Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#4
மினி பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே நிற்கக் கூட இடமில்லை. எப்போதும் அலுப்பைத் தரக்கூடிய.. அந்த கூட்ட நெரிசல் இன்று மிகவும் ஜாலியாக இருந்தது நவநீதனுக்கு.  அவன் மனது ஒரு உல்லாச பறவையாக மாறி.. சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.!!!

கிருத்திகாவை அவளது பிறந்த நாள் அன்று மகிழ்ச்சி படுத்திவிட்ட உற்சாகம் அவன் மனதில் தொற்றியிருந்தது. அது மட்டுமா..?

இன்றுதான் முதல் முறையாக  அவளை முத்தமிட்டிருக்கிறான். அந்த முத்தம் கொடுத்த ஒரு நொடி..  அவன் நெஞ்சில் அப்படியே உறைந்து நின்று விட்டதைப் போலிருந்தது. அதை நினைத்த போதெல்லாம் அவன் நெஞ்சம் ஜில்லென்று குளிர்ந்தது !!!

கண்களில் ஏராளமான கற்பனைக் காட்சிகளை ஓட விட்டபடி.. இரண்டு பேருந்துகள் மாறி மாறி பயணித்து  கம்பெனியைச் சென்றடைந்தான். ஆச்சரியமாக இருந்தது. கம்பெனியில் எந்த செக்சனும் இயங்கவில்லை. கம்பெனி மொத்தமும் அமைதியாக இருந்தது.!!

'' வாங்க பாஸ் '' சிரித்த முகமாக நவநீதன் பக்கத்தில் வந்தான் கர்ணா. 

'' என்ன கர்ணா இது.. ? வேலை இல்லையா ??''

'' ஆர்டர் கேன்ஸல் ஆகிருச்சாம் பாஸ்.. இன்னிக்கு நோ வொர்க். நாளைக்குத்தான் மெட்டீரீயல் எல்லாம் வருதாம் '' 

'' அட.. ச்ச.. ! என்ன பண்ணலாம். ?''

'' சினிமா போலாமா பாஸ்.?''

நவநீதனிடம் பணம் குறைவாகத்தான் இருந்தது. அவன் கொஞ்சம் யோசிக்க..
'' என்ன பாஸ் பணம் இல்லையா ? பரவால்ல வாங்க. நான் பாத்துக்கறேன். நமக்குள்ள என்ன இருக்கு. ? காண்ட்ராக்ட்காரர்கிட்ட ஆட்டைய போட்டுட்டேன். எவ்ளோ வேணும்.. ஐநூறு..? ஆயிரம்.. ? வாங்க போலாம் எல்லாம் நம்ம செலவு.. !!''

  கம்பெனிக்கு ஒவ்வொராக வந்து பின் வேலை இல்லை என்று தெரிந்து  திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். ! 

காலைக் காட்சி !! ஆங்கிலப் படம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. !! டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்த பின் கேட்டான் கர்ணா !! 
'' அப்பறம் பாஸ்.. என்ன சொன்னாங்க உங்க ஆளு.. ?'' 

நவநீதன் , கர்ணாவை யோசனையுடன் பார்த்தான் ! 

'' என்ன பாஸ் முழிக்கறிங்க? நேத்து ட்ரஸ் எடுத்துட்டு போனிங்கள்ள உங்க ஆளு.. அதான் அத்தை பொண்ணுக்கு.. குடுத்திங்களா.. ?''

'' ஹோ.. அதுவா ?'' உடனே மலர்ந்தான் நவநீதன்.  ''ம்ம்.. குடுத்தேன் கர்ணா. சூப்பரா இருக்குன்னா.. !!''

'' புடிச்சிதா அவங்களுக்கு ??'' 

'' ம்ம். . ரொம்ப புடிச்சிருக்குன்னா '' 

'' அப்பறம் உங்க தெறந்த மனச கொஞ்சம் காட்னிங்களா ?'' 

'' என்ன? ''

'' உங்க மனச தொறந்து காட்னிங்களானு கேட்டேன் பாஸ்..! என்ன பாஸ் எது பேசினாலும் சட்னு பிக்கப் பண்ணிக்குவிங்க.. இன்னிக்கு ஒவ்வொண்ணலயும் இப்படி முழிக்கறிங்க.. ? என்ன ஆச்சு.. ?''

'' ஓ.. அது.. இல்ல கர்ணா.. சொல்லல.. ''

'' அட.. என்ன பாஸ் நீங்க. ? அவங்க மனச டச் பண்றப்பவே இதெல்லாம் சொல்லிடனும். அப்பத்தான் ஓகே ஆகும். சரி.. பரவால்ல இன்னிக்கு போய் சொல்லிருங்க. அவங்க பொறந்த நாளும் அதுவுமா.. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்.. என்ன சொல்றிங்க.. ?'' 

'' ம்ம்.. சரிதான் கர்ணா !!'' 

'' இன்னிக்கு அவங்களும் உங்க மேல ஒரு அன்போடதான் இருப்பாங்க.. '' 

'' ஆமா கர்ணா. அவ இன்னிக்கு தூங்கிட்டிருக்கப்ப.. காலைல நான் எழுப்பின உடனே.. அவளா வந்து என் மடில தலை வெச்சு படுத்தா. அப்பறம் கடைசியா நான் கிளம்பறப்பதான் அவளே கிப்ட் இல்லையானு கேட்டு வாங்கினா. கிப்ட் குடுத்துட்டு.. கடைசியா அவ கன்னத்துல ஒரு முத்தமும் குடுத்து 'ஹேப்பி பர்த்டே ' சொன்னேன். !!'' 

'' வாவ்.. அசத்திட்டிங்க பாஸ்.. கை குடுங்க.. !!!'' என்று  உற்சாகமாகி  நவநீதனின் கை பற்றிக் குலுக்கினான் கர்ணா !!!

கர்ணா... நவநீதனை விட இரண்டு மூன்று வயது சின்னவன். ஆனால் நவநீதனுக்கு இங்கு வந்த பின் அவன் மட்டும்தான் நல்ல தோழன். குள்ளமாக.. கொஞ்சம் கருப்பாக இருக்கும் இந்த கர்ணா. மிகவும் எதார்த்தமானவன். பழகுவதற்கு ஜாலியானவன் !! தர்மபுரிக்காரன். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடும்பம் அவனுடையது. !!

'' ஜமாய்ங்க பாஸ்.. அதுக்காக உங்க மனச சொல்லாமயும் விட்றாதிங்க. அத்தை பொண்ணாவே இருந்தாலும் 'ஐ லவ் யூ ' சொன்னாத்தான் இப்பத்த பொண்ணுங்க அத லவ்வா ஏத்துக்குவாங்க.. !'' 

'' ஆனா.. அத சொல்லத்தான் கர்ணா ரொம்ப பயமா இருக்கு.. '' 

'' அட போங்க பாஸ்.. மடில தலை வெச்சு படுக்கற சொந்த அத்தை பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யூ சொல்ல யாராச்சும் பயப்படுவாங்களா. ? காமெடி பண்ணாதிங்க பாஸ் !!'' 

'' அட.. இல்ல கர்ணா ! சொந்த அத்தை பொண்ண நேரடியா போய் பொண்ணுகூட கேட்ரலாம்.. அதுக்கு உரிமை போதும். !! ஆனா லவ் அப்படி இல்லையே. அது மனசுல இருந்து இல்ல வரனும். நான் 'ஐ லவ் யூ ' சொல்லி.. ஒருவேளை அவ அத ஏத்துக்கலேன்னா.. ?''

'' அட என்ன பாஸ் நீங்க? உங்கள புடிக்காமயா உங்க மடில தலை வெச்சு படுத்திருப்பாங்க? இதுகூட புரியலேன்னா நீங்க வேஸ்ட் பாஸ்.. பயப்படாதிங்க. போனதும் மொத வேலையா.. தைரியமா போய் ' ஐ லவ் யூ ' அத்தை மகளேனு அவங்ககிட்ட சொல்லிருங்க. ! அப்பறம் பாருங்க பாஸ்.. என்ன நடக்குதுனு.. !!!'' கர்ணா உற்சாகமாகச் சொல்ல... நவநீதனும் தீர்மானித்தான்.! 

மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் !!
'' ஐ லவ் யூ.. மை டியர் கிருத்தி.. !!''

தியேட்டரில் இருந்து நேராக கர்ணனின் ரூம்க்கு போய் விட்டான் நவநீதன். வீட்டுக்கு போனாலும் அவன் மட்டும்தான் தனியாக இருக்க வேண்டும். அதனால் கர்ணாவுடன் ஜலியாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தான் !!

அப்பறம் மீண்டும் அவன் பஸ் பிடித்து வீட்டுக்கு போனபோது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகி விட்டது.  வானம் இருண்டு லேசாக மழை தூரத் தொடங்கியது !! பாத்ரூம் பலகையில் சோப்பு டப்பாக்கு அடியில் இருந்த வீட்டுச் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து.. உள்ளே போனான் !!

வானம் இருட்டுக் கட்டியிருந்ததால் வீட்டுக்குள் இருட்டாக இருந்தது. லைட் ஸ்விட்சை போட்டான். பவர் கட்டாகியிருந்தது.! ஜன்னலை திறந்து வைத்தபோது  சடசடவென  மழை பெய்யத் தொடங்கியது. கதவைச் சாத்தி தாள் போட்டு விட்டு ஜன்னல் ஓரமாக போய் நின்று மழையை ரசிக்கத் தொடங்கினான். !!

'' வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..'' என்று  அவன் கை பேசியில் பாடல் அழைக்க.. ஜன்னலில் இருந்து விலகிப் போய் எடுத்துப் பார்த்தான். புது எண். ! 

'' ஹலோ ?'' காதில் வைத்துக் கேட்டான்.

'' நான்தான் நவநி. அத்தை பேசுறேன்"  அத்தையின் குரல்.

'' ஆ.. சொல்லுத்தே.. ?''

'' கம்பெனிலயா இருக்க? ''

'' இல்லத்தே.  வேலை இல்ல இன்னிக்கு நோ வொர்க் குடுத்துட்டாங்க. அப்படியே சினிமா போய்ட்டு இப்பதான் வந்தேன். வீட்லதான் இருக்கேன். ஏன்த்தே.. ??''

'' என்னமோ கூப்பிட்டு பாக்கலாம்னுதான் கூப்பிட்டேன் நவநி.  பின்னால கொஞ்சம் துணிகள தொவைச்சு காயப் போட்றுக்கேன். மழை பெருசா வர மாதிரி இருக்கு. எல்லாம் எடுத்து உள்ள போட்றுடா.. அப்பறம்.. மறக்காம டிவி கேபிள புடுங்கி விட்று.  மின்னால் இடி வந்தாலும் வரும் !!'' 

'' சரித்தே '' 

'' எனக்கு இன்னிக்கு ஓ டி இருந்தாலும் இருக்கும்னு நெனைக்கறேன். எதுக்கும் கிருத்தி வந்தான்னா.. அவள சாப்பாடு செய்ய சொல்லிரு. நான் வரதுக்கு ஒம்பது மணி ஆகிரும் ''

'' சரித்தே.. ''

'' சரி வெச்சிரட்டுமா என் போன்ல பேலன்ஸ் இல்ல. இது தெரிஞ்ச பொண்ணுது. '' 

'' சரித்தே.. வெச்சிரு ''

போனை வைத்து விட்டு வெளியே போய் மழையில் லேசாக நனைந்தவாறே.. கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உடைகளை எல்லாம் அவசரமாக உருவிக் கொண்டு வந்தான். எல்லா துணிகளையும் கட்டில் மீது குவியலாக போட்ட பின் டிவி கேபிளை பிடுங்கி விட்டான். மீண்டும் கதவை சாத்திவிட்டு ஒரு சேரை எடுத்து ஜன்னல் ஓரமாக போட்டு உட்கார்ந்து மழையை ரசிக்கத் தொடங்கினான் நவநீதன். !!

காற்று பலமாக இல்லை. இடி, மின்னல் என எதுவும் பலமாக இல்லை. ஆனால் மழை மட்டும் கொஞ்சம் பலமாக.. 'சோ !' வென நின்று பெய்தது. சாக்கடைகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடத் தொடங்கியது !! 

நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது படபடவென கதவு தட்டப் பட்டது. கிருத்திகாவாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் கதவைத் திறந்தான் !! 

கிருத்திகாதான் !! தொப்பலாக நனைந்திருந்தாள். தலையில் துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாலும் முற்றிலுமாக நனைந்து சொட்டச் சொட்ட நின்றிருந்தாள் !!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 04-08-2019, 02:46 AM



Users browsing this thread: 1 Guest(s)