Romance வித்யா வித்தைக்காரி!!! [நிறைவடைந்தது]
#56
வித்யா வித்தைக்காரி
【28】

⪼ தற்போது ⪻

வள்ளி மீண்டும் வித்யாவை அழைத்தாள். அவள் எடுக்காததால் வளனுக்கு ஃபோன்கால் செய்து வித்யாவின் அப்பா வந்திருக்கும் விசயத்தை சொன்னாள். ஸ்பீக்கர்ல போடுறேன் நீயே சொல்லு என்றான் வளன்.

ஹே! வித்யா, அப்பா வந்திருக்காங்க, சீக்கிரம் வாடா..

ஃபோனை நிமிர்ந்து பார்த்தாள். மூக்கை புறங்கையால் துடைத்துக் கொண்டே பாத்ரூம் சென்று தன்னால் முடிந்த அளவுக்கு ஃப்ரஷ்ஷப்பாகி வந்தாள்.

மாடிப்படியில் இறங்கி வரும்போதே அப்பாவைப் பார்த்தவளிடம் ஒரு குதூகலமில்லை, ரொம்பவே மெச்சூரான பெண் போல அமைதியாக சிறு புன்னகையுடன் வந்து நலம் விசாரித்தாள். 


"ஏன் சோகம்" என கேட்ட அப்பாவிடம் அலைச்சல் டயர்ட் என பொய் சொன்னாள். வாசு மற்றும் வள்ளி இருவருக்கும் ஏதோ பெரிய பிரச்சனை செய்திருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. வளன் கீழே வந்து கடமைக்கு நலன் விசாரித்துவிட்டு  மீண்டும் லேப் அறைக்கு போய்விட்டான்.

சில மணி நேரங்களில் நேசமணி கிளம்ப, அப்பா நானும் ஊருக்கு வர்றேன் என்றாள் வித்யா. வாசு மற்றும் வள்ளிக்கு என்ன சொல்லி தடுப்பது என தெரியவில்லை. பிரச்சனை எந்த அளவுக்கு நடந்தது என்றும் தெரியவில்லை. வித்யா வளன் கிட்ட கேட்டுக்க என்று மட்டும் சொன்னார்கள். . நேசமணியும் அதையே சொல்ல, சரியென சொல்லி லேப் அறைக்குள் நுழைந்தாள். 

வள்ளி மற்றும் வாசு இருவரும் இதுவரை வீட்டில் நடந்த எல்லா விஷயங்களையும் நேசமணியிடம் சொன்னார்கள். ஆனால் சீனி சம்பந்தபட்ட விஷயங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. மருமக வெள்ளந்தி, அவனும் பாவம் 2 வருஷ உழைப்பு அப்படி ஆனதால ரொம்ப சிடுசிடுன்னு இருக்கான். ஒருவேளை வளன் சண்டை போட்டிருருப்பான், அதனால் தான் மருமக ஊருக்கு வர ஆசைப்படுறா என்றார் வாசு.

அய்யோ! அப்படியெல்லாமா பண்ணுனா என அதிர்ச்சியில் கேட்டவர் எனக்கு புரியுது, மாப்பிள்ளை இடத்தில் நானா இருந்தாலும் எனக்கும் கஷ்டமா தான இருக்கும் என நேசமணியும் யார் மனமும் வருந்தாத அளவுக்கு பதிலளித்தார்.

அண்ணா, நீங்களா எதுவும் இதைப்பற்றி வித்யாவிடம் கேட்காதீங்க..

சரிம்மா..

வித்யா வளன் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றாள். அப்படி செய்திருக்க கூடாது என நினைத்து தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கலாம் என நினைத்தான். ஆனால் இறங்கி வர அவன் மனம் மறுத்தது.

என்ன வேணும்?

நா‌ன் ரெண்டு நாள் ஊருக்கு போயிட்டு வர்றேன்..

எதுக்கு?

சம்மர் லீவுதான..

அங்க போய் என்ன பண்ண போற?

இங்க இருந்து மட்டும் நான் என்ன பண்ண போறேன் என சொல்லியவள் தங்கள் அறைக்கு புகுந்து ஆடைகளை ஒரு தோள்பையில் எடுத்துக் கொண்டு லேப் அறைக்கு வந்தாள்.

பை...

ஏய், நா‌ன் வேணாம்னு சொல்லியும் நீ போற, போனா திரும்பி வராதே, வந்தேன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை செய்தான்.

நீயா கூப்பிடாம நானும் வர மாட்டேன் என அவனுக்கு கேட்காத அளவுக்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஹாலுக்கு வந்தவள் தன் மாமனார் மாமியாரிடம் விடைபெற்று தன் அப்பாவுடன் ஊருக்கு கிளம்பினாள். பேருந்தில் போகும் போதும் தன் அப்பாவிடம் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை இரவு உணவும் அருந்தவில்லை...

இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்கும். வளன் வேலை செய்து ரொம்ப சலிப்படைந்து விட்டான். அவனால் தொடர்ந்து வேலையை செய்ய முடியவில்லை. வித்யா எதாவது செய்து கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்வதை தொந்தரவாக நினைப்பான். ஆனால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவான். ஆனால் இன்று சலிப்பாக உணர்ந்தவனால் மீண்டும் கவனம் செலுத்தவே முடியவில்லை. 

காரில் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தான். மீண்டும் அதே மனநிலை. வேலை செய்ய மனமில்லாமல் தூங்கிப் போனான்.

வரும் வழியில் ஃபோனில் அழைத்து பேச மாட்டானா என்ற ஏக்கத்தில் ஊருக்கு வந்து சேர்ந்த வித்யாவும் கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனாள்.

மறுநாள் வித்யா தனியாக தன் அப்பாவுடன் ஊருக்கு வந்திருக்கும் விஷயம் தெரிந்த ஊர்த்தலைவர் அவர்கள் வீட்டுக்கு வந்து எதும் பிரச்சனையா எ‌ன்று‌ கேட்டார். லீவு அதான் வந்திருக்கா எ‌ன்று‌ நேசமணி பேசி சமாளித்தார்...

வளன் காலையில் ஜாக்கிங் செல்லவில்லை. ஆராய்ச்சியை தொடர விருப்பமுமில்லை. காலை உணவு உண்ணும் போது வாசு மற்றும் வள்ளி எல்லா விஷயங்களையும் வளனிடம் சொல்ல தன் தவறை உணர்ந்தான். சாப்பிட்டு முடித்து லேப் சென்றவனுக்கு வித்யா நியாபகம்தான் வந்தது. ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை.

ம‌திய உணவை முடித்த பிறகும் ஆராய்ச்சி செய்வதி‌ல் நாட்டமில்லாமல் இருந்தான்.

நீ இங்க இருந்தாலும் இம்சை, இல்லைன்னா அதைவிட இம்சையா இருக்குடி என புலம்பினான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【28】 - by JeeviBarath - 28-03-2024, 10:34 AM



Users browsing this thread: 2 Guest(s)