Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய ரயில்வே
#21
விமான நிலையத்தில் இருப்பது போல், ரயில் நிலையங்களிலும் ரயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வந்துவிட வேண்டும் என்ற புதிய திட்டத்தை நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 202 ரயில் நிலையங்களில் அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஓடும் ரயில்களில் ரோந்து பணிகள் அதிகரித்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு வசதியை மேம்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே படையின் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், “ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு மேம்படுத்தி வருகிறோம். அதன்படி முக்கியமான ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும்.
அதன்பின் வரும் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையம் உட்பட மொத்தம் 202 முக்கிய ரயில் நிலையங்களில் இந்தப் பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்தந்த ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும். நுழைவாயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளைச் சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிப்பர். இந்தத் திட்டம் ரூ.385 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது” என்று அவர் கூறினார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
கட்டணங்களை நிர்ணயித்து தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க பேச்சுவார்த்தை!
இந்திய ரயில்வேயை தினமும் சராசரியாக 2.45 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இது, ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தொகைக்கு இணையானதாகும்.
Like Reply
#23
ஆன்லைன் மூலம் ரயிலில் புக்கிங் செய்வது குறித்த சில அட்வைஸ் அல்லது டிப்ஸ் உங்களுக்காக,
1. அனைத்து ரயில்களின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் 120 நாட்களுக்கு முன்பிலிருந்து தொடங்கும்.
2. ஒரு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விண்ணப்பத்தில், ஒருவர் தனது அக்கவுண்ட் மூலம் ஆறு பேர் வரை மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். இதில், அனைத்து புக்கிங்கும் ஒரே ரயிலில், ஒரே இடத்திற்கு செல்லும் வகையில் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்.
3. டிக்கெட் வெற்றிகரமாக புக் செய்யப்பட்டுவிட்டால், பெர்த் எண், கோச் எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு கிடைக்கும்.
4. RAC என்று புக் ஆகும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தால், நீங்கள் ரயிலில் உட்கார்ந்து தான் செல்ல முடியும். இருப்பினும், ரயில் புறப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் சில புக்கிங்ஸ் கேன்சல் ஆகும் பட்சத்தில், உங்களுக்கு அந்த சீட் ஒதுக்கப்படும்.
5. சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, டிக்கெட் புக் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், RAC உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர் அதில் இடம்பெற்று, அவர்கள் ஐஆர்சிடிசி விதிப்படி ரயிலில் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவர்.
6. சார்ட் தயாரிப்பதற்கு முன்பு வரை மட்டுமே ஆன்லைனில் நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய முடியும். சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, உங்களால் ரத்து செய்ய முடியாது.
7. அப்படி ஒருவேளை, சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமெனில், பயணிகள் [email protected] எனும் முகவரிக்கு டிக்கெட் விவரம் குறித்த தகவலுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அதன்பிறகு, ஐஆர்சிடிசி அதன் மேல் நடவடிக்கை எடுத்து, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, உங்களது ரீஃபண்ட் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
8. அதேசமயம், சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகான டிக்கெட் ரத்து விவகாரங்களுக்கு என ஐஆர்சிடிசி TDR(ticket deposit receipt) எனும் வசதியை தருகிறது. இதன்மூலம், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். தவிர, ரத்து செய்யப்பட்ட டிக்கெட் ரீஃபண்ட் குறித்த நிலைமையையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. சார்ட்டில் இடம்பெறாத பயணிகள் எக்காரணம் கொண்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது ஆன்லைன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, திரும்பி அவரது வங்கிக் கணக்குக்கே பணம் திருப்பி அனுப்பப்பட்டுவிடும்.
10. டிக்கெட் யார் பெயரில் புக் செய்யப்பட்டுள்ளதோ அவரின் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்
Like Reply




Users browsing this thread: