Adultery இது எங்கள் வாழ்க்கை!
#75
【42】

❖∘ மார்ச் ∘❖

⪼ ஜீவிதா ⪻

ஜீவிதா சென்னையில் பணிபுரிந்த கிளையில் ஒரு சீனியர் மேனேஜர், அவருக்கு கீழே இருவரில் ஒரு மேனேஜராக பணிபுரிந்தாள், அதனால் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு இதுவரை அவளிடம் இருந்ததில்லை. இப்போது வேலை செய்வது கிராமப்புறக் கிளை. அதுவும் சிறிய கிளை என்பதால் லோன் போன்ற முக்கிய முடிவு களை தன்னிச்சையாக எடுக்க வேண்டிய மொத்த பொறுப்பும் அவளிடம் இருந்தது. முடிவுகளை எடுக்க ரொம்ப சிரமப்பட்டாள்.

⪼ பரத் ⪻

மனைவி மற்றும் மகன் பிரிந்த பிறகு  நொந்து போய்விட்டான். ஜீவிதாவுக்கு ஃபோன் செய்தால் அவளும் ஃபோன் எடுக்க மாட்டாள். ஜீவிதா மேல் இருந்த கோபத்தில் பரத் அவளது ஊருக்கு சென்று அவளைப் பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவன் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என அப்போது துளியும் நினைத்திருக்கவில்லை.

நண்பர் ஒருவர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்தாமல் அதிக வட்டிக்கு வெளியில் வாங்கிய கடனை முதலில் கொடு என பரத்துக்கு அறிவுரை செய்தார். கொஞ்ச நாளுக்கு வங்கிக் கடனை வசூல் செய்யும் நபர்கள் கண்ணில் படாமல் இருந்துக்க என்றார். அவரின் அறிவுரையின்படி தான் அதிக வாடகை கொடுத்து வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை குறைவாக இருக்கும் இடத்துக்கு குடி பெயர்ந்தான்.

⪼ அரவிந்த் ⪻

ஜீவிதா புதிதாக சேர்ந்த கிளையில் அரவிந்த் ஒரு ரெகுலர் கஸ்டமர். தன் மாமா தன்னை பினாமியாக வைத்து நடத்தும் பிரைவேட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு காசு கொடுப்பார்கள். கஸ்டமர் நகைகளை குறைந்த வட்டிக்கு வங்கியில் அடகு வைத்து காசு சுற்றலில் விடுவது அவர்கள் தொழிலில் சகஜம்.

அரவிந்த் அவனது வங்கிக் கணக்கில் காசு டெபாசிட் செய்ய மற்றும் நகைக்கடன் வாங்க அடிக்கடி வங்கிக்கு வருவான். கடைசியாக காசு டெபாசிட் செய்து முடித்த பிறகு, புதிதாக வந்துள்ள மேனேஜரான ஜீவிதாவிடம் வணக்கம் சொல்லி "லோன்" பற்றிய சில தகவலை கேட்டான். அவனுக்கு "லோன்"  தேவைப்பட்டது, ஆனால் ஜீவிதாவின் அறிமுகம் வேண்டும் என்பதற்காக கொஞ்சம் சீக்கிரம் அதைப் பற்றி விசாரணை செய்தான்..

⪼ ஜீவிதா ⪻

இந்த மாதிரி உதவிகள் ஏதேனும் பிற்காலத்தில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் நபர்கள் ரொம்ப அதிகம். அதே போல கடலை போடும் எண்ணத்தில் தேவையில்லாமல் பேசும் நபர்களும் உண்டு. இதெல்லாம் பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் பெண்களுக்கான சவால்கள். எல்லா ரூபத்திலும் வந்து கடலை போட முயற்சி செய்வார்கள்.

ஊருக்கு வந்த பிறகும் கணவன் மனைவிக்கு நடுவே பிரச்சனைகள் தொடர்ந்தது, கணவன் விஷயத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் நபர்கள் சொல்வதை கேட்டு கணவனுடன் பேசுவதை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தாள். ஊருக்கு வந்த சில நாட்களில் அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டாள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【42】 - by JeeviBarath - 13-04-2024, 10:36 PM



Users browsing this thread: 6 Guest(s)