Romance வாழ்வை மாற்றிய இரவு!
#3
வாழ்வை மாற்றிய இரவு! 

2


யார் இந்த அவனும் அவளும் ?

அவள் எதற்காக அவனை வெறுக்கிறாள் ?

அவன் எதற்காக வெட்கமே இல்லாமல் அவளை மீண்டும் மீண்டும் ரசிக்கிறான் ? அதையெல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக அவனை பற்றி பார்க்கலாம்.

அவன் பெயர் முத்து. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். முத்து வீட்டில் அம்மா அப்பா மற்றும் அண்ணன் என நால்வர் மட்டுமே.

அப்பா விவசாயம் செய்பவர். அம்மா அவருக்கு உதவியாக இருப்பார்கள். அண்ணன் ராஜேஷ் நன்றாக படிப்பான். ஆனால் முத்துவுக்கும் படிப்புக்கும் ஒத்து வராது. மேலும் முத்து ஒன்றும் பெரிய அழகனும் கிடையாது.

மாநிறத்தில் சராசரியான உடல் எடையோடு சுமாரான மூஞ்சியுடன் இருப்பான். பார்த்தவுடன் கவர்ந்து இழுக்கும் முகம் அவனுக்கு இல்லை என்றாலும் அவனது உயரத்தை ஒரு முறையாவது நிச்சயமாக எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள். ஏனென்றால் முத்து ஆறடி உயரத்தில் இருப்பான்.

வகுப்பறையிலும் கடைசி பெஞ்சில்தான் உட்கார வேண்டும் என்று சொல்லி விட்டனர். ஆரம்பத்தில் அதெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி என்பதால் கூச்சம் எதுவும் இல்லாமல் சந்தோசமாக இருந்தான்.

முத்து படிப்பில் ஒன்றும் பெரிய கெட்டிக்காரன் இல்லை. ஒற்றை இலக்க எண்களிலேயே மதிப்பெண் வாங்குவான். ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை என்று சொல்லி ஆசிரியர்கள் அவனை திட்டுவார்கள். சில நேரங்களில் உடன் படிக்கும் நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் செய்து சண்டையும் போடுவான். அதனாலேயே அவனுக்கு எந்த நண்பர்களும் இல்லாமல் போய்விட்டனர்.

“உங்க பையன் எல்லா சப்ஜெக்ட்ளையும் பெயில் ஆகிட்டான். இனிமே இங்க படிக்க முடியாது. ஒழுங்கா டிசி வாங்கிட்டு போயிடுங்க.”

முத்துவை பள்ளியை விட்டு துரத்தியதால் அவனுக்கு படிப்பு அறிவு என்பது இல்லாமல் போனது. பிறகு அவனுடன் படித்த மாணவர்கள் அனைவரும் மேற்படிப்புக்கு கல்லூரி சென்றுவிட்டனர்.

இவனுக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காமல் தந்தையுடன் வயலில் வேலை பார்த்தான். சில மாதங்களுக்கு பிறகு அதுவும் அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

கல்லூரியில் படிக்க வேண்டிய வயதில் ஜாலியாக ஊரை சுற்றினான். ஆனால் செலவுக்கு பணம் வேண்டுமே என்ன செய்வது ? கிடைக்கும் கூலி வேலைகளை செய்தான். அதில் வரும் பணத்தை வைத்து குடித்துவிட்டு வெறுமென ஊர் சுற்றிக்கொண்டு இருந்தான்.
[+] 6 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்வை மாற்றிய இரவு! - by feelmystory - 07-03-2023, 12:14 PM



Users browsing this thread: 1 Guest(s)