Adultery இது எங்கள் வாழ்க்கை!
#67
【40】

பரத் மற்றும் ஜீவிதாவின் கல்யாணம் நடந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் நெருங்கிய நிலையில் தான் அவர்கள் முதன் முறையாக உடலுறவு கொண்டார்கள். அதுவும் காலையில் அலுவலகம் கிளம்ப குளித்து முடித்து ஜீவிதா வெளியே வந்த போது.

அன்று மாலை என்ன எல்லாத்துக்கும் அலவ் பண்ணிட்ட என பரத் கிண்டலாக கேட்க, காலையில் தன் அம்மாவிடம் பேசியது அவளது அம்மா இன்னும் நடக்கலையா எனக் கேட்டது, வலித்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க என தாயார் சொன்ன விஷயங்களை சொல்ல ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளானான் பரத்.

இப்படி படித்த பெண் தன் தாயாரிடம் எல்லாம் சொல்லுவது அவனுக்கு பிடிக்கவில்லை. விவரம் தெரியாத ஒரு பெண் பிறரிடம் கேட்பது ஓகே, நீ இப்படி பண்றது சரியா எனக் கேட்கும் நேரங்களில் குட்டிக் குட்டி பிரச்சனைகள்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆன பிறகு ஏற்கனவே எழுதியிருந்த பாங்க் மேனேஜர் எக்ஸாம் ரிசல்ட் வந்தது. தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தாள் ஜீவிதா. இருவரும் எந்த வங்கியில் சேர்வது என எல்லாமே பேசி முடிவு செய்தார்கள்.

வங்கியில் பணியில் சேர்ந்தாள். முதற்கட்டமாக 3 வார ட்ரைனிங் சென்ற போது முதல் பிரிவு அவர்களுக்குள். முதற்கட்ட ட்ரைனிங் முடிந்து சென்னைக்கு வந்த பிறகு பரத் பிசினஸ் தொடங்குவதைப் பற்றி பேச ஆரம்பித்து அவளை சம்மதிக்க வைத்தான்.

ஆனால் ஜீவிதா அவளுடைய வீட்டில் அதைப் பற்றி பேசிய பிறகு பிசினஸ் வேண்டாம், நாம வீடு மற்றும் கார் வாங்கலாம் என்றாள். உனக்கு 3 வருஷத்துக்கு ஒருமுறை இடமாறுதல் வரும். வீடு வாங்குவது செட் ஆகாது, நல்ல யோசி என சொல்லியும் அவள் கேட்கவில்லை இருவருக்குள்ளும் அதில் வாக்குவாதம்.

கல்யாணம் முடிவான போதே "நான் கண்டிப்பா பாங்க் மேனேஜர் எக்ஸாம்" பாஸ் ஆயிடுவேன். அதனால பரபேஷனரி பீரியட் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு பிறகு குழந்தை பெத்துக்கலாம் எ‌ன்று‌ சொன்ன போது சரியென சொல்லிவிட்டான். ஆனால் பாங்க் மேனேஜர் ட்ரைனிங் முடித்து வந்த ஜீவிதா எனக்கு குழந்தை உடனே வேணும் என அடம்பிடிக்க ஆரம்பித்தாள். வாழ்க்கை ஊடல் கூடல் என ஓடியது.

செக்ஸ் விஷயத்தில் எல்லா விஷயங்களுக்கும் முடியாது முடியாது என ஆரம்பத்தில் பதில் சொல்லிய ஜீவிதா இப்பொழுது கொஞ்சம் தேறியிருந்தாள். அதே நேரம் சீக்கிரம் கர்ப்பம் ஆக வேண்டும் என்ற தன் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டாள். கணவனுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு குழந்தை விஷயத்தில் நினைத்த மாதிரி சாதித்துக் கொண்டாள்.

14 மாதங்களில் ஓர் அழகிய ஆண் குழந்தை. அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி முடித்த ஜோசியர் அப்பாவின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் வரும் என்றார். ஹோட்டல் தொழில் செய்யலாமா என்று கேட்க, நிச்சயமாக ஆரம்பிக்கலாம் என்றார் அந்த ஜோசியர்.

ஹோட்டல் தொழில் பற்றி விசாரிக்க சொன்ன காரணம் பரத்தின் நண்பர். பல வருடங்களாக வேலை பிடிக்கவில்லை என சொல்லிக் கொண்டிருந்த பரத்துக்கு ஒரு முன்னணி நிறுவனத்தின் ஹோட்டல் கிளை ஒன்றை சென்னையில் துவங்கலாம் என ஆசையை தூண்டியது அந்த நண்பர்தான்.

பரத் ஜீவிதாவிடம் மீண்டும் பேசினான், அவளுக்கு பெரிதாக ஹோட்டல் பிசினஸ் செய்வதி‌ல் விருப்பமில்லை. கையில் இருக்கும் பணத்தை வைத்து அவளது அப்பா அம்மா சொன்ன மாதிரி வீடு மற்றும் கார் வாங்க ஆசை. இருந்தாலும் கணவன் விருப்பத்துக்கு இடையூறாக மீண்டும் இருக்க விரும்பவில்லை. ஜீவிதா  சம்மதத்துடன் பரத் தன் வேலையை ராஜினாமா செய்தா‌ன், ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் செய்த முயற்சி தோல்வி. ஆகும் செலவுகளை சமாளிக்க இதர வருமானம் தேவை என்ற நிலையில் ஷேர் மார்க்கெட் டே டிரேடிங் பற்றி அறிமுகம் கிடைக்க அதுவும் படுதோல்வி. அதன் விளைவு, பரத் கடனாளியாக மாறிவிட்டான்.

பரத் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த சேமிப்பு, ஜீவிதாவின் நகை அடமானம் வைத்தது, வங்கியில் தனி நபர் கடன் என சுமார் 87 லட்ச ரூபாய்க்கு மேல் சில வருடங்களில் நஷ்டம். அதில் 12 லட்சத்துக்கு மேல் ஜீவிதாவுக்கு தெரியாமல் 3 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். அடைந்த தோல்வியால் விரக்தியின் உச்சத்தில் இருந்த போது.

வட்டிக்கு மேல் வட்டி கட்டி குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலை வந்த நேரத்தில் தான் பரத் மற்றும் ஜீவிதா இருவருக்கும் பெரிய பிரச்சனைகள் துவங்கியது. அதன் பிறகு அவர்களுக்குள் பிரச்சனை இல்லாத நாட்கள் ரொம்ப குறைவு என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அவர்களுக்குள் நடக்கும் விஷயம் எல்லாம் அறிந்த பரத்தின் அப்பா ஒரு சொத்தை விற்று எல்லா கடன்களையும் அடைக்க உதவி செய்தார்.

தொழில் செய்கிறேன் என நஷ்டமடைந்த காசு அனைத்தும் கையில் இருந்தால் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்க முடியும் என ஜீவிதா மற்றும் அவளது உறவுகள் சொல்லும் நேரங்களில் சண்டை மிகப்‌ பெரிதாக இருக்கும். ஒரு கட்டத்தில் என் காசு, என் அப்பா காசு நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அதைக் கேட்க "நீ யார்", உங்க வீட்டு சைடுல கேட்க எவனுக்கும் ரைட்ஸ் கிடையாது என எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தான். அவனுக்கு இருந்த விரக்தியில் யாரையும் மதிப்பதில்லை. குறிப்பாக கஷ்டப்பட்ட நேரத்தில் உதவி செய்யாமல் அட்வைஸ் செய்தவர்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டான்.

மீண்டும் வேலையில் சேர்ந்தான், அடுத்த 1.5 வருடங்களுக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. மீண்டும் புதிய கம்பெனியில் உள்ள நண்பர் ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றின் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதை பார்த்தவன், ஜீவிதாவுக்கு தெரியாமல் அதிக வருமானங்கள் கிடைக்கும் அதை வைத்து கொஞ்சம் நிம்மதியாக வாழலாம் என நினைத்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தான். அந்த கம்பெனி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள். இழந்ததை மீட்க கிரிப்டோ நாணய வர்த்தகம், ஷேர் மார்க்கெட் வர்த்தகம் என பல லட்சங்களை இழந்துவிட்டான். பட்ட காலில் படும் என்பதைப் போல, பரத்துக்கு மீண்டும் அடிமேல் அடி விழுகிறது.

இந்த விஷயங்களால் ரொம்ப விரக்தியில் இருந்தான். இதை எப்படி தன் மனைவியிடம் சொல்வது என தெரியாமல் விழி பிதுங்கிப்‌ போய் இருந்தான். எப்படியும் விஷயம் தெரியும் போது பிரச்சனை என்பதால் அந்த தயக்கம். வேறு வழியில்லை, மீண்டும் கடனாளி ஆன விஷயம் ஜீவிதா காதுக்கு சென்றது.

கடந்த 6 மாதங்களாக மீண்டும் அடிக்கடி பிரச்சனைகள். கடந்த முறை பிரச்சனையின் உச்சத்தில் பிரிந்து வரச் சொன்ன அவளது அப்பா, அம்மா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீண்டும் அவளிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தார்கள். அவளும் கொஞ்ச நாள் பிரிந்து வாழலாமா என யோசிக்க ஆரம்பித்தாள்.

அதன் விளைவு பரத்துக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பே பணியிட மாற்றம் கேட்டு அப்ளை செய்து விட்டாள்.

பெரும்பாலும் கல்வியாண்டு முடியும் வேளைகளில் நிறைய பேர் பணியிட மாற்றம் கேட்பார்கள் என்பதால் எப்படியும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தனக்கு பணியிட மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இரு‌ந்தது...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【40】 - by JeeviBarath - 11-04-2024, 03:26 PM



Users browsing this thread: 4 Guest(s)