Romance உன்னால் தவிக்கும் மனமே...!
#1
Heart 
உன்னால் தவிக்கும் மனமே...!

1

இது ஒரு கற்பனை கதை
 
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு அழகான காலைப்பொழுது! அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் சத்தமாக ஒலித்தது.
 
நான் தூக்கத்தில் இருந்ததால் மெல்ல கண் விழித்து அதை எடுத்து பார்த்தேன்.
 
என் நண்பன் கோபிதான் அழைத்தான்.
 
“இவன் எதுக்கு இப்ப பண்றான்!”
 
நான் யோசித்துவிட்டு அதை எடுத்து பேசினேன்.
 
“ஹலோ சொல்லுடா கோபி”
 
“மச்சி என்னடா பண்ற?  இன்னுமா தூங்கிட்டு இருக்கே!  இன்னக்கி நாம காலேஜ் அட்மிசனுக்கு போகணும் மறந்துட்டியா?” என்று கேட்டான்.
 
அப்பொழுதுதான் எனக்கு அட்மிசன் பற்றிய ஞாபகம் வந்தது! இருந்தாலும் சமாளித்தேன்.
 
“ஒன்பது மணிக்குதானே போகணும் இப்பவே எதுக்குடா ஃபோன் பண்ணுறே?”
 
“இல்ல மச்சி கொஞ்சம் சீக்கிரமா போனாதான் நல்லது! இல்லனா காலேஜ் சீட் முடுஞ்சுடும்! நான் ஒன் ஹவர்ல உங்க வீட்டுக்கு வந்துடுவேன்! சீக்கிரம் கிளம்புடா!”
 
நானும் சரி என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.
 
நான் அசோக் இந்த வருடம்தான் பள்ளி படிப்பை முடித்தேன்.
 
மேல் படிப்புக்கு கல்லூரிக்கு செல்ல இருக்கிறேன்.
 
கோபி என்னுடைய உயிர் நண்பன்.
 
சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக படித்து வருகிறோம்.
 
அதேபோல் இருவரும் ஒரே கல்லூரியில் சேரலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்.
 
ஆனால் என்னுடைய மனதிற்கோ கல்லூரி செல்வதற்கு மிகவும் பயமாய் இருக்கிறது.
 
ஏனென்றால்! நான் சிறுவயது முதலே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த காரணத்தினால், கல்லூரிக்கு சென்றால் பெண்களும் ஒரே வகுப்பில் இருப்பார்களே எப்படி பேசுவது என்று தயங்கினேன்.
 
ஆனால் கோபிக்கு அப்படியில்லை! அவனது உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களுடன் சகஜமாக பழகியிருந்தான். அதனால் அவனுக்கு இருபாலர் படிக்கும் கல்லூரியில் சேர்வதற்கு புதிதாக தோன்றவில்லை.
 
என்னுடைய பக்கத்து வீடுகளில் பெண்கள் யாரும் இல்லை.
 
அப்படி இருந்தாலும் நான் பேசியிருக்க மாட்டேன்.
 
அதற்கு காரணம் பெண்களிடம் பேசினால் அம்மா திட்டுவார்கள் என்கிற பயம்தான்.
 
அதனால்தான் கல்லூரி அட்மிசன் பற்றி நான் மறந்துவிட்டேன்.
 
இருந்தபோதிலும் கோபியும் என்னுடன்தானே சேரபோகிறான் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தேன்.
 
“அசோக்! இன்னக்கி அட்மிசன் போறேன்னு சொன்னியே இன்னும் கிளம்பலையா?” என்று அம்மா கேட்டார்கள்.
 
“இதோ கிளம்ப போறேன்மா! கோபி கொஞ்ச நேரத்துல வந்துடுவான்! போயி குளிச்சுட்டு வந்துடுறேன்”
 
என் வீட்டில் அம்மா! அப்பா! மற்றும் தம்பி உள்ளனர்.
 
அப்பா வெளியூரில் வியாபாரம் செய்வதால் மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
 
தம்பி சுரேஷ் பள்ளியில் படிக்கிறான்.
 
இப்பொழுது அவன் சுற்றுலா சென்றுள்ளான்! இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவான்.
 
நான் குளித்து உடைமாற்றி வருவதற்கும்! கோபி வீட்டிற்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
 
“கோபி எப்படிப்பா இருக்கே?” என்று அம்மா நலம் விசாரித்து கொண்டிருந்தார்கள்.
 
அவனும் “நல்லா இருக்கேன்மா” என்று பதில் சொல்லிவிட்டு என்னை பார்த்தான்.
 
“அம்மா நாங்க கிளம்பறோம்!” என்றேன்.
 
“என்னடா அவசரம்? சாப்பிட்டுதான் போகணும்!”
 
“நேரம் ஆச்சுமா கிளம்புறோம்!” என்று கோபியும் சொன்னான்.
 
ஆனால் அம்மா விடவில்லை இருவரையும் சாப்பிட வைத்துதான் அனுப்பினார்கள்.
 
அதன்பின் கோபியின் பைக்கில் கிளம்ப தயாரானேன்.
 
எல்லா சான்றிதலும் எடுத்து கொண்டீர்களா? ஏதும் மறந்து வைத்து விடவில்லையே? என்று அம்மா கேட்டார்கள்.
 
“எல்லாம் எடுத்தாச்சுமா நாங்க கிளம்புறோம்!”
 
“நல்லப்படியா போயிட்டு வாங்க!” என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.
 
கோபி பைக்கை ஸ்டார்ட் செய்தான்! அவன் பின்னால் நான் அமர்ந்துக்கொண்டேன்! அங்கிருந்து கல்லூரியை நோக்கி கிளம்பினோம்.
 
அந்த கல்லூரி மிகவும் சிறப்பானது என்று ஊரில் உள்ள அனைவரும் சொல்வார்கள்.
 
அதோடு நான் இருக்கும் இடத்திலிருந்து இருபது நிமிடங்களில் செல்லும் தொலைவிலேயே இருந்ததால் எனக்கும் வசதியாக இருந்தது.
 
கோபிக்கு சற்று தொலைவுதான்! ஆனாலும் நான் கேட்டுக்கொண்ட காரணத்தினால் இந்த கல்லூரியில் அவனும் சேர வருகிறான்.
 
“மச்சான் காலேஜ் பத்தி நினச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா! பொண்ணுங்ககிட்ட நான் எப்படி தான் பேச போறேனோ”
 
“விடு மாமா நாமதான் ஒன்ன படிக்க போறோம்ல! எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்”
 
இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது கல்லூரி வந்தது. பைக்கை பார்க் செய்துவிட்டு கல்லூரியின் உள்ளே சென்றோம்.
 
அங்கு பார்த்தால் அட்மிசன் பார்ம் வாங்கும் இடத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன செய்வதென்று சிறிது நேரம் புரியவில்லை.
 
“நாம பார்ம் கண்டிப்பா வாங்குறோம்” என்று கூறிக்கொண்டே கோபி கூட்டத்திற்குள் நுழைந்தான்.
 
நானும் அனைவரையும் அடித்து பிடித்து அவனோடு நுழைந்தேன். ஒருவழியாக முன்னால் சென்று இருவரும் ஃபார்ம் வாங்கினோம்.
 
“அப்பாடா ஒருவழியா வாங்கியாச்சு!” என்ற சந்தோசத்துடன் அந்த விண்ணப்பத்தை வேகமாக எழுதி பூர்த்தி செய்துவிட்டு அங்கு சமர்பித்தோம்.
 
மீண்டும் எப்போது வர வேண்டும் என்று கேட்டோம்.
 
“மதியத்துக்கு மேல நோட்டீஸ் போர்டுல லிஸ்ட் ஒட்டுவோம்! அதுக்கு அப்புறம்தான் அட்மிசன்!” என்று அலுவலர் ஒருவர் கூறினார்.
 
மதியம் வரைக்கும் என்ன செய்வது என்று யோசித்தோம்.
 
“படத்துக்கு போலாம்!”
 
“இல்லடா கோபி வேணாம்!”
 
“டேய் அசோக்கு! நீயெல்லாம் எப்பதான் மாறப்போற? ஸ்கூல் படிக்கும்போதும் படத்துக்கு வரமாட்ட! இப்பயும் இப்படி பண்றே போடா!”
 
“விடு மச்சி காலேஜ் சேந்ததும் அடிக்கடி போலாம்டா! இப்ப நாம கோவிலுக்கு போயிட்டு வருவோம்!” என்றேன்.
 
“எதுக்குடா இப்போ?”
 
கோபி என்னை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்தான்.

“இல்லடா அட்மிசன் சீட் கிடைக்கணும்ல! அதோட கோவில் போனா கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்னு நினைக்குறேன்”
 
இதுக்குமேல் என்னை எதிர்த்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்து “ஏதோ நல்ல விசயத்துக்குதான் சொல்லுறே சரி நானும் வரேன்டா!” என்றான்.
 
நாங்கள் இருவரும் அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றோம்.
 
“நான் பைக் பார்க் பண்ணிட்டு வரேன் நீ முதல்ல உள்ள போ” என்று கோபி சொன்னான்.
 
நான் மெதுவாக கோயில் வாயில் உள்ளே சென்றேன்.
 
அப்போது கண்ணிமைக்கும் நொடியில் ஒரு சம்பவம் நடந்தது.
 
நான் நுழைந்த அதே நேரத்தில்! எனது பக்கவாட்டில் யாரோ என்னை பலமாக இடித்ததை போன்று உணர்ந்தேன்.
 
உடனே எனது தோள்பட்டை லேசாக வலி எடுத்தது.
 
அடுத்த நொடி யாரோ கீழே விழுவது போலவும் தோன்றியது.
 
அந்த வலியுடன் யாரென்று அருகில் பார்த்தேன்.
 
என் கண் இமைகள் மிகவும் அகலமாக விரிந்தது.
 
ஏனென்றால்!
 
என்னை இடித்துவிட்டு கீழே விழுந்தது!
 
ஒரு பெண்!
 
அவளது முகம் நிலவை போன்று பளிச்சென இருந்தது.
 
என்னை இடித்துவிட்டு மீண்டும் எழுவதற்கு முடியாமல் கீழே விழுந்து கிடந்தாள்.
 
அவள் தூய்மையான பால் போன்ற வெண்ணிற மேனியோடு சராசரியான உடல்வாகுடன் இருந்தாள்.
 
அவளது நிறத்திற்கு ஏற்றாற்போல் சிகப்பு வண்ணத்தில் சுடிதார் அணிந்து மிகவும் அழகாக இருந்தாள்.
 
எனக்கு மட்டும் அவள் விண்ணில் இருந்து இறங்கி வந்த தேவதைபோல் தெரிந்தாள்.
 
நான் எந்த ஒரு பெண்ணையும் இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை என்பதால் உடலில் ஏதோ வேதியல் மாற்றம் நடந்ததை போல் தோன்றியது.
 
உடனே இமைகளை மூடுவதற்கு மனமில்லாமல் அவளை மட்டும் ஒருவித சந்தோசத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
 
அவளது திராட்சை விழிகளும் என்னைவிட்டு அகலவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
 
எனக்கு அவளை தூக்கி விடவும் தோன்றவில்லை.
 
அவளுக்கு கீழே விழுந்து கிடக்கிறோம் என்றும் தெரியவில்லை.
 
சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் எங்களை சூழ்ந்துகொண்டனர்.
 
அப்போதுதான் இருவரும் நினைவிற்கு வந்தோம்.
 
அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து தூக்கிவிட்டு எதுவும் அடிபட்டுவிட்டதா என்று விசாரித்தனர்.
 
அவள் என்னை பார்த்தபடி ஒன்றும் ஆகவில்லை என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தாள்.
 
ஆனால்! “ஏன் இந்த பொண்ண தள்ளிவிட்டே ?” எனக்கேட்டு அனைவரும் என்னை திட்ட ஆரம்பித்தனர்.
 
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
 
நான் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முயற்சித்தேன்.
 
”ப்ளீஸ்! யாரும் திட்டாதிங்க! இவர் என்னைய இடிக்கல! நான்தான் என்னோட தோழிய துரத்திட்டு போகும்போது இவர் மேல தெரியாம இடிச்சு கீழே விழுந்துட்டேன்! என்னைய மன்னிச்சுடுங்க!”
 
அவளது இனிமையான குரலில் சோகமாக கூறினாள்.
 
எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
 
ஆனால் பேசுவதற்கு எதுவும் தோன்றாமல் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
 
அந்த நேரத்தில் அவளுடைய தோழி அங்கு வந்தாள்.
 
“ஏன்டி பாத்து வரக்கூடாது?” என்று சொல்லியவாறு அவளை கோபமாக திட்டிவிட்டு அவளது கையை பிடித்து வேகமாக அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வெளியில் சென்றாள்.
 
பிறகு கூட்டமும் கலைந்து சென்றது.
 
நான் மட்டும் அவள் செல்லும் திசையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு அங்கேயே சிலைபோல் நின்றேன்!
[+] 3 users Like feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Nice start brother, your stories are so relaxing continue the good work
Like Reply
#3
இந்த கதை ஏற்கனவே நீங்கள் இந்த தளத்தில் பதிவிட்ட கதை தானே நண்பரே..!ஏன் அதை நீக்கி விட்டு மீண்டும் புதிதாக பதிவு இடுகிறீர்கள்.நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதிலேயே செய்யலாமே..இல்லை அதை நீக்காமல் புதிதாக உன்னால் தவிக்கும் மனமே 2.0 என்று வெளியிடலாமே..!ஏன் நீக்குகிறீர்கள் என்று புரியவில்லை.இதனால் உங்கள் வாசகர்கள் ஏமாற்றம் அடைய கூடும்.
Like Reply
#4
(02-03-2024, 12:35 AM)Lashabhi Wrote: Nice start brother, your stories are so relaxing continue the good work

(02-03-2024, 12:52 AM)Geneliarasigan Wrote: இந்த கதை ஏற்கனவே நீங்கள் இந்த தளத்தில் பதிவிட்ட கதை தானே நண்பரே..!ஏன் அதை நீக்கி விட்டு மீண்டும் புதிதாக பதிவு இடுகிறீர்கள்.நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதிலேயே செய்யலாமே..இல்லை அதை நீக்காமல் புதிதாக உன்னால் தவிக்கும் மனமே 2.0 என்று வெளியிடலாமே..!ஏன் நீக்குகிறீர்கள் என்று புரியவில்லை.இதனால் உங்கள் வாசகர்கள் ஏமாற்றம் அடைய கூடும்.

கதைக்கு ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி!

இந்த கதையின் பழைய திரியை ரீஸ்டோர் செய்தபோது அதில் சில பகுதிகளை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன் என்பதை இப்போதுதான் கவனித்தேன்.

அதை பழைய திரியில் பதிவு செய்ய முயற்சி செய்தேன். ஆனால் பெரிய பகுதிகள் என்பதால் எடிட் செய்து அப்டேட் செய்வது கடினமாக இருந்தது.

அதனால்தான் கதையை புதிய திரியில் அப்டேட் செய்கிறேன்.

இந்த கதை நெஞ்சை தீண்டும் அம்பு...! கதையோடு பயணிப்பதால் நிச்சயமாக நண்பர்களை ஏமாற்ற மாட்டேன்.

விரைவில் அனைத்து கதைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

மேலும் புதிதாக படிக்கும் நண்பர்களும் கதைக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#5
மிகவும் அருமையான தொடக்கம் நண்பா
Like Reply
#6
(03-03-2024, 06:05 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான தொடக்கம் நண்பா

மிக்க நன்றி நண்பரே!
Like Reply
#7
Good start
Like Reply
#8
(03-03-2024, 03:38 PM)Losliyafan Wrote: Good start

மிக்க நன்றி நண்பரே!
Like Reply
#9
உன்னால் தவிக்கும் மனமே...!

2


அந்த நேரத்தில் கோபி உள்ளே வந்தான்.

“என்ன மச்சி இப்படி நிக்குறே! பாக்க கூடாதது எதையும் பாத்துட்டியா?” என்று கலாய்த்தான்.
 
“ஒரு பொண்ண இடுச்சுடேன்! இல்ல இல்ல அவதான் என்ன இடுச்சுட்டு கீழ விழுந்துடா” என்று மாற்றி மாற்றி உளறி கொண்டு இருந்தேன்.
 
“எங்கடா இடிச்சே?  எதுலடா இடுச்ச?  பிகர் எப்படிடா இருந்துச்சு?” இப்படி கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தான்.
 
“கோவில்ல வந்து இப்டி அசிங்கமா பேசாதடா! நானே இப்படி ஆகிருச்சேனு வருத்ததுல இருக்கேன்”
 
“சரி விடுடா என்ன ஆச்சுனு சொல்லு மச்சி” என்று கோபி என்னை சமாதானம் செய்தான்.
 
நான் நடந்ததை கூறினேன்.
 
அனைத்தையும் கேட்டுவிட்டு “என்ன மச்சி லவ்வா?  செம பீலிங்கா பேசுற?”என்றான்.
 
“டேய் நாயே! கோவில்னு பாக்குறேன்! இல்ல நீ சட்னிதான்!” என்று அவனிடம் சீறினேன்.
 
கோபி சிரித்துகொண்டே “டென்ஷன் ஆகாத மச்சி! லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!” என்று மேலும் என்னையே கலாய்த்தான்.
 
நான் அதற்குமேல் அவனிடம் பேசவில்லை அப்படியே அமைதியாக நின்றேன்.
 
“டேய்! எவ்வளவு நேரம்தான் இங்கயே நின்னுட்டு இருப்பே? காக்கா வந்து உன்மேல கக்கா போயிட போகுது! வா உள்ள போகலாம்!” என்று அழைத்தான்.
 
பின்பு நானும் ஒரு மனதுடன் கோபியுடன் சென்று கடவுளை வணங்கிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்துக்கொண்டோம்.
 
“மச்சி...” என்று அழைத்தேன்.
 
“சொல்லுடா!” என்றான் கோபி.
 
“இன்னக்கி இந்த பொண்ண இடிச்சுட்டு இவ்வளவு பக்கத்துல பாத்ததுக்கே எனக்கு ரொம்ப பயமா இருக்குதே! அப்படி இருக்கும்போது நாளைக்கி காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் பொண்ணுங்ககிட்ட எப்படி பேசுறதுடா?” என்றேன்.
 
“ஓஹோ...! மேட்டர் அப்படி போகுதா! இன்னும் எத்தன பொண்ணுங்கள இடிக்கலாம்னு நினச்சுட்டு இருக்கே?” என்று சிரித்தான்.
 
“டேய் வெண்ண! நான் எதபத்தி சொல்றேன்! நீ எதபத்தி பேசுற? போடா...”
 
“அசோக்! ஏன் இப்படி டென்ஷன் ஆகுறே? நான்தான் உதவி பண்றதுக்கு இருக்கேன்ல!”
 
நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்! ஆனால் கோபி தொடர்ந்து பேசினான்.
 
“அசோக்! நீ அந்த பொண்ண இடிக்குற நேரதுல…”
 
“டேய்...”
 
உடனே கோபி பேச்சை மாற்றினான்.
 
“இல்லடா! அந்த பொண்ணு உன்னைய இடிச்ச நேரத்துல நான் மட்டும் இருந்துருந்தேன்னா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா?”
 
“என்னடா பண்ணிருப்பே?” ஆச்சரியத்துடன் கேட்டேன்.
 
“அப்படி கேளுடா! நான் உடனே என்னோட கைய புடிச்சு அவள தூக்கிவிட்டுருப்பேன்! அவ மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னாடியே தெரியாம இடிச்சுட்டேன்னு நானே மன்னிப்பு கேட்ருப்பேன்! இப்படி நீ பண்ணிருந்தா கூட்டமும் சேந்துருக்காது! அப்பறம் அப்படியே ஜாலியா பேசி அவ பேரு என்ன? நம்பர் என்ன? எல்லாம் கேட்டு வாங்கிருப்பேன்! முடிஞ்சா கூட இருந்த அவ ப்ரெண்டையும் கரெக்ட் பண்ணிருப்பேன்!” என்று சொல்லிக்கொண்டே போனான் கோபி.
 
“எப்படிடா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது?” என்று வியந்தேன்.
 
“அதெல்லாம் தானா வருது மச்சி!”
 
நீண்ட நேரம் இப்படியே பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாக மதியம் வந்தது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#10
“காலேஜ் போலாமாடா?” என்றான் கோபி.

நான் கைகடிகாரத்தை பார்த்தேன்.
 
“போகலாம்டா டைம் ஆச்சு” என்றதும் கல்லூரிக்கு கிளம்பிச்சென்றோம்.
 
அங்கே நோட்டீஸ் போர்டில் அட்மிசன் போடவேண்டிய பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதனை சுற்றி மீண்டும் அதே கும்பல் நின்றுக்கொண்டிருந்தது.
 
“நீ இங்கயே நில்லு நான் போயி பாத்துட்டு வரேன்” என்று கோபி அந்த கும்பலுக்குள் நுழைந்து பெயர் பட்டியலை பார்க்க சென்றான்.
 
நான் ஆவலுடன் அங்கேயே பார்த்து கொண்டிருந்தான்.
 
கோபி ஒரு வழியாக பார்த்துவிட்டு என்னிடம் வந்தான்.
 
“மச்சி! பாத்தியாடா! எப்ப அட்மிசன் போடணும்?”
 
கோபிக்கு முதலில் பேச்சு வரவில்லை... ஆனாலும் மெதுவாக பேசினான்.
 
“பாத்தேன்டா அசோக்! லிஸ்ட்ல உன்னோட பேரு இருக்கு! ஆனா.....”
 
“ஏன்டா இழுக்குற?” என்று கடுப்பானேன்.
 
“என்னோட நேம் இல்ல மச்சி!“ என்று கூறிவிட்டு அமைதியானான்.
 
“என்னடா சொல்ற ஒழுங்கா பாத்தியா? ” என்று பதறினேன்.
 
“நல்லா பாத்துட்டேன் என்னோட நேம் இல்லடா”
 
“செரி வா! என்னனு விசாரிக்கலாம்” என்று கோபியை கூட்டி சென்றேன்.
 
அட்மிசன் போடும் இடத்தில் ஏன் கோபியின் பெயரை சேர்க்கவில்லை என்று கேட்டேன்.
 
அங்கே இருந்த அலுவலர் பட்டியலை சரி பார்த்துவிட்டு கோபியின் மதிப்பெண் குறைவாக இருப்பதால் அவரது பெயரை சேர்க்கமுடியவில்லை. நான் அதிக மதிப்பெண் எடுத்ததால் எனது பெயரை பட்டியலில் சேர்த்ததாக கூறினார்.
 
இதை கேட்டு இருவரும் அதிர்ந்தோம்.
 
எப்படியாவது கோபியின் பெயரை சேர்க்குமாறு கோரிக்கை வைத்தேன்.
 
தயவு செய்து மன்னிக்கவும்! இப்படிதான் அட்மிசன் போடவேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வந்த உத்தரவு.
 
இதை என்னால் மீறமுடியாது என அந்த அலுவலர் கூறிவிட்டார்.
 
இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் இருவரும் ஒரு பெஞ்சில் வந்து வருத்ததுடன் அமர்ந்தோம்.
 
நீண்ட நேரம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.
 
அடுத்து என்ன செய்யலாமென்று அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தோம்.
 
பின்பு கோபி எழுந்து அவனது தந்தையிடம் தொலைபேசியில் பேசுவதற்கு சென்றான்.
 
அவரிடம் பேசிவிட்டு என்னிடம் வந்தான்.
 
“மச்சி நீ ஏதும் வொர்ரி பண்ணிக்காதடா! நான் என்னோட அப்பா கிட்ட பேசிட்டேன்! வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காலேஜ்ல சீட் இருக்காம். நாளைக்கு அங்க அட்மிசன் போட்டுறலாம்னு சொல்லிட்டாங்கடா!”
 
“அப்படியா மச்சி...! எனக்கும் அங்கயே அட்மிசன் போட்டுறலாமா?” என்று கேட்டேன்.
 
“டேய்! லூசு மாதிரி எதுவும் பேசாத!”
 
“ஏன் கோபி அப்படி சொல்லுறே?”
 
“மச்சி... இந்த காலேஜ்தான் உன்னோட படிப்புக்கு நல்லது! அதோட உனக்கு வீட்டுக்கு பக்கத்துல வேற இருக்குது! நீ இங்க தாண்டா படிக்கணும்! உன்னோட லைப்கு இதுதான் பெஸ்ட்” என்று சொல்லி முடித்தான்.
 
“என்னதான் இருந்தாலும் நீ இல்லாம எப்படிடா நான் இருப்பேன்? ஒருபக்கம் நீ இல்லாததை நினைச்சு வருத்தம்! இன்னொரு பக்கம் பொண்ணுங்க கிட்ட எப்படி பேசபோறேன்னு வேற பயம்! நான் என்ன பண்ண போறேன்னு எனக்கே புரியலைடா!”
 
“அசோக்! நான் சொல்றத முதல்ல கேளு!”
 
“அதான் கேட்டுட்டுதானே இருக்கேன்” என்று சலிப்படைந்தேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#11
“இப்போ கொஞ்சம் ஒழுங்க கேளுடா”

“ஹ்ம்ம்.... சொல்லு!”
 
“நம்ம லைப்ல எப்ப வேணாலும்... என்ன வேணாலும் நடக்கலாம்! நாம எல்லாத்தையும் எதிர்கொள்ள கத்துக்கணும்! இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல! நீ முதல் நாள் கிளாஸ்க்கு போனா உனக்கு நிறையா புது ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க! அவங்களோட பேசு எல்லாம் சரியாகிடும்! நாம வீக் எண்ட் சந்திக்கலாம்! என்னதான் இப்படி நாம வேற காலேஜ்ல படிச்சாலும் நம்ம நட்பை யாராலும் பிரிக்க முடியாது! பிரிவுதான் நம்ம நட்ப இன்னும் பலமாக்கும்!” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான்.
 
அதை கேட்டதுமே என்னுடைய உடம்பெல்லாம் சிலிர்த்து போனது.
 
நான் எப்போதெல்லாம் குழப்பத்தில் இருக்கிறேனோ அந்த வேளையில் கோபி நல்ல அறிவுரைகள் கூறி மனதை தெளிவுபடுத்துவான்.
 
கோபியும் நானும் உயிர் நண்பர்களாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.
 
“நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்கு! எப்பவும் நாம தைரியமா இருக்கணும்” என்று மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் தெளிவடைந்தேன்.
 
“ஓகே மச்சி! எல்லாம் புரியுது! நான் இங்கயே படிக்கிறேன்” என்று அமைதியானேன்.
 
சில நொடிகள் இருவருமே எதுவும் பேசவில்லை.
 
திடீரென்று கோபிதான் பேச ஆரம்பித்தான்.
 
“மச்சி! இப்படியே இருக்காத வா உனக்கு அட்மிசன் போடலாம்!” என்று கோபி அழைத்ததும் ஒரு மனதாக சென்று அந்த வேலைகளை முடித்தோம்.
 
அதன் பிறகு எப்போது கல்லூரி வரவேண்டும் என்று கேட்டோம்.
 
வரும் திங்கட்கிழமை வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது! சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வகுப்பறையில் இருக்க வேண்டும் என அலுவலர் கூறினார்.
 
அதன்பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினோம்.
 
வரும் வழியில் காலேஜ் செல்வதற்கு இன்னும் மூன்று நாள்தான் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே கோபியிடம் பேசினேன்.
 
“கோபி நீ நாளைக்கு வேற காலேஜ்ல சேரப்போகும்போது நானும் உன்னோட வரேண்டா!”
 
“வேணாம் மச்சி! என்னோட அப்பா என்கூட வரேன்னு சொல்லிருக்காரு! அட்மிசன் முடிஞ்சதும் நானே உனக்கு போன் பண்றேன்! நீ ரிலாக்ஸா இரு” என்று கூறினான்.
 
எனக்கு வேறு ஏதும் சொல்ல தோன்றவில்லை “சரிடா” என்று சொல்லிவிட்டு அமைதியானேன்.
 
என்னுடைய வீடு வந்தது.
 
“நான் கிளம்புறேன்டா! அப்புறம் மீட் பண்ணலாம்” என்று கோபி என்னை ட்ராப் செய்துவிட்டு கிளம்பினான்.
 
அப்போது ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்தது.
 
இனிமேல் கோபியை அடிக்கடி சந்திக்க முடியாது.
 
இத்தனை நாட்களாக அவனை தவிர வேறு எந்த நண்பர்களும் இல்லாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துவிட்டேன்.
 
அதை எப்படி சமாளிக்க போகிறேனோ? என நினைத்தவாறு சோகத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.
 
“ஏன்டா இப்படி மூஞ்சிய வச்சுட்டு வர்றே! என்னாச்சு?” என்று அம்மா விசாரித்தார்கள்.
 
நான் நடந்ததை கூறியதும் அவர்களும் சற்று வருத்தம் அடைந்தார்கள்.
 
“நீ கவலைப்படாத அசோக்! எல்லாம் நல்லதுக்குதான்!” என்று ஆறுதலாக பேசி என்னை தேற்றினார்கள்.
 
என்னுடைய முகம் கொஞ்சம் தெளிவானது... அதனால் “பசிக்குது” என்றேன்.
 
“போயி கைகால் கழுவிட்டு வா!” என்றார்கள்.
 
நானும் கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிவிட்டு வந்து சாப்பிட்டேன்.
 
பின்பு என் அறைக்கு சென்று கட்டிலில் படுத்தேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#12
எனக்கு ஒரு புறம் கோபியின் பிரிவு கண்களின் முன்னால் வந்து நின்றது.

இன்னொரு புறம் பார்த்தால்! கோவிலில் பார்த்த பெண்ணின் முகம் வந்து நின்றது.
 
யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் நினைப்பு எனக்கு எதற்காக வருகிறது?
 
ஒருவேளை கோபி சொன்னது போல எனக்கு அவள் மீது காதல் வந்துவிட்டதா?
 
“சீ... அதெல்லாம் இருக்காது!”
 
ஆனால் மீண்டும் அவளை காண்பேனா என்று யோசித்தேன்.
 
இரண்டையும் என்னால் மறக்க முடியவில்லை.
 
அதே நினைவுடன் அப்படியே தூங்கிவிட்டேன்.
 
மறுநாள் கோபியிடம் இருந்து மொபைலுக்கு அழைப்பு வந்தது.
 
“சொல்லூடா கோபி!”
 
“மச்சி! நான் காலேஜ்ல சேர்ந்துட்டேன்! எனக்கு இங்க ரொம்ப பிடிச்சுருக்கு! உனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகுற அதே நாள்தான் எனக்கும் ஆரம்பிக்கிறாங்க” என்று சந்தோசமாக கூறினான்.
 
“க்ரேட் மச்சி, ஆல் தி பெஸ்ட்டா!” என்று சொல்லி சிறிது நேரம் கோபியோடு மகிழ்ச்சியுடன் பேசிவிட்டு போனை வைத்தேன்.

ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் நண்பனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதே என்று சந்தோஷமாக இருந்தது.
 
இப்படியே இரண்டு நாட்கள் கடந்தது... சுற்றுலா சென்ற தம்பி சுரேஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
 
“என்னடா டூர் எப்படி இருந்துச்சு?!” என்று அம்மா கேட்டதும் அவனும் சுற்றுலா பற்றி விவரித்து கொண்டிருந்தான்.
 
இதுவரை நானும் தம்பியும் மகிழ்ச்சியாக பேசியது இல்லை! அதோடு சண்டை இட்டதும் இல்லை!
 
எதற்காக இப்படி இருக்கிறோம் என்று எங்களுக்கே புரியவில்லை. இருந்தாலும் கேட்கும் கேள்விகளுக்கு இருவரும் எப்போதும் சாதாரணமாகவே பதில் அளித்துக்கொள்வோம்.
 
“அண்ணா அட்மிசன் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
 
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்று சொல்லிவிட்டு அமைதியானேன்.
 
அதற்கு மேல் எந்த கேள்விகளும் இல்லை.
 
“எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது நான் படுக்குறேன்” என்று அம்மாவிடம் சுரேஷ் சொல்லிவிட்டு எழுந்தான்.
 
“டேய்! ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்கடா! அப்புறம் தூங்கலாம்!” என்று அம்மா கூறினார்கள். இருவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றோம்.
 
நாளை முதல் நாள் கல்லூரிக்கு செல்லபோகிறேன்.
 
ஒருவிதமான மகிழ்ச்சியுடன் கூடிய பயத்தில் படுத்து நன்றாக உறங்கினான்.
 
அடுத்தநாள் காலை!
 
“டேய்! அசோக் காலேஜ் போகணும்ல மணி ஆச்சு சீக்கிரம் கிளம்புடா!” என்று அம்மா வந்து எழுப்பினார்கள்.
 
நான் அப்படியே திடுக்கிட்டு எழுந்தேன்.
 
“அச்சசோ... இப்படி தூங்கிவிட்டோமே!” என்று யோசித்தவாறு வேகமாக குளித்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு என்னுடைய பைக்கில் செல்ல தயாரானேன்.
 
அப்போது தம்பி சுரேஷும் கிளம்பினான்.
 
அவனையும் பள்ளியில் டிராப் செய்துவிட்டு பதற்றத்துடன் கல்லூரிக்கு போய் சேர்ந்தான்.
 
“முதல்நாளே இப்படி டென்ஷன் ஆகிருச்சே”
 
பதற்றத்துடன் பைக்கை பார்க் செய்துவிட்டு என்னுடைய வகுப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டுகொண்டு வகுப்பறைக்கு சென்றேன்.
 
அங்கே வகுப்பில் எல்லா மாணவர்களும் வந்திருந்தனர்.
 
பேராசிரியரும் அனைவரின் முன்பாக நின்றவாறு பேசிகொண்டிருந்தார்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#13
நான் வகுப்பறையின் வாசலில் நின்றுகொண்டு “மே ஐ கம் இன் சார்” என்று கேட்டேன்.

அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர்.
 
பேராசிரியரும் வாசலை பார்த்தார்.
 
முதல் நாளே தாமதமாக வருகிறானே என்பது போல் யோசித்தார்.
 
பிறகு எதுவும் சொல்லாமல் உள்ளே அழைத்தார்.
 
நான் தைரியமாக வகுப்பறைக்குள் நுழைந்தேன்.
 
அங்கே ஆண்கள்! பெண்கள்! தனித்தனி வரிசையில் அமர்ந்திருந்தனர்.
 
எங்கே உட்காருவது என்று யோசித்தவாறு ஆண்கள் வரிசையில் முதல் பெஞ்சை பார்த்தேன்.
 
இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர்.
 
அந்த பெஞ்சின் ஓரத்தில் ஒரு இடம் காலியாக இருந்தது... அங்கு சென்று அமர்ந்தேன்.
 
நான் உட்கார்ந்த இடம் பெண்கள் வரிசைக்கு பக்கத்தில் இருக்கும் ஓராம் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் என்னுடைய நினைவுக்கு வந்தது.
 
இருந்தாலும் வேறு எந்த இடமும் காலியாக இல்லாத காரணத்தால் அந்த இடத்திலேயே அமர்ந்துக்கொண்டேன்.
 
அப்போது எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு வந்தது.
 
எனக்கு அருகில் இருந்த பெண்கள் பகுதியின் முதல் வரிசையில்... ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் என்னையே பார்ப்பதை போல தோன்றியது.
 
யாராக இருக்கும்?
 
எதற்காக என்னையே பார்க்கிறார்கள் என்று பயந்தேன்.
 
“ச்சே... அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது”
 
“நான் என்ன பெரிய அழகானா?”
 
கொஞ்சம் மாநிறத்தில் சராசரியான உடல் எடையுடன் பொதுவான உயரத்தில் இருப்பேன்.
 
என்னையெல்லாம் யார் பார்க்க போகிறார்கள்?
 
ஒருவேளை முதன்முதலாக பெண்கள் இருக்கும் வகுப்பில் அமர்ந்ததால் எனக்கு அதுபோல் தோன்றியிருக்கும்.
 
இது என்னுடைய பயத்தின் வெளிப்பாடு மட்டுமே! வேறொன்றும் இல்லை!
 
அவ்வாறு மனதினை கொஞ்சம் தைரியப்படுத்திக்கொண்டேன்.
 
பிறகு மற்றொரு யோசனையும் வந்தது.
 
அடுத்த மூன்று வருடத்திற்கு இங்குதான் படிக்க போகிறோம்.
 
எத்தனை நாட்கள் இப்படியே பயந்துகொண்டே இருக்க முடியும்?
 
இப்போதே இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தோன்றியது.
 
உடனே சந்தேகத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் சட்டென்று எனது இடப்பக்கத்தில் திரும்பி பார்த்தேன்.
 
அடுத்த நொடியே! என்னுடைய யோசனையெல்லாம் மொத்தமாக நின்றுபோனது.
 
ஆம்! நான் முதலில் நினைத்ததுதான் உண்மை!
 
என்னுடைய இடது பக்கத்தில் உள்ள முதல் வரிசையின் ஓரத்தில் இருந்த பெண்ணின் விழிகள் என்னைத்தான் கவனித்துகொண்டு இருந்தது...
 
ஐயோ! என்ன செய்வது என புரியாமல் பயத்தில் தவித்தவாறு அவளையே உற்று நோக்கினேன்.
 
அவளுக்கு அழகான திராட்சை போன்ற விழிகள்.
 
இந்த கண்களை எங்கோ பார்த்திருக்கிறோமே என்கிற யோசனையோடு அவளது முகத்தை முழுமையாக பார்த்தேன்.
 
பார்த்துவிட்டு அந்த நொடியே அதிர்ந்து போனேன்.
 
அவள் வேறு யாருமில்லை!
 
கோவிலில் என்னை இடித்துவிட்டு கீழே விழுந்தாளே அந்த “பெண்” தான்...
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#14
Super brother
Like Reply
#15
Very nice
Like Reply
#16
Superb
Like Reply
#17
உன்னால் தவிக்கும் மனமே...!

3


நான் அவளை பார்த்ததும் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டாள்... அதனால் நானும் நேராக அமர்ந்து கொண்டேன்.

“ஆகா...! இவ எப்படி இங்க வந்தா? கோவில்ல பாக்கும்போதே பயமா இருந்துச்சு! இப்ப என்னோட கிளாஸ்லயே படிக்க வந்துட்டாளே...!” என்று நடுங்கினேன்.

ஆனாலும் மீண்டும் அவளை பார்க்க முடியுமா என்று ஏங்கி கொண்டிருந்த என்னுடைய மனதிற்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

அப்போது பேராசிரியர் மாணவர்களை பார்த்து பேச ஆரம்பித்தார்.

“ஸ்டூடெண்ட்ஸ்! நான்தான் உங்க கிளாஸ் ப்ரொஃபெஸர் சுந்தரமூர்த்தி! இந்த கிளாஸ்ல இருக்குற நிறை குறைகள் மற்றும் உங்களுக்கு படிப்பு சம்பந்தமா ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட தாரளாமாக தெரிவிக்கலாம்! இன்னக்கி தான் எல்லாரும் முதல் நாள் வந்துருக்கீங்க... ஸோ... ஒவ்வொருத்தரா முன்னால வந்து உங்களை அறிமுகம் செஞ்சுகோங்க!” என்றார்.

முதலில் பெண்கள் பகுதியில் இருந்து அவள்தான் எழுந்தாள்.

வேகமாக நடந்து எங்களுக்கு முன்பாக வந்து நின்றாள்.

மிகவும் எளிமையான மஞ்சள் நிற கட்டன் சுடிதாருடன் மார்புக்கு ஷால் போட்டு அழகாக இருந்தாள்.

அவள் பெயர் என்னவென்று சொல்லபோகிறாள் என்கிற ஆவலுடன் அவளையே பார்த்துகொண்டு இருந்தேன்.

அவளும் ஓரக்கண்ணால் என்னை நோட்டமிட்டவாரே அமைதியாக இருந்தாள்.

பேராசிரியர் “யெஸ் உன்ன பத்தி சொல்லுமா!” என்றார்.

உடனே அவளும் பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்! குட் மார்னிங்! என்னோட நேம் தேன்மொழி!” என்று கூறினாள்.

பெயருக்கு ஏற்றார் போல் அவள் பேசிய ஓவ்வொரு வார்த்தையும் தேன் போல என் காதில் பாய்ந்து கொண்டிருந்தது...

அப்படி ஒரு இனிமை!

ஆனால் நான் அவளை மட்டுமே ரசித்துக்கொண்டு இருந்ததால் அவள் பேசியது எதுவுமே மனதில் நிற்கவில்லை.

தேன்மொழியின் பெயர் மட்டுமே எனது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துகொண்டிருந்தது.

பின்பு அவள் பேசி முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.

நான் அவளை திரும்பி பார்க்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால்! பேராசிரியர் என்னை பார்த்துவிட்டால் என்ன செய்வது?

அந்த பயத்துடன் எதிரில் இருக்கும் வகுப்பு பலகையை பார்த்தபடி மனதை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இப்படியே எல்லா பெண்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை பற்றி சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் தேன்மொழியை தவிர எவரது முகமும் என்னை ஈர்க்கவில்லை. அதோடு நான் யாரையும் சரியாக கவனிக்கவும் இல்லை.

அப்பொழுது! இவள்தான் எனக்காக பிறந்த தேவதையாக இருக்குமோ என்று மனதில் தோன்றியது.

“யாருப்பா முதல் பெஞ்ச்ல இருக்குறது? உங்கள போயி அறிமுகம் செஞ்சுகோங்க!”

பேராசிரியர் சொன்னதும் திரும்பி பார்த்தேன்.

பெண்கள் வரிசை முடிந்தது.

அடுத்து நான்தான் பேசவேண்டும்.

ஒரு வேகத்தில் எழுந்தேன்.

“நான்தான் ஸார்!”

கொஞ்சம் தைரியத்துடன் முன்னே சென்று நின்றேன்.

பள்ளியில் சில பேச்சு போட்டிகளில் கூட்டத்தின் முன் நின்று பேசிய அனுபவம் இருந்தாலும் அங்கே பெண்கள் யாரும் இருந்ததில்லை. அதனால் இங்கே எப்படி பேசப்போகிறேன் என்கிற பயத்தால் என்னுடைய கைகால்கள் உதறியது.

தேன்மொழியை பார்த்தேன்!

அவள் நான் எப்போது என்னுடைய பெயரை சொல்லபோகிறேன் என்கிற ஆவலுடன் இருப்பது போல் எனக்கு தோன்றியது.

சரி பெண்கள் பக்கம் பார்த்தால்தானே பேசமுடியவில்லை ஆண்கள் பக்கம் மட்டும் பார்த்து பேசி விடலாம் என்று முடிவுசெய்து பேச ஆரம்பித்தேன்.

“என் பெயர் அசோக்...!” என்று தொடங்கினேன்.

என்னை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்துவிட்டு வேகமாக வந்து உட்கார்ந்துகொண்டேன்.

மறுபடியும் அவளை திரும்பி பார்க்கவே இல்லை.

இப்படியே அனைவரும் பேசி முடித்தனர்.

இறுதியாக அந்த வகுப்பும் முடிந்தது!

அதன் பிறகு அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்தார்.

அவர் நேராக பாடம் எடுக்க சென்று விட்டார். அதனை அனைவரும் கவனித்து கொண்டிருந்தோம்.

அதோடு தேன்மொழியை எப்போது திரும்பி பார்ப்பது என்கிற ஆவலும் மனதில் இருந்தது.

தொடர்ந்து எல்லா வகுப்புகளும் பாடத்துடனே சென்றது. அதனால் என் அருகில் இருந்தவர்களுடனும் என்னால் பேச முடியவில்லை.

ஒருவழியாக உணவு இடைவேளை வந்தது.

எனது பக்கத்தில் இருந்த இருவரை பற்றி விசாரித்தேன்.

தேன்மொழியை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருந்ததால் அவர்கள் பேசியதை நான் கவனிக்கவில்லை.

உடனே பெயரை கேட்டு தெரிந்துக்கொண்டேன்.

அவர்களும் நன்றாக பேசினார்கள்.

அதில் ஒருவன் பெயர் முத்து.

இன்னொருவன் பெயர் பாலா.

இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள்!

இப்போதும் ஒன்றாகவே சேர்ந்து படிக்கிறார்கள்.

அப்போது எனது நண்பன் கோபியின் நினைவு வந்தது.

“இருக்கட்டும்! கோபிக்கு அந்த காலேஜ் நல்லாதான் இருக்கும்!”

என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அவர்களிடம் “மதியம் லஞ்ச் எங்க சாப்பிட போறிங்க?” என்று கேட்டேன்.

“கேண்டீன் போகணும்!”என்று இருவரும் கூறினார்கள்.

ஏன் என்று கேட்டதும் அவர்கள் இருவரும் தொலைவில் உள்ள கிராமத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வருவதால் வீட்டில் உணவு சமைப்பது கடினம்.

காலையும் மதியமும் இங்கேயே சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள்.

நான் சரி என்றதும் என்னை கேட்டனர்.

நான் வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்துள்ளேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த இனிமையான குரல் கேட்டது.

“ஹலோ அசோக்!”

தேன்மொழிதான் என்னை அழைத்தாள்.

இவளே வந்து என்னை அழைக்கிறாளே!

ஒரு பயம் கலந்த சந்தோஷத்தில் திரும்ப முயன்றேன்.

அதற்குள் “நாங்க கேண்டீன் போறோம்!” என்று சொல்லிவிட்டு முத்து! பாலா! இருவரும் விடைப்பெற்றனர்.

அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு மெதுவாக திரும்பி அவளது முகத்தை பார்த்தேன்.

“ஏன் என்னைய திரும்பி பாக்குறதுக்கு இவ்வளவு நேரம் ஆச்சு?”

அவள் அழகாக சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“இங்க பேசிட்டு இருந்ததால கவனிக்கல” என்று சொன்னேன்.

அவள் புன்னகையுடன் என்னை பார்த்தாள்.

நானா அடுத்து என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் “உங்க பேரு என்ன?” என்று கேட்டேன்.

“நான் காலையிலதானே முன்னாடி நின்னு சொன்னேன்! அதுக்குள்ளயும் பேரு மறந்துறுச்சா?”

அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்டாள்.

“அச்சசோ! இப்ப என்ன பண்றது? உனக்குல்லாம் பொண்ணுங்க கூட பேசவே வராதுடா! நீ சுத்த வேஸ்ட்டு!”

என்னை நானே மனதில் திட்டிகொண்டேன்.

“இல்ல சும்மா சொன்னேன்! உங்க பேரு தேன்மொழிதானே?” என்று கேட்டேன்.

“ஹ்ம்ம்... இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சே!” என்று மெதுவாக சிரித்தாள்.

அந்த சிரிப்பிற்கே பலர் மயங்கி விடுவர்... நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்று நினைத்துகொண்டேன்.

திரும்பவும் அவள் பேச முயன்றாள்... அதற்குள் அவள் அருகில் இருக்கும் தோழிகள் “வாடி சாப்பிடலாம்” என்று அழைத்தனர்.

“சரிடி இதோ வரேன்!” என்று சொல்லிவிட்டு “அசோக் நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

மறுக்க மனம் இல்லாமல் ஒரு வெட்கத்துடன் நானும் அவளோடு சாப்பிட சென்றேன்.

“இவங்க பேரு மலர்! காவ்யா!”

அவளது இரண்டு தோழிகளையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

இன்னும் இவளே எனக்கு அறிமுகம் ஆகவில்லை... அதற்குள் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறாளே என்று நான் வியந்தேன்.

சாப்பிடும் போது நாங்கள் நால்வரும் என்ன பேசுவது என்று தெரியாமல் காலையில் நடந்த வகுப்புகளை பற்றி பேச ஆரம்பித்தோம்.

அவர்களும் என்னுடன் சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

பெண்களை பார்த்து பயந்த எனக்கு அவர்களுடன் பேசியதும் பயம் இல்லாமல் போய்விட்டதே என்பதை உணர்ந்தேன்.

இனிமேல் நம்ம வாழ்கையே மாறப்போகுது என்று நினைத்து கொண்டு சாப்பிட்டு முடித்தேன்.

தேன்மொழியும் சாப்பிட்டு எழுந்தாள்... நானும் எழுந்து வந்து என்னுடைய இடத்தில் வந்து உட்கார்ந்துக்கொண்டேன்.

அப்போது காவ்யா மட்டும் என்னை ஒருவித சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவள் எதற்காக என்னை இப்படி பார்க்கிறாள் என்று புரியாமல் தேன்மொழியை பார்த்தேன்.

அவள் எப்போதும்போல என்னை பார்த்து சிரித்தாள்.

பின்பு மதிய வகுப்பு ஆரம்பிக்க இருந்த காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் எழுந்து அவரவர் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

அதற்குள் முத்துவும் பாலாவும் சரியாக வகுப்பிற்கு வர பேராசிரியரும் உள்ளே நுழைந்தார்.

வந்தவர் வகுப்பை ஆரம்பித்துவிட்டார். அதனால் இருவருடன் மீண்டும் பேச முடியவில்லை.

நான் முதல் பெஞ்சில் இருந்த ஒரே காரணத்தினால்தான் எதுவும் பேச முடியவில்லை. அதோடு ஆசிரியர் பார்த்தால் என்ன செய்வது என்றும் பயந்து அமைதியாக இருந்தேன்.

ஆனாலும் “தேன்மொழி நம்ம பக்கத்துல இருக்காளே!” என்று நினைக்கும் போதே... அது மனதில் ஒரு புது சக்தியை உண்டாக்கியது.

யாரென்றே தெரியாதவள் மீது இவ்வளவு ஈர்ப்பு எனக்கு ஏன் ஏற்பட்டது?

இது எல்லாமே விதியாகத்தான் இருக்க முடியும் என்று மகிழ்ச்சியடைந்தேன்.

இப்படியே அனைத்து வகுப்புகளும் நடந்தது. பேராசிரியர்களும் நேரத்தை வீணடிக்காமல் பாடத்தை சரியாக முடித்தனர்.

மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்ததும் முத்து பாலா இருவரும் எங்கள் ஊர் பேருந்திற்கு நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டு விடைப்பெற்றனர்.

தேன்மொழியை பார்த்தேன். அவளது தோழிகளும் அவளை விடைப்பெற்று சென்றனர்.

“இன்னும் கிளம்பலயா?” என்று தேன்மொழி கேட்டாள்.

“ஹ்ம்ம்... கிளம்பனும் பைக் இருக்கு! நீ எப்படி போவ?” என்றேன்.

“கார் வந்துருக்கும்! டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருப்பார்!” என்று கூறினாள்.

தேன்மொழியின் ஆடை எளிமையாக இருந்தாலும் அவள் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது.

நாங்கள் இருவரும் வகுப்பறையை விட்டு ஒன்றாக நடந்து வெளியே வந்தோம்.

அப்போது தெரியாமல் என்னுடைய தோள்பட்டை அவள் மீது லேசாக உரசியது.

தேன்மொழி கொஞ்சம் கூச்சத்தில் நெளிந்தாள்.

கோவில் சந்திப்புக்கு பிறகு இரண்டாவது முறையாக இருவரது தோள்களும் உரசியவுடன் எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.

சென்றமுறை அவள் இடித்தாள்.

இந்த முறை நான் இடித்துவிட்டேன்.

நான் வேண்டுமென்றே செய்துவிட்டேன் என்று நினைத்து ஏதாவது சொல்லி திட்டபோகிறாள் என்று பயந்தேன்.

“என்னைய மன்னிச்சுடு தேன்மொழி! தெரியாம இடிச்சுட்டேன்!”

“ஹ்ம்ம்... இட்ஸ் ஒகே அசோக்!” என்று சகஜம் அடைந்தாள்.

அதன்பின் நான் எதுவும் பேசாமல் ஒரு அரை அடி இடைவெளிவிட்டு அவளுடன் சேர்ந்து நடக்க தொடங்கினேன்.

அவளும் அமைதியாகவே நடந்தாள்.

அப்போது அவளுடைய கார் வந்தது.

“நாளைக்கு பாக்கலாம்! பை அசோக்!” என்று சொல்லிவிட்டு என்னை விடைப்பெற்றாள்.

அவளது கார் என்னுடைய வீட்டிற்கு செல்லும் வலது பக்க சாலையில் செல்லுமா என்கிற ஆசையுடன் பார்த்தேன்.

ஆனால் அது இடது பக்கமாக சென்று என் கண்ணில் இருந்து மறைந்தது...
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#18
Good update
Like Reply
#19
(04-03-2024, 02:05 AM)Lashabhi Wrote: Super brother

(06-03-2024, 07:04 AM)Gandhi krishna Wrote: Very nice

(06-03-2024, 09:38 PM)Rangabaashyam Wrote: Superb

கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!
Like Reply
#20
(10-03-2024, 08:50 PM)Samadhanam Wrote: Good update

மிக்க நன்றி நண்பரே!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)