20-01-2019, 10:29 AM
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பிப்ரவரி 1 முதல் கேபிள்/டிடிஹெச் சேவைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? இதற்கு நாம் எப்படித் தயாராக வேண்டும்?
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் விலைகளில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் மொத்தமாக ஒரு விலை கொடுப்பதற்கு பதிலாக, வேண்டிய டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும் என்கிறது டிராய்.
ஏன் இந்த மாற்றம்?
நாடு முழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி முடிவை நெருங்கி வரும் நிலையில் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும், மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை திட்டத்தைத் தீர்மானிக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆலோசித்துள்ளது டிராய். டிடிஹெச்களில் உங்களுக்கு வரும் சேனல்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள். அதில் எத்தனை சேனல்களை நீங்கள் பார்ப்பீர்கள், எத்தனை மொழி புரியாத சேனல்கள் வருகின்றன எனவும் யோசித்துப்பாருங்கள். இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஏன் மக்கள் பணம் கட்ட வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய விலை திட்டம் கொண்டுவரப்பட்டதுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. BARC அமைப்பின் தகவல்படி 50% மக்கள் 30 சேனல்களுக்கு மேல் பார்ப்பதில்லை. ஆனால், 300-க்கும் மேலான சேனல்கள் அவர்களுக்கு விற்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.