 ஊரை அடித்து உலையில் போட்டாவது பெரிய பதவிக்கு வரத் துடிக்கும் ஒரு பலே கவுன்சிலருக்கு, அவருடைய சொந்த தொகுதியிலேயே வருடக்கணக் கானக் கோலோச்சிய ஜெ.கே. ரித்தீஷைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பது எந்த ஊர் லாஜிக்கோ!
 திடீர் முதல்வராகும் ஜி.ராம் குமாருக்கு தன் கட்சியையே பகைத்துக் கொண்டு ஆர்ஜே பாலாஜிக்கு ஸீட் தர வேண்டிய அவசியம் என்ன என்பதும் நம்பும்படியாக சொல்லப்பட வில்லை.
 கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி முழு எனர்ஜி யுடன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறார். டுபாகூர் அரசியல்வாதிக்கான அவரது உடல் மொழியும் கச்சிதம். அனால், ஏன் இப்படி பல இடங்களில் காது ஜவ்வைக் கிழிக்கிற மாதிரி கத்துகிறார்? அதுவும் போதாமல், கற்பனையான ஒரு நாளிதழின் தலைப்பை ‘சிலேடை’ பண்ணி அவர் சொல்கிற வார்த்தையில் காது கூசுகிறது.
 நாயகியாக வரும் பிரியா ஆனந்த் தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டாக வருகிறார். அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் நாஞ்சில் சம்பத் நடிக்க வாய்ப்பு குறைவு தான் என்றாலும், படத்தில் திருக் குறள் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். முதல்வராக வரும் ராம்குமார் சிவாஜி, உதவியாளராக வரும் மயில்சாமி ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
 படத்துக்கு இசை லியேன் ஜேம்ஸ். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.
 எத்தனைதான் ஓடி உழைத்தா லும், ஒரே ஒரு சறுக்கலை வைத்தே ஆளை காலி செய்வ தற்கு ஒரு கூட்டம் காத்திருப் பதும், அதற்கு லைக் - ஷேர் போட்டு கொண்டாடும் மக்கள் மனோபாவத்தையும் நறுக்கென சொன்ன விதத்தில் கதை, திரைக் கதை, வசனகர்த்தாவாகவும்... நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி ஜெயித்துவிட்டார்.
 அதேசமயம், தட் ஒன் ட்வெண்டி ருப்பீஸ் டிக்கெட், பாப்கார்ன் பக்கெட், பார்க்கிங் கொள்ளை எல்லாம் சேர்த்து கொடுக்கிற காசுக்கு எல்கேஜி தகுமா என்பதை ஆர்ஜே பாலாஜிதான் சொல்ல வேண்
 டும்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		`கமல், ரஜினி ஒண்ணு சேரணும்!’ - விஷால் வியூகமும் உதயநிதியின் கேள்வியும்
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள், கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனு பெறுதல் என தமிழக அரசியல்  சுறுசுறுப்பாகியுள்ளது. சினிமாவிலிருந்து உறுதியாக அரசியலுக்கு வந்திருக்கும் பிரபலங்களும் தங்கள் பங்கை ஆற்றத் தொடங்கியுள்ளனர். கமல், ரஜினி தேர்தலில் ஒன்றாக இணைய வேண்டும் என விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		க்கள் நீதி மய்யம் கட்சி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அண்மையில் தன் ட்விட்டர் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.  கமல்ஹாசன், நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்திப்போம் எனத் தனது முடிவையும் அறிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் தனது 40 ஆண்டு கால நண்பர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த கமல், அதோடு நில்லாமல் 'நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே" என்று தேர்தலில் ரஜினியின் ஆதரவு வேண்டும் என சூசகமாக அழைப்பு விடுத்திருந்தார்.
 இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, கமல் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டது, "எந்த நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கும் இல்லை, எந்த ஒரு திரைப்படத்துக்காகவும் இல்லை, நடிகர் சங்கத்துக்காகவும் இல்லை ரஜினி சார், கமல் சார் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 இதற்கு கமென்ட் செய்த உதயநிதி, நடிகர் சங்க மௌனப் போராட்டத்தில் எடுத்த கமல், ரஜினி போட்டோ கொண்ட மீம் ஒன்றைப் பதிவிட்டு, 'இது எப்போ ?' எனக் கிண்டலாகக் கேள்வி கேட்டுள்ளார்,
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		
ஆனால், உதயநிதி மீமில் குறிப்பிட்டதுபோன்று அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவை ஆதரித்து நடைபெற்ற உண்ணாவிரதம் கிடையாது. அது, நடிகர் சங்க மௌனப் போராட்டத்தில் எடுத்த புகைப்படம். பின்னர், உதயநிதி அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி, `` அது போட்டோஷாப் செய்யப்பட்டது எனத் தெரியாமல் போட்டுவிட்டேன். முதன்முறையாக போட்டோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டுவிட்டேன். இது என் தவறுதான், இதில் அட்மின் செயல் அல்ல” என பதிவிட்டிருக்கிறா
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சினிமா விமர்சனம்: எல்.கே.ஜி
![[Image: _105760154_2a7a53d5-dbbd-4ca4-93a9-93229f8344f8.jpg]](https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/B032/production/_105760154_2a7a53d5-dbbd-4ca4-93a9-93229f8344f8.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG 
 திரைப்படம்
 எல்.கே.ஜி
 
 
 நடிகர்கள்
 ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், மயில்சாமி, ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார்
 
 
 கதை, திரைக்கதை, வசனம்
 ஆர்.ஜே. பாலாஜி
 
 
 இசை
 லியேன் ஜேம்ஸ்
 
 
 இயக்கம்
 கே.ஆர். பிரபு.
 தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலை, தேர்தலை மையமாக வைத்து அல்லது கேலி செய்து படங்கள் வருவது ரொம்பவும் குறைந்துபோயிருக்கும் சூழலில் வெளியாகியிருக்கிறது எல்.கே.ஜி.
சாதாரண மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் ஓர் இளைஞன் என்னென்ன தகிடுதத்தங்களைச் செய்து முதலமைச்சராகிறான் என்பதுதான் படத்தின் "ஒன்லைன்".
லால்குடி கருப்பைய்யா காந்தி (ஆர்.ஜே. பாலாஜி) ஒரு மாநகராட்சி உறுப்பினர். தன் தந்தையைப் (நாஞ்சில் சம்பத்) போல தோற்றுப்போன அரசியல்வாதியாகிவிடக்கூடாது என்பதற்காக சிறு வயதிலேயே மிகப் பெரிய லட்சியங்களுடன் செயல்பட்டு வருபவர்.
 ![[Image: _105760155_37378473-a8d0-4b75-af69-36edce73c123.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/D742/production/_105760155_37378473-a8d0-4b75-af69-36edce73c123.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG
அந்தத் தருணத்தில் தமிழகத்தின் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கும் போஜராஜன் (ராம்குமார்) எல்.கே.ஜிக்கு முதல்வரின் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுக்கிறார்.
ஆனால், அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல்வர் பதவியைக் கைப்பற்ற நினைக்கிறார் அதே கட்சியைச் சேர்ந்த ரித்தீஷ். இதனால், வெற்றிக்கான தன் தேர்தல் வியூகங்களை வகுக்க தனியார் நிறுவனம் ஒன்றையும் பணியில் அமர்த்துகிறார்.
பிறகு, அந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்று எல்.கே.ஜி. எப்படி முதல்வராகிறார் என்பது மீதிக் கதை.
1980களின் பிற்பகுதியில் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு தமிழ்நாட்டில் நிலவிய குழப்பம் தமிழ் சினிமாவின் பல படங்களில் விமர்சிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகர்களான எஸ்.எஸ். சந்திரன், சோ போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் அதைச் செய்துகொண்டிருந்தார்கள் 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: _105760156_25ff3c92-34d9-4836-84ae-c93d848ccbc7.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FE52/production/_105760156_25ff3c92-34d9-4836-84ae-c93d848ccbc7.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதனைக் கேலிசெய்வதற்கும் விமர்சிப்பதற்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இந்தப் படமும் அப்படித்தான் துவங்குகிறது.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது, அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே தங்குவது, பேட்டி கொடுப்பது என நகர்ந்தாலும், அவற்றில் கேலியோ, விமர்சனமோ இன்றி, நடந்த சம்பவங்களையே திரும்பவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தக் காட்சிகள் சிறிய புன்னகையை வரவழைக்கின்றனவே தவிர, பெரிய சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு காட்சியில் கதாநாயகனும் வில்லனும் பேசிக்கொள்கிறார்கள்.
"கதாநாயகன்: 1967ல் காமராஜரையே தோற்கடிச்ச ஊரு சார் இது..
வில்லன்: காமராஜரைத் தோற்கடிச்ச எம்.எல்.ஏ பேரைச் சொல்லு.. தெரியலை?. ஆனா, காமராஜர் பேர் இன்னைக்கும் இருக்கு." ![[Image: _105760157_a3568d2f-f674-4756-b4fb-7ccd57604d45.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12562/production/_105760157_a3568d2f-f674-4756-b4fb-7ccd57604d45.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG
இந்தக் காட்சியில் இருக்கும் அரசியல் புரிதலும் தொனியும்தான் படத்தின் அடிப்படையான தொனி. 'காமராஜர் நல்லவர்; அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்', 'மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறார்கள்; அதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்', 'சமூகவலைதளங்களின் மூலம் மக்களின் மனதை மாற்றிவிடலாம்', 'பகுத்தறிவு பேசுபவர்கள் வெளியில் பெரியார் படத்தை வைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால், வீட்டிற்குள் கடவுளை வணங்குவார்கள்' 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: _105760158_10a50f78-dbd3-46cb-94ea-fa0bf5334f56.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/14C72/production/_105760158_10a50f78-dbd3-46cb-94ea-fa0bf5334f56.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG
படம் எப்படியிருந்தாலும் கதாநாயகனாக வரும் ஆர்.ஜே. பாலாஜிக்கு இந்தப் படம் ஒரு நல்ல 'ப்ரேக்'. நிறைய இடங்களில் அவர் கத்துவது காதைக் கிழிக்கிறது என்றாலும் படம் முழுக்க பெரும் எனர்ஜியுடன் வருகிறார்.
இவரைவிட்டுவிட்டால், ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத், ஜே.கே. ரித்தீஷ் ஆகியோர் தொட்டுக்கொள்ள ஊறுகாயைப் போலத்தான் வருகிறார்கள். ரித்தீஷ் வரும் காட்சிகளில் மட்டும் அவருக்கு சற்று இடம் கொடுத்திருக்கிறார்கள்.
லியேன் ஜேம்ஸின் பின்னணி இசையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?" பாடலின் ரீ - மிக்ஸ் மனதில் நிற்கிறது. ![[Image: _105760159_cb73fc81-17fb-452b-a8f4-f04fc7d49b11.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17382/production/_105760159_cb73fc81-17fb-452b-a8f4-f04fc7d49b11.jpg) படத்தின் காப்புரிமைYOUTUBE/LKG
படம் முடியும்போது, ஒரு முழு நீள அரசியல் திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தாமல், யு டியூபில் அரசியல் நையாண்டி ஷோ ஒன்றை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது படம்.
அரசியல் ஸ்பூஃப் அல்லது அரசியல் காமெடி அல்லது அரசியலை கடுமையாக விமர்சித்து உருவான படம் என எந்த வரையறைக்குள்ளும் பொருந்தாமல் குழப்பும் இந்தப் படம், மேலோட்டமாக அரசியலை கவனிக்கும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடு 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-03-2019, 09:22 AM 
(This post was last modified: 02-03-2019, 09:24 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்
![[Image: 201903012334252519_cinima-history_SECVPF.gif]](https://img.maalaimalar.com/Articles/2019/Mar/201903012334252519_cinima-history_SECVPF.gif) "ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து
கொள்வார்.மதுரைக் கச்சேரி என்றால் கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.
மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.
அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.
"மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.
இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.
எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம்.
"ஆமாம்'' என்பார்கள். 
உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.
உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள்.
நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.
இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும்.
"சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம்.
"அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.
"அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!
வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளிïர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள்.
"ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும்.
சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள்.
அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.
இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.
"பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல்.
கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன்.
பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.
"ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன்.
பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம்.
"அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.
பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார்.
"வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம்.
ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார்.
அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார்.
அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.
ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.
ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான்.
பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார்.
பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும்.
கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.#tamilnews 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		முதல் பார்வை: தடம்
![[Image: Thadam-Movie-Stills-14JPGjfif]](https://tamil.thehindu.com/incoming/article26404912.ece/alternates/FREE_700/Thadam-Movie-Stills-14JPGjfif) ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறா
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிறது.அப்போது கிடைத்த ஒரு செஃல்பியைக் கொண்டு எழிலைக் கைது செய்கிறது போலீஸ். அதே ஸ்டேஷனில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக கவினும் வந்து சிக்குகிறார். ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இருவரில் யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதில் போலீஸ் திணறுகிறது.
 இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ('பெப்ஸி' விஜயன்) தனிப்பட்ட முன் பகையின் காரணமாக எழிலை கொலை வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார். உண்மையில் நடந்தது என்ன? ஆகாஷ் கொலையானதற்கான பின்னணி என்ன, குற்றவாளி யார், யாருக்கு தண்டனை கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.
 சிக்கலும் குழப்பமும் மிகுந்த ஒரு கொலை வழக்கை போலீஸ் புலனாய்வு செய்யும் விதத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
 சவாலான இரட்டைக் கதாபாத்திரங்களில் கச்சிதம் காட்டி ஈர்க்கிறார் அருண் விஜய். நடை, உடை, பாவனைகளிலும் போலீஸாரை எதிர்கொள்ளும் விதத்திலும் அருண் விஜய் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
 தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என்று இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் எஸ்.ஐ.ஆக திறமை காட்டி நடிப்பில் மிளிர்கிறார் வித்யா ப்ரதீப். கோபாலகிருஷ்ணன் கேரக்டரில் பெப்ஸி விஜயனும், கவின் நண்பனாக சுருளி கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நிறைவாக நடித்துள்ளனர்.
 அம்மா அப்படிப்பட்ட பொம்பளை இல்லடா' என்று மகனிடம் சொல்லும் சோனியா அகர்வாலின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் புரியாத புதிர்.
 புகை பிடிக்கும் காட்சிகளில் தில்லாக வந்து போகும் மீரா கிருஷ்ணன் கதையின் ஓட்டத்தில் காணாமல் போகிறார்.
 கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அருண்ராஜ் இசையில் இணையே உயிர்த்துணையே பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் அருண்ராஜ் டெம்ப் ஏற்றாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார். கவினும் எழிலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் சில்வாவின் உழைப்பு பாராட்டுக்குரியது.
 வழக்கம் போல் ரொமான்ஸ் காட்சிகளில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கொலை வழக்கு முதலில் மந்தமாகச் செல்வது, முழு டீமும் மும்முரமாக இறங்கிய பிறகு வழக்கின் கோணம் மாறுவது, தடயத்தைத் தேடி போலீஸார் அலைவது பின் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து சேர்வது, அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கப் புரியாமல் திணறி நிற்பது என புலனாய்வு செய்யும் விதத்தின் நுட்பங்களை விரிவாகச் சொல்வது படத்தின் பெரும் பலம்.
 கவினா, எழிலா யார் குற்றவாளி என்பதில் இருவர் மீதான பிளஸ், மைனஸை அலசிய விதம் படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. திரைக்கதை ட்விஸ்ட்டுகள் அத்தனை முன்முடிவுகளையும் மாற்றும் அளவுக்கு மிக வலுவாக உள்ளது. தீர்ப்புக்குப் பிறகான உண்மையைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் தனித் தடம் பதிக்கிறார்.
 அருண் விஜய் தான்யா ஹோப்பை தேநீர் அருந்தச் செல்லலாமா? என்று கேட்கும் கேள்விகளும் அதற்கான பதிலும் எளிய இனிய கவிதை. அந்த தப்புதண்டா பாடல் மட்டும் காட்சிகளுக்கு இடையே வேகத்தடை. சோனியா அகர்வால் ஏன் சூதாடுகிறார் என்பது குறித்த டீட்டெயில் இல்லை. அதனால் வரும் பின்விளைவுகளும் அழுத்தமாக இல்லை. முதல் பாதியில் இருக்கும் மந்த நிலையையும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செய்திருக்கலாம்.  இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் படமாக தடம் டைட்டிலுக்கு ஏற்றவாறு  'தடம்' பதித்துள்ளது
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		முதல் பார்வை: கண்ணே கலைமானே
![[Image: Kanne-Kalaimaanejpg]](https://tamil.thehindu.com/incoming/article24976564.ece/alternates/FREE_700/Kanne-Kalaimaanejpg) பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு காதலியைக் கரம் பிடிக்கும் இளைஞன் எதிர்கொள்ள முடியாத பிரச்சினையைச் சந்தித்தால் அதுவே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		மதுரை கிராம வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார் பாரதி (தமன்னா). உதயநிதி மாடு வாங்குவதற்காக பெற்ற வங்கிக் கடனை அடைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் எச்சரிக்கிறார் தமன்னா. அதற்குப் பிறகான பல சந்தர்ப்பங்களில் உதயநிதியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்கிறார். இவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது.மகனின் காதலை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட அப்பா 'பூ' ராம் அவசரப்படாமல் இருக்கச் சொல்கிறார். அப்பத்தா வடிவுக்கரசி தமன்னாவின் வீட்டுக்குச் சென்று அவர்களின் வரலாற்றை அறிந்துகொள்கிறார். இருவருக்கும் ஒத்துவராது என்று வடிவுக்கரசி முடிவெடுக்க, உதயநிதியின் பிடிவாதத்தால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் இனிதாக நடைபெறுகிறது.
 சில நாட்கள் மகிழ்ச்சியாகச் செல்லும் உதயநிதி- தமன்னா வாழ்வில் ஒரு தீராத நோய் வந்து இடியாக இறங்குகிறது. அதிர்ந்து பேசாத உதயநிதி அடிவாங்குகிறார். தமன்னாவின் நிலை என்ன, அவரை உதயநிதியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா? தமன்னாவுக்கு எப்படி என்ன நோய் போன்ற கேள்விகள் என்பது திரைக்கதையில் பதில்களாக விரிகின்றன.
 மனிதர்களுக்கிடையே நடக்கும் உறவுப் போராட்டங்களை, பாசப் பிணைப்பை தனக்கே உரிய பாணியில் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்திலும் அதை நிவர்த்தி செய்திருக்கிறார். இயக்குநர் பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை' படத்தில் வரும் பாடல் வரி கண்ணே கலைமானே. அதையே படத்தின் தலைப்பாக்கி குருவுக்கு மரியாதை செய்திருக்கும் இயக்குநர் சீனு டைட்டிலுக்கான காரணத்தையும் தர்க்க ரீதியாக படத்தில் சொல்லியிருக்கும் விதம் பொருத்தமானது.
 'மனிதன்' படத்திற்குப் பிறகு உதயநிதிக்கு இது முக்கியமான படம். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தையும், தமன்னா மீதான காதலையும் மிக நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். பயம், பதற்றம், பதைபதைப்பு, தயக்கம் ஆகிய உணர்வுகளைக் கடத்தும் விதத்திலும் நடிப்பில் முன்னேறி இருக்கிறார்.
 தமன்னாவின் பார்வையில்தான் படம் பயணிக்கிறது. தமன்னாவும் நடிப்பின் வழியே அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சின்னச் சின்ன அசைவுகளில், எதிர்பார்ப்பில், தவிப்பில், காதலின் லயிப்பில் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		குடும்பம் உடைந்துவிடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் காட்டும் 'பூ' ராமு, ஈகோவால் எகத்தாளமாகப் பார்த்து பின் பிரச்சினையின் வேர் புரிந்து பாசம் காட்டும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் மிகச்சிறந்த உறுதுணை கதாபாத்திரங்கள். இருவரும் அநாயசமான நடிப்பில் மனதில் நிறைகிறார்கள்.நண்பனுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் வசுந்தராவும், வங்கியின் மேலாளராக உயரும் ஷாஜியும் தத்தம் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.
 மதுரை மண்ணையும், வயல்களின் செழிப்பையும், மனித மனங்களில் சுமக்கும் அன்பையும் ஜலந்தர் வாசன் தன் கேமராவில் அழகாகப் படம் பிடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் செவ்வந்திப் பூவே, நீண்ட மலரே பாடல்கள் வசீகரிக்கின்றன. எந்தன் கண்களைப் பாடல் நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் கொட்டுகிறது. பின்னணி இசையில் கதையோட்டத்துக்குத் தேவையான ஒத்திசைவைக் கொடுத்திருக்கிறார் யுவன். காசி விஸ்வநாதனின் முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
 ''எங்கே நேர்மை இருக்கோ அங்கே மூர்க்கம் கோபம் ரெண்டுமே இருக்கும்'', ''ஒரு சேலை நெய்ய ஒரு நெசவாளி 20 ஆயிரம் முறை கையைக் காலை ஆட்டணும், அவங்களுக்காகத்தான் இந்த சேலையை உடுத்துறேன், இந்தப் பேச்சுல நம்ம பேச்சை மறந்துடாதீங்க'' போன்ற எளிமையான வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.
 விவசாயக் கடன், விவசாயி தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம், கல்விக் கடன், மாட்டு அரசியல் என்று முதல் பாதி முழுக்க கருத்துகளால் நிறைத்திருக்கிறார் சீனு ராமசாமி. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வின் பாதகம், கர்ண மகாராஜா வேடம் போடுபவர் வட்டி கொடுக்க முடியாமல் அவஸ்தைப்படுவது என பல நீளும் சம்பவங்களின் நீட்சியைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
 மற்றபடி மனித வாழ்வின் அனுபவங்களை, அன்பை ஒரே நேர்க்கோட்டில் பதிவு செய்திருக்கும் திரைக்கதை உத்தி மனசுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. கெட்டதை நினைக்காத, கெட்டதைச் செய்யாத மனிதர்கள் சூழ் உலகை அருகிருந்து பார்ப்பது போன்ற உணர்வையும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அன்பு அத்தனை குறைகளையும் மறக்கடிகும் என்பதையும் அழுத்தமாகச் சொன்ன விதத்தில் சீனு ராமசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		திரை விமர்சனம்- தடம்
![[Image: arunjpg]](https://tamil.thehindu.com/incoming/article26423054.ece/alternates/FREE_700/arunjpg) எழில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட் டுத் தனியே கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய காதலி தீபிகா (தான்யா ஹோப்). கவின் தன் நண்பன் சுருளியுடன் (யோகிபாபு) இணைந்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். எழில், கவின் இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அடுத்தடுத்துக் கோர்த்து ஒரு கொலை என்னும் புள்ளியில் இருவரையும் ஒன்று சேர்க்கிறது திரைக்கதை.
வழக்கமான இரட்டையர் கதையில் என்ன புதுமை இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்துடன் வரும் ரசிகர்களை மாறுபட்ட திரைக்கதையைத் தந்து அசரடித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. சுவாரஸ்யம் நிறைத்து  மிகத் தெளிவாகத் திரையில் கதையைச் சொல்லிச் செல்கிறார். 
எழில், கவின் இருவரது தாய் பாத்தி ரத்தை ஏற்றிருக்கிறார் சோனியா அகர்வால். வழக்கமாகத் தந்தை சூதாடியாக இருப்பார். இந்தப் படத்தில் தாய் சூதாடியாக இருக்கிறார். சீட்டாட்ட கிளப்களுக்கு மகனை அழைத்துச் செல்லும் அந்தத் தாய்க்கு மகன் என்றால் உயிர். தன் மீதான அவனது நம்பிக்கை பொய்த்துப் போன ஒரு தருணத்தில் தன்னையே மாய்த்துக்கொள்கிறார் அவர். அந்தத் தாயின் அன்புதான் இந்தப் படத்தின் ஆதார பலம். அது திரைக்கதையில் உணர்வுரீதியில் கலந்திருக்கிறது. பொதுச் சமூகம் எளிதில்  புறந்தள்ளக்கூடிய ஆபத்து கொண்ட அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பில் மகிழ் திருமேனி வெற்றிபெற்றிருக்கிறார்.
த்ரில்லர்  படங்களுக்கே  உரிய  திருப்பங்களும்  கதையோட்டத்துடன்  பயணிப்பதில் இயக்குநர்  தன்  கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றி நிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்து தலும் கச்சிதம்.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.
ஒரே உருவத்தில் குழப்பும் இருவரும் தங்களைப் பற்றி முழுமையாக அவர்களே சொல்லாதவரை, போலீஸார் அதைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது விநோதம்.
சீரியஸான வழக்கை விசாரிக்கும் சூழலில் உடன் வரும் போலீஸார்  சிரிப்பு போலீ ஸாக வருவது காட்சியின் மீதான நம்பகத் தன்மையைக் குறைத்துவிடுகிறது. குறிப்பாக தடயங்கள் எதுவும் கைகொடுக்காமல் போலீஸார் திணறும்போது, கிடைக்கும் முக்கியமான தடயம் போலீஸின் சபலத் தால் அழிவதாகக் காட்டும் காட்சி படத்தில் மிகப் பெரிய ஓட்டை. இதுபோன்ற காட்சி களில் இயக்குநர் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம்.
அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். இரட்டையர் பாத்திரத் திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். கதைக்கேற்ப  நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  நாயகியாக வரும் தான்யா ஹோப், கொஞ்ச நேரமே வந்தாலும், கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். கவினை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வந்துபோகிறார் ஸ்மிருதி வெங்கட். முரட்டு இன்ஸ்பெக்டராக வரும் பெப்சி விஜயன் விரைப்பாகவே இருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக வரும் வித்யா பிரதீப், நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகிகளைக் காட்டிலும் படம் முழுவதும் அவர் வருகிறார். முன்னணி காமெடியனாக உயர்ந்துவிட்ட யோகிபாபுவை இந்தப் பாத்திரத்தில் ஏன் நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை.
அருண் ராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால், படத்தின் பின்பாதியில் அவருடைய பின்னணி இசை அருமை.   கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்
துக்கு பலம் என்றால்,  குழப்பம் இல்லாமல் தொகுத்ததில் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்துக்குப் பக்கபலம்.  இரட்டையர் படத்தை புதுமையாகவும் விறுவிறுப்பான த்ரில்லிங்குடன் கலந்து கொடுத்ததில் ‘தடம்’ அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.
மொத்தத்தில், தமிழ் திரில்லர் பட வரிசையில் ஒரு மைல்கல்லாக நிற்கிறது தடம்! 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		முதல் பார்வை: 90 எம்.எல்
![[Image: 6f9891eeP1862927mrjpgjfif]](https://tamil.thehindu.com/incoming/article26419830.ece/alternates/FREE_700/6f9891eeP1862927mrjpgjfif) எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ நினைக்கும் ஐந்து பெண்களின் கதையே '90 எம்.எல்'.
சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வருகிறார் ரியா (ஓவியா). அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் தாமரை (பொம்மு லட்சுமி), சுகன்யா (மோனிஷா ராம்), காஜல் (மசூம் ஷங்கர்) , பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்களைச் சந்தித்துப் பழகுகிறார். தாமரையின் (பொம்மு லட்சுமி) பிறந்த நாள் அன்று ஓவியா மது விருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத  மற்ற பெண்களும் தயங்கியபடி மது அருந்துகின்றனர். பின் ஒவ்வொருவராக பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகவும் தான் காதலிக்கும் நபருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருப்பதாகவும் புலம்புகிறார். அவரைத் தேற்றும் விதமாக சுகன்யாவைக் காதலனுடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிடுகின்றனர்.
இப்படி தாமரை, பாரு, காஜல், ரியா உள்ளிட்ட  ஐந்து பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. அந்தப் பிரச்சினைகள் என்னனென்ன, அவற்றைத் தீர்க்க முடிந்ததா, சுகன்யாவுக்குத் திருமணம் ஆனதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
லிப் லாக் முத்தக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள் மது அருந்துவது, போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இருக்கிறதே என்று யோசிக்கலாம். ஆனால், படத்தின் மையம் இவை அல்ல. அந்த விதத்தில் இயக்குநர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் பெண்களின் பார்வையில் அவர்கள் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார். 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		படத்தில் பியூட்டி பார்லரில் வேலை செய்யும் பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஓவியா. தன்னை அதிகம் நேசிக்கிற, யாருக்காகவும் தன்னை விட்டுக்கொடுக்காத, காதலில் மட்டும் நம்புகிற, கல்யாணம், கமிட்மென்ட் என்றாலே தூர ஓடுகிற சுதந்திரப் பறவை மாதிரியான துணிச்சலான கதாபாத்திரத்தில் வந்து போயிருக்கிறார். ஓவியா நடிப்பதற்கு எந்த இடத்திலும் வாய்ப்பு இல்லை. ஸ்டைலாக நடப்பது, பன்ச் பேசுவது என்றே நகர்ந்து போகிறார். அவரது கதாபாத்திரக் கட்டமைப்பும் முழுமையாக இல்லை.நான்கு பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்வதற்கான கருவியாகவும், அதைத் தீர்ப்பதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்யும் கதாபாத்திரமாகவுமே ஓவியா இருப்பதால் சில இடங்களில் மட்டும் பிரதான நாயகிக்கான அம்சங்களோடு வலம் வருகிறார்.
 காதல் கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் தருணங்களிலும், கண்டுபிடிச்சிட்டியா என்று கணவனிடம் வெட்கப்பட்டுக் கேட்கும்போதும் பொம்மு லட்சுமியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மசூம் ஷங்கர், மோனிஷா ராம், ஸ்ரீகோபிகா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் சிம்புவும் ஒரு ஃபினிஷிங் கொடுக்கிறார்.
 அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. மிர்ச்சி விஜய் வரிகளில் சிம்புவின் இசையில் பிரியாணி பாடல் மட்டும் ஓ.கே.ரகம். பின்னணி இசையிலும் சிம்பு கவனிக்க வைக்கிறார். மரண மட்டை பாடலை அப்படியே கத்தரித்திருக்கலாம்.
 கட்டுப்பாடோடு வாழும் பெண்களுக்கு சுதந்திரம் ஏன் அவசியம், விருப்பப்பட்ட வாழ்க்கையை ஏன் அவர்களால் வாழ முடியவில்லை என்ற கேள்வியை அனிதா உதீப் இப்படத்தில் எழுப்பியிருக்கும் விதம் சிறப்பு. ஆண்கள் மட்டுமே தங்கள் பாலியல் விருப்பத்தை, ஏக்கத்தை, இயலாமையைப் பேசும் சூழலில் பெண்கள் அதுகுறித்துப் பேசுவது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அந்த விதத்தில் அனிதா உதீப் பாராட்டுக்குரியவர். அந்த இடைவேளை ட்விஸ்ட் செம்ம.
 பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடுத்தடுத்து தொடர்வதும் போதைப் பொருள் பயன்படுத்தும் அளவுக்குச் செல்வதும் கதைக்குத் தேவைப்படவில்லை. ஆனாலும் அது ரிப்பீட் ஆவதால் திரைக்கதையில் தேக்க நிலை ஏற்படுகிறது. முத்தக் காட்சிகளும், படுக்கையறைக் காட்சிகளும் கூட சம்பந்தமே இல்லாமல் செருகப்பட்டுள்ளன. மது அருந்தினால்தான் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்தினால்தான் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்வார்கள், அழுது புலம்புவார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		திரை விமர்சனம்: திருமணம் சில திருத்தங்களுடன்
![[Image: 1a4337deP2063147mrjpg]](https://tamil.thehindu.com/incoming/article26435612.ece/alternates/FREE_700/1a4337deP2063147mrjpg) வானொலியில் ஆர்ஜேவாக இருக்கும் உமாபதியும், பர்னிச்சர் ஸ்டோர்ஸில் பணிபுரியும் காவ்யா சுரேஷும் காதலர் கள். இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் தெளி வாக இருக்கின்றனர். காவ்யா சுரேஷின் அண்ணன் சேரன். வருமானவரித் துறையில் அலுவலராக பணியாற்றுகிறார். பொது விஷயம் தொடங்கி சொந்த விஷயம் வரைக்கும் நேர்மை, சிக்கனம், எளிமை என கறார் மனிதர்.
நாயகன் உமாபதியின் அக்கா சுகன்யா. ஜமீன் பரம்பரை என்பதால் எதிலும் எப்போதும் எங்கே யும் அவர் ஆடம்பரப் பிரியராக இருக்கிறார். உமாபதியும், காவ்யா சுரேஷும் தங்களது காதல் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். தங்கைக்கு கணவராக வருபவர் என்பதால் உமாபதியின் குணாதிசயங்கள், பழக்க வழக்கங் கள் பற்றிய விசாரணையில் இறங்குகிறார், சேரன். தன் தம்பி தேர்வு செய்திருக்கும் வாழ்க்கைத் துணை சரியாக இருக்குமா என்று காவ்யா சுரேஷை சந்திக்கிறார், சுகன்யா. முடிவில் இருவீட்டாருக்கும் பிடித்துப்போக திருமண ஏற்பாடுகளில் இறங்குகின்றனர்.
ஜமீன் பரம்பரை வீட்டு திருமணம் என்பதால் பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை தடபுடலாக நடத்த நினைக்கிறார் சுகன்யா. ஆனால், திருமணம் என்கிற பெயரில் எதற்கு வீண் செலவு என்று மணமகன் வீட்டார் முன் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் கொஞ்சமும் இடம் கொடுக்காதவராக இருக்கிறார், சேரன். இதனால் சுகன்யாவுக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஒருகட்டத்தில் சேரன் குடும்பத்தினர் மீது வெறுப் பாக மாறி, தன் தம்பிக்கு வேறொரு இடத்தில் மணப்பெண் பார்க்கும் முடிவுக்கு வருகிறார்.
இதை மணமகள் வீட்டுக்காரரான சேரன் எப்படி எதிர்கொள்கிறார்? மற்றொரு பெண்ணுடன் திருமணம் என்று அக்கா சுகன்யாவின் பேச்சுக்கு உமாபதியின் பதில் என்ன? இந்த மாதிரியான சூழலில் நாயகி காவ்யா சுரேஷ் எடுக்கும் முடிவு என்ன? இதுதான் திருமணம் சில திருத்தங் களுடன் படத்தின் மீதிக் கதை. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக் குப் பிறகு சேரன் இயக்கியுள்ள திரைப்படம் இது. காதல், பாசம், சமூகப் பொறுப்பு என ஒவ்வொரு முறையும் தான் கையில் எடுக்கும் விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிற ஒரு படைப்பாளி. இம்முறை திரு மணம் தொடர்பான முன் ஏற்பாடுகள், திட்டமிடல், அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் ஆகியவற்றை சார்ந்த களத்தில் நின்று படமாக்கியுள்ளார்.அழைப்பிதழ், பட்டுப் புடவை, மண்டபம், உணவு உபசரிப்பு என ஒரு திருமணத்தின் மைய அங்கமாக உள்ள பல விஷயங்களில் எதற்கு வீண் செலவு என்கிற கருத்தை அடிப்படையாக தாங்கி நிற்கும் திரைக்கதை. அதற்குள் லஞ்சம், இயற்கை விவசாயம், குடும்ப பாசம் என கிளை பிரிந்து கதை செல்கிறது.
 ஒரு திருமண நிகழ்வு ஏற்பாடு நடக்கும்போது மணமக்கள் வீட்டார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள் ளும்படியாக பதிவு செய்த விதம் நன்று. ஆனால், அந்தத் திருமண ஏற்பாட்டுக்கு முன்பு நகரும் உமாபதி, காவ்யா சுரேஷ் இருவரது காதல் பின்னணி அமைப்புகள் அழுத்தம் குறைவானதாக இருப்பது விறுவிறுப்பை குறைக்கிறது. சேரன் உமாபதியை உளவு பார்ப்பது, வாட்ஸ் அப் மூலம் அவரது குணத்தை கண்டறிவது, சுகன்யா, காவ்யாவை அவர் வேலை பார்க்கும் இடத்துக்கே சென்று சோதிப்பது என அங்கங்கே டி.வி சீரியலின் டிஆர்பி வாசனையடிக்கிறது.
 சேரன், சுகன்யா இருவரும் தங்களுடைய கதாபாத்திர அமைப்புக்கேற்ப நடிப்பை கச்சித மாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு மனம் மாறும்போதும் சுகன்யா கவனிக்க வைக் கிறார். அதுவே உமாபதி, காவ்யா சுரேஷ் இரு வரது நடிப்பில் இன்னும் சற்று முன்னேற்றம் தேவை.
 ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான கருத்தை முன் வைத்து நகரும் கதையின் போக்கை தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், பாலசரவணன் மூவரது கதாபாத்திரமும் மென்மை யாக்குகின்றன. ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்டோரின் நடிப்பு கதைத் தேவையைப் பூர்த்திசெய்வதாக அமைந்துள்ளது.
 குடும்பத்தில் சிக்கனம், தொழிலில் நேர்மை என பிரதிபலிக்கும் சேரன் தனது தங்கையை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளையை காணவில்லை என்றதும் அவரது அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் காரை எடுத்துக் கொண்டு சொந்த வேலைக்காக திரிகிறார். அது எப்படி? ஆங்காங்கே இப்படி சிறுசிறு லாஜிக்கல் சிக்கல்களும் இருக்கின்றன.
 திருமணப் பேச்சு, அது தொடர்பான ஏற்பாடு கள் உள்ளிட்ட சில இடங்களில் சபேஷ் முரளியின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படத்தின் பாடல்களுக்கான இசை சித்தார்த் விபின். அவரது பங்களிப்பில் பெரிதாக தனித்தன்மை இல்லை. இந்தத் திருமணத்தில் இன்னும் நிறைய திருத்தங்களை சேரன் செய்திருக்கலாம்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		வசூலில் ரூ.200 கோடியை தாண்டி ‘விஸ்வாசம்’ சாதனை!
![[Image: Master.jpg]](https://tamil.samayam.com/img/68282724/Master.jpg) 
 
 அதாவது, தமிழ்நாட்டில் ரூ.139 கோடி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பிற இந்திய மாநிலங்களில் ரூ.18 கோடி, பிற நாடுகளில் ரூ.43 கோடி வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் ‘விஸ்வாசம்’ படம் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.200 கோடியை எட்டியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத 'விஸ்வாசம்
![[Image: viswasam-stills-5jpgjpg]](https://tamil.thehindu.com/incoming/article25993542.ece/alternates/FREE_700/viswasam-stills-5jpgjpg) அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்', தெலுங்கில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது.
தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், "இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1-ம் தேதி வெளியானது. எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், படம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அஜித் நடித்த படங்களின் தெலுங்கு டப்பிங் பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |