Romance ?கலையாத❣️கனவுகள்?
#17
Heart 
கவியாழினி ( யாழினியும் கலையாத கனவுகளும்)

10ஆம் வகுப்பு வரை அவளுடைய சொந்த கிராமத்தில் படித்துவிட்டு 11ஆம் வகுப்பு சேருவதற்கு 10கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தில் உள்ள  அரசு பெண்கள் பள்ளியில் சேர்ந்தால். 
புதிய பள்ளிக்கூடம் புதிய அனுபவம் புதிய நண்பர்கள் என நிறைய இருந்தாலும் அவளின் மனதுக்கு ரொம்ப நெருக்கமான தோழியாக அபி மட்டுமே இருந்தால். அபியும் யாழினியும் ரொம்ப ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அபிக்கு தேவா மட்டுமே நெருங்கிய தோழனாக இருந்தான். இப்பொழுது யாழினியும்.

தேவா அதே நகரில் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். படிப்பில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அனைவரிடமும் பண்பாக பழகும் மனம் உள்ளதால் பள்ளியில் அவனை பிடிக்காது என்று சொல்ல யாரும் இல்லை. மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒருவனே. 
ஒருநாள்  அபியை அழைத்து வர பெண்கள் பள்ளியின் வாசலில் காத்திருந்தான். அபியும் யாழினியும் ஒன்றாக வருவதை பார்த்து அவளை பார்த்த அந்த வினாடியே விழுந்தான் அவளின் விழிகளில். 
(யாழினியின் பார்வையில் இனி)

நானும் அபியும் பள்ளியின் நேரம் முடிந்து வெளியே வரும் பொழுது ஒருவனை கை காட்டி அவன் தான் என்னோட best friend தேவா உன்கிட்ட சொள்ளிருக்கென்ல அவன் தான் என்று கூறினால்.
நான் அவனை பார்ப்பதற்கு முன்பே அவன் என்னை பார்த்ததை நான் அறிந்தேன். இமைகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். என்னடா இவன் நம்மளை இப்படி பார்க்கிறான் என்று நினைத்துக்கொண்டே நானும் அபியும் அவன் நிற்கும் இடத்திற்கு சென்றோம்.
அங்கே அவன் முதலில் பேச ஆரம்பித்தான் என் கண்களை மட்டும் பார்த்து

அபி உனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கானு சொள்ளிருக்க ஆனா தேவதை மாதிரி ஒரு ப்ரெண்ட் இருக்கானு சொல்லவே இல்லையே

இதை அவன் சொல்லும் பொழுது அவனின் வலது கை இடப்பக்கம் உள்ள இதயத்தை தொட்டுக்கொண்டே சொன்னான். அவனிடம் நான் சாதாரணமாக ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசினேன். அவன் என் கண்களை விடாமல் பார்ப்பது புரிந்தது. பல பேர் சொல்லிருக்காங்க
யாழினி கண்ண பார்த்த பசங்க மயங்கிடுவாங்க அப்படின்னு இப்பொழுது தான் முதலில் பார்க்கிறேன். அவனிடம் பேச எனக்கு வார்த்தைகள் வர வில்லை. ஆண்களிடம் பேசி பழகி இருந்தால் கூட என்னால் பேசிருக்க முடியும். வீட்டில் இருக்கும் கட்டுப்பாடு நண்பன் என்று கூட பேச பசங்க இல்லை. பிறகு எப்படி அவனிடம் பேச முடியும்.
அபி கிலம்புவதாக கூறி அவனிடம் பைக்கில் கிளம்பினாள். நான் என்னோட ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன்.
பேருந்தும் வந்தது. அவனின் நினைவுடன் பயணிக்க ஆரம்பித்தேன்.
என்ன ஆச்சி எனக்கு. முதன் முதலில் வெளி ஆண்களிடம் பேசுவதால் இப்படி ஆகிறதா. அப்படி என்றால் பஸ்ஸில் வரும் பொழுதும் போகும் பொழுதும் நமக்கு இது போல ஆனது இல்லையே. ஒரு சில வார்த்தைகள் கூட அவனிடம் மட்டும் பேச என்ன தயக்கம் எனக்கு. அவன் சொல்லிய தேவதை என்ற வார்த்தையில் மயங்கிவிட்டேனோ
என்ற நினைப்புடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நான் பள்ளிக்கு செல்வது படிப்பிற்காக மட்டும். இந்த வயதில் சில மாற்றங்கள் வர தான் செய்யும் ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பினை மட்டும் குறிக்கோளாக இருப்போம் என்று நினைத்து கொண்டேன்.
அப்பப்போ தேவாவின் நினைவு வரும். இந்த வயதில் ஏற்படும் மாற்றங்கள் தானே என்று விட்டுவிடுவேன்.
அவனிடம் நட்பாக மட்டுமே பழக நினைத்தேன். அப்படி தான் பழகவும் பேசவும் செய்தேன்.

நாட்கள் செல்ல செல்ல தேவாவின் பார்வையும் அவன் என் மேல் கொண்ட பாசமும் பேசும் வார்த்தைகளும் என்னை காதலிப்பதாக எனக்கே தோன்றியது. ஆனால் எனக்குள் அந்த உணர்ச்சிகள் இல்லை. 

12ஆம் வகுப்பு ஆரம்பம். இந்த காலகட்டத்தில் நானும் தேவாவும் பார்த்து கொள்ளவோ பேசிகொள்ளவோ அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. சந்த்தித்துக்கொள்ளும் நாட்களிலும் கூட தேவா என் மேல காட்டும் அக்கறையும் அவனின் பார்வையும் என்னை கஷ்டங்களுக்கு உள்ளாக்கியது. நான் அவனிடம் பேசுவதை நிறுத்தினால் அவன் மாருவன். என்னால் தானே அவன் இப்படி இருக்கிறான் சென்று அவனை சந்திப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தேன். ஆனால் அபியை காணும் பொழுதெல்லாம் அவனும் கூடவே வருகிறான். என்னால் அதனையும் தவிர்க்க முடியவில்லை.
ஒரு நாள் கூட அவன் என் மேல் உள்ள காதலை சொல்லவில்லையே. அவனோட இயல்பான செயல் தான் இவ்வாறு என்னை நினைக்க வைக்கிறதோ என்று கூட நினைத்தது உண்டு. இந்த வயதில் அனைத்தும் மாயை என்றே நான் நினைத்தென்.12ஆம் வகுப்பு பொது தேர்வு. என்னால் முடிந்த அளவிற்கு எழுதி கொஞ்சம் சுமாரான மதிப்பெண்ணினை பெற்று அதே நகரத்தின் கொஞ்சம் தொலைவில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  b.com சேர்ந்தேன். அபியும் அதே கல்லூரியில் சேர கேட்டேன். எனக்காக அவளும் வந்தாள்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply


Messages In This Thread
RE: ?கலையாத❣️கனவுகள்? - by Thamizhan98 - 15-03-2024, 05:49 PM



Users browsing this thread: 2 Guest(s)