| 
		
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகி வந்த 'வர்மா' திரைப்படத்தை கைவிடுவதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 ![[Image: 201902080411279223_Arjun-Reddy-remake-to...SECVPF.gif]](https://img.thanthitv.com/Images/Article/201902080411279223_Arjun-Reddy-remake-to-be-reshot-entirely-with-new-team_SECVPF.gif) தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம், பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் தயாராகி வந்தது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாவதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்று, டிரெய்லரும் வெளியானது.  விரைவில் படம் வெளியாகும் என கருதப்பட்ட நிலையில், எதிர்பாராத திருப்பமாக, 'வர்மா' படம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறி, இந்த படத்தை கைவிடுவதாக E4 பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், துருவ்-வை கொண்டே மீண்டும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மறு ஆக்கத்தை வேறு இயக்குநரை கொண்டு உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தேசிய  விருது பெற்ற ஒரு இயக்குனரின் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		அஜித், விஜய்க்கு என்ன மாதிரி படம் கொடுப்பீர்கள் - கார்த்திக் சுப்புராஜ் பதில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய மூன்று படங்களும் திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவை. சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
![[Image: karthik-subburaj.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/459x306/jpg/2018/12/karthik-subburaj.jpg) இந்தநிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள கார்த்திக் சுப்புராஜிடம், விஜய்யை வைத்து படம் இயக்கினால் என்ன ஜானரில் எடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் மாஸ் கேங்க்ஸ்டர் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். 
 அதேபோல் நடிகர் அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என்று கூறிய அவர் கமல்ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பதிலை சமூகவலைதளங்களில் வீடியோவாக பார்த்த அஜித் ரசிகர்கள், விஜய்க்கு கேங்க்ஸ்டர் கதை அஜித்துக்கு மட்டும் காமெடி படமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: oviya-750x506.jpg]](https://images.tamil.indianexpress.com/uploads/2018/05/oviya-750x506.jpg) 90 எம்.எல் டீசர் சர்ச்சை : ஆர்மி தலைவி ஓவியா கொடுத்த பதில்... ஷாக் ஆன நெட்டிசன்கள் 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		பிரபல பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா சமீபத்தில் வெளியான “90 எம்.எல்” டீசர் சர்ச்சைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் களவாணி, கலகலப்பு போன்ற சில கவனக்கக்கூடிய படங்களில் நடித்தவர் ஓவியா. பின் வரும் நாட்களில் பெரிதாக மக்களை கவரும் கதாபாத்திரங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் மூலம் லட்சக்கணக்கானோர் மனதை வென்றவர். இவருக்காக ஒரு தனி ஆர்மி, ரசிகர்கள் கூட்டம் என அனைத்தையும் சம்பாதித்தார்.
நடிகை ஓவியா பதில்
பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச வசனங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள் என நிறைந்துள்ளது ட்ரெய்லர். இதனையடுத்து இதற்கு சமூக வலைதளங்களில் பலவாறு விமர்சனங்கள் எழுந்தது.
90ML Trailer : ஓவியா படத்திற்கு கடும் எதிர்ப்பு… சர்ச்சையில் சிக்கியுள்ள 90 எம்.எல் படம்
அனிதா உதீப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். ஆபாசம் நிறைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் குறித்தான விமர்சனத்துக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
[/url]
 ![[Image: BvKyetuR?format=jpg&name=280x280]](https://pbs.twimg.com/card_img/1093853908005351424/BvKyetuR?format=jpg&name=280x280) ![[Image: aQltRN9T_normal.jpg]](https://pbs.twimg.com/profile_images/1013436760859299847/aQltRN9T_normal.jpg) YouTube @YouTube 
 Quote:![[Image: 2mHfhUP__normal.jpg]](https://pbs.twimg.com/profile_images/1085874237326340098/2mHfhUP__normal.jpg) Oviyaa
 
 ✔@OviyaaSweetz
 
 
 
 
 
 Hey guys[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44b.png[/img]
 pls dnt judge a seed before  tasting the fruit[img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f446.png[/img]
 Wait for the main film #90ml which is Censored[img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f91e.png[/img]
 Now enjoy this adult #90MLTrailer:https://youtu.be/Jl14barRz84 @Anitaudeep#STR
 
 11.9K
 12:35 - 9 Feb 2019
 
[color][size][font]
2,371 people are talking about this 
[url=https://twitter.com/OviyaaSweetz/status/1094130040487370752]
Twitter Ads information and privacy 
[/font][/size][/color]
அதில், “பழத்தை ருசிப்பதற்கு முன்பாகவே விதையை பற்றி தீர்மானித்துவிடாதிர்கள். சென்சார் செய்யப்பட்ட முழு படத்தை பொறுத்திருந்து பாருங்கள்” என இரட்டை அர்த்தத்தில் டுவீட் செய்துள்ளார. இதற்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்...." - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்
ஈரோட்டில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள்.
![[Image: 149593_thumb.jpg]](https://image.vikatan.com/cinema/2019/02/images/1088X550/149593_thumb.jpg)  ``என் வயதினருக்குத் தெரியும், தமிழில் உள்ள இசைப்பிரியர்கள் வடக்கே நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணைபுரத்திலிருந்து  ஆர்மோனியத்துடன் ஒரு புயல் வந்து, `அன்னக்கிளி'யில் அடித்தது. இளையராஜாவின் இசையில் நடனம் ஆடியவர்கள், பாடலைப் பாடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரது இசைக் கச்சேரியில் வாத்தியம் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகன் நான்தான்!" - இவை ஈரோட்டில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் `எப்போதும் ராஜா' நிகழ்ச்சியில் நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் பேசியவை. பல கோடி மக்களின் நெஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு குரல், பல இசையமைப்பாளர்களுக்கு எழுச்சியாக இருக்கும் ஒரு குரல், அதுதான் இளையராஜாவின் குரல். வெகு நாள்களாக ரேடியோவில், தொலைக்காட்சியில் மட்டுமே இளையராஜாவை ரசித்து வந்த ஈரோடு மாநகர மக்கள், சமீபத்தில் நடைபெற்ற `எப்போதும் ராஜா' இன்னிசை நிகழ்ச்சியில் அவரை நேரில் கண்டு இசை மயக்கத்தில் ஆழ்ந்தனர். ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்த இந்த இசைநிகழ்ச்சி இரவு 7 மணியளவில் ராஜாவின் `ஜனனி ஜனனி’ பாடலுடன் தொடங்கியது. தொடக்கத்திலேயே ஜனனத்தைக் கொள்ளை கொண்ட பின்பு, பாடல் முடிந்தவுடன் பேசிய இளையராஜா, ``ஒருமுறை ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தபோது என் காலடித்தடம் படாத பட்டி தொட்டி இருக்காது. அப்படியாக உங்கள் ஊரிலும் இசை நிகழ்ச்சியை நடத்துவேன் என்று கூறினேன். அன்று உங்களிடம் கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றியுள்ளேன்" என்றார். விழாவின் ஹைலைட்ஸ் இதோ... 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: DSC09282_16119.jpg]](https://image.vikatan.com/cinema/2019/02/13/images/DSC09282_16119.jpg)  * ஈரோட்டில் முதல்முறையாக நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அதுவே ஈரோட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. * மாலை தொடங்கவிருக்கும் நிகழ்விற்கு மதியம் முதலே மக்களின் கூட்டம் அரங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது. அரங்கம் நிறைந்த பின்பும் அரங்கத்தின் வெளியே இசைஞானியைக் காண்பதற்காகக் கூட்டம் அலைமோதியது.* இரவு 7 மணியளவில் ராஜா மேடையேறியபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. * ராஜாவின் `ஜனனி ஜனனி' பாடலைத் தொடர்ந்து, `நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற `ஓம் சிவோஹம்' பாடலைப் பாடினாா், ஹரிசரண். பிறகு மேடையேறினார், பாடகி சித்ரா. `சித்ரா உலகமெல்லாம் சுத்தறா' என ராஜா கிண்டலடித்தார். சித்ரா, `மாலையில் யாரோ' பாடலைப் பாடினார். * இவர்களைத் தொடர்ந்து மனோ, மதுபாலகிருஷ்ணன், விபாவரி, இளையராஜாவின் மகள் பவதாரணி, முகேஷ், உஷா உதூப், அனிதா ஆகியோர் இளையராஜாவின் பாடல்களைப் பாடினர். * மனோவும், மதுபாலகிருஷ்ணனும் இணைந்து பாடிய `காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' பாடல்தான், நிகழ்ச்சியின் டாப் ஸ்கோரிங். * நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் பாடகி சித்ராவிடம், `நீ எப்போ என்கிட்ட வந்த சித்ரா?' என்று ராஜா கேட்க, `1984-ல் வந்தேன் சார்' என்றார். தொடர்ந்து, `முதலில் எந்தப் பாட்டுமா என்கிட்ட பாடின?' என்று கேட்டார். முதலில் பாடிய `எந்த செளக்ய மனிமே' என்ற மலையாளப் பாடலைப் பாடியவர், அதற்குப் பிறகு `பூஜைக்கேற்ற பூ' பாடலையும் பாடினார்.  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		* `மாயா பஜார்' படத்தில் வாத்தியங்கள் ஏதுமின்றி உருவாக்கப்பட்ட ட்ராக்கை இசைக்குழு பாடியது. * நிகழ்வு முழுவதும் ராஜாவின் டியூன்களை இசைச்சுவை குறையாமல் வாசித்த ஹங்கேரியைச் சேர்ந்த லாஸ்லோ கோவாஜின் இசைக்குழுவினர், ஒன்றரை மாதங்களுக்கு மேல் இளையராஜாவின் 150-க்கும் மேற்பட்ட பாடல்களை வாசித்துப் பயிற்சி பெற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். * நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரனின் மகள் மதுவந்தி பேசுகையில், ``எனது அப்பா இளையராஜா அங்கிளோட 45 வருட கால நண்பர். நான், எனது மகன் என மூன்று தலைமுறை ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே ஒரு இசையமைப்பாளர், ராஜா அங்கிள் மட்டும்தான்" என்று கூறி, அவருக்கு மூகாம்பிகை புகைப்படத்தையும், ஏலக்காயால் செய்யப்பட்ட செங்கோலையும் பரிசாகக் கொடுத்தார்.  தனது இசையின் மூலம் ஒவ்வொருவரின் நெஞ்சங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் ராஜா, அப்போதும் இப்போதும் எப்போதும் ராஜாதான்!  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.!
![[Image: Pithamagan-Secrets.jpg?resize=696%2C545&ssl=1]](https://i0.wp.com/kalakkalcinema.com/wp-content/uploads/2019/02/Pithamagan-Secrets.jpg?resize=696%2C545&ssl=1)  தமிழ் சினிமாவின் இன்று முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம். இன்று வரை இவர்களுக்கு இடையே ஏதோவொரு மனக்கசப்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் பிதாமகன். இந்த படத்தில் நடித்த போது விக்ரம் சூர்யாவை விட அதிகமாக சம்பளம் வேண்டும் என பாலாவிடம் கேட்டுள்ளார். இதனால் பாலா விக்ரமையே தூக்கி விட்டு வேறொரு பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த நடிகருக்கு அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. இதனால் தயாரிப்பாளர் சூர்யா, விக்ரம் நடிப்பதாக இருந்தால் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் இல்லையென்றால் வேறொரு தயாரிப்பாளரை பார்த்து கொள்ளுங்கள் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார். இதனால் பாலா வேறு வழியில்லாமல் தான் மீண்டும் விக்ரமை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		கீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி கோபம்
![[Image: NTLRG_20190214154037810039.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190214154037810039.jpg) சினிமா படங்களுக்கு விளம்பரம் மிக முக்கியமானது தான், ஆனால், சமீபகாலமாக தமிழ் சினிமாவிற்கு எடுக்கப்பட்டு வரும் சில படங்கள் மிகவும் கீழ்த்தரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்தேறி இருக்கிறது. 
 சென்னை மாநகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதிலம் இடம் பெற்ற வாசகம் இது தான் "----- போட பொண்ணு வேணும்". பள்ளி, கல்லூரி அருகேயும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரை பார்த்து பொதுமக்கள் பலரும் முகம் சுழித்தனர், கோபமானார்கள்.
 
 அது என்ன போஸ்டர் என்று விசாரித்தபோது ஒரு படத்திற்கான விளம்பரம் என தெரியவந்தது. சின்னத்திரை புகழ் அசார், "கடல போட ஒரு பெண்ணு வேணும்" என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று(பி., 14) வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
 தலைப்பே மோசமாக இருக்கும் ஒரு படத்திற்கான விளம்பரமாக தான் இப்படி ஒரு கீழ்த்தரமான விளம்பரத்தை நகர் முழுதும் ஒட்டியிருக்கின்றனர். இரட்டை அர்த்தம் தொணிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்ட அந்த பட பர்ஸ்ட் லுக்கை, விஜய் சேதுபதி வெளியிட போகிறார் என்றதும், அவருக்கும் கண்டனங்கள் எழுந்தன.
 
 பெண்களை கொச்சையாக சித்தரிக்கும் இது போன்று போஸ்டர் ஒட்டப்பட்ட படத்தை விஜய் சேதுபதி விளம்பரம் செய்யலாமா, தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கலாமா, இது போல ஒரு தரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டால், அது அவருக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல... என சமூக வலைதளங்களில் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.
 
 இந்நிலையில் இப்படி ஒரு தரம் தாழ்ந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது என தெரிந்ததும், கோபமான விஜய் சேதுபதி, பட டீசரை வெளியிட மறுத்துவிட்டார். விஜய் சேதுபதி போன்று மற்ற நடிகர்களும் இதுபோன்ற படங்களை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
 அதேசமயம், இதுமாதிரியான தரம் தாழ்ந்த விளம்பரம் தேடும் நபர்கள் மீதும், போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
 
 பெண்களை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டிருப்பது தமிழ் திரையுலகை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இது நல்லதா... சீரழிவா...? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		வர்மா படத்தை மறுபடியும் முதலில் இருந்து இயக்கப் போவது யார் தெரியுமா?
சென்னை: வர்மா படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தை த்ருவ் விக்ரம், மேகா சவுத்ரி உள்ளிட்டோரை வைத்து இயக்கி முடித்தார் பாலா. ஆனால் படம் நன்றாக வரவில்லை என்று கூறி வேறு ஒரு இயக்குனரை வைத்து புதிதாக எடுக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
புதிதாக எடுக்கப்படும் படத்தில் த்ருவ் விக்ரம் இருக்கிறார். ஆனால் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி இன்னும் தெரியவில்லை.
![[Image: dhruvvikram021-1550148217.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/02/dhruvvikram021-1550148217.jpg)  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		த்ருவ்
வர்மா படத்தை காதல் ஸ்பெஷலிஸ்டான கவுதம் மேனன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டியின் உதவியாளரான கிரிசய்யா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![[Image: varma323-1550148193.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/02/varma323-1550148193.jpg)   கதை
அர்ஜுன் ரெட்டி படத்தில் வேலை செய்துள்ளதால் கிரிசய்யா வர்மா படத்தை கதை மாறாமல் எடுப்பார் என்று தயாரிப்பு நிறுவனம் நம்புகிறதாம். பாலா எடுத்த வர்மா படம் அர்ஜுன் ரெட்டி போன்று இல்லை என்பது தான் தயாரிப்பு நிறுவனத்தின் குற்றச்சாட்டு ஆகும்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img] ![[Image: sandeep-reddy-vanga-663-1550148350.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/02/sandeep-reddy-vanga-663-1550148350.jpg)   பாலிவுட்
அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியையே வர்மா படத்தை இயக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் முடியவில்லையாம். இதையடுத்து தான் கிரிசய்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். வர்மா படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. ![[Image: vikramt5-1550148234.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/02/vikramt5-1550148234.jpg)   வர்மா
த்ருவ் மற்றும் விக்ரம் ஆகியோர் வர்மா படத்தை பார்த்தார்கள். ஆனால் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு முதலில் இருந்து எடுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		DEV: தேவ் மினி விமர்சனம்
![[Image: Master.jpg]](https://tamil.samayam.com/img/67986591/Master.jpg) நடிகர்கள்கார்த்தி,ரகுல் ப்ரீத் சிங்,ரம்யா கிருஷ்ணன்,பிரகாஷ் ராஜ்,வம்சி கிருஷ்ணா
இயக்கம்ரஜத் ரவிசங்கர்
சினிமா வகைRomance,Action
கால அளவு 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		கரு: வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கும் ஹீரோவுக்கும், சின்ன வயதிலேயே தந்தையை இழந்து, அவரது தொழில் நிறுவனத்தை கவனிக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... உடைய ஆண்களை கண்டாலே வெறுக்கும் இளம் பெண் தொழில் அதிபர் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதல், மோதல், பிரிதல், சேர்தல்... டிராமா தான் "தேவ்" படத்தின் கரு மொத்தமும். 
 கதை: கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூவரும் பள்ளிப் பருவம் தொட்டே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்லும் வழக்கமுடையவர் நாயகர் கார்த்தி. இந்நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.
 
 ஜாலிப் பேர்வழியான கார்த்தியின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை எப்படியாவது, யார் மீதாவது காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக பேஸ்புக் உள்ளிட்ட வலை தளங்கள் வாயிலாக, தீவிரப்பெண் தேடலில் இறங்கி, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்த்ததும் அவரிடம் கார்த்தியை கோர்த்து விட்டு சேர்த்து வைத்து, சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் காதல் பித்து பிடித்து விடுகிறது. எதிர்பாராமல் சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.
 
 ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு, காதலாக எப்படி கசிந்து உருகியது ? அதன்பின் அந்த காதல் , அடுத்தடுத்து எற்பட்ட மனக் கசப்பால் எப்படிப்பட்ட பிரிவு கண்டு கசந்து போனது? கசந்த காதல், மீண்டும் இனித்ததா? இணைந்ததா? இல்லையா..? என்பது தான் "தேவ்" படத்தின் மீதிக்கதையும், களமும்!
 
 காட்சிப்படுத்தல்: ஆர்.வேல்ராஜ் ஓளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, வம்சி கிருஷ்ணா... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் "தேவ்" படத்தில்நீள நீளமாக காட்சிப்படுத்தியிருக்கும் காட்சிகள் சிலவற்றை, மட்டும் இயக்குனரும், எடிட்டரும் சேர்ந்து ஷார்ப்பாக வெட்டி வீசியிருந்தால் "தேவ் "இன்னும் தேவாமிர்தமாக இருந்திருக்கும்.. மற்றபடி, வழக்கமான காதல் கதையில், வித்தியாசமான காட்சிப்படுத்துதல்... படத்திற்கு பெரும் பலம்.
 
 கதாநாயகர்: நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் வித்தியாச விறுவிறுப்பு படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் நன்கு தேறியிருக்கிறார்.
 
 கதாநாயகி: ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு சும்மா நச்' சுன்னு இருக்கு. தன்பாத்திரத்தின் கனம் உணர்ந்து அதற்ககேற்ப அம்சமாக நடித்திருக்கிறார் அம்மணி என்பது இப்படத்திற்கும், ரகுலுக்கும் பலம்.
 
 பிறநட்சத்திரங்கள்: விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைப்பதை விட சற்று ஜாஸ்தியாக கடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் ஓ.கே.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		தொழில்நுட்பகலைஞர்கள்: ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மிரட்டல் பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களின் சாயல் தெரிந்தாலும், பாடல்களை பழைய மாதிரி ரசிக்க முடியவில்லை. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கு பெரிய ப்ளஸ். 
 பலம்: வேல் ராஜின் ஒளிப்பதிவும், கார்த்தி - ரகுலின் காதல் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம்.
 
 பலவீனம்: ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், நீண்டு கொண்டே போகும் திரைக்கதையும்.
 
 ஹேட்ஸ் அப்: கார்த்தி - ரகுல் ப்ரீத் ஜோடிக்கு ஒரு ஹேட்ஸ் அப் .
 
 இயக்கம்: ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், என்ன செய்தால்? எப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்? என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார்இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
 
 கத்தரிக்கப்பட வேண்டிய, சில நீள நீளமான காட்சிகள் உண்டென்றாலும், வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையின் நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாம்.
 
 பைனல் "பன்ச் " : "தேவ்' -'பார்டரில் தேறி விட்டார்.பலே, பலே!''
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		‘வர்மா’ படத்தில் துருவ் ஜோடி, இந்தி நடிகை பனிதா சந்து
 ![[Image: 201902170357119610_Film-in-Verma-Dhruv-p...SECVPF.gif]](https://img.dailythanthi.com/Articles/2019/Feb/201902170357119610_Film-in-Verma-Dhruv-pair-Hindi-actress-Banita-Sandhu_SECVPF.gif) 
 வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக கூறி, தயாரிப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தினார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.
 
 இதுபற்றி டைரக்டர் பாலா கூறும்போது, “துருவ் நலன் கருதி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்றார். அதைத்தொடர்ந்து, ‘வர்மா’ படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன், ‘வர்மா’ படத்தை டைரக்டு செய்ய மறுத்து விட்டார்.
 
 இதேபோல், துருவ் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக வந்த தகவலும் வெறும் வதந்திதான் என்பது தெரியவந்தது. ‘வர்மா’ படத்தை புதிதாக டைரக்டு செய்யப் போகிறவர் யார்? என்று தெரியாத நிலையில், கதாநாயகி யார்? என்பது உறுதியாகி இருக்கிறது. வளர்ந்து வரும் இந்தி நடிகை பனிதா சந்து, ‘வர்மா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘அக்டோபர்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
 
 இந்த தகவலை ‘வர்மா’ படத்தின் தயாரிப்பாளரே தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
 
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		இந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா? கசியும் தகவல்கள்
 ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக பூஜைப்போட்டு தொடங்கிய படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக தான் நடந்தது.
 ஆனால், தற்போது வந்துள்ள செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அது வேறு ஒன்றுமில்லை இந்தியன் 2 நின்றுவிட்டது என கூறுகின்றனர்.
 ஷங்கர் 2.0 படத்தில் பணத்தை வாரி வாரி செலவு செய்ததால், இந்த படத்திற்கு தயாரிப்பு தரப்பு கடும் கெடுபிடி கொடுத்து வருகின்றதாம்.
 இதனால் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		‘பெப்சி’க்கு மீண்டும் தலைவரான ஆர்.கே.செல்வமணி!
![[Image: Tamil-image.jpg]](https://tamil.samayam.com/photo/msid-68048745/width-400/resizemode-4/Tamil-image.jpg) தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள் 5 பேர் இணைச்செலாளர்கள் 5 பேர் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
 தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், டி.கே.மூர்த்தியும் போட்டியிட்டனர். இதில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்றொரு வேட்பாளர் டி.கே மூர்த்தி 16 வாக்குகள் பெற்றிருந்தார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் 50 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதிவிக்கு போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்றார். மேலும் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் அணியினரே அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		தெறிக்கவிட்ட சந்தானம் - வசூலை குவிக்கும் தில்லுக்கு துட்டு-2
![[Image: large_dhillukku-dhuttu-2-23497.jpg]](http://img.punnagai.com/large/large_dhillukku-dhuttu-2-23497.jpg) தில்லுக்கு துட்டு-2 தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும் படத்தின் பாசிட்டிவ் டாக் அடுத்தடுத்த நாட்களில் வசூலை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 3 கோடி வசூலை கடந்துள்ளது.
அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுமார் ரூ 17 கோடி வரை இப்படம் வசூல் செய்து சந்தானம் திரைப்பயணத்தில் அதிக வசூலை கொடுத்துள்ளது. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		காப்பான் படம் எப்படியிருக்கும்? படக்குழு தரப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட் இதோ
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காப்பான். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் இதே கூட்டணி தான் அயன் படத்தை கொடுத்தது, அதனாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் பணியாற்றி வரும் எடிட்டர் ஆண்டனி, காப்பான் படம் விறுவிறுப்பான, த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
![[Image: kaappan1.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/02/kaappan1.jpg)  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		திரை விமர்சனம் - எல்கேஜி
![[Image: 1cb018bdP2012667mrjpg]](https://tamil.thehindu.com/incoming/article26371754.ece/alternates/FREE_700/1cb018bdP2012667mrjpg) பிழைக்கத் தெரியாத’ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் மகன் (லால்குடி கருப்பையா காந்தி - எல்கேஜி) ஆர்ஜே பாலாஜி. வார்டு கவுன் சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல், எகிடுதகிடு ஏதாவது செய்து பெரிய பதவியைப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் முதல்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார். அந்தப் பதவிக்கு ஜி.ராம்குமார் வருகிறார். இடைத்தேர் தலில் போட்டியிட விரும் பும் ஆர்ஜே பாலாஜி, தேர்
தலுக்கு ஆட்களை புரமோட் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கள் செய்யும் தகிடுதத்தத்தால் ஆர்ஜே பாலாஜிக்கு இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கிறது. ஆனால், அவ ருக்குப் போட்டியாக மக்கள் ஆதரவு பெற்ற ஜெ.கே.ரித்தீஷ் களத்தில் குதிக்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? ஆர்ஜே பாலாஜியின் லட்சியம் நிறைவேறியதா? இதுதான் எல்.கே.ஜி. படத்தின் கதை. நண்பர்களுடன் சேர்ந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |