Adultery இது எங்கள் வாழ்க்கை!
#70
【41】

⪼ ஜீவிதா ⪻

தான் பிறந்த மாவட்டத்திற்கே ட்ரான்ஸ்பர் கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்பதால் கடந்த சில வாரங்களாக அவளுடைய மேனேஜர் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக ரொம்ப முயற்சி செய்தாள்.

ஜீவிதா தற்போது வேலை செய்யும் கிளையில் மூன்றாண்டு கால பணி நிறைவு செய்ய இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. வங்கியின் பாலிசி படி, மூன்றாண்டு முடிந்த பிறகு எப்படியும் வேறு கிளைக்கு மாற்றி விடுவார்கள். ஜீவிதாவின் சீனியர் மேனேஜர் அவளது குடும்ப பிரச்சனைகளை ஓரளவுக்கு அறிந்தவர் என்பதால் அவளிடம் பேசிப் பார்த்தார். ஆனால் ஜீவிதா ஊருக்கு இடமாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.

ஜீவிதா நினைத்தது நடந்தால், தன்னுடைய சொந்த ஊரில் தான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் வாய்ப்புகளும் அதிகம். அவளது அப்பா அம்மா அவளுடைய மகனை கவனித்துக் கொள்வார்கள். அவள் பெற்றோர்களும் புது இடத்துக்கு குடிபுக வேண்டிய அவசியம் இருக்காது என்பதே முக்கிய காரணம்.

ஜீவிதா மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ட்ரான்ஸ்பர் மார்ச் மாதமே அவளுக்கு உறுதியானது. ஸ்ட்ராங் ரெக்கமன்டேஷன் என்பதால் அவளை ஃபோனில் அழைத்துப் பேசினார்கள். சில கிளைகள் பெயரை சொல்லி அதில் எது வேண்டும் என மறுநாள் உறுதி செய்ய சொன்னார்கள்.

⪼ ஜீவிதா & பரத் ⪻

டிரான்ஸ்பர் பற்றி பரத்திடம் ஜீவிதா சொல்ல அவர்களுக்குள் பயங்கர சண்டை. அந்த சண்டைக்குப் பிறகும் டிரான்ஸ்பர் வேண்டாம் என சொல்லி கேன்சல் செய்யலாம் என்ற எண்ணம் ஜீவிதாவுக்கு இருந்தது. ஆனால் அன்று மாலை அம்மா அப்பாவிடம் பேசிய பிறகு தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

⪼ ஜீவிதா ⪻

தன் அப்பா அம்மாவிடம் பேசிய பிறகு தனது வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கிளையை தேர்ந்தெடுத்தாள். ஆனால் அவளது புது கிளை அமைந்திருப்பது பக்கத்து மாவட்டத்தில். பயண தூரம் எல்லாம் யோசிக்க அவளுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. இன்னும் ஒருவாரத்தில் புதுக் கிளையில் பணியில் சேர வேண்டும் என ஆஃபிஸியலாக இமெயில் வந்தது.

ஜீவிதா புது கிளையில் மேனேஜராக பணியில் சேர்ந்தாள்.

⪼ பரத் ⪻

மார்ச் மாத இறுதியில் வீட்டை காலி செய்தான். நண்பனின் மாமா வீடு என்பதால் எந்த சிரமமும் இல்லை. நிலைமையை அறிந்தவர்கள் சாரி என சொன்னார்களே தவிர பணப் பிடித்தம் செய்வேன் அப்படி இப்படி என எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【41】 - by JeeviBarath - 13-04-2024, 04:46 PM



Users browsing this thread: 3 Guest(s)