Adultery இது எங்கள் வாழ்க்கை!
#80
【47】

❖∘ ஆகஸ்ட் ∘❖

⪼ ஜீவிதா ⪻

அரவிந்த்துடன் தினமும் பேசுகிறேன். நேரம் கிடைக்கும் போது வெளியில் செல்கிறேன். என் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப வரும் உணர்வு இருக்கிறது.

⪼ பரத் ⪻

சமையல் செய்து கொடுக்க ஆள் ஏற்பாடு செய்ததால் இப்போது சாப்பாட்டுக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. நிம்மதியும் இல்லை. தூக்கமும் பெரிதாக இல்லை. இது உடல்நிலையை பாதிக்கிறது.

⪼ அரவிந்த் ⪻

கிரு‌‌வைப் பிரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அவளது அம்மாவை சீண்டுகிறேன். அவளையும் சீண்டுகிறேன். நினைத்ததை போல எல்லாம் நடக்கிறது. சீக்கிரம் பிரிந்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

⪼ கிரு‌‌ ⪻

அரவிந்த் என்னிடம் வழக்கத்துக்கு மாறாக சண்டை போடுகிறான். அவன் பேசுவதைப் பார்த்தால் என்னை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறான்.

⪼ சுனிதா ⪻

நா‌ன் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது. நான் இப்போது இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. நிறைய செலவு பண்றோம், நல்லா படிக்கணும் என அம்மா அடிக்கடி சொல்கிறார். கல்லூரிக்கு செல்லும் பஸ், சாப்பாடு, ஃபீஸ் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டம். குறிப்பாக என் தங்கை இரண்டு வருடத்தில் +2 படித்து முடிப்பாள். இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி செலவு செய்வார்கள் என தெரியவில்லை.

⪼ கவி ⪻

வாரம் ஒரு முறை என் கனவில் வந்த தேவதையை பார்க்க கிளம்பி செல்கிறேன் என கிளம்பி சென்று விடுகிறான். அந்த பெண்ணை பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வந்தேன் என்கிறான். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. மதி சிறு வயதில் சொல்வதை போல மீண்டும் தேவதை என பேசுவதால் பாட்டி, அப்பா, அம்மா அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார்கள். மீண்டும் மதியை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லலாம் என நினைத்து கேட்ட போது அவன் மறுத்து விட்டான்.

நான் அவனிடம் எல்லோரும் கவலையாக இருப்பதை பற்றி சொன்னேன். அதற்க்கு அவன் "நீ என் பொண்டாட்டி", அவங்க நம்ம எல்லாருக்கும் தேவதை என்றான்.

நா‌ன் என்னைவிட்டு அவன் போய் விடுவான் என அவனிடம் அந்த விஷயங்களை பேசவில்லை. அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம் எங்களுக்கு இப்போது அதிகமாகி விட்டது...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【47】 - by JeeviBarath - 14-04-2024, 07:54 AM



Users browsing this thread: 4 Guest(s)