| 
		
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		வசூல் மோதல்:
பேட்ட படம் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக நேற்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக விஸ்வாசம் படம் 125 கோடியை வசூல் செய்துவிட்டதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்தது. இந்த வசூல் மோதல் கோலிவுட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
![[Image: viswasam34343-1547882408.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/01/viswasam34343-1547882408.jpg)   சாத்தியமில்லை:
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சாத்தியமில்லை:
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை.
வடிகட்டிய பொய்:
இந்த வசூல் நிலவரம் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு தான் தயாரிப்பாளர் கைக்கு வசூல் பணம் செல்கிறது. அப்படியிருக்கையில் இவ்வளவு தொகையை எப்படி அவர்கள் கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வாரத்தில்தான் உண்மையான வசூல் நிலவரம் தெரியவரும்.
இதுவும் வியாபாரம் தான்:
ரஜினி, கமல், அஜித், விஜய் என யாருக்கும் நான் எதிரியல்ல. இப்படியாக வசூல் நிலவரத்தை மாற்றிக் கூறுவதால் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடுத்த பட வியாபாரம் கூடும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்குக் கூடும்
![[Image: petta234-1547882345.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/01/petta234-1547882345.jpg)   உண்மையான நிலவரம்:
இதற்காகத்தான் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இதனால் உண்மையான வசூல் நிலவரம் மக்களைச் சென்றடைவதில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சினிமா செய்திகள்
ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்
 
 
 
 ![[Image: 201901210516420086_Nayantara-in-pairs-Vi...SECVPF.gif]](https://img.dailythanthi.com/Articles/2019/Jan/201901210516420086_Nayantara-in-pairs-Vijays-63rd-shooting-start_SECVPF.gif) 
 
 விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் விஜய், அட்லி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
 
 விவேக், ஆனந்தராஜ், பரியேறும் பெருமாள் கதிர் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். பூஜையில் டேனியல் பாலாஜி பங்கேற்றார். எனவே அவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் 2 கதாநாயகிகள் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இதில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: avm.jpg]](http://www.cauverynews.tv/sites/default/files/avm.jpg) இனி படமே தயாரிக்காது என கருதப்பட்ட AVM நிறுவனம் மீண்டும் படம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இதயம் என்றால் அது AVM நிறுவனம் தான். ஜெமினி, சிவாஜி, அயன், வேட்டைக்காரன் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்த AVM நிறுவனம், தமிழ் சினிமாவில் உள்ள போட்டியால் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டது. ஏ.வி,எம். மின் சக ஸ்டுடியோக்களான ஜெமினி, விஜயா போன்ற ஸ்டுடீயோக்கள் மூடப்பட்ட போதிலும் அரங்கு வாடகை, பாடல் ரெக்கார்டிங் போன்ற பணிகளை செய்து AVM நிறுவனம் தாக்குப்பிடித்து வந்தது.
 பின்னர் AVM நிறுவனம் படங்களை இனி தயாரிக்காது என பல தகவல்கள் வெளியானது. ஆனால், அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் AVM நிறுவனம் தற்போது படம் தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது. அதுவும் சாதாரண சிறிய நடிகர் இல்லை, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் சூர்யாவை வைத்து இந்நிறுவனம் படம் தயாரிக்கப்போவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார். இப்படத்திற்கு யானை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. AVM நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ’அயன்’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 ![[Image: hari%20surya.jpg]](http://www.cauverynews.tv/sites/default/files/u1642/hari%20surya.jpg) 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		முதல் பார்வை:  சார்லி சாப்ளின் - 2   
![[Image: charlie-chaplin-2-35jpgjpg]](https://tamil.thehindu.com/incoming/article26092132.ece/alternates/FREE_700/charlie-chaplin-2-35jpgjpg) பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே 'சார்லி சாப்ளின் - 2'. 
மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கின்றனர். ஆனால். நண்பன் ஒருவனால் சாராவாகிய நிக்கி கல்ராணியை சந்தேகப்பட்டு மதுபோதையின் உச்சத்தில், கோபத்தில் பேசி அதை வாட்ஸ் அப் வீடியோவாக அனுப்புகிறார்.
ஆனால், நிக்கி கல்ராணி மீது எந்தத் தவறுமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு தான் செய்த தவறை பிரபுதேவா உணர்கிறார்.  நிக்கி வீடியோவைப் பார்த்தால் திருமணமே நின்றுவிடும் இக்கட்டான நிலையில் பிரபுதேவா என்ன செய்கிறார், அதனால் வரும் பிரச்சினைகள் என்ன, இன்னொரு சாரா யார்?  யாரை பிரபுதேவா திருமணம் செய்துகொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு கட்டுப்பாடற்ற எல்லையில் சென்று ஒருவழியாக பதில் சொல்லி முடித்த திருப்தியில் நிற்கிறது திரைக்கதை.
16 ஆண்டுகளுக்குப் பிறகு 'சார்லி சாப்ளின்' படத்தின் 2-ம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ஆனால் இது படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதற்கான எந்தத் தொடர்ச்சியும், 'சார்லி சாப்ளின்' படத்தில் இருந்த எந்த அமசமும்  இதில் இல்லை.
பிரபுதேவா முதல் பாதியில் சாதாரணமாக வந்துபோகிறார். இரண்டாம் பாதியில் காதலியைச் சமாளிக்கும் இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். நிக்கி கல்ராணியின் கதாபாத்திரத்தில் எந்த சிறப்பும் இல்லை. அதா ஷர்மா, நிக்கி, சந்தனாராஜ், மீனாள் உள்ளிட்ட அத்தனை பெண் கதாபாத்திரங்களும் ஏனோதானோவென்று உள்ளன. எந்தக் கதாபாத்திரமும் முழுமையடையவில்லை.
பிரபுவும் கடமைக்கு வருகிறார், பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார்.  விவேக் பிரசன்னா, அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் என்று நகைச்சுவை அணியினரும் இழுவையில் தள்ளுகிறார்கள்.
சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான் படத்தின் ஒரே ஆறுதல். அம்ரிஷ் பொருந்தாத இடங்களில் பாடல்களைச் செருகி வருத்தப்பட வைக்கிறார். சின்ன மச்சான் பாடலுக்கும் படமாக்கப்பட்ட விதத்துக்கும் உள்ள பத்து வித்தியாசங்கள் என்று பட்டியல் போடும் அளவுக்கு பொருந்தாமல் இருக்கிறது. பின்னணி இசையிலும் அம்ரிஷால் அசதியும் அவதியுமே மிச்சம்.
ஆள் மாறாட்டம், புஷ்பா புருஷன், ஆள் மாறாட்டம்,  குறிப்பிட்ட பொருளைக் களவாடும் காட்சி என  தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சியையே ரிப்பீட் அடிக்கிறார்கள். லாஜிக்கும் இல்லை, நகைச்சுவைக்கான மேஜிக்கும் மிஸ்ஸிங். மொத்தத்தில் 'சார்லி சாப்ளின் - 2' தலைப்பில் இருக்கும் ஈர்ப்பைப் படத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகிவிடுகிறது. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		முதல் பார்வை:  சிம்பா
![[Image: 41723-002jpg]](https://tamil.thehindu.com/incoming/article26092771.ece/alternates/FREE_700/41723-002jpg) அரவிந்த் ஸ்ரீதர் - செல்லப்பிராணிகள் மீது அன்பு செலுத்தும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். பரத் - சிம்பா பரத்துக்கு 30-வது படம். பாத்திரம் உணர்ந்து உறுத்தாமல் நடித்திருக்கிறார்.  சிம்பாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது ஸ்கோர் செய்கிறார். கதையிலும் அவர் கவனம் செலுத்தினால் நல்லது.
 பானு ஸ்ரீ மெஹ்ரா - நடிக்க ஸ்கோப் இல்லை. குணச்சித்திரக் கதாபாத்திரத்துக்கான பங்களிப்புதான். ஆனால், அதில் பானு எந்தக் குறையும் வைக்கவில்லை.
 பிரேம்ஜி அமரன் - படம் முழுக்க வருகிறார். பல இடங்களில் காமெடி என்ற பெயரில் 'கடி'க்கிறார். பிரேம்ஜியின் நகைச்சுவை எடுபடவில்லை.
 ஸ்வாதி தீக்ஷித் - பத்தோடு பதினொன்றாகவே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.
 ரமணா- எந்த சுவாரஸ்யமும் இல்லை.
 படத்தின் ப்ளஸ் - சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை, அச்சு விஜயனின் எடிட்டிங்.
 மைனஸ் - திரைக்கதை
 சோதனை - கேங் லீடர்களுக்குள் நடக்கும் கலந்துரையாடல் காட்சியைப் 'போலச் செய்'யும் பிரேம்ஜி பேசும் வாதம்.
 சவால்: கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாதது.
 லாஜிக் கேள்விகள்: பரத்தின் தாத்தா ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? பானு ஸ்ரீ மெஹ்ரா விவாகரத்துக்குக் காரணம் என்ன? பரத் ஏன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்? அதிலிருந்து ஏன் வெளியே வரவில்லை? நார்மலாகவே நடந்துகொள்ளாத அவர் எப்படி அலுவலகத்தில் தொடர்ந்து வேலை பார்க்க முடிகிறது? தனிமைதான் பிரச்சினையா?
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		![[Image: t6etmqh8_petta-rajinikanth_625x300_25_January_19.jpg]](https://c.ndtvimg.com/2019-01/t6etmqh8_petta-rajinikanth_625x300_25_January_19.jpg) 
 துனுக்குகள்
 
 இந்த ஆண்டு பொங்கலை சிறப்பிக்க கடந்த 10ம் தேதி வெளியான ரஜினியின் பேட்ட திரைப்படம் உலக அரங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார் 
 அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார் 
 சிம்ரன் இப்படத்தில் நடித்திருக்கிறார் 
 
 இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். காரணம் சிவா இயக்கத்தில், அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
 இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனை படைத்து வருகின்றன. தமிழ் நாட்டை பொருத்தவரை அஜித்தின் விஸ்வாசம் படம்தான் அதிக லாபத்தை பெற்றிருக்கிறது என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
 
 உலக அளவில் பேட்ட திரைப்படம் 200 கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் பரவிவருகிறது.
 
 உலகமெங்கும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல. தென் இந்தியாவில் இயக்கி தயாரிக்கப்பட்ட படங்களில் மொத்தம் 11 படங்கள் உலக அளவில் 200 கோடி வசூல் தந்ததாகவும். அதில் 4 படங்கள் ரஜினியின் எந்திரன், கபாலி, , 2,0 படங்களை தொடர்ந்து காலாவும் 200 கோடி வசூல் சாதனைப் படைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் - ரவி வர்மா முன்னிலை; ஆடுகளம் நரேன் வெற்றி
சின்னதிரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. சிவன் சீனிவாசன், நிரோஷா, போஸ் வெங்கட், ரவி வர்மா ஆகிய நான்கு பேர் தலைமையில் நான்கு அணிகள் களத்தில் இருந்தன. கடைசி நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்குவதற்குச் சற்று முன்பாக போஸ் வெங்கட் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நவீந்தரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தேர்தல் அதிகாரி லியாகத் அலிகான். இதனால் நவீந்தர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சீரியல் நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5.35 வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சற்று இடைவெளிவிட்டு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி, முதலில் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ரவி வர்மா முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசனும், மூன்றாவது இடத்தில் நிரோஷாவும், நான்காவது இடத்தில் போஸ் வெங்கட்டும் இருந்து வந்தனர். தொடர்ந்து ரவி வர்மா முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் நிலவிய குழப்பம் காரணமாக முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.![[Image: 74_10137.jpg]](https://image.vikatan.com/news/2019/01/27/images/74_10137.jpg) தலைவர் பதவிக்கான வாக்குகள் வேறு பெட்டிகளில் செலுத்தப்பட்டதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசி நேர நிலவரப்படி ரவி வர்மாவே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  நிறுத்தப்பட்டுள்ள வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரவி வர்மா அணியைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் வெற்றி வாகை சூட்டியுள்ளார். பொருளாளர், துணைத் தலைவர், இணை செயலாளர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. ரவி வர்மா ஆரம்பம் முதலே சின்னத்திரை தேர்தல்களில் நின்று வந்தார். இந்த முறை அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.![[Image: 75_10260.jpg]](https://image.vikatan.com/news/2019/01/27/images/75_10260.jpg) 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		தல59 ஹீரோயின் வித்யா பாலனின் படுமோசமான புதிய கவர்ச்சி புகைப்படம்!
தல அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் தல59 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இதுதான் அவருக்கு முதல் தமிழ் படம்.
இந்நிலையில் வித்யா பாலன் தற்போது பிரபல புகைப்பட கலைஞர் தாபு ரத்நானியின் காலெண்டருக்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இன்று நடந்த அறிமுக விழாவிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
![[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]](https://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/tamil/others/2019/01/vidya_balan003/img/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg)  ![[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]](https://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/tamil/others/2019/01/vidya_balan001/img/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg)  ![[Image: 625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg]](https://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/tamil/others/2019/01/vidya_balan002/img/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg)  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		ஒன்இந்தியா
 ![[Image: red.jpg]](https://tamil.oneindia.com/images/red.jpg) தமிழ்
 
 ![[Image: red.jpg]](https://tamil.oneindia.com/images/red.jpg) செய்திகள்
 
 ![[Image: red.jpg]](https://tamil.oneindia.com/images/red.jpg) சென்னை
இளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
சென்னை: இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		இதனால் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் இந்த விழா இதனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் இது தொடர்பாக வழக்கு தொடுத்து இருந்தார்.
இதில்தான் தற்போது நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் நீதிபதி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இந்த விழாவிற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
அதில், இளையராஜா இசை விழாவுக்குத் தடை விதிக்க முடியாது. இதற்கான காரணங்களை மனுதாரர் தரப்பு அளிக்கவே இல்லை. உரிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
இளையராஜா இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் நடத்த தடையில்லை. எந்த ஆதாரமும் இந்த வழக்கில் சமர்பிக்கப்படவில்லை. இந்த விழாவிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது போலவே தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கம் அளித்த பதில்கள் ஏற்க கூடியதாகவே இருக்கிறது. அதனால் இந்த விழாவை தயாரிப்பாளர் சங்கம் தாராளமாக நடத்தலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		``கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் கூட வேணும்னேதான் வேலை பார்க்கலை!’’ - இயக்குநர் அமீர்
"அப்போ யுவனும் ஸ்பாட்ல இல்லை. இருந்திருந்தா அவர்கிட்ட சொல்லச் சொல்லியிருப்பேன். அப்போ அங்க இருந்த சவுண்ட் இன்ஜினீயர், `பயப்படாதீங்க சார், சொல்லுங்க. எதுவும் சொல்ல மாட்டார்’னு சொன்னார். நானும் தயங்கிகிட்டே சொல்லப் போனேன்."
![[Image: 148498_thumb.jpg]](https://image.vikatan.com/cinema/2019/01/images/1088X550/148498_thumb.jpg) ``இளையராஜா சார்கூட ஏற்பட்ட முதல் சந்திப்பு இன்னும் என் நினைவுல இருக்கு. மிகப் பெரிய பிரமிப்பு அது. இப்போ நினைச்சாக்கூட உடம்பெல்லாம் சிலிர்க்குது...’’ என்ற அந்தச் சிலிர்ப்போடு பேசத் தொடங்குகிறார் நடிகரும் இயக்குநருமான அமீர். `` `சேது’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டிருந்த சமயத்துலதான் இளையராஜா சாரை நேர்ல பார்த்தேன். `காண கருங்குயிலே’ பாட்டுடைய கம்போஸிங் போயிட்டிருந்தது. கொஞ்சம் தூரத்துல நின்னு அவரையே பார்த்துட்டிருந்தேன். பாட்டை முடிச்சுக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டார். அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது.’’
 
 
[color][font]
``என்னுடைய எல்லா படங்களுக்குமே யுவன்தான் இசையமைச்சிருக்கார். கொஞ்ச நாள்லே நானும் யுவனும் க்ளோஸாகிட்டோம்.  கம்போஸிங் டைம்ல யுவனுடைய ஸ்டூடியோவுக்கு அடிக்கடி போவேன். அப்போ அவருடைய வீடுதான் ஸ்டூடியோ. அப்படிப் போகும்போதெல்லாம் இளையராஜாசாரை பார்க்கிற வாய்ப்பு கிடைக்கும். அவரைப் பார்த்து வணக்கம் சொல்வேன், பதிலுக்கு அவர் வணக்கம் சொல்வார். அப்போதைய உரையாடல் அவ்வளவுதான்.’’ [/font][/color]
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		``சினிமாவுல நான் பிரமித்துப் பார்க்குற மூணு பேர் கமல் சார், பி.சி.ஸ்ரீராம் சார், இளையராஜா சார். இவங்க மூணு பேர் கூட்டணியில இயக்குநரா வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. நான்தான் ஒதுங்கிட்டேன். காரணம், அவங்க மூணு பேருமே அவங்க சம்பந்தப்பட்ட ஏரியாவுல ஜாம்பவான்கள். இவங்ககூட வொர்க் பண்றதுல எனக்குச் சின்ன பயம். அதுவும் இல்லாம அவங்கெல்லாம் ரொம்ப வருஷமா சினிமாவுல இருக்கவங்க. அவங்க மேல எனக்கிருக்கும் அன்பு, பிரியம் இதுனால பாதிக்கப்படுமோனு நினைச்சுதான் விலகினேன். ஆனா, தனிப்பட்ட முறையில இவங்க மூணு பேர் கூடவும் இணக்கமாகத்தான் இருக்கேன்’’ என்றவரிடம் ``இளையராஜா இசையமைத்த பாடல்களில் எந்தப் பாடலை வாழ்நாள் முழுவதும் ரிங்க்டோனா வைப்பீங்க?’’ என்று கேட்டதற்கு, ``எனக்கு எப்பவும் சினிமா பாடல்களை ரிங்டோனா வைக்கிற பழக்கம் இல்லை. ஆனா, இளையராஜா சாருடைய பாட்டை வெச்சே ஆகணும்னுங்கிற கட்டாயம் வந்துச்சுன்னா, `உன்ன (பொன்ன) போல ஆத்தா, என்னைப் பெத்துப் போட்டா' பாட்டைதான் வைப்பேன். காரணம், சின்ன வயசுல இருந்தே அந்தப் பாட்டை நான் அதிகமா கேட்டிருக்கேன். அவருடைய குரல்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டும் இதுதான்’’ என்று நெகிழ்ந்ததோடு பேட்டியை முடித்தார்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		தங்கமீன்கள் படத்திற்கு பிறகு சாதனா இதில் முற்றிலும் மாறுபட்ட, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மனதில் பதிகிறார். கள்ளங்கபடமற்ற காதல், பேரன்பு, ஆசை, பாசம், இரக்கம் என அவளது உலகம் புதிரானது, வித்தியாசமானது. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். தனக்காக தனி உலகம் இருந்தாலும், அதில் தனக்கும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை புரிய வைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சாதனாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்க மீன்கள் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனாவுக்கு, இந்த படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது கொடுத்தாலும் போதாது. தங்கமீன்கள் சாதனா இனி பேரன்பின் சாதனாவாக மிளிர்வார்.
![[Image: 201902011222357338_3_Peranbu-Review7._L_styvpf.jpg]](https://img.maalaimalar.com/InlineImage/201902011222357338_3_Peranbu-Review7._L_styvpf.jpg) அஞ்சலி குறைவான நேரமே வந்தாலும், இதுவரை நடிக்காத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருநங்கை அஞ்சலி அமீர், தங்களை போன்றவர்களுக்கும் அன்பு, பாசம் உண்டு என்பதை உணர்த்திச் செல்கிறார்.
வாழ்க்கையின் எதார்த்தத்தை திரையில் அப்பட்டமாக காட்டுவதில் ராம் ஆகச்சிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் யாரும் தொடாத, எளிதில் தொட முடியாத ஒரு கதைக்கருவை பேரன்பாக படைத்திருக்கும் ராமுக்கு பாராட்டுக்கள். படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை விட்டுச் செல்லும் தாய், தாய் பாசத்தால் ஏங்கும் குழந்தை, குழந்தையை அரவணைக்க துடிக்கும் தந்தை என காட்சிகளை மனதில் பதிய வைக்கிறார். தன் மீது பாசம் காட்டும் அனைவரும் தன்னை விட்டு விலகிச் செல்வதை விரும்பாத குழந்தையின் கள்ளங்கபடமற்ற பாசம் உயர்வானது என்பதை புரியவைக்கிறார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை உணர வைத்திருக்கிறார். இயற்கையை பல அத்தியாயங்களாக காண்பித்திருக்கும் ராம் முடிவில் இயற்கையின் பேரன்பில் மகிழ்ச்சியடைகிறார். படத்தின் வசனங்கள் அருமை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் திரைக்கு கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த சூரிய பிரதாமனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம். ராமின் சிறந்த படைப்பாக பேரன்பு பேசப்படும். ![[Image: 201902011222357338_4_Peranbu-Review4._L_styvpf.jpg]](https://img.maalaimalar.com/InlineImage/201902011222357338_4_Peranbu-Review4._L_styvpf.jpg) முதல் பாதியில் யுவனின் மெல்லிசை மனதை வருட, இரண்டாவது பாதியில் பாடல்களால் மனதை குலைக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் எழில் கொஞ்சம் விதமாக உள்ளது.
மொத்தத்தில் `பேரன்பு' இயக்குநரின் பெயர் சொல்லும். #Peranbu #PeranbuReview #DirectorRam #Mammootty #Anjali #ThangaMeengalSadhana #AnjaliAmeer 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		``கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும்னு வாழ்த்துறேன்!” - கலகலத்த இளையராஜா
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரமாண்டமான முறையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சி நேற்று நிறைவுற்றது. ரஜினி, கமல், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன் பாபு, விக்ரம், சத்யராஜ், நாசர், குஷ்பு, சுஹாசினி, ரோகிணி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், மணி ஷர்மா, தேவி ஸ்ரீபிரசாத், விஜய் ஆண்டனி, தினா ஆகியோர் பங்கு பெற்றனர். இரண்டு நாள்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தது, சினிமாத்துறையினர் தங்க வயலின் வழங்கியது, ஏ.ஆர். ரஹ்மான் - இளையராஜா கலந்துரையாடல் எனக் களைக்கட்டியது. இரண்டாம் நாளான நேற்று ரஜினி- இளையராஜா பேச்சு, கமல் தொடர்ந்து 4 பாடல் பாடியது, ஷங்கர் - இளையராஜா கூட்டணி வேலை செய்த படம், விக்ரம் பாடல் பாடியது என ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமைந்தது. ![[Image: 0001_08022.jpg]](https://image.vikatan.com/news/2019/02/04/images/0001_08022.jpg)நிகழ்ச்சியில் சுந்தரி கண்ணால், ராக்கம்மா கையத்தட்டு, தென்பாண்டி சீமையிலே, பூவே செம்பூவே என 30-க்கும் மேற்பட்ட இளையராஜாவின் ஹிட் பாடல்கள் பாடப்பட்டன. நள்ளிரவு தாண்டியும் அரங்கில் குழுமியிருந்த பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளையராஜா ரசிகர்கள் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக இளையராஜா தென்பாண்டி சீமையிலே பாடலை பாடி முடித்து ரசிகர்களிடம் பேசினார். அப்போது, ``இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாதுனு நினைச்சவங்களுக்கும் ரொம்ப நன்றி. இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சர்டிஃபிக்கேட் கொடுத்துருக்குனா அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவங்கதான் காரணம். விஷால் மற்றும் அவரின் அணி வாக்குகள் வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்தமாதிரி சங்கத்துக்குப் பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள். சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரியாளு ஆவாங்க, சிலர் பாடலில் இருக்குற குறைய கண்டுபுடிச்சிக் காட்டி பெரிய ஆவாங்க. அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும் நான் வாழ்த்துறேன்" என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். முன்னதாக `இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.    
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		’ராமராஜனுக்கும் மோகனுக்கும் கூடத்தான் நல்ல பாட்டு போட்ருக்கேன்’ - ரஜினிக்கு இளையராஜா பதில்
![[Image: 16683jpg]](https://tamil.thehindu.com/incoming/article26172789.ece/alternates/FREE_700/16683jpg) ராமராஜன் படங்களுக்கும் மோகனின் படங்களுக்கும் கூடத்தான் நல்ல பாட்டுகள் போட்டிருக்கிறேன். பாரபட்சமெல்லாம் நான் பார்ப்பதே இல்லை என்று இளையராஜா 75 விழாவில், இளையராஜா தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இரண்டு நாள் நடைபெற்ற இந்த விழாவில், நிறைவு நாள் விழாவில், ரஜினி, கமல், ஷங்கர், பி.வாசு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.
 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, ‘இசையின் சுயம்பு இளையராஜா. அவர் அன்னக்கிளி என்கிற முதல் படத்திலேயே விஸ்வரூபமெடுத்து வந்து நின்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
 என்னுடைய படங்களுக்கும் எத்தனையெத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கமல் படமென்றால் இளையராஜா சார், ஸ்பெஷலாக பாடல்கள் போட்டுத்தருவார் என்று ரஜினி பேசினார்.
 உடனே இளையராஜா, ‘கமலிடம் கேட்டால், ரஜினியின் படங்களுக்குத்தான் பிரமாதமாகப் பாட்டு போட்டுத்தருகிறீர்கள் என்று சொல்லுவார். அவ்வளவு ஏன்... ராமராஜன் படங்களுக்குக் கூடத்தான், நல்ல நல்ல பாடல்கள் தந்திருக்கிறேன். நீங்களெல்லாம் பெயர் வைத்திருக்கிறீர்களே... மைக் மோகன் என்று! அந்த நடிகர் மோகனுக்குக் கூடத்தான், நல்ல பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.
 எனக்கு யார் இயக்குநர், நடிகர் யார் என்பதெல்லாம் இல்லை. பாரபட்சம் இல்லாமல்தான் இசையமைப்பேன். அதுதான் என் வழக்கம்’ என்று பதிலளித்தார்.
 மொத்தக் கூட்டம் கரவொலி எழுப்பி, ஆர்ப்பரித்தது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		05-02-2019, 09:49 AM 
(This post was last modified: 05-02-2019, 09:50 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		ஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
 
 
 
 ![[Image: 201902041410142315_Ilayaraja-praised-Raj...SECVPF.gif]](https://img.maalaimalar.com/Articles/2019/Feb/201902041410142315_Ilayaraja-praised-Rajinikanth-and-answer-his-question_SECVPF.gif) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.
 
 இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 
 நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.
 
 ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.
 
 நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.
 
 அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?
 
 ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.
 
 இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.
 
 [size=undefined][size=undefined]![[Image: 201902041410142315_1_Ilayaraja-75-Rajini...styvpf.jpg]](https://img.maalaimalar.com/InlineImage/201902041410142315_1_Ilayaraja-75-Rajinikanth-Speech3._L_styvpf.jpg)
 சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.
 
 இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.
 
 கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
 
 பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.
 [/size][/size]
 [size=undefined][size=undefined]![[Image: 201902041410142315_2_Rajini-Question-Ila...styvpf.jpg]](https://img.maalaimalar.com/InlineImage/201902041410142315_2_Rajini-Question-Ilayaraja-Answer2._L_styvpf.jpg)
 இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.
 
 சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 
 இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan[/size][/size]
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		`` `பண்ணையாரும் பத்மினியும்' ஓர் உறவு, ஓர் ஏக்கம், ஒரு கொண்டாட்டம்!" - #5YearsOfPannaiyarumPadminiyum
``பொருள்கள் உயிரற்றவை. ஆனால், அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொருள்களுடனான மனித உறவின் காரணத்தை அறிய முயற்சி செய்வது கடினம். ஆனால், அதை வெளிப்படுத்தலாம்; காட்சிப்படுத்தலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம்."
![[Image: 149154_thumb.jpg]](https://image.vikatan.com/cinema/2019/02/images/1088X550/149154_thumb.jpg)  மனிதனின் ரசனைக்கு எல்லை இல்லை. ஒரு விஷயத்தின் மீதான மனிதனின் ஈர்ப்பை வரையறுக்க முடியாது. சக மனிதன் அல்லது பிற உயிர்களிடத்தில் காட்டும் கனிவை, அதன் மீது காட்டும் அடிப்படை அறமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உயிரற்ற பொருள்களின் மீது வைத்துள்ள அளப்பறியா அன்பு, மனித உணர்வின் அழகியல். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அவரவர் சித்தம். பொருள்கள் யாதுமற்றவை. ஆனால், அது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. பொருள்கள் அர்த்தமற்றவை. ஆனால், சிலரின் வாழ்விற்கு அர்த்தங்களைக் கொடுக்கிறது. பொருள்கள் உயிரற்றவை. ஆனால், அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொருள்களுடனான மனித உறவின் காரணத்தை அறிய முயற்சி செய்வது கடினம். ஆனால், அதை வெளிப்படுத்தலாம்; காட்சிப்படுத்தலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம்.  பண்ணையாருக்கு (ஜெயபிரகாஷ்) ஏனோ பார்த்தவுடன் நண்பரின் காரின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு. அப்படிப்பட்ட காரை பண்ணையாருக்கு வழங்குகிறார், நண்பர். அதன் டிரைவர் ஆகிறான், முருகேசன் (விஜய் சேதுபதி). போக்குவரத்து வாகனங்கள் கிராமங்களுக்கு அறிமுகமான ஆரம்பச் சூழல்கள், ரசனையான காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். `காரை நீ ஓட்டினால்தான் அதில் ஏறுவேன்' என்று கணவனை அன்பாகச் சீண்டும் மனைவி செல்லம்மா (துளசி). காரை ஓட்டியே தீருவேன் என வெள்ளந்தியான பண்ணையார்... எனப் பயணப்படும் கதை.  ![[Image: f0f4a42fe94442a0f8ec65d0a1eb9e54_13565.jpg]](https://image.vikatan.com/cinema/2019/02/07/images/f0f4a42fe94442a0f8ec65d0a1eb9e54_13565.jpg)தமிழ் சினிமா, இளைஞர்களின் காதல் என்ற தளத்திற்குள் தன்னைப் பெருவாரியாகச் சுருக்கிக்கொண்டதோ என்று வருத்தப்படலாம். அந்தளவிற்கு ஒரு காரை சுற்றிய அற்புதமான கதைக்களத்தைக் கொண்டிருந்தது, `பண்ணையாரும் பத்மினியும்’. அதனுடாக, ஹீரோயிசம் என்ற குறிப்பிட்ட வெளியைத் தவிர்த்து, இரு முதிய கணவன் - மனைவி காதலின் அம்சங்களை ரசிக்க வைத்திருப்பார்கள். குறிப்பாக, `உனக்காகப் பொறந்தேனே எனதழகா' பாடல் காட்சிகளைச் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் இருவரும் தமக்குள்ளே பகிர்ந்துகொள்ளும் காதல், பேரன்பின் வெளிப்பாடு. `இந்த மொசரகட்டையப் பாக்காட்டி எனக்குச் சோறு இறங்காது' என்று அதன் நீட்சியாக முருகேசனைச் சொல்வார், பண்ணையாரின் மனைவி செல்லம்மா. தங்கள் வீடுதான் துக்கம் முதல் விசேஷம் வரை ஊர் மக்களின் அனைத்திற்கும் நிகழ்விடமாக இருக்கும். அதில், சிறுவர்கள் தாராளமாக விளையாடலாம். இப்படிப் பறந்து விரிந்துகிடக்கும் நேசங்கள் அனைத்தும் ஒரு காரணியால் தன் இருப்பியலை ஏக்கமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். அதுதான், பத்மினி கார்.  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		கார் கொடுத்த நண்பருக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் `ஹை...' என்று கொண்டாடுவதும், காருக்குச் சிறு கோளாறு ஏற்பட்டாலும் துடிதுடித்துப் போவதுமாக காரிடம் சரணடைந்திருப்பார், பண்ணையார். `சின்னக்கொழந்த மாதிரி அடம்பிடிக்கிறார்டா' என்று முருகேசனிடம் செல்லம்மா சொல்லும்போழுது, காரை மகள் எடுத்துச் செல்லும்போது கலங்குவது எனத் தன் கணவன் மீதான அன்பிற்குக் காரை சாட்சியமாகப் பார்த்திருப்பார், செல்லம்மா. `அது எப்படி நம்ம காரை கொடுப்பது' என்பது, காருக்காக சாமிக்குப் போட்ட மாலையைக் கழற்றுவது என்று பத்மினியை தனது உடைமையாக நினைத்தான், முருகேசன். சுக துக்கங்களை இந்த காரில் அனுபவித்த ஊர் மக்கள், தெரிந்தால் சங்கடப்படுவார்கள் என்று கோளாறான விஷயத்தை மறைப்பதும், முன் சீட்டை அடைய வேண்டும் என்று இறுதிவரை தொடரும் ஒரு சிறுவனின் ஏக்கமுமாக ஒவ்வொன்றும் நெகிழ்வான காட்சியமைப்புகள்.  ![[Image: Pannaiyam-Padminiyum-Movie-New-Stills_13281.jpg]](https://image.vikatan.com/cinema/2019/02/07/images/Pannaiyam-Padminiyum-Movie-New-Stills_13281.jpg)9 நிமிடக் குறும்படத்தினை நேர்த்தியாகத் திரைப்படமாக்கியிருப்பார், படத்தின் இயக்குநர் அருண் குமார். `பார்க்க பொடியனாட்டம் இருக்கும் இந்தப் பையனா எடுத்தது' என்று பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். வில்லன் பாத்திரம் இல்லாமல், புகை, மது, போதை போன்ற சமாசாரங்களைத் தவிர்த்து தனித்துவமாக திரைக்கதை அமைத்திருப்பார். தன் மெயில் ஐடியில் ஞாபகார்த்தமாக பழைய கார் நம்பரை வைத்திருக்கும் ஜெயபிரகாஷுக்கு பண்ணையார் பாத்திரம். தன் படங்களிலேயே முதன்மைப் பாத்திரமாக அமைந்த இப்படம், அவரின் மாஸ்டர் பீஸாக இருக்கும். தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றெல்லாம் பாராமல், அந்தக் கலையின் வடிவத்திற்குத் துணையாக நண்பன் படத்தை முழுமைப்படுத்திக் கொடுத்திருந்தார், விஜய் சேதுபதி.  இவர்களுடன் பச்சை வண்ண பியட் பத்மினி. திரையிலும், திரையைப் பார்க்கும் பார்வையாளனுக்கும் இந்த கார் ஒரே மனநிலையைத்தான் கொடுத்தது. பத்மினி ஓர் உறவு. பத்மினி ஓர் ஏக்கம். பத்மினி ஒரு கொண்டாட்டம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, `பண்ணையாரும் பத்மினியும்' குழுவிற்கு ஒரு வாழ்த்து!  
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |