Romance காதலும் சாபமும்
எபிசோட் -10 இரண்டாம் நாள் (தாமதமும் பிரியாவின் அவ நம்பிக்கையும் )

அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்தான் .ப்ரியா ரூமை பாக்க அவள் இன்னும் தூங்கி கொண்டு தான் இருந்தாள் .சரி அவளை தொந்தரவு பண்ண வேணாம் என கதிர் எல்லா வேலை பார்த்து விட்டு வீட்டை வெளியே கூடி புட்டி விட்டு வேலைக்கு போனான் .

ஒரு 11 மணி போல ப்ரியா எழுந்தாள் அதுவும் ஏதோ ஒரு பேப்பர் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து பாக்க பக்கத்துமேசையில் ஒரு ஸ்டில் பாட்டில் அதுக்கு கீழே ஒரு லெட்டர் அதை எடுத்து பார்த்தா மேலே படிக்கவும் என கதிர் எழுதி இருக்க ப்ரியா அதை எடுத்து படிச்சா  ப்ரியா ஆல்ரெடி ரெண்டு நாளா நான் ஷுட் அண்ட் டிஸ்கஷன் போகல அதுனால இன்னைக்கு வேகமா கிளம்பி போயிட்டேன் உன்னைய எழுப்பணும்னு தோணல அப்புறம் சாப்பாடு ரெண்டு நேரமும் ஆக்கி வச்சு இருக்கேன் அதுக்கு அப்புறம் இது பிளாஸ்க் இதுல மில்க் இருக்கு உனக்கு டீ வேணும்னா டீ போட்டுக்கோ அப்புறம் அப்புறம் எப்படி சொல்றதுன்னு தெரியல ப்ரியா ஐ ம் வெறி சாரி நேத்து நேத்து நைட் நான் உன்னைய வேணும்னு எல்லாம் தொடல நீ அந்த சமயம் ரொம்ப பேனிக் ஆகி மூச்சு விடவே சிரம பட்டி யா அதான் அப்போ உன்ன தொட்டேன் சாரி அண்ட் நீயும் என்னய வேணும்னு திட்டி இருக்க மாட்டன்னு தெரியும் இருந்தாலும் ஐ ம் வெறி வெறி சாரி அப்புறம் மறக்காம மாத்திரை முழுங்கிடு 

முட்டாள் ப்ரியா முட்டாள் ப்ரியா அவன் எவ்வளவு kinda நடந்து கிட்டான் அவனை போயி திட்டி இருக்கியே என தன்னை தானே திட்டி கொண்டாள் சரி சரி அப்புறம் நம்மள நாமே அடிச்சுக்கிடுவோம் இப்போ ரொம்ப பசிக்குது முதல சாப்பிடுவோம் என வேகமாக கிச்சன் போயி சாப்பாடு போட்டு சாப்பிட்டாள் .ஆஹா என்னமா செஞ்சு இருக்கான் மனுஷன்யா என சாப்பிட்டு விட்டு பிளாஸ்க் ல இருந்த அந்த பாலை குடிக்கும் போது மீண்டும் அந்த லெட்டரை படித்தாள் .
சே பாவம் டி ப்ரியா அவனை போயி ஏன் டி திட்டுன அந்த நிலைமையில யார் இருந்தாலும் அப்படி தான் பண்ணுவான் அவன் என்னமோ உன்னைய வேணும்னு திட்டுனா மாதிரி 

வேணாம்டி பிரியா எந்த ஆம்பிளைகளையும் நம்ப வேணாம் நம்புனா வரைக்கும் போதும் என ப்ரியா நினைச்சா அவளுக்கு போர் அடிக்க டிவி யை ஆன் பண்ணி பார்த்தா சவுண்டு கேக்கமால் மதியம் தூங்கினா கதிர் வருவான் ஒரு சாரி கேட்டு விட்டு தூங்கலாம் என நினைத்தாள் ஆனால் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்து மணி இரவு 10 ஆக போனது .வெளியே போனால் மாட்டிக்கிடுவோம் கையில போன் வேற இல்ல 
என்ன பண்ணலாம் சரி எதுக்கும் பொறுமையா இருப்போம் என இருந்து கிட்டு இருக்க 

என்ன கதிர் அண்ணா மணி 10.30 ஆச்சு இன்னைக்கும் 12 மணி வரைக்கும் ஷுட் போயிடுமா என கதிர் அசிசன்ட் வந்து கேக்க 

என்ன சொன்ன 

அதான் இன்னைக்கும் 12 மணி வரைக்கும் ஷுட் ஆன்னு 

அது இல்லடா மணி எத்த்தன இப்போ 

இப்போ சரியா 10 மணி 

ஐயோ என அப்போ தான் அவனுக்கு ப்ரியா இருப்பதே தெரிந்தது 
ஓகே ஷுட்டிங் முடிச்சுக்கிடலாமா ன்னு crew மெம்பர்ஸ் கிட்ட கேளு அவங்களுக்கு நடிக்க ஆசை இருந்தா இந்தா ஸீன் பேப்பர் கொடு அவங்க நடிக்கட்டும் நீ எடு நான் கிளம்புறேன் என கதிர் வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்ப 

அன்னே அன்னே என்ன அன்னே அதிசயமா கிளம்பிட்டிங்க என அவன் பின்னாலே வர 

எனக்கு முக்கியமான வேலை இருக்கு நாளைக்கு காலைலயேம் கொஞ்சம் லேட்டா தான் வருவேன் 

என்ன ஒரு அதிசயம் என அவன் வாய் போலந்து நிக்க கதிர் வேகமாக வண்டிய கிளப்பினான் .வீட்டுக்கு போகும் முன் வேகமாக ஒரு கடையில் நிப்பாட்டி டிபன் மற்றும் இன்னொரு கடையில் நிப்பாட்டி மொபைல் ஒன்றும் சிம் கார்டும் வாங்கினான் .

அவன் கதவை திறக்க சிரமப்பட வீட்டிற்கு வந்து அந்த சத்தம் கேட்டு பிரியா பயந்தா போயி ரூமுக்குள்ளே ஒளிந்து கொண்டாள் .கதவை திறந்து கதிர் வர மணி சரியாக 11 மணி  அவன் வந்த உடனே ப்ரியா அது வரை காத்து இருந்த வெறுப்பு பயம் எல்லாம் சேர உடனே அவன் நெஞ்சில் அடித்து அழுதாள் ஏண்டா லேட்டு ஏன் லேட் எவ்வளவு பயந்தேன் தெரியுமா என அவனை கட்டி பிடித்து கொண்டு அழுக 

ஐ ம் சாரி சாரி ஷுட்  ல லேட் ஆகிடுச்சு மன்னிச்சுக்கோ என கதிர் அவளை சம்பாதானப்படுத்த 

ப்ரியாவுக்கு அப்போ புரிஞ்சது மீண்டும் கதிரை கட்டி பிடிச்சு இருக்கோம் என இந்த முறை அவளாக கட்டி பிடிச்சுது அவளுக்கு புரிய டக் என்று விலகினா 
சாரி ப்ரியா வேல முக்கியம் அதான் போயிட்டேன் என சொல்ல 

இல்ல நான் தான் பயந்துட்டேன் என ப்ரியா சொல்ல 

சரி ப்ரியா சாப்பிடு என டிபன் கொடுக்க 

இருக்கட்டும் வேணாம் நான் நீ வர மாட்டேன்னு நினைச்சு தான் பயந்தேன் எனக்கு ஓகே நான் நீ பண்ண மார்னிங் food எ லேட்டா தான் சாப்பிட்டேன் இட்ஸ் ஓகே நான் தூங்குறேன் 

பிரியா சாப்பிடுமா ப்ளீஸ் 

வேணாம் கதிர் 

இல்ல பிரியா சாப்பிடு என் தங்கம் ல மாத்திரை முழுங்கணும் என கதிர் ஒரு கிண்டலாக சொல்ல 
முதலில் ப்ரியா முறைச்சா அப்புறம் ஓகே கொடு சாப்பிடுறேன் என வாங்கி சாப்பிட்டா 

சாரி ப்ரியா நிறைய சீன்ஸ் எடுக்கணும்னு இருந்ததால அப்படியே அங்க செட்லே இருந்துட்டேன் அதான் லேட் ஆகிடுச்சு நாளைல இருந்து சீக்கிரம் வந்துடுவேன் பயப்படாத 

ம்ம்ம் 


பிரியா வேகமாக அந்த பெட் ரூம் போனா அவளுக்கு கதிர் கிட்ட பேசணும்னு தான் ஆசை ஆனா இவனும் அவளுடைய முன்னாள் காதலன் போலவே இருந்தான் என்றால் என்ன செய்வது அதனால் வேணாம் எந்த ஆம்பிளையும் முதல நல்லா தான் பேசுவானுக அப்புறமா தான் அவனுக வேலையை காமிப்பானுக எல்லா ஆம்பிளைகளும் மிருங்கள் தான் ப்ரியா எவனையும் இங்க நம்பாத என அவள் மனசு மீண்டும் எச்சரிக்க கதிர் முகத்தை கூட பாக்காம உடனே கதவை சாத்தினா 

                                                       தொடரும்
[+] 6 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 28-12-2021, 04:05 PM



Users browsing this thread: 3 Guest(s)