அவிழும் முடிச்சுகள் !!
#69
பாரன்சிக் ஆளுங்க அந்த ரூமை அக்குவேறு ஆணிவேராக அலச கார்த்தியும் முரளியும் மீண்டும் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ...


இப்ப அந்த பையனை எப்படி சார் கண்டு பிடிக்கிறது ?


ம் ! அந்த அஞ்சலியோட புருஷன் வந்தார்னா அவர்கிட்ட இவனை தெரியுமான்னு கேக்கலாம் ...

அஞ்சலியோட செல்போன் எங்க ?


அது தான் இல்லையே சார் ... கொலையாளி ரெண்டு செல்போனையும் எடுத்துட்டு போயிட்டான் !!



அவங்க வீட்ல நம்பர் வாங்கி கால் லிஸ்ட் வாங்குங்க ... வீட்ல யார் யாரு இருக்கா ?


சக்திவேல் சாருக்கு ஒரே பையன் சார் ... அதனால வீட்ல இவங்க நாலு பேர் தான் !!


குழந்தை எதுவும் இல்லையா ?


சாரி சார் ஒரு பையன் ரெண்டாவது படிக்கிறான் ! ...



சோ இவன் அவங்க வீட்ல வேலை செஞ்சவனோ எதுவோ இல்லை ...


ம் !


அவர்கள் பேசிக்கொண்டிருக்க அஞ்சலியின் கணவர் சஞ்சய் வந்து நின்றார் !!


சக்திவேல் வந்து சஞ்சயை அறிமுகம் செய்து வைக்க கார்த்திக் நேரடியாக விசாரணையை துவங்கினான் !!



சாரி சார் பாடியை பார்த்தீங்களா ?


ம்ம் பார்த்தேன் !


அவனை உங்களுக்கு தெரியுமா ?



அவனை நான் எங்கேயோ பாத்துருக்கேன் அதான் யோசிச்சிகிட்டே இருக்கேன் !!


எங்க எங்க ?


சற்று நேரம் யோசித்து இவன் பேர் தெரியலை இவன் எதோ கால் டாக்சி டிரைவர்னு நினைக்கிறேன் !


அப்டியா நல்லா தெரியுமா ?


ம் நானும் என் மனைவியும் ஒருதடவை திருவண்ணாமலை போகணும்னு அர்ஜெண்ட்டுக்கு ஒரு டிரைவர் வேணும்னு கேட்டப்ப இவன் தான் வந்தான் .. ஆனா அது நடந்து ரெண்டு வருஷம் இருக்கும் !!


ரெண்டு வருஷம் ஆன ஒரு ஆள எப்படி இவன் தான்னு சொல்றீங்க ?


இல்லை நல்லா பழகுனான் என் மனைவிக்கு கூட இவனை பிடிச்சிருந்தது ... விசிட்டிங் கார்ட் குடுத்தான் !!


ஓகே சார் அந்த கால் டாக்சி எதுன்னு சொல்ல முடியுமா ?


அது எதுன்னு தெரியலையே ... ஐ திங் எதோ நெட்ல பார்த்து கால் பண்ணேன் !!


எதுவுமே ஞாபகம் இல்லையா ?


எதோ ஒரு கால் டாக்சிக்கு போன் பண்ணி டிரைவர் மட்டும் உடனே அனுப்ப முடியுமான்னு கேட்டு அவங்க தான் இவனை அனுப்பி வச்சாங்க ....


ஓகே சார் நாங்க விசாரிச்சிட்டு உங்களை காண்டாக்ட் பண்றோம் !
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 20-12-2021, 07:27 AM



Users browsing this thread: 1 Guest(s)