Posts: 1,321
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
(15-06-2020, 11:47 AM)Its me Wrote: உங்க கதைகளில் எதோ வசிய மருந்து வெச்சு இருக்கீங்க..
ஒவ்வொரு தடவையும் உங்க கதைய கொஞ்சம் கொஞ்சமா படிக்கக்கூடாது full ah முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரே மூச்சில் படிக்கணும்னு இருப்பேன்..
ஏன்னா உங்க கதைய கொஞ்சமா படிச்சா அந்த நாள் full ah அதே ஞாபகம் ah இருக்கு..எப்போ அப்டேட் போடுவீங்கன்னு அடிக்கடி xossipy வர வேண்டியதா இருக்கு..
ஆனா என்னமோ தெரியல உங்க பேர் போட்ட thread ah பாத்தாலே open பண்ணாம இருக்க முடியறது இல்ல..
காரணம் என்னன்னா உங்க கதைகள் எல்லாமே reality ah இருக்கு..அடுத்தது இதுதான் நடக்கும்னு நான் யூகிப்பேன்..maximum அதே தான் நடக்கும்..ஆனாலும் அது நடக்க கூடாதுனு நெனச்சுட்டு இருப்பேன்..
உங்க கதைய படிச்சா ஒரு படம் பாத்த பீலிங் வருது..அதுனாலதான் ஒரே மூச்சா full கதையையும் படிக்கணும்னு நெனப்பேன்..ஆனா முடியறது இல்ல..
anyways இப்போ xossipy இருக்கிற best authors la நீங்களும் ஒருத்தர்..வாழ்த்துக்கள்..உங்களது சேவையை எதிர்பார்த்து..
True bro really true
•
Posts: 753
Threads: 0
Likes Received: 310 in 256 posts
Likes Given: 2,296
Joined: Oct 2019
Reputation:
0
வித்தியாசமான கதை. நல்ல துவக்கம்.40 வயதைக் கடந்த கதாநாயகன். இன்னும் சுவாரஸ்யமாக கதை நகரும் என்று நம்புகிறேன்.
•
Posts: 203
Threads: 5
Likes Received: 593 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
(15-06-2020, 11:47 AM)Its me Wrote: உங்க கதைகளில் எதோ வசிய மருந்து வெச்சு இருக்கீங்க..
ஒவ்வொரு தடவையும் உங்க கதைய கொஞ்சம் கொஞ்சமா படிக்கக்கூடாது full ah முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரே மூச்சில் படிக்கணும்னு இருப்பேன்..
ஏன்னா உங்க கதைய கொஞ்சமா படிச்சா அந்த நாள் full ah அதே ஞாபகம் ah இருக்கு..எப்போ அப்டேட் போடுவீங்கன்னு அடிக்கடி xossipy வர வேண்டியதா இருக்கு..
ஆனா என்னமோ தெரியல உங்க பேர் போட்ட thread ah பாத்தாலே open பண்ணாம இருக்க முடியறது இல்ல..
காரணம் என்னன்னா உங்க கதைகள் எல்லாமே reality ah இருக்கு..அடுத்தது இதுதான் நடக்கும்னு நான் யூகிப்பேன்..maximum அதே தான் நடக்கும்..ஆனாலும் அது நடக்க கூடாதுனு நெனச்சுட்டு இருப்பேன்..
உங்க கதைய படிச்சா ஒரு படம் பாத்த பீலிங் வருது..அதுனாலதான் ஒரே மூச்சா full கதையையும் படிக்கணும்னு நெனப்பேன்..ஆனா முடியறது இல்ல..
anyways இப்போ xossipy இருக்கிற best authors la நீங்களும் ஒருத்தர்..வாழ்த்துக்கள்..உங்களது சேவையை எதிர்பார்த்து..
இது மிக அதிகப் படியான பாராட்டு. இருப்பினும் உங்கள் அன்புக்கு, வாழ்த்துக்கு நன்றி.
நான் இப்போது தான் எழுதப் பழகும் ஒரு நபர். இந்த வாழ்த்துகள் நீண்ட நாட்களாக நிறைய கதைகள் எழுதிய நபர்களுக்கு தர வேண்டியது. குறைந்தது இன்னும் ஒரு பத்து கதைகளாவது படிக்கும்படி எழுதினால் தான் எனக்கு நானும் ஒரு எழுத்தாளன் என்னும் அடிப்படை தகுதியே வரும். அதைப் பெற உழைக்கும் ஊக்கம் தரும் பாராட்டு இது. நன்றிகள் பல.
Posts: 203
Threads: 5
Likes Received: 593 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
4
அவள் சுய நினைவின்றி படுத்து இருந்தாள், அவளை இரண்டு வருடம் கழித்து இப்போது தான் பார்க்கிறேன், விபத்தாலோ, அல்லது வேறு எதனாலோ முற்றிலும் தளர்ந்து இருந்தாள். நிறைய மாறி இருந்தாள், நான் அவளை எப்போதும் சிறு பெண்ணாகவே எண்ணி இருந்தேன், அன்று ஸ்டேஷனில் அவள் பேசிய விதம் புதிது என்றால் இன்று அவள் ஆளே புதியவளாக, வேறு ஒரு பெண்ணாக தெரிந்தாள். காலமும் அனுபவங்களும் ஆளை மாற்றும் என்பது உண்மை தான்.
ஒரு காலில் மட்டும் கட்டு முட்டி வரை, அதே போல ஒரு கையில் மட்டும் கட்டு, சில சிராய்ப்புகள், வேறு எதுவும் காயம் தெரியவில்லை. எழுந்து வெளியே அமர்ந்து இருந்தவனிடம் நன்றி சொன்னேன்.
"பரவால்ல சார், இதுல என்ன இருக்கு, actually நான் கொஞ்சம் பயந்துட்டேன், அந்த பொண்ணு மயக்கத்தில் இருக்கு, போன் பண்ணினா யாரும் எடுக்கவே இல்லை, எடுத்தவங்க கேட்டுட்டு கட் பண்றாங்க, என்ன பண்றது ஒன்னும் புரியல" என்றவன் தொடர்ந்து "நீங்க என்ன சார் வேணும்"
"நான் அந்த பொண்ணுக்கு uncle"
"ஆனா சார் அந்த பொண்ணு போன் ல அப்பா, அம்மா நம்பர் க்கு எல்லாம் பண்ணினேன் சார், அப்பா எடுக்கலை, அம்மா எடுத்து இந்த மாதிரி சொல்லும் போது கட் பண்ணிட்டாங்க"
"உம், சின்ன ஃபேமிலி பிராப்ளம், சரி எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?" பேச்சை மாற்றினேன்.
"கார்ல அடி பட்டுடுச்சு, லேசான காயம் தான், ஆனா இன்னொன்னு சார்?" என தயங்கினான்.
"அந்த பொண்ணு அடி பட்டது என் வண்டி ல தான். என் தப்பு ஏதும் இல்லை, ஆக்ஸிடென்ட் ஆன உடனே கொண்டு வந்து சேர்த்துட்டென், இங்க ஹாஸ்பிடல் ல தான் தெரியும், பொண்ணு ஆக்சிடென்ட் ஆரதுக்கு முன்ன தூக்க மாத்திரை எடுத்து இருக்கு "
"என்னது" அதிர்ந்து போய் கேட்டேன்.
"சார், பதட்டப் படாதீங்க, இப்ப எல்லாம் fine. அந்த பொண்ணு எதோ சிக்கல்ல கஷ்டத்துல இருக்கு, கொஞ்சம் பார்த்துக்கங்க சார்"
நான் இன்னும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவன் திரும்ப சொன்னான்.
"சார், அவங்க அப்பா அம்மாக்கு தகவல் சொல்லுங்க சார், அவங்க வந்தா அந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும், பாவம் இந்த வயசுல தற்கொலை எண்ணம் வரது எவ்ளோ கொடுமை சார்"
"நான் பார்த்துக்கறேன் பா, ரொம்ப தேங்க்ஸ் உன் உதவிக்கு"
திடீர் என யோசனை வர கேட்டேன், "இல்லை அவ சூசைடு டிரை பண்ணது ஏதும் கேஸ்" என திணறினேன்.
"சார், அது ஏதும் பிரச்சினை இல்லை, எனக்கு தெரிஞ்ச கிளினிக் தான் இது. இது மைனர் ஆக்சிடென்ட் கேஸ் மட்டும் தான் official ஆ" என்றான்.
"ரொம்ப தேங்க்ஸ் பா, உண்மையாவே நீ நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கே" நெகிழ்ந்து சொன்னேன்.
"இதுல என்ன சார் இருக்கு, பார்த்துக்குங்க சார், நான் நாளைக்கு பார்க்கிறேன்" என கிளம்பினான்.
என்ன நினைத்தானோ, "சார், வாங்க, கீழே டாக்டரை ஒரு தரம் பார்த்துடலாம், உங்களுக்கும் ஒரு தெளிவா இருக்கும்"
கீழே போனோம், ஒரு பத்து நிமிடம் காத்திருந்து டாக்டரை பார்த்தோம். டாக்டர் அவனுக்கு தெரிந்தவர் போல சிரித்த படி தலை அசைத்தார்.
"சார், இவரு அந்த ஆக்சிடென்ட் ஆன பொண்ணுக்கு uncle. உங்களை பார்க்க கூட்டி வந்தேன்"
"அடி ஏதும் பலமா இல்லை, கொஞ்சம் செக் எல்லாம் பண்ணிட்டு நாளைக்கு சாயந்திரம் அல்லது ஒரு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"
"பொண்ணு மாத்திரை சாப்பிட்டது சொன்னாரா?" டாக்டர் என்னைப் பார்த்து கேட்டார்.
நான் தலை அசைத்தேன். "பொண்ணு என்ன பிரச்சினை தெரியல, லக்கிலி ரொம்ப எடுக்கல, நீங்க அவங்க பேரன்ட்ஸ் க்கு தகவல் சொல்லுங்க, நான் கேஸ் ஹிஸ்டரி ல ஏதும் இதைப் பத்தி எழுதல, நீங்க விரும்பினால் நான் டாக்டர் ரெஃபர் பண்றேன் கவுன்சிலிங் பண்ண."
"உம், நான் பொண்ணு கிட்ட பேசிப் பார்த்திட்டு சொல்றேன் சார்" என்றேன்.
"சரி, காலைல பார்க்கலாம், ரூம்ல கூட ஒருத்தர் தங்கலாம், காலைல கொஞ்சம் எக்ஸ்ரே பாத்துட்டு சாயந்திரம் கூட வேணும்னா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம், இல்லை நாளன்னிக்கு பகல்ல பண்ணிடலாம் சார்"
"ஓகே சார்"
அவனும் நாளை வருவதாக சொல்லி கிளம்பினான். அவனின் போன் நம்பர் கொடுத்து சென்றான்.
"ஏதாச்சும் வேணும்னா கீழே கால் பண்ணுங்க, ரூம்ல போன் கீழே எல்லா நம்பரும் இருக்கு, நைட் ஃபுல்லா அட்டெண்ட் பண்ணுவாங்க, அவங்களே செக் ரெகுலரா டைம் க்கு பண்ணுவாங்க"
ரூமில் சென்று அமர்ந்து அவளையே பார்த்தேன். சுமதியின் சாயல் அப்படியே இவளுக்கு உண்டு, அவளை விட கொஞ்சம் உயரம், நிறமும் கூட. ஏன் இந்த வயதில் தற்கொலை எண்ணம்?? 20 வயதில் ஓடிப் போய் கல்யாணம் செய்ய தைரியம் கொண்ட பெண், அத்தனை வருட குடும்ப உறவுகளை உதற துணிச்சல் கொண்ட பெண், என்ன ஆயிற்று இந்த 2 வருடங்களில்??
அப்பா, அம்மா இன்னும் கோபத்தில் இருக்கிறார்கள் சரி, அவன் எங்கே?? இவளைத் திருமணம் செய்தவன்?? அவன் பெயர் கூட தெரிந்து கொள்ள வில்லையே?? இங்கே திருப்பூரில் என்ன செய்கிறாள் இவள்??
தூங் கும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன், அப்படியே தூங்கிப் போனேன். நடுவில் நர்ஸ் வழக்கமாக வந்து செக் செய்து போனது எல்லாம் கண் மூடி இருந்தும் உணர்ந்தேன்.
காலையில் ஒரு ஐந்தரை அளவில் எழுந்து முகம் கழுவி வாயைக் கொப்பளித்து பின் கீழே வாசல் அருகேயே இருந்த ஹோட்டலில் ஒரு காபி, உண்மையாகவே அற்புதமாக இருந்தது. சாலை அமைதியாக இருக்க மேலே சென்றேன்.
அவள் விழித்து இருந்தாள், அப்போது தான் விழித்தாள் போல, எங்கே எப்படி என்னும் குழப்பம் இருந்தது, நான் உள்ளே நுழைய
ஆச்சர்யமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைத்து எழ முயற்சித்தாள். முடிய வில்லை.
"வாங்க, எப்போ வந்தீங்க?" என கேட்டாள், அன்று ஸ்டேஷனிலும் கூட என்னைக் கண்டு அவள் கேட்ட முதல் கேள்வி.
"நான் நேத்து நைட்டே இங்க வந்துட்டேன்" லேசாக சிரித்தேன்.
"சாரி, என்னால எல்லாருக்கும் கஷ்டம், உங்களுக்கும்"
"அது விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என்னைப் பார்த்தாள், பின் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.
Posts: 1,321
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Super bro nice update continue bro
•
Posts: 195
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
16-06-2020, 06:17 PM
(This post was last modified: 16-06-2020, 06:18 PM by Jhonsena. Edited 1 time in total. Edited 1 time in total.)
என்ன நண்பா கதையில் வெள்ளோடு மற்றும் sipcot விஜயமங்கலத்தை சேர்க்க வில்லையே?
தெற்கும் வடக்கும் கதையில் சேர்த்து ஆயிற்று கிழக்கும் மேற்கும் எங்கே?
•
Posts: 12,629
Threads: 1
Likes Received: 4,744 in 4,268 posts
Likes Given: 13,454
Joined: May 2019
Reputation:
27
கதை மிகவும் அருமையாக எழுதி வருகிறார்கள் நன்றி நண்பா
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 328 in 301 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
•
Posts: 12,629
Threads: 1
Likes Received: 4,744 in 4,268 posts
Likes Given: 13,454
Joined: May 2019
Reputation:
27
அருமையான பதிவு நண்பா மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா
•
Posts: 294
Threads: 0
Likes Received: 115 in 98 posts
Likes Given: 115
Joined: Sep 2019
Reputation:
-5
Pethu valarthu padikavacha petrora kevala paduthuttu aripeduthu odi pona. Avan nalla othuttu road la vittutan pola,
•
Posts: 294
Threads: 0
Likes Received: 115 in 98 posts
Likes Given: 115
Joined: Sep 2019
Reputation:
-5
Ivan poyi anbu seluthuren aaruthal solren nu avala vappatti aakikamal iruntha acharyam.
•
Posts: 275
Threads: 0
Likes Received: 34 in 30 posts
Likes Given: 1
Joined: Feb 2019
Reputation:
2
•
Posts: 1,321
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Nathan bro waiting for today update please
•
Posts: 2,024
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 728
Threads: 0
Likes Received: 291 in 255 posts
Likes Given: 394
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 12,629
Threads: 1
Likes Received: 4,744 in 4,268 posts
Likes Given: 13,454
Joined: May 2019
Reputation:
27
18-06-2020, 01:44 PM
(This post was last modified: 18-06-2020, 01:45 PM by omprakash_71. Edited 1 time in total. Edited 1 time in total.)
Please update boss
•
Posts: 722
Threads: 0
Likes Received: 239 in 212 posts
Likes Given: 376
Joined: Oct 2019
Reputation:
1
•
Posts: 255
Threads: 0
Likes Received: 94 in 80 posts
Likes Given: 105
Joined: Oct 2019
Reputation:
1
•
Posts: 203
Threads: 5
Likes Received: 593 in 152 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
13
5
"அது விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என்னைப் பார்த்தாள், பின் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.
"அழாதே, சொல்லு, என்ன ஆச்சு?"
என்னை உற்றுநோக்கினாள், பின் "இல்ல, சின்ன அடி தான், இப்ப வலியே ரொம்ப இல்ல, நாளைக்கே நடப்பென் பாருங்க"
"நான் ஆக்சிடென்ட் பத்தி கேக்கல"
அவள் மாத்திரை எடுத்தது எனக்கு தெரியும் என அவள் உணர்ந்தாள், சங்கடமான சிரிப்புடன் சொன்னாள்.
"இல்ல, திடீர்னு கொஞ்ச நாளாவே எதுக்கு இருக்கோம்னு தோண ஆரம்பிச்சுது, ப்ரெண்ட் அவ ஒரு வாரமா ஊருல இல்லையா, தனியா தினம் டிப்ரசனா இருந்துது, நாலு நாள் முன்னேயே வாங்கினேன், சாப்பிட தைரியம் வரல, நேத்து சாயந்திரம் திடீர்னு தோணி ச்சு, ஆனா மாத்திரை போட்ட பத்து நிமிசத்தில் இது பைத்தியக் கார தனம்னு புரிஞ்சுது, உண்மையாவே நான் நேத்து ஹாஸ்பிடல் தான் வந்துட்டு இருந்தேன், அப்போ தான் அடிபட்டது"
"மாத்திரை போடறதுக்கு முன்ன அப்பா அம்மா மத்தவங்க யார் பத்தியும் ஞாபகம் வரலையா, யார் கிட்டயாவது மனசு விட்டு பேசி இருக்கலாமே?"
"எனக்கு தான் யாருமே இல்லையே" என விரக்தியாக சொல்லி சிரித்தாள், அந்த சிரிப்பு என்னை உள்ளுக்குள் மிகவும் பாதித்தது.
அவளே தொடர்ந்தாள்.
"அம்மா கிட்ட பேசினேன் நேத்து, ஒரு நாலஞ்சு பேரு கிட்ட கடைசியாக பேசலாம் அப்படி நினைச்சேன், உங்க கிட்ட கூட ஒரு தரம் பேசலாம் அப்படி நினைச்சேன், அம்மா கிட்ட பேசினதுல மனசு நெரஞ்சிடுச்சு, வேற யாரு கிட்டயும் பேசல" என்றாள் விரக்தியுடன்.
"அம்மா திட்டினாளா?"
"இல்ல, இல்ல, திட்டலாம் இல்ல. இன்னுமா நீ செத்து தொலையல அப்படி தான் கேட்டாங்க" புன்னகைத்தாள்.
"அவங்கள விடு, என்ன ஆச்சு உன் கல்யாணம்?? எங்க அவன்?"
"போயிட்டான், நான் ஒன்றரை வர்சமா இங்க திருப்பூர்ல வேலை பார்த்துட்டே ப்ரெண்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"
"ஏன்?"
"என்ன சொல்றது, அன்னைக்கு ஸ்டேஷன்ல இருந்து பெங்களூர் அவன் ப்ரெண்ட் வீட்டுக்கு போயி ஒரு மாசம் இருந்தோம், அப்பவே கொஞ்சம் பிரச்சினை, நம்ம ஆளுங்க ஊருல அவன் வீட்டை, அப்பா அம்மா எல்லாம் அடிச்சு நொருக்கிட்டாங்க, அது கொஞ்சம் பிரச்சினை போலீஸ் கேஸ் எல்லாம் ஊர்ல ஆச்சு, இவன் டிப்ளமோ முடிச்சவன் தான், வேலை, சம்பளம், வீடு எல்லாம் சிரமமா இருந்துச்சு, லேசா குடி பழக்கம் கூட உண்டு"
அவள் நிறுத்தி கொஞ்சம் ஓய்வெடுத்து சொன்னாள்.
"அவன் ப்ரெண்ட்ஸ் அவங்க பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே கொஞ்சம் சரியா இல்லை, இவன் கிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்க லை, அடிக்கடி சண்டை போட்டோம், அப்புறம் திருப்பூரில் வேலைக்கு வந்தோம், தனியா ஒரு மூணு நாலு மாசம் இருந்தோம், இங்க சண்டை தினம் தினம் ஆச்சு, குடியும் அதிகம், ஒரு நாள் சண்டை போது நான் எதோ சொல்ல உன் ஜாதித் திமிரை காட்டுறியா அப்படி கேட்டான், என்னால அதை ஏத்துக்கவே முடில, அது இதுன்னு நிறைய பேசி பெரிய சண்டை ஆச்சு, தினம் தினம் பெரிய சண்டை, அடிச்சு கூட இருக்கான்"
அவள் நிறுத்தினாள், மேலே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், கன்னத்தில் கண்ணீர் வழிய அதை துடைக்காமல் அவளும், என்ன செய்வது என்று புரியாமல் நானும் இருந்தோம்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நின்றேன், அவளே தொடர்ந்தாள்.
"அப்புறம் ஒரு நாள் ப்ரெண்ட்ஸ் பார்க்க பெங்களூர் போனான், அப்புறம் வரவே இல்ல. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணி சொன்னான் "நமக்கு இனி செட் ஆவாது, உன் வழிய நீ பாரு, என் வழிய நான் பாக்குறேன்" அவ்ளோ தான், அப்புறம் நான் இங்க தனியா இருந்தேன், அப்புறம் ப்ரெண்ட் ஒருத்தி கூட இப்போ"
"நடுவுல கொஞ்சம் வீட்ல அப்பா அம்மா கூட பேச முயற்சி பண்ணினேன், முடியல, அம்மா ரொம்ப அசிங்கமா திட்டினா. அவ்ளோ ஏன் வெக்கம் விட்டு அவன் கூடவும் திரும்ப பேசினேன், ஏதும் சரியா வரல"
"சரி, ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்?"
அவள் தயங்கினாள், "உங்களுக்கு புரியும், தனியா ஒரு வயசுப் பொண்ணு, அதும் கல்யாணம் ஆகி புருசன் விட்டு பிரிந்து இருக்க பொண்ணுக்கு என்ன என்ன பிரச்சினை வரும்னு"
"உம்"
அவள் நிறைய பேசினாள், புலம்பினாள், சில சமயம் அழுகை வர பேச்சை மாற்றினாள், அழாமல் இருக்க முடிந்த வரை முயற்சி செய்தாள். அவளின் துயரங்கள் புரிய, மனம் வலித்தது. 23 வயதுக்குள் இத்தனை அனுபவங்கள், வலிகள், ரணங்கள், தற்கொலைக்கு தூண்டும் அளவு. எழுந்து அவள் அருகில் சென்றேன். கட்டிலில் அமர்ந்தவாறு இருந்த அவள் அருகே நான் நிற்க என் மீது சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள், அவளைத் தடுக்காமல் அழ விட்டேன்.
எனக்கு நன்கு நினைவு இருக்கிறது, என் டிப்ளமோ நாட்களில் இவள் குழந்தையாக என் தோள் மீது இருக்க நான் கோவில் அருகே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பேன், சுமதி வேலையாக இருக்கும் போது எல்லாம் இவள் என்னோடு தான் இருப்பாள். நான் தூக்கி வளர்த்தவள் இப்படி குமுறி அழுகையில் என்னால் தாள வில்லை. அவள் ஒரு ஐந்து நிமிடம் நன்கு சோகம் தீர அழுது இருந்தாள்.அவளின் தலையை வருடியவாறு சொன்னேன்.
"சிட்டு, இனி எதுக்கும் வருத்தப் பட கூடாது, எவ்ளோ அழனும்னாலும் இன்னைக்கே அழுதுடு, நான் சுமதி கிட்ட பேசுரன், நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும், நீ எதுக்கும் கவலைப் படாதே"
காலை உணவு முடிந்து, அவளுக்கு எக்ஸ்ரே இன்னும் சில செக் செய்ய அழைத்து சென்ற கேப்பில் சுமதிக்கு போன் செய்தேன்.
"சுந்தர், எப்படி இருக்கே, ரொம்ப நாள் ஆச்சேப்பா நீ போன் பண்ணி, எல்லாம் நல்லா இருக்காங்களா?"
"நல்லா இருக்கேன், சிட்டுக்கு ஆக்சிடென்ட் அப்படி போன் வந்தது"
நான் இங்கே திருப்பூரில் அவள் அருகே ஹாஸ்பிடல் இருப்பதை சொல்ல வில்லை.
"சிட்டா, அப்படி யாரும் எனக்கு தெரியாது"
"ஏய், என்னக்கா, அவ உன் பொண்ணுக்கா"
"சுந்தர், நிஜமா சொல்றேன், எனக்கு ஒரே புள்ளை தான், அவ இங்க என் கூட இருக்கா, இன்னொருத்தி இருந்தா, இப்போ அவ செத்துப் போயிட்டா, அவ்ளோ தான், நீ அவள பத்தி ஏதும் என் கிட்ட பேசாதே, தயவு செஞ்சு"
மேலே எதுவும் பேச வில்லை நான். அவள் மனைவி குழந்தைகள் பற்றி கேட்டது எல்லாம் இயந்திரம் போல பதில் சொல்லி வைத்தேன்.
டெஸ்ட் முடிந்து வந்தவளிடம் வேலை, தங்குமிடம், உடன் இருக்கும் தோழி எல்லாம் கேட்டேன். இங்கு திருப்பூரில் உடன் வசிக்கும் தோழி பிகாம் முடித்த பெண், ஒரே கம்பனி, இப்போது இருக்கும் வேலை சம்பளம் பிடிக்காமல் வேறு ஒரு இன்டர்வியூ சென்னை சென்று இருக்கிறாள். அவளுக்கு பெரிதாக ஒன்றும் இங்கு இல்லை, எல்லாமே மிக சுமாராக அல்லது அதற்கும் கீழே.
மாலையே டிஸ்சார்ஜ். முடிந்து அவளின் வீட்டுக்கு சென்று அவளின் டிரஸ் மட்டும் சில நாளுக்கு எடுத்து கிளம்பினோம். அவள் மிக தயங்கினாள், எதுக்கு உங்களுக்கு சிரமம் என. "உன் ப்ரெண்ட் வர வரைக்கும் தனியா இருக்க வேண்டாம், என் கூட வா" விடா பிடியாக அழைத்து சென்றேன்.
Posts: 2,831
Threads: 1
Likes Received: 328 in 301 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Cool update bro. Good going continue
•
|