Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#57
வித்யா வித்தைக்காரி
【29】

போய் கூப்பிட்டா வருவாளா?

வீர வசனம் பேசிட்டு அவ வீட்டுக்கு போறது சரியா இருக்குமா என பல விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தான். ஏகப்பட்ட குழப்பம். ஆனால் ஒரு விஷயம் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. வித்யா தன்னருகில் இருப்பது அவனது மனதை ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கிறது என்பதுதான் அது.

நேற்று இரவிலிருந்து சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்த வித்யாவைப் பார்க்க பார்க்க அவளது அப்பாவுக்கும் வருத்தமாக இருந்தது. அவளாக நடந்த விஷயங்களை சொல்லாமல் எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து அவள் குடும்ப விஷயங்களைப் பற்றி கேட்பதை தவிர்த்தார். மகளை சாப்பிடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தார். 2-3 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஜூஸ் போட்டுக் கொடுத்தார்.

குழப்ப மனநிலையில் இருந்த வளன் தன்னுடைய பைக்கில் அப்பா கல்லூரிக்கு சென்றான். தன் அப்பாவிடம் பைக் கீ கொடுத்துவிட்டு கார் கீ வாங்கிக் கொண்டு கிளம்பினான். 

வாசு நேசமணிக்கு ஃபோன் செய்து ஒருவேளை வளன் அங்கே வரலாம் என்ற தகவலை சொன்னார். வளன் வரவில்லை என்றால் வித்யாவுக்கு ஏமாற்றம் ஏற்படும் என நினைத்த நேசமணி தன் மகளிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் வாசு அழைத்துப் பேசி மூன்றரை மணி நேரம் தாண்ட குட்டி போட்ட பூனை போல வாசல் வரை நடந்து போவது வெளியில் பார்ப்பது என சுற்றிக் கொண்டிருந்தார். ஏன்ப்பா இப்படி அங்கயும் இங்கயும் நடக்குற வந்து உட்காரு என்றாள் வித்யா.

மாலை 5 மணியளவில் வித்யா வீட்டு வாசலில் வளனின் கார் வந்து நின்றது. அவளாக கூப்பிடாமல் வீட்டுக்குள் போகக்கூடாது என நினைத்தவன், ஹாரன் அடித்தான். சத்தத்தை கேட்டு வெளியே எட்டிப் பார்த்த நேசமணி, கார் நிற்பதைப் பார்த்தவுடன் தன் மகளிடம் சொல்ல, வித்யா பதில் எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று கதவை லாக் செய்தாள்.

மாப்பிள்ளை வந்தது அவளுக்கு பிடிக்கவில்லையா? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என நினைத்துக் கொண்டே நேசமணி வெளியே வந்து வளனை வீட்டுக்குள் வர சொல்லி அழைத்தார். வளனுக்கு ஜூஸ் எடுத்துக் கொடுத்து நேசமணி தன் மகளின் அறைக்கதவை தட்ட, சுடிதார் அணிந்து வெளியில் வந்தாள் வித்யா. 

அவள் கையில் ஊருக்கு வரும்போது எடுத்துக் கொண்டு வந்த அதே தோள் பை. வெளியில் வந்தவள், வளன் அருகில் நின்றாள். வளன் ஜூஸ் குடித்து முடித்த பிறகு கிளம்புறேன் மாமா என சொல்லி வெளியில் வந்து பாசஞ்சர் சைடு கார் கதவை திறந்தான். இருவரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். அவள் அப்பாவுக்கு பை சொல்ல கார் சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

வாசுவும் வேலைக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். வளன் கார் கீ வாங்க வந்த விஷயத்தை வள்ளியிடம் சொன்னார். இருவரும் காபி குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நேசமணி வாசுவை அழைத்தார்..

சொல்லுங்க சம்பந்தி.

மாப்பிள்ளை வந்தாரு, ரெண்டு பேரும் சென்னைக்கு கிளம்பிட்டாங்க..

அப்படியா!..

ஆமா..

ரொம்ப சந்தோஷம் சம்பந்த. ஸ்பீக்கர்ல போடுறேன் என வாசு சொன்னார்.

என்னண்ணா, வந்தவன் வித்யாகிட்ட மன்னிப்பு கேட்டானா இல்லையா?

அட நீ வேற தங்கச்சி, ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசல.

என்னண்ணா சொல்றீங்க..?

மாப்பிள்ளை வந்திருக்காருன்னு சொன்னவுடனே அவரை போய்  கூப்பிடாம ரூமுக்குள்ள போய் கதவை லாக் பண்ணிட்டா. எனக்கு டென்ஷன்,. நான் மாப்பிள்ளையை கூப்பிட்டு உட்கார வச்சு ஜூஸ் குடுத்துட்டு போய் கதவை தட்டினா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்ப தயாரா வந்து நிக்குறா.

அய்யோ! அப்படியா பண்ணுனா.. ரெண்டும் சரியான லூசுங்க..

ஆமா, ரெண்டும் சேர்ந்து நம்மள லூசாக்குற பீல் தான் எனக்கும் என நேசமணி சொல்ல மூவரும் சிரித்தார்கள்.

அண்ணா, இப்பதான் ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தருக்கு பிடிக்க ஆரம்பிச்சுருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் அடிக்கடி சண்டை நடக்கும் போல இருக்கு.

வாசு : என்ன பண்ண வள்ளி, விருப்பம் இல்லாமல் எல்லாம் நடந்துடுச்சு, ரெண்டு பேருக்கும் டைம் தேவை தான..

அண்ணா நீங்க தான் பாவம் அடிக்கடி இங்க வந்து வித்யாவை கூட்டிட்டு போற மாதிரி இருக்கும்.

அதெல்லாம் வித்யா தனியா வந்திடுவா.

இது நல்லா இருக்கே! ஊர்த்தலைவர் ஊர்ல உள்ள எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணவா என வள்ளி சொல்ல எல்லோரும் மீண்டும் சிரித்துக் கொண்டார்கள்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【29】 - by JeeviBarath - 28-03-2024, 06:29 PM



Users browsing this thread: 4 Guest(s)