Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#13
முகத்தில் அப்பிய இறுக்கத்துடன்  கிருத்திகாவை உற்றுப் பார்த்தான் நவநீதன். மழையில் நனைந்த அவளின் ஈரக் கூந்தலின் உதிரிகள் அவள் காதோரத்தில் லேசாக சிலிப்பிக் கொண்டிருக்க.. அவளது கன்னங்களும் , மூக்கும் , ஈர உதடுகளும் மிகவும் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது.  அவள் பார்வை இன்னும்.. உயிர் பிடிக்காத டிவியின் வெற்றுத் திரையை அர்த்தமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. 

அவளின் பார்வை வெற்று என்றாலும்.. அவள் மனதில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ! பனியனில் அவள் கழுத்துக்கு கீழ் விம்மும் அந்த சதைப் புடைப்பின் மேல் அவன் பார்வை நிலைக்க.. அது தனக்கில்லை என்கிற... ஏக்கம் அவன் நெஞ்சை வியாபித்தது.

''கிருத்து... '' மெதுவாக.. அவன் தொண்டையிலிருந்து வெளியே வந்த அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை போலிருந்தது. 

''க்கும்..!!!'' என அவன் மீண்டும் தொண்டையை செருமிக் கொள்ள.. மெள்ள அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள் கிருத்திகா. 

'' அப்.. அப்ப... நீ என்.. என்னை விரும்பலயா கிருத்தி..???'' அவன் குரல் அடைத்துக் கொண்டதை போல.. திக்கித் திணறி வெளியே வந்தது. 

'' விரும்பறேன் நவநி.. பட்.. அது லவ் இல்லே.. ஸாரி.. !!!'' அவள் குரலில்  ஒரு மெல்லிய வருத்தம்  இழையோடியது.

'' ஏ.. ஏன் கிருத்தி.. ???''

அமைதியாக அவனை ஒரு நிமிடம் முழுசாக உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையில் எந்த கல்மிசமும் இல்லை. ஆனால் ஆழமான பார்வை.! அதன் நோக்கம்தான் அவனுக்கு புரியவில்லை. அவன் மனசு பரிதவித்தது. 

மெள்ள பார்வையை மாற்றினாள். முகத்தை  திரும்பி டிவி திரையை பார்த்தபடி  ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டாள் ! பின் மீண்டும் அவன் பக்கமே திரும்பினாள்.
''நவநி..  உனக்கு என்கிட்ட எல்லா  உரிமையும்  இருக்குதான். நான் மறுக்கலே. ஆனா.. ஆனா.. உன்ன லவ் பண்ண முடியாது..'' என்று மெல்லிய குரலில் சொன்னாள். 

'' ஏன்..? ஏன் கிருத்தி...? என்னை புடிக்கலயா.?''

'' புடிச்சிருக்கு...!!! ரொம்ப புடிச்சிருக்கு.. !! ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...!!! உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும்னு.. வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு புடிச்சிருக்கு.. !!!''

'' அ.. அப்றம்... என்ன கிருத்தி... ?'' 

'' சொன்னா.. நீ கோபப்படக் கூடாது..??''

'' ம்.. சொல்லு.. ??''

'' நீ என்னை ஒரு வருசாமாத்தான் விரும்பறதா சொன்ன.. ஆனா.. உன்ன விடவும்  அதிகமா.. அஞ்சு வருசமா.. என்னை ஒருத்தன் விரும்பிட்டு இருக்கான்.!! அவன் மட்டும் இல்ல... நானும்தான்..! நாங்க ரெண்டு பேரும்  அவ்ளோ டீப்பா லவ் பண்ணிட்டு இருக்கோம். புரியுதா.?  இப்ப சொல்லு... நான் என்ன பண்ணட்டும்..??'' கிருத்திகா அவன் கண்களை நேராகப் பார்த்து தயக்கமின்றி கேட்டாள். 

அவளுக்காக நவநீதன் கட்டி வைத்த இதய மாளிகை சுக்கு நூறாக உடைந்து நொருங்கியது. சுக்கலாக உடைந்த.. கண்ணாடி பொருளைப் போல.. அவன் காதலும் ஒரு ரனப் பொருளாக மாறி.. அவன் இதயத்தைக் கிழிக்கத் தொடங்கியது...!!! 

பார்..  !!! கூட்டம் அவ்வளவாக இல்லை!!! ஒரே தம்மில் முக்கால் பியரை தொண்டைக்குள் சரித்த பின்.. கடைக் கண்ணில் வழிந்த கண்ணீரை இடக் கையின் சுண்டு விரலால் சுண்டி விட்டுக் கொண்டு.. பாட்டிலை டேபிள் மீது வைத்தான் நவநீதன் .!!!

அவனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த கர்ணா.. சிகரெட் புகையை இழுத்து நெஞ்சை நிறைத்தபடி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்தான்.. !!!

'' இதை நான் எதிர் பாக்கவே இல்ல கர்ணா..''

'' எதை பாஸ்.. இந்த பீரையா.. ??'' 

'' கிண்டல் பண்ணாத கர்ணா.. கிருத்தி இப்படி சொல்லுவானு நான் எதிர் பாக்கல... '' 

'' ஸாரி பாஸ்.. !!!'' சிகரெட்டை இழுத்தான் ''நான் கூட எதிர் பாக்கல பாஸ்.. !! என்ன பொண்ணு பாஸ் உங்க கிருத்தி. ? நீங்க சொன்னதெல்லாம் வெச்சு பாக்றப்ப.. அவங்களும் உங்கள லவ் பண்றாங்கனு நான் நினைச்சிட்டேன் பாஸ்... அவங்களுக்கு உங்கள விட வேற ஒருத்தன புடிச்சிருக்குனு இப்பல்ல தெரியுது.. ''

'' அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு கர்ணா.. புடிக்காம இல்ல.. !! ஆனா அது லவ் இல்ல கர்ணா.. ஒரு அன்பு.. பாசம்.. உரிமை.. இந்த மாதிரி உறவு முறைல என்னை புடிச்சிருக்கு...''

'' பாஸ்.. ஒண்ணு சொல்றேனு தப்பா நினைச்சுக்காதிங்க. கடைசில எல்லா பொண்ணுங்களும் சொல்ற.. ஒரு தற்பாதுகாப்பு சென்ட்டிமெண்ட் டயலாக்தான் இது.. !'' 

'' அப்ப இதை நம்ப வேண்டாங்கறியா. ??'' எனக் கேட்டு விட்டு.. பியரின் மீதியையும் இடக்கையில் எடுத்து.. முகத்தை அன்னாந்து தொண்டைக்குள் சரித்தான் நவநீதன். இந்த முறை அவன் பாட்டில் காலியான பின்தான் வைத்தான்.

கர்ணா சிகரெட்டை நீட்ட.. அதையும் வாங்கி வாயில் வைத்து சுர்ரென.. கண்கள் சுருங்க இழுத்தான். புகை போய் சிறு மூளையை தாக்க... அவனுக்கு கிர்ரென்று இருந்தது.

'' இந்த பொண்ணுங்களவே நம்பக் கூடாது.. இல்ல கர்ணா...???'' 

'' அத நான் எப்படி பாஸ் சொல்றது .? இது உங்க அத்தை பொண்ணு.. நாளைக்கே அவங்களுக்கு உங்க மேல திடீர்னு ஒரு லவ் வந்தாலும் வரலாம். இல்ல.. உங்க சொந்த பந்த பிரச்சினைல.. அவங்க லவ் பிரேக்கப் ஆகி.. நீங்களே மேரேஜ் பண்ற மாதிரி ஆனாலும் ஆகலாம்...''

'' சே.. சே... நீ ஏன் கர்ணா...?? அவ நல்லா வாழட்டும் கர்ணா. அவ எனக்கு முன்ன வேற ஒருத்தன லவ் பண்ணிட்டா.. அவதான் என்ன பண்ணுவா.. ? நா விரும்பின பொண்ண அடைய முடியலையேன்னு வருத்தம்தானே தவிற... அவ லவ் கட்டாகனும்னு எல்லாம் நான் நினைக்கல கர்ணா..'' 

தனது பியரை எடுத்து பொருமையாக குடித்த படி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்த கர்ணா மெல்லச் சிரித்தான். ஆனால் பேசவில்லை. 

'' என்ன கர்ணா.. இவன் ஹீரோ ரேஞ்சுக்கு.. சினிமா வசனமெல்லாம் பேசறானேனு சிரிக்கறியா.. ?'' 

'' பின்ன என்ன பாஸ்.. ??'' 

'' சரி விடு. அது எப்படியோ இருந்துட்டு போகட்டும்.. இப்ப எனக்கு அதுகூட பிரச்சினை இல்ல கர்ணா.. '' 

'' ம்ம். . சொல்லுங்க பாஸ்.. வேற என்ன பிரச்சினை.. ??'' பியரை டேபிள் மீது வைத்து விட்டு கேட்டான் கர்ணா.

அவன் மிச்சம்  வைத்த கொஞ்ச பியரையும் எடுத்து தொண்டைக்கு கொடுத்தான் நவநீதன்.!!!  டேபிள் சர்வரை கை தட்டி அழைத்து.. இன்னும் இரண்டு பியர்களுக்கு ஆர்டர் செய்தான் கர்ணா.!!

காலி பாட்டிலை கீழே  வைத்தான் நவநீதன்.

'' சொல்லுங்க பாஸ்..இப்ப வேற என்ன உங்க பிரச்சினை.. ??''

'' ஒன் சைடு லவ்வுன்னாலும் ரொம்ப சின்சியரா.. டீப்பா.. அவள நான் லவ் பண்ணிட்டேன் கர்ணா... இனி மறுபடி அவ கூட பழைய மாதிரி என்னால பழக முடியாது. அவள பாக்கறப்ப எல்லாம் என் மனசு நோகுது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ளயே.. நான் ரொம்பவே வேதனை பட்டுட்டேன். என்னால நார்மலா இருக்கவே முடியல.. அவள பாக்கவே புடிக்கல.. '' என... குரல் கம்ம.. மெல்லிய வேதனையுடன் சொன்னான் நவநீதன்... !!!

'' விடுங்க பாஸ்.. லவ்னாலே அப்படித்தான் எல்லாம் ஒரு கொஞ்ச நாளைக்கு..'' 

'' இல்ல கர்ணா. இது நீ நினைக்கற மாதிரி இல்ல..! இந்த ரெண்டு நாளும் நான் எப்படி இருந்தேன் தெரியுமா..? சொன்னா நம்ப மாட்ட கர்ணா.. நேத்து நைட் பூரா நான் தூங்கவே இல்ல..! அவள நான் ரொம்ப டீப்பா லவ் பண்ணிட்டேன். அதான்.. அவ வேற ஒருத்தன லவ் பண்றது என்னை ரொம்ப கஷ்டப் படுத்துது. இது பொறாமை இல்ல கர்ணா.  வலி.. !!!''

''சரி பாஸ்.. அவங்க எப்படி இருக்காங்க வீட்ல.. ??? அவங்களும் உங்கள மாதிரி ஏதாவது... கொஞ்சம் சோகமா.. ???''

'' நல்லா கேட்ட கர்ணா... அத எப்படி சொல்றதுனு தெரியல.. முன்னவாவது வீட்டுக்குள்ள.. அளவாதான் சிரிப்பா.. சத்தமா பேச மாட்டா.. ஆனா இப்ப.. இந்த ரெண்டு நாளா.. எதுக்கெடுத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கறா.. சத்தமா பேசறா.. ஏதாவது பாட்ட முனுமுனுக்கறா...? என்னை நோகடிக்க பிளான் போட்ட மாதிரி பண்றா..!!! ஆனா.. எனக்குத்தான் அவளை பாக்கவே கஷ்டமா இருக்கு.. வீடே எனக்கு நரகமா மாறிப் போச்சு... !!!'' என்றான். 

இரண்டு பியர் வந்தது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆளுக்கு ஒன்றாக எடுத்து குடித்தார்கள் . கதகதவென கலங்கிய கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டான் நவநீதன்.!!! 

'' விடுங்க பாஸ். நம்ம கமல் பாடின மாதிரி சல்வார் போனா தாவணி உள்ளதடானு வேற எதையாவது பிக்கப் பண்ணிக்கங்க.. ''

'' ம்ம். . என்னால அவ்வளவு சுலபமா.. இவள மறக்க முடியாது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ள எனக்கு வீடு சுத்தமாவே வெறுத்துருச்சு.. '' 

'' அதுக்காக.. இப்படி டெய்லி பார்ல வந்து உக்காந்துக்க போறிங்களா.. ?'' 

'' இல்ல கர்ணா.. நான் மறுபடி ஊருக்கே போய்டலாம்னு இருக்கேன்..!!'' என்று  நவநீதன் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். 

'' பாஸ்ஸ்...!!!'' என சத்தமாக அலறினான் கர்ணா.   ''என்ன பாஸ்... ஏன் பாஸ்.. ???''

'' இல்ல கர்ணா.. இங்கருந்தா.. அவள நான் டெய்லி பாக்க வேண்டி இருக்கும்.. அப்பல்லாம் எனக்கு மனசு நோகும்.. வலிக்கும்.. அவ சந்தோசமா இருக்கறத பாத்தா எனக்கு பொறாமை வரும்.. அது எங்க ரெண்டு பேருக்குமே நல்லதில்ல கர்ணா.. அதான்...'' 

'' பாஸ்... அதுக்காக....??? வேணா கொஞ்ச நாள் ஊர்ல போய் இருந்துட்டு... அப்பறம் உங்க மனசு சரியானப்பறம் வாங்களேன்...???''

'' இல்ல கர்ணா.. ஒடைஞ்ச கண்ணாடிய ஒட்ட வச்சா அது நல்லாருக்காது.. என்ன பண்ணாலும் என்னால இனி அவகூட பழைய மாதிரி பழக முடியாது.. அதுக்கு நான் விலகிப் போறதுதான்.. ஒரே வழி..!!!'' நவநீதன் பொருமையாக சொல்ல... இப்போது தனது பியரை எடுத்து கடகடவென தொண்டைக்குள் சரித்தான் கர்ணா...!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 07-08-2019, 12:34 PM



Users browsing this thread: 2 Guest(s)