Romance சும்மா ஒரு காதல் கதை!!!
ஒரு கொடியில் பல மலர்கள்

அம்ருதா
【09】

ஹே! உன் மொபைலில் இருந்து கால் பண்ணு என்றாள் அம்மு..

1 நிமிஷம் டா என்றாள் மலர்..

கால் கட் ஆகியது. மலர் காலிங் என நளன் போனில் வந்தது. அதைப் பார்த்ததும் நளன் கட்டிலை விட்டு இறங்கினான்.

அம்ருதாவுக்கு குழப்பம். ஏன் இப்படி ஆனந்தியிடம் பேசுவது போல ரகசியம் என நினைத்தாள்.

நளன் தொடர்ந்து ஹம் ஹம் என்றானே தவிர பெரிதாக எதுவும் பேசவில்லை.

அவ்வப்போது விழுந்த வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது அம்ருதா வயது, கல்யாணம், விவாகரத்து என மிச்சம் மீதி இருந்த விஷயங்கள் பற்றி சொன்னான். வேறு பிரிவு எனவும் சொன்னான்.

கடைசியாக கால் கட் செய்வதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னால் நளன் எதுவும் பேசவில்லை.

நளன், கால் கட் ஆனதும் டிவி அருகே சேர். எடுத்துப் போட்டு உட்கார்ந்தான். ஆள் வேறு கொஞ்சம் சோகம் நிறைந்து பலத்த யோசனையில் இருந்தான்.

அம்ருதா சில நேரங்கள் என்ன ஆச்சு எனக் கேட்டாள். அவன் ஐ வில் டெல் யூ லேட்டர் என்பதை மட்டும் பதிலாக சொன்னான்.

அம்ருதா காரணம் தெரியாமல் குழப்பத்தில் தூங்கிப் போனாள். நளன் கொஞ்ச நேரம் கழித்து அவள் அருகில் படுத்தான்.

மறுநாள் காலை இருவரும் குளித்து நேற்று அணிந்த அதே ஆடைகளை மீண்டும் அணிந்தார்கள்.

நேற்று இரவு மலர் என்ன சொன்னாள் என நளன் சொல்லுவான் என ரொம்ப எதிர்பார்த்தால் அம்ருதா. ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.

அம்ருதாவை பார்த்து நளன் பீச் போகலாம் என சொன்னான். அவளுக்கு தூங்கும் போது அணிந்திருந்த அதே ஆடையில் வெளியே சுற்ற விருப்பமில்லை.

அழுக்கு டிரஸ் ஒண்ணும் ஆகாது. வா போகலாம் நளன் அம்ருதா கையை பிடித்து இழுத்தான்.

அவளுக்கு அது வினோதமாக இருந்தது. அவன் கையை பிடித்து இழுக்க மாட்டான், அப்படி செய்தால் "மாமி" என்ற வார்த்தை நிச்சயமாக இருக்கும். அவன் இன்று காலை ஒருமுறை கூட மாமி எ‌ன்று‌ கூப்பிடவில்லை. சொல்லப்‌போனால் நேற்று இரவு மலர் பேசிய பிறகு மாமி என அவன் சொல்லவே இல்லை.

காலை உணவு முடித்து, பீச் ஓரம் போர்ட் வாக்கில் நடக்கும் போது ஏன் எதற்கு என தெரியாமல் அம்ருதாவுக்கு நிறைய குழப்பம். அவனாக சொல்லுவான் என நினைத்தாள்.

நேரம் செல்ல செல்ல அவளுக்கு, பிளீஸ் சொல்லு நளன் என்ற எண்ணம். ஹோட்டல் அறைக்கு போன பிறகு கேட்டே ஆக வேண்டும் என நினைத்தாள். அவளைப் பற்றி பேசிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

நளன் பீச் ஓரம் இருந்த கடையில் டீ ஷர்ட் வாங்கி கொடுத்தான்.

போர்ட் வாக்கில் அவர்கள் தங்கிய ஹோட்டல் அறைக்கு திரும்பி செல்ல நடந்து கொண்டிருந்த போது, எதிரே நிறைய ஆண்கள் (பார்க்க நண்பர்கள் கூட்டம்) வர, அம்ருதா கையை பிடித்தான். அந்த குரூப் அவர்களை கடந்து சென்ற பிறகும் அம்ருதா கையை அவன் விடவில்லை. ஹோட்டல் நெருங்கியது..

இதற்க்கு என்ன அர்த்தம்..?

நளனின் காதலியை போல உணர்ந்தாள்.

மீண்டும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவள் மனதில்..

அவர்கள் இரவு தங்கியிருந்த அறையின் கதவை திறக்க கீ கார்டு தேடும் வரை கை கோர்த்துக் கொண்டே வந்தான்.

அறைக்குள் நுழைந்த பிறகு, மலர் என்ன பே‌சினா‌ள் என கேட்கும் எண்ணம் அம்ருதாவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்க விரும்ப வில்லை.

நளனின் சிறு தொடுதல் அவளுக்குள் அத்தகய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

நாம போய் கேசினோவுல இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுவோமா?

ஏன்? நீ பணத்தை இழக்க விரும்புறியா?

11-30 மணிக்கு செக் அவுட் செய்த பிறகு, ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு போகலாம்னு நினைத்தேன்.

லஞ்ச் பிளான் ஓகே. ஆனால் இனி விளையாட எனக்கு விருப்பமில்லை.

வா பிளீஸ், நீ தான் அதிர்ஷ்ட தேவதை. நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி போவேன்..

என்கிட்ட இன்னும் 200 டாலர் வின் பண்ணுன. காசு இருக்கு. நாம ஷாப்பிங் போகலாம்.

பர்ஸைத் திறந்து 100 டாலர் எடுத்தான். . பர்ஸைக் அம்ருதாவிடம் கொடுத்தான். .

இங்க இந்திய வெஜ் ஹோட்டல்கள் எதுவும் இல்லை. நாம எடிசன் போகலாம்.

சரி. அப்ப இப்பவே நாம கிளம்பலாம். நான் இதை வைத்து மட்டும் விளையாடுறேன்.என அவன் கையிலிருந்த 100 டாலர் நோட்டை அவள் கண் முன்னே ஆட்டினான்.

அவர்கள் ஹோட்டலை செக் அவுட் செய்து கேசினோவுக்குச் சென்றனர். 100 டாலரை கொடுத்து நீயே விளையாடு என்றான்.

100 டாலர் ஒரே டைம் பந்தயம் கட்டு. நாம. வெற்றி பெற்றால், இன்னும் ஒரு முறை விளையாடலாம். இல்லையென்றால் உடனே கிளம்பலாம். .

அவள் ரவுலட் டேபிளில் 100 டாலர் கொடுத்து சிப்ஸ் வாங்கினாள். அவள் 3 டிராக்கள் முடியும் வரை காத்திருந்தாள். பின்னர் அவள் கருப்பு மீது பந்தயம் கட்டினாள். எண் 33 வந்தது, அவள் 100 டாலர்களை வென்றாள் .

மீண்டும் ஒரு முறை, டபுள் டவுன் யண்ணு..

மீண்டும் கருப்பு நம்பர் மீது 200 டாலர் மதிப்புள்ள சிப்ஸ் வைத்து ஆட. மீண்டும் வெற்றி. அவள் கையில் 400 டாலர்கள்.

அவன் மீண்டும் உற்சாகத்துடன் டபுள் டவுன் என சொல்ல..

நோ, நாம போகலாம்..

பிளீஸ் என அவள் கையை பிடித்தான்...

100 டாலர் மதிப்புள்ள சிப்ஸை அவனிடம் கொடுத்துI விட்டு மீதியை அவளே வைத்துக் கொண்டாள்.இது (மீதிருந்த சிப்ஸ்) இந்த மாதத்திற்கான உன்னோட வாடகைக்கு..

இது உன்னோட விக்டோரியா சீக்ரெட் லாஞ்சரே ஃபண்ட் என அவள் காதில் சொல்லி அவள் கண்முன் 100 டாலர் மதிப்பிலான சிப்ஸை அசைத்தான்.

அம்ருதா வெட்கத்தில் சில வினாடிகள் தலை குனிந்தாள்.. உதட்டை கடித்தபடி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவள் மனதுக்குள் பிளீஸ் வின் பண்ணிடு என வேண்டினாள்.

கடந்த மூன்று முறை கருப்பு வந்த காரணத்தால் சிவப்பில் சிப்ஸை வைத்தான் நளன்.

சிவப்பு பிளீஸ் என மனதில் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். ஆனால் இந்த முறை வந்தது பச்சை..

நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான் , யு ஆர் தி லக்கி பெர்சன் நாட் மீ.

அவள் சிரித்தாள்.

ஒன் மோர் டைம்?

நோ சான்ஸ். போகலாம்.

அவளிடம் இருந்த சிப்ஸை பணமாக்கிக் கொண்டு எடிசன் போக கிளம்பினார்கள்

ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு, பசிக்குது என்றான். அவர்கள் காரை நிறுத்தி சில டோனட்ஸை சாப்பிட்டு பிறகு காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

மலர் சொன்னதைப் பற்றி நீ என்னிடம் இன்னும் கேட்கவே இல்லை ஏன்?

நீ லேட்டர்னு சொன்ன. அதனால் தான்.

ஹம்.

நீயே சொல்லுவ என நினைத்தேன்

ஹம்..

இப்ப சொல்லு.

நோ, லேட்டர்.

போடா லூசு.

நீ வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்து.

ஆமா, அது எங்களுக்கு தெரியாது பாரு..

ஹலோ, ஆனந்தி கால் பண்ணுனா டிஸ்டர்பன்ஸா இருக்கு, டிரைவ் பண்ண முடியலைன்னு யாரோ சொன்னாங்க..

ஆமா, ஓவர் கொஞ்சல்ஸ் பண்ணுனா..

ஓஹ்! அப்ப இது ரொம்ப சீரியஸ். கண்டிப்பா டிரைவ் பண்ணும் போது சொல்லக்கூடாது.

டேய் லூசு, சும்மா இருந்தவளை தேவையில்லாம கேட்டு மனச குழப்பி விட்டுட்டு, இப்ப இப்படி சொல்ற?

அய்யய்யோ அப்ப நிறுத்து, மைண்ட் ரிலாக்ஸ் ஆன பிறகு போகலாம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை என சொல்லி டிரைவ் செய்தாள்.

அடுத்த ரெஸ்ட் ஏரியா வந்தவுடன் காரை அங்கே சென்று நிறுத்தினாள்.

இப்ப சொல்லு..

என்ன சொல்ல?

மலர் என்ன சொன்னா?

நீ புஷ் புஷ்னு நல்லா இருக்குறன்னு சொன்னா. ஆனந்தி வத்தலும் தொத்தலுமா இருக்காளாம்.

ஹம், வேற..

அம்மு உன் டி.பி ல இருக்குற போட்டோ டிரஸ் எங்க வாங்கினதுன்னு கேட்க சொன்னா..

அப்புறம்..

அவ்ளோ தான், வேற எதுவும் இல்லை.

பொய் சொல்லாத..

இதுல என்ன பொய்..

வேற எதுவும் பேசலயா.

பேசினோம்.. அதெல்லாம் குடும்ப ரகசியம்..

ஹம். நான் வேற ஆளு ரைட்..

ஹம், "இப்போதைக்கு"

ச்சீ போடா என செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

சில விநாடிகளுக்கு பிறகு, அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது. அவசரத்தில் ச்சீ போடா என சொல்லியிருக்க கூடாது என நினைத்தாள்.

டேய் நீ என்ன சொன்ன, என்ன சொன்ன என மீண்டும் மீண்டும் கேட்டாள்.

திரும்ப சொல்ல முடியாது..

அவள் மீண்டும் கேட்க, அவளது அப்பா அவளுக்கு கால் செய்ய...

ஹலோ டாடி..
..
ஆன் தி வே..
.
நாட் டிரைவிங். ஆன் பிரேக்..
..
நோ, இன் எடிசன்.
..
அசைவம்
...
இன்னைக்கு ட்ரை பண்ண போறேன்.
...
நோ டாட். ஜஸ்ட் கிட்டிங்..
...
பை டாட்.
..
சுயர்..

"நா‌ன் வெஜ்" ட்ரை பண்ண போறியா?

சும்மா சொன்னேன்.

ஹம்.

சொல்லு, மறைக்காமல் எல்லாம் சொல்லு.

அதான் சொல்லியாச்சே..

இப்போதைக்குன்னு எதுக்கு சொன்ன?

ஹம்.. மலர் நீ "நா‌ன் வெஜ்" சாப்பிடுவியான்னு மலர் கேட்டா.

ஓஹ்! அதுக்கும் நீ சொன்ன "இப்போதைக்கும்" என்ன சம்பந்தம்.

"நா‌ன் வெஜ்" இல்லைன்னா எங்க கூட செட் ஆகாது.

அப்ப "நா‌ன் வெஜ்" நான் சாப்பிட்டா ஓகே வா..

அப்படி சொல்லலை..

அப்புறம்..

"நா‌ன் வெஜ்" சமைக்க சாப்பிட தெரியலன்னா என்ன பண்ணுவன்னு கேட்டா..

பொய் சொல்லாத..

உண்மை..

பொய்.

உண்மை..

என்ன பண்ணுனா உண்மை சொல்லுவ..

"நா‌ன் வெஜ்" சாப்பிடு..

போய் வாங்கிண்டு வா..

நீயும் வா என அவளை வெறுப்பேற்றும் எண்ணத்தில் தன்னுடன் கூட்டிச் சென்றான்.

சிக்கன் நக்கட் ஆர்டர் செய்தான்.

அதை வாங்கிய பிறகு..

இங்க சாப்பிடுறியா இல்லை கார்லயா?

கார்ல..

அவளுக்கு விஷயம் தெரியாமல் தலையே வெடிப்பது போல இருந்தது. குறிப்பாக "இப்போதைக்கு" என அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த பிறகு..

இருவரும் காருக்குள் வந்தார்கள்..

சில விநாடிகளில் கார் முழுக்க சிக்கன் ஸ்மெல்..

அய்யோ என்றாள் அம்ருதா...

இத எப்படி சாப்பிடுறது..

இப்படித்தான் என ஒரு பீஸ் எடுத்து ரசித்து திங்க ஆரம்பித்தான்..

அவள் எந்த அளவுக்கு தனக்காக இறங்குவாள் என்று பார்க்க ஆசைப்பட்டான். எந்த அளவுக்கு அவளது பழக்க வழக்கங்களை மாற்ற தயாராக இருக்கிறாள் என்று பார்க்கவும் ஆசை..

அவன் அந்த பீஸ் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனையே பார்த்தாள்..

அம்ருதா / அய்யோ...

பெருமூச்சு விட்டாள்..

சிக்கன் இருந்த சின்ன பாக்ஸை பார்த்தாள்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவன் முகத்தில் புன்னகை..

மீண்டும் சிக்கன் இருந்த சின்ன பாக்ஸை பார்த்தாள்.

பெருமூச்சு விட்டாள்..

கையை அந்த பாக்ஸ் உள்ளே விட்டாள்.

அவள் கை நடுங்கியது..

அவன் அவளை ஆச்சரியம் நிறைந்து பார்த்தான்.

ஒரு துண்டு சிக்கன் நக்கட் எடுத்தாள்..

கண்ணை மூடிக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டாள்.

கண்கள் மூடியிருக்க, அவளது கைகள் மெல்ல மெல்ல ஸ்லோ மோஷனில் நகர ஆரம்பித்தது.

கை அவள் நெஞ்சின் அருகில் போக, கார் குலுங்கியது போல இருந்தது.

அவள் கையை ஒரு கை பிடித்து நிறுத்தியது.

அவள் என்ன நடக்கிறது என கண் திறந்து பார்க்கும் முன்னர் அவள் உதட்டை இன்னொரு உதடு கவ்வியது.

சில வினாடிகள் அப்படியே இருந்தனர்..

உதடுகள் பிரிந்தது..

இப்படி நீ சிக்கன் ஊட்டி விடுறதுக்கு சும்மா இருக்கலாம், நானே முழு சிக்கன் சாப்ட்ருப்பேன்.

அவன் சிரித்தான்.

சொல்லணுமா?

அவன் இடது கையில் முத்தம் கொடுத்தாள்..

நோ, வேண்டாம் என்று கார் ஸ்டார்ட் செய்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் மல்க அவனைப் பார்த்தாள்.

தன் செல்போன் எடுத்து செல்ஃபி எடுக்கும் எண்ணத்தில் அவளது தோள்கள் அவனை நோக்கி சாய்ந்தன. அவன் தோள்கள் அவளை நோக்கி சாய்ந்தன.

இருவர் கன்னங்களும் ஒன்றோடு ஒன்று உரசின.. அம்ருதா உதடுகள் குவிந்தன. நளன் கண்கள் காமிரா லென்ஸ் மேல் பதிந்தது.

கிளிக் கிளிக்..

போட்டோவை அம்ருதா அவளது அப்பா, அம்மா, நளன், மலர், அம்மு ஆகியோருக்கு அனுப்பினாள்.

இருவர் பார்வையும் மீண்டும் சந்தித்தன. கண்களால் காதலை சொல்லிக் கொண்டார்கள்.

போட்டோவை பார்த்த அம்ருதா அம்மா, நல்லா நெருக்கமா ஆகிட்டாங்க என்றாள்.

ஹே! இங்க பாருடி, அவ கூட ஊரு சுத்துறான் எருமை மாடு என மலரிடம் சொன்னாள் அம்மு.

மலர் முகத்தில் சந்தோஷம். அம்முவை பார்த்து சிரித்தாள்.

அம்ருதா அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது மனைவி ஏன் அழுறேள் எனக் கேட்க, பொண்ணுக்கு ஊருக்கு வந்த முதல் முகூர்த்தம் கல்யாணம் என்றார்.

அம்ருதா காரை மீண்டும் டிரைவ் செய்ய ஆரம்பித்தாள். அவனை கண்களில் காதலுடன் பார்த்தாள்.

மலர் ஒன்றும் பெரிதாக அவன் மனம் மாறும் அளவுக்கு அட்வைஸ் செய்யவில்லை. ஒரே ஒரு கேள்விதான்.

"அம்ருதா நிலமையில் நான் இருந்தால், ஒரு அண்ணனாக நீ என்ன நடக்கணும்னு விரும்புவ!"

நளன் மற்றும் அம்ருதாவின் பயணம் காதலன் காதலியாக இனிதே துவங்கியது...

•❖• முற்றும் •❖•
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
ஒரு கொடியில் பல மலர்கள் ❖ அம்ருதா 【09】 - by JeeviBarath - 03-05-2024, 11:14 AM



Users browsing this thread: 2 Guest(s)