Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#55
வித்யா வித்தைக்காரி
【27】

அண்ணா வாங்க, எப்படி இருக்கீங்க என நலம் விசாரித்த வள்ளி, உட்காருங்க என சொல்லிவிட்டு வித்யாவுக்கு ஃபோன்கால் செய்தாள். வித்யா செல்போன் ரிங் ஆன பிறகுதான் சுய நினைவு வந்தவன் போல வித்யாவின் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்தான் வளன்.

இதுவரை அந்தரத்தில் இருந்த வித்யா கால்களில் சக்தி இல்லாதவள் போல கீழே விழுந்தாள். பயத்தில் சுவரின் ஓரமாக நகர்ந்து ஒரு மூலையில் கைகால் எல்லாம் நடுங்கிய நிலையில் அழுது கொண்டிருந்தாள். வளன் கழுத்தை பிடித்து தூக்கியதில் அவள் கழுத்திலும் வலி இருந்தது.

மீண்டும் வள்ளி வித்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். இந்த முறையும் வித்யா எடுக்கவில்லை...

அண்ணா, இப்பதான் அவ ஃபிரண்ட்ட பார்த்துட்டு வந்தா. ஒருவேளை ரெஸ்ட் ரூம் போய்ருப்பா, கொஞ்சம் கழிச்சு ட்ரை பண்ணலாம்.

சரிம்மா என ஊரில் நடந்த சில விசயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

அங்கே பெட்ரூமில் வளன், என்னைப் பார்த்து எப்படி அப்படி பேசுவ என அங்கும் இங்கும் நடந்தபடி கத்திக் கொண்டிருந்தான்...

⪼ சற்று நேரத்துக்கு முன்னர் ⪻

சீனியுடன் காரில் வந்த விஷயத்தை வாசு சொல்லி முடிக்கவும்,  கோபத்தில் வித்யாவை தேடி பெட்ரூம் உள்ளே வந்தான் வளன்.

எங்கடி போன.?

உங்ககிட்ட சொல்லிட்டுதான போனேன்.

கேட்டதுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு..

__________ ஐஸ் கிரீம் பார்லர்.

யார் கூட போன..?

மலர்..

பொய் சொல்லாத..

எனக்கு பொய் சொல்ல தெரியாது..

யாருக்கு உனக்கா?

ஆமா.. எனக்கு தான்.

வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசாத.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.

...

சீனிய பார்க்க போனியா..?

அமைதியாக நின்றாள்.

பதில் சொல்லுடி..

மலர தான் நான் பார்க்க போனேன். வீட்டுக்கு கிளம்புற நேரம் அவரு அங்க வந்தாரு.

ஓஹ்! என பெருமூச்சு விட்டவன் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.

நா‌ன் அவர்கிட்ட உங்களுக்காக எக்ஸ்ட்ரா டைம் குடுங்கன்னு கேட்டேன்.

வாட்..

விருந்துக்கு சண்டே வாங்க. டைம் கண்டிப்பா குடுக்கறேன்னு சொன்னார், நானும் விருந்துக்கு சரின்னு சொல்லிட்டேன். உங்களுக்கு ஓகே தான..

மாடிக்கு வரும்போது இருந்ததை விட பலமடங்கு கோபம் வளனுக்கு அதிகமானது. அவன் உதடுகள் துடித்தன. பற்களை நரநரவென கடித்தான். வளன் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு பயமாக இரு‌ந்தது.

யாரைக் கேட்டு விருந்துக்கு வர்றேன்னு சொன்ன?

எங்கே கோபத்தில் அடித்து விடுவானோ என்ற பயத்தில் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். எச்சில் விழுங்கினாள்.

உனக்கு அவன் எப்படிப்பட்டவன் எதுக்கு கூப்பிடுறான்னு தெரியுமா...?

அவரு உங்க பாஸ் உங்களை விட நல்லவரு என எப்போதும் போல கிண்டல் செய்வது போல வாயடித்தாள்.

யாரு அவனா, எப்படியெல்லாம் மோசடி செய்யுற ஆளு தெரியுமா. நினைச்சத சாதிக்க எப்படியெல்லாம் பொய் சொல்லுவான்னு தெரியுமா என சீனியைப் பற்றி நேரடியாக பொம்பளை பொறுக்கி என்பதை சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல அவள் நிலமை ஆனது...

உங்களை மாதிரியெல்லாம் அவங்க பொய் சொல்ல மாட்டாங்க.. (உடம்பு சரியில்லை என சீனியிடம் வளன் பொய் சொன்னதை கிண்டலாக அப்படி சொன்னாள்)

உனக்கு அவன மாதிரி ஆளு நல்லவன் நான் பொய் சொல்றவனா எனக் கத்திக் கொண்டே மரக்கழண்டவன் போல கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து தூக்கிவிட்டான்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【27】 - by JeeviBarath - 28-03-2024, 10:21 AM



Users browsing this thread: 2 Guest(s)