Fantasy டிரக் ஓட்டுனர்
#1
ஊரடங்கு காலங்கள். கொரோனா என்றால் வைரஸ் உலகம் முழுக்க பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலம். அறிந்தோர் தெரிந்தோர் முகங்களில் எல்லாம் கலவரம் முண்டிருந்தது. கைகுலுக்குவது என்ற கலாச்சாரம் முற்றிலுமாக அழிந்து.. ஒருவர் கையை மற்றொருவர் தொட்டாலே தொற்றுநோய் பரவிடும் அபாயம் இருக்கின்றது என்பதால்.. பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்ற மாதிரி இருந்தது. 

கொரோனாவின் பரவலை தீவிரமாக தொடங்கி இருந்த காலம். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களும் தனித்தனி தீவுகளை போல துண்டிக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்தின. பேரிக்காடுகளை போட்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். 

தேவையின்றி மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. கோயில்கள் மூடப்பட்டன. வெகு சில தனியார் நிறுவனங்கள் மட்டும் வீட்டிலிருந்தே வேலை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தின. அத்தியாவசப் பொருட்களை வாங்க மக்களுக்கு வழிகள் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஆளும் கட்சியினுடைய பந்த் போல தோற்றம் அளித்தது. கடைவீதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பேருந்துகளோடவில்லை மக்கள் நடமாட்டங்கள் இல்லை. 

அரசு அலுவலகங்களும் வங்கிகளும் மூடப்பட்டு இருந்தன. மக்கள் தங்கள் வீட்டுக்கு மட்டுமே இருந்து பொழுதை போக்கிக் கொள்ளவும் சமைக்கவும் சாப்பிடவும் கற்றுக் கொண்டிருந்தார்கள். அருகருகே வீடுகளில் இருந்து யாரானேனும் பிணமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உலகம் எங்கும் குற்றச்செயல்கள் குறைந்து போயின. 

கொரோனா காரணமாக இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர எல்லைக்குள் உள்ள சாலைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனாலும், ஒரு சில வாகனங்கள், பெரும்பாலும் வணிக வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் டாக்சிகள் மட்டுமே நெடுஞ்சாலையில் காணக்கூடிய வாகனங்கள்.

வலுவாக காவல்காத்தனர் காவலர்கள். சரியான காரணமில்லாமல் சுற்றினால் அபராதமும் சிறையும் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல மட்டுமே வாகன போக்குவரத்து அனுமதி இருந்தது. அந்த வாகனங்களில் சிலர் பணத்திற்காக மக்களை அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்து செல்ல பணம் அதிகளவு வாங்கிக் கொண்டார்கள். 

மகாராஷ்டிரா நாக்பூரிலிருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று கிளம்பியது. பாரத்பென்ஸ் டெய்ம்லர் டிரக் வணிக வாகன குடும்பத்தின் இளைய உறுப்பினர். இந்த பிராண்ட் குறிப்பாக இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்டது. பாரத் பென்ஸ் 55 டன் வரை எடை தாங்க கூடியது. சமீபத்தில் வந்த டிரக்குகளில் அதி நவீன வசதிகளை கொண்ட டிரக். அதனுடைய அனைத்து வாகனங்களும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

அந்த வாகனத்தின் முதல் நிறுத்தம் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாம்ப். ஒரு மணி நேரத்தில் ஜாம்பின் மருத்துவ கேம்பிற்கு வந்தடைந்து. காவலர்கள் அவரை சரிபார்த்தனர். டிரக்கின் முன்பக்கம் மெடிக்கல் எமர்ஜென்சி என்று ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

காலியான 44 நெம்பர் ஹைவேசில் டிரக் வந்தது சிறப்பாக இருந்தது. நல்ல வேகம். மீண்டும் டிரக்கின் பயணம் தொடங்கியது. அடுத்த நிறுத்தம் ராமையாபேட். ஜாம்ப், ராமையாபேட், டுப்பாடு, ஓசூர், தர்மபுரி என ஐந்து நிறுத்தங்களுக்குப் பிறகு நேராக மதுரை சென்றடைய வேண்டியது.

புதிய பாரத் பென்ஸ் டிரக் ஜாம்பிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி கால் மணி நேரம் ஆகிறது. டிரைவர் உரத்த இசையை வைத்தார். இளையராஜாவின் 80களின் பாடல்கள் பாடத்தொடங்கியது. அதனை ரசித்தபடியே காலியான நெடுஞ்சாலையில் குளிர்ந்த மாலைக் காற்று முகத்தை வருடியது. வழியெங்கும் ஒரு வாகனமும் எதிர்படவில்லை. ஆங்காங்கே இருந்த ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. நெடுநாளைக்கு பிறகு ஓட்டுனருக்கு கிடைத்த வாய்ப்பு.. மிக அதிக வேகத்தில் ஓட்டி பார்த்து மகிழ்ந்தார். 

அப்போதுதான் அவர் சாலையோரத்தில் ஒரு டாக்ஸி இருப்பதைக் கண்டார். முன்னும் பின்னும் எச்சரிக்கை முக்கோணங்கள் இருந்தன. அரை மணி நேர பயணத்தில் அவர் சந்திக்கும் முதல் வாகனம் இது. டிரக்கின் வேகத்தினை படிப்படியாக குறைத்துக் கொண்டார். 

டாக்சகயின் பானட் திறந்த நிலையில் இருந்தது. அந்த டாக்சியில் பிரச்சனை இருப்பது டிரக் ஓட்டுனருக்கு தெரியாதா?. டாக்ஸிக்கு முன் சுமார் 50மீ தொலைவில் தனது டிரக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். டிரக் நிறுத்தப்படுவதைஸ அறிந்த டாக்சி ஓட்டுனர் ஓடோடி வந்தார்.

"ஹாய்.. வண்டில் ஏதாவது பிரட்சனையா?" என மராட்டியில் கேட்டார் டிரக் ஓட்டுனர். 
"அப்பாடி நீங்க மராட்டியா?!. நண்பா." டாக்சி ஓட்டுனர் வியந்தார்.
"அதெல்லாம் இல்லை. சில மொழிகள் எனக்கு தெரியும். என்னோட பேரு சிவபிரசாத். நீங்க..?"
"நான் ராகவன். மகாராஷ்டிராவில் இருந்து வாரேன்.."
"அதான் வண்டி நம்பரை பார்த்தாலே தெரியுது.. சவாரியா?"
"ஆமா.. மும்பை டூ சென்னை"
"பெரிய சவாரிதான். " டாக்சி ஓட்டுனர் சிரித்தார். 

கைப்பேசி சிக்கலைச் சரிபார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு உதவ அவர் டாக்ஸியை அணுகினார் டிரக் ஓட்டுனர் சிவபிரசாத். 

"என்ன பிரட்சனை வண்டியில. ஏதாவது உதவி என்னால பண்ண முடியுமா?"

"எஞ்சின் பிரட்சனைனு நினைக்கிறேன்."
"சொந்த வண்டியா?"
"இல்ல. நான் வாடகைக்கு ஓட்டரவன். கூலி."
"ஓ.. முதலாளிக்கிட்ட சொல்லிட்டியா?. "
"எங்க அரை மணி நேரமா தூக்கி பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் சிக்கலை கண்டுபிடிக்க முடியல."
"எந்த நெட்வொர்க்?"
"ஏர்டெல்.."
"வேலைக்கு ஆகாது. நீங்க என் போனில் இருந்தே டிரை பண்ணுங்க.. என்னோடது பிஎஸ்என்எல்"

ராகவன் தன்னுடைய முதலாளியிடம் பேசிவிட்டு வந்தான். 
"முதலாளி என்ன சொல்லாரு. சவாரியை இங்கையே முடிச்சுக்கிட்டு வண்டியை சரி பண்ணிக்கிட்டு வர சொன்னாரு.."
"சவாரிக்கிட்ட பேசிப்பாருங்க.. "
"நீங்க அவரை சென்னையில இறக்கிவிட முடியுமா..?"
"நான் ஓசூர் போகனும். மெடிக்கல் டெலிவரி இருக்கு. வண்டி ஜிபிஎஸ் சிஸ்டம். டெலிவரி பாயிண்ட் போகாம வேற எங்கும் போக முடியாது. இப்ப வண்டி இங்க நிற்கறத்துக்கே கேள்வி கேட்பாங்க. அதனால ஆனந்தப்பூர, பெங்களூர், ஓசூர் இங்க அவங்க விரும்பறாங்களோ.. இறங்கிகிடட்டும்.. சீக்கிரம் கேட்டு சொல்லுங்க.."
"சரிங்க அவங்ககிட்ட கேட்கிறேன். இந்த வழி உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? உதவக்கூடிய மெக்கானிக் கடை அருகில் உள்ளதா?"

"கோவிட் காரணமாக, அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலி. நாக்பூர் பக்கத்துல இருக்கிங்க. நான் எனக்கு தெரிஞ்ச மெக்கானிக்கை கூப்பிடறேன். ஆனா வண்டியோ இந்த கண்டீசனுக்கு இங்க வேலை பார்க்க மாட்டிங்க. டோ பண்ணி நாக்பூர்ல தான் பார்ப்பாங்க. உங்க முதலாளியை நாக்பூர் வர சொல்லுங்க. நிறைய செலவு வைக்கும்."
"சரி வர சொசொல்லுங்க.. எவ்வளவு நேரம் ஆகும்.?"
"குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம். இப்ப உடனே கிளம்பியிருந்தா.. இல்லைனா இன்னும் அதிகநேரமாகும். ஆனா பிரட்சனையே போலீஸ்காரங்கதான். எமர்ஜென்சி வண்டிக்கு மட்டும் தான் அனுமதி. நீங்த எப்படி வந்தீங்க.?."
"ஈ பாஸ்.."
"நல்லது.. நானும் மெக்கானிக்கை ஈ பாஸ் எடுத்துட்டு வர சொல்லறேன். நம்பரை குறிச்சு வைச்சுக்கோங்க.."
"சரி.. சவாரியை என்ன பண்ணறது.?" "அவங்ககிட்ட பேசிபாரு. வேறுவழியே இல்லை".
"சரி"

டாக்சி ஓட்டுனர் ராகவன் தன்னுடைய நிலையைப் பற்றி பயணியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். பெரிய போராட்டமே நடந்தது. 

"டாக்சி எஞ்சினில் பிரட்சனைங்க. "
"உங்களால சரி பண்ண முடியாதா?"
"சின்ன பிரட்சனைனா.. நானேன் சரி பண்ணுவேங்க.. இதெல்லாம் தெரியாது.."
"என்னாப்பா. இப்படி பாதி வழியில சொன்னா என்ன பண்ண முடியும்.. ஏற்கனவே டூ ஹவர்ஸ் இங்க காத்திருக்கோம்.."
"சாரிங்க. கோவிட் டைம். இல்லலனா சீக்கிரம் சரி பண்ணிட்டு கிளம்பிடலாம். இப்ப நாக்பூரில் இருந்து மெக்கானிக் வரதுக்கே ஈபாஸ் எடுக்கனும்.."
"யார் முகத்திலுல முழிச்சேனோ தெரியலை..."
"அந்த டிரக் மதுரை போகுதுங்க. நீங்க வேணா ஆனந்தப்பூர், பெங்களூர், ஓசூர் என உங்களுக்கு சென்னைக்கு வண்டி கிடைக்கிற இடத்தில இறங்கி மாறிக்கோங்க.."
"மதுரை தானே போகுது. சென்னையில இறக்கி விய மாட்டாங்களா.."
"அதுக்கு வாய்ப்பில்லைங்க. வண்டியில ஜிபிஎஸ் இருக்காம்.. வேற பாதையில போக முடியாது."
"அடக்கடவுளே.. " 

பேச்சுவார்த்தை முடிந்த பாடில்லை. 
"தம்பி ராகவா.. என்ன சொல்லறாங்க.." சிவபிரசாத் கேட்டார்.
"சென்னையில இறக்கிவிட முடியுமானு கேட்கிறாங்க.."

"அதுக்கு வாய்ப்பில்லை ராகவா. ஆனந்த்பூரில் இருந்து கடப்பா, திருப்பதி வழியா சென்னை போரவங்க இருப்பாங்க. நான் உங்களுக்கு கேரண்டி தாரேன். சென்னைக்கு போயிடலாம்.. எனக்கு நேரமாகுது. நான் கிளம்பனும்.. வாராங்களா வரலையானு கேட்டு சொல்லுங்க.."
"அண்ணா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.."

பின்சீட்டில் அமர்ந்திருந்தவரிடம் ராகவன் பேசினார். அவருக்கு வேறு வழியே இல்லை. ராகவன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி தெரிந்தது. கையில் சில ஐநூறு ரூபாய் தாள்களுடன் சிவபிரசாத்தை நோக்கி ஓடி வந்தார்.

"அண்ணா வாரேனு சொல்லிடாங்க.. நீங்க பத்திரமா கூட்டிக்கிட்டு போயிடுங்க. அந்த மெக்கானிக்கை கண்டிப்பா வர சொல்லுங்க.. இந்தாங்க.." என ஒரு ஐநூறு ரூபாயை சிவபிரசாத் கையில் திணித்தார்.
"இது எதுக்கு..?"
"இரண்டு மணி நேரமா என்ன செய்யறதுனு தெரியாம நின்னுக்கிட்டு இருந்தேன். நீங்க உதவியதற்கு.. வைச்சுக்கோங்க.."
"இந்த மாதிரி கஷ்ட்டமான நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுறது நல்லது. நீ இதுக்கெல்லாம் காசெல்லாம் கொடுக்காத.. "
"அண்ணா உங்களுக்கு பெரிய மனசு.. "
 
டாக்சியை விட்டு கீழே இறங்கினார் பயணி. 

பயணி ஆணாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் 1 என்ற பத்தியை படியுங்கள்.
பயணி பெண்ணாக இருக்க வேண்டும் என நினைத்தால் 2 என்ற பத்தியை படியுங்கள். 1 மற்றும் 2 என இரண்டையும் படிக்க வேண்டாம்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)