Romance காதலும் சாபமும்
#15
எபிசோட் -2 காதல் (கண்டிப்பும் கனிவான முதியோர்களோட சிறிய பயணம் )

ரயில் சென்று கொண்டு இருந்தது ப்ரியா கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது .கதிர் எதுவும் கேட்டு கஷ்டப்படுத்த வேணாம் என அவளுக்கு எதிரே உக்காந்து கொண்டான் .


கொஞ்ச நேரத்துல ப்ரியாவை எழுப்பினான் 
ப்ரியா ப்ரியா 

ம்ம் என கண்களை கசக்கி கொண்டே அவள் முழிக்க இது சாப்பாடு கொஞ்சம் சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றான் .இல்ல வே வேணா என கண்களை கசக்கி கொண்டே சொல்ல 

இல்ல ப்ரியா ப்ளீஸ் இப்போதைக்கு சாப்பிட்டு தூங்கு நான் ஏன் சொல்றேன்னா யாராச்சும் பார்த்தா நான் ஏதோ உன்னைய கடத்தி கொண்டு வந்து இருக்கேன்னு நினைக்க போறாங்க என சொல்ல பிரியா அத வாங்கி ஒரு வாய் தான் வைத்தாள் வயிறு வலிச்சது இருந்தாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டா 

கதிர் ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்களே என மெல்ல கேட்டா 

சொல்லு ப்ரியா 

கிட்ட வாங்க என கூப்பிட்டா கதிர் கிட்ட போக எனக்கு ப்ளீஸ் எப்படி சொல்வது என்று தெரியாமல் வேற வழி இல்லை என நினைத்து கொண்டு கோபிச்சு கிடாம எனக்கு எங்கயாச்சும் ஸ்டேஷன் ல விஸ்பர் கிடைச்சா வாங்கிட்டு வாங்களேன் என கேட்க 
கதிர்க்கு ஒரு மாதிரி ஆனது எப்படி பட்ட பணக்கார பொண்ணு இப்படி என் கிட்ட இப்படி போயி கேட்குதே என்று இந்த உடனே பார்த்து வாங்கிட்டு வரேன் என்று அவன் கொஞ்ச தூரம் போயிட்டு திரும்ப வந்தான் .பிரியா என்னைய அனுப்பிச்சுட்டு தப்பா எதுவும் பண்ணிடாதம்மா என் தலைல விழுந்துடும் என்று அவன் சொல்ல ப்ரியாவுக்கு தன்னை மீறி ஒரு சிரிப்பு வர  உடனே ஓகே இந்த லைட் சுமைல் நம்பி போறேன் என்று போயிட்டு விஸ்பர் வாங்கிட்டு கேட்டான் 

அன்னே லேடிஸ் ட்ரெஸ் இங்க எங்கயாச்சும் கிடைக்குமா 

என்னப்பா ரயில் வே ஸ்டேஷன்ல கேக்குற என ஒருவர் சொல்ல 

அட இருக்குப்பா அந்த 5 வது பிளாட் பிரம் ல ஒருத்தன்  தரைல வச்சு வித்து கிட்டு இருக்கான்ப்பா 
இவன் இருக்கும் பிளாட் பிராத்துல இருந்து ரொம்ப தூரம் இருந்தாலும் வேகமாக ஓடினான் .ஓடி போயி ஒரு சுடிதார் ஒரு சேலை மற்றும் நைட்டி வாங்கி விட்டு வர ரயில் மெதுவாக நகர கதிர் வேகமாக ஓடினான் 

ப்ரியா ரயில் கிளம்ப கதிர் வரமால் இருக்க பயந்தா அவளால எந்திரிக்க முடியல இருந்தாலும் எக்கி எக்கி பாக்க 

அப்போ ஒரு 50 வயது மதிக்க தக்க பெண்மணி எங்க இங்க இடம் இருக்கு வாங்க என கூப்பிட அவர் கணவரும் வந்தார் 

அவர்கள் இருவரும் ப்ரியாக்கு எதிரில் உக்கார 

ம்ம் நாங்க கன்னியாகுமாரி போறோம் நீ எங்கம்மா போற என அவளை பார்த்து கேட்க அவளோ எக்கி எக்கி பதில் பேசமால் சன்னலை மட்டும் பார்த்துட்டு இருக்க 
என்னமா உன் புருஷன் ஏதும் வாங்க அனுப்பினியா என அந்த பெண்மணி கேட்க சரியாக கவனிக்காத ப்ரியா ஆம் என்பது போல தலையாட்ட 

கவலைப்படாதம்மா ஆம்பைலைக எப்படினாலும் வந்துடுவாங்க அதுவும் பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னா ஓடோடி வந்துடுவாங்க இவர் எல்லாம் எத்தனை தடவ நான் ஓட விட்டு இருப்பேன் என அந்த பெண் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவருடைய கணவன் அவங்கள கூப்பிட்டு ப்ரியாவின் முகத்தில் இருக்கும் காயத்தை காட்ட அவங்க வேறோ ஏதோ பிரச்சனை என நினைத்து அமைதி ஆக 

கதிர் வர மாட்டான் போல எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதிரி தான் என நினைக்கும் போது கதிர் வேகமாக வந்தான் மூச்சு இறைக்க இந்த ப்ரியா என பையோடு கொடுக்க பிரியா அவனை பார்க்க 

ஏன்ம்மா இவர் தான் உன் புருஷரா என கேட்க ஓடி வந்ததுல சரியா கவனிக்காத கதிர் மேலும் ப்ரியாவும் வேறு வழி இல்லமால் ம்ம் என சொல்ல 

ஏண்டா தம்பி ஒரு 3 வது மனுசியா கேட்க கூடாது தான் இருந்தாலும் கேட்கிறேன் என அவங்க பேசும் போதே அவங்க கணவர் வேணாம் என தடுக்க நீங்க சும்மா இருங்க இவனுக மாதிரி ஆளுகள எல்லாம் நல்லா கேக்கணும் 

ஏன்டா எதுக்கு எடுத்தாலும் குடிச்சுட்டு பொண்டாட்டிய அடிப்பீங்களா என அந்த பெண்மணி சொல்ல 

நான் எங்க அடிச்சேன் எனக்கு குடிக்கிற பழக்கமே இல்லையே  என கதிர் கேட்க 

அப்புறம் அது என்னடா காயம்
[+] 1 user Likes prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 20-05-2021, 10:39 PM



Users browsing this thread: 1 Guest(s)