Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதுமிதா [completed]
#1
அந்தி சாயும் மாலைப் பொழுது கதிரவன் விடை பெரும் நேரம் மதியும் விஜயும் அட்வான்ஸ் ந்யூ இயர் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

நாளைக்கு எனக்கு என்ன கிப்ட் தருவ விஜி?

உனக்கு என்ன வேணும் மதி?

நீ என்ன குடுத்தாலும் ஓகே

நீ மறக்க முடியாத கிப்ட் தரேன்

ஹே என்ன கிப்ட் இப்ப சொல்லு ப்லீஸ்

சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்

அஞ்சு வருஷமா பழகுறோம் இப்பவும் உன் புத்தி மாரல

காலேஜ் வந்ததும் உன் முன்னாடி என் கிப்ட் இருக்கும் பை செல்லம்

விஜய் குடுக்கும் கிப்ட் என்னவாக இருக்கும் மதிக்கு விளங்கவில்லை

மதிய காதலிப்பதாக சொல்லுவான்ணு மூணு வருஷமா காத்துக்கிட்டு இருக்கா

இன்னைக்கு விஜி கண்ணுல தெரிஞ்ச பளபளப்பு நாளைக்கு அவன் தன் காதலை சொல்லிறுவாண்ணு நம்பிக்கை வந்துச்சு

மதுமிதாவும் விஜய ராகவனும் ஒரே காலேஜில் வேறு வேறு பிரிவில் படிப்பவர்கள்.

எல்லோரும் மது என்று அழைத்த பெயர் விஜைய் மதியாக அழைத்த காரணம் அவன் பால் அவளுக்கு காதல் வந்து விட்டது.

ஐந்து வருடம் பழகினாலும் விஜைய் கேரக்டர் மதிக்கு தெரியாது என்பதே உண்மை. ஸ்கூலில் பழகிய பழக்கம் காலேஜிலும் தொடர்ந்தது
<t></t
இருவரும் நல்ல நண்பர்கள். மதியின் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது.

விஜயின் தந்தை நிறுவனத்தில் அவர் பணியில் இருந்ததால் அவர் மனைவிக்கு வேலை போட்டு கொடுத்தார். மதியின் கல்விக்கும் கை கொடுத்தார்.

இப்போது பி.ஈ ஈஸி பிரிவில் கடைசி செமஸ்டர், தன் முதலாளி மகன் விஜைய் என்பதை மறந்து, அவன் பால் அன்பு கொண்டிருந்தாள்.

நாளை விடியும் இரவு எனக்காக மட்டுமே என்ற மிதப்பில் கண்களில் கனவோடு உறங்கினாள். காலை விடிந்தது. மதுவிடம் இருப்பத்ிலேயே நல்ல துணியை எடுத்து அணிந்து கொண்டாள்.

ஒப்பணையொடு கிளம்பும் மகளை கடைக்கண்ணால் கவனித்த லலிதா அம்மாள் தன் மகள் வாழ்வு செழிக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டாள்.
<t></t>
அவசரமாக பஸ் பிடித்து இதோ காலெஜும் வந்து விட்டது. இன்று விடுமுறை என்றாலும் ந்யூ இயர் கொண்டாட்டம் நடந்துகொண்டு இருந்தது.

விஜைய் வந்தான் மயக்கும் புன்னகை சிந்தினான். வெரி பியியூடிஃபுல் என்றவனின் முகத்தை பார்க்க கூசி நின்றாள்.

சட்டென்று சுதாரித்து என் கிப்ட் குடு என்று கண்ணை மூடி கையை நீட்டினாள்.
அவள் கை மேல் மெல்லிய பஞ்சு போன்ற கைகள் இணையவும் குழப்பத்தோடு கண் திறந்தாள்.
அங்கே காவ்யா தன் தெத்து பல் சிரிப்போடு நின்று இருந்தாள்.

நான் புரியாமல் விஜய்
முகத்தை பார்த்தேன். மீட் மை லவ் காவ்யா என்றான்.

நான் இயன்றவரை புன்னகை புரிந்து வெளியேறினேன்.
வாயில் படியில் நின்றிருந்த உதய சந்திரனின் உதட்டில் ஒரு ஏளன புன்னகை மலர்ந்தது.

அப்பாடா என் நண்பன் தப்பிசிட்டான் என்ற பெரு மூச்சுடன் விலகி வழி விட்டான்.
அவன் ஏளன உதட்டு வளைவில் கூனிக் குறுகி வெளியேறினாள் மதி


உதய சந்திரன் விஜயின் நண்பன். பணத்தை விட்டெறிந்தால் எவலும் பல்லிலிப்பாள் என்ற மனப்பாங்கு உள்ளவன்.
மதி வீஜயுடன் பழகுவது அவன் பணத்திக்குதான் என்பதை ஆணிதனமாக நம்புகிறவன்.

காவ்யா பணக்கார வீட்டுப் பெண் சோ பணம் பணத்தோடு சேரப் போகிறது.
மதுவுக்கு ஏமாற்றம் அவமானம் எல்லாம் ஒன்று சேர்ந்து அழுதாள்.

இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. தான் சொந்தக் காலில் நின்று நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்
என்று முடிவுக்கு வந்தவள் மறந்தும் தன் நண்பனை பிறகு சந்திக்க வில்லை.
அவனும் காவ்யா காதலில் திளைத்து மதியை மறந்தான்.
<t></t>
விஜி என்னை நேசிக்க வில்லை என்பதை விட உதயசந்திரன் என்னை பணப்பேய் என்று நினைத்தது அதிகமாக வலித்தது .

கல்லூரி இறுதி தினம் விஜி என்னை சந்திக்க வந்தான்.

மதி..மதி..யேய் என்ன மதி பேசமா போற?

உனக்கு என் கியாபகம் எல்லாம் இருக்கா.

ஐயோ என்னப்பா நான் காவ்யாகூட இருந்தாலும் உன்னை நினச்சுட்டுதான் இருந்தேன்.

பாரு இல்லானே நீ எம் பி ஏ படிக்க அப்பாகிட்ட சீட் வாங்க சொல்லி இருப்பேனா?

அதெல்லாம் வேண்டாம் விஜி நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.

என்னது நீ வேலைக்கு போறயா..சரிதான் போ இந்த காலத்துல வெறும் பி ஈ வெச்சு என்ன சம்பாதிக்க முடியும்னு நினைக்குற?


அது உன்னை மாதிரி வசதியான பிள்ளைகளுக்கு விஜி

லூசு மாதிரி உளறாம நாளைக்கு என் பெர்த் டே பார்ட்டி கு வா மாத்தெல்லாம் அங்க வெச்சு சொல்லுறேன் ஓகே பை மதி.

மாலையில் நடந்து கொண்டிருக்கும் விழாவில் நான் கலந்து கொள்ள வில்லை.

என் தோழியின் அக்கா மூலமாக சென்னை சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனம் துடித்தது .

அந்த சந்திரன் என்னை என்னவென்று எண்ணி விட்டான்.

விழாவில் நான் கலந்து கொள்ளாமல் இருந்தது உதயனுக்கு வருத்தம் என்று அப்போது எனக்கு தெரியாது
<t></t>
அம்மாவிடம் பேசி இந்த ஊரை விட்டு போவது என்று முடிவு செய்தேன். இரவில் அம்மாவிடம் பேசிய போது அம்மா ஏதோ புரிந்தாவளாக சரிடா கண்ணா தங்கை, தம்பி படிப்பு கெடுமேனு யோசிக்கூறேன் என்றார். அம்மா நான் வெளியூர் போயி வேலை செய்ய்யட்டுமா ப்லீஸ். யாருமில்லாம வெளியில் தங்குறதது தப்புமா. நான் என் தோழி கிட்ட கேட்டு இருக்கேன் மா ப்லீஸ். சரி அதுக்கு இன்னும் டைம் இருக்கு நீ நல்லா ப்ரிபர் பண்ணு சரியா. ஓகே மா.

சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின் குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்தது. அம்மா என்னை மூத்த மகனாகவே நினைத்துவிட்டார் என்று பிறகுதான் புரிந்தது. விஜி காவ்யாதிருமணம் முடிந்திருக்கும் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன்.நான் எதை பற்றியும் நினைக்கும் நிலமையில் இல்லை. நல்ல வேளை உதய சந்திரனை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை.

தம்பி வேளி நாட்டில் ஸ்காலர் ஷிப் பில் படித்து கொண்டு இருக்கிறான். கையோடு வேலையும் கிடைத்து விடும். அப்படி இப்படி என்று ஏழு வருடங்கள் கடந்து விட்டது.

என் தங்கை என்னை விட இரண்டு வயதும்,என் தம்பி மூன்று வருடமும் சிறியவர்கள். ஒவ்வொரு கடமையாக முடித்துக்கொண்டு இருந்தேன். மனதில் ஆராத ரணமாக உதய சந்திரனின் முகம் அடிக்கடி வந்து போனது.

நான் வேலை செய்வது ஒரு எலெக்ட்ராநிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில். என் துறையில் தவறுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று ஆனால் என் மேனேஜர் குமார் என் தவறு அறிந்து என்னை தன் வழிக்கு கொண்டு வர திட்டம் போட்டார். வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம், ஏனோ மனம் சஞ்சலம் அடைந்தது.என்னுடன் வேலை செய்யும் குமார் என்னை ப்ளேக் மெயில் செய்வது பிடிக்க வில்லை. கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு நெரிசலில் தப்பித்து வீடு வருவதற்க்குள் அப்பாடா என்று ஆயாசமாக இருந்தது.

ஹெய் மதி ஏன்டி இவ்ளோ நெரம், உனக்காக எல்லொரும் வெய்ட் பண்ணுராங்க வா சீக்கிரம்

அம்மாவின் பதற்றம் என்னையும் தொற்றிக் கொண்டது. மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வந்து இருந்தார்கள். என் தங்கை பட்டு புடவை சகிதம் கூடத்தில் அமர்ந்து இருந்தாள். ஆம் என் கடைசி கடமை...

என் தங்கைக்கு வயது இருபத்து நான்கு, ஆறு மாதம் கழித்து திருமணம் என்று நிச்சயம் செய்தோம்....வந்தவர்களின் ஒரே கேள்வி மூத்த பெண்ணுக்கு செய்யாம ஏன் சின்னவலுக்கு திருமணம் செய்யுறீங்க? நான் கேள்வி கேட்ட பெண்ணிடம் சொன்ன பதில் : இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை நான், எனக்குனு சில கடமைகள் இருக்கு...அது முடிஞ்சாதான் நான் என்னை பத்தி யோசிக்க முடியும்.

அம்மா என்னை பெருமையாக பார்ப்பதை அறிந்து தலை குனிந்தேன்...உண்மை எனக்குத்தானே தெரியும்...காதல் வலி கொண்ட யாராலும் அடுத்த திருமணத்தை நினைக்க கூட முடியாது..எனக்கு பிடித்த என்னவனை தவிர நான் யாரையும் மணக்கப் போவதில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தது, இரவு உணவின் போது அம்மா என் திருமணம் பத்தி பேசினார்கள்,

ப்ளீஸ் மா...நிரய கடன் இருக்கு எல்லாம் அடஞ்சதும் யோசிக்கலாம்.

அடுத்த நாள் பதற்றம் மாறாமல் ஆஃபீஸ் சென்றேன். குமார் வந்திருக்கவில்லை! இனி அவன் வரப்போவதும் இல்லை!!!

எம்டி அழைப்பை ஏற்று உள்ளே சென்ற எனக்கு குப்பென்று வியர்த்தது...இவனா இவன் எப்படி இங்கே, இவன் இங்கே எம்டி சேரில் எப்படி?? தலை சுற்றி மயங்கி விழுந்தேன்....

கண் மிழித்த போது அவன் முகத்தில் ஏளனம் புன்னகையாக விரிந்தது.... புது டெக்நிக் நிரய கத்துக்கிட்ட போல இருக்கு.... ஹா ஹா ஹா...
<t></t>
உதய் நீ ..ங்கள்... நீங்கள் எப்படி இங்கே?

அவன் முகம் சுழித்து, எம் டி யை பெயர் சொல்லி அழைப்பது தவறு தெரியுமா?

ஸா....ஸாரி.. ஸார்

ஹ்ம் நீ மயங்கி விழும் அளவுக்கு நான் அழகாகவா இருக்கிறேன்..ஐ மீன் என் அழகில்தன் மயங்கி விழுந்தாயா?

அழகாம் அழகு கருவாயன்க்கு ஆசைய பாரு என்றவள் உதய சந்திரனை உற்று பார்த்தாள்.
ச்சே ச்ச்சே அவ்ளோ கருப்பு இல்லை கொஞ்சம் மாநிரம் ஆனாலும் கலையான முகம்.
இப்படி எத்தனை பேருக்கு அமையும். எடுப்பான நாசி, கூர்மையான விழிகள், உதடு மட்டும் இளம் ரோஸ் நிறம், சிகரட் பழக்கம் இல்லை போல.
தன் மனம் போகும் போக்கை கண்டு மிரண்டு இவ்வுலகத்துக்கு மீண்டு வந்தாள்.

ஸோ நான் பாஸ் மார்க் வாங்கி விட்டேனா?

அவள் முகம் கன்றி சிவந்ததை ரசித்து நின்றவன் முதலில் சுதாரிதான்.

உதட்டில் மீண்டும் ஏளனம் மலர்ந்தது.

சொல்லுங்க ம்ம் சொல்லு மிஸ். மதுமிதா ..மிஸ் தானே?

எஸ்

ஹ்ம் ஒரு பெரிய அமவுண்ட் லோன் கேட்டு இருக்க

ஆமா ஸார் இன்னும் ஆறு மாசத்துல என் தங்கை கல்யாணம்

நீ கல்யாணம் பண்ணாம உங்க தங்கைக்கு கல்யாணம் செய்ய காரணம்?

ஸார் அது என் பர்ஸநல்

ஹோ...இன்னும் எந்த பணக்காரணனும் மாட்டலையா?

ஸார் என்னை பத்தி தவறா பேச உங்களுக்கு உரிமை இல்லை

உனக்கு லோன் தர முடியாதே மிஸ்

ஐந்து வருடமா நான் இங்கு வேலை செய்கிறேன். உங்களுக்கு என் அனுபவம் தெரியாது!

ஏழு வருடத்துக்கு முன்பே எனக்கு உன்னை தெரியும்

ஸார் இது என் தங்கை வாழ்க்கை ப்லீஸ் உங்க கோபத்தை இதுல காட்டாதீங்க

சரி உனக்கு லோன் தர முடியாது பதில் ஒரு உதவி செய்கிறேன்.

சொல்லுங்க ஸார்

அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் ஒரு காண்ஃபெரெந்ஸில் கலந்து கொள்ள போகிறேன்.
என்னோடு நீயும் வர வேண்டும். ஒரு மாதம் என்னுடன் இருந்து என் வேலையை முடித்து தர வேண்டும். டீல் ஓகே

ஸார் என்னால் முடியாது. நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள்.

உன் குலம் கொத்திரம் எனக்கு தேவையில்லை. நான் உன்னை பெண் கேட்டு வரவில்லை.
எனக்கு நீ உதவினால் உன் லோன்க்கு பதில் நீ கேட்ட தொகை சம்பளம் கிடைக்கும்.

என்னை தேர்ந் தெடுத்த காரணம்

உன் அழகு,உன் பணத் தேவை அதோடு ஒரு மாதம் தங்குவதற்க்கு மற்றவர் வீட்டில் ஒத்துகொள்ள மாட்டார்கள்.

எனக்கு யோசிக்க நேரம் வேண்டும்

நாளை காலை எனக்கு பதில் தெரிய வேண்டும்

சரி ஸார்

தளர்ந்த நடையொடு எம் டி இன் அறையில் இருந்து வெளியே வந்தேன்.
இவன் எப்படி இங்கு என்ற குழப்பத்துடன் என் அறை தடுப்புக்குள் சென்று அமர்ந்தேன்.

ஐந்து நிமிடத்தில் ஒரு காஃபியும் ப்ரெட் டோஸ்ட் பீயுன் கொண்டு வந்து தந்தான்.

எம் டி இன் உத்தரவாம்

உள்ளே சென்ற காஃபியின் உற்சாகத்தில் வேலையை முடித்து வீடு செல்ல பஸ் நிலையம் வந்தேன்.

அமெரிக்கா செல்ல அம்மாவிடம் எப்படி அனுமதி வாங்குவேன்
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:15 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM



Users browsing this thread: 1 Guest(s)