Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
நித்தியமும் காதல் கீர்த்தனைகள்

EPISODE - 44

நிவி ரொம்ப படுத்தினாலா மேடம்? வீட்டுக்கு வந்ததும் ஹாலில் இருந்த பவியிடம் கேட்டால்.


அதென்ன என்கிட்ட பேசும் போது பவிக்கா பவிக்கான்னு சொல்லிட்டு அவள மேடம்னு கூப்படற... என்றார் ரமேஷ்.

என்ன உன் சொந்த அக்காவா நெனச்சிகிட்டு அக்கான்னே கூப்பிடலாம் திவ்யா அவள் தலையை வருடி சொன்னால் பவி.

திவ்யா க்கா என்ன வேணும் உங்களுக்கு டீயா காபியா? கேட்டால் கீர்த்தனா.
எனக்கு எதுவும் வேண்டாம் கீர்த்தனா.. நாங்க கேன்டீன்ல...

அது நாலு மணிக்கு சாப்டது... இப்ப ஏழாக போகுது... எதாவது குடி திவ்யா..

இல்ல நான் குளிச்சிட்டு ரெடி ஆகி நிவிய கெளப்பி... கொண்டு போய் சைல்ட் கேர்ல விட்டுட்டு ஆபீஸ் போக கரெக்டா இருக்கும்...

அக்கா நிவி இங்க இருக்கிற வரைக்கும் நான் பாத்துக்கறேன்... சைல்ட் கேர்ல எல்லாம் விட வேண்டாம்.. சொன்னால் கீர்த்தனா.

அதில்ல நைட்ல தூங்கிடுவா... பகல்ல ரொம்ப படுத்துவா...

அவ கீர்த்தனாட்ட நல்லா ஒட்டிகிட்டா திவ்யா... இப்ப அவ இல்லைன்னா தான் படுத்துவா பாரு ... அதுவும் இல்லாம நீ ரெண்டு நாள் லீவ் போடு... என்றால் பவித்ரா.

அதில்லக்கா... அவர பாத்துக்க நர்ஸ்ட்ட சொல்லிட்டேன் ... ஆபீஸ்ல ஆடிட் வருது...

அதெல்லாம் நான் பாத்துக்கறேன்... நீ லீவ் போடு...

எல்லாரும் சேர்ந்து வற்புறுத்த அவள் ஒத்துக் கொண்டால்.
கீர்த்தனா காபியுடன் வந்தாள்.

நைட்டு தூங்க வசதியா இருந்துதா ?

சின்ன இடம் தான் பவி... பட் தூங்கிட்டோம்.. ஆனா காலைல 4 மணிக்கு முழிப்பு வந்தது... அப்பறம் தூங்கல... என்றார் ரமேஷ்.

கீர்த்தனா திவ்யா வுடன் கொஞ்ச நேரம் அரட்டை அடித்தால். பின்னர் ப்ரேக் பாஸ்ட் செய்தால்.

ரமேஷ் ஆபிஸ் கிளம்பி செல்ல...
ஆன்ட்டி நீங்க கெளம்பல...


நான் லீவ் போட்டேன்... திவ்யா வோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பன்னலாம்.. எல்லாரும் கிளம்பி போய்ட்டா அவ தனியா என்ன பன்னுவா...

சரி... நானும் லீவு... லன்ச் ஹோட்டல்ல சொல்லிடுங்க...
அடி வாங்குவா கீர்த்தனா... மொத மொதல்ல திவ்யா வீட்டுக்கு வந்துருக்கா... அவளுக்கு ஹோட்டல்லேந்தா வாங்கி தருவ... ஒழுங்கா போய் சிக்கன் எடுத்துட்டு வந்து உன்னோட ஸ்பெசல் எல்லாம் பன்ற...

எவ்வளவு மெரட்ட முடியுமோ இப்பவே மெரட்டிக்கங்க... கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாத்துக்கும் சேத்து வச்சி செய்றேன்...

அவள் கன்னத்தில் நறுக்கென கில்லினால் பவி.
... வலிக்குது ஆன்ட்டி...

நல்லா வலிக்கட்டும்...
அவர்கள் செல்ல சன்டையை ரசித்து கொண்டிருந்தால் திவ்யா.
அப்போது நிவி தூங்கி எழுந்து வந்தால்.

ஹாய் குட்டி...
கீர்த்தனா டாய்ஸ் எங்க.. வெளயாடலாமா..

அவளை இழுத்து மடியில் வைத்து கொண்டால் கீர்த்தனா.

காலைல எந்திரிச்ச உடனே விளையாட்டா... மொதல்ல ப்ரஷ் பன்ன வா.. என்றால் திவ்யா.
கீர்த்தனா தான் எனக்கு ப்ரஷ் பன்னி விடனும்.

ஓகேடா குட்டி.. உம்மா... உனக்கு என்ன கலர் பேஸ்ட் வேனும்..
ரெட் கலர்...

அச்சோ... இங்க ப்ளூ தான இருக்கு... சரி வா.. நம்ம கடைக்கு போய் ரெட் கலர் பேஸ்ட் வாங்கலாம்.

நிவி... அக்காவ படுத்தாத... ப்ளூ கலர் பேஸ்ட்டும் நல்லா டேஸ்ட்டா இருக்கும்..

விடுங்க அக்கா.. கட பக்கம் தான் அஞ்சு நிமிஷம் வாக்... நாங்க போய்ட்டு வந்துடறோம்... நிவியை தூக்கி கொண்டு கடைக்கு போனால்.

நீங்க எதுக்குக்கா லீவ் போட்டீங்க... நான் அப்படியே ஹாஸ்பிடல் ஆபீஸ்னு இருந்துப்பேன்ல..
பரவாயில்லை திவ்யா... தனியா ஏன் கஷ்டப்படற... நாங்க எல்லாம் இருக்கோம்ல...

ரொம்ப தேங்க்ஸ்க்கா... நெகிழ்ச்சியாய் சொன்னால்.
அம்மாப்பாட்ட சொல்லிட்டியா?

இல்லக்கா... சொன்னா... அழுது தீத்துடுவாங்க... இன்னும் யார்ட்டயும் சொல்லல...

அட்லீஸ்ட் ப்ரெண்ட்ஸ் யார்ட்டயாவது சொன்னா.. அப்பப்ப வந்து பாத்துப்பாங்கல்ல...

யாரும் பாத்துக்க வேணாம்... தனியா கெடந்து அவஸ்த படட்டும்...
ஹ்ம்ம்... இவ்ளோ கோவம் எதுக்கு திவ்யா...

அவ்ளோ பன்னிருக்கான்... தெனம் குடிச்சிட்டு வந்து அடி, உத, சூடுன்னு...
அப்ப டைவர்ஸ் பன்னிட்டு நிம்மதியா இருக்கலாம்ல..

அப்படி எல்லாம் நிம்மதியா அவன இருக்க விட்ற கூடாது... கூடவே இருந்து எல்லாத்துக்கும் பதில் தரனும்.. டைவர்ஸ் பன்றதா இருந்தா எப்பவோ பன்னிருக்கலாம்... நான் எனக்கான நேரம் வரும்னு தான் பொருமையா இவ்வளவு நாள் இருந்தேன். பல்லை கடித்து கோவமாய் சொன்னால்.

ஹ்ம்ம்.. பாக்கவே வில்லி மாதிரி இருக்க...

ஹாஹா.... நான் வில்லியா... அப்பாவிக்கா நான்... இது என்னோட ரிவெஞ்ச் டைம்...

எல்லாத்துக்கும் பதிலுக்கு பதில்னு கிளம்பினா உன் வாழ்க்கை... அவள் தோளில் கை போட்டு மெதுவாய் அணைத்து கொண்டால்..

எனக்கு என்ன வாழ்க்கை... எல்லாம் முடிஞ்சிடிச்சு... அதான் மொத்த கனவயும் செதச்சிட்டானே...

பவித்ரா அவளுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தவித்தால். மெதுவாக அவள் தலையை வருடி கொடுத்தால்.

அந்த அணைப்பும் ஆறுதலும் திவ்யாவிற்கு தேவையாய் இருந்தது.

தன் சோகம் பெற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று மறைத்ததால்.. உறவினர்களுக்கு கூட சொல்ல முடியாமல்... தோழிகள் என்று யாரும் இல்லாமல்.. அலுவலகத்திலும் பெரிதாக நம்பத்தகுந்த நட்பு கிடைக்காமல் யாருடன் தன் சோகத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால்.


ரமேஷிடம் கூட கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பேச்சு வாக்கில் வினோத்தை பற்றி கொஞ்சம் மேலோட்டமாக கூறியிருந்தால்.
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 07-01-2022, 03:36 AM



Users browsing this thread: 2 Guest(s)