Romance சும்மா ஒரு காதல் கதை!!! [நிறைவடைந்தது]
#7
【06】

கொஞ்ச நேரம் கழித்து, அவர்கள் பெட்ரூம் வந்த பிறகு. மெத்தையில் உட்கார்ந்த வித்யா...

விவாகரத்து கேட்டு ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள உங்களுக்கு ஹனிமூன் கேக்குதா.. என்னால வர முடியாது என அடம் பிடித்தாள்...

வளனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை...

குசும்பு பிடித்தவள், என்ன மிஸ்டர் வளன் இப்படி ஒரு அழகான பொண்ணு பார்த்த பிறகு மனசு மாறிடுச்சா?

யாருடி அழகு..

இங்க வேற யாரு இருக்கா என தேடுவது போல பாவ்லா செய்தாள்.

வளன் அவளை முறைத்தான்.

வேற யாரு நான்தான்..

நீ அழகா..?

ஆமா நான் அழகு தான்...

யாரு சொன்னா?

யாரு சொல்லணும்? உங்க மூஞ்ச பார்த்தாலே தெரியுதே..

என்ன தெரியுது?

நல்ல அழகா கும்முன்னு ஒரு பொண்ணு இருக்கும் போது பீலிங்ஸ் கன்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான் மிஸ்டர் வளன். பட் நீங்க ட்ரை பண்ணனும். இப்படி ஹனிமூனுக்கு கூப்பிடக்கூடாது.

"பட் நீங்க ட்ரை பண்ணனும்" என்பதை மட்டும் மீண்டும் வடிவேலு ஸ்டைலில் சொன்னாள்.

சத்தியமாக தன்னுடைய வாழ்வில் இப்படி ஒரு பெண்ணை வளன் சந்தித்ததே இல்லை. இது ஒரு விசித்திர ஜந்து என்பதை வளன் உணர ஆரம்பித்தான்.

என்ன இருந்தாலும் அவன் கெத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

உன்மேல பீலிங்ஸ் ஒண்ணும் இல்லை. அம்மா அப்பா வருத்தப்படக்கூடாது பாரு, அதனால சும்மா ஒரு ட்ரிப். நாம புருஷன் பொண்டாட்டியா நடிக்கப்போறோம்.

அதான பார்த்தேன். நீ டம்மின்னு எனக்கு தெரியுமே, நான் கூட கொஞ்ச நேரம் ஒருவேளை நீ கில்லாடியா மாறிட்டேன்னு நினைச்சேன்..

ஏய் மரியாதையா பேசு..

அதை நீங்களும் செய்யணும் மிஸ்டர் வளன்.

நா‌ன் எப்போ உனக்கு ரெஸ்பெக்ட் குடுக்கல?

நடிக்கிறோம்னு சொல்லிட்டு, எங்கிட்ட கேட்காம ஹனிமூன் ட்ரிப் புக் பண்றது ரெஸ்பெக்ட்டா மிஸ்டர் வளன்.

லக்கேஜ் பேக் எடுத்து தேவையான ஆடைகளை எடுத்து வைக்கும் எண்ணத்தில் செக் பண்ண ஆரம்பித்தாள். அவளையே பார்த்தான் வளன்...

ஹே ட்ரெஸ் எதுவும் வேண்டாம்.

என்ன? இப்போதான ஹனிமூன் ட்ரிப் நடிக்க போறோம்னு சொன்னீங்க, அப்புறம் டிரஸ் வேணாம்னு சொல்றீங்க.

ட்ரிப் போறோம்..

அப்புறம் டிரஸ்..

டிரஸ் அங்க போய் வாங்கிக்கலாம்.

நா‌ன் லக்கேஜ் பேக் பண்ணிட்டேன் நீயும் பண்ணுன்னு கொஞ்சம் முன்ன சொன்னீங்க..

சொன்னேன், இப்ப வேண்டாம். புதுசு வாங்கலாம்.

அதெல்லாம் தேவையில்லை. இங்கே இவ்ளோ இருக்கு எதுக்கு புதுசு..

சரி அப்ப, பாதி எடு.. மீதி வாங்கிக்கலாம்.

இரவு உணவுக்கு முன்பு..

ஹே கிளம்பு, வெளிய போலாம்.

எங்க...?

எங்கேன்னு சொன்னாதான் வருவியா?

ஆமா, உங்களை நம்பி எப்படி தனியா வர...

அடியே ஒரு ரூம்ல இருக்கோம், இங்க ஒண்ணும் பண்ணாம உன்னை வெளியில கூட்டிட்டு போய்...

யாருக்கு தெரியும், ஒருவேளை நான் நல்லா நேர்த்தியா டிரஸ் பண்ணிட்டு வந்து என் அழகுல மயங்கி என்னை எதாவது பண்ணிட்டீங்கன்னா?

அம்மா தாயே, வெளியே டின்னர் போகலாம் பிளீஸ்..

சரி சரி அழாதீங்க, போலாம்..

யாருடி அழுதா எனக் கேட்க வேண்டும் போல இருந்தது வளனுக்கு, எது சொன்னாலும் அதற்க்கு பதிலாக கலாய்க்கும் விதமாக எதாவது சொல்வாள் என்று அவனுக்கு புரிந்தது. அதனால் அமைதியாக அவளைப் பார்த்தான்.

வளன் வெளியில் செல்ல தேவையான ஆடைகளை அணிந்தான். அதன் பிறகு பால்கனியில் போய் நின்றான்.

கொஞ்ச நேரத்தில் மேக்கப் போட்டு வளையல் குலுங்க பால்கனி கதவை திறந்து "நான் ரெடி" என சொல்லி பால்கனிக்கு வந்தவளைப் பார்த்து ஒரு கணம் அசந்து போய் விட்டான் வளன்.

பால்கனியில் வெளிச்சம் அதிகம் இல்லாததால் வளன் கண்கள் விரிய அவளை ரசித்த அந்த கணத்தை அவளால் பார்க்க முடியவில்லை.

ஆனால் "இது தான் அழகுல மயங்குறதா" என்று அவள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் அவனுக்கு அப்போது புரிந்தது.  

சில வினாடிகள் அவள் அழகில் வளன் மயங்கிவிட்டான். ஆனாலும் சுதாகரித்துக் கொண்டான்.

ம்ம் போகலாம் எ‌ன்று‌ அவன் சொல்ல இருவரும் கீழே வந்தார்கள்.

வள்ளி : எங்கடா கிளம்பிட்ட? மார்னிங் தான டெல்லி ஃப்ளைட்னு சொன்ன..

வளன் : ஆமா. இப்ப வெளிய போறோம்..

வள்ளி : அப்போ டின்னர்..?

வேண்டாம் வெளிய சாப்பிட்டுக்கிறோம்..

வளன் மற்றும் வித்யா இருவரும் வாசலை நோக்கி போக..

முதன்முறையாக வெளியில் செல்லும் இருவரையும் வழியனுப்ப வள்ளி மற்றும் வாசு இருவரும் அவர்கள் பின்னால் சென்றார்கள்.

வளன் காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ண, காரினுள் ஏறி உட்கார்ந்தாள் வித்யா..

வள்ளி : ஹே வித்யா! ஆல் தி பெஸ்ட். இதுல ஃபெயில் ஆகிடாத.. ஜஸ்ட் பாஸ்ஸாவது ஆகிடு என்று சிரித்தாள்.

கவலைப்படாதீங்க அத்தை.. இதுல ஃபர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிடுவேன் என சத்தமாக வளன் காதில் விழும்படி சொன்னாள். மாமனார் மற்றும் மாமியாரை பார்த்து கண்ணடித்துக் கொண்டே ப்ளையிங் கிஸ் கொடுத்தாள்.

அய்யோ, இவளை என தலையில் அடித்துக் கொண்டான் வளன்.

வீட்டிலிருந்து கிளம்பிய கார் கொஞ்ச நேரத்தில் ஈசிஆர் ரோட்டை வந்தடைந்தது. அதன் பின்னர் ஈசிஆர் ரோட்டில் மின்னல் வேகத்தில் பறக்க ஆரம்பித்ததை போல உணர்ந்தாள்.

கொஞ்சம் மெதுவா போறது...

ஏன் பயமா?

எனக்கா? ஹா ஹா. இந்த ரூட்ல சரக்கு போட்டுட்டு தாறுமாறா நைட் வண்டி ஓட்டுவாங்க, அதான் என் தான் கேள்விப்பட்ட விஷயத்தை நேரில் பார்த்ததைப் போல சொல்லி சமாளித்தாள். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவனது வேகம் அவளுக்கு பயத்தை கொடுத்தது என்பதே உண்மை.

வளன் வேகத்தை 60 க்குள் கொண்டு வந்தான். ஒருவேளை போலீஸ் அடிக்கடி நிற்கும் இடத்தில் இன்றும் நிற்கலாம். அந்த இடத்தை கடக்கும் வரை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்லலாம் என்ற எண்ணம்

வித்யா இசிஆர் ரோட்டில் இருமுறை பகல் நேரங்களில் பயணம் செய்ததுண்டு. நண்பர்களுடன் மகாபலிபுரம் மற்றும் பாண்டிச்சேரி சென்ற பயணங்கள் அவை.

வித்யா இதுவரை அந்த சாலையில் இரவு நேரங்களில் பயணித்தது கிடையாது. விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் பைக்கில் சில காதல் ஜோடிகள் அவர்களை க்ராஸ் செய்து மின்னல் வேகத்தில் பறக்கும் போது அந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பைக்கில் ஒரு ஜோடி அட்டைப் பூச்சி போல ஒட்டிக் கொண்டு போக, அந்த பெண் தொடை வரை ஆடை அணிந்திருக்க, அதைப் பார்த்த வித்யா கொஞ்சம் வாயைப் பிளந்து  பார்த்தாள். அவளுக்கு தன் கணவனுடன் இப்படி ஒட்டிக் கொண்டு (ஆடை அல்ல) பைக்கில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்.

என்னடி அப்படி பார்க்கிற?

பைக் போற வேகம்.. அப்பா.. எவ்ளோ வேகம் என பொய் சொன்னாள்..

பொய் தான சொல்ற...

இல்லையே..

சென்னையில் இப்படிக் கூட டிரஸ் பண்ணுவாங்களான்னு நினைத்து அப்படி பார்க்கிறாள் என்ற புரிதல் வளனுக்கு..

இந்த ரூட்ல நீ இதுவரைக்கும் வந்ததில்லையா?

அதெல்லாம் அடிக்கடி வருவோம். நிறைய வீக்கெண்ட் பார்ட்டி பண்ணுவோம். அதனால இந்த ரூட் அடிக்கடி வர்ற ரூட் என புளுகினாள்....

எது பார்ட்டியா? நீயா? என்பதைப் போல வித்யாவை பார்த்தான்.

அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவள்..

நாங்கெல்லாம் யாரு தெரியுமா என்று மேலும் புளுகி அவனைப் பார்த்தாள். அவள் சொன்னததை உண்மையென நம்பிவிட்டான் வளன்.

கொஞ்ச நேரம் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. ஆனால் அவள் வேடிக்கை பார்க்கும் விதத்தை பார்க்கும் போது, சிறு குழந்தை முதன் முறை பயணிப்பது போல் கண்களை விரித்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கும் இவள் புளுகுகிறாள் என்பது புரிந்தது. இன்னும் எவ்வளவு தூரம் போகிறாள் என பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுள் உதித்தது.

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது, பின்னர் வளன் எதையாவது கேட்டால் அதற்குப் பதில் சொல்லும் போது எதையாவது அளந்து விடுவது என்றே போய்க் கொண்டிருந்தது.

வளன் டின்னர் டேபிள் புக் செய்த அந்த ராஜஸ்தான் ஸ்டைலில் இருக்கும் பெரிய ரிசார்ட் அருகில் வரும்போது அதைப்பார்த்து அடேயப்பா என்பதைப் போல் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

அந்த ரிசார்ட் உள்ளே நுழைவதற்கு வண்டியை இடது பக்கம் திருப்பிய வளனை பார்த்து இந்த ஹோட்டலில் "பார்" இருக்கா என்று கேட்டாள்.

அந்த வார்த்தையை கேட்டவுடன் சடன் பிரேக் அடித்தான்..

"பார்ரா" என இழுத்தபடி கேட்க..

அதான்பா "சரக்கு சரக்கு" என சத்யராஜ் ஸ்டைலை வார்த்தைகளால் மிமிக் செய்தாள் வித்யா.

ஒரளவுக்கு வித்யா சேட்டைகள் பற்றி புரிய ஆரம்பித்த வளன்..

அதான் வாராவாரம் இந்த ரோட்டில் வந்திருக்கிறியே உனக்கு தெரியாதா என்று நக்கலாக.

என்ன நக்கலா, நான் அடிக்கடின்னு சொன்னேன். வாரவாரம் வர்ற அளவுக்கு என்கிட்ட காசு இல்லை என்றாள், சோகமாக..

கார் ரிசார்ட் உள்ளே நுழைந்தது. அவர்களை வரவேற்று தகவல்களை வாங்கி அவர்களுக்காக ரிசர்வ் செய்யபட்ட அந்த இடத்தில் உட்கார வைத்தனர். சில நிமிடங்களில் அவர்களிடம் ஆர்டர் எடுக்க வந்தார்கள்.

கையில் போன் வைத்திருந்த அந்த வெயிட்டர் ஆர்டர் செய்யுமாறு ஆங்கிலத்தில் கேட்க, அவளுக்கு எல்லாம் புரியவில்லை. "ஆர்டர், பிளீஸ்" என்ற வார்த்தைகள் அவள் காதில் நன்கு விழுந்தது. ஆர்டர் எடுக்கத்தான் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

1 பகார்டி லெமன் ஃபுல் பிளீஸ் என ஆர்டர் செய்தாள்.

எனிதிங்க் எல்ஸ் மேடம் என்றான் வெயிட்டர்..

சரக்கு பற்றி இதுவரை புளுகினாள் என நினைத்த வளன், அவன் இருந்த சேரில் பின்னோக்கி சாய்ந்தான். அந்த ஏசி ஹாலில் அவனுக்கு மட்டும் வியர்க்க துவங்கியது...

சைடு டிஷ் என்ன ஆர்டர் பண்ணலாம் வளன் காதில் விழும்படி சொல்லிவிட்டு மெனு கார்டு எடுத்து எல்லாம் தெரிந்தது போல தேட ஆரம்பித்தாள். மெனு கார்டில் இருந்த பெயர்கள் அவளுக்கு பரிச்சயம் இல்லாத பெயர்கள். இருந்தாலும் தன் கெத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

சிக்கன் என பார்த்த இரண்டு ஐட்டம் ஆர்டர் செய்தாள்.

காடை இருக்கா என தமிழில் கேட்டாள்.

இருக்குது மேடம்..

அது ரெண்டு..

ஃபிரை மேடம்..?

எஸ், ஃபிரை..

எனிதிங்க் எல்ஸ் மேடம்..

நோ, ஐ வில் ஆர்டர் லேட்டர்..

தாங்க் யூ மேம்..

என்னடா நடக்குது இங்க என்பதை போல பார்த்துக் கொண்டிருந்த நளனைப் பார்த்து வெயிட்டர்..

கேன் ஐ ஹாவ் யுவர் ஆர்டர் சர்..

ஒன் தோசா..

எனிதிங்க் எல்ஸ் சார்..

நோ, தட்ஸ் ஆல்.

நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டீங்களா?

நீ எப்படி குடிக்க ஆரம்பிச்ச என மனைவி என்ற உரிமையுடன் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டான் வளன்.

அவன் இன்னும் ஷாக்கில் இருந்து மீளவில்லை. ஒரு பெக் கேட்டிருந்தால் தன்னை கலாய்க்க ஆர்டர் செய்கிறாள் என்று நினைத்திருப்பான். அவள் ஆர்டர் செய்தது ஃபுல் பாட்டில். அவன் மனதில் அந்த கணம் இருந்தது, இவள் உண்மையிலயே குடிகாரி அய்யோ பார்ட்டி கேர்ள் தானா?
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி 【06】 - by JeeviBarath - 06-03-2024, 07:13 AM



Users browsing this thread: 4 Guest(s)