நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#59
என் இதயத்தில் பழுக்ககாய்ச்சி கம்பியால் சூடு போட்டது போல் இருந்தது.
நான் "ஏன் உனக்கு இந்த பேராசை" என்றேன். அவள் என்னை பார்த்து கொண்டே "இல்ல உன்னால முடியும் நீ நினைச்சா முடியும் ஜெய்"என்றாள்.

"இல்ல இல்ல கண்டிப்பா என்னால முடியாது "என்றேன்

"முடியாதுன்னு உன்னை நீயே ஏன் மட்டம் தட்டிக்கிற கொஞ்சம் யோசித்து பார்.ஐந்து,பத்து மார்க் எடுத்த நீ எப்படி முப்பது மார்க் எடுத்த"

"அது நீ சொன்னேன்னு "நான் சொல்வதற்குள் அவள் குறுக்கிட்டு "இப்பவும் நான்தான் சொல்றேன் நீ HALF YEARLY EXAM ல் நீ ஸ்கூலில் முதல் மதிப்பெண் எடுக்கனும்.உன்னால முடியும் நீ நினைச்சா முடியும் "என்றாள்.

"எனக்கு ஒன்னு புரியல நீ ஏன் நான் FIRST MARK எடுக்கனும் நினைக்கிற"

"ஏன்னா நீ எல்லாத்துலயும் first வரனும் னு நான் நினைக்கிறேன்"என்றாள்.

"என்னால முடியும்னு தோணல "மேலும் நான் சொல்வதற்குள் அவள் "முடியும் எல்லாரும் நினைச்சா கண்டிப்பா முடியும் ஆனா நினைக்கிறதுல தான் இருக்கு ஜெய் உன்னாலயும் முடியும் ஆனா நீ நினைக்கனும ஜெய்.எல்லாத்திலேயும் நீதான் முதல்ல வரனும் அதை பார்த்து நான் சந்தோசப்படணும்"மேலும் அவள் பேச முயல அவள் வாயை பொத்தினேன்.

"உனக்காக TRY பண்றேன்"என்றேன்.அவள் கண்களில் நீர் ததும்ப என் கைகளை பிடித்து கொண்டு "இது தான் எனக்கு வேணும் "என்றாள் அந்த நிமிடம் அவளின் சுயநலமில்லாத அன்பு என் மனதை மிகவும் பாதித்தது.இருவரும் ஸ்டாப்பில் இறங்கி கொண்டோம்.வீட்டிற்கு வந்து பயங்கரமாக யோசித்தேன்.அவள் கூறியது என் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.என்னால் படிக்க முடியும் ஆனால் ஏன் நான் படிக்காமல் இருக்கிறேன் என்ற நினைப்பே என்னை படிக்க தூண்டியது.
அவள் ஒரு முத்தத்திற்காக படிக்க ஆரம்பித்த நான் இப்பொழுது என் இடத்தை தக்க வைப்பதற்காக படிக்க ஆரம்பித்தேன்.எல்லா subject லும் பின் தங்கியிருந்த நான் ஓரளவுக்கு முன்னேறி வந்திருந்தேன்.அனைத்து வீக்லீ டெஸ்ட்டுகளிலிலும் நான் ஓரளவு நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தேன்.என் அப்பா முதன் முதலாக ஆரத்தழுவி அணைத்து கொண்டார்.வினோத் எனக்கு புரியாத கணக்குகளை சொல்லி தந்தான். இதற்கெல்லாம் காரணமான அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.அப்பொழுது எனக்கு சிறகுகள் என்ற தன்னம்பிக்கை புத்தகம் ஒன்று வாங்கி கொடுத்து படிக்க சொன்னாள்.அவள் இன்று என்னுடன் இல்லை என்றாலும் அதை நான் இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன் அவள் நினைவு வரும்பொழுது அந்த புத்தகத்தை எடுத்து என் நெஞ்சில் அணைத்து கொள்வேன்.அப்பொழுது என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் ததும்பும்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 09-04-2019, 12:43 PM



Users browsing this thread: 2 Guest(s)