Romance ?கலையாத❣️கனவுகள்?
#14
Heart 
அதன் பிறகு தேவாவும் யாழினியும் பலதடவை நேரில் சந்தித்து கொண்டாலும் சாதாரணமாக எப்படி இருக்க என்று மட்டும் கேட்டுக்கொண்டனர். இருவரும் மறந்தும் கூட காதல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. 

மனதுக்கும் ஆயிரங்கள் என்ன கோடி கனவுகள் காதலை வைத்து நினைத்தாலும் அதை நேரில் சொல்ல தைரியம் இல்லை செயல் படுத்தவும் வழி இல்லை. 

யாழினி சாதாரணமாக இருந்தாலும் சில சமயங்களில் தேவாவிர்க்கு காதல் முதலில் வந்து அவளிடம் பேச வார்த்தைகள் வராமல் தவித்தான். அபியும் அவனுக்கு பலதடவை அறிவுரை கூறியும் அவளால் எந்த ஒரு உதவியும் செய்ய முடியாமலும் இருந்தால். யாழினி காதல் செய்யும் அவன் யார் எங்கே இருக்கிறான். இதுவரை தேவாவும் அபியும் கண்டதே இல்லையே. எப்பொழுதும் கல்லூரியில்  மற்றும் பேருந்தில் பயணிக்கும் பொழுது கூட ஒன்றாக இருப்பதால் வேறு எங்கே  அவனை காண முடியும். அவன் யார் என்று அறிந்து கொள்ள அபிக்கு ஆர்வம் அதிகம் ஆனது. தன் நண்பனின் காதலை சேர விடாமல் தடுப்பவன் யார் யார் யார் யாராக இருப்பான் எங்கே இருக்கிறான் என்று தனக்குள்ளே அதிகமாக நினைத்துகொண்டு இருந்தால். 

நண்பன் மேல் உள்ள பாசம் தன்னோட குடும்பத்தில் ஒருவனாய் மாற்றியது. சகோதரன் ஆக்கியது. அவளின் தாய் இவனுக்கும் தாய் ஆனால். இவனின் தாய் அவனுக்கும் தாய் ஆனால். இருவரும் ஒருவரை விட்டுகொடுக்கதவர். சிறு குழந்தை முதலே ஒன்றாக இருந்து இப்பொழுது கல்லூரி மட்டும் வேறு.

இந்த வருடத்துடன் கல்லூரி வாழ்க்கை முடிவடைகிறது.  யாழினியை பார்க்க போகும் கடைசி நாள். எப்படியாவது மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற நினைவோடு அதே பேருந்து நிலையத்தில் காத்திருந்தான் தேவா. 

ஆனால் அவளோ அவனுடைய காதலனுக்காக காத்திருந்தால் அதே பேருந்து நிலையத்தில் வேறு ஒரு வரிசையில். அவளும் அவனுடைய காதலனை இனிமேல் பார்க்கும் வாய்ப்புகள் இல்லையே. மீண்டும் எப்பொழுது காண முடியுமோ என்ற நம்பிக்கை இல்லாத நடக்காத ஒன்றினை நினைத்து காத்திருந்தாள். 
இதே இடத்தில் தானே அவன் எனக்கு அவனுடைய காதலை வெளிப்படுத்தினான். காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. தினமும் அவளுக்காக அவன் காத்திருப்பான். இன்று ஏனோ மாறியது காலத்தின் கட்டாயம். 

இருவரும் வேறு வேறு வரிசையில் காத்திருந்தனர். அவன் வர வில்லை என்று யாழினியும், யாழினி  வர வில்லை என்று தேவாவும் வழி மேல் விழி வைத்து காத்திருந்த வேளையில் வந்து சேர்ந்தது அபி மட்டுமே. 

தேவா வை பார்த்ததும் அமைதியாக அவனிடம் சென்று 
 
என்னடா இங்கே வந்து நிக்கிற என்னாச்சி

ஒன்னும் இல்லை அபி

யாழினி  போய்  ரொம்ப நேரம் ஆகுது. எனக்காக கூட காத்திருக்காமல் போய்விட்டாள் என்று தேவா விடம் சொல்லவும் இருவரும் ஒன்றாக அவனை பார்க்க தானே என்று சொல்லிக்கொண்டு சிரித்தனர்.
இருவரும் வீட்டிற்க்கு கிளம்பி சென்றனர். ஆனால் யாழினி அவனோட காதலின் காதலன் வருகைக்காக காத்திருந்தாள். நேரம் கடந்து கொண்டே சென்றது. எப்பொழுது வருவான் அவன். இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது என்று மனதில் நினைத்து கொண்டே காத்திருந்தாள்.

நேரம் மாலை 7 மணி ஆகியது. 
அவன் வரவில்லை. இவளுடைய mobile சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியது. கண்கள் கலங்கி கண்ணீர் வர ஆரம்பித்தது. கலங்கிய கண்களுடன் அவளுடைய ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தில் கிளம்பி சென்றால். தாமதமாக வீட்டிற்க்கு வந்ததால் கடைசி நாள் பிரெண்டலாம் பார்த்து பேசி வர லேட் ஆகிருசுனு சொல்லிவிட்டு சென்றால். 
அவளுடைய அறைக்கு சென்று mobile சார்ஜ் போட்டுவிட்டு அவனுடைய புகைப்படத்தை எடுத்து பார்த்துவிட்டு அழுக ஆரம்பித்தாள். அதில் இருப்பவன் யார்????
அவள் ஏன் யாரிடமும் அவளுடைய காதலனை அறிமுகம் செய்ய வில்லை. வெளிப்படுத்தவும் இல்லை... 

தேவா அவனுடைய வீட்டில் 
யாழினியை இன்று பார்க்க முடியவில்லை பேச முடியவில்லை என்று ரொம்ப வறுத்த பட்டான். இனிமேல் எங்கே பார்க்க போகிறோம். என்ன காரணத்தை வைத்து அவள் வீட்டின் தெருவுக்குள் சென்று வர முடியும். அபியை காரணம் காட்டி அவளை பார்க்க சென்றாலும் நாங்கள் பேசி கொள்ள முடியாதே ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று கத்தி சொன்னான். இதோ போல கஷ்டங்கள் வரும் பொழுது தான் நமக்கு கடவுளின் நினைப்பு அதிகமாக வருகிறது. கடவுள் என்ன முடிவு பண்ணிருக்க பொராரோ தெரியவில்லை. காத்திருந்து என்னுடன் பயணித்து வாருங்கள்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply


Messages In This Thread
RE: ?கலையாத❣️கனவுகள்? - by Thamizhan98 - 15-03-2024, 04:46 PM



Users browsing this thread: 1 Guest(s)