Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
smart apps
#1
அவசர உதவிக்கு ஆண்ட்ராய்டு ஆப்... தமிழ்நாடு போலீஸின் ஆப் எப்படி இருக்கிறது? #KavalanSOS
ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
[Image: 146144_thumb.jpg]
பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகக் காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் `KAVALAN SOS APP' (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அது என்ன காவலன் SOS செயலி?
சமீபத்தில் தமிழக காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலன் SOS கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை வைத்திருந்தால் பொதுமக்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: sr0_19597.jpg]
காவலன் SOS செயலியின் பயன்
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஆப்கள் அவர்களுக்கு அவசர காலங்களில் உதவிகரமாக இருக்கும். பெண்கள் அல்லது வயது முதியவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

பதிவிறக்கம் செய்த பிறகு, அப்ளிகேஷனை ஓபன் செய்தால், பயனாளர்களின் வசதிக்கேற்ப ஆங்கிலம் / தமிழ் என்று இரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொழியைத் தேர்வு செய்த பிறகு, ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும். ரிஜிஸ்டிரேஷன் (registration) என்ற பக்கத்தில், பயனாளர்கள் தங்கள் அலைபேசி எண், பெயர், மாற்று அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின் நெக்ஸ்ட் (NEXT) பட்டனை அழுத்த வேண்டும்.
Like Reply
#3
[Image: sr2_19112.jpg]
அதைத்தொடர்ந்து, பயனாளர் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும். பயனாளர்கள் ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியில், பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
ஆபத்து நேரத்தில் காவலன் sos செயலியில் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் போது, அவசரத்தில் காவல்துறையை அழைப்பதற்குச் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் SOS என்ற பட்டனை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விடும்.
அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது. மேலும், அழைப்பவரின் அந்த நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரியல்டைம் டிராக்கிங் வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் இந்தச் செயலியில், பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும். காவலன் Kavalan SOS app பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வுத் தூண்டல் (shake trigger) வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாகச் செயல்படும். 
Like Reply
#4
[Image: sr1_19344.jpg]
Kavalan SOS app செயலி மிகவும் அவசர நிலையில் இருக்கும் பெண்கள், முதியோர்கள் மற்றும் குடிமக்களின், பாதுகாப்புச் செயலியாக 24 மணி நேரமும் இயங்குவதால் இந்த வசதியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.
காவலன் SOS செயலியைப் பெற: 
ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos
ஐ-போன்களில் காவலன் செயலியைப் பெற: https://itunes.apple.com/in/app/kavalan-sos/id1388361252?mt=8
மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி, ஸ்மார்ட் போன்களில் காவலன் SOS செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Like Reply
#5
Like Reply
#6
Like Reply
#7
Like Reply
#8
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கும் 15 ‘ஆப்’கள்!
January 24, 2019513 viewsPosted By : ManojAuthors
[Image: Fake-Apps.png]

ப்ளே ஸ்டோரில் உள்ள 15 ‘ஆப்’கள் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஸ்மார்ட் போன்களை இயக்க இயங்குதளம் முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மிகவும் பிரபலமானவை. உபயோகிக்க எளிதாக உள்ள, கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்த இயங்குதளத்தில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனிடையே கூகுள் நிறுவனம் ‘ஆப்’கள் சந்தை எனப்படும் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகள், பாதிப்பு ஏற்படுத்தகூடிய மென்பொருகளை களையெடுத்து வருகிறது. 
 
இதில் முதற்கட்டமாக மக்களை ஏமாற்றி வசூல் செய்து வரும் 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’களை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. இதனை 5 கோடி பயனாளிகள் தரவிறக்கம் செய்ததுள்ளதாக கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 15 ஆப்களும் போக்குவரத்துக்கு வழி சொல்லக்கூடிய ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
புதுமை எதுவுமின்றி வெறும் கூகுள் நிறுவனத்தின் மேப் நேவிகேஷனை பயன்படுத்தி அதில் விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் விளம்பரங்கள் வரமால் இருப்பதற்காக பயனாளிகளிடமே வசூல் செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த வகை ‘ஆப்’களை உடனே தங்களது ஸ்மார்ட் போனில் இருந்து அகற்ற கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களை முட்டாளாக்கும் அந்த 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் இவைதான்..
1➤ Voice GPS direction
2➤ GPS Route Finder
3➤ GPS Route Tracker
4➤ GPS Maps & Navigation
5➤ Maps GPS Navigation
6➤ Live Earth Map
7➤ Live Earth Map & Satellite
8➤ Traffic updates: GPS free maps
9➤ Free GPS, Maps & Navigation
10➤ GPS Satellite maps
11➤ Free GPS Maps- Star Play Creations
12➤ GPS Street View- Maps Go
13➤ Voice GPS Driving- Delta raza apps
14➤ GPS Live Street Maps
15➤ Free GPS Traffic updates
Like Reply




Users browsing this thread: