Adultery இது எங்கள் வாழ்க்கை!
#48
【28】

சில வருடங்களுக்குப பிறகு பழைய டெக்னாலஜியிலிருந்து புதிய டெக்னாலஜிக்கு மாற்றும் வேலைகள் துவங்கிய போது பரத்துக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் சலிப்பான சில தொழில்நுட்ப பகுப்பாய்வு தேவைப்படாத வேலைகளை தனியாக பிரித்து புதிதாக சில வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்காக சிலரை சென்னையில் பணியமர்த்தினர். அந்த அணியும் பரத்தின் மேனேஜருக்கு கீழே இயங்கியது. அது ஒரு நான்கு பேர் கொண்ட அணி 24*5 அவர்களது வேலை. அந்த அணியின் லீடர், பரத்தை முதல் பஞ்சாயத்தில் இழுத்து விட்ட கல்யாணமான அந்தப் பெண்.

பரத் அந்த அணியினர் யாருடனும் பேசுவதை தவிர்ப்பது வழக்கம். எதுவாக இருந்தாலும் ஈமெயில் அனுப்புவான், அந்த ஈமெயில் மேனேஜருக்கும் போகும்படி பார்த்துக் கொள்வான். எந்த பஞ்சாயத்தும் இருக்கக் கூடாது என நினைத்து அப்படி செய்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, பரத் சென்னையில் இருந்த போது மேனேஜருக்கு கீழே இன்னொரு அணியில் வேலை பார்த்த நெருங்கிய நண்பர் ஒருவர் அவனை அழைத்து பேசினார்.

அந்த புது டீம் பொண்ணுங்க உங்களைப் பார்த்தாலே பயன்படுதுங்க என்ன பண்ணுனீங்க எனப் பேசியவர், நடந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்ட பரத்துக்கு ஷாக். "உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது, குறை சொல்வான் அதான் இப்படி எஸ்கலேட் பண்றான். நீங்க சென்னையில் இருந்த போது இரு முறை நடந்த பஞ்சாயத்துகள் உட்பட எல்லாவற்றையும் அவர்களுக்கு வந்த சில நாட்களில் சொல்லிவிட்டார்கள். அதன் விளைவு, அந்த பெண்களுக்கு டவுட் இருக்கும் போது கூட உங்ககிட்ட கேட்க பயப்படுறாங்க. இனி எதுவா இருந்தாலும் உங்ககிட்ட கேட்க சொல்லியிருக்கேன் உங்களுக்கு ஓகே தான என்றார்.

நண்பருக்கும் அந்த பெண்களுக்கு பழக்கம் ஏற்பட, அந்த பெண்கள் பரத்தை எஸ்கலேட் செய்தார் என குறை சொல்ல, அவர் சில பெண்களை சொல்லி அவங்களை தவிர வேறு யாரும் பரத்தை குறை சொல்ல மாட்டார்கள் என தெரிவித்து அவரு ரொம்ப ஹெல்ப் பண்ணுவாரு, நான் அவர்கிட்ட பேசுறேன் என பரத்திடம் நடந்த விஷயங்களை சொன்னார்... 

அதன் பிறகு பரத் மேல் இருந்த பயம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக  இரவு ஷிப்ட் வேலை செய்தவர்கள் சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட கேட்க ஆரம்பித்தார்கள். அப்படி அந்த அணியிலிருந்து அறிமுகமான ஒரு பெண் தான் மெர்லின்.

அமெரிக்காவில் தனியாக இருந்த பரத் கேசினோ அல்லது பெண்கள் அரை / முழு நிர்வாணமாக ஆடும் ஜென்டில்மேன் கிளப்களுக்கு மாதம் ஒரு முறையாவது செல்ல ஆரம்பித்தான்.

பரத் சென்னையில் இருக்கும் போதே அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜாதகப்படி ஏதோ தோஷம் இருப்பதாகவும் பெண் அதற்கு தகுந்த மாதிரி இருக்கவேண்டும் எனப் பார்க்க ஆரம்பிக்க எதுவும் செட் ஆகவில்லை.

இதே காலக்கட்டத்தில் மெர்லின் பெரும்பான்மையாக நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்க ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஃபோன் போட்டு பேச ஆரம்பித்தார்கள்.

ஏன் இப்படி நைட் ஷிப்ட் வர்ற எ‌ன்று‌ கேட்ட போது, தனக்கு நிச்சயம் ஆன விஷயம், வருங்கால கணவனுடன் சேர்ந்து ஊர் சுத்த அவள் காலை அல்லது இரவு ஷிப்ட் பெஸ்ட் அதனால தான் என சொல்லுவாள்.

சில எஸ்கலேஷன்களில் அந்த அணியில் வேலை செய்தவர்களுக்கு ஆதரவாக பேசி உதவி செய்தான். கல்யாணம் ஆன அந்த பெண்ணின் மேல் இருந்த காண்டு தான் காரணம். ஆனால் மெர்லின் எப்படி எடுத்துக் கொண்டாள் என்று தெரியவில்லை, அந்த சம்பவங்களுக்கு பிறகு பரத்துடன் சில மணி நேரங்கள் ஹாஸ்டலில் இருக்கும் போது பேசினாள்.

பரத் தனியாக இருந்ததால், வெறுப்பாக இருந்தால் அவளுக்கு அழைத்து எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு இருவரும் நெருங்கிப் பழகினர். எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் அரை / முழு நிர்வாண நடனம் பார்க்க சென்றால் ஆண் நண்பர்களிடம் பேசுவதைப் போல அவளிடம் சொல்லி அதை அவள் கிண்டல் செய்து சிரிக்கும் அளவிற்கு நெருக்கம். கிட்டத்தட்ட இன்னொரு சுகன்யா என்று சொல்லும் அளவுக்கு மெர்லின் இருந்தாள். ஆனால் சுகன்யா மேல் இல்லாத காதல் ஈர்ப்பு பரத்துக்கு மெர்லின் மேல் இருந்தது.

பெண் பார்ப்பது தொடர்பாக அடிக்கடி பரத் தன் வீட்டில் சண்டை போட்டான். ஜாதகத்தில் அவனுக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. இந்த விஷயத்தில் ஒருமுறை வீட்டில் அவனுக்கும் அம்மாவிற்கும் சண்டை.

அன்று மார்னிங் ஷிப்ட்டில்  இருந்த மெர்லினுடன் தூங்காமல் 4-5 மணி பேசினான். அவனுக்கே ஆச்சர்யம்,  ஒரு வார்த்தை கூட செக்ஸ் பற்றி பேசாமல், வேறு விஷயங்களை மட்டுமே பேசி சிரித்திருக்கிறான் என நினைக்கும் போது. அவளுடன் பேசுவது அவனுக்கு மனது ரொம்ப இதமாக இருந்தது. மெர்லினுடன் பேசுவதை விரும்ப ஆரம்பித்தான் பரத்.

இதுவரை அவன் சுகன்யா மற்றும் உறவினர்கள் தவிர்த்து பேசிய பெண்களிடம் எப்போது செக்ஸ் பத்தி பேசி, சுய இன்பம் செய்யலாம் என்ற எண்ணம் அவன் மனதில் இருக்கும். அது மார்கெட்டிங் செய்ய பேசும் பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் மெர்லினிடம் பேசும்போது அப்படி இல்லை. ஒருமுறை மெர்லினுடன் பேசும்போது..

உனக்கு மட்டும் நிச்சயம் பண்ணாமல் இருந்தால், என்னை கல்யாணம் பண்ண சொல்லி கேட்பேன்.

ஹா ஹா, நான் அவன கழட்டி விடுறேன் என கட்டிக்குறியா என கேட்டு சிரித்தாள்.

அதன் பிறகு ஒவ்வொரு முறை பேசும் போதும் "அவனை கழட்டி விடுறேன் கட்டிக் குறியா" என கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் மெர்லின். பரத்துக்கு ஆசை இருந்தது. ஆனால் நிச்சயமான பெண் அதுவும் மெர்லின் அப்படி கேட்பதை கிண்டல் என நினைத்தான். பெரிதாக ஆசைகளை வளர்த்துக் கொள்ளவில்லை.

அமெரிக்கா வந்து ஒருவருடம் ஆன நிலையில், லீவுக்கு ஊருக்கு வரலாம் என நினைத்தான். அதே நேரத்தில் ரீகனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என நினைத்து ஊருக்கு வந்தான். அவனுக்கு 2 வாரம் லீவு கிடைத்தது. டிக்கெட் விலை காரணமாக 2 நாள் சென்னை ஆபீஸிலிருந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான ஒப்புதல்களை வாங்கினான்.

மெர்லினின் வருங்கால கணவன் ஐ-பாட் கேட்டான் என சொல்லி அந்த மாடல் லிங்க் அனுப்பியவள் அதற்கான காசை பரத்துக்கு அனுப்பிக் கொடுத்தாள்.

ஊருக்கு வந்த பரத் நண்பனின் கல்யாணம் முடிந்து ஆபீஸ் வர. மெர்லினுக்கும் நைட் ஷிப்ட். பரத்தை இதுவரை நேரில் பார்த்திராத ஒரு பெண்  மெர்லின் அருகில் வந்து உட்கார்ந்தாள், பரத் பக்கத்து கேபினி‌ல் இருப்பதையும் கவனிக்காமல் மெர்லினிடம்..

என்னடி" ஒர்க் ஹஸ்பண்ட்"  இல்லாம ஃபோர் அடிக்குதா?

வாய மூடுடி என சொல்லி ரோலிங் நாற்காலியை பிடித்து இழுத்தாள் மெர்லின்.

சத்தம் கேட்ட பரத் எழுந்து, மெர்லினிடம்..

சொல்லவேயில்லை, யாரு அந்த ஒர்க் ஹஸ்பண்ட்
என கேட்க்க.

அந்த பெண் பரத்தை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டாள். மெல்ல மெர்லினிடம் அவள் காதில் ஏதோ கேட்க்க, மெர்லின் தலையை அசைத்தாள்.. அந்த பெண் அமைதியாக எதுவும் பேசாமல் தலைகுனிந்து தன்னுடைய சிஸ்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【28】 - by JeeviBarath - 02-04-2024, 03:36 PM



Users browsing this thread: 6 Guest(s)