Adultery இது எங்கள் வாழ்க்கை!
【88】

⪼ ஜீவிதா ⪻

புதன்கிழமை வாராக் கடன் வசூலிக்க செல்லும் போது என் பைக் பஞ்சர் ஆகிவிட்டது. அங்கே சாலைப் பணிகள் செய்ய ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து எடுத்திருந்தார்கள். பாதி வேலை முடிந்திருந்தது. மீதி சாலையில் பயணிக்கும் போது ஏதோ கல் குத்தியிருக்கும் என நினைத்தேன். எனக்கு அந்த ஏரியாவில் பஞ்சர் ஒட்டும் யாரையும் தெரியாது. எங்கே இருக்கிறார்கள் எனவும் தெரியாது. நான் அரவிந்த்க்கு கால் செய்தேன். அவன் வெளியே இருப்பதால் தன்னால் வர முடியாது என மதியை அனுப்பி விட்டான்.

மதி என்னைக் கூட்டிக் கொண்டு நர்சரிக்கு வந்தான். அக்கா அந்த ரூட்ல தனியா பைக் யூஸ் பண்ணாதீங்க, அங்க பாம்பு பார்த்ததா நிறைய பேர் சொல்லி கேள்விப் பட்டிருக்கேன் என்றான்.

1 மணி நேரத்தில் பஞ்சரான என் பைக்கை சரி செய்து எடுத்துக் கொண்டு வந்தான். அக்கா டையர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு சீக்கிரம் மாத்துறது நல்லது என சொன்னதாக சொன்னான்.

வெள்ளிக் கிழமை அரவிந்த் கட்சி மீட்டிங் அட்டென்ட் பண்ண வெளியே சென்றான். மீண்டும் அதே சாலையில் என் வண்டி பஞ்சர். இந்த முறை சாலைப் பணிகள் முடிந்திருந்தது. சாலையின் இரு புறமும் பாம்பு வருகிறதா எனப் பார்த்த நான் சாலையின் நடுவில் கிடந்த முற்களை கவனிக்கவில்லை. எனக்கு கை கால் எல்லாம் நடுங்கியது. மதிக்கு அழைத்தேன். சில முக்கியமான வேலைகள் இருந்ததால் ஆட்டோ ஏற்பாடு தர சொல்லி ஆபீஸ் வந்தேன். என் அப்பா ஆபீஸ் வந்து என்னை பிக் செய்தார். நான் மதிக்கு டையர் மாற்ற சொல்லி காசு அனுப்பிக் கொடுத்தேன்.

⪼ பரத் ⪻

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இரவு, என் மொபைல் ரிங் ஆனது. யாரென எடுத்துப் பார்த்தால் ராஜா ரெஜினா காலிங் என வந்தது. இவன் எதுக்கு இப்போ போன்கால் பண்றான் என நினைத்துக் கொண்டே போன்கால் அட்டென்ட் செய்தேன்..

சொல்லு ராஜா..

அண்ணா ஒரு சின்ன உதவி.

அவசரமா ஊருக்கு போகணும், சம்பளம் இன்னும் வரலை, கொஞ்சம் காசு என இழுத்தான்.

எவ்ளோ?

3000.

ஓகே ராஜா, அனுப்பி விடுறேன்.

அண்ணா, 2.5 மட்டும் எனக்கு அனுப்புங்க. மீதி ரெஜினாகிட்ட கொடுங்க.

ஓகே ராஜா, பை.

கால் கட் செய்த அடுத்த நிமிடம் ராஜா கேட்ட பணத்தை அனுப்பிக் கொடுத்தேன்.

நேரம் 8:40 தாண்டியதால், ரெஜினாவுக்கு நாளை காலை காசு எடுத்துக் கொடுக்கலாம் என நினைத்தேன். என் பர்ஸ்ஸில் 250-300 ரூபாய் இருந்தது.

வீட்டுக்கு வெளியே...

சுனிதா அம்மா : என்ன ரெஜி, எங்க போற?

ரெஜினா : மெடிக்கல் வரைக்கும் போகணும். அண்ணா கிட்ட கொஞ்சம் காசு அவங்க கேட்டுருந்தாங்க.

சுனிதா அம்மா : இப்பவா?

ரெஜினா : ஆமா, ஏன்க்கா..

சுனிதா அம்மா : தனியாவா போக போற?

ரெஜினா : ஆமா அக்கா. அவங்க வர டைம் ஆகும்னு சொன்னாங்க. ஊருக்கு வேற அவங்க போறாங்க.

சுனிதா அம்மா : நீ அந்த சீட்ட குடு.. ஏங்க ஏங்க..

சுனிதா அப்பா : என்னடி...

சுனிதா அம்மா : கொஞ்சம் மெடிக்கல் வரைக்கும் போகணும்..

சுனிதா அப்பா : சாப்பிடறதுக்கு முன்ன சொன்னா என்ன?

சுனிதா அம்மா : நமக்கு இல்லைங்க, ரெஜினாவுக்கு..

சுனிதா அப்பா : இப்ப வர்றேன்.

ரெஜினா பரத் வீட்டு காலிங் பெல் அடித்தாள்..

பொதுவாக இந்த நேரம் அவன் வீட்டு காலிங் பெல் அடிப்பது சுனிதா அப்பா மட்டுமே, அவராகத்தான் இருக்கும் என நினைத்து கதவை திறந்தான்.. ஆனால் அங்கே சுடிதாரில் ரெஜினா நின்று கொண்டிருந்தாள்.

பரத் : என்ன ரெஜினா இங்க?

ரெஜினா : அவங்க காசு உங்க கிட்ட வாங்க சொன்னாங்க..

பரத் : ஓஹ்! அதுவா.. நான் காலையில காசு எடுத்து தரலாம்னு நினைச்சேன்.

ரெஜினா : ஓஹ்!

பரத் : வா உள்ள வா, எதும் அவசரமா..

ரெஜினா : பரவா இல்லைன்னா, நான் வெளியே நிக்கிறேன்.

பரத் : எதும் அவசரமா..

ரெஜினா : மெடிக்கல் வரைக்கும் போகணும்..

சுனிதா அம்மா : ஏய் ரெஜி, வெளியே நின்னு வாங்காத. உள்ளே போய் வாங்கு..

ரெஜினா : சரிக்கா.

ராத்திரியில் இப்படி நாள் நேரம் பார்க்காம காசு கொடுத்தா அவன் (பரத்) வீட்டுல எப்படி காசு தங்கும் என சுனிதா அம்மா முணுமுணுத்துக் கொண்டாள்.

ரெஜினா பரத் வீட்டின் ஹாலில் நிற்க, முன் கதவு மூடும் சத்தம். பரத் அவனுடைய பெட்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான்.

கையில் காசு எடுத்து எண்ணிக் கொண்டே வெளியில் வந்தான்.

பரத் : 310 ரூபாய்தான் இருக்கு. நான் ஏடிஎம் போய் எடுத்துட்டு வரவா?

ரெஜினா : அவ்ளோ போதும்ணா..

பரத் : எனக்கு சில்லறை தேவைப்படும். நான் ஏடிஎம் போயிட்டு வந்துடுறேன்.

ரெஜினா : நானும் மெடிக்கல் போகணும்.

பரத் : நீ அந்த ஸ்லிப் கொடு, நான் வாங்கிட்டு வர்றேன்.

ரெஜினா : அய்யோ அண்ணா வேணாம்.

பரத் : பரவாயில்லை, நான் எப்படியும் காசு எடுக்க இப்ப அல்லது நாளைக்கு காலையில வெளிய போகணும்.. நீயும் எதுக்கு அலையுற..

வெளியே வந்த பரத்திடம் வாங்க வேண்டிய மாத்திரை மற்றும் மருந்துகளை அடையாளம் காட்டினாள் ரெஜினா. பரத் வெளியே கிளம்ப.. ரெஜினா சுனிதா அம்மா உட்கார்ந்திருந்த வீட்டு வாசலுக்கு போனாள்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【88】 - by JeeviBarath - 21-04-2024, 04:06 PM



Users browsing this thread: 6 Guest(s)