Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர்
#3
மோடி வரும் போதெல்லாம் தமிழகத்தில் எதிர்ப்பு.... மீண்டும் டிரெண்டிங்கில் கோ பேக் மோடி 



கூட்டணி தலைவர்களுடன் இன்று கோவையில் மோடி பிரச்சாரம்- வீடியோ
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ள நிலையில், டுவிட்டரில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி கேவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.



[Image: modi33-1554780341.jpg]


பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று மோடியே திரும்ப போ என டுவிட்டரில் டிரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் டிரெண்ட் செய்வதை தமிழகத்தில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு போட்டியாக பாஜகவும் பிஎம் மோடி வெல்கம் டு தமிழ்நாடு என டிரெண்ட் செய்வதும் வழக்கம்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் பிரதமர் நரேந்திரமோடி கோவை வருவதை எதிர்த்து டுவிட்டரில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது. எனினும் இதையெல்லாம் மோடி ஒரு போதும் கண்டுகொள்ளவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
Like Reply


Messages In This Thread
RE: மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர் - by johnypowas - 10-04-2019, 10:38 AM



Users browsing this thread: 2 Guest(s)