screw driver ஸ்டோரீஸ்
"ச்சரக்க்க்...!!"

தீப்பெட்டி திறந்து ஒரு தீக்குச்சி கிழித்து பற்றவைக்க.. அறைக்குள் இப்போது சிறிய அளவில் ஒரு வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்துடனே மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ஆதிரா..!! மசமசப்பான வெளிச்சத்திலேயே அந்த முயலை அப்படியும் இப்படியுமாய் தேடினாள்.. அது ஏதாவது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலை வேறு..!! இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி அவள் நடந்துகொண்டிருக்க.. படக்கென அவளது முகத்துக்கு முன்னே அந்த மரச்சிலையை தோன்றவும்.. பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. அதே நேரம் தீக்குச்சி வேறு தீர்ந்து அவளுடைய விரலைச்சுட..

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!" 

கையை வெடுக்கென உதறினாள்.. எரிகிற விரலை வாயில் வைத்து எச்சில் பூசிக்கொண்டாள்..!!

[Image: krr18.jpg]

"ச்சரக்க்க்...!!" 

மீண்டும் ஒரு தீக்குச்சி பற்றவைத்துக்கொண்டு அறைக்குள் மேலும் முன்னேறினாள்.. உள்ளேயிருந்த பொருட்கள் எல்லாம் இப்போது மங்கலாக புலப்பட்டன.. உடைந்த கட்டில் நாற்காலிகள், துருப்பிடித்த இரும்பு உபகரணங்கள், சிதைந்துபோன ரப்பர் குழாய்கள், காலியான அட்டைப் பெட்டிகள்..!! கையில் தீக்குச்சி வெளிச்சத்துடன் அப்படியே உடம்பை மெல்ல சுழற்றினாள் ஆதிரா.. சுற்றிலும் அடர் இருட்டு.. அவள் நின்றிருந்த இடத்தில் மட்டும் சொற்ப வெளிச்சம்..!! அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த அறைக்குள் நகர.. இருள் அப்பியிருந்த ஒரு மூலையில்.. இப்போது இரண்டு சிவப்பு விளக்குகள் பளிச்சென்று மின்னின..!!

"ஆஆஆவ்வ்வ்..!!" 

முதுகுத்தண்டு சட்டென சில்லிட்டுப்போக.. ஆதிரா வாய்விட்டே கத்திவிட்டாள்..!! ஆதிரா அவ்வாறு கத்தியதும்.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தடதடவென உருட்டிக்கொண்டு ஓடியது அந்த முயல்..!! இருட்டுக்குள் செந்நிறத்தில் மின்னியது அந்த முயலின் கண்கள்தான் என்பதை.. ஓரிரு வினாடிகள் கழித்துதான் ஆதிரா உணர்ந்துகொண்டாள்..!! அதை உணர்ந்து அவள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையிலேயே.. அந்த முயல் சுவற்றோடு ஒட்டி நின்ற மரஅலமாரியின் இடுக்கில் சென்று மறைந்தது..!! உள்ளே சென்ற வேகத்தில்..

"க்க்கீச்ச்..!!" என்று ஈனஸ்வரத்தில் சப்தம் எழுப்பியது.

ஆதிராவிடம் இப்போது ஒரு பதைபதைப்பு.. அலமாரியின் நெருக்குதலில் இருந்து அந்தமுயலை விடுவிக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு உந்துதல்.. வெளிச்சம் தீர்ந்த தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள்..!! இருளுக்குள் தெரிந்த அலமாரியின் பிம்பத்தை நெருங்கினாள்.. அதை நகற்ற முயன்றாள்.. முடியவில்லை.. கடினமாக இருந்தது..!! அப்படியே கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.. ஒருகையை மட்டும் அலமாரியின் பக்கவாட்டில் நீட்டி.. அப்படியே இருட்டுக்குள் தடவி தடவி.. அலமாரிக்கும் சுவற்றுக்கும் இருந்த குறுகலான இடைவெளியில் கையை நுழைத்தாள்.. இப்படியும் அப்படியுமாய் மெல்ல துழாவினாள்.. அந்த முயல் அகப்படுகிறதா என்று பார்த்தாள்..!!

அவளுடைய விரல்களில் ஏதோ வழுவழுப்பாய் தட்டுப்பட்டது.. கையை சுருக்கி அதை கப்பென பற்றிக்கொண்டாள்..!! 'இது முயல் இல்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. 'க்க்கீச்ச்.. க்க்கீச்ச்..!!' என்று வாசலில் ஒரு சப்தம்..!! அத்தனை நேரம் அவளை அலையவிட்ட அந்த முயல்.. இப்போது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தது..!!

அந்தமுயலுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் ஆதிராவிடம் ஒரு நிம்மதி.. கையை அலமாரிக்கு பின்புறமாக செருகியிருந்தவளிடம், மெலிதான ஒரு புன்னகை..!! ஓரிரு வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அப்புறம் கையை மெல்ல வெளியே இழுத்தாள்.. அந்தக்கை பற்றியிருந்த பொருளும் அதனுடன் வெளியே வந்தது.. அது என்ன பொருள் என்பது இருட்டுக்குள் தெளிவாக புலப்படவில்லை..!!

"ச்சரக்க்க்...!!" 

ஆதிரா மீண்டும் ஒரு தீக்குச்சி உரசினாள்.. அதன் வெளிச்சத்தில் கையோடு வந்த பொருள் மீது ஆர்வமாக பார்வையை வீசினாள்..!! அது.. ஒரு மர பொம்மை.. சிறுவயதில் ஆதிராவும் தாமிராவும் பந்தயப் பொருளாக வைத்து விளையாண்ட அதே மாத்ரியோஷ்கா மர பொம்மை..!!!

கையில் அந்த பொம்மையுடனேதான் ஆதிரா அறையில் இருந்து வெளிப்பட்டாள்..!! அவளும் தாமிராவும் பெரியவர்களான பிறகும்கூட.. அந்த பொம்மையை அவர்கள் அறையிலேயே ஒரு அலங்காரப் பொருளைப்போல வைத்திருந்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது..!! வேண்டாத பொருட்களை அடைத்து வைக்கிற அந்த அறைக்கு இந்த பொம்மை எப்படி சென்றிருக்கக்கூடும் என்ற யோசனையுடனேதான் மாடிப்படியேறினாள்..!! அவர்களுடைய குடும்பம் மைசூருக்கு சென்றபிறகு.. அவர்களுடைய அறையை சுத்தம் செய்த வனக்கொடி.. அந்த அறையில் இந்த பொம்மையை போட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மாடியில் இருக்கிற அவர்களது அறைக்கு ஆதிரா திரும்பியபோது.. சிபி அங்கே இல்லை.. உறங்கி எழுந்திருந்தவன் வேறெங்கோ சென்றிருந்தான்..!! ஆதிரா படுக்கையில் சென்று அமர்ந்தாள்.. சில வினாடிகள் அந்த பொம்மையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிறுவயது நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதில் எழுந்தன..!! பிறகு அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட.. அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. உள்ளே இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திறந்து அதற்குள்ளிருந்த பொம்மையை வெளியே எடுத்தாள்..!! 

ஏழாவது பொம்மையை திறந்தபோதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அதற்குள்ளே இருக்கவேண்டிய, எல்லாவாற்றிலும் மிகச்சிறிய எட்டாவது பொம்மையை காணவில்லை.. அதற்கு பதிலாக உள்ளே வேறொன்று இருந்தது.. ஒரு கம்ப்யூட்டர் மெமரி சிப்..!!

ஆதிரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.. சிறிது நேரம் அந்த சிப்பையே வித்தியாசமாக பார்த்தாள்..!! 'இதை யார் இதற்குள் வைத்திருப்பார்கள்..?' என்று யோசித்துப் பார்த்தால்.. தாமிராவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றியது..!! அதே நேரம்.. அந்த சிப்புக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமும்.. அவளுக்குள் உடனே தோன்றியது..!!

பட்டென படுக்கையில் இருந்து எழுந்தாள்.. டேபிளில் இருந்த சிபியின் லேப்டாப்பை கையில் எடுத்தாள்..!! மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தவள், லேப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.. அதன் பக்கவாட்டில் மெமரி சிப்பை செருகி, அதில் சேகரிக்கப்பட்டிருந்த டேட்டாவை லேப்டாப் திரையில் பார்த்தாள்..!! 'PRIVATE' என்கிற பெயருடன் ஒரே ஒரு zip file மட்டுமே அந்த மெமரி சிப்பில் இருந்தது..!! அதை திறந்து பார்க்க முயன்றபோது.. 

"Please enter the password" என்று கேட்டது.

ஆதிராவின் முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம்..!! 'என்ன பாஸ்வேர்ட் வைத்திருப்பாள்' என்று மோவாயைக் கீறி யோசித்தாள்.. 'அதுவாக இருக்கும், இதுவாக இருக்கும்' என்று அவளுக்கு தோன்றிய நான்கைந்து வார்த்தைகளை முயன்று பார்த்தாள்..!! அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.. அந்த file-ஐ திறக்க முடியவில்லை..!!

என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தாள்.. அப்புறம் யோசனை எதுவும் தோன்றாமல் போகவே, சலிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்தாள்..!! அந்த மெமரி சிப்பை மட்டும்.. டேபிள் ட்ராவில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..!!

அத்தியாயம் 10

கோயிலின் வாயிலில் இருந்து நீண்டிருந்த வீதியில்.. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களுமாக திரள்திரளாய் கூட்டம்.. ஆதிராவும் அந்தக் கூட்டத்துக்குள் ஒருஆளாய் நின்றிருந்தாள்.!! இரவு நேரம் அது.. குழல் விளக்குகளும் சீரியல் விளக்குகளும்தான் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருந்தன..!! திடும்திடுமென முழங்கிய மேளச்சத்தம் காதைக் கிழித்தது.. கிறுகிறுவென சுற்றிய ராட்டினங்கள் கண்ணைக் கவர்ந்தன..!! 

காவி வேஷ்டியும், காலில் சலங்கையும், கையில் பறையுமாக இருந்த சில இளைஞர்கள்.. நான்குக்கு நான்கு என்று வரிசையமைத்து கூடிக்கொண்டு.. கையிலிருந்த பறையை குச்சியால் 'டமார் டமார்' என்று ஒத்திசைவுடன் தட்டியவாறே.. காற்சலங்கைகள் 'ஜல் ஜல்' என்று ஒலியெழுப்புமாறு.. வீதியில் நளினமாக ஆடிவந்தனர்..!!

அவர்களுக்கு பின்னே.. காலையில் முயல் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றிருந்த வாலிபர்களும் சிறுவர்களும்.. இப்போது வெற்றிப் பூரிப்புடன் கம்பீரமாக நடந்துவந்தனர்..!! நடந்து வந்தவர்களின் ஒருகையில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற ஆயுதம்.. வேல்க்கம்பு, குத்தீட்டி, இரும்புக்கழி..!! அவர்களது இன்னொருபக்க தோளில் நீளமான ஒரு கொம்பு.. அந்த கொம்பில் அவர்கள் வேட்டையாடிய முயல்கள் உயிரற்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன..!!

ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. திடீரென தங்கையின் ஞாபகம் வந்தது.. தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. அருகில் தாமிரா இல்லாமல் போனதும் ஆதிராவிடம் ஒரு சிறுபதற்றம்..!! தலையை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி.. பார்வையாலேயே தாமிராவை தேடினாள்..!! சற்று தொலைவில்.. கூட்டத்தை விலக்கியவாறு சென்றுகொண்டிருந்த தாமிரா.. இப்போது ஆதிராவின் பார்வையில் பட்டாள்..!!

"தாமிராஆஆ..!!" 

[Image: krr21.jpg]

ஆதிரா இங்கிருந்து கத்தியது தாமிராவின் காதில் விழவில்லை.. மேலும் மேலும் முன்னேறி, கூட்டத்தில் இருந்து விடுபட்டாள்..!! ஏதோ ஒரு வசியத்துக்கு கட்டுப்பட்டவள் மாதிரி.. எந்திரம் போல கோயிலின் பின்புற இருட்டுக்குள் நடந்தாள்..!! இப்போது ஆதிரா அவளுடைய இடத்திலிருந்து கிளம்பினாள்.. நெருக்கியடித்து நின்ற கூட்டத்துக்குள் முண்டியடித்து, தங்கை சென்ற திசையிலேயே நகர்ந்தாள்..!! 'ஊஊஊஊஊ' என்று பெண்கள் குழவையிடும் சப்தம் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க.. ஆதிரா கஷ்டப்பட்டு கும்பலை விலக்கி வெளியே வந்தாள்..!! 
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
"தாமிராஆஆ..!!" 

என்று கத்திக்கொண்டே தங்கை சென்ற பக்கமாக நடந்தாள்..!! கோயிலின் பின்பக்க பிரதேசம் இருண்டு போயிருந்தது.. நிலவின் மசமசப்பான வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம்.. கருப்பு பிம்பங்களாகவே காட்சியளித்தன..!! ஆதிரா இருட்டுக்குள் தடுமாற்றமாய் நடந்தவாறே.. தங்கையை பெயர்சொல்லி அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடினாள்..!! 

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

தாமிரா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை.. அதற்குள் மாயமாக மறைந்து போயிருந்தாள்..!! தங்கையை காணாத ஆதிராவுக்கு நெஞ்சு பதறியது.. அவசரம் தொற்றிக்கொண்டவளாய் அங்குமிங்கும் ஓடினாள்.. மரங்களுக்கு இடையில் புகுந்து பதைபதைப்புடன் தங்கையை தேடினாள்..!!

சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு.. ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த தாமிரா பார்வையில் தென்பட்டாள்.. கருப்புஉடை அணிந்திருந்த அவளது முகம் மட்டும் அப்படியே வெளிறிப் போயிருந்தது..!! தங்கையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில்..

"தாமிராஆஆ..!!"

என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஆதிரா அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ ஒருவித திகைப்புடன் சிலைபோல் உறைந்திருந்தாள்.. அவளுடைய கண்கள் பயத்தில் அகலமாய் விரிந்திருந்தன..!!

"அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்.

தாமிராவை நோக்கி ஓடிய ஆதிரா இப்போது அப்படியே பட்டென நின்றாள்.. அவளுடைய முகத்தில் கொப்பளித்த மகிழ்ச்சி சுத்தமாக வடிந்து போய்.. குப்பென ஒரு திகில் சாயத்தை அப்பிக்கொண்டது..!! ஆதிராவின் திகிலுக்கு காரணம்.. மரத்துக்கு பின்புறம் இருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்.. தாமிராவின் முதுகுப்பக்கம் தோன்றி அவளுக்கு மிகநெருக்கமாக நின்றிருந்தது..!! 

"அக்காஆஆ..!!" 

தாமிரா தொடர்ந்து பரிதாபமாக அழைத்துக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவோ அந்த உருவத்தைக் கண்ட மிரட்சியில் இருந்தாள்.. ஒருகையை உயர்த்தி, விரல்களை விரித்து அசைத்தவாறே, அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! அந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரியவில்லை.. ஆதிரா மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த உருவத்தின் முகத்தை காண எத்தனித்தாள்.. இமைகளை கசக்கி கசக்கி விழித்து விழித்து பார்த்தாள்.. பிரயோஜனம் இல்லை.. முகமெல்லாம் கரியப்பிக்கொண்ட மாதிரி மசமசப்பாக காட்சியளித்ததே ஒழிய, தெளிவு பிறக்கவில்லை..!! 

அவஸ்தையுடன் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்த ஆதிரா.. படக்கென பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்..!! அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.. அவளுடைய மார்புகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறி இறங்கின.. தஸ்புஸ்சென்று மூச்சிரைத்தது..!! ஒருகணம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. படுக்கையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..!! அப்புறம்.. எல்லாமே கனவு என்று உணர்ந்ததும்தான் அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..!! 

பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. சிபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனுடைய ஒருகை இவளுடைய இடுப்பில் தவழ்ந்திருந்தது..!! தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தாள்.. நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது..!! தொண்டை வறண்டுபோனது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. தாகமெடுத்தது..!! தனது இடுப்பை வளைத்திருந்த சிபியின் கரத்தை மெல்ல விலக்கினாள்.. மெத்தையில் இருந்து இறங்கினாள்..!! நடந்து சென்று டேபிள் மீதிருந்த ஜாடியை எடுக்க.. அதன் எடை குறைவாக இருந்தது.. அதனுள் தண்ணீர் இல்லை என்பது அந்த ஜாடியை எடுத்ததுமே அவளுக்கு புரிந்து போனது..!!

"ப்ச்..!!" என்று சலிப்பை வெளிப்படுத்தினாள்.

கதவு திறந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.. மாடிப்படி இறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!! எதற்காக இப்படி ஒரு கனவு என்று யோசித்தவாறே நடந்தாள்.. சிங்கமலையில் வனக்கொடி சொன்னது, திரவியம் திருவிழா பற்றி குறிப்பிட்டது, அப்புறம் அந்த முயல்.. எல்லாமுமாக சேர்ந்துதான் இப்படி ஒரு கனவு உருவாகி இருக்கவேண்டும் என்று தோன்றியது..!! கிச்சனுக்குள் நுழைந்த தாமிரா.. ஒரு சொம்பு நிறைய நீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டாள்.. தாகம் தீர்ந்து தொண்டையின் வறட்சி நின்றது..!!

கிச்சன் விளைக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தபோதுதான்..

"தட்.. தட்.. தட்.. தட்..!!!"

என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அந்த சப்தத்தை கவனித்தாள்.. எங்கிருந்து சப்தம் வருகிறதென திரும்பி பார்த்தாள்..!!

"தட்.. தட்.. தட்.. தட்..!!!"

வெளியில் வீசிய காற்றின் வேகத்தில்.. ஜன்னல் கதவுதான் அந்த மாதிரி அடித்துக் கொண்டு கிடந்தது.. அதனுடன் வெண்ணிற ஜன்னல் திரைச்சீலை வேறு உயரே எழும்பி பறந்து கொண்டிருந்தது.. 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்று காற்றின் சீற்றமான சப்தம்..!! ஒருகணம் யோசித்த ஆதிரா.. பிறகு அந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! ஜன்னல் கதவைப்பற்றி, மூடுவதற்காக நகர்த்தியபோதுதான்.. தூரத்தில் அந்தக்காட்சி எதேச்சையாக அவளுடைய பார்வையில் விழுந்தது..!!
Like Reply
"அ..அங்க.. அந்த பாறைலதான் அத்தான் குறிஞ்சி உக்காந்திருந்தா.. நா..நான் பார்த்தேன்..!!"

"அங்க யாரும் இல்லடா..!! நீயா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டன்னு நெனைக்கிறேன்..!!"

"ஐயோ.. இல்லத்தான்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்..!!"

"ப்ச்.. பாருடா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!"

"பார்த்தேன் அத்தான்.. செவப்பு அங்கி போத்திருந்தா.. பாறைல உக்காந்திருந்தா.. சுத்தி ஒரே புகையா இருந்துச்சு..!!"

"ஆதிரா ப்ளீஸ்..!!" சிபி எரிச்சலடைவதை உணராமல்,

"நாய் நரி காக்கா கரடின்னு என்னன்னவோ மிருகம்லாம் சுத்தி உக்காந்திட்டு இருந்துச்சு.. அவ பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு..!! எனக்கு ஒருநிமிஷம் அபப்டியே ஹார்ட்டே நின்னு.." ஆதிரா தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்க,

"ப்ளீஸ் ஆதிரா.. ஸ்டாப் இட்.. ப்ளீஸ்..!!!!" அவன் பொறுமையிழந்து கத்தினான்.

ஆதிரா இப்போது பட்டென்று அமைதியானாள்.. கணவனின் முகத்தையே பரிதாபமாக ஏறிட்டாள்.. அவனும் இவளுடைய முகத்தையே கவலையும், தவிப்புமாய் பார்த்தான்..!! அப்புறம் ஆதிராவின் கூந்தலை இதமாக கோதிவிட்டவாறே.. குரலில் சற்று கடுமையை குறைத்துக் கொண்டு சொன்னான்..!!

"இதுதான்.. இதுக்குத்தான் இங்க வரவேணாம்னு நான் சொன்னேன்.. கேட்டியா நீ..?? அடம்புடிச்சு கூட்டிட்டு வந்த.. இப்பப்பாரு..!! தேவையா இதெல்லாம்..??"

"........................"

"பேசாம காலைலயே மைசூர் கெளம்பிடலாம்..!!"

சிபி அந்தமாதிரி சொன்னதும் ஆதிராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அகழியில் ஐந்தாறு நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற அவளது ஆசைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றொரு பயம் பிறந்தது..!! ஓரிரு நாட்களாக நடந்த சம்பவங்கள் அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.. அந்த குழப்பத்திற்கு விடை தெரிந்துகொள்கிற ஆர்வம் அவளுடைய மனதைப்போட்டு அரித்துக் கொண்டிருந்தது..!! இந்த நிலையில் அகழியில் இருந்து கிளம்ப அவளுக்கு விருப்பமில்லை.. கணவனை சமாளிப்பதுதான் சரியான வழி என்று தோன்றியது..!!

"ச..சரித்தான்.. விடுங்க.. நான்தான் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டேனா இருக்கும்..!! இதை இத்தோட விட்றலாம்..!!" என்று சமாதானமாக சொன்னாள். 

"எப்படி விடுறது..?? நடுராத்திரில எந்திரிச்சு 'ஆ'ன்னு கத்துற.. குறிஞ்சியை பார்த்தேன்னு ஹிஸ்டீரியா பேஷன்ட் மாதிரி பொலம்புற..!! எப்படி ஈஸியா விடமுடியும்..??"

"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..!! கெட்டகனவு வந்து முழிப்பு வந்துடுச்சு அத்தான்.. அதோட தண்ணி குடிக்கலாம்னு கீழ வந்தேன்.. ஜன்னல் கதவை மூடலாம்னு இங்க வந்தேன்.. ஏதோ கன்ஃப்யூஷன்ல நானா எதையோ கற்பனை பண்ணிக்கிட்டேன்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. விடுங்க..!!"

ஆதிரா அவ்வாறு அமர்த்தலாக சொல்லவும்.. சிபி அவளையே இமைகொட்டாமல் பார்த்தான்..!! இப்போது அவனுடைய இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை அரும்பியது.. குனிந்து மனைவியின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்..!! அவளுடைய கன்னத்தை இதமாக வருடியவாறே..

"நீ எதுக்குடா கீழ தனியா வந்த.. என்னை எழுப்பிருக்கலாம்ல..??" என்று கனிவாக கேட்டான்.

"நல்லா தூங்கிட்டு இருந்திங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சேன்..!!"

"ம்ம்.. இனிமே இப்படிலாம் பண்ணாத.. புரியுதா..??"

"ச..சரித்தான்..!!"

"உனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் ஆதிரா.. இந்த மாதிரி அட்வென்சர்லாம் உனக்கு வேண்டாம்.. ஹாஹா.. ஓகேவா..??" சிபி அந்தமாதிரி கேலிச்சிரிப்புடன் சொல்ல,

"ஹாஹா.. சரி..!!" ஆதிராவும் இயல்புக்கு திரும்பி புன்னகைத்தாள்.

"பெட்க்கு போலாமா..??"

"ம்ம்..!!"

"வா.. நானே உன்னை தூக்கிட்டு போறேன்..!!"

"ஐயோ.. வேணாம்த்தான்..!!"

ஆதிரா பதறிக்கொண்டிருக்கும்போதே சிபி அவளை அலாக்காக கைகளில் அள்ளிக்கொண்டான்..!! அவள் நாணத்துடன் சிணுங்க, அவன் குறும்புடன் சிரித்தவாறே.. குழந்தையைப்போல அவளை தூக்கிக்கொண்டு படியேறினான்..!!

அதே நேரம்.. பாறையில் அமர்ந்திருந்த அந்த உருவம் இப்போது படக்கென ஜன்னலுக்கருகே தோன்றியது.. கண்ணாடி ஜன்னலில் கைகளை விரித்து வைத்தவாறு கருப்பு பிம்பமாக காட்சியளித்தது.. படிக்கட்டில் செல்கிற ஆதிராவையும், சிபியையுமே உர்ரென்று முறைத்து பார்த்தது..!! வினோதமான ஒரு சப்தம் அந்த உருவத்திடம் இருந்து வெளிப்பட்டது..!!

"க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்..!!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
அத்தியாயம் 11

அகழியில் காவல் நிலையம் கிடையாது.. களமேழி காவல் சரகத்தின் கீழ்தான் அகழி கிராமம் வரும்.. அங்குதான் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது..!! களமேழி சற்றே பெரிய ஊர்.. தாலுகா ஆபீஸ், தாசில்தார் ஆபீஸெல்லாம் அங்குதான்.. கலைக்கல்லூரி கூட ஒன்று உண்டு.. அகழியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது..!! 

காலையிலேயே களமேழி காவல் நிலையத்துக்கு கால் செய்து.. இன்ஸ்பெக்டரின் இருப்பு நிலவரத்தை அறிந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! காலை உணவு அருந்தியபிறகு கணவனுடன் காரில் கிளம்பினாள்..!! மலைப்பாதையில் 15 கி.மீ கடந்து களமேழி வந்து சேர ஒருமணி நேரம் ஆகிப்போனது..!! ஒரு சிறிய குன்றின்மேல்.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து.. ஓட்டுக்கூரையும், சிவப்புப்பூச்சுமாக.. பனிசூழ காட்சியளித்தது களமேழி காவல் நிலையம்..!! காவல் நிலையத்துக்கு வெளியிலேயே காரை பார்க் செய்துவிட்டு.. கணவனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்..!!

"நாங்க அகழில இருந்து வர்றோம்.. இன்ஸ்பெக்டரை பாக்கணும்..!! கா..காலைல கால் பண்ணிருந்தோம்..!!"

"ஓ.. நீங்கதானா அது..?? இப்போ வந்துடுவாரு.. வெயிட் பண்ணுங்க..!!"

கான்ஸ்டபிள் சொன்னதும்.. ஓரமாக கிடந்த மரபெஞ்சில் ஆதிராவும் சிபியும் அமர்ந்துகொண்டார்கள்.. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கட்டிடத்தின் உட்புறத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்..!! ஸ்வெட்டரும் மங்கி குல்லாவும் அணிந்திருந்த கான்ஸ்டபிள்கள் மந்தமாகவே இயங்கிக் கொண்டிருந்தனர்.. அலுவல் எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை.. அரட்டைதான் பிரதானமாக இருந்தது..!!

அவர்கள் சென்றதிலிருந்து அரைமணி நேரம் கழித்துதான் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருப்பார்.. முன்புற தலையில் நிறைய முடிகளை இழந்திருந்தார்..!! முகத்தில் ஒரு இறுக்கம்.. கண்களில் ஒரு கூர்மை..!! அவர் உள்ளே நுழைந்ததும் ஸ்டேஷன் அப்படியே அமைதியாகிப் போனது.. கான்ஸ்டபிள்கள் அவரிடம் தயங்கி தயங்கித்தான் பேசினர்.. மிகவும் கடுமையானவர் என்று அதிலேயே புரிந்தது..!!

வந்ததும் கான்ஸ்டபிள்களுக்கு ஏதேதோ உத்தரவுகள் பிறப்பித்தார்..!! இவர்கள் வந்திருப்பதை கான்ஸ்டபிள் ஒருவர் நினைவுபடுத்தியதும்.. ஒருமுறை திரும்பி இந்தப்பக்கம் பார்த்தார்..!! மேலும் சிறிது நேரம் கழித்துத்தான் இவர்களை தனது அறைக்கு அழைத்தார்.. 'என்ன விஷயம்?' என்று பொதுவாக விசாரித்தார்.. இவர்களும் வந்த விஷயத்தை சொன்னதும், ஒருசில வினாடிகள் அமைதியாகிப் போனார்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன்.. ஏளனமான குரலில் ஆரம்பித்தார்..!!

"அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..?? காத்து அடிச்சா குறிஞ்சி.. கதவு அசைஞ்சா குறிஞ்சி.. மரத்தை பாத்தா குறிஞ்சி.. மலையை கண்டா குறிஞ்சி..!! எப்பத்தான் எல்லாம் திருந்த போறாய்ங்க..??"

"............................." ஆதிராவும் சிபியும் அமைதியாகவே இருந்தனர்.

[Image: krr20.jpg]

"எவளாவது எவன்கூடயாவது ஓடிப்போயிருப்பா.. இவய்ங்க குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிட்டு திரிவாய்ங்க..!! கடன் தொல்லை தாங்காம எவனாவது ஊரைவுட்டு போயிருப்பான்.. மகனும் மருமகளும் சேந்து வயசானவரை அடிச்சு தொரத்திருப்பாய்ங்க.. பரிச்சைல பெயிலாயிட்டு ஒரு சின்னப்பய மெட்ராஸ்க்கு ரயில் ஏறிருப்பான்..!! இவய்ங்கட்ட போய் கேளுங்க.. எல்லாத்துக்கும் குறிஞ்சி குறிஞ்சிம்பாய்ங்க..!! உங்க ஊர்க்காரய்ங்கள நெனச்சாலே எரிச்சலா இருக்குயா..!!"

"அ..அப்போ.. குறிஞ்சின்னு ஒரு விஷயமே இல்லைன்றீங்களா..??" தயக்கமாகத்தான் கேட்டாள் ஆதிரா.

"சத்தியமா இல்லை.. இந்த ஆவி, பேய், பிசாசுலலாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை கெடையாது..!! சாதாரணமா நடக்குறதுக்கெல்லாம் இவய்ங்க பேய்ச்சாயம் பூசுறாய்ங்க..!!"

"ம்ம்.. அப்படியே வச்சுக்கிட்டாலும்.. இத்தனை பேர் காணாம போயிருக்காங்களே.. அதுக்கெல்லாம்.."

"இத்தனை பேர் காணாம போயிருக்காங்க, அத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு நீங்கதான் சொல்லிட்டு திரியிரிங்க.. எங்களுக்கு என்ன தெரியும்..?? இதுவரை எங்களுக்கு வந்திருக்குற கம்ப்ளயின்ட் எத்தனை தெரியுமா.. நாலே நாலு.. அதுல உங்க தங்கச்சி கேஸ் ஒன்னு..!!"

"சரி.. நாலு பேராவது கம்ப்ளயின்ட் குடுத்திருக்காங்களே.. அதுல.." 

"ஒருத்தரக்கூட இன்னும் கண்டுபிடிக்க உங்களுக்கு துப்பு இல்லையேன்றீங்களா..??"

"ஐயோ.. அப்படி சொல்லல ஸார்..!!"

"பரவால.. சொல்லிக்கங்க..!! நீங்க என்னவேணா சொல்லிக்கங்க.. என்னவேணா நெனைச்சுக்கங்க..!! எனக்கும் கவலை இல்ல.. எங்க டிப்பார்ட்மன்ட்டுக்கும் கவலை இல்ல..!! நான் சொல்லிக்கிறதுலாம் ஒண்ணுதான்..!!"
Like Reply
"எ..என்ன..??"

"உங்க ஊர்க்காரய்ங்க ஒத்துழைப்பு இல்லாம.. எங்களால ஒன்னும் செய்ய முடியாது..!! காணாமப்போனா கம்ப்ளயின்ட் குடுக்கக்கூட வர மாட்டேன்றாய்ங்க.. அப்படியே கம்ப்ளயின்ட் வந்து விசாரிக்கப்போனா, ஒருத்தனும் வாயை தெறக்க மாட்டேன்றாய்ங்க..!! ஏதாவது சொல்லிட்டா எங்க அடுத்து குறிஞ்சி நம்மள தூக்கிட்டு போயிருவாளோன்னு எல்லாப்பயலுக்கும் பயம்..!! இவய்ங்கள வச்சுக்குட்டு என்னத்த பண்ணச் சொல்றிங்க..??"

"............................."

"குறிஞ்சின்ற பயத்தை விட்டு அவய்ங்க என்னைக்கு வெளில வர்றாய்ங்களோ.. அன்னைக்குத்தான் எங்களாலயும் எதாவது செய்ய முடியும்..!! அதுவரைக்கும் நீங்க என்னவேணா நெனைச்சுக்கங்க.. என்னவேணா பண்ணிக்கங்க..!!" 

"உ..உங்க கோவம் புரியுது ஸார்..!! பட்.. தாமிரா கேஸ்ல நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையே.. கண்ணால பாத்த சாட்சி வனக்கொடி.. அவங்க உங்க விசாரணைக்குலாம் ஒழுங்காத்தான கோவாப்ரெட் பண்ணுனாங்க..??" ஆதிரா கேட்க, அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார் வில்லாளன்.

"யாரு.. அந்த.. கோழிய திருட்ன மாதிரியே முழிக்குமே அந்த பொம்பளையா..??"

"ஆ..ஆமாம்..!!"

"அந்த பொம்பளையை பத்தி மட்டும் பேசாதிங்க.. கடுப்பா இருக்கு எனக்கு..!!"

"ஏன் ஸார்..??"

"பின்ன என்ன.. சும்மா கிளிப்புள்ள மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்துச்சு.. அப்டியே செவுள்ல நாலு அப்பு அப்பலாமான்னு இருந்துச்சு எனக்கு..!!"

"எ..என்ன ஸார் சொல்றீங்க..??"

"அந்த பொம்பளை சரியில்லைங்க.. எதையோ மறைக்குது.. பொய் சொல்லுது.. எனக்கு நல்லாத்தெரியும்..!!"

"ஐயோ.. அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல ஸார்..!!"

"ஹ்ஹ்ஹ்ம்ம்..!! இதுக்குமேல நான் என்னத்த சொல்றது..?? அந்த பொம்பளைட்ட ஏதோ தப்பு இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது.. ஆனா என்னன்னுதான் ஒன்னும் புரியல..!! நானும் என்னால முடிஞ்சளவுக்கு துருவித்துருவி விசாரிச்சுப் பாத்தேன்.. ம்ம்ம்.. புண்ணியமே இல்ல..!! நீங்க என்னடான்னா அந்த பொம்பளைக்கு சர்டிபிகேட் குடுக்குறிங்க..!!"

"ச..சரி ஸார்.. அதெல்லாம் விடுங்க.. அவங்க பொய் சொல்றாங்கன்னே வச்சுப்போம்..!! என் தங்கச்சியை கண்டுபிடிக்க நீங்க வேறென்ன ஸ்டெப்ஸ்லாம் எடுத்திங்க.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!"

ஒருவழியாக முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் ஆதிரா..!! அதுவரை எகத்தாளமாக பேசிக்கொண்டிருந்த வில்லாளன்.. அதன்பிறகு சற்று அடக்கியே வாசித்தார்.. வீராப்பாக பேசுமளவிற்கு விஷயம் எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான் காரணம்..!! தாமிராவின் புகைப்படத்தை மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்தது.. அவளுடைய கல்லூரியிலும், தோழிகளிடமும் விசாரித்தது.. அகழி காட்டுக்குள் ஒருவாரம் தேடுதல் வேட்டை நடத்தியது.. இதைத்தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி எந்த உருப்படியான தகவலும் அவர் தரவில்லை..!!

"பேயை நம்புறதுக்கு போலீஸை நம்ப சொல்லுங்க உங்க ஊர்க்காரய்ங்கள.. அப்பத்தான் உங்க ஊருக்கும் ஒரு விடிவுகாலம் பொறக்கும்..!!"

அட்லாஸ்டாக ஒரு அட்வைஸை அள்ளிப்போட்டு.. ஆதிராவையும் சிபியையும் அனுப்பி வைத்தார் வில்லாளன்..!! ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த இருவரும்.. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்..!! காரில் ஏறி அமர்ந்ததும்.. ஆதிரா சற்றே எரிச்சலாக சொன்னாள்..!!

"பேச்சுத்தான் பெருசா இருக்கு.. ஆக்க்ஷன் ஒன்னத்தையும் காணோம்..!!"

"ம்ம்.. ஆமாம் ஆதிரா.. ரொம்ப அசால்ட்டாத்தான் பேசுறாரு..!! அதில்லாம.. இதுல இன்னொரு மேட்டரும் இருக்கு..!!"

"என்ன..??"

"டெட்பாடி கெடைச்சாத்தான் மர்டர் கேஸ்.. அதுவரை எல்லாமே மிஸ்ஸிங் கேஸ்தான்..!! போலீஸ் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருக்கும்..!!"

"ம்ம்.. புரியுதுத்தான்..!!"

அடுத்த அரைமணி நேரத்துக்கெல்லாம்.. அவர்களுடைய கார் அகழியை நெருங்கியிருந்தது..!! அகழிக்கு செல்கிற சாலை.. களமேழிக்கு பிரிகிற சாலை.. ஊட்டியை சேர்கிற சாலை என.. மூன்று சாலைகளும் சந்தித்துக்கொள்கிற இடத்தை அடைந்திருந்தது..!! முச்சாலை சந்திப்பின் ஒருபக்கம் குழலாறு ஓடிக்கொண்டிருந்தது.. ஆற்றின் அடுத்த கரையில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தது சிங்கமலை..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
"காரை ஸ்டாப் பண்ணுங்கத்தான்.. எதாவது சாப்பிட்டு போகலாம்.. பசிக்குது..!!" என்றாள் ஆதிரா.

மனைவி சொன்னதும் காரின் வேகத்தை குறைத்து.. சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான் சிபி..!! இருவரும் காரை விட்டு வெளியே இறங்கினார்கள்..!! இரண்டே இரண்டு சாலையோர கடைகள்தான் இருந்தன அந்த இடத்தில்.. ஒன்று தேநீர்க்கடை.. இன்னொன்று பழக்கடை..!! ஆதிராவும் சிபியும் பழக்கடையை அணுகினார்கள்..!! பீச், ப்ளம்ஸ், மங்குஸ்தான், அண்ணாச்சி, பப்பாளி, திராட்சை என.. பலவகையான பழங்களை சிறுசிறு துண்டங்களாக்கி.. அதை ஒரு பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் நிரப்பி விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்..!! அதை முழுவதும் சாப்பிட்டால் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு பசியெடுக்காது..!!

"நான் ஒரு பவ்ல் சாப்பிடுறேன்.. உங்களுக்கு..??" ஆதிரா கேட்க, 

"எனக்கு வேணாம் ஆதிரா.. நீ மட்டும் சாப்பிடு..!!" பதில் சொன்ன சிபி கடைக்காரனிடம் திரும்பி,

"எவ்வளவுப்பா..??" என்று கேட்டான்.

"நாப்பது ரூவா ஸார்..!!"

சிபி கடைக்காரனுக்கு பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அவன் பழங்கள் நிரம்பிய கிண்ணத்தை ஆதிராவிடம் நீட்டினான்..!! நிஜமாகவே ஆதிராவுக்கு நிறைய பசியெடுத்திருக்க வேண்டும்.. அவசர அவசரமாக அந்த பழங்களை விழுங்கி காலி செய்துகொண்டிருந்தாள்..!! சிபியோ கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. சிறுபிள்ளைபோல மனைவி சாப்பிடுகிற அழகையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..!!

"வாவ்...!!!" என்றான் திடீரென.

"என்னத்தான்..??" வாயில் போட்ட பழத்துடன் கேட்டாள் ஆதிரா.

"அ..அங்க பாரேன்..!!"

"என்ன..??"

"பட்டர்ஃப்ளை ஆதிரா..!!"

அவன் கைநீட்டிய திசையில் அந்த பட்டாம்பூச்சி காட்சியளித்தது.. அதன் சிறகில் அப்படியொரு அழகுக்கலவையான பலவண்ண பூச்சுக்கள்.. இப்போது ஒரு செடியில் சென்றமர்ந்து மெலிதாக சிறகசைத்துக் கொண்டிருந்தது..!!

"எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!" சொல்லும்போதே சிபியிடம் அப்படி ஒரு உற்சாகம்.

"ம்ம்.. ஆமாத்தான்..!!" கணவனின் உற்சாகம் ஆதிராவையும் தொற்றிக் கொண்டது.

"ச்ச.. அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!"

"ம்ம்.. நல்ல ஆசைதான்.. ஹாஹா..!!"

"ஹேய்.. இரேன்.. நான் போய் கேமரா எடுத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு இதை ஃபோட்டோ எடுத்தே ஆகணும்..!!"

ஆதிராவின் பதிலை எதிர்பாராமலே காரை நோக்கி ஓடினான் சிபி.. உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! 'அப்படி என்னதான் இருக்கிறது இந்த பட்டாம்பூச்சியிடம்.. எப்போது எங்கே பார்த்தாலும் இப்படி குழந்தையாகி விடுகிறானே..?' என்று நினைத்துக் கொண்டாள்..!! அதேநேரம்.. கணவனுடைய மென்மையான ரசனையும், மிருதுவான இயல்பும்.. அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது..!!

"ச்சத்த்..!!"

திடீரென அருகே அந்த சப்தம் கேட்க.. ஆதிரா சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினாள்..!! அப்புறம் தனது புடவைத் தலைப்பை பார்த்ததும்தான் விஷயம் புரிந்தது அவளுக்கு.. ஏதோ ஒரு பறவையின் எச்சம்..!!

"ஐயே..!!" 

என்று முகத்தை சுளித்தாள்..!! தலையை அண்ணாந்து பார்த்தாள்.. மேலே இரண்டு செங்கால் நாரைகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன..!! ஓரிரு வினாடிகள் அவஸ்தையாக நெளிந்தாள்..!! கணவனைப் பார்த்தாள்.. அவன் காருக்குள் புகுந்திருந்தான்.. கையை பார்த்தாள்.. கிண்ணம் காலியாகிற நிலையில் இருந்தது..!! நடந்து சென்று அந்த கிண்ணத்தை குப்பைக்கூடையில் எறிந்தாள்.. புடவைத்தலைப்பை தனித்துப் பிடித்தவாறே ஆற்றுப்பக்கமாக நகர்ந்தாள்..!!

"ஹேய்.. என்னாச்சு..??" எதிரே வந்த சிபி ஆதிராவை கேட்டான்.

"நாரை பொடவைல எச்சம் போட்ருச்சு அத்தான்..!!"

"ஹாஹா.. ஓகே ஓகே.. போய் வாஷ் பண்ணு போ..!!"

சிரிப்புடன் சொல்லிவிட்டு.. பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுக்க விரைந்தான் சிபி..!! ஆதிரா ஆற்றை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.. நடக்கும்போதே தலையை நிமிர்த்தி சிங்கமலையை ஒருமுறை பார்த்தாள்..!! மலையுச்சியில் பற்கள் தெரிய கர்ஜித்தவாறு சீற்றமான சிங்கமுக சிலை.. அதைச்சுற்றி வளர்ந்திருக்கிற அடர்த்தியான பச்சை மரங்கள்.. சரேலென செங்குத்தாக ஆற்றை நோக்கி இறங்கும் மலைச்சரிவு..!! ஊருக்கு தீங்கு செய்த குறிஞ்சியை ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியபோது.. அவள் அந்த மலையுச்சியில் இருந்துதான் இந்த குழலாற்றில் குதித்தாள் என்று அகழியில் கதை சொல்வார்கள்.. அது இப்போது ஆதிராவுக்கு ஞாபகம் வந்தது..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
ஆற்றை அணுக மரத்தாலான மேடை போடப்பட்டிருந்தது அந்த இடத்தில்.. ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருக்க, மேடைக்கு அருகாகவே நீர் பாய்ந்து கொண்டிருந்தது..!! ஆதிரா அந்த மேடையில் நடந்து சென்றாள்.. அதன் அடுத்த முனையை அடைந்ததும் அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள்..!! குழலாறு சலனமில்லாமல் குழைவாக ஓடிக்கொண்டிருந்தது.. சூரியக்கதிர்கள் ஆற்றுநீரில் மோத, நீர்ப்பரப்பெங்கும் பாதரசக்கீற்றுக்கள்..!!

ஆதிரா புடவைத்தலைப்பை நீரில் நனைத்து சுத்தம் செய்தாள்.. அப்படியும் இப்படியுமாய் அதைப்போட்டு கசக்கினாள்.. சிறிது நேரத்துக்குப் பின் திருப்தி வந்ததுமே கசக்குவதை நிறுத்தினாள்.. புடவையை சரி செய்துகொண்டாள்.. இடுப்பு மடிப்பை இறுக்கிக்கொண்டாள்..!! ஆற்றின் நீரோட்டம் தெளிவாக இருந்தது.. அடியில் நீந்துகிற மீன்கள் எல்லாம் மேலே தெரிந்தன..!! ஆதிரா அந்த மீன்களின் அழகை சிலவினாடிகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! 

பிறகு.. கைகளை ஒருமுறை கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்து.. இரண்டு கைகளையும் ஆற்றுநீருக்குள் நுழைத்தாள்..!! உள்ளங்கைகளை ஒன்றோடொன்று வைத்து அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது..!!

ஆற்றுக்குள் இருந்து படக்கென ஒரு கை நீண்டு வந்து ஆதிராவின் கைகளை அழுத்தமாக பற்றியது.. இரும்புப்பிடியென இறுகப் பிடித்து.. சரக்கென அவளை ஆற்றுக்குள் இழுத்தது..!! அதை சற்றும் எதிர்பாராத ஆதிரா, கத்துவதற்கு கூட அவகாசம் இல்லாமல், ஆற்றுக்குள் படார் என்று தலைகுப்புற விழுந்தாள்..!! விழுந்த வேகத்தில்.. கீழே கீழே கீழே என.. ஆற்றின் ஆழத்தை நோக்கி சென்றாள்..!! இதயம் தறிகெட்டு துடிக்க, கைகளையும் கால்களையும் வெடுக் வெடுக்கென வெட்டினாள்.. நீரின் மேற்பரப்புக்கு வர முயன்றாள்.. ஆனால் அவளுடைய உடலை யாரோ அமுக்குவது போல தோன்றியது.. பாரமாக இருந்தது..!!

"விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்..!!" என்று ஏதோ ஒரு சப்தம்.

நீருக்குள் அவள் அப்படியே சுழல.. அவளுடன் சேர்ந்து அவளை கட்டிக்கொண்டு இன்னொரு உருவமும் சுழன்றது..!! ஆதிராவின் கண்களுக்கு அந்த உருவம்.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது..!! சிவப்பு நிற அங்கி அவளுடைய முகத்தை.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது..!! 

ஆதிரா விழிகளை விரித்து அந்த உருவத்தை அடையாளம் காண முயன்றாள்.. முடியவில்லை.. தெளிவில்லாமல் காட்சியளித்தது..!! வாயையும் மூக்கு துவாரங்களையும் இறுக மூடி வைத்திருந்தாள்.. அதையும் மீறி அவளுடைய நாசியை தாக்கியது அந்த வாசனை.. மகிழம்பூ வாசனை..!!

ஆதிரா அவ்வாறு அந்த உருவத்திடம் இருந்து மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போதே.. நீர்ப்பரப்பை கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது இன்னொரு உருவம்.. ஆற்றின் ஆழத்துக்கு இறங்கி ஆதிராவை அணைத்துக் கொள்ள முயன்றது..!! ஆதிரா பிடிகொடுக்காமல் உடலை முறுக்கினாள்.. கைகால்களை படக் படக்கென உதறினாள்.. விழுக்கென்று நழுவ முயன்றாள்..!! பிறகு அந்த உருவத்தை அடையாளம் கண்டுகொண்டதும்தான் மெல்ல மெல்ல அடங்கினாள்.. இரண்டாவது உருவம் அவளுடைய கணவன் சிபிதான்..!!

மனைவியை கையில் அள்ளிக்கொண்டு நீர்ப்பரப்புக்கு வந்தான் சிபி.. பழக்கடைக்காரன் உதவியுடன் இருவரும் மரமேடைக்கு வந்தனர்..!! புஸ்புஸ்சென்று மூச்சிரைத்தனர் இருவரும்.. சர்சர்ரென அவர்களது மார்பு காற்றுக்காக அடித்துக்கொண்டது.. சலசலவென நீர் சொட்டியது இருவருடைய உடலில் இருந்தும்..!!

"எ..என்னாச்சு ஆதிரா..??" 

சிபி சுவாசத்திணறலுடன் கேட்டான்..!! ஆதிராவோ சில வினாடிகள் எதுவும் பதில் சொல்லவில்லை.. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது ஒருபுறம் இருக்க.. அவளுடய மூளையும் இன்னொருபுறம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..!! நேற்று இரவு சிபி அவளிடம் கடிந்துகொண்டது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. சிறிதுநேர அவசர யோசனைக்குப் பிறகு..

"ஒ..ஒன்னுல்லத்தான்.. கால் ஸ்லிப் ஆகி உள்ள விழுந்துட்டேன்..!! வே..வேற ஒன்னுல்ல..!!" என்று பொய் சொன்னாள். 

சிபி சில வினாடிகள் மனைவியையே தவிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! ஐந்தாறுபேர் சுற்றிநின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!! மேடையில் இருந்து எழுந்த ஆதிராவும், சிபியும்.. பழக்கடைக்காரனுக்கு மட்டும் ஒரு நன்றி சொல்லிவிட்டு.. மற்றவர்களிடம் இருந்து விலகி தனியே நடந்தனர்..!! கீழே விசிறியடித்திருந்த கேமராவை சிபி கையில் எடுத்துக்கொள்ள.. இருவரும் காரை நோக்கி சென்றனர்..!!

"கொஞ்சநேரம் பயந்தே போயிட்டேன் ஆதிரா..!!"

"ம்ம்.. ஸாரித்தான்.. நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..!!"

"பரவால.. விடு..!!"

அமர்த்தலாக சொல்லிவிட்டு சிபி முன்னால் நடக்க.. ஆதிரா மட்டும் பின்னால் திரும்பி, குழலாற்றை ஒருமுறை மிரட்சி அப்பிய விழிகளுடன் பார்த்தாள்..!! முன்பு அவளுடைய தங்கை தாமிரா கத்தியது.. இப்போது அவளது நினைவுக்கு வந்தது..!!

"வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
அத்தியாயம் 12

அகழி செல்லும் மலைப்பாதையில் கார் மிதமான வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.. நீர் சொட்டுகிற தலைமயிருடன் சிபி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே தெப்பலாக நனைந்த தேகத்துடன் ஆதிரா அமர்ந்திருந்தாள்..!! திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் வீசிய குளிர்காற்று ஆதிராவின் மேனியை வருட.. அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. மார்புப்பந்துகளுக்கு இடையே ஆழமாய் ஒரு இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது..!!

"விண்டோ வேணா க்ளோஸ் பண்ணிக்க ஆதிரா..!!"

எதேச்சையாக மனைவியை ஏறிட்ட சிபி கனிவுடன் சொல்ல.. ஆதிரா கார்க் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டாள்.. அந்தக் கண்ணாடியிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டாள்.. சாலைக்கு பக்கவாட்டில் சலசலப்புடன் ஓடிய குழலாற்றையே வெறித்து பார்த்தாள்..!! காருக்குள் இப்போது ஒரு கதகதப்பு பரவினாலும்.. அதையும் மீறி ஆதிராவுக்கு குளிரெடுத்தது..!! உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்து துடித்தன.. கீழ்வரிசைப் பற்கள் கிடுகிடுத்து மேல்வரிசைப் பற்களுடன் அடித்துக் கொண்டன..!! உதட்டோடும் உடலோடும் சேர்ந்து அவளது உள்ளமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது..!!

ஆதிரா மனதளவில் சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.. அவளுடைய புத்தியில் ஒரு குழப்ப விரிசல் விழுந்திருந்தது..!! தன்னைச் சுற்றி ஏதோ அசாதாரண சம்பவங்கள் நடப்பதுபோல் அவளுக்குள் ஒரு உணர்வு.. அவளது மனத் தடுமாற்றத்திற்கு அந்த உணர்வே காரணம்..!! அப்படி உணர்வதெல்லாம் உண்மைதானா அல்லது அத்தனையும் மனம் உருவாக்கிக்கொண்ட மாய பிம்பங்களா என்றொரு கேள்வியும் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது.. அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாமல்தான் அவளது புத்தியில் ஏற்பட்ட அந்த குழப்ப விரிசல்..!! தனது உணர்வையும் அறிவையும் தானே நம்பமுடியாத நிலையில்தான் ஆதிரா இருந்தாள்..!!


'ஒரு மோசமான விபத்தால் ஒருவருட நினைவுகளை தொலைத்த மூளைதானே..?? திருட்டுப்போன ஞாபகங்களை திரும்ப கொணர்வதற்கும் திராணியற்ற மூளைதானே..?? தளர்ந்து போயிருக்கிற நிலையில் தவறாக என்னை வழி நடத்துகிறதோ..?? இயல்பை துறந்துவிட்டு இல்லாததை எல்லாம் கற்பனை செய்கிறதோ..?? அருவத்திற்கு உருவம் கொடுக்கிறதோ..?? நீருக்கடியில் பார்த்த உருவம் நிஜமா போலியா..?? நள்ளிரவில் கண்ட காட்சி நனவா கற்பனையா..??'

ஆதிரா மிகவும் குழம்பித்தான் போயிருந்தாள்..!! அவளது குழப்பத்தை கணவனிடம் சொல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை.. அவளே தெளிவற்றுப் போயிருக்கையில் அவனிடம் என்னவென்று சொல்வாள்..?? அதுவுமில்லாமல்.. அப்படி சொல்வதனால் அகழியில் ஐந்தாறு நாட்கள் கழிக்கிற அவளது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அவஸ்தையான எண்ணம் வேறு ஒருபக்கம்..!! அதனால்தான்..

"என்னாச்சு ஆதிரா.. ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு வர்ற..??" என்று சிபி கேட்டபோது,

"ஒ..ஒன்னுல்லத்தான்.. இன்ஸ்பெக்டர் சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்..!!" என குழப்பத்தை புதைத்து இயல்புக்கு திரும்ப முயன்றாள்.

மேலும் சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!! காருக்குள் இருந்து ஆதிரா இறங்கிய கோலத்தை கண்டதுமே..

"என்னக்கா.. என்னாச்சு..??" என்று பதற்றமாக கேட்டாள் எதிரே வந்த தென்றல்.

"ஒ..ஒன்னுல்ல தென்றல்.. தண்ணிக்குள்ள தவறி விழுந்துட்டேன்..!!"

"அச்சச்சோ.. எப்படிக்கா..??"

"ப்ச்.. அதை விடு.. அம்மா எங்க..??"

"அம்மா எங்க வீட்ல இருக்காங்கக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க..!! அண்ணன் ஊர்லருந்து வந்திருக்கான்.. அதான்.. என்னை மொதல்ல அனுப்பி வச்சாங்க..!!"

"ஓ..!!"

"சமையல் வேலைலாம் முடிச்சுட்டேன்க்கா.. சாப்பிடுறீங்களா..??"

"இல்ல தென்றல்.. பசிக்கல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்.. அம்மா வந்துரட்டும்..!!"

"ம்ம்.. சரிக்கா..!!"

தென்றலின் பதிலைக் கூட எதிர்பாராமல் ஆதிரா வீட்டுக்குள் நுழைந்து விடுவிடுவென நடந்தாள்.. காரை நிறுத்திவிட்டு சற்று தாமதமாக வந்த சிபியும் மனைவியை பின்தொடர்ந்தான்..!!

அவர்களது அறைக்கு சென்று மாற்று உடை அள்ளிக்கொண்டாள் ஆதிரா.. திரும்ப தரைத்தளத்துக்கு வந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்..!! சுவற்றோடு பொருந்தியிருந்த குமிழைப் பற்றி திருக.. மேலிருந்து ஜிவ்வென நீர்த்திவலைகள் கொட்டின..!! சரி செய்யப்பட்டிருந்த கீஸரின் உட்சென்று வெப்பமேற்றிக்கொண்ட நீர்க்கற்றைகள்.. எஃகு வட்டின் சிறுசிறு துவாரங்களின் வழியே வெதுவெதுப்பாக வெளிக்கொட்டின..!! ஏதோ ஒரு சிந்தனையில் எங்கேயோ வெறித்த பார்வையுடனே ஷவரில் நனைந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!!

குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. குளியலறையில் இருந்து வெளிப்பட்டபோது வனக்கொடி எதிர்ப்பட்டாள்..!! ஆற்றுக்குள் விழுந்த சம்பவத்தை பற்றி வனக்கொடி பதைபதைப்புடன் கேட்க.. ஆதிராவோ அதுபற்றிய ஆர்வமில்லாமல் அசுவாரசியமாகவே பதில் அளித்தாள்..!! பிறகு.. பேச்சை மாற்றும் விதமாக.. வனக்கொடி மகனின் வருகை பற்றி விசாரித்தாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
"கதிர் வந்துட்டார் போல..??"

"ஆ..ஆமாம்மா..!! காலைலயே வந்துட்டான்.. கார்ல நீங்க அந்தப்பக்கம் போறீங்க.. இவன் இந்தப்பக்கம் வந்துட்டான்..!!"

"ம்ம்.. எப்படி இருக்காரு..??"

"அவனுக்கென்னம்மா.. நல்லாருக்கான்..!! வஞ்சிரமீனு கொழம்பு வச்சா வக்கனையா திம்பான்.. சாப்புட வச்சுட்டு வர செத்த நேரமாயிருச்சு..!! களமேழி போனீகளே வந்துட்டிகளா.. பசியா இருப்பிகளே சாப்புட்டிகளான்னு.. எனக்கு நெனைப்பு பூரா இங்கயேதான் இருந்துச்சு..!! அதான்.. ஆக்கிப்போட்டுட்டு அவசர அவசரமா ஓடியாறேன்..!!"

"அதனால என்னம்மா.. பரவால..!! அதான் தென்றல் இங்க இருக்காளே..?? அதுமில்லாம எனக்கு பசியே இல்லம்மா.. வர்ற வழிலதான் நல்லா சாப்பிட்டு வந்தேன்..!! அவர்தான் ஒன்னும் சாப்பிடல.. பசியா இருப்பார்னு நெனைக்கிறேன்.. அவரை வர சொல்றேன்.. அவருக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைங்க..!!"

வனக்கொடியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு படியேறினாள் ஆதிரா.. அறையை அடைந்தவள் சிபியை கீழே அனுப்பினாள்..!! ஈரக்கூந்தலை உலர்த்தலாம் என்று பால்கனிக்கு வந்தவள்.. வீட்டுக்கு முன்புறம் ஓடிய குழலாற்றை காண நேரிட்டதுமே.. வந்தவேலையை மறந்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டாள்..!! அதே குழப்ப சிந்தனைகள்தான்.. குழலாற்றுக்குள் சற்றுமுன்பு வீழ்ந்தெழுந்த வினாடிகள்.. குறிஞ்சியைப்பற்றி சிறுவயதுமுதல் கேள்விப்பட்ட புனைவுகள்.. அகழி வந்ததுமுதல் அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள்.. 'அக்காஆஆ' என்று காதுக்குள் ஒலிக்கிற தாமிராவின் ஏக்கக்குரல்..!!

[Image: krr24.jpg]

ஆதிரா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உடல் சிலிர்க்க நின்றிருந்தாள்..!! அவளும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. ஆற்றங்கரை புல்வெளியில் இருவரும் ஆடிய கண்கட்டி விளையாட்டு.. இப்போது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது..!! அதோ.. ஆற்றோரத்தில் கிளைகள் விரித்து அகலமாக நின்றிருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில்தான்..!! கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு.. காற்றில் கைகள் அசைத்து தங்கையை தேடியவாறே.. குயிலின் குரலில் பாடினாள் சிறுமி ஆதிரா..!!

"கட்டிலும் கட்டிலும் சேர்ந்துச்சா..??"

"சேர்ந்துச்சு.. சேர்ந்துச்சு..!!"
 

- அக்காவின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல்.. அவர்களை சுற்றி வரையப்பட்டிருந்த சிறுவட்டத்துக்குள் அங்குமிங்கும் ஓடியவாறே.. வாய்கொள்ளா சிரிப்புடன் பதில்ப்பாட்டு பாடினாள் குட்டி தாமிரா..!!

"காராமணி பூத்துச்சா..??"

"பூத்துச்சு.. பூத்துச்சு..!!"

"வெட்டின கட்டை தழைச்சுச்சா..??"

"தழைச்சுச்சு.. தழைச்சுச்சு..!!"

"வேரில்லா கத்திரி காய்ச்சுச்சா..??"

"காய்ச்சுச்சு.. காய்ச்சுச்சு..!!"


தங்கை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிலை போலவே உறைந்திருந்தாள் ஆதிரா.. எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருந்தாள் என்பது அவளுக்கே நினைவில்லாத மாதிரி..!! திடீரென இரண்டு வலுவான கரங்கள் அவளை பின்பக்கமாக இருந்து அணைத்துக் கொள்ள.. ஆரம்பத்தில் சற்று பதறிப்போய்தான் சுயநினைவுக்கு வந்தாள்.. உடலை ஒருமாதிரி முறுக்கி விழுக்கென்று துள்ளினாள்..!! அப்புறம்.. அணைத்துக் கொண்டவன் தனது கணவன்தான் என்பது புரிந்ததும்.. அப்படியே அடங்கிப் போனாள்..!! உதட்டில் ஒரு மெலிதான முறுவலுடன்.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாய் புதைந்து போனாள்..!!

சாப்பிடுவதற்கு முன்பு சிபியும் சிறு குளியல் போட்டிருந்தான்.. அவன் மேனியில் இருந்து கிளம்பிய சோப்பு வாசனை ஆதிராவின் நாசிக்குள் புகுந்தது..!! மனைவியின் காதுமடலை மூக்கால் உரசிய சிபி.. பிறகு அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முகர்ந்து முத்தமிட்டவாறே.. இதமான குரலில் கேட்டான்..!!

"என்னடா ஆச்சு..?? தண்ணிக்குள்ள விழுந்த ஷாக் இன்னும் போகலையா..??"

"அ..அதுலாம் ஒன்னுல்லத்தான்..!!"

"அப்புறம் ஏன் ஆத்தையே வெறிச்சு பாத்துட்டு இருக்க..??"

"இ..இல்ல.. சு..சும்மாதான்..!!"

"ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத ஆதிரா.. Try to be relaxed..!! கொஞ்சம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்..!!"

"ரெஸ்டா..??"

"ம்ம்.. ரெண்டு நாளா நைட்டு சரியாவே தூங்கலை நீ.. காலைல வேற சீக்கிரமே எழுந்துடுற.. கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எந்திரி..!! மைண்ட்க்கு ஃப்ரெஷா இருக்கும்..!!"

"நல்ல ஐடியாதான்.. ஆனா எனக்கு தூக்கம் வரலையே..??"

"தூக்கம் வரலையா..?? என்ன பண்ணலாம்..?? ம்ம்ம்ம்..." சிலவினாடிகள் யோசனையாக தாடையை சொறிந்த சிபி, பிறகு உதட்டில் ஒரு புன்னகையுடன் சொன்னான்.

"ஓகே.. நான் உன்னை தூங்க வைக்கட்டுமா..??"

"நீங்களா..?? எப்படி..??" ஆதிராவின் கண்களில் ஒரு ஆர்வ மின்னல்.

"வா.. சொல்றேன்..!!" 

ஆதிராவின் கரங்களைப் பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்றான் சிபி.. அவளை அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்..!! மெத்தையில் சாய்வாக படுத்துக் கொண்டவன்.. மனைவியை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்..!! வெட்கமும் புன்முறுவலுமாய் அவள் இவனை ஏறிட..

"குட்டிப்பொண்ணுக்கு நான் தலைகோதிவிட்டு தட்டிக் குடுப்பேனாம்.. எந்தக்கவலையும் இல்லாம செல்லக்குட்டி என் நெஞ்சுல படுத்து தூங்குவாளாம்..!!" 
Like Reply
காதலுடன் குறும்பை கலந்து சொன்னான்..!! ஆதிரா சிபியின் மார்பில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள்.. இமைகளை மெலிதாக மூடிக்கொண்டாள்..!! சிபி அவளது கூந்தலுக்குள் கைவிரல்களை கோர்த்து.. அங்குமிங்கும் அலைபாயவிட்டு.. இதமாக வருடிக் கொடுத்தான்..!! இன்னொரு கையால் அவளுடைய முதுகு சதைகளை மிருதுவாக மசாஜ் செய்து தட்டிக்கொடுத்தான்..!! அவ்வப்போது அவளது நெற்றியில் 'இச்.. இச்.. இச்..' என்று இதமான முத்தம் வேறு..!!

சிபியின் செய்கைகள் நிஜமாகவே ஆதிராவுக்கு மிகவும் சுகமாக இருந்தது.. அவனுடைய கைவிரல்களின் தடவல், அவளது மனதுக்குள் ஒரு அமைதி பரப்புவதை உணர்ந்தாள்.. அவனுடைய இதயத்துடிப்பின் ஓசை இவளது காதுக்குள் விழ, இவளது இதயத்துடிப்பு படபடப்பு நீங்கி சீரானது.. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பத்தில், அவளுக்கு அவசியமாயிருந்த ஒருவித பாதுகாப்பு கதகதப்பு கிடைத்தது..!!

சிறிது நேரம்..!! தூக்கம் வராவிட்டாலும், கணவனின் அணைப்பில் கட்டுண்டு சொக்கிக்கிடந்த ஆதிரா.. சற்று தாமதமாகத்தான் சிபியிடம் அந்த மாற்றத்தை உணர்ந்தாள்.. உடனே முகத்தை சற்று நிமிர்த்தி பார்த்தவளுக்கு, 'களுக்' என்று சிரிப்பு வந்துவிட்டது.. அந்த சிரிப்பின் சப்தம் வெளியே வராமல் இருக்க, அவசரமாய் தன் வாயை பொத்திக் கொண்டாள்..!!

ஆதிராவுக்கு சிரிப்பு எழுந்ததன் காரணம்.. சிபி இப்போது அசந்து தூங்கிப் போயிருந்தான்..!! கண்கள் செருகிப்போய்.. வாயை 'ஓ'வென்று திறந்து வைத்தவாறு.. மெலிதான குறட்டை ஒலியுடன்..!! ஆதிராவை தூங்க வைக்கிற முயற்சியில் அவனே அவ்வாறு அசந்து தூங்கிப் போயிருக்க.. அவளோ முகத்தில் ஒரு புன்னகையுடன்.. 'ஹையோ, ஹையோ' என தலையில் தட்டிக் கொண்டாள்..!! 

அவனுடைய உறக்கத்தை கலைக்காமல் அவனது மார்பில் இருந்து விலகினாள்.. முன்வந்து புரண்டிருந்த கேசத்தை விலக்கி அவனது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்..!! என்ன செய்யலாம் என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு, கீழே செல்லலாம் என்ற முடிவுடன் கட்டிலில் இருந்து எழுந்தாள்..!!

படியிறங்கி ஹாலுக்கு வர.. சமையலறைக்குள் வனக்கொடி பாத்திரத்தை உருட்டுகிற சப்தம் கேட்டது.. !! நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.. ஏதோ ஒரு சிந்தனையுடனே ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்.. டிவி ஓட ஆரம்பித்த பிறகும் அந்த சிந்தனையிலே மூழ்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்துத்தான் டிவி திரையை பார்த்தாள்..!! விலங்குகளின் வாழ்க்கைமுறை பற்றிய ஆவணப்படங்களை ஒளிபரப்பு செய்கிற அலைவரிசை அது.. முதுகில் மூன்று கோடுகளோடு ஒரு அணில், மரக்கிளைகளில் அங்குமிங்கும் துள்ளியோடிக்கொண்டிருக்க, பின்னணியில் ஒரு ஆணின் குரல் ஆங்கிலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது..!! 

"ப்ச்..!!"

சலிப்பை உதிர்த்த ஆதிரா, கையிலிருந்த ரிமோட்டில் வேறு சேனல் மாற்றுகிற பட்டனை அழுத்தினாள்.. அகழி வந்த முதல்நாள் நடந்தது போலத்தான்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா நான்கைந்துமுறை கட்டைவிரல் நோக அந்த பட்டனை அழுத்தமாக அமுக்கிப் பார்த்தாள்.. சேனல் மாறவில்லை..!! ரிமோட்டை பிடித்து உள்ளங்கையில் 'பட்.. பட்.. பட்..' என்று தட்டினாள்.. மீண்டும் டிவி முன்பு ரிமோட்டை நீட்டி முயன்று பார்த்தாள்.. அலைவரிசையில் எந்த மாற்றமும் இல்லை.. அணில் இப்போது கொட்டை கொறித்துக் கொண்டிருந்தது..!!

எரிச்சலான ஆதிரா சோபாவில் இருந்து விருட்டென எழுந்தாள்.. டிவியை நெருங்கி அதன் அடிபாகத்தில் இருந்த பட்டனை அழுத்தி வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. ம்ஹூம்.. பலன் இல்லை.. அதே சேனல்..!!

"ப்ச்.. என்னாச்சு இந்த டிவி சனியனுக்கு..??"

வாய்விட்டே எரிச்சலை வெளிப்படுத்திய ஆதிரா.. சில வினாடிகள் டிவி திரையையே வெறுப்பாக பார்த்தாள்..!! பிறகு, அந்த வெறுப்பு சற்றும் குறையாமல்.. 'ஆணியே புடுங்க வேணாம்' என்று முனுமுனுத்தவாறே.. டிவியின் கேபிள் கனெக்ட் ஆகியிருக்கிற மெயின் ஸ்விட்சை பட்டென ஆஃப் செய்தாள்.. அடுத்த நொடியே அவளுடைய மனதுக்குள் மெலிதான ஒரு திகில் உணர்வு.. ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகும், அணைந்துபோகாமல் டிவி ஓடிக்கொண்டிருந்தது.. தெளிவில்லாமல்.. அலை அலையாக.. ஒருமாதிரி வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு..!!

"ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்..!!" என்று வினோத சப்தம் வேறு.

அணைந்துபோகாத டிவியையே ஆதிரா விரிந்த விழிகளுடன் மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான்.. படக்கென திரையில் அந்த பிம்பம் தோன்றியது.. சிவப்பு அங்கி போர்த்திய உருவம்.. முகத்தில் வழிகிற கூந்தல் கற்றைகள்.. அந்த கூந்தலின் வழியாக இவளையே உற்றுப்பார்க்கிற ஒற்றை விழி..!! 
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
[Image: krr25.jpg]

மிரண்டு போனாள் ஆதிரா.. பயத்தில் பதறித்துடித்த இருதயத்துடன்.. 'ஆ'வென்று கத்துவதற்கு அவள் வாயெடுக்கும்போதே.. டிவி திரை படாரென அணைந்துபோய் ஒற்றைப் புள்ளியாக மறைந்தது..!! அதே நொடி..

"தட்ட்.. ட்ட்டடட்ட்டட்ட்ட... டமார்.. தட்ட்.. தட்.. தட்..!!!!!" என்று பக்கத்து அறைக்குள் இருந்து பலத்த சப்தம்.

மிரட்சி அப்பிய விழிகளுடனே ஆதிரா பக்கத்து அறையை திரும்பி பார்த்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியும் பதறிப்போய் வெளியே ஓடிவந்தாள்..!!

"எ..என்னம்மா சத்தம்..??"

"எ..என்னன்னு தெரியலையே..!!"

ஆதிராவும் வனக்கொடியும் குழப்பமும் திகைப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பிறகு, சப்தம் வந்த அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள்.. முன்பு ஆதிராவும் தாமிராவும் தங்கிக்கொள்கிற அறைதான் அது..!! அறைக்கதவை தள்ளி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.. அறைக்குள் சில பொருட்கள் ஆங்காங்கே கலைந்து கிடந்தன.. பீங்கான் கோப்பை தரையில் உருண்டிருந்தது.. மேஜை விளக்கு தலைகுப்புற கிடந்தது.. கம்ப்யூட்டர் மவுஸ் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது..!! 

இவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளின் வழியாக அணில் ஒன்று வெளியே ஓடுவது தெரிந்தது..!!

"ச்சே.. இந்த அணிலு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. எப்பப்பாரு.. வீட்டுக்குள்ள பூந்து எதையாவது உருட்ட வேண்டியது.. எல்லாத்தையும் வெஷத்தை வச்சு கொல்லப்போறேன் ஒருநாளு..!! ஹ்ம்ம்.. இந்த ஜன்னலை யாரு இப்படி தெறந்து வச்சான்னு தெரியலையே.. மூடித்தான கெடந்துச்சு..??"

சலிப்பாக சொல்லிக்கொண்டே வனக்கொடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள்.. ஜன்னல் கதவுகளை இழுத்து தாழ் போட்டாள்..!! அதேநேரம் ஆதிராவின் பார்வை எதேச்சையாக வேறெங்கோ சென்றது.. தரையில் விரிந்து கிடந்த ஒரு புத்தகத்தின் மேல் சென்று படிந்தது..!! அறையை ஒட்டி நின்றிருக்கும் மரஅலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து.. ஒன்று மட்டும் கீழே நழுவி விழுந்திருந்தது..!! அந்த புத்தகத்தின்மீது 'சத்.. சத்.. சத்..' என சப்தம் எழுகிற மாதிரி.. சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் மேலிருந்து துளித்துளியாய் சொட்டிக்கொண்டிருந்தது..!!

தாமிராவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..!! அதற்கென அவள் உபயோகிக்கிற பலவகை வண்ண மைகள்.. கண்ணாடி சீசாக்களில் அடைக்கப்பட்டு.. அலமாரியின் மேலே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..!! அந்த சீசாக்களில் ஒன்றுதான் இப்போது மேலேயே கவிழ்ந்து.. சிவப்பு மையை மட்டும் சொட்டு சொட்டாய் கீழே சிந்திக் கொண்டிருந்தது..!!

ஆதிரா பார்வையை கூர்மையாக்கி அந்த புத்தகத்தின் மீது வீசினாள்..!! பிரபல எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அது.. அதன் அட்டையில்.. கருப்புநிற பின்னணியில் சிவப்புநிற எழுத்துக்களாக கதையின் தலைப்பு மின்னியது..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
"கண்ணாமூச்சி ரே ரே..!!"

அத்தியாயம் 13

ஆதிரா குனிந்து அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. அந்த புத்தகத்துக்குள் இருந்த இன்னொரு சிறிய புத்தகம் இப்போது வெளியே நழுவி விழுந்தது..!! அது.. அவளுடைய தங்கை தாமிராவின் கல்லூரி ஆட்டோக்ராஃப் புத்தகம்..!! 

அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை பார்த்ததுமே ஆதிராவுடைய மூளையில் பளீரென்று ஒரு மின்னல்.. தொலைந்துபோன ஒரு சம்பவத்தின் நினைவுகளை அவளது மூளை இப்போது சட்டென மீட்டெடுத்தது.. ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்..!!

இதோ.. இதே அறையில்தான்.. அதோ.. அந்த கம்ப்யூட்டர் மேஜை முன்பாகத்தான்.. தாமிரா அமர்ந்து அவளது கம்ப்யூட்டரில் ஏதோ கட்டுரை டைப் செய்து கொண்டிருந்தாள்..!! இதே ஆட்டோக்ராஃப் புத்தகத்தைத்தான் ஆதிரா அந்த மேஜை மீது விசிறியடித்தாள்.. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த தங்கையிடம், ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டாள்..!!

"என்னடி இது..??"

"எ..எது..??" - தாமிராவிடம் ஒருவித குழப்பம்.

"ம்ம்ம்ம்..??? இது..!!!"

கடுப்பாக சொன்ன ஆதிரா.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை திறந்து.. ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தங்கையிடம் விரித்து காட்டினாள்..!! அவ்வாறு விரித்து காட்டப்பட்ட பக்கத்தில்.. தாமிராவின் கல்லூரி தோழியால் கிறுக்கப்பட்ட அந்த வழியனுப்பு வாழ்த்து செய்தி..!!

"தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி"

ஆதிரா அந்தப்பக்கத்தை திறந்து காட்டியதுமே.. தாமிராவின் முகத்தில் பட்டென ஒரு சோர்வு.. 'பாத்துட்டாளா' என்பது போல ஒரு சலிப்பு..!! அவஸ்தையாக இமைகளை மூடிக்கொண்டவள், எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.. ஆதிரா அவளை விடவில்லை..!!

"கேக்குறேன்ல..?? சொல்லுடி..!!" - ஆதிராவின் குரலில் ஒரு எரிச்சல்.

"என்ன சொல்ல சொல்ற..??" - அதே எரிச்சல் தாமிராவின் குரலிலும்.

"அப்டியே அறையப் போறேன் பாரு உன்ன..!! இத்தனை நாளா யாரையோ லவ் பண்ணிக்கிட்டு.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு கூட உனக்கு தோணலைல..?? எல்லாம் நானே தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு..!!"

"ப்ச்.. புரியாம பேசாதக்கா..!!"

"யார்டி புரியாமப் பேசுறா..?? அமுக்குணி கழுதை..!!"

".............................."

"அத்தானை நான் லவ் பண்ற விஷயத்தை உன்கிட்ட சொன்னப்போ எனக்கு எத்தனை வயசுடி இருக்கும்..??"

".............................."

"சொல்லுடி..!!"

"என்ன.. ப..பன்னெண்டு பதினாலு வயசு இருக்கும்..!!"

"ஹ்ம்ம்.. அப்போ நான் ஏஜ் அட்டண்ட் பண்ணக்கூட இல்ல.... என் மனசுல அந்த மாதிரி ஒரு நெனைப்பு வந்ததுமே, உடனே உன்கிட்ட வந்து சொன்னேன்..!! அப்போவே என் மனசுல இருக்குறதெல்லாம் எவ்வளவு ஃப்ராங்க்கா உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்..?? பண்ணிக்கிட்டேனா இல்லையா..??"

"ம்ம்.. பண்ணிக்கிட்ட..!!"

"அப்புறம்.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்குற..??"

"எப்படி..??"

"ம்ம்..?? சரியான அழுத்தக்காரியா..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
[Image: krr26.jpg]

"ஹையோ.. உனக்கு புரியலக்கா..!!"

"என்ன புரியல..?? நீ சொல்லு.. நான் புரிஞ்சுக்குறேன்..!!"

"என்ன சொல்றது.. உன் லவ் மாதிரி என் லவ் அவ்வளவு ஈஸி கெடையாது.. நீ அத்தானை லவ் பண்ணின.. அத்தானுக்குத்தான் உன்னை முடிக்கணும்னு அப்பாவுக்கும் அப்போ இருந்தே அபிப்ராயம்.. It's all so easy for you..!! என் லவ் அந்த மாதிரி இல்லக்கா.. It's really complicated.. நெறைய பிரச்சினை இருக்கு இதுல.. இந்த லவ் சக்சஸ் ஆகும்னே எனக்கு நம்பிக்கை இல்ல..!! அப்படி இருக்கும்போது அதை எப்படி உன்கிட்ட வந்து பட்டுன்னு சொல்ல சொல்ற..??"

தாமிரா அந்தமாதிரி வருத்தம் தோய்ந்த குரலில் பரிதாபமாக சொல்லவும்.. அத்தனை நேரம் அவள்மீது ஆதிராவுக்கு இருந்த கோவம், இப்போது சட்டென காணாமல் போனது.. உள்ளத்துக்குள் உடனடியாய் தங்கைமீது ஒரு அன்பு ஊற்று பீறிட்டு கிளம்பியது..!! தாமிராவின் கையை தனது கையால் ஆதரவாக பற்றிய ஆதிரா.. இப்போது கனிவான குரலில் கேட்டாள்..!! 

"ப்ச்.. ஏண்டி இப்படிலாம் பேசுற..?? அப்படி என்ன உன் லவ்ல பிரச்சினை..?? சரி அதை விடு.. அந்தப் பையன் யார்னு சொல்லு மொதல்ல..!!" ஆதிரா கேட்க,

"........................." தாமிரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

"சொல்லுடி.. ப்ளீஸ்..!!" ஆதிரா திரும்ப கெஞ்சலாக கேட்கவும், தாமிரா இப்போது வாய் திறந்தாள். 

"க..கதிர்..!!" தாமிரா சொன்னதும் ஆதிராவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

"யா..யாரு..?? நம்ம கதிரா..?? ந..நம்ம வனக்கொடிம்மா பையனா..??"

"ம்ம்..!!"

"எ..எப்படிடி ..??"

"எ..எப்படின்லாம் எனக்கு சொல்லத் தெரியலைக்கா.. அப்படித்தான்..!!"

"எத்தனை நாளா..??"

"இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா..!! ஃபர்ஸ்ட் அவன் ப்ரொபோஸ் பண்ணினான்.. எனக்கு பிடிக்கல வேணான்னு சொல்லிட்டேன்.. அவனை அவாய்ட் பண்ணேன்.. அப்புறமும் அவன் ஸ்ட்ராங்கா இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமா என்னையும் கரைச்சுட்டான்..!!"

"ஹ்ம்ம்..!!"

ஆதிரா இப்போது பட்டென ஒரு யோசனையில் ஆழ்ந்தாள்..!! கதிர் நல்ல பையன்தான்.. கெட்ட பழக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.. ஆதிரா, தாமிரா, சிபி என மூவரோடும் நான்காவது ஆளாக சிறுவயது முதலே நட்புடன் சுற்றி திரிபவன்தான்..!! பட்டப்படிப்பு முடித்திருக்கிறான்.. இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்..!! அவனுக்கு தாமிரா மீது எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என்பதை ஆதிரா முன்பே அறிவாள்.. ஆனால்.. இருவரும் இப்படி காதலில் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான் அவள் எதிர்பார்த்திரவில்லை..!! 

இளையவர்களுக்கு கதிர் மீது எந்த பாரபட்சமும் இல்லை.. தங்களில் ஒருவனாகத்தான் அவனை பார்த்தார்கள்..!! ஆனால் பெரியவர்களுக்கும் அப்படி என்று சொல்லமுடியாது.. முக்கியமாக தணிகைநம்பிக்கு..!! ஒரு சிறு விஷயத்திற்காக கௌரவம் பார்த்துக்கொண்டு.. பூவள்ளியின் சொந்தங்களை இன்று வரை தள்ளி வைத்திருப்பவர்.. தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?? தாமிராவின் பயமும் கவலையும் ஆதிராவுக்கு இப்போது தெளிவாக புரிந்தது..!!

"அப்பா சம்மதிக்க மாட்டார்னு நெனைக்கிறியா..??"

"ஏன்.. நீ சம்மதிப்பார்னு நெனைக்கிறியா..??"

"இல்ல.. சம்மதிக்க மாட்டார்னுதான் தோணுது..!!"

"எனக்கும் அப்படித்தான்..!!"

"ஹ்ம்ம்.. இதைத்தான் காம்ப்ளிகேட்டட்னு சொன்னியா..??"

"ஆமாம்..!! அதுமில்லாம அவன் இப்போ ஜாப்ல வேற இல்ல.. அவன் மொதல்ல நல்ல வேலைல செட்டில் ஆகணும்..!!"

"ஏதோ இண்டர்வியூன்னு சொல்லிட்டு இருந்தாரு..??"

"ம்ம்.. கோயம்புத்தூர்ல.. ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசர் வேலையாம்.. இன்னைக்கு ஈவினிங் கெளம்புறான்..!! அப்படியே சென்னை வேற போறதா சொன்னான்.. ஒருவாரம் கழிச்சுதான் வருவான்னு நெனைக்கிறேன்..!!"

"ஹ்ம்ம்ம்.. கவலைப்படாத தாமிரா.. அவருக்கு கண்டிப்பா இந்த வேலை கெடைச்சிடும்.. பாதி ப்ராப்ளம் சால்வ் ஆய்டும்..!! அப்பாவை சம்மதிக்க வச்சுட்டா மீதி ப்ராப்ளமும் சால்வ்ட்..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
"ம்ம்..!!"

"நான் வேணா அப்பாட்ட பேசிப் பாக்கட்டுமாடி..??"

"எதைப்பத்தி..??"

"உன் லவ் மேட்டர் பத்தித்தான்..!!"

"எப்போ..??"

"ஏன்.. இப்போவேதான்..!!"

"ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!!"

"என்னடி சொல்ற..??"

"பின்ன என்ன.. இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!!"

"ஏண்டி இப்படி பேசுற.. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் இல்லையா..??"

"ஹையோ.. நான் அப்படி சொல்லலக்கா.. வீடே சந்தோஷமா இருக்குறப்போ.. இந்த விஷயத்தை சொல்லி அந்த சந்தோஷத்தை கெடுக்க வேணாம்..!! மொதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும்.. இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..!! புரியுதா..??"

"ம்ம்..!!"

"கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!"

குறிப்பிட்ட தேதியில் அந்த கல்யாணம் நடப்பதற்குள்ளாகத்தான் தாமிரா மறைந்து போன சம்பவம்.. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த குடும்பம் மீண்டு, சிபிக்கும் ஆதிராவுக்கும் கல்யாணம் நடக்க மேலும் ஒருவருடம் ஆகிப்போனது..!!

"ஆதிராம்மா.. என்னாச்சுமா..??" வனக்கொடி வந்து தோளைப் பற்றவும்தான் ஆதிரா பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள்.

"ஒ..ஒன்னுல்லம்மா..!!" என்றாள் தடுமாற்றமாக.

"ஐயையே.. மைப்பாட்டிலை வேற தட்டி விட்டுடுச்சா..??"

வெறுப்புடன் முனுமுனுத்தவாறே, அருகில் கிடந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு ஏறி.. சாய்ந்திருந்த கண்ணாடி சீஸாவை சரியாக நிமிர்த்தி வைத்தாள் வனக்கொடி..!! மனதில் ஒருவித குழப்ப சிந்தனையுடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. வனக்கொடியின் பக்கமாக திரும்பாமலே அவளிடம் கேட்டாள்..!!

"இன்னைக்கு சாயந்திரம் கதிர் எங்கயும் வெளில போவாராம்மா..??"

"இல்லம்மா.. வீட்லதான் இருப்பான்.. ஏன் கேக்குற..??"

"எனக்கு அவர் கூட கொஞ்சம் பேசணும்மா..!!"

இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு.. சிவப்புமை படர்ந்த புத்தகத்தையும், தங்கையின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஒரு கையில் பிடித்தவாறே.. அந்த அறையின் வாசலை நோக்கி நடந்தாள் ஆதிரா..!!

ஆதிராவுக்கு வியப்பாக இருந்தது.. தொலைந்துபோன ஒருவருட நினைவுகளில், தங்கையின் காதல் பற்றிய நினைவும் அடங்கியிருந்ததை எண்ணி ஒருவித அலுப்பு.. 'அதையும் கூடவா மறந்து தொலைப்பாய் அறிவுகெட்ட மூளையே..?' என்று தனது நிலையை தானே கடிந்துகொண்டாள்..!!

அன்று மாலை சிபி கண் விழித்ததுமே, ஆதிரா அவனிடம் அந்த விஷயம் பற்றி பேசினாள்.. தனக்கு ஞாபகம் வந்த தாமிராவின் காதல் பற்றிய நினைவை தெளிவாக விளக்கி கூறினாள்..!! தாமிரா கதிரை காதலித்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. 'என்ன சொல்ற ஆதிரா..?? அப்படியா..?? கதிரையா..??' என்று திரும்ப திரும்ப கேட்டான்..!! 'ஆமாம் அத்தான், எனக்கு இப்போத்தான் ஞாபகம் வந்தது' என்று அவனை நம்ப வைக்க முயன்றாள்.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஆதாரமாக திறந்து காட்டினாள்..!! அவனும் சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு.. 'சரிதான்' என்று சமாதானம் ஆனதும்.. ஆதிரா அவனிடம் கேட்டாள்..!!

"அவ லவ் பண்ற விஷயத்தை அப்போதைக்கு யார்ட்டயும் சொல்லவேணாம்னு தாமிரா சொல்லிருந்தா.. அவ போனப்புறமும்கூட அதைப்பத்தி நான் உங்கட்ட சொல்லலையா அத்தான்..??" 

ஆதிரா அவ்வாறு கேட்டதும் சிபி அவளுடைய கையை பற்றிக்கொண்டான். அவளது விரல்களை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவாறே சொன்னான்.

"இல்ல ஆதிரா.. சொல்லல..!! தாமிரா போனதுக்கப்புறம் நீ ரொம்பவே உடைஞ்சு போய்ட்ட.. யார்ட்டயும் சரியா பேசுறது கூட கெடையாது.. எந்த நேரமும் எங்கயாவது வெறிச்சு பாத்துட்டுதான் உக்காந்திருப்ப.. நீ கொஞ்சம் நார்மலுக்கு வர்றதுக்கே ஆறு ஏழு மாசம் ஆய்டுச்சுடா..!! அவளே நம்மள விட்டு போனப்புறம் அவ லவ் மேட்டரை வெளில சொல்லி என்ன ஆகப்போகுது.. ம்ம்..?? அது உனக்கு அவ்வளவு முக்கியமா பட்டிருக்காது..!!"

"ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கணும்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"இன்னைக்கு அவரை நேர்ல போய் பார்த்து பேசலாம்னு இருக்கேன் அத்தான்..!!"

"யாரை.. கதிரையா..??"

"ம்ம்..!!"

"இந்த விஷயத்தை பத்தி பேசப் போறியா..??"

"ஆமாம்..!!"

"எதுக்கு ஆதிரா..?? அதெல்லாம் தேவையில்லாததுன்னு தோணுது..!!"

"இல்லத்தான்.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க.. தாமிராவை பத்தி நமக்கு தெரியாத ஏதாவது விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு..!! அவர்ட்ட பேசினா ஏதாவது மேட்டர் கெடைக்கும்னு நெனைக்கிறேன்..!!"

ஆதிரா அவ்வாறு சொல்ல, சிபி அவளையே முறைப்பாக பார்த்தான்.. அவனது பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் ஆதிரா குழப்பமாக கேட்டாள்..!! 

"என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..??"

"ம்ம்..?? அகழி வந்து அஞ்சுநாள் இருந்தா போதும், மறந்து போனதுலாம் தானா ஞாபகம் வரும்னு சொல்லி, என்னை இங்க கூட்டி வந்த.. இப்போ என்னடான்னா.. நீயாவே அதெல்லாம் வம்படியா வரவச்சுக்குறியோன்னு தோணுது..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
ச்சேச்சே.. அப்படிலாம் இல்லத்தான்..!!"

"இந்த மாதிரிலாம் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கடா..!!"

"ப்ளீஸ்த்தான்.. இது மட்டும்..!! ப்ளீஸ்..!!" ஆதிராவின் கெஞ்சலுக்கு இறங்கிய சிபி,

"ஹ்ம்ம்.. என்னவோ பண்ணிட்டு போ.. ஆனா.. இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குத்தான்.. நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!! மூணாவது நாள் பொட்டியை கட்டிக்கிட்டு ஊட்டிக்கு என்கூட ஹனிமூன் கொண்டாட வர்ற.. சரியா..??" என்று குறும்பான குரலில் சொல்ல,

"ம்க்கும்.. அதான் ஹனிமூன் அல்ரெடி அகழிலயே ஸ்டார்ட் ஆய்டுச்சே..??" என ஆதிரா நாணத்துடன் தலைகுனிந்தவாறே சொன்னாள். 

"ஓ.. இதுக்குப் பேரு ஹனிமூனா..?? மண்டு..!! ஹனிமூன்னா செக்ஸ் மட்டும் இல்ல.. அதில்லாம நெறைய இருக்கு.. முக்கியமா.. நம்ம ரெண்டு பேர் மனசுலயும் எந்த தேவையில்லாத நெனைப்புமே இருக்கக்கூடாது.. புரியுதா..??"

"ம்ம்.. புரியுது..!!" ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"ஹேய்.. எங்க.. உன் கைல போட்ருந்த ரிங்க காணோம்..??" 

என்று சிபி குழப்பமாக கேட்டான்.. உடனே ஆதிராவும் பட்டென தனது விரல்களை உயர்த்தி பார்த்தாள்..!! அவர்கள் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட காதலர் தினத்தன்று.. சிபி அவளுக்கு அன்புடன் அணிவித்த அந்த மோதிரம் இப்போது அவளது விரல்களில் இல்லை..!! அதை அறிந்ததுமே ஆதிராவிடம் உடனடியாய் ஒரு பதற்றம்..!!

"ஐயையோ.. எங்க போச்சு.. கைலதான போட்ருந்தேன்.. காலைல கூட பாத்தனே..??"

"குளிக்கிறப்போ பாத்ரூம்ல ஏதும் கழட்டி வச்சியா..??"

"இ..இல்லத்தான்.. கழட்டல.. கழட்டுன மாதிரி ஞாபகமே இல்ல..!! எங்க விழுந்துச்சுனு தெரியலையே..?? ஐயோ.. கடவுளே..!!"

புலம்பலாக சொன்ன ஆதிரா நெற்றியை பிசைந்துகொண்டாள்.. மோதிரம் எங்கே சென்றிருக்கும் என்று தீவிரமாக யோசித்தாள்..!! ஆதிராவின் கவனக்குறைவு சிபிக்கு ஒருவித எரிச்சலையே தந்தது.. அவன் ஆசையாக அவளுக்கு அணிவித்த மோதிரம் அல்லவா..?? ஆனால்.. ஆதிராவிடம் காணப்பட்ட ஒரு அதீத பதற்றம் சிபியின் எரிச்சலுணர்வை கட்டுக்குள் கொண்டுவந்தது.. மனைவியின் மீது அன்பு பெருக்கெடுத்தவனாய் இதமாக சொன்னான்..!!

"சரி விடு.. டென்ஷன் ஆகாத.. இங்கதான் எங்கயாவது இருக்கும்.. அப்புறம் பொறுமையா தேடிப்பாரு..!!"

"ம்ம்.. பாக்குறேன்..!! ஸாரித்தான்.. கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன்.. காலைல இருந்து என் மைண்டும் ரிலாக்ஸ்டா இல்ல..!! ஸாரி..!!"

"ப்ச்.. இதுக்குலாமா ஸாரி கேட்ப..?? விடு ஆதிரா..!! வா.. சாஞ்சுக்கோ வா..!!" கைகள் இரண்டையும் விரித்து சிபி காதலுடன் அழைக்க,

"ம்ம்ம்.. சாஞ்சுக்கிட்டேன்..!!" என்று சிணுங்கலாக சொன்னவாறே அவனுடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் ஆதிரா.

ஆதிராவின் வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடையில் வனக்கொடியின் வீட்டை அடைந்துவிடலாம்.. பால்கனியில் இருந்து பார்த்தால் தனியாக நின்றிருக்கும் வனக்கொடியின் வீடு தெளிவாகவே தெரியும்..!! சிபியிடம் பேசிமுடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆதிரா வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்..!! கதிரை சென்று பார்த்து.. ஆரம்ப நல விசாரிப்புகள் முடிந்த பிறகு.. அவனிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி.. அருகில் இருந்த கல்மண்டபத்துக்கு அழைத்து சென்றாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
[Image: krr27.jpg]

கல் மண்டபத்தை அடைந்து சிறிது நேரம் ஆகியும்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தனர்..!! எப்படி ஆரம்பிப்பது என்று ஆதிராவுக்குள் ஒரு தயக்கம்.. எதற்காக அழைத்திருப்பாள் என்று கதிருக்குள் ஒரு குழப்பம்..!! கொஞ்ச நேரத்தில் பொறுமை இல்லாமல் கதிரே கேட்டுவிட்டான்..!!

"ஏதோ தனியா பேசணும்னு சொல்லி கூட்டி வந்துட்டு.. ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க..??"

"ஹஹா.. அப்டிலாம் ஒன்னுல்ல.. ம்ம்ம்ம்.. உங்க வேலைலாம் எப்படி போய்ட்ருக்கு கதிர்..??"

"ம்ம்.. பரவால.. நல்லா போய்ட்ருக்கு..!! போன மாசம் ப்ரமோஷன் தந்தாங்க.. சேலரி கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணிருக்காங்க.. தங்கிக்க குவாட்டர்ஸ் குடுத்திருக்காங்க..!!"

"ஓ.. வெரி குட்..!! அப்போ.. ஜாப்ல நல்லா செட்டில் ஆகிட்டிங்க.. அப்டித்தான..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"அப்படியே காலாகாலத்துல ஒரு கல்யாணமும் பண்ணிக்கலாம்ல..??"

"ஹ்ஹ.. கல்யாணமா.. அதுக்கென்ன இப்போ அவசரம்..??"

"என்ன இப்படி சொல்றீங்க..?? உங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல..?? வனக்கொடி அம்மாக்கும் ஆசை இருக்கும்ல..??"

"ம்ம்.. பாக்கலாங்க ஆதிரா..!!"

"பண்ணிக்கிற மாதிரி ஐடியா இருக்குதான..??" ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும், கதிர் சற்றே நெற்றியை சுருக்கினான்.

"பு..புரியல.. ஏன் கேக்குறீங்க..??"

"இ..இல்ல.. இன்னும் நீங்க தாமிராவ நெனச்சுட்டு இருக்கலைல..??"

கேட்டுவிட்டு ஆதிரா கதிரின் கண்களை கூர்மையாக பார்த்தாள்.. அவனோ இவளையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுடைய முகத்தில் குழப்பமும், திகைப்பும் கலந்துகட்டி வழிந்தது..!!

"ஆ..ஆதிரா.. உங்களுக்கு..??" என்று தடுமாற்றமாக கேட்டான்.

"ம்ம்.. தெரியும்..!!"

"எப்படி..??"

"தாமிரா முன்னாடி சொல்லிருக்கா..!!"

"ஓ..!!! நா..நான்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க.. அந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கேன்..!!"

"பரவால கதிர்.. இப்போ தெரிஞ்சதுனால என்ன..??"

"ம்ம்.. ஒன்னுல்லதான்..!!"

"சரி.. இப்போ சொல்லுங்க..!! இன்னும் நீங்க தாமிராவையே நெனச்சுட்டு இருக்கிங்களா..??"

"ஹ்ஹ.. என்ன சொல்றது.. ஒரு வருஷத்துல எல்லாத்தையும் மறக்குற அளவுக்கு என் லவ் அவ்ளோ வீக் இல்லைங்க ஆதிரா..!! அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்ணினேன்.. அவ்வளவு சீக்கிரமாலாம் என்னால அவளை மறக்க முடியாது..!! பட்.. நார்மலுக்கு வர ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கேன்..!!" கதிரின் குரலில் ஒருவித விரக்தி கலந்திருந்தது.

"ஹ்ம்ம்.. தாமிரா போனது உங்களுக்குமே ரொம்ப கஷ்டந்தான்.. இல்ல..??"

"ரொம்ப கொடுமைங்க..!! என் கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லக்கூட என்னால முடியல.. வாய்விட்டு அழணும்னா கூட தனியா உக்காந்துதான் அழனும்.. மனசுக்குள்ள இன்னும் அந்த வலி இருக்குது..!!"

"ஹ்ம்ம்.. புரியுது..!! எல்லாத்தையும் மறந்துட்டு.. உங்க லைஃப் பத்தியும் கொஞ்சம் யோசிங்க கதிர்..!!"

"ம்ம்.. ட்ரை பண்றேன்..!!"

"அப்புறம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. கேக்கட்டுமா..??"

"கேளுங்க..!!"

"தாமிரா காணாம போனதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க..??"

"எப்படினா..?? எனக்கு புரியல..!!"

"எப்படி சொல்றதுனா.. அவ காணாம போனதுல எனக்கு நெறைய கொழப்பம் இருக்கு.. நெஜமாவே குறிஞ்சிதான்.." ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

"இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!"

என கதிர் இடையில் புகுந்து பட்டென்று சொன்னான்..!! அதைக் கேட்டதும் ஆதிராவிடம் மெலிதாக ஒரு ஆச்சர்யம்.. முகத்திலும் குரலிலும் அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்போடு திரும்ப கேட்டாள்..!!

"ஏ..ஏன் அப்படி சொல்றீங்க..?? அ..அதான்.. உங்க அம்மாவே.. அதை கண்ணால.."
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
இல்லைங்க ஆதிரா.. அம்மா ரொம்ப பயந்தவங்க.. சும்மாவே எதை பாத்தாலும் குறிஞ்சி குறிஞ்சின்னு சொல்லிட்டு இருப்பாங்க.. எந்த மாதிரி சூழ்நிலைல எதை பாத்து அவங்க அந்த மாதிரி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல..!! அவங்க சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நாம நம்ப வேணாம்..!!"

"ஓ..!! அப்படினா.. குறிஞ்சின்ற விஷயம் மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??"

"அப்படி இல்ல.. குறிஞ்சின்ற விஷயம் மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல.. உங்களை மாதிரிதான்.. நம்பலாமா வேணாமான்னு கன்ஃப்யூஷன்ல இருக்குற சராசரி ஆள்தான் நான்..!! ஆனா குறிஞ்சியோட ஆவி தாமிராவை தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியல..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"

"எப்படி சொல்றது.. இந்த ஊரே குறிஞ்சியை பத்தி தப்பா பேசுறப்போ.. ராட்சசி, சூனியக்காரின்னுலாம் கேவலமா திட்டுறப்போ.. குறிஞ்சியை நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் தாமிராதான்..!! அப்படிப்பட்ட தாமிரா மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்..?? குறிஞ்சி பத்தி தாமிரா சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அதெல்லாம் கேட்டப்புறம் அந்த குறிஞ்சியோட ஆவிதான் தாமிராவை தூக்கிட்டு போயிருக்கும்னு.. என்னால நம்ப முடியலங்க ஆதிரா..!!"

கதிர் மிக இயல்பாகத்தான் பேசினான்.. ஆனால் அவன் பேச பேச ஆதிராவிடம் ஒரு மாற்றம்.. அவளுடைய மூளையில் பளீர் பளீரென ஒரு மின்னல் தாக்குதல்.. முகத்தில் ஒருவித திகைப்பு கலந்த இறுக்கம்..!! தொலைந்து போன சில நினைவுகள் அவளது மனதுக்குள் இப்போது ஊற்றெடுக்க.. அவளிடம் மெலிதாக ஒரு தடுமாற்றம்..!! 

"எ..என்ன சொல்றீங்க கதிர்..??"

"குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் தப்புன்னு நிரூபிக்க.. தனியா நின்னு போராடுனவ தாமிரா..!! அவளுக்கு அந்த குறிஞ்சியாலேயே ஆபத்துனா.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!"

"எ..எனக்கு புரியல.. அவ என்ன போராடுனா..??"

"ஓ..!! உ..உங்களுக்கு அதுலாம் ஞாபகம் இல்லையா..?? குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு தாமிரா ஒரு ஆராய்ச்சி செஞ்சாளே.. ஞாபகம் இல்ல..??"

இப்போது கதிர் குழப்பமாக கேட்க, ஆதிராவுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.. முகத்தை அவஸ்தையாக சுருக்கியவள், நெற்றியை பற்றி பிசைந்து கொண்டாள்.. காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தின் வலி இப்போது இன்னும் அதிகரிப்பது போல ஒரு உணர்வு.. கால்கள் மெலிதாக தடுமாற, அருகிலிருந்த கல்த்தூணை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! தாமிராவின் ஆராய்ச்சி பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர.. சற்று மூச்சிரைத்தவாறே அமைதியாக அந்த ஞாபகங்களை சேகரித்துக் கொண்டாள்..!!

"ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!" என்றாள் சில வினாடிகளுக்கு பிறகு.

"அதான் சொல்றேன்.. குறிஞ்சிதான் காரணம்னு என்னால நம்ப முடியல..!!"

"கு..குறிஞ்சி இல்லன்னா.. அப்புறம்..??" 

கேட்க வந்தததை முழுதாக முடிக்காமலே நிறுத்தினாள் ஆதிரா..!! அவளுடைய முகத்தையே கதிர் ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு தயங்கி தயங்கி தடுமாற்றமாக அவளிடம் கேட்டான்..!! 

"எ..எனக்கு.. எனக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க ஆதிரா.. சொ..சொல்லட்டுமா..??"

ஆதிரா வேறெங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. கதிரின் முகத்தை ஏறிடாமலே 'வேண்டாம்' என்பது போல தலையசைத்தாள்.. மெலிதான, வறண்டுபோன குரலில் சொன்னாள்..!!

"வே..வேணாம் கதிர்.. நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும்..!!"

அவ்வளவுதான்.. அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.. அசைவேதுமின்றி உறைந்து போயிருந்தனர்..!! சூரியனின் வெளிச்சம் இப்போது சுத்தமாக வற்றியிருக்க.. சூழ்நிலையில் இருளின் அடர்த்தி அகிகமாகிக்கொண்டே சென்றது..!!

"நேரமாயிடுச்சுங்க ஆதிரா.. கெளம்பலாமா..??"

"ம்ம்.. கெ..கெளம்பலாம்..!!"

மண்டபத்தின் வாயிலை நோக்கி இருவரும் மெல்ல நடந்தனர்.. நடக்கும்போதே ஆதிரா கதிரிடம் கேட்டாள்..!!

"எ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..??"

"சொல்லுங்க..!!"


"நாளைக்கு ஒருநாள் எனக்கு கார் ட்ரைவ் பண்ணனும்..!!"

"கண்டிப்பா..!!"

"தேங்க்ஸ்..!!"

"எ..எங்க போகணும்..??"

"வேக்ஸின் ஃபேக்டரி..!!"
Like Reply
அத்தியாயம் 14

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கே கதிர் ஆதிராவின் வீட்டுக்கு வந்தான்.. ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சிபி, அவனை புன்னகையுடன் வரவேற்றான்..!!

"ஹாய் கதிர்.. எப்படி இருக்க..??"

"நல்லா இருக்கேங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..??"

"எனக்கென்னப்பா.. நல்லா இருக்கேன்..!! என்ன.. காலாங்காத்தாலேயே வீட்டுக்கு வந்திருக்குற..??" சிபி கேட்டுவிட்டு கதிரை கேள்வியாக பார்க்க, அவன் இப்போது சற்று தடுமாற்றமாகவே பதில் சொன்னான்.

"ஆ..ஆதிரா.. ஆதிராதான் வர சொல்லிருந்தாங்க..!!"

கதிர் அவ்வாறு சொன்னதுமே சிபியின் முகம் சட்டென சுருங்கிப் போனது.. அதே நேரத்தில்.. வெளியே கிளம்ப தயாராகி, படியிறங்கி வந்த ஆதிராவை காண நேர்ந்ததும்.. அவனுடைய எரிச்சல் அதிகமாகவே செய்தது.. மனைவியின் முகத்தை ஏறிட்டு முறைத்தான்..!!

[Image: krr27a.jpg]

"சொன்னா கேக்க மாட்டேல..??" 

என்று சன்னமான குரலில் முணுமுணுத்தான்.. ஆதிரா அவனுக்கு பதில் சொல்லவில்லை.. 'ப்ளீஸ்த்தான்' என்று பார்வையாலேயே கெஞ்சினாள்..!!

"ஹ்ம்.. என்னவோ பண்ணிட்டு போ..!!" 

என்று சலிப்பாக சொல்லிவிட்டு சிபி செய்தித்தாளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கதிரை ஏறிட்டு 'வாங்க.. போலாம் போலாம்..' என்று சைகையால் சொன்னவாறே வாசலை நோக்கி நடந்தாள்..!! 

"அ..அப்போ நான் வர்றேன்..!!" என்று கதிர் சொன்னதற்கு சிபியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

தான் செய்கிற காரியங்களில் தனது கணவனுக்கு உடன்பாடு இல்லை என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்தது.. நேற்று இரவு விஷயத்தை சொன்னபோதே 'ஏன் இந்த தேவையில்லாத வேலைலாம்..??' என்று எரிச்சல் பட்டுக்கொண்டான்..!! ஆனால்.. அதையும் மீறி.. தங்கை மீது அவளுக்கிருந்த அன்பும், அவளுக்கு என்னவானது என்று உறுதிப் படுத்திக்கொள்கிற ஆர்வமும்.. அவளை அந்த காரியங்களை செய்ய சொல்லி உந்தித்தள்ளின..!! அதுவுமில்லாமல்.. சும்மாவே அவள் இன்று செல்லவிருக்கிற இடத்துக்கு வர சிபி பிரியப்படமாட்டான் என்பது அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.. அதனால்தான் கார் ஓட்ட கதிரை துணைக்கு அழைத்திருந்தாள்..!!

மலைப்பாதையில் பயணம் புரிவதற்கு ஏற்றது என.. பல வருடங்களுக்கு முன்பு தணிகைநம்பி வாங்கிய ஜீப் அது..!! ஆதிராவின் குடும்பம் அகழியில் இருந்து சென்றபிறகு.. அதிகமாக உபயோகிக்கப்படாமல் கொட்டாரத்திலேயே நின்றிருக்கும்..!! அதில்தான் இப்போது ஆதிராவும் கதிரும் கிளம்பினார்கள்.. ஆரம்பத்தில் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர்..!!

ஆதிரா குறிப்பிட்ட அந்த தடுப்பூசி மருந்து தொழிற்சாலை.. அகழியின் இன்னொரு மூலையில் இருக்கிறது.. அந்த தொழிற்சாலையை அடைய அகழியின் முக்கிய வீதிகளை கடந்துதான் செல்லவேண்டும்..!! அந்த பாதையிலேயே.. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே.. ஒரு மலைச்சரிவின் உச்சியில் தனியாக நின்றிருந்த, அந்த சிதலமடைந்த வீட்டின் வழியே ஜீப் சென்றது.. நூறு வருடங்களுக்கு முன்பாக குறிஞ்சி வாழ்ந்த வீடு.. இப்போதெல்லாம் அருகில் செல்வதற்கே பலரும் அஞ்சி நடுங்குகிற வீடு..!!
Like Reply
அந்த வீடு பார்வைக்கு வந்ததுமே.. ஆதிராவுக்கு பழைய ஞாபகங்களும் மனதுக்குள் வந்து, பளிச் பளிச்சென்று மின்னலாய் வெட்டின..!! ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் நினைவுகள்..!!

"Game or Shame..??" - கைவிரல்களுக்கு நடுவே கண்சிமிட்டி கேட்டாள் தாமிரா. எந்தப் பொருளுக்காக அந்தப் போட்டி என்பது கூட ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் இல்லை.

"குறிஞ்சி வீட்டுக்குள்ள நொழைஞ்சு.. சுவத்துல பேர் எழுதி வச்சுட்டு வரணும்.. நீ உன் பேரை.. நான் என் பேரை..!! "Game or Shame..??" - தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவோ பதறினாள்.

இருட்ட ஆரம்பிக்கிற சமயத்தில் குறிஞ்சி வீட்டுக்கு முன்பாக வந்து நின்றனர்.. இளங்குமரிகள் இருவரும்..!! ஆளுக்கொரு கையில் நீளமான, தடியான ஆணி ஒன்றை பற்றியிருந்தனர்.. ஆதிராவின் கையிலிருந்த ஆணி மட்டும் நடுக்கத்தில் கிடுகிடுவென ஆடியது..!! 

"வேணாண்டி.. போயிறலாம் வா..!!" - விதிர்விதிர்த்துப்போய் ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக புறப்பட்டாள் தாமிரா.. வீட்டை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!!

"ஏய்.. நில்லுடி..!!"

"ஒன்னும் ஆகாது வாடி..!!!" - தங்கையின் குரலில் சற்று தைரியம் பெற்று ஆதிராவும் அவள் பின்னால் மூச்சிரைக்க ஓடினாள்.

வீட்டை முற்றிலும் மூடுமாறு சுற்றிலும் அடித்து வைக்கப்பட்ட மரத்தகடுகளில் ஒன்றை பெயர்த்தெடுத்தாள் தாமிரா.. உருவான சிறு இடைவெளியில் உடலை திணித்து உள்ளே விழுந்தனர் உடன்பிறப்புகள் இருவரும்..!! மரத்தகடு திறப்பின் வழியாக உள்ளே சிந்திய சிறு ஒளிக்கற்றை தவிர.. வீடு மொத்தத்தையும் அடர் இருள் கவ்வியிருந்தது..!! உள்ளே விழுந்த வேகத்தில் இருவரும் எழுந்து இருட்டுக்குள் ஓடினர்..!! மூன்றடி உயரத்திற்கு குட்டையாக இருந்த, மங்கலான வெளிச்சம் படர்ந்த மண்சுவற்றில்.. ஆதிராவும், தாமிராவும் அவரவர் பெயர்களை ஆணி கொண்டு எழுத முனைந்தனர்..!! தாமிராவின் ஆணி மட்டும் 'தா' எழுதுவதற்குள் கையிலிருந்து நழுவி இருட்டுக்குள் விழுந்தது.. அவளது விருப்பப்படியே.. அவளுடைய திட்டப்படியே..!! தங்கை இருட்டுக்குள் ஆணியை தேடி முடிப்பதற்குள்.. தனது பெயரை சுவற்றில் பொறித்து முடித்தாள் ஆதிரா.. அந்த போட்டியில் வென்றாள்..!!

சிறிது நேரத்தில் குறிஞ்சி வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு..

"என்னடி இது..??" குழப்பமாக கேட்ட ஆதிராவிற்கு,

"கீழ ஆணி தேடினேன்ல.. அப்போ இது கைல மாட்டுச்சு.. மண்ணுல புதைச்சு வச்சிருந்தாங்க.. என்னன்னு பாக்கலாம்னு எடுத்துட்டு வந்துட்டேன்..!!" கைகள் விரித்து காட்டினாள் தாமிரா.

அந்த கைகளில்.. சில மாந்திரீக சமாச்சாரங்கள்.. யந்திரம் எனப்படுகிற துத்தநாகத்தாலான தகடு.. சிதைந்து பிரிந்திருந்த சிவப்புநிற பை.. அந்தப்பைக்குள் ஒரு சிறிய மண்சட்டி.. அந்த மண்சட்டிக்குள் வெண்துணி சுற்றிக்கொண்ட ஒரு மரப்பாவை.. ஆற்றுமணல்.. எரிகாட்டு சாம்பல்.. இன்னும்.. அழுகிப்போன ஏதோ உணவுப்பொருட்கள்.. காய்ந்துபோன சில மூலிகை செடிகள்..!! குமட்டிக்கொண்டு வந்தது ஆதிராவுக்கு.. வாந்தியே எடுத்துவிட்டாள்..!!

அதன்பிறகும் சில நினைவுகள் அவசர அவசரமாய் ஆதிராவின் மூளையில் பளிச்சிட்டன..!!

"உன் பொண்ணு என்ன வேலை பண்ணிருக்கான்னு கேளு மாப்ளை.. அந்த தகடு புதைச்சு குறிஞ்சியை அடக்கிவைக்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்ருப்போம் தெரியுமா..??" வீட்டுக்குள் நுழையாமல் வாசலில் நின்று கத்தினார் ஆதிராவின் மாமா மருதகிரி.. பூவள்ளியின் அண்ணன்..!!

"செய்வியா.. இனிமே செய்வியா..??" தணிகைநம்பி பெல்ட்டால் விளாச.. 

"ஆஆஆ.. ஆஆஆ..!!" என்று தரையில் புரண்டு அலறி துடித்தாள் தாமிரா..!!

"வேணாம்பா.. விட்ருங்கப்பா.. ப்ளீஸ்ப்பா.. பாவம்பா அவ..!!" பழி முழுதையும் தான் ஏற்றுக்கொண்டு அடிவாங்கிய தங்கைக்காக கண்ணீர் சிந்தினாள் ஆதிரா.

அன்றுஇரவே.. அவர்களுடைய வீட்டுக்கு அடித்தளத்தில் இருக்கிற அந்த சுரங்க அறையில்.. அப்பாவிடம் அடிவாங்கிவிட்டு தாமிரா எப்போதும் அடைந்துகொள்கிற அந்த ரகசிய அறையில்.. அத்தனை அடிகளை வாங்கிய வேதனையை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. அக்கா திருட்டுத்தனமாக எடுத்து வந்திருந்த சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்கியவாறே..

"அம்மா இன்னைக்கு எனக்கு புதுப்பேர் வச்சிருக்காங்கக்கா.. கால் மொளைச்ச குட்டிச்சாத்தான்.. நல்லாருக்குல..??" என்று கண்சிமிட்டி சிரித்தாள் தாமிரா.

பழைய நினைவுகளில் மூழ்கியவாறே ஆதிரா பயணித்துக் கொண்டிருக்கையில்..

"என்கூட வர்றது அவருக்கு பிடிக்கலையா..??" கதிர் திடீரென கேட்டதும், சட்டென நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"சேச்சே.. அப்படிலாம் இல்ல..!!"

"அப்புறம்.. எதுக்கு அப்படி முறைச்சுட்டு இருந்தாரு..??"

"அது வேற..!! ஆக்சுவலா.. இந்தமாதிரி ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர்ஸ் என்னை அட்வைஸ் பண்ணிருக்காங்க.. அதான்..!!"

"ஓ..!!"

"அதுமில்லாம.. சும்மாவே இவருக்கு முகில் அத்தானை பிடிக்காது.. இந்த விஷயத்தை பத்தி பேசப்போறேன்னதும் டென்ஷன் ஆய்ட்டாரு.. 'எதுக்கு தேவையில்லாத பிரச்சனை, அதுலாம் ஒன்னும் வேணாம்'னு சொன்னாரு..!! அதையும் மீறி உங்ககூட கெளம்பினதும் கொஞ்சம் கோவம்.. வேற ஒன்னுல்ல..!! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க.. நான் அவரை சமாளிச்சுக்குறேன்..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply




Users browsing this thread: pool2025, 16 Guest(s)