காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#21
Interesting story bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்ட நான், சுற்றும் முற்றும் பார்த்தேன் அனைவரும் சொந்த ஊரை அடைந்த மகிழ்ச்சியில் இருந்தனர், அது அவர்களின் கண்களில் நன்றாக தெரிந்தது. இறுக்கமான ஆடையில் ஒய்யாரமாக பவனி வந்து அனைவரின் பார்வைக்கும் மட்டும் அல்ல விமான பணி சேவையிலும் அனைவருக்கும் விருந்தளித்து கொண்டிருந்தனர் அந்த விமான பணி பெண்கள். அவர்களை கண் குளிர ரசித்து கொண்டிருந்தேன். நான் இறங்கும் வேலையும் வந்தது.

விமானத்தை விட்டு கீழிறங்க நான் வெளியே வந்த பொழுது, என்னதான் AC குளிர்ந்தாலும், அந்த குமரி கடலின் காற்றலைகள், தேடிவந்த மகனை ஓடிவந்து அனைத்து கொண்டது அந்த குளிர்ச்சிக்கு இணை எதுவும் இல்லை. இரவுநேர காற்று நான் மீண்டும் சொந்த ஊர் வந்த சந்தோசத்தை இரட்டிப்பாக்கியது. மேலும் இருள் என்னும் போர்வை போர்த்தி இருந்த இரவில், அங்காங்கே எட்டிப்பார்த்த விண்மீன்கள் உனக்கொரு வாரிசு வர போகிறான் என்று வாழ்த்தி கண் சிமிட்டியது. இயற்கை அனைத்தும் என்னை வாழ்கிறது போல் தோன்றியது.

விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வரும் பொழுது எனது மொபைல் போன் மறுபடியும் சிணுங்கியது. எடுத்து பார்த்தால், அதில் எனது நண்பன் வேலா வின் பெயர் தெரிந்தது. நான் அந்த அழைப்பிற்கு பதில் சொல்வதற்குள் இரு கரங்கள் எனது கண்களை மறைக்க மேலும் பலரது கைகள் என்னை செல்லமாகதட்டி ஒரு பெரிய கூச்சலையே ஏற்படுத்தினர். நான் திமிறி யார் எல்லாம் வந்திருகிறார்கள் என்று பார்த்தால், அதே அந்த ஏழு பேர் கொண்ட படை எனது வாழ்வில் என்றும் பிரியாத அந்த என்னுயிர் நண்பர்கள். அனைவருக்கும் நான் பதில் சொல்லுவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. நாங்கள் அந்த இடத்தை விட்டு பிரியும் முன் அனைவரின் பார்வையும் எங்கள் மீதே இருந்தது. அப்படி பேசிய சத்தம், நேற்று தான் கல்லூரி முடித்து வந்த வாலிபர்கள் போன்ற நடத்தை. ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்து பிள்ளைகள் இருந்தும், நண்பனை பார்த்த சந்தோசத்தில் அனைவருக்கும் அந்த பதின் வயது இளமை மீண்டும் திரும்பியது போல் இருந்தது. ஒருவழியாக அனைவருடன் பேசிவிட்டு அவர்கள் கொண்டு வந்த அந்த அம்பாசிடர் மற்றும் இன்னோவா வண்டிகளில் அனைவரும் ஏறினர். நான் அந்த அம்பாசிடரில் வேலா ஓட்ட முன் சீட்டில் அமர்ந்து கொண்டு வந்தேன். சிறிது நேரத்தில் நான் தூங்கியும் போனேன். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் நான் மீண்டும் அந்த பழைய நினைவுகளை புரட்டிப்பார்த்தேன்.

கலாவின் வீட்டில் இருந்து திரும்பிய பொழுது, அன்று நான் கீழே விழுந்ததில் எனது தலை நேராக அங்கே இருந்தே இரு பெரிய கரும் கல்களுக்கிடையே பலமாக மோதியது, நான் விழும் தருணத்தில் கூட அழைத்த பெயர்...கேட்டால் நீங்கள் கூட சிரிப்பீர்கள்.. ஆம் கலாதான். எனக்கு எதிர் திசையில் வந்த அந்த இரண்டு முகப்பு வெளிச்ச்சமுன் எனது நண்பர்கள் என்னை தேடிவந்த இரு பைக்-கின் வெளிச்சமே. நான் எழுப்பிய கலா என்கிற சத்தம் தான் அவர்களுக்கு நான்தான் கீழே விழுந்தேன் என உறுதியாக நம்ப செய்தது. கீழே கிடந்த என்னை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தனர், மேலும் நான் அங்கேயே விட்டு வந்த பைக்-கை எடுத்து வந்தனர். தலையில் பலமாக அடிப்பட்டதில், அரைமயக்கத்தில் இருந்தேன். அந்த இரண்டு நாட்கள் எனக்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது.

ஆனால் அங்கே நான் மருத்துவ மனையில் பெட்டில் கிடக்க என்னுடைய அம்மாவும் நண்பர்களும் பேசும் வார்த்தைகள் ஒன்றிரண்டு காதில் விழும் ஆனால் என்னால் கைகளை அசைத்தோ அல்லது வாய் பேசியோ எதுவும் கூற முடியவில்லை. கண்களில் கண்ணீரும், காதுகளால் கேட்கமட்டுமே முடிந்தது. சூழ்நிலை மிக மோசமாக தொடங்கியது. இரு தினங்கள் மயக்கத்தில் இருந்த நான் முணுமுணுத்த ஒரே வார்த்தை கலாதான். அதுவரை கலாவை எனது தோழி என்று நினைத்துவந்த என்னுடைய அம்மா நான் எவ்வளவு கலாவை காதலிக்கிறேன் என்று பார்த்து பார்த்து கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்கலாம். நான் நினைவு திரும்பிய பின் நண்பர்கள் சொல்லியது.

நான் ஏதேதோ மோசமான கனவுகள் கண்டேன் எதுவும் இப்பொழுது நினைவில்லை ஆனால் அந்த மோசமான கனவுகள் தான் என்னை மயக்கத்தில் இருந்து எழ செய்தது. அடிப்பட்ட இரண்டாம் நாள் இரவு 'கலா' என்ற பெரிய சப்தத்துடன் படிக்கையை விட்டு எழுந்தேன் ஒரு கைகளில் குளுக்கோஸ் ஏற மறு கைகளில் வழியாக எனது இருதய துடிப்பை பார்க்க வொயர்கள் பொருத்தி இருந்தனர். வேகமாக எழுந்ததில் வலது கைகளில் இருந்த குளுக்கோஸ் டுயுப் அறுந்து இரத்தம் வேகமாக தெறிக்க இடது கைகளில் இருந்த வொயர்கள் அறுந்ததில் அங்கே அடுக்கு வைக்கப்படிருந்த மருந்து, பழங்கள் கீழே உருண்டு ஓட பெரிய அதிர்ச்சியில் நான் கத்தினேன். தலை மற்றும் உடலில் பல பாகங்கள் வலிக்க மேலும் பலமாக அம்மா என்று கத்தினேன். அறையில் உறங்கி கொண்டிருந்த என்னுடைய அம்மாவும், நண்பன் வெங்கடேசும் என்னை பேரதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தனர்.
Like Reply
#23
முதலில் சு தாரித்த வெங்கடேஷ் அங்கே இருந்த இரவு நேர டாக்டரையும், நர்சையும் அழைத்து வந்தான். அவர்கள் வரும் வரை என்னுடைய அம்மா என்னிடம் பேச்சு கொடுக்க முயன்றாள், நான் கலா என்று மட்டும் கத்திய பிறகு கண்ணீருடன் அழுது கொண்டே இருந்தேன் வேறு யாரிடமும் பேசவே இல்லை. சிறிது நேரத்தில் வந்த டாக்டர் என்னை மீண்டும் பரிசோதித்து. நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை அதனால் யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் நன்றாக தூங்க விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். நான் அப்படி செய்தது எனது சுயநினைவு இல்லாமலே செய்தேன்.

டாக்டர் கொடுத்த அந்த தூங்க செய்யும் மருந்தால் நன்றாக தூங்கிய நான் காலையில் நார்மலாக எழுந்தேன். நான் எப்பொழுது கண் திறப்பேன் என்று எதிர் பார்த்து எனது அம்மா எனருகிலேயே காத்து கொண்டிருந்தாள். நான் கண் திறந்ததும், என்னிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள்.

அம்மா: எய்யா ராசா எப்படிப்பா இருக்கு, நீ எழுந்திர்க்க வேண்டாம்ப்பா. ஏதாவது வேணுமாய்யா என்று கண்ணீருடன் கேட்டாள்.

அம்மாவின் பேச்சை கேட்ட அங்கிருந்த வேலாவும், வெங்கடேசும் என்னருகில் வந்து ஏதோ கேட்டனர். ஆனால் நான் அவர்களுக்கு அளித்த பதில் ஒன்றே ஒன்றுதான்

நான்: என்னோட கலாவுக்கு கல்யாணம் முடிஞ்சிரிச்சாம் மக்கா. அவா என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டாடா என்றேன்.

எனது பதிலை கேட்ட இருவரும் தலை அடித்து கொண்டே கண்ணீருடன் அவளை நீ இன்னும் நினைச்சுடாடா இருக்கே என்று அழுது கொண்டே கேட்டனர். என்னை மேலும் அழவிடகூடாது என்பற்காக என்னுடைய அம்மா வேற ஏதையோ கேட்டாள், பேச்சை அப்படியே மாற்றினாள். பின்னர் டாக்டர்ஸ் வந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் அன்று அனுமதி அளித்து விட்டு சென்றனர்.

அதன் பின்பு வந்த அந்த ஆறு மாதமும் எனது வாழ்வின் மிக மோசமான கருப்பு பக்கங்கள் என்றால் கூட மிகையாகாது. எப்படி அந்த நாட்களில் நானும் அழுது சுற்றி இருந்த அனைவரையும் கஷ்டபடுத்தி கொண்டே இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை நான் அப்படி நடந்து கொண்டதை பற்றி யாரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. அவர்களின் அந்த செயலே என்னை முழுமையாக மீட்டெடுத்தது.

நான் வீடு சென்ற பின்னர் யாரிடமும் பேசவே இல்லை, எல்லோரும் என்னிடம் என்னென்னமோ கேட்டுப்பார்த்தார்கள் நான் எதற்கு வாய் திறந்து பேசவே இல்லை. பொறுத்திருந்து பார்த்த என்னுடைய அம்மா.

அம்மா: நீ ஏதாவது பேசி தொலையேண்டா.. நீ அமைதியா இருந்து ஏன்டா எல்லோரையும் உயிரோட கொல்லுற என்று கண்ணீருடன் மிரட்டினாள். அதில் கோபம் இல்லை ஆதங்கமே இருந்தது. இதற்குமேல் அவள் அங்கே இருந்தால் மேலும் தாங்க மாட்டாள் என்று கருதி என்னுடைய நண்பர்கள் சிலர் அவளை வெளியே அழைத்து சென்றனர்.

பின்னர் என்னருகில் இருந்த ஆறுமுகம் மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கினான்.

ஆறுமுகம்: ஏம்டா மக்க, இப்படி அமைதியா இருக்க, இங்க பாரு நீ அவளையே நினைச்சு நினைச்சு உன்ன பத்தி கவலைபடுரவங்களை கொஞ்சங்கூட யோசிக்க மாட்டேங்கிற.. நீ மூச்சு பேச்சு ஏதும் இல்லாமல் இருக்கும் போது உன்ன பக்கத்தில இருந்து இரண்டு நாளா தூங்காம பார்த்து பார்த்து அழுதுட்டு இருந்து உன்னோட அம்மாதாண்டா அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று கேட்டு எனது சிந்தனை ஓட்டத்தை தடுத்தான்
Like Reply
#24
நான்: நீ கேட்டது எல்லாம் நியாயம்தான் எனது புத்திக்கு எட்டியது ஆனால் இந்த பாலாய் போன மனதிற்கு ஒன்றும் புரிய மாட்டேங்குதே மக்கா..தயவு செய்ஞ்சு என்கிட்ட யாரையும் பேச சொல்லாதே. நானே கொஞ்ச நேரத்துல்ல வந்து பேசுறேன்டா என்று கூறி அவனை என்னை தனியாக விடுமாறு கேட்டு எனது அறையை விட்டு வெளியே அனுப்பினேன்.

தனியாக அறையில் இருந்த நான் எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேன் என்று தெரியாது. மனதில் பல எண்ணங்கள் என்னை கலா கண்டிப்பாக ஏமாற்றி இருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினேன். கொஞ்சம் நேரம் கழித்து எனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன் அங்கே என்னுடைய அம்மா கவலையுடன் சுவற்றில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். எனது நண்பர்கள் அனைவரும் தத்தம் வீட்டுக்கு சென்றிருந்தனர். நான் மெதுவாக அவளின் அருகே சென்று மடியில் தலை வைத்து படுக்க முயர்ச்சித்தேன் ஆனால் முடியவில்லை தலையில் அடி பட்ட இடத்தில் தையல் போட்டிருந்ததால் என்னால் முடியவில்லை. அம்மா பசிக்குதுமா. ஏதாவது சாப்பிட தாம்மா என்று கேட்டேன்.

அம்மா: இருடா கண்ணா, இப்போ எடுத்து வரேன் என்று கூறி உள்ள சென்றவள் சில நிமிடங்களிலேயே தட்டில் கொஞ்சம் சோறும் பருப்பும் போட்டு கொண்டு வந்தாள். எனக்கு கொஞ்சம் ஊட்டியவளை, நீயும் சாப்பிடுமா என்று கூறி அவளையும் கொஞ்சம் சாப்பிட செய்தேன்.

என்னால் முழுவதும் கலாவை மறக்க முடியாவிட்டாலும், அம்மாவுக்காக கொஞ்சம் நார்மலாக இருப்பதுபோல் நடிக்க தொடங்கினேன். அந்த வார இறுதியில் எனது தலையில் இருந்த தையலை பிரித்தனர். வீட்டில் உணவை உண்பதும், நண்பர்களுடன் எங்கேயாவது செல்வதுமாக நாட்களை கழித்தேன். எனக்காக லீவ் எடுத்தவர்கள் வேலைக்கு சென்ற பின்னர், நான் மட்டும் தனியாக வெளியே செல்ல தொடங்கினேன். நான் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது கலாவின் நினைப்பை மறந்திருந்தாலும் தன்னந்தனியாக இருக்கும் பொழுது அவளின் நினைவுகள் முழுவதுமாக வாட்டியது. இதற்கு இடையில் நான் எனக்களித்த விடுமுறையை தாண்டியும் விடுப்பில் இருந்ததால் நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து என்னை மொபைலில் அழைத்தனர். நான் வேலைக்கு வர கொஞ்சம் நாள் ஆகும் என்று கூறி அழைப்பை துண்டித்தேன். அதன் பிறகு என்னை அவர்கள் பலமுறை அழைத்தும் நான் பதில் அளிக்கவே இல்லை.

வீட்டில் மட்டும் அம்மாவுக்காக நான் நார்மலாக இருப்பதுபோல் நடித்தாலும், வெளியே நானும் அவளும் சென்று வந்த இடங்களை தேடி சுற்றி வந்தேன். ஒருநாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தை சுற்றுவேன், மறுநாள் நாங்கள் இருவரும் ஒரு கப் ஐஸ் க்ரீமை மாற்றி மாற்றி சுவைத்த கடையில் நாங்கள் வழக்கமாக அமர்ந்திருக்கும் மேசையில் அமர்ந்திருப்பேன். இப்படி ஒவ்வொரு இடத்திற்கா சென்றன். அப்படி ஒரு நாள் நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வேலா என்னை கவனித்து விட்டான். என்னை சத்தம் போட்டு வீடு போகுமாறு கூறினான். நான் மறுக்கவே, என்னை வேறு வழியின்றி அங்கே அருகில் இருந்த மது கடைக்கு அழைத்து சென்றான்.


மது கடையின் உள்ளே,

வேலா: ஏலே மக்கா ஹரி, ஏம்டா, இப்படி தெரு தெருவா சுத்திட்டு இருக்க..

நான்: முடியல மக்கா, வீட்ல என்னால ரொம்ப நேரம் நடிக்க முடியலைடா.

வேலா: ஏலேய் அந்த பொட்ட சிருகியே உன்னை தூக்கி வீசிக்கு போய்ட்டா, நீ ஏம்ல இப்படி சுத்துற... அவனவன் நாலஞ்சு பொண்ணுங்களை ஓட்டிடு போற நீ என்னடானா தொலைஞ்சி போன ஒருத்தியவே நினைச்சுட்டு இருக்க..நீ இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி இருகிறத பார்க்க சகிக்காம தான் நாங்க எல்லாரும் வேலைக்கே போறோம். நீ என்னடானா இப்படி தெரு தெருவா திரியிற..

நான்: மக்கா, என்னை நீ கூட முழுசா புரிஞ்சிகளைடா.. அவ என்கிட்ட எப்படி எல்லாம் பேசினா தெரியுமாடா.. என்னால இப்போகூட அவ அப்படி செய்தான்னு நம்பவே முடியலைடா. .

வேலா: உன்னை இப்படியே விட்டா அவமேல பைத்தியமாவே ஆய்டுவ... நீ என்னமோ வீட்டுல நடிச்சி அம்மாவை ஏமாத்துறதா நினைச்சுட்டு இருக்க.. உன்னோட அம்மாவோ தினசும் என்னோட அம்மாகிட்ட சொல்லி சொல்லி அழுறதா பார்க்க முடியலைடா.. உன்னை நீ மாத்திக்கோ இல்லைனா நீ அவங்களை கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுத்துருவடா சொல்லு புட்டேன்..

அதற்குள் அங்கே வந்த செர்வரிடம் வேண்டிய பானங்களை ஆர்டர் கொடுத்து விட்டு மேலும் என்னிடம் என்னென்னமோ பேசினான்..
சிறுது நேரத்தில் பானமும் வந்தது.

வேலா: இந்த இப்போதைக்கு இதுதான் மருந்து.. ஆனால் இதையே பழக்கமா வச்சுக்காதே..என்று கூறி ஒரு கோப்பை பானத்தை என்னிடம் நீட்டினான்.

நான் அதை வாங்கி பானத்தை பார்க்கும் பொழுது எனது கண்ட கால நினைவுகள் மீண்டும் இம்சித்தது..

கல்லூரி நாட்களில் ஒருமுறை என்னுடைய நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள் அன்றிரவு பலர் அவனுடைய வீட்டில் இருந்தோம். அங்கே வீட்டில் யாரும் இல்லை. ஆகையால் ஒரே ஆட்டம் பாட்டம். விடிய விடிய மது, மாமிசம் மற்றும் புரிந்தும் புரியாத பாடல்களை இசைக்க செய்து ஆட்டம். நான் சற்று அதிகமாகவே மது அருந்தியதால் வாந்தி எடுத்து. காலை கல்லூரி சொல்ல முடியாமல் விடுப்பு எடுத்தேன்... என்ன நடந்ததுன்னு தெரியவில்லை.. மணி பதினொன்று இருக்கும் கலா மட்டும் அந்த நண்பனின் வீட்டிற்கு வந்தாள். நான் அதீக போதை தெளிந்து அப்பொழுதான் எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வந்தேன். வீட்டின் வாசலில் கலா பார்க்க காளி போல் விகாரமா கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் உள்ளே வேகமாக வந்தவள். முடிந்த மட்டும் பலமாக என்னை அடித்தாள், அப்புறம் என்னை கட்டி பிடித்து அழுதே விட்டாள். பின்னர் காதல் வார்த்தைகள் பேசி என்னிடம் இனி குடிக்க கூடாதுன்னு சத்யம் வாங்கி கொண்டாள். அதன் பின்னர் நான் மதுவை தொடவே இல்லை...

நான் மதுவை கைகளில் வைத்து கனவு கண்டதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேலா..என்னலேய் அப்படி வெறிச்சு பார்த்துடு இருக்க..என்றான்
Like Reply
#25
நான்: இல்லடா, நான் இனி குடிக்க மாட்டேன்னு அவகிட்ட சத்தியம் பண்ணிநேண்டா என்றேன்.

அவ்வுளவுதான் வெகுண்டெழுந்த வேலா, ஏலேய் செத்த அறுதலி, அந்த கேன*** ***** அடுக்கடுக்காய் செம்மொழியில் அவளை அர்ச்சனை செய்தவன், இப்போ குடிகிரியா இல்லைனா நானே முழுசா எல்லாத்தையும் ஊத்திரட்டுமா என்றான்.

நான்: பயத்தில், வேகமாக ஒரே மடக்கில் குடித்து முடித்தேன்...

வேலா: மக்கா, அவ எல்லாரையும் ஏமாத்திட்டு போயடாடா... அவ மட்டும் இப்போ என்கைல கிடைச்சா மவள வெட்டி உப்புகண்டம் போட்டிருவேன். எப்படி இருந்தவனை இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி ஆக்கிட்டு போய்டாளே.. நினைச்சாலே என் வயிறு எரியுது.

நான்: அவனது பேச்சில் கொஞ்சம் கொஞ்சமா அவளின் மேல் இருந்த காதல் மறைந்து கொலை செய்யும் அளவுக்கு வெறி வந்தது..

நாங்கள் இருவரும் இரவுவரை குடித்தோம் பின்னர் அங்கே அருகில் இருந்த திரையரங்கில் ஓடிய படத்திற்கு சென்றோம், என்ன படம் என்று நினைவு இல்லை.. ஏதோ சில்லென்று ஒரு காதல் படம்... படம் பார்க்கும் போதே முன்பு என்னோட கலா படத்திற்கு வர வேண்டும் என்பதற்காக செய்த செயல் நினைவுக்கு வந்து. அப்பொழுது போதையில் அவள் மேல் வந்த கோபத்தில் அந்த திரை அரங்கத்தில் கூச்சல் போட்டு படத்தை நிறுத்த சொன்னேன் மேலும் சேர்களை ஓடைக்க போனேன்.. நிதானத்தில் இருந்த வேலா என்னை பத்திரமாக அங்கே இருந்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டான். கேட்ட போதையில் நானும் உறங்கி போனேன்.

அடுத்தநாள் காலை அம்மா என்னை எழுப்பி சாப்பிட செய்தாள். அது கலா எனக்கு முன்பு ஒருமுறை என் வீட்டிற்கே வந்து செய்து தந்த வெண்பொங்கல் மாதிரியே இருந்தது.... அவ்வளவுதான் வந்த கோபத்தில் தட்டை தூக்கி எரிந்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றேன். நான் அதுமுதல் அவனை நினைவூடும் எந்த பொருளை பார்த்தாலும், செய்தாலும் கோபத்தில் ஏதாவது செய்ய தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பலருடன் சண்டைக்கு போகும் அளவுக்கு மாறி போனேன். எனது ஊரில் வேலைக்கே செல்லாமல் கிட்டதட்ட ஒரு ஆறு மாதங்கள் இருந்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை செய்து வந்தேன்


அதற்கு மேல் நான் இங்கே இருந்தால், பிரச்சனைதான் வரும் என்று என்னை மீண்டும் சென்னைக்கு வேலைக்கு போக சொன்னனர். வேறு வழியின்றி நானும் அதே பழைய கம்பெனிக்கு சென்றேன். அங்கே என்னை முதலில் வேலைக்கு சேர்க்க மறுத்தனர். பின்னர் மிகவும் பழக்கமான ஒரு வைஸ் ப்ரெசிடென்ட் உதவியால் மீண்டும் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில் வேலையில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருந்தேன் பின்னர் போக போக என்னை முழுவது வேலைக்கு அடிமையாக்க தொடங்கினேன். ஆனாலும் அவ்வப்பொழுது அம்மா என்னை திருமணதிற்கு வற்புறுத்துவாள். என்னால் மேலும் இன்னொரு பெண்ணுடன் நான் ஏமாற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன்.

நாட்களும் ஓடியது. கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஒருண்டோடியது. நான் அப்பொழுது மும்பைக்கு மாற்றல் ஆகி இருந்தேன். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு போய்வந்து கொண்டிருந்தேன். அடுத்த வாரம் தீபாவளி, நான் பதினைந்து தினங்கள் விடுமுறை எடுத்து ஊருக்கு போய் கொண்டிருந்தேன். அது மும்பை டு நாகர்கோயில் வரை செல்லும் விரைவு ரயில். நான் எனக்கான இரண்டாம் AC யில் ஏறினேன். அங்கே எனக்கு முன்பே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஒரு பெண்மணிகள் ஒரு குழந்தை. இருவரும் சகோதரிகள் போல் அவ்வளவு அன்னிநோன்யமாக அமர்ந்திருந்தனர். ஒரு பெண் கையில் குழந்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாள். குழந்தைக்கு வயது நான்கில் இருந்து ஐந்து வரை இருக்கலாம். மற்றொருத்தி கையில் ஒரு புத்தகத்துடன் இருந்தாள்.

ஏதோ சிந்தனை ஓட்டத்தில் இருந்த நான் அவளை முழுமையாக கவனிக்க வில்லை. ரயில் புறப்பட்டு சில மணி நேரத்திற்கு பின்புதான் கவனித்தேன். எனக்கெதிரே அமர்திருப்பவர் என்னையே உற்று நோக்கி கொண்டிருப்பதுபோல் ஒரு உணர்வு. காதில் இயர் போன் மாட்டி பாடலை கேட்டு கொண்டே கண்களை மூடி இருந்த நான் அப்பொழுதுதான் அவளை பார்த்தேன்.

அது அவளேதான்.. நான் யாரை பார்க்க கூடாது என்று நினைத்தேனோ, யாரால் இந்த மூன்று வருட வனவாசமாதிரி தவம் போல் மும்பை இருக்கிறேனோ. அவளேதான் அங்கே என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தாள். அப்படி ஒரு பார்வை, என்னையே முழுவதும் விழுங்கி விடும் மாதிரியான பார்வை. ஏதோ அவள் பேச தொடங்கினாள். அதற்குள் யாரோ என் தோலை உழுப்பி எழுப்பினார்கள்.


அங்கே வேலா என்னை எழுப்பினான். ஏலேய் மக்கா,வாடா ஊருக்கு போக இன்னும் நேரம் ஆகும் அதுக்குள்ள நான் நைட் டிபன் சாப்பிட்டு போகலாம் என்றான். நான் தூக்கத்தை களைந்து இரவு வேளை உணவிற்காக அந்த கேரளா புரோட்டாவும், கேரளா ஸ்பெஷல் சிக்கனையும் சாப்பிட சென்றேன். நைட் டிபன் முடிச்சிட்டு நான் மீதி கதையை சொல்லுறேன்.
Like Reply
#26
Vry interesting
Waiting update fast bro
Like Reply
#27
super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#28
என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிய வேலா,
மக்கா எழுந்திரில நடு நிசி ஆயிடுச்சு, இதுமேல போன சாப்பாடு எதுவும் கிடைக்காது. இப்போவேற மணி 10 தாண்டிருச்சு, நம்ம பாய் கடையிலேயே சாப்பிட்டு போடலாம் என்றான்.


ஆம், உண்மையில் அங்கிருந்து நாகர்கோயில் செல்ல எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். எனக்கோ என்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் போல் இருந்தது. எனது உள் உணர்வோ விரைந்து செல் என்று தூண்டியது. என்னால் அதுக்குமேல் பொறுக்க முடியவில்லை. மனதில் எதோ குடைய


நான்: ஏலேய் மக்கா, அங்கே என் பொஞ்சாதி தனியா இருப்பால, நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன்.
வேலா: எய்யா, பொண்டாடி மேல பாசத்த பாருடா, மூணு மாசமா இல்லாத பாசம் இப்போ பொங்கி வருதோ.
நான்: டேய், நான் அவகிட்ட போன்-ல கூட பேசலடா, எனக்கும் வேற பசியே இல்லை, என்று நானும் முடிந்த வரை சீக்கிரமாக செல்லலாம் என்று சொல்லி பார்த்தேன். ஆனால்,


வேலா: பொறு மக்கா, நாம எல்லோரும் ஒண்ணா போகலாம். என்ன நீ போன உடனவே பொண்டாடியை தலைக்கு மேல தூக்க போறியா, அங்கே நாலு மாமியார், ஏழு நாத்தனார் (அவர்களின் அம்மாவையும் மனைவியையும் குறிப்பிட்டான்) ஹோஷ்பிடல்-லையே இருக்காங்க.. நீ போய் எதையும் வெட்டி முறிக்க போறதுல்ல. அங்கே எத்தனை மணிக்கு கிளம்பினியோ மதியம் கூடா சாப்பிட்டு இருக்க மாட்டா வந்து ஒரு வாய் சாப்பிட்டு போகலாம் என்றான்.


இவன்கிட்ட பேசி நம்மலால ஜெயிக்க முடியாது, வழியே இல்லாமல் நானும் அவர்களும் போய் சாப்பிட தொடங்கினேன். அது அவர்கள் அடிக்கடி வந்து உண்ணும் கடை போல, அவர்களை பார்த்ததும் அனைவரும் எங்களை நன்றாக கவனிக்க தொடங்கினர். ஏதேதோ ஆர்டர் செய்தனர். கேரளா பரோட்டா சற்று பெரியதாகவே இருந்தது. சுடசுட கோழி வருவலும், அதன் லெக் பீஸ்-ஸும் நல்ல காரசாரமா இருந்தது. நான் சாப்பிடுவதை பார்த்தவர்கள்.
வேலா: பார்த்தியா மக்கா, கோழி காலை பார்த்த உடன், பொண்டாடியை மறந்துட்டான். நாம்ம பாய் கடை கோழின்னா சும்மாவா என்று ஏகபோகமாக என்னை கிண்டல் செய்தனர்.


நான்: டேய், சும்மா இருந்தவனை சாப்பிட கூப்பிட்டுடு நக்கல் வேற பண்ணுறியளோ, வச்சிருகேண்டி. நான் வாங்கிவந்த புல் நானே தனியா அடிச்சுறேன். உனக்கு ஒன்னும் கிடையாது போடா..


மற்ற நண்பர்கள் : ஏலேய் வேலா, நமக்காக என்னனமோ வாங்கிட்டு வந்திருக்குற பையனை இப்படி தப்புத்தப்பா பேசாதலே. நீ சாப்பிடு மக்கா, அவன்கிடக்கா கூறுகெட்ட பையன் என்று எனக்கு வகாலத்து வாங்கினர்.


ஆனால் என்னையே திரும்ப கவிழ்த்தனர் என்பது வேறு கதை.


வெங்கடேஷ்: ஏலேய், தப்புத்தப்பா பேசாதின்களே, அவன் ஒன்னும் பொண்டாடியை பார்க்க ஆசைபடலை. அந்த நர்ஸ் ஸ்டெல்லாவை பார்க்கணும்னு ஆசைடா. என்கிட்ட போன்-ல பேசும்போது கூட பொண்டாடியை பற்றி கேட்கவே இல்லை, நர்ஸ் நல்ல பார்த்து பாங்கலாதான் கேட்டான். அதுக்கு இப்படி ஒரு உள் குத்து இருக்குனு நான் நினைக்கவே இல்லை என்றான்.


அதற்கு ஆரவாரமாக அனைவரும் சிரித்தனர். என்ன செய்ய நானும் சிரித்து வைத்தேன். இல்லை என்றால், கோழிக்கு பதிலாக என்னை வைத்து இரவு உணவை கடத்தி விடுவர். கேலியும் கிண்டலுடன் உணவை சாப்பிட்ட பின்னர் அனைவரும் புறப்பட்டோம். இம்முறையும் நான் அம்பாசிடரில் வேலாவுடன் வந்தேன். சில நிமிடங்கள் பேசி வந்தோம், பின்னர் நான் மீண்டும் எனது நினைவலைகளை புரட்ட ஆரம்பித்தேன்.
Like Reply
#29
ரயிலில் எனக்கெதிரே கலா அமர்ந்திருந்தாள். அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளது பார்வையில் எந்த வித குற்ற உணர்ச்சியும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கோ அவளை இப்படி ஒரு இடத்தில் பார்ப்பேன் என்று சிறிதும் கூட நினைத்து பார்க்க வில்லை. அவளை பார்த்த உடன் கட்டுக்கடங்கா கோபம், முடிந்த மட்டும் வராத உறக்கத்தை வரவழைத்து கொண்டு கண்களை இருக்க மூடினேன், ஆனால் அங்கும் அவளே, அவள் என்னிடம் பேசிய பழைய நினைவுகள் ...

ஒரு முறை நாங்கள் இருவரும் கன்னியாகுமரி சென்றிருந்த பொழுது அவள் சொல்லிய வார்த்தைகள். அங்கே பல குழந்தைகள் சுற்றுலா வந்திருந்தனர். அவருக்கும் ஆறு வரை இருக்கும் சினந்சிறு குழந்தைகள். அவர்களை பார்த்த உடன்


கலா என்னிடம், ஹரி அவங்களை பார்த்தியா. எனக்கும் ஆசையா இருக்குடா எப்போ நமக்கு அதே மாதிரி குழந்தை வரும்னு. என்றாள்.

அதற்கு நான், நீ சரினா, நாம இப்போவே அதுக்கு முயற்சி செய்யலாம் என்ன சொல்லுற.. என்றேன்

கலா: சீ போடா, அசிங்கசிங்கமா பேசாத. நான் எப்போ கல்யாணம் பண்ணலான்னு கேட்டேன்..அதுக்குள்ள சாருக்கு வேற ஆசை வந்திடுச்சு.

நான்: எனக்கும் ஆசைதான் ஆனால். நான் அந்த பாக்டோரியைமட்டும் வாங்கிடேனா அடுத்த நாளே நம்ம கல்யாணம். என்ன சரியா என்றேன்.

எனது பதிலில் வெட்க பட்டவளாக எனது கரங்களை இருக்கு பிடித்த படி கடல் அலைகளை வெறித்து பார்த்தாள். பின்னர் இருவரும் ஒருவரயொருவர் அனைத்த படியே கடைவீதியில் உலா வந்தோம்.


அந்த பழைய நினைவுகளை நினைக்கையிலேயே எனக்கு கண்ணீர் தாரைதாரையாக வந்தது. மேலும் பொறுக்க முடியாமல் நான் எழுந்து ரயில் பெட்டியின் வாசலை நோக்கி சென்றேன்.

அங்கே நின்று கண்ணீருடன் வழியெங்கும் தெரிந்த மரந்செடிகளை பார்த்துக்கொண்டே வந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு உருவம் உள்ளே இருந்து வெளியே வந்தது. அது கலாதான். அதற்கு மேல் நகர முடியாமல் இருந்த நான் நகர்ந்தால் வெளியே குதிக்க வேண்டியதுதான். வழியில்லாமல் அங்கேயே நின்றேன். அவளோ அழுத்தம் திருத்தமாக அங்கே AC அட்டெண்டர் அமர இருந்த இருக்கையில் இருந்து என்னிடம் பேச தொடங்கினாள்


கலா: என்ன ஹரி, என்னை பார்த்து பார்க்காத மாதிரி இருக்க. நீ எப்படி இருக்க, அம்மா எப்படி இருக்காங்க.. என்று வரிசையாக கேட்டாள்


நான்: வெளியே வெறித்து பார்த்து கொண்டே, எல்லோரும் உண்ணும் உயிரோடதான் இருக்கோம் என்றேன்.

என்னை மேலும் சீண்டி பார்க்க, வேண்டும் என்றே அடுத்த கேள்வியை கேட்டாள்

கலா: ஓ அப்படியா!!! எனக்கு தெரியாம போச்சே. கீது கூட சொல்லவே இலையே என்றாள்.


நான்: ஏன்? தெரிஞ்சிருந்தா இருக்குற கொஞ்ச நஞ்ச உசுரையும் எடுத்துடு போயிருப்பியா...


கலா: ஏய், என்ன பேசுற நான் சும்மா கிண்டலுக்கு பேசினேன். நீ ரொம்ப சீரியஸ்-ஸா பேசுற..

நான்: உனக்கு எல்லாமே கிண்டலா போச்சுளா. நான் எல்லோருக்கும் சீண்டி பார்குற விளையாட்டு பொம்மை ஆயிடேம்லா...

கலா: என்ன ஹரி என்மேல் கோபமா இருக்கியா??

அதுவரை நான் அடக்கி வைத்த கோபத்தை அடக்க முடியாமல். வார்த்தைகளை அக்கினியாய் வீசினேன்.


நான்: ஏய், எழுந்திரிச்சி உள்ள போடி, பண்ணுறதெல்லாம் பண்ணிடு இப்போ பத்தினி வேஷம் போடுறியா.. என்கிட்ட இன்னொரு வார்த்தை பேசின உன்னை இல்லை நானே வெளியே குதிச்சுடுவேன்.. பேசாம போய்டு என்றேன்.
Like Reply
#30
எனது கடும் வார்த்தைகளை கேட்ட கலா உடனே மறுபேச்சு இன்றி உள்ளே சென்றாள். அவளை பார்த்து கெட்ட வார்த்தைகளால் கூட திட்ட மனமும் வார்த்தையும் வரவே இல்லை. ஒருவேளை நான் இன்னமும் அவளை நேசிகிறேனா.. அவளாக கேட்டால் மனம் மாறிவிடுவேனா என்ற எண்ணம் கூட என்னுள் எழுந்தது. என்னடா ஆண் ஜென்மம். ஒருத்தி உன்னை தூற்றி சென்று விட்டாள்.

ஆனால் இன்னமும் அவளை நேசித்து கொண்டிருக்கிறாய் என்ன மனமடா இது. நானே என்னை நொந்து கொண்டேன். அவள் மன்னித்துவிடு என்று ஒருவார்த்தை கேட்டால் மன்னிக்க கூட மனம் தயாராக இருந்தது. என்ன ஒரு பேடி மனம்.

நல்ல வேலை அவளே என்னை சீண்டி பார்க்கும் வார்த்தைகளை பேசினாள் இல்லையேல் என்ன நிகழ்ந்திருக்குமோ நினைத்து பார்க்கவே மிக கேவலமாக இருக்கிறது.

மீண்டும் அவளை பார்க்கும் சக்தி இல்லாமல் நான் ரயில் பெட்டியில் வாசலிலேயே நின்றேன், உணவகம் வரை சென்று உணவருந்தினேன். வழியில் வந்த அனைத்து ஸ்டேஷன்களிலும் இறங்கி ஏறினேன். மாலை மறைந்து இருள் சூழ்ந்தது. எனது வாழ்விலும் அதே சூன்நியம் சூழ்ந்தது.

மீண்டும் நான் எனது இருக்கைக்கு செல்ல வேண்டும். வேறு வழியே இன்றி வேண்டா வெறுப்பாக சென்றேன். நான் எனது கம்பாட்மென்டுகுள் சென்றேன், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, இரவு நேர மங்கிய விளக்கு எரிந்தது. அனைவரும் தங்கள் இருக்கை திரையை மூடி இருந்ததனர். எனது இருக்கையிலும் அப்படியே. உள்ளே எட்டி பார்த்தேன்.

அங்கே கலாவுடன் வந்த பெண்மணி கைக்குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்தாள். கலா மேலே இருந்த இருக்கையில் அந்த பக்கமாக முகம்வைத்து தூங்கி கொண்ருந்தாள். நான் வெளியே சென்றிருந்த பொழுது யார் எனது அருகில் வந்து அமர போகிறார்கள் என்று நினைக்கவே இல்லை. இப்போது எனது இருக்கைக்கு மேலிருந்த பெர்த்தில் ஒரு இளைஞன் படுத்திருந்தான். அனைவரும் உறங்க. நான் சப்தமின்றி எனது இருக்கையில் சென்று அமர்ந்தேன். வராத உறக்கத்தை வரவழைக்க முயன்றேன். கண்கள் மூடினால், ரயிலின் சப்தம், AC யின் குளிர், இவை அனைத்திற்கும் மேல் சற்றே ஆற துவங்கிய மன புன்னை மீண்டும் சீண்டிப்பார்க்க வந்த என் வாழ்கையின் வில்லி கலா. எல்லாம் சேர்ந்து என்னை மேலும் சோதித்து.

கண்களை இருக்க மூடி, கண்ணீரால் எனக்கு நானே ஆறுதல் தேட முயன்ற நேரம், எனது அருகில் ஒரு நிழல், சிறு விசும்பலுடன் அமர்ந்திருந்தது. ஆம் கலாதான் என்னருகில் அமர்ந்திருந்தாள். இவ எப்போ இங்கே வந்தான், அவா வந்தது கூட தெரியாமல் இருந்துடேனே என்று என்னை நானே கடிந்து கொண்டு அவளை தள்ளிவிட்டு, சீ போ என்று விரட்டினேன். அவளோ அசையாமல் இருந்தாள். வந்த கோபத்தில் அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டேன். மேலும் அங்கிருக்க மனம் இல்லாமல் நான் வெளியே வந்தேன். எனக்காக வைத்தாற்போல் அந்த அட்டெண்டர் அங்கே இல்லை அவருக்கு படுக்க வசதியாக இருக்கும் பலகையை விரித்து நான் படுக்க போனேன். மீண்டும் அவளே வெளியே வந்தாள். அங்கிருந்த வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது எனது கைதடம் அவளது கன்னத்தில்.
Like Reply
#31
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#32
Super bro
Like Reply
#33
Nice story bro
Like Reply
#34
ன்னிடம் அடி வாங்கியவள், வீங்கிய கன்னத்துடன் என்னைத்தேடி வெளியே வந்தாள். அவளை மீண்டும் பார்த்த உடன் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினேன்.

நான்: ஏன்டி, என்னை பாடைல ஏத்தி அனுப்புற .....

நான் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே, ஓடிவந்து எனது வாயில் வலது கையால் முடி, என்னை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நான் அனுபவிச்ச உண்மைங்க.. பெண்கள் சிரித்தால் மட்டும் அல்ல அழுதாலும் போச்சு...ஆமாங்க அவ்வளவு நேரம் அவள் மேல் கோபத்தில் இருந்த நான், அவள் கண்களில் கண்ணீரை கண்ட உடன் துடித்து போய்விட்டேன். எனது மனமும் குழப்பத்தில்தான் இருந்தது. என்னடா இவா, என் மனசை ரணமாக்கிவிட்டு போய்ட்டா இப்போவந்து அழுது கண்ணீரால் மருந்து போட வந்திருகிராளா. எனது குழப்பத்திற்கு அவளே விடை தந்தாள்.

ஹரி, ப்ளீஸ் இது மேல ஒருவார்த்தையும் பேசிடாதே. ஏற்கனவே நான் பாதி உயிரை விட்டுடேன். இன்னுமும் நான் உயிரோட இருகிறதே உன்னை எப்படி பார்பேன்கிற நம்பிக்கையில்தான். ப்ளீஸ் நான் சொல்லவர்றத கொஞ்சம் கேளு. எனக்காக ப்ளீஸ் என்று கெஞ்சி மன்றாடினாள்.

சரி இப்போ என்ன கதை சொல்லி என்னை ஏமாற்ற போற என்று ஏகத்தாளமாக கேட்டேன்.

நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ. எனக்கு தாலி மட்டும்தான் அவன் கட்டினான். ஆனால் நான் மனதளவில் இப்போவும் உன்கூடதான் வாழுறேன்.

நான் நக்கலாக கேட்டேன் 'ஏன்டி, காதலிச்ச பாவத்துக்கு என்னைத்தான் ஏமாற்றின, இப்போ தாலி கட்டுனவனையும் ஏமாற்றுரியா???' ரொம்ப நல்ல பொண்ட்டாடிடி நீ..

நான் சொன்னதை கேட்டு சிறிது கோப பட்டவள் என்னை விட்டு விலகி, சீ நீ ரொம்ப தப்ப பேசாதடா. தயவு செய்து நான் சொல்லவர்றத கொஞ்சம் கேட்டு அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் என்றாள்.

அவளது கோபத்தை பார்த்தவுடன், எனக்குள்ளேயே 'ச நான் ரொம்ப தப்ப பேசிடோமோ என்று தோன்றியது'. மனதிற்குள் இப்படி தோன்ற ஆனால் வெளியே நான் 'சரி அப்படி என்னத்தான் சொல்ல போற' என்று எரிச்சலில் கேட்டேன்.
Like Reply
#35
கலா: ஹரி நான் சொல்லவர்றத கொஞ்சம் அமைதியா கேளேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. நீ என்கிட்ட பேசாம இருந்தால் நான் சத்தியமா உயிரை விட்டுவேன்.

நான்: அப்புறேன் ஏண்டி என்னை விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுன.. இப்போ இங்கே வந்து நீலி கண்ணீர் வடிகுற..

கலா: ப்ளீஸ் என்னை கொஞ்சம் பேசவிடு அப்புறம் உனக்கு எல்லாமே புரியும் என்று கூறி என்னை அவளருகில் அமர செய்தால். பின்னர் அவளே எல்லாத்தையும் சொல்ல தொடங்கினாள்.

உண்மையிலேயே உன்னோட அம்மாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். நீ என்னோட நெருங்கி பழகிய நாள்ல ஒருநாள் கூட உன்னோட அம்மாவை பற்றி பேசாமா இருந்ததே கிடையாது. உன்னோட அம்மாவும் அப்படிதான். காலேஜ்சுக்கு அவங்க இரண்டு மூணு தடவைதான் வந்திருப்பாங்க.. ஆனால் உன்னை பற்றி பேசும்போது மட்டும் அப்படி ஒரு சந்தோசமான முகத்தை பார்க்கலாம். உங்க இரண்டு பேரை பார்த்துதான் நானும் என்னோட அப்பா அம்மாமேலே அளவுக்கு அதிகமா எப்படி அன்பா இருக்கணும்னு கத்துகிட்டேன்.

ஹரி நீ ஆஸ்திரேலியா போயிருந்த நேரம் என்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துசு. அவருக்கு ரொம்ப சீரியஸ் ஆய்டுச்சு. ஹாஸ்பிடல்-ல சேர்த்தோம். அது அவருக்கு இரண்டாவது அட்டக்காம் எனக்கு டாக்டர் சொன்னது அப்புறமாதான் தெரிந்தது. அதுக்கு அப்புறம் அவர் ரொம்ப பலகினமாகிட்டார். கிட்டதட்ட ஒருவாரம் ஹாஸ்பிடலேயே இருந்தோம். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டு வந்தது அப்புறமா அவருக்கு என்னோட கல்யாணத்தை ரொம்ப சீக்கிரமா பண்ணனும்னு ஆசை வந்திருச்சு. அதனால எல்லோரும் அவசர அவசரமா கல்யாண வேலையில இறங்கிடாங்க. மாப்புளை வேறு யாரும் அல்ல என்னோட அத்தை மகன் ரிஜேஷ் தான். ஆவணும் என்மேல் ஆசையாய் இருந்தானாம். நாங்க எப்போதுமே நல்ல ப்ரெண்ட்ஸா பழகுறதா பார்த்து வீட்டில் எல்லோரும் நாங்க சரியா ஜோடின்னு முடிவு பண்ணிடாங்க.

எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை நானும் யாராவது எனக்கு ஆதரவா இப்போ இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்துவாங்கலானு ஒவ்வொருத்தரையா உதவிக்கு கேட்டு பார்த்தேன் யாரும் வரவே இல்லை. வேற வழியே இல்லாமல் நானும் என்னோட அம்மாவையே உதவிக்கு கேட்டேன். நம்மளோட காதலையும் அவங்க கிட்ட சொல்லி அப்பாகிட்ட சொல்ல சொன்னேன்.

அங்கேதான் என்னோட துரதிஸ்டம் ஆரம்பிச்சிது . அம்மாவும் என்னோட
லவ்வை அப்பாகிட்ட சொன்னங்க. என்னோட அப்பா, அம்மா சொன்னதே கேட்டு அவர் அதிர்ச்சி ஆகி நெஞ்சில கை வச்சு படுத்தார். எனக்கும் அம்மாவுக்கும் என்ன பண்ணுரதுனே தெரியலை. திரும்பியும் நாங்க ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணினோம். டாக்டர் எங்ககிட்ட திரும்ப அவரோட மனசு கஷ்ட படுத்துற மாதிரியான விஷயம் எதையும் எப்போ சொல்லாதிங்க. அவரால இப்போதைக்கு எதையும் தாங்குற சக்தி இல்லைன்னு சொல்லிடு போய்டாரு. அதை கேட்டதும் நானும் என்னோட அம்மாவும் ஆடிபோயட்டோம்.

அதுக்கு அப்புறம் அம்மா வீட்டுக்கு வந்ததும் என்னோட கால்ல விழாத குறையா என்னிடம் நம்ம காதலை மறக்க சொன்னாங்க, அப்பா ஆசை படியே நான் ரிஜேஷை கல்யாணம் பண்ணும்னு கேட்டுகிடாங்க. என்னால சத்யமா உனக்கு துரோகம் பண்ண முடியலைடா நானும் உயிரை விட்டுரலாம்னு தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். என்னோட நடவடிக்கையை பார்த்த அக்கா நான் எதோ தப்பு பண்ண போறேன்னு என்னையே கவனிச்சுடு இருந்தாள்.

நான் அப்படி ஒரு காரியத்தை செய்ய போனத பார்த்து அவதான் என்னை தடுத்தாள். நான் செத்துட்டா மட்டும் என்னோட அப்பா அம்மா சந்தோசமா இருந்துடுவாங்களா, ஒன்னு நானே அவங்களுக்கு ஒரு முடியை கட்டனும் இல்லைனா என்னோட காதலுக்கு முடிவு கட்டனும் என்று அவள் எவ்வளோவோ எடுத்து சொன்னாள்
Like Reply
#36
நான் என்னோட அப்பா அம்மாவை எதிர்த்து வந்தா கண்டிப்பா உன்னோட அம்மா என்னை ஏற்றுக்க மாட்டாங்க அப்படி அவங்க சரின்னு சொன்னாலும் நீ கண்டிப்பா என்னை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்ட.

உன்னை பற்றி எனக்கு நல்ல தெரியும். நானும் வேற வழியே இல்லாம கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்.

கல்யாணம் முடிஞ்சா ஒருவாரதுலேயே நானும் லண்டன் போய்டேன். நான் அங்கே போனதுக்கு அப்புறமாதான் நீ என்னோட வீட்டுக்கு போயிருக்க. அவங்களுக்கு நீதான் என்னோட காதலன்னு தெரியாது. அதனாலதான் நீ குடுத்த கல்யாண பரிசை என்னோட அம்மா பிரிச்சுகூட பார்களை அப்படியே எனக்கு அனுப்பி வச்சுடாங்க.

பிரிச்சு பார்த்த உடனே நான் செத்து போய்ட்டேண்டா. எனக்கு நீ முதன்முதலா கொடுக்குற காதல் கடிதம் என்னோட கல்யாண பரிசா அமைஞ்ச கொடுமை சத்தியமா இந்த உலகுத்துல வேற யாருக்கும் வர கூடாதுடா. அதுக்கப்புறம் நான் நடை பிணமாதான் வாழ்ந்தேன்.

நான் அப்படி இருக்குறதை பார்க்க சகிகாமதான் ரிஜேஷ் என்னை இந்திய அனுப்பு வச்சான். அவனுக்கும் என்னோட காதல் கதை எல்லாம் தெரியாது. நான் வீட்டை பிரிஞ்சிதான் இப்படி கஷ்ட படுறேன் என்று நினைச்சு என்னோட அக்கா வீட்டுக்கு மும்பைக்கு அனுப்பி வச்சான். நான் இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நீ என்னை நினைச்சு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு நான் கேள்வி பட்டேன். உன்னை பற்றி நான் அப்போப்போ கீதுகிட்ட கேட்டுப்பேன். அவளும் சொல்லுவாள்.

என்ன காதலிச்ச பாவத்துக்கே நீ கஷ்ட படும் போது நான் மட்டும் எப்படி அங்கே சந்தோசமா இருக்க முடியும். அதனாலே நான் மீண்டும் லண்டன் போகலை தெரியும் என்று சொல்லி முடித்து எனது மார்பில் படுத்து அழுதாள்.
அவள் சொல்ல சொல்ல கேட்ட என்னால் முடிய வில்லை, அவளை வாரி எடுத்து அனைத்து கொண்டேன். எனக்கு சொல்ல வார்த்தைகள் வர வில்லை கண்ணீரே மிஞ்சி இருந்தது.
Like Reply
#37
(05-02-2019, 07:47 PM)Deepakpuma Wrote: Super bro continue

(05-02-2019, 09:26 PM)Renjith Wrote: Super bro

(07-02-2019, 02:37 PM)Tamilking Wrote: Nice story bro

thanks friends
Like Reply
#38
Super bro
Like Reply
#39
:cry:
Like Reply
#40
கலா அவளது கல்யாண கதையை சொல்லி முடித்தவுடன் எனது மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

கலா: 'I am very sorry ' ஹரி, என்னாலதானே நீயும் இப்போ கஷ்ட படுற.. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால யாருமே சந்தோசமாவே இல்லை. என்னை காதலிச்ச நீ இங்க கஷ்டபடுற, எனக்கு தாலிகட்டுன அவரும் அங்கே கஷ்டபடுறார் . நான் ஒரு பாவி!!! ஹரி, என்னை நீ மன்னிப்பாயாடா. நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு சத்யமா மன்னிப்பே கிடையாது. என்று கூறி எனது மார்பில் அழுது கொண்டிருந்தாள்.


'ச என்ன மடையன்டா நான்'.. ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் நொந்து போன ஒருத்தியை மேலும் ரணமாக்கிடேனே என்னை நானே நொந்து கொண்டேன்.

நான் அவளை சமாதனம் படுத்த முயன்றேன். ஆனால் நானும் கண்ணீரில் மூழ்கி போயிருந்தேன்.


நான்: ஏய் கலா, நீதாண்டா என்னை மன்னிக்கணும். முழுசா விஷயம் என்னனு தெரியாம நான்தான் அவசபட்டு வார்த்தை விட்டுவிட்டேன். நீ எந்த தப்பும் செய்யலடா, நானா இருந்தாலும் அப்படிதான் செய்திருப்பேன். இப்போ எதுவும் குறைஞ்சு போகலை நீ முதல்ல கண்ணீரை துடைச்சுக்கோ என்று கூறி அவளது முகத்தை நிமிர்த்து பார்த்தேன். வழிந்தோடிய கண்ணீரை நான் துடைதெடுத்தேன். ஆறுதலாக அவளது நெற்றியில் முத்தம் குடுக்க சென்றேன்.

அப்பொழுதான் அதனை கவனித்தேன், அதுவரை அவள் என்னவள் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அவளது நெற்றியில் அதனை பார்த்த உடன் அவளை விட்டு இரண்டடி நகர்ந்து பின்னோக்கி வந்தேன்.


நான் அவளை விட்டு விலகி வந்ததும் எதோ நிகழ்ந்த மாதிரி, என்ன ஹரி, என்ன ஆச்சு, நான் நீ தொடக்கூடாத பாவியாகிடேனா என்று கேள்விகளால் எனது நெஞ்சை மேலும் துளைத்தாள்.


அவள் கேட்டதோ நான் அவளை ஏன் விலகினேன் என்று. ஆனால் உண்மையில் நான்தான் அவளை தொடமுடியாத பாவியாகி போனேன்.

பின்னர் அவளிடமே நான் கூறினேன்: அப்படி இல்லைடா, நான் உன்னை தொடக்கூட முடியாத பாவியாகிடேன், நீ இப்போ என்னோட காதலி இல்லைடா, அடுத்தவன் மனைவி. உன்னை நான் 'டா' போட்டு பேசா கூட எனக்கு உரிமை கிடையாது. தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோ என்றேன்.


நான் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் மறு பேச்சு ஏதும் இன்றி அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள். நானும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டேன். பின்னர் இருவருக்கும் இடையில் மௌனமே நிலவியது.

எங்களை சுற்றிலும் ரயிலின் சத்தம், Ac ஓட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. ரயிலின் கதவுகள் அடைக்க பட்டிருந்ததால் வெளியே நிலவிய இருள் எண்ணைகளை அண்டவில்லை ஆனாலும் அங்கே இருந்த வாஷ் பசனின் மேல் ஒளிர்ந்த விளக்கின் வெளிச்சம் மட்டுமே அங்கே இருந்தது.

எங்களை சுற்றி வேறு எவரும் இல்லை. அது என்னமோ நாங்கள் மட்டும் தனி உலகில் இருப்பது போன்றதொரு எண்ணம் என்னை சூழ்ந்து கொண்டது. மௌனத்தை கலைக்கும் விதமாக நானே முதலில் ஆரம்பித்தேன்.
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)