Romance சும்மா ஒரு காதல் கதை!!!
ஒரு கொடியில் பல மலர்கள்

அம்ருதா
【08】

அப்ப உனக்கு என்ன பார்க்க விருப்பம் இல்லை?

நம்ம ரூம் போய் பார்க்கலாம்..

நோ, முடியாது..

உன்னால டிரைவ் பண்ண முடியாதுன்னா புக் பண்றேன். இல்லைன்னா வேண்டாம்.

போடா தத்தி..

இருவரும் அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிட்டனர்.

கேசினோவில் அதிக காசு செலவழித்தால் அல்லது வெற்றி பெற்றால் ஓரளவுக்கு சீப் அமவுண்ட்டில் அறை கிடைக்கும் என்பதை அம்ருதா அறிவாள்.

சாப்பிட்டுவிட்டு கேசினோ நோக்கி போகும் வழியில் ஒரு விக்டோரியாவின் சீக்ரெட் உள்ளாடை நிறுவனத்தின் கடை. மீண்டும் வாயை பிளந்த நளனை பார்த்து...

வாங்கி குடு,  போட்டு காமிக்கிறேன். எப்படி இருக்குன்னு பாரு..

போடாம பார்த்தா கூட ஓகே..

ஓஹ்! அப்படி வேற ஆசை இருக்கா.

அதெப்படி இல்லாம இருக்கும்..

ஒய், அப்புறம்.

அய்யோ மாமி, உன்னை சொல்லல. பொதுவா சொன்னேன். பார்க்க ஆசையா இருக்கு.

இருவரும் கேசினோ உள்ளே நுழையவும்..

டேய் 100 டாலர் மேல லாஸ் ஆக கூடாது. சோ ரொம்ப காசு வச்சு ஆடாத..

5 டாலர்க்கு கீழே வைத்து ஆடும் டேபிள் கேம்ஸ் எதுவுமே இல்லை.

மாமி மினிமம் ஜாஸ்தியா இருக்கு. 100 டாலர் வச்சு ரொம்ப நேரம் ஆட முடியாது. சோ 200 லிமிட் என்றான்.

இருவரும் கேசினோ உள்ளேயே இருந்த ஏடிஎம் போய் காசு எடுத்தனர். நளன் 500 டாலர் எடுத்ததை பார்த்த அம்ருதாவுக்கு கோபம் வந்தது.

எதுக்கு இவ்ளோ காசு வேஸ்ட் பண்ண பார்க்குற என கோபமாக கேட்டாள்..

இட்ஸ் மை லக்கி டே மாமி. நாம காசு வின் பண்ணுவோம் என்றான். பிளாக் ஜாக் ஆட ரூல்ஸ் எல்லாம் பார்த்துட்டேன். இன்னைக்கு நாம ஜெய்க்க போறோம் என்றான்.

அவனது ஏடிஎம் கார்ட் வாங்கி தன் பர்ஸ் உள்ளே வைத்தாள். அவள் கேட்கும் போது அவன் எதுவும் எதிர்த்து பேசவில்லை.

அம்ருதா ரௌலெட் கேம் ஆட, நளன் ரௌலெட் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு பிளாக் ஜாக் ஆட சென்றான்.

கொஞ்ச நேரத்தில் அம்ருதா அருகில் வந்த ஒரு இந்திய வம்சாவளி நபர், அவளிடம் பேச்சு கொடுக்க, தன் காதலன் அங்கே இருக்கிறான் என நளன் இருக்கும் டேபிள் காட்டினாள். ஆனால் அந்த நபர் தொடர்ந்து பேச்சு கொடுக்க, அவளுக்கு பேச விருப்பம் இல்லை. அம்ருதா தான் ஜெயித்த 125 டாலர் காசுடன் நளன் இருந்த இடத்துக்கு போனாள்.

அங்கே நளன் 375 டாலர்கள் தோற்று விட்டான். அவள் போதும் என்று சொல்லி கேட்காமல், விட்டதை பிடிக்கிறேன் என ஏடிஎம்மில் எடுத்த 500, ஏற்கனவே அவனிடம் இருந்த 120 என 620 டாலர்களை இழந்தான்.

அவளிடம் இருக்கும் தன்னுடைய ஏடிஎம் கார்டு கேட்க நினைத்தான். கண்டிப்பாக கோபித்துக் கொள்வாள் என்று தெரியும்.

மாமி ஒரு 100 டாலர் கொடேன்.

நோ.

பிளீஸ் மாமி.

நோ..

பிளீஸ் பிளீஸ்..

ஏண்டா இப்படி பண்ற..

பிளீஸ் மாமி.

இந்த நான் வின் பண்ணுன 125. இதுக்கு மேல கேட்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு. நளன் சத்தியம் செய்தான்.

நளன் ஏற்கனவே ஆடிய டேபிள் போகாமல் இன்னொரு டேபிள் சென்றான். ஒரு ஆட்டத்துக்கு குறைந்த பட்ச தொகை 5 டாலர். அங்கேயும் 50 டாலர்கள் இழ‌ந்தா‌ன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆக அவளுக்கு ரொம்ப வெறுப்பாக இருக்க, பிளீஸ் போகலாம் என்றாள்.

அவன் நீயும் விளையாடு என்று சொல்ல, அவளும் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தாள். நேரம் 12 மணி நெருங்கும் நேரத்தில் நளன் விட்ட காசை பிடித்து விட்டான். அம்ருதாவுக்கு இங்கே லாபம் 90 டால‌ர்.

215 டாலர் லாபம். அவள் கிளம்பலாம் என்று சொல்லி ரெஸ்ட் ரூம் போக, அவன் தொடர்ந்து ஆடினான். அவள் திரும்ப வரும்போது 125 காலி.

மாமி நீ கூட இருந்தா மட்டும் தான் எனக்கு லக் என்றான்.

அவளும், அதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்..

நளன் சிரித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் அவனுக்கும் 200 டாலர் லாபம்.

திருப்திகரமான மனநிலையில் எழுந்தான். மாமி கிளம்பலாம் என்றான்.

என்ன மனதில் நினைத்தான் என தெரியவில்லை..

ரூம் புக் பண்ணிட்டு, காலையில எடிசன் போலாமா?

தைரியம் வந்துடுச்சா..?

இல்லை, உன்னை பார்க்க ரொம்ப களைப்பா இருக்க அதான்.

இருவர் கையிலும் மாற்று ஆடைகள் இல்லை. இருந்தாலும் ரூம் புக் செய்தார்கள்.

அந்த சிங்கிள் பெட் இருக்கும் அறைக்கு வந்தார்கள். அவளுக்கு திடிர்னு ஒரு சந்தேகம்...

டேய் சத்தியம் பண்ணு..

என்ன சத்தியம் மாமி?

நா‌ன் தூங்கின பிறகு திரும்பவும் சூதாட போக மாட்டேன்னு..

அவனும் சத்தியம் செய்தான்.

அவன் கீழே படுக்க பெட் ஷீட் எடுத்து விரித்தான்.

என்ன பண்ற?

கீழ. படுக்க போறேன்.

சும்மா இங்க படு..

வேணாம் மாமி..

பயப்படாதே, நான் உன்னை ரேப் பண்ண மாட்டேன்.

அதுக்கில்லை மாமி, வேணாம் விடு..

ராத்திரி உருண்டு புரளுவ, உனக்கு இடம் போதாது அதனா..

ஆமா என தலையை ஆட்டினான்..

வா வந்து என்னை இறுக்க கட்டிப் பிடிச்சுக்க கனவுல பேய் வராது என ஆரம்பித்து 5 நிமிடங்களுக்கு மேல் அவனை அவள் பெட் மேல் படுக்க சொல்வதும் அவன் வேண்டாம் என்பதும் தொடர்ந்தது.

ஒருவேளை கை கால் பட்டால் தன்னை தப்பா நினைக்க கூடாது, அதுக்காக பேசாம இருக்கக் கூடாது என்றான்.

அவளும் நேற்று இரவு நடந்த விஷயம் சொல்லி, உன்னை தப்பா நினைச்சு பேசாமல் இருக்கணும்னா, நேத்து ராத்திரிக்கு அப்புறம் பேசியிருக்கவே மாட்டேன். இப்போ இங்கே இப்படி பேசிட்டு இருக்க வாய்ப்பே இல்லை.. சோ ரொம்ப ஓவரா பண்ணாம வந்து படு..

அவனும் அவள் அருகே கட்டிலில் படுத்தான்.

அம்ருதா நளன் படுத்திருந்த பக்கமாக உருண்டு போய்..

கை கால் மட்டும் இல்லை, வேற எது பட்டாலும் எனக்கு ஓகே. எது என்கிட்ட வேணும்னாலும் கேட்காம நீயே எடுத்துக்க என அவன் காதில் ஒருவிதமான செக்ஸி வாய்ஸ்ஸில் சொன்னாள். அதைக் கேட்ட நளன் அவள் முகத்தை பார்க்கும் படி சாய்ந்து படுத்தான்...

மாமி..

ஹம்..

உன்கிட்ட ஒண்ணு கேக்கவா?

ஹம் கேளு..

அம்ருதா மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அந்த நொடியில். முத்தம் கொடுக்க அனுமதி கேட்க போகிறான் எ‌ன்று‌ நினைத்தாள். அவளை அறியாமல் அவள் முகம் சில சென்டிமீட்டர் அவனை நோக்கி நகர்ந்தது.

உங்க ஆளுங்க சாபம் விட்டா பலிக்குமா மாமி?

எதிர்பார்ப்பு தானே ஒரு மனிதனுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். அம்ருதாவுக்கும் அதே உணர்வு இருந்தது.

ஏன் அப்படி கேக்குற?

இல்லை என் ஃபிரண்ட்ஸ் அப்படி சொல்லி கேள்வி பட்டிருக்கேன். அதான் என இழுத்தான்..

ஒருவேளை நா‌ன் சாபம் விட்டா என்ன பண்ணன்னு நினைச்சு கேக்குறயா?

நளன் எந்த பதிலும் சொல்லவில்லை..

அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. ஒரு ஆண் மகனாக அவனுக்கு அவள் மேல் ஆசை இருக்கிறது. ஆனால் அவன் அடுத்தகட்டம் போகாமல் இருக்க காரணம் இதுதானா...?

அவள் எழுந்து  சாய்ந்து உட்கார்ந்தாள்...

இதுக்கு (சாபம்) பயந்து தான் ஒதுங்கி நிக்கிறியா?

நளன் எழுந்து பெட் ஹெட் போர்டு மேல் முதுகு படும்படி  அவளைப் போலவே உட்கார்ந்தான். ஆனால் இந்த முறையும் பதில் சொல்லவில்லை.

அம்ருதா தொடர்ந்து பேசினாள். அப்படி எதுவும் இல்லை, அப்படி பார்த்தா நான் எங்க சொந்தம் எல்லாரும் அவனுக்கு (முதல் கணவன்) எவ்ளோ சாபம் விட்டோம்.. அவன் முன்ன விட இப்ப ரொம்ப நல்லா இருக்கான்னு கேள்விப் பட்டேன். அதெல்லாம் சும்மா என சொல்லி முடித்தாள்.

நளன் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆசைப் பட்டான். புணரும் எண்ணம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது.

இருவருக்கும் தூக்கம் கலைந்து போனது.

நளன் டிவி ஓடவிட, இருவரும் மொபைல் பார்த்த படி எப்போதும் போல சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அம்மு & மலர் இருவருக்கும் அம்ருதா மெசேஜ் அனுப்பினாள். நளனிடம் எதுவும் சொல்லவில்லை. டின்னர் சாப்பிடும் போதே நம்பர் வாங்கிவிட்டாள்.

அம்ருதா அனுப்பிய படித்த அம்மு, நளன் ஆன்லைனில் இருந்ததை பார்த்து கால் செய்தாள். நளன் சொல்லு அம்மு என பேச ஆரம்பித்தார்கள். அம்ருதா ஒரு பக்க இயர் ஃபோன் காதில் வைத்து அவர்கள் பேசுவதை கேட்டாள்.

ஸ்பீக்கரில் அம்மு போட, மலர் பேச ஆரம்பித்தாள். மலர் அம்ருதா லவ் பண்றாளா எனக் கேட்க, நளன் அம்ருதாவுடன் சேர்ந்து இருக்கும் விஷயம் மற்றும் அவளது விவாகரத்து தவிர எல்லாம் சொன்னான்.

எ‌ல்லா விசயங்களையும் கேட்டுக் கொண்டிருந்த மலர், உனக்கு லவ் மேரேஜ் பண்ற ஐடியா இருந்தா, எனக்கு என்னவோ அந்த ஆனந்திய விட இவதான் உனக்கு செட் ஆகுவான்னு தோணுது. உன் விருப்பம் என்றாள்.

அம்மு : நீ யார லவ் பண்றன்னு எனக்கு கவலையில்லை. ஆனால் வரும்போது நான் கேட்ட எல்லாம் வாங்கிட்டு வந்திரு..இல்லன்னா இங்க வராதா. அங்கேயே இரு..

20 நிமிடங்கள் அவர்கள் பேசுவதை எல்லாம் அம்ருதா கேட்டுக் கொண்டிருந்தாள்..

டேய் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும். என்றாள் மலர்.

ஸ்பீக்கர் எடுத்து விட்டு காதில் ஃபோன் எடுத்து வைத்தாள் மலர்...
Like Reply


Messages In This Thread
ஒரு கொடியில் பல மலர்கள் ❖ அம்ருதா 【08】 - by JeeviBarath - 03-05-2024, 11:13 AM



Users browsing this thread: 2 Guest(s)