Romance மனநிம்மதிக்கு மருந்து
#1
நான் சிவபாதசேகரன். வாழ்க்கையில் சகல செல்வங்களும் இருந்தாலும் ஏதோ இழந்தது போல தோன்றும் பெரிய பணக்காரர்களில் நானும் ஒருவன். சில நாட்களாக எனக்கு எதிலுமே நாட்டமின்றி போனது. காலையில் எழுந்ததிலிருந்து நடைப்பயிற்சி, செட்டில் விளையாட்டு, பிரேக் பாஸ்ட், அலுவலகம், லன்ச், மீண்டும் அலுவலகம் பிறகு வீடு திரும்புதல். தினமும் இவ்வாறே எனக்கான கால அட்டவணை எரிச்சலூட்டியது. 

என்னுடைய கரூர் டெக்ஸ்பார்க்கில் இருக்கும் சூசன் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் என் கவனம் இல்லாமலேயே பணிகள் நடந்தன. மேனேஜர்களும் ஜிஜிஎம்மும் எனக்கு தொந்தரவு தரவில்லை என்றாலும் வாழ்க்கை ஒரு வித பிடிப்பும் இல்லாமல் போவதை உணர்ந்தேன். 

அலுவலகத்தில் என் மேசையில் இருக்கும் கோப்புகளை புரட்டி கையெழுத்திடுவதும், ஆடிட்டிங் வருகின்ற பெருமகன்களை அவ்வப்போது வரவேற்பதுமென சலிப்பான வேலை. இந்த நிறுவனத்தை தொடங்குகையில் இருந்த வேலைகள், சவால்கள் எல்லாம் இல்லாமல் சோம்பலாய் நாட்கள் நகர்ந்தன. 

சரி மாலை நண்பர்களுடன் பார்டி வைத்து என்ஜாய் பண்ணலாம் என்றாலும் வருகின்ற தடிமாடுகள் வயிறு முட்ட முட்ட குடித்து, நான்வெஜ் உணவுகளை தின்று கிறக்கத்தில் வெளியேறிவிடும். வாழ்க்கையை சுவாரசியமாக்கும் வழி இதுதான் என எனக்கு வழிகாட்ட யாருமின்றி தவித்தேன்.

கைப்பேசியை பார்த்துக்கொண்டு இருந்த போது எதற்ச்சையாக மாயனூர் செய்தி கண்ணில் பட்டது. பெருகிவருகின்ற காவேரி நதிநீரை காண திரளாக கூடுகின்ற மக்கள் என புகைப்படத்துடன் செய்தி இருந்தது. மாயனூரின் பன்னிரண்டு செட்டரும் திறந்துகொண்டு காவேரி தண்ணீர் கடல் போல போவதை காண உள்ளம் ஆசைப்பட்டது.

நெடுநாளுக்கு பிறகு மனதில் எழும்புகின்ற ஆசை.. வழக்கம் போல் அலுவலக வேலை முடித்துவிட்டு மணியைப் பார்த்தேன்.. ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஜிஜிஎம்ஐ போனில் அழைத்தேன்.
"ரூபன்.. மெஸ் கம்பிளென் என்னானு பார்த்திங்களா.."

"பார்த்தாச்சு சார். வெல்பேர் ஆபிசர்ஸ்கிட்ட புது மெனு ரெடி பண்ண சொல்லியிருக்கேன். டூ டேஸ்ல ரெடி ஆகிடும்."
"சரி ரூபன். மெனு ரிப்பீட் ஆகாம பார்த்துக்கோங்க.‌.. நான் கிளம்பறேன்"
"ஓகே சார். நீங்க கிளம்புங்க.‌ நான் பார்த்துக்கொள்கிறேன் ‌" என்றார். 

இனி அலுவலகம் பற்றிய கவலையில்லை. மெதுவாக இரண்டு பிளாக்குகளளை கடந்தேன். வழியில் என்னைக்கண்டோர் வணங்கினர். பதிலுக்கு தலையாட்டி விட்டு நகர்ந்தேன். சென்ற வருடம் வாங்கிய வோல்ஸ்வோகன் காரை எடுத்தேன். மேகத்தில் மிதப்பது போல இதமாக வண்டியை நகர்த்தினேன். 

திண்டுக்கல்- கரூர் பைபாசில் பறந்தேன். சுக்காளியூர் பாலத்தின் கீழ் வளைந்து திருச்சி பைபாசில் வண்டியை விட்டேன். எண்ணம் முழுக்க மாயனூரிலேயே இருந்தது. 

மாயனூர் கதவனை மேம்பாலம் முழுக்க நிறைய கார்களும், டூவீலர்களும் நின்றிருந்தன. அதிலிருந்த மக்கள் பாலத்தின் இரு பக்கமும் நின்று ஆர்ப்பரிக்கும் காவேரியைப் பார்த்திருந்தனர். இது எனக்கான ஆசை மட்டமல்ல.. அனைவருக்குமான ஆசை என புரிந்து கொண்டேன். குடும்பம் குடும்பமாக சிலர் செல்பி எடுப்பதை காணும் பொழுது தான் என்னுடைய இழப்பு நினைவுக்கு வந்தது. 

சென்ற வருடம் என் ஆசை மனைவி கேன்சரால் இறந்து போயிருந்தாள். இரு மகன்களும் திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தனர். இங்கு பகல், அவர்களுக்கு இரவு என வாழ்க்கை விளையாடும் சதுரங்கத்தில் பகடையாகி இருந்தேன். 

"சார் டீ.. சூடான இஞ்சி டீ" என ஒருவர் மிதிவண்டியில் பேரலை கட்டி வைத்துக்கொண்டு என்னருகே வந்தார். நான் அவரை கவனிக்க.. "சார் டீ வேணுமா? சூடா இருக்கு" என்றார். மதித்து நின்று கேட்பவரை விரட்ட மனமில்லாதவனாக "கொடுங்க" என்றேன். அவர் கொடுத்த கப்டீயை வாங்கி பாலத்தின் திட்டில் வைத்துவிட்டு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன். 

அவர் சில்லரையை தேட.. "வேணாம் பொழைப்பைபாரு" என்று சொல்ல.. "இல்ல சார் உழைக்காத பணம் உடம்புல ஒட்டாது" என மீதம் நாற்பது ரூபாயை தந்து என்னை கும்பிட்டுவிட்டு கிளம்பினார். நெகிழ்ந்தேன். கோடிகளில் புரளும் மனிதர்களிடம் கூட இல்லாத பண்பு இந்த ஏழைகளிடையே எப்படி என வியந்தேன். டீயை குடித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்துவிட்டு லேசாக கால்கள் வலிக்க தொடங்க.. என் வண்டியை நோக்கி நடந்தேன்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மனநிம்மதிக்கு மருந்து - by sagotharan - 26-08-2022, 03:31 PM



Users browsing this thread: 1 Guest(s)