Adultery இது எங்கள் வாழ்க்கை!
#87
【51】

❖∘ பிப்ரவரி ∘❖

⪼ அரவிந்த் ⪻

முதலில் எனக்கு கால் பண்ணியது என்னவோ என் மாமாதான். கிரு‌‌ எனக்கு எனக்கு வாட்ஸ்ஸாப்பில் சில புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். ஆனால் அது கூடவே, நான் லெட்டர் எழுதி வச்சுட்டேன், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மெசேஜ் வேறு. வேறு வழியில்லாமல் காரில் உட்கார்ந்து சமாதானம் பேசினேன்.. அவளுடன் நான் இதுவரை உடலுறவு கொள்ளவில்லை, ஆனால் வேறு விஷயங்கள் எல்லாம் நடந்து விட்டது.

சரணின் அறிவுரைப்படி கிரு‌‌வின் மிரட்டலை பற்றி இரவு பேசும்போது சொல்ல ஜீவிதாவின் அனுதாபம் இன்னும் கிடைத்தது. டபுள் டிராக் ஓட்டுவது சிக்கலில் முடியும். சீக்கிரம் கிரு‌‌ உறவுக்கு முடிவு கட்ட வேண்டும். சரண் என்னிடம் இதை சொல்லி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. என்ன இருந்தாலும் என் முதல் காதலி கிரு‌‌, அவளை அப்படியே கழட்டி விட்டாலும் சுவரில் எறிந்த பந்து மாதிரி என்னை நோக்கி வருவாள்.

⪼ மதி ⪻

ஜீவிதா அக்கா நர்சரி வருவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர்களுடன் நேரில் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறதே!

அவர்கள் அங்கே கடந்த இருமுறை வந்த காரணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களை ஜட்ஜ் பண்ண நான் யார்?

எனக்கு அரவிந்த் நர்சரி வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் என் தேவதையுடன் வருவதால் வந்த பொறாமையால் அல்ல. கடந்த 8 மாதங்களில் அவன் கூட்டிக் கொண்டு வந்த நாலாவது பெண் ஜீவிதா.

இது அரவிந்த் மாமாவின் நர்சரி. ஆனால் அரவிந்த் தான் எல்லாமே. நான் இப்போதைக்கு இங்கே இன்சார்ஜ். எனக்கும் அவனது மாமாவுக்கும் நேரடி தொடர்புகள் கிடையாது. இது அவர் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பித்த தொழில். அது எப்படி நடந்தாலும் யாரும் எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை.

என்ன இருந்தாலும் அரவிந்த் தொழில் நடக்கும் இடத்துக்கு பெண்களை அடிக்கடி கூட்டிக் கொண்டு வந்து  சில்மிஷம் பண்ணி எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறான்.

⪼ ஜீவிதா ⪻

இரவு பேசும்போது கிரு‌‌ கால் பண்ணி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய விஷயத்தை சொன்னான். அவள் அனுப்பியிருந்த லெட்டரின் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தான்.

அரவிந்த் தனக்கு வேண்டும் என்பதற்காக மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை இப்படித்தான் அவனுக்கு ஃபோன்கால் செய்து டார்ச்சர் பண்ணுகிறாள். அவளை ப்ளாக் பண்ண சொன்னாலும் செய்ய மறுக்கிறான். பாவம் என்பான். இவ்ளோ டார்ச்சர் பண்ணினாலும் அவள் மேல் இருக்கும் கரிசனத்தை பார்க்கும் போது அரவிந்த் மீதான என் காதல் கூடிக் கொண்டே இருக்கிறது.

மறுநாள் காலை ஆபீஸ் சென்ற சில மணி நேரங்களில் ட்ரைனிங் பற்றிய இமெயில் வந்தது. வரும் வாரத்திற்கு அடுத்த வாரம் சென்னை போக வேண்டும்.

ட்ரைனிங் பற்றி அரவிந்திடம் சொன்னேன். அவன் நானும் வர்றேன் என அடம் பிடித்தான். அவன் என்னுடன் வந்தால் ஒரே அறையில் தங்க வேண்டியது வரும், அப்படி நடந்தால் நிச்சயமாக உடலுறவு கொள்வதை தவிர்க்க முடியாது என்பதால் நான் மறுத்தேன். எனக்கும் ஆசை தான். அதற்காக உடனே சரியென சொல்ல முடியுமா? ஆனால் எப்படியும் என்னைப் பேசி சம்மதிக்க வைத்து விடுவான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

மதி என்னிடம் சொன்ன தேவதை கதையை பற்றி அரவிந்திடம் சொன்ன போது உன்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான் என கூலாக சொன்னான். என்னடா இப்படி சொல்ற எனக் கேட்டதுக்கு மதியோட இடத்துல நான் இருந்தா அதைத்தான பண்ணுவேன் என சர்வ சாதாரணமாக சொல்லி "ஏன்னா நீ அவ்ளோ அழகு" என என் புகழ் பாடினான்.

அன்று மதிய இடைவேளைக்கு பிறகு "நான் மதியின் தாய்மாமா, நீங்க தான் ஜீவிதாவா" என்று ஒருவர் என்னிடம் பேசினார். உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்லணும் என அவர் சொல்ல, 4 மணிக்கு மேல் அவரை திரும்ப வர சொன்னேன்.

அவர் என்னிடம் மதி சொன்ன அதே விஷயங்களை சொன்னார். அது கூடவே அவனது சின்ன வயதில் நடந்த விஷயங்களையும் சொன்னார். அவர் அங்கு ஏன் வந்தார், எதற்காக வந்தார், சைக்காலஜி டாக்டர் சொன்ன விஷயம், அவரது குடும்பத்தாரின் பயம் என எல்லாமே சொன்னார். என்னால் அவனுக்கு எந்த பிரச்சனையும் வராது என நானும் உறுதியளித்தேன்.

என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டு வீட்டுக்கு போகும் போது அவரது வீட்டிலுள்ள அனைவரது ஃபோன் நம்பர்களையும் கொடுத்தார். ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை பார்க்குற ஆசையில வந்தாலும் வருவான். எதுவும் அவசரம் என்றால் அந்த தகவலை எதாவது ஒரு நம்பருக்காவது கொடுக்க சொன்னார்.

எனக்கு அன்று முழுவதும் குழப்பம். மதி சொன்ன போது எனக்கு சுத்தமாக அந்த கதையில் நம்பிக்கையில்லை. ஆனால் அவனது மாமா என சொல்லி என்னிடம் பேசியவரின் முகம் அவரது குரலில் தெரிந்த பயத்தை பார்க்கும் போது மதி சொன்ன விஷயங்கள் உண்மையாக இருக்கும் என்று முழுமையாக நம்பினேன். என்ன இருந்தாலும் மதி பாவம் என்பதை விட அவன் மெண்டல் என்ற எண்ணம் என்னை ஆட் கொண்டது.

இரவு பேசும்போது அரவிந்த் மீண்டும் என்னிடம் சென்னை வருவது பற்றி ரொம்ப  கெஞ்ச ஆரம்பித்தான். இப்படியே இரண்டு நாட்கள் கெஞ்சினான். தனக்கு கட்சி தொடர்பான வேலை இருப்பதாக சொன்னான். எனக்கு அவன் சொல்வது பொய் என நன்றாகவே தெரியும். இருந்தாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல நானும் கரைந்தேன்.

சரி டா, நீயும் வா என சொன்னேன்.

நாங்கள் பயணம் செய்ய, தங்குவதற்கு என எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. நாட்கள் நெருங்க நெருங்க இரவு பேசும் நேரங்களில் உடலுறவு செய்வது குறித்து முன்பைவிட அதிகமாக பேசுவான்.

நான் முடியவே முடியாது, அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்ன வாய்ப்பேயில்லை என்பேன். என்னதான் உடலுறவு வேண்டாம் என்று சொன்னாலும் எனக்கு அவன் அதைபற்றி பேசுவது எனக்கு ரொம்ப பிடித்தது. 

கடைசியாக ந‌ர்ச‌ரியில் நடந்ததை நினைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக எங்களுக்குள் உடலுறவு சென்னையில் வைத்து நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் கடைசியாக உடலுறவு கொண்டு கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஆகிவிட்டது. ஆம், 13 மாதங்கள். கடந்த வருட பொங்கலுக்கு பிறகு பரத்தை உடலுறவு செய்ய அனுமதிக்க வில்லை. எனக்கும் உடலுறவு செய்ய ஆசை இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்யாமல் ஹோட்டலில் வைத்து உறவு கொள்ள பயமாகவும் இருக்கிறது. ஒருவேளை அங்கே போலீஸ் வந்து விட்டால்?

⪼ மஞ்சு ⪻

ஜெகன் ஹேண்ட் பேக் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் எனக்கு உதவி செய்தார். அதற்காக என்னையே அவருக்கு பரிசாக கேட்டார். அவர் என்னை வற்புறுத்தவில்லை. அதனால் அதை ஒரு ஆப்ஷனாக கூட நினைக்காமல் மறுத்தேன்.

ஆனால் ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஒருவர் பேசினார். அவர் பேசிய பிறகு, ஜெகனிடம் கெஞ்சும் நிலை வந்தது. என்னைக் கொடுக்க ஒத்துக் கொண்ட பிறகே எனக்கு உதவி செய்தார்.

சில வாரங்களில் ட்ரைனிங் அட்டென்ட் பண்ண சொல்லி இமெயில் வந்தது. தகவலை ஜெகனிடம் சொல்ல அவரும் அதே நாளில் சென்னையில் இருப்பேன் எனவும், அவருடன்  தங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இரண்டு நாட்கள் மட்டுமே ட்ரைனிங். ஆனால் என் கணவரிடம் மூன்று நாட்கள் ட்ரைனிங் என பொய் சொல்லி விட்டேன். ஜெகன் அந்த வாரம் முழுவதும் அவருடன் இருக்க சொல்வார் என நினைக்கிறேன். அப்படி அவர் சொன்னால் என் கணவரிடம் திடிரென இன்னொரு நாள் ட்ரைனிங் என சொல்ல முடியாது. அதனால் தான் முன்எச்சரிக்கையாக அப்படி செய்தேன்.

⪼ பரத் ⪻

என் மனைவி மற்றும் மகன் பிரிந்த பிறகு ரொம்ப நொந்து போய்விட்டேன். என் வக்கீல் எல்லா வாய்தாவுக்கும் வர வேண்டாம், நான் சொல்லும் போது மட்டும் வாருங்கள் என்றார். அவர்களும் காசு பார்க்க வழக்கை இழுத்தடிக்க வேண்டுமே. இப்போது விவாகரத்து வழக்குக்காக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அலைவது தான் மிச்சம். என் மகனை பார்க்க முடியவில்லை, பார்த்து 11 மாதம் ஆகிறது.

மிகுந்த மன உளைச்சல் நிறைந்து இருந்த என் நிலையை பார்த்த ரீகன், நான் சொந்த வீடு வாங்கிய பிறகு வளர்க்க ஆசைப்பட்ட வெளிநாட்டு நாய் இனத்தை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாங்கிக் கொடுத்தான்.  அநத நாய் வந்த பிறகு என் கூடவே ஒரு ஜீவன் இருப்பதைப் போல இருப்பதால் எனக்கும் கொஞ்சம் நிம்மதி..

⪼ அரவிந்த் ⪻

என்னை ஜீவிதா சென்னை வரவேண்டாம் என சொன்ன போது எனக்கு கோபம் வந்தது. ஆனால் சரண்தான் கெஞ்சுவது போல பேசு என அட்வைஸ் செய்தாள். எப்போதும் போல சரணின் அறிவுரைப்படி நடந்து கொண்டேன்.

மதி சொன்ன தேவதை கதையை பற்றி அவனிடமே கேட்டுவிட்டேன். என்றாவது ஒருநாள் எனக்கு அது நிச்சயமாக உதவும்.

மதிக்கு அவனுடைய அப்பாவுடன் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு நிறைய எதிரிகள் இருப்பதால் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் "வேண்டாத பிள்ளை" போல அவரும் மதியை கண்டு கொள்வதில்லை. அவரும் என் மாமாவும் ரொம்ப நெருக்கம். இந்த வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க காரணமும் அவனது அப்பா தான். உண்மை தெரிந்தால் ராஜினாமா செய்வான். அவனது அப்பா அவனுக்காக எதுவும் செய்வார் என்பதே அவனுக்கு தெரியாது. பாவம் மதி, அவனைப் பொறுத்த மட்டும் அம்மாவை செய்த கொலைகாரன் அவனது அப்பா.

⪼ ஜெகன் ⪻

கடந்த 1 வருடமாகவே சிக்காத மஞ்சு ஹேண்ட் பேக் சிக்கலில் மாட்டிக் கொள்ள, விஷயத்தை பாலுவிடம் சொன்னேன். அவன்தான் எனக்கு அறிவுரை செய்தான். அவன் சொன்னது போல போலி புகாரை ரெடி செய்து அவளை பயமுறுத்தினேன். முதலில்  பெரிதாக நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பாலு ஹெச் ஆர் போல பேசிய பிறகே மஞ்சு பயந்து போய் எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னாள். பாலு எனக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னான். நானும் சென்னை பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

⪼ சுனிதா ⪻

என் தங்கை அடிக்கடி பரத்திடம் இப்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு வாங்குகிறாள். அவ்வப்போது கையில் 65 ரூபாய் மதிப்புள்ள பெரிய சாக்லேட்டுடன் பரத் வீட்டிலிருந்து வருகிறாள். அவருக்கு சுகர் இருப்பதால், என் தங்கைக்கு கொடுக்க வாங்கி வைக்கிறார் என்பதால் நான் அவளை திட்டினேன். ஆனால் அவள் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. அம்மா அப்பாவிடம் சொன்னாலும் அவர்களும் அதை கண்டு கொள்வதில்லை. அம்மா பரத்தை கூடப் பிறக்காத தம்பி போல நினைக்கிறாள்.

இப்போது கியூட் நாய்க் குட்டி வேறு. என் தங்கையும் ரெஜினா அக்கா மகனும் முன்பைவிட அதிகமாக பரத் வீட்டுக்கு செல்கின்றனர்.

பரத்திடம் வாங்கிய கடனில் கொஞ்சம் கூட திருப்பி செலுத்த முடியவில்லை என அடிக்கடி புலம்பும் என் அம்மா திரும்பத் திரும்ப அப்பாவின் மருத்துவ செலவுக்காக கடன் வாங்குகிறார். என்னதான் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பரத் பண உதவி செய்தாலும் எனக்கு அவர் மேல் இன்னும் முழு நம்பிக்கையில்லை. ஏனென்றால் முதல் நாள் அவர் என்னைப் பார்த்த பார்வை அப்படி.

⪼ ரெஜினா ⪻

பரத் எப்பவும் ரொம்ப சோகம் நிறைந்து இருப்பார். வேலைக்கு செல்லும் நேரம் தவிர அவரை வெளியில் பார்ப்பதே அரிது. அவருக்கு விவகாரத்து வழக்கு நடப்பதை என் கணவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.

எங்களுக்கும் சுனிதா குடும்பத்துக்கும் அவசரத்துக்கு பண உதவி செய்வதால், நாங்கள் இப்போது வட்டிக்கு காசு  வாங்குவதில்லை.

நான் எதாவது கேட்டால், என் கணவர் என்னருகில் இருக்கும் போது மட்டும் நின்று பதில் சொல்லுவார். இல்லையென்றால் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கும் முன்னே அவர் வீட்டை நோக்கி போய்விடுவார்.

நாய்க்குட்டி வந்த பிறகு அடிக்கடி வெளியே வருகிறார். என் குழந்தைகளும் அங்கிள் அங்கிள் என அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறார்கள்.

⪼ சுஜி & ராகேஷ் ⪻

என் அக்கா ஜீவிதா, அரவிந்தை சந்திப்பதற்காக முதன் முறை எங்களை அழைத்தபோது என் கணவர் ராகேஷ் என்னுடன் வர மறுத்துவிட்டார். என்னிடம் நீங்கள் செய்வது தவறு என்று குறிப்பிட்டார். ஒருவேளை விவாகரத்து கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். என்னிடம் அவர் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. நான் என் அம்மாவிடம் என் கணவர் சொன்ன விஷயம் பற்றி பேசிய போது அவர்களும் அதையே தான் சொன்னார்கள்.

நானும் எனது அப்பாவும் அக்காவுடன் சேர்ந்து அரவிந்தை சந்தித்தோம். அரவிந்த் அந்த நேரத்தில் எங்களுடன் பேசியது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு நான் சில முறை என் அக்காவுடன் சேர்ந்து அவனை மீட் செய்தேன்.

அவர்கள் பேசுவது மற்றும் நடந்து கொள்வதை பார்க்கும் போது எனக்கு என் அக்கா வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. சில நேரங்கள் என் அக்கா அரவிந்துடன் பேசும்போது கான்பெரென்ஸ் காலில் போடுவாள் அப்போதும் நாங்கள் பேசியுள்ளோம். நாங்கள் பேசும் விஷயங்கள் அனைத்தையும் நான் என் கணவரிடம் சொல்வது வழக்கம். நான் அவர்களுடன் கான்பெரென்ஸ் காலில் போனில் பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறார்.

நா‌ன் என் கணவர் முன்னால் ஒரு முறை கூட ஸ்பீக்கரில் போட்டு பேசியதில்லை. ஒருநாள் எனது மகன் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டே, ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருந்தேன். என் கணவர் நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த கான்பெரென்ஸ் கால் முடிந்ததும் என் கணவர் அரவிந்த் முன்னுக்குப் பின் முரணாக பேசிய சில விஷயங்களை சுட்டிக் காட்டினார். நான் அக்கா சந்தோஷமாக இருக்கிறாள் என்று நினைத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்கள் செல்ல செல்ல நான் சொல்லும் பல விஷயங்களில் முரண் இருக்கிறது, இங்கே ஏதோ தவறு நடக்கிறது என்றார். நீ இதற்கு முன் இப்படி சொன்ன விஷயம் இவன் இப்போது இப்படி பேசுகிறான் என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

நானும் முதலில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் எனக்கு அவர் சொன்ன விஷயங்களை மீண்டும் யோசித்துப் பார்க்கும்போது எல்லாம் புரிந்தது. என்ன இருந்தாலும் அக்கா சந்தோஷமாக இருக்கிறாள், நாம் இதை சொல்லி பிரச்சனை வரக் கூடாது என நினைத்தேன்.

சில வாரங்களுக்கு பிறகு என் கணவர் உன் அக்காவிடம் விஷயங்களை சொன்னாயா என்று கேட்டார். நான் இல்லை என்று அவரிடம் சொன்னேன்.

என் கணவர் என்னிடம் உன் அக்கா கணவர் தொழில் செய்ய முயற்சி செய்து பணத்தை இழந்துதால் கஷ்டம். நான் அதை புரிந்து கொள்கிறேன். ஒருவேளை தொழில் நடத்தும் எனக்கும் அதே விஷயம் நடந்தால் நீ இப்படி விவாகரத்து செய்வாயா என்று கேட்டார்.

நீயே பலமுறை என்னிடம்  உன் அக்காள் கணவர் பணம் இழந்த விஷயம் குறித்து மட்டும்தான் மறைத்தார். வேறு எந்த விஷயங்களிலும் பொய் சொன்னது போல எனக்கு தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறாய். அப்படியென்றால் பணத்தை மட்டும் தான் உங்க எல்லாருக்கு பெரிய விஷயமா இருக்கா?

பொய் சொல்லாமல் நேர்மையாக இருந்தவனை பணம் இல்லாமல் சண்டை வந்த காரணத்தால்  பிரிந்து வந்து விட்டாள். சில நிமிடம் ஒரு ஃபோன் காலில் பொய் சொல்லும் அரவிந்த், உன் அக்காவை கரெக்ட் செய்ய பொய் சொல்லி அவளுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்கிறான் என நினைக்கிறேன்.  உன் அக்காவை ஏமாற்றுகிறான் என்றார்.

உன் அக்கா எப்படி இவனை நம்புகிறாள். எப்படி பொய் சொல்லும் ஒருவனுடன் உன் அக்கா வாழ்க்கை எப்படி நன்றாக இருக்கும் என்று  கொஞ்சமாவது யோசித்துப் பார் என்று என் கணவர் எனக்கு அறிவுரை செய்தார்.

ஒழுங்கா நல்ல யோசித்துப் பார்த்து உன் அக்காவிடம் பேசி புரிய வைத்து அவளை அவள் கணவனுடன் சேர்த்து வைக்கும் வழியை பாருங்கள். பணம் இன்று போகும், நாளை சம்பாதிக்கலாம். என் தொழிலில் இன்று நல்ல வருமானம் வருகிறது.
நாளை நானும் எல்லாம் இழந்துவிட்டால் நீ என்ன செய்வாய்? என்னை விட்டு போய் விடுவாயா என்று தொடர்ந்து கேட்க .ஆரம்பித்தார். அவர் கேட்ட கேள்விகள் என் நெஞ்சை துளைப்பது போல் இருந்தது. அவர் சொல்வதும் சரிதானே. பணம் மட்டும் முக்கியமில்லையே.

கேரக்டர் என்று பார்க்கும்போது எனக்குத் தெரிந்து அக்காள் கணவர் பணம் தவிர வேறு விஷயங்களில் பொய் சொன்னதில்லை. ஆனால் அரவிந்த் அப்படியில்லை.

நான் அடுத்த முறை அரவிந்திடம் பேசும்போது, ஒரு விஷயம் அவன் சொல்ல, நான் அவனிடம் நீ அப்ப இப்படி சொன்னியே இப்ப இப்படி சொல்றியே என்று கேட்டேன். அதற்கு அவன் என்னை பேசி சமாளித்தான்.

ஆனால் மறுநாளில் இருந்தே என் அக்கா என்னுடன் பேசுவது குறைவது போல்  இருந்தது. நான் அக்காவிடம் மிகத் தெளிவாக என் கணவர் எனக்கு சொன்ன விஷயங்களை அப்படியே எடுத்துச் சொன்னேன். ஆனால் அவள் நம்பவில்லை. ஏதோ கண்கட்டி விட்டவள் போல நான் சொல்லிய எந்த விஷயத்தையும் அவள் நம்பவில்லை. எனக்கு என்னவோ அரவிந்த் சொல்வதை மட்டுமே வேதவாக்காக நினைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது.

நாட்கள் செல்ல செல்ல அவள் என்னுடன் பேசுவது குறைந்து போனது. கடைசியாக பொங்கல் நல்வாழ்த்து என அனுப்பிய மெசேஜ்க்கு கூட அவள் ரிப்ளை அனுப்பவில்லை.

எங்கள் உறவு இப்போது அக்கா தங்கை உறவு போல இல்லை. நான் கால் செய்தாலும் அவள் எடுப்பதில்லை. என்னை திரும்ப அழைப்பதும் இல்லை.
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【51】 - by JeeviBarath - 16-04-2024, 09:49 AM



Users browsing this thread: 11 Guest(s)