Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#1
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பிப்ரவரி 1 முதல் கேபிள்/டிடிஹெச் சேவைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? இதற்கு நாம் எப்படித் தயாராக வேண்டும்?
[Image: 147434_thumb.jpg]
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் விலைகளில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் மொத்தமாக ஒரு விலை கொடுப்பதற்கு பதிலாக, வேண்டிய டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும் என்கிறது டிராய்.
ஏன் இந்த மாற்றம்?
நாடு முழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி முடிவை நெருங்கி வரும் நிலையில் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும், மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை திட்டத்தைத் தீர்மானிக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆலோசித்துள்ளது டிராய். டிடிஹெச்களில் உங்களுக்கு வரும் சேனல்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள். அதில் எத்தனை சேனல்களை நீங்கள் பார்ப்பீர்கள், எத்தனை மொழி புரியாத சேனல்கள் வருகின்றன எனவும் யோசித்துப்பாருங்கள். இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஏன் மக்கள் பணம் கட்ட வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய விலை திட்டம் கொண்டுவரப்பட்டதுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. BARC அமைப்பின் தகவல்படி 50% மக்கள் 30 சேனல்களுக்கு மேல் பார்ப்பதில்லை. ஆனால், 300-க்கும் மேலான சேனல்கள் அவர்களுக்கு விற்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: 1_02525.jpg]
எனவே, இப்போது `a la carte’ என்ற முறையில் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது டிராய். இதில் சேனல்கள் அனைத்துக்கும் ஒரு விலை இருக்கும். ஏற்கெனவே டிடிஹெச் நிறுவனங்கள் இந்த முறையில் சேவைகளைப் பெற வழிவகை செய்திருந்தாலும் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து டிடிஹெச் மற்றும் கேபிள் நிறுவனங்களுக்கும் இந்த முறையிலும், சேனல்களின் விலையிலும் ஒரு பொதுவான ஸ்டாண்டர்ட் இதுவரை இல்லாமல் இருக்கிறது. அந்த ஸ்டாண்டர்ட்டை கொண்டுவரவே இந்த வரைமுறையைக் கொண்டுவந்துள்ளது டிராய். இதன்மூலம் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் சேவையின் விலைகளும் இனி சீராக இருக்கும்.

கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படும்?
இதற்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற குழப்பம்தான் கடந்த ஒரு மாதமாக அனைவரிடமும் நிலவிவருகிறது. 100 சேனல்களைப் பெறுவதற்கு network capacity fee (NCF) எனப்படும் தொகையாக 130 ரூபாய் கட்ட வேண்டும். இதுவும் 18% ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் வரும். இதில் இலவச சேனல்களாக இருக்கும் 100 சேனல்களை நீங்கள் பெறலாம். 100-க்கும் அதிகமான சேனல்கள் வேண்டுமென்றால் கூடுதல் 25 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த 130 ரூபாய் என்பது network capacity fee தானே தவிர, 100 இலவச சேனல்களில் விலை என்று முதலில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதில்தான் குழப்பங்களும் தொடங்கின. கட்டணமுள்ள சேனலோ (இதன் கட்டணத்தை இத்துடன் தனியாகச் செலுத்த வேண்டும்), கட்டணமில்லாத சேனலோ மொத்தம் 100 சேனல்கள் வரை பெற இந்த 130 ரூபாய் NCF-ஐ செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஒரு தனியார் நிறுவனம் வழங்கும் உத்தேச திட்டம் ஒன்றைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
Like Reply
#3
[Image: 2_02232.jpg]
தமிழ் மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு மொத்தம் 294 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் உங்களுக்கு மொத்தம் 52 இலவச சேனல்கள், 23 கட்டணமுள்ள சேனல்கள், 25 தூர்தர்ஷன் சேனல்கள் கிடைக்கும். இந்த 294 ரூபாய் எப்படி வந்தது?
100 சேனல்களுக்கு வேண்டிய network capacity fee = 130 ரூபாய்
52 இலவச சேனல்களின் விலை = 0 ரூபாய்
23 கட்டணமுள்ள சேனல்கள் = 119 ரூபாய்
மொத்த GST = 45 ரூபாய்
மொத்தம் = 294 ரூபாய்
இந்த 100 சேனல்கள் கணக்கில் HD சேனல்கள் இரண்டு சேனல்களாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப் புதிய விலைத்திட்டத்தால் இதனால் விலை ஏறுவது ஒருவகையில் உண்மைதான். ஆனால், தற்போது நம் கேபிள் மற்றும் டிடிஹெச்களில் பெறும் 300 சேனல்களில் பாதிக்கும் மேலான சேனல்களை நாம் என்னவென்றுகூட பார்த்திருக்க மாட்டோம். எனவே, வேண்டிய சேனல்களை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் முன்பிருந்த கேபிள் தொகையிலோ சற்று கூடுதல் விலையிலோ உங்கள் மாத சந்தாவை முடித்துக்கொள்ள வாய்ப்புகளுண்டு. எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பது இதில் மிகமுக்கியம். விளையாட்டுச் சேனல்களைத் தேவைப்படும் மாதம் மட்டும் அவற்றை உங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். இருப்பினும் விலைகளை மேலும் குறைக்கலாம் என்பதுதான் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்களின் வேண்டுகோள். ஆனால், எப்படியும் விலை அதிகமாக இருந்தால் பார்வையாளர்கள் குறைந்துவிடுவர். சேனல்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே எப்படியும் சேனல்களின் விலை நாள் போக்கில் குறைந்து சரியான விலைக்கு வந்துவிடும் என்கிறது ஒரு தரப்பு. அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் என்கின்றனர். இதனால் சாதாரண கேபிள் விலை கூடும் என்றாலும் அதே நேரத்தில் தனியார் டிடிஹெச் சேவைகளின் விலை குறையும். புதிய விலைத்திட்டத்தின்படி ஒவ்வொரு சேனலின் MRP விலையையும், இலவச சேனல்களின் பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்
Like Reply
#4
[Image: dish_02054.jpg]
MRP விலைப்பட்டியல்:
https://main.trai.gov.in/sites/default/files/PayChannels18122018_0.pdf
இலவச சேனல்கள் பட்டியல்:
https://main.trai.gov.in/sites/default/files/List_FTA_channel.pdf
மேலும் காம்போ (Bouquet plans) பேக்குகளையும் ஸ்டார், சன் போன்ற அனைத்து பிரபல டிவி நிறுவனங்கள் தருகின்றன. இதன் உத்தேச பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.  
சிக்கல்கள் என்ன?
இந்த மாதம் தொடங்கியே வாடிக்கையாளர்களுக்கு உதவ ஒவ்வொரு சேனலின் விலையையும் 'Electronic Program guide' மூலம் தங்கள் சேவைகளில் ஒளிபரப்ப வேண்டும் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகள். மேலும், இந்த முறையை அமல்படுத்த அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் மக்கள் தங்களது சேனல்களைத் தேர்வு செய்யத் தனியாக இணையதளம் போன்ற ஏதேனும் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர் தொடர்பு மையங்களும் ஏற்படுத்தித்தரவேண்டியது இருக்கும். இது டிஜிட்டல் செட்-அப் பாக்ஸ் சேவைகளுக்குச் சரி, சாதாரண கேபிள் மூலம் ஒவ்வொருவருக்கும் இப்படி வேறு வேறு சேனல்கள் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே அவர்கள் இந்தப் புதிய வரைமுறைகளுக்குள் உட்பட்டு அவர்களே என்ன என்ன சேனல்களைத் தரலாம் என்று சில திட்டங்களை வகுத்து அதைத்தான் மக்களுக்குக் கொடுக்க முடியும். இதைப் போன்ற 3, 4 திட்டங்கள்தான் அவர்களால் இப்படிக் கொடுக்க முடியும். எனவே டிராய் சொல்லுவதுபோல ஒருவர் தனக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்வதென்பது கேபிளை பொறுத்தவரை வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். இதைச் சில நிறுவனங்கள் ஆதரித்தாலும் பல எதிர்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது டாடா ஸ்கை நிறுவனத்தை உடையது
Like Reply
#5
[Image: cab_03541.jpg]
டாடா ஸ்கை vs டிராய்  
இதற்கிடையில் பிரபல டிடிஹெச் நிறுவனமான டாடா ஸ்கைக்கும் டிராய்க்கும் இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்காத காரணத்துக்கும் இந்தத் திட்டத்தை டிராய் தாமதப்படுத்தவுள்ளது. எனவே, பழைய குறைந்த விலை திட்டத்திலேயே இப்போது தொடர்வோம் போன்ற தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தந்ததற்காகவும் டாடா ஸ்கைக்கு கடும் எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது டிராய். டாடா ஸ்கை சேவையில் இந்தத் திட்டம் குறித்து வரும் செய்தி (ticker) என்ன தெரியுமா?
``After the new government tariff order applies and the prices are finalised we will contact you and migrate your channels and prices. This can take a few days. Till we connect with you, enjoy your current plan at the existing lower prices.’’
இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது டிராய். தாங்கள் தேதி எதையும் தள்ளிவைக்கவில்லை, வாடிக்கையாளர்கள் எந்த அசவுகரியங்களும் இன்றி சேனல்களைத் தேர்வு செய்யவே வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 31 வரை காலம் கொடுக்கப்பட்டது எனத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டாடா ஸ்கை சார்பில் என்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன என்ற 'Status report'-ஐ சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது டிராய்
Like Reply
#6
[Image: Trai_02393.jpg]
அதே நேரத்தில் ஏற்கெனவே இந்த புதிய விலைத்திட்டம் மூலம் டிராய் விலை நிர்ணயத்தில் அதிக அதிகாரம் எடுத்துக்கொள்வதாகவும், சலுகைகளில் கூட 15% மேல் வைக்கக்கூடாது எனப் போடப்படும் கட்டுப்பாடுகள் விதிப்பதின் மூலம் மக்களுக்குச் சரியான குறைந்த விலையில் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை அவர்களே கெடுகின்றனர் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது டாடா ஸ்கை. டாடா ஸ்கை தரப்பில் கபில் சிபில் ஜனவரி 15 அன்று உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். இதன்பின் இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்படி இந்த புதிய விலைதிட்டத்தை வடிவமைத்தது டிராய்? அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார் கபில் சிபில். டிராயின் இந்த புதிய திட்டத்தில் டிவி மற்றும் டிடிஎச் சந்தையில் வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்தார் அவர்.
நிலைமை இப்படி இருக்க உண்மையில் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது மக்கள்தான். இந்த புதிய திட்டத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளவும் முடியாமல், என்ன செய்யவேண்டுமென்றும் தெரியாமல் குழம்பி நிற்பவர்கள் அவர்கள்தான். இந்த விஷயத்தில் என்ன நடப்பினும் தேவையான சேனல்கள் என்னவென்று இப்போதே தெளிவாக லிஸ்ட் போட்டு வைத்துவிட்டால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது.
Like Reply
#7
அவ்வளவு அக்கரை இருந்தால் அடிப்படை கட்டணம் 153. தேவையில்லை.நாங்கள் தெரிவு செய்யும் அலைவரிசைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்துவோம்.இல்லாவிட்டால் இலவசம் என்ற பெயரில் நாம் பார்க்காத 100 அலைவரிசைகள் மீண்டும் உபத்திரவம் தர போகிறது.
நீங்கள் இப்படி நினைத்துப் பாருங்கள்..... ஜியோ போன்ற நிறுவனம் ஒன்று வந்து நாம் காசு கொடுத்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் செலவின்றித் தருவதாகக் கூறும். உடனே அதனுடன் போட்டி போடமுடியாமல் பல சானல்கள் மூடிவிட வாய்ப்பு ullathu.
Like Reply
#8
TRAI New DTH Rules: ஏர்டெல், டாடா ஸ்கையில் அமலுக்கு வந்தது புதிய கட்டண சேனல்கள்!

டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல், டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது.
[Image: Tamil-image.jpg]

Highlights
  • அடிப்படை புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய்
  • இதுவரையில் 30%க்கும் அதிகமானோர் புதிய கட்டண சேவைக்கு மாறியுள்ளனர்


டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல்டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது. 

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும்
Like Reply
#9
[Image: l4ck66JGDEGhrAvw?format=jpg&name=small]
Quote:[Image: ENZn1vUn_normal.jpg]
[/url]Tata Sky

@TataSky





Dear Subscriber, as per the new pricing regime, all channel tariffs will undergo changes. To know more watch the video.
10:31 PM - Jan 24, 2019
[size=undefined][size=undefined]

[url=https://twitter.com/TataSky/status/1088481972765249536]124 people are talking about this


[/size]

[/size]


இதனிடையே டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு தென்னிந்திய கேபிள் டிவிஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்தவகையில், நேற்று தென்னிந்தியா முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டு ஒரு நாள் அடையாள எதிர்ப்பு தெரிவித்தனர்.


புதிய கருத்துகளுக்கு
மக்கள் சம்பாரிக்க வழி இல்லை, ஆனா மக்களிடமிருந்து புடுங்க வழி மட்டும் நிறைய கொண்டு வராங்க???? மக்களை வதச்சி மக்களுக்கே கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனா தனியார் கம்பெனிக்கு கொடுத்து மக்க...+
Kasimani C
0|0|0 சிறந்தது|பதில்
எல்லா கருத்துகளும்
கருத்துரை எழுதவும்




இந்நிலையில், புதிய டிராய் கட்டண சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 1ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று டிராய் தற்போது தெரிவித்துள்ளது. இதுவரையில் 30%க்கும் அதிகமானோர் புதிய கட்டண சேவைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் DTH மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இதனிடையே டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல், டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது. டாடா ஸ்கையைப் பொருத்தவரையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சேனல்களின் வகைகள் பிரிக்கப்பட்டு பேக்கேஜ் ஆகவும் வழங்கப்படுகிறது. அதாவது, செய்தி சேனல்கள், திரைப்பட சேனல்கள், பாட்டு சேனல்கள், குழந்தைகளுக்கான சேனல்கள் எனவும் பிரிக்கப்பட்டு தனித்தனி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அடிப்படை கட்டணம் போக, ஹெச்டி சேனல்களுக்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போது வரியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முன்பு வசூலித்த கட்டணங்களை விட டிடிஎச் சேவையில் பெருமளவு உயர்ந்துள்ளது
Like Reply




Users browsing this thread: